227 குழந்தைகள் நரபலி : ஆராய்ச்சியாளர்களை அதிரவைத்த சம்பவம்!!

அதிரவைத்த சம்பவம்

உலகிலேயே அதிக நரப லி கொடுக்கப்பட்ட நாடு என அழைக்கப்படும் பெருவில் தற்போது வரை 227 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

பெரு நாட்டின் தலைநகரம் என்று சொல்லப்படும் லிமாவுக்கு வடக்கே உள்ள கடற்கரை பக்க சுற்றுலா நகரமான Huanchaco என்கிற இடத்தில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தோண்டி எடுத்து வருகின்றனர். இதன்மூலம் கிமு 1475 இல் காணாமல் போன சிமு நாகரிகத்தின் பகுதியை கண்டறிந்து கொள்ளலாம்.

இந்த நிலையில் அங்கு ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் தலைமை தொல்பொருள் ஆய்வாளர் ஃபெரன் காஸ்டிலோ கூறுகையில், கொலம்பியாவிற்கு முந்தைய சிமு கலாச்சாரத்தின் கடவுள்களை கௌரவிக்கும் விதமாக நான்கு முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் ஒரு சடங்கில் ப லியிடப்பட்டுள்ளனர்.

இப்பகுதியில் எல் நினோ நிகழ்வு எனப்படும் மோசமான வானிலை முயற்சிக்கவும் தடுக்க அவர்கள் கொ ல்லப்பட்டிருக்கலாம். ப லியிடப்பட்ட குழந்தைகளின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய தளம் இது. ஈரமான வானிலையின் போது கொ ல்லப்பட்டதற்கான அறிகுறிகள் அங்கு தென்படுகிறன்றன.

எல் நினோ, அதாவது ஸ்பானிஷ் மொழியில் சிறுவன் அல்லது தி கிறிஸ்ட் சைல்ட் என கூறப்படுகிறது. பசிபிக் பெருங்கடலில் அசாதாரணமாக வெப்பமடைவதை உள்ளடக்கிய ஒரு காலநிலை மாற்ற முறை. 19 ஆம் நூற்றாண்டில் மீனவர்கள் கிறிஸ்துமஸ் நேரத்தில் நீர் வெப்பமடைவதைக் கவனித்தபோது இந்த வார்த்தையைப் பயன்படுத்தத் தொடங்கினர்.

இந்த நிகழ்வு ஈக்வடார் முதல் சிலி வரை மீன்பிடித்தல், விவசாயம் மற்றும் உள்ளூர் வானிலை ஆகியவற்றில் ஏற்படும் மோசமான விளைவுகளுடன் தொடர்புடையது. எல் நினோ ஒழுங்கற்ற முறையில் நிகழ்கிறது. அலைகள் போன்ற பிற வானிலை முறைகளைப் போலவே கணிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

7 ஆயிரம் விக்கெட்டுகள் : 60 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கை : 85 வயதில் ஓய்வு அறிவித்த வீரர்!!

Cecil Wright

மேற்கிந்திய தீவுகளின் ஜமைக்காவைச் சேர்ந்த 85 வயது வேகப்பந்து வீச்சாளர், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஜமைக்காவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான Cecil Wright, 1959ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற லான்கா ஷையர் லீக் போட்டியில் விளையாடுவதற்காக சென்றார்.

அங்கிருந்து தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய அவர், மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான்கள் விவியன் ரிச்சர்ட்ஸ், கேரி சோபர்ஸ் ஆகியோருடன் இணைந்து விளையாடினார்.
தனது 49வது வயதில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் போட்டியில் விளையாடினார் Cecil Wright.

தன் 60 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில், இதுவரை 7 ஆயிரம் விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார். குறிப்பாக, 5 சீசன்களில் 538 விக்கெட்டுகளை வீழ்த்தி பிரம்மிக்க வைத்துள்ளார். இந்நிலையில், அடுத்த மாதம் 7ஆம் திகதி நடைபெறும் Springhead அணிக்கு எதிரான போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் Cecil Wright கூறுகையில், ‘காயம் இல்லாமல் உடல் தகுதியை சரியாக கவனித்துக் கொண்டது தான் இவ்வளவு நாள் கிரிக்கெட் விளையாடி வருவதற்கு காரணம்.


உணவைப் பொறுத்தவரை எதையும் சாப்பிடுவேன். ஆனால், அதிகமாக மது குடிக்க மாட்டேன். பீர் மட்டும் எப்போதாவது அருந்துவேன். பயிற்சி இல்லாமல் இருந்ததில்லை. வீட்டில் அமர்ந்து ரிவி பார்க்க மாட்டேன்’ என தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் செல்வதற்காக காத்திருந்த பெண் அணிந்திருந்த சேலையால் ஏற்பட்ட குழப்ப நிலை!!

சேலையால் ஏற்பட்ட குழப்ப நிலை

யாழ்ப்பாணம் செல்வதற்காக திருகோணமலை பொது பேருந்து நிலையத்தில் காத்திருந்த பெண்ணொருவர் அணிந்திருந்த சேலையால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்றைய தினம் பகல் வேளை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

புத்தரின் உருவம் பொறிக்கப்பட்ட சேலையை அணிந்த பெண்ணொருவர் யாழ்ப்பாணம் செல்வதற்காக திருகோணமலை பொது பேருந்து நிலையத்தில் காத்திருந்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் குறித்த பெண்ணின் சேலையில் புத்த பெருமானின் உருவம் பொறிக்கப்பட்டிருப்பதை கண்ட அப்பகுதியை சேர்ந்த சிலர் அந்த பெண்ணை சுற்றிவளைத்து சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளனர்.

இந்த நிலையில் அந்த இடத்திற்கு பொலிஸாரும் வந்த நிலையில், புத்த பெருமானின் உருவம் பொறிக்கப்பட்ட சேலை அணிந்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கிருந்தவர்கள் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து புத்தரின் உருவம் பொறிக்கப்பட்ட சேலையை அணிந்த பெண்ணும், மற்றுமொருவரும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அவுஸ்திரேலியாவிலிருந்து அதிரடியாக நாடுகடத்தப்படவுள்ள இலங்கை தமிழ்க் குடும்பம்!!

தமிழ்க் குடும்பம்

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய தமிழ் குடும்பம் ஒன்று அ திரடியாக நாடு க டத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. பிரியா – நடேசலிங்கம் தம்பதியரும் அவர்களுக்கு அவுஸ்திரேலியாவில் பிறந்த இரண்டு பெண் குழந்தைகளும் இவ்வாறு நாடு க டத்தப்படவுள்ளனர்.

நான்கு பேரையும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வான்களில் மெர்பேர்ன் விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி பல போ ராட்டங்களை மேற்கொண்ட போதும் எந்த வெற்றியும் கிடைக்காத நிலையில், இலங்கை அகதிகள் இரகசியமான முறையில் நாடு க டத்தப்படுவதாக அவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடம் Biloela உள்ள அவர்களது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட வைத்து கைது செய்யப்பட்ட தமிழ் குடும்பம் அங்குள்ள தடுப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களை நாடு க டத்த வேண்டாம் என அவுஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளில் போ ராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் இன்றிரவு அவர்கள் நாடு க டத்தப்படுவதற்காக விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்னர்.

இரகசிய நாடு  கடத்தலை அறிந்து கொண்ட பெருமளவு அவுஸ்திரேலியர்கள் மெல்பேர்ன் விமான நிலையத்தை மு ற்றுகையிட்டுள்ளதாக தெரிய வருகிறது. நடத்தப்பட்ட சோதனையின் போது, கைது செய்யப்பட்ட இந்த குடும்பத்தினர், 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் மெல்பேர்ன் தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டனர்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் கிராம பாதுகாப்பு தொடர்பாக விசேட செயலமர்வு!!

விசேட செயலமர்வு

வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் கிராம பா துகாப்பு தொடர்பான செயலமர்வு இன்று (29.08.2019) நடைபெற்றது.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் நடைபெற்ற இச் செயலமர்வில் உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி, ஜனாதிபதி செயலகத்தின் உதவிச்செயலாளர் ஆகியோர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டிருந்தனர்.

கிராமத்தின் சமூகம் தொடர்பாக முழுமையான மீளாய்வொன்றை செய்து தகவல் தொகுதியொன்றினை நாடாத்திச்செல்லுதல், வெளிப்புற எதிரிகளினால் கிராமத்திற்கு தொடுக்கக் கூடிய சவால்களை நேரகாலத்துடன் அடையாளம் காணும் உளவுத் தகவல்களைத் தொடர்ந்து திரட்டுதல்,

வெளிப்புறங்களிலிருந்து கிராமத்திற்கு வருகின்ற நபர்கள், அமைப்புக்கள் தொடர்பாக எப்பொழுதும் அவதானமாக இருந்து கொண்டு உரிய தகவல்களை சேகரித்தலும் தேவைக்கேற்ப பாதுகாப்பு பிரிவுகளுக்கு அறிவுறுத்தலும்,

கிராமச் சமூகத்தின் ஒற்றுமை, சகவாழ்வு , சகோதரத்தன்மை என்பவற்றை விருத்தி செய்யக்கூடிய செயற்பாடுகளை மேம்படுத்தல் போன்ற 16 செயற்றிட்டங்கள் கிராம பாதுகாப்பு செயற்றிடத்தினுடாக முன்னெடுக்கப்படவுள்ளது.

இத்திட்டம் தொடர்பிலான முழுமையான விளக்கத்தினை உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி வழங்கினார்.

இந்நிகழ்வில் பிரதேச மற்றும் மாவட்ட உதவிச் செயலாளர், கிராம சேவை உத்தியோகத்தர்கள், பொலிஸ் மற்றும் பா துகாப்பு ப டையின் உயர் அதிகாரிகள், அரச திணைக்களங்களின் உயர்நிலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் காயம்!!

விபத்தில் இளைஞர் காயம்

வவுனியா மரக்காரம்பளை மதுபான நிலையத்திற்கு அருகில் இன்று (29.08.2019) மதியம் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

ஈச்சங்குளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மரக்காரம்பளை மதுபான நிலையத்திற்கு அருகில் வந்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கில் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து அருகிலுள்ள பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டு மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் காயமடைந்திருந்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னேடுத்து வருகின்றனர்.

இலங்கையில் அறிமுகமாகும் புதிய வாகன வரி : பலரின் கனவில் விழுந்த இடி!!

புதிய வாகன வரி

இலங்கையில் பயன்படுத்தும் வாகனங்களுக்கு புதிய சொகுசு வரி அறவிடுவதற்கு அரசாங்கம் திட்டமிடுவதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். வாகனங்களின் என்ஜின் திறனை கருத்திற்கொள்ளாமல் அதன் விலை 35 லட்சம் ரூபாவுக்கு அதிகம் என்றால் இந்த வரி அமுலாகும்.

அதற்கமைய இறக்குமதி செய்யப்படும் அல்லது இலங்கையில் பொருத்தப்படும் அனைத்து வாகனங்களும் பாரியளவில் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வருடம் மார்ச் மாதம் 5ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட யோசனைக்கு அமைய என்ஜின் திறன் 2300க்கு அதிகமான டீசல் வாகனங்கள், 1800க்கும் அதிகமான பெட்ரோல் வாகனம் மற்றும் 200 கிலோவேட் மின்சார திறன் கொண்ட வாகனங்களுக்காக இந்த வரி அறவிடப்படவுள்ளது.

எனினும் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் கடந்த வருடம் ஆகஸ்ட் 22ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு அமைய இந்த வருடம் ஜுலை மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் என்ஜின் திறனை கருத்திற்கொள்ளாமல் குறித்த வரி விதிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வான், சிங்னல் கெப், மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி, அம்பியுலன்ஸ், லொறி, ட்ரெக்டர் உள்ளிட்ட வாகனங்களுக்கு வரி விதிக்கப்படவிலலை. எப்படியிருப்பினும் வரி திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டால் சாதாரண பொது மக்கள் வாகனம் கொள்வனவு செய்வதற்கு தொடர்ந்து கனவாகி விடும் என வாகன இறக்குமதியாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா : திரண்ட மக்கள் வெள்ளம்!!

தேர்த்திருவிழா

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் (29.08.2019) வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

காலை 6 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து ஆறுமுகப் பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் காலை 07 மணிக்கு தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.

தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேதரராய் தேரில் வெளிவீதி உலா வந்த ஆறுமுக பெருமான் காலை 9.45 மணிக்கு தேர் இருப்பிடத்தை வந்தடைந்தது.

இன்றைய தேர்த்திருவிழாவின் போது நாட்டின் பல பாகங்களில் இருந்தும் , வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அதேவேளை ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்க பிரதட்சணம் செய்தும் , நூறுக்கணக்கானவர்கள் காவடிகள் எடுத்தும் கற்பூர சட்டிகள் ஏந்தியும் முருக பெருமானை வழிபட்டனர்.

 

வவுனியா நெடுங்கேணியில் யானைகள் அட்டகாசம் : மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!!

யானைகள் அட்டகாசம்

வவுனியா நெடுங்கேணி பகுதியில் யானைகளின் அட்டகாசத்தால் தென்னந்தோட்டம் நாசமாகியுள்ளது.

நேற்று மாலை வவுனியா, நெடுங்கேணி பகுதியில் உள்ள சேனைப்புலவு, சிவாநகர் ஆகிய கிராமங்களுக்குள் புகுந்த யானை அப் பகுதியில் தோட்ட வேலை செய்து கொண்டிருந்த மக்களை விரட்டியதுடன், தென்னந்தோட்டத்திற்குள் புகுந்து தென்னை மரங்களை அழித்துள்ளது.

குறித்த யானைகளின் அட்டகாசத்தால் நூறுக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் அழிவடைந்துள்ளதுடன், தென்னந்தோட்ட செய்கையில் ஈடுபட்டவர்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

குறித்த பகுதியில் அடிக்கடி வரும் யானைகளினால் தமது தென்னந்தோட்டம் மட்டுமன்றி வாழ்வாதார பயிர்செய்கை நடவடிக்கைகளும் அழிக்கப்படுவதாக தெரிவிக்கும் அம் மக்கள், யானைகளினால் தாம் அப்பகுதியில் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.

கருணை உள்ளங்களிடம் உதவி கோரும் தொண்டைப்புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்!!

உதவி கோரும் பெண்..

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தொண்டைப் பு ற்றுநோ யால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பொதுமக்களிடம் உதவி கோருகின்றார்.

விவேகானந்த நகர் மேற்கு, கிளிநொச்சியைச் சேர்ந்த நாகினி தனபாலசிங்கம் எனும் பெண் ஒருவரே இவ்வாறு தொ ண்டைப்பு ற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இவரின் அம்மா கூலி வேலை செய்து ஜீவனோபாயத்தை மேற்கொண்டு வரும் நிலையில், வறுமையின் பிடிக்குள் இவர்களின் குடும்பம் வாழ்ந்து வருகின்றது.

குறித்தபெண் வைத்தியசாலையில் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வருகின்ற போதும், தொண்டையில் பு ற்று நோ ய் ஏற்பட்டதன் காரணமாக உடனடியாக ச த்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டுமென்றும், அச்சிகிச்சைக்காக இருபது இலட்சம் ரூபாய் தேவைப்பாடு நிலவுவதாகவும் துறைசார் வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இப்பாரிய தொகையை திரட்ட முடியாத நிலையில் உள்ள இவருக்கு கருணை உள்ளம் கொண்டவர்கள் உதவ முன்வர முடியும்.

தொடர்புக்கு, தொலைபேசி இல : 076 376 3477, வங்கிக் கணக்கு இலக்கம் : 82292063 வங்கியின் பெயரும், கிளையும் : இலங்கை வங்கி, கிளிநொச்சி.

கோர விபத்தில் இருவர் பரிதாபமாக பலி!!

கோர விபத்தில்..

கல்முனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சேனைக்குடியிருப்பு பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உ யிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து நேற்றைய தினம் இரவு சேனைகுடியிருப்பு, துரேந்தியமேடு பிரதேச வீதியில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார்சைக்கிளொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி சென்று மதகுடன் மோதி விபத்திற்கு உள்ளாகியதாக தெரியவருகிறது.

இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உ யிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் சேனைக்குடியிருப்பு காமாச்சி வீதியை சேர்ந்த அருளானந்தம் கரன் (வயது 19) மற்றும் சேனைக்குடியிருப்பு மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்த கணேசமூர்த்தி தனுசியன் (வயது 30) ஆகியோரே இவ்வாறு உ யிரிழந்துள்ளனர்.

வவுனியாவில் பற்றி எரியும் வயல்கள் : புகைமண்டலமாக காட்சியளிக்கும் வீதிகள்!!

பற்றி எரியும் வயல்கள்

வவுனியாவில் அறுவடை செய்யப்பட்ட வயல்கள் தற்போது எரியூட்டப்பட்டுள்ளதனால் அந்தப் பகுதிகள் பெரும் புகைமூட்டமாகக் காணப்படுகின்றன.

பூந்தோட்டம் வீதியின் இருபுறமும் உள்ள வயல்கள் கடந்த சில நாள்களாக எரியூட்டப்பட்டு வருகின்றன. இந்தப் பகுதி வவுனியா பொது வைத்தியசாலைக்குப் பின்புறமாக உள்ளது.

வயல்கள் எரியூட்டப்படுவதால் வைத்தியசாலையின் சுற்றுப்புறம், பஸ் நிலையப் பகுதி, ஏ9 வீதி என்பன புகைமூட்டமாகக் காட்சியளிக்கின்றன.

தற்போது கடும் வெப்பமான காலநிலை நிலவுகின்றதனால் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் வீதியிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு!!

வெ டிபொருட்கள் மீட்பு

வவுனியா கோவிற்குளம் 10ம் ஒழுங்கை பகுதியிலிருந்து இன்று (29.08.2019) காலை 10 மணியளவில் வெ டிபொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளன.

கோவிற்குளம் 10 ஒழுங்கையிலுள்ள குளம் ஒன்றை மீள்புனரமைப்பு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் பேக்கோ இயந்திரம் மூலம் குளத்திற்கு செல்லும் வீதி செப்பனிடும் பணியினை இன்று காலை ஆரம்பித்திருந்தனர்.

வீதி செப்பனிடும் பணியின் போது மண்ணில் புதையுண்ட நிலையில் வெ டிபொருட்கள் காணப்பட்டுள்ளன. அதனையடுத்து பேக்கோ வாகனத்தின் சாரதி வவுனியா பொலிஸாருக்கு தகவலை வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் வெ டி பொருட்களை பார்வையிட்டதுடன் வெ டிபொருட்களை சுற்றி எச்சரிக்கை வேலியினை அமைத்தனர்.

அப்பகுதியிலிருந்து 100 மீற்றர் வெ டிபொருள் வயர் தொகுதி ஒன்று , கு ண்டினை வெடிக்க செய்யும் கிளிப் ஒன்று , டெட்டனேட்டர்கள் இரண்டு ஆகிய வெ டிபொருட்களே மீட்கப்பட்டுள்ளன.

அவ்விடத்தில் மேலும் சோதனை நடவடிக்கையினை மேற்கொள்ளவும் குறித்த வெ டிபொருட்களை பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்குறிய நடவடிக்கையினை மேற்கொள்ளுவதற்கான நீதிமன்ற உத்தரவினை பெறுவதற்குறிய நடவடிக்கையினை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

வவுனியாவில் உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம்!!

வவுனியா நெளுக்குளத்தில் அமைந்துள்ள தொழில்நுட்பக் கல்லூரியில் செப்டம்பர் மாதம் புதிய கற்கைநெறிகள் ஆரம்பமாகவுள்ளன.

அரச அங்கீகாரம் பெற்ற NVQ3 மற்றும் NVQ4 கற்கைநெறியை பூர்த்திசெய்வதன் மூலம் அடுத்தகட்டமாக உங்கள் பட்டதாரியாகும் கனவை நனவாக்குங்கள்.

விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் உடனடியாக வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியை தொடர்புக்கொள்ளுங்கள். பின்வரும் 6 மாத கற்கைநெறிகள் அடுத்தமாதம் (செப்டம்பர்) ஆரம்பமாகவுள்ளன.

1. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர் (Information Telecommunication Technician) NVQ4. தகமை : சாதாரணதரப் பரீட்சையில் (O /L) இரண்டு தடவைகளுக்கு மேற்படாத அமர்வுகளில் கணிதம், போதனாமொழி,ஆங்கிலம் உட்பட 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும். ஊடக மொழி : தமிழ் / வயது 17-29, காலம் : 6 மாதம் முழுநேரம்.

2. கள உதவியாளர் விவசாயம் (Filed Assistant Agriculture) NVQ4. தகமை : சாதாரணதரப் பரீட்சையில் (O /L) இரண்டு தடவைகளுக்கு மேற்படாத அமர்வுகளில் ஏதாவது 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும். ஊடக மொழி : தமிழ் / வயது 17-29, காலம் : 6 மாதம் முழுநேரம்.

3. அலுவலக முகாமைத்துவம் – NVQ3 (Office Management) : தகைமைகள் : சாதாரணதரப் பரீட்சையில் (O /L) ஏதாவது 6 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும். ஊடக மொழி : தமிழ் / வயது 17-29, காலம் : 6 மாதம் முழுநேரம்.

4. ஆங்கில தொடர்பாடல் (BCS, DCS, ACS) – NVQ3. தகைமைகள் : தரம் 11 பூர்த்தி செய்திருந்தல் வேண்டும். ஊடக மொழி : ஆங்கிலம் / வயது 17-29, காலம் : 6 மாதம் முழுநேரம்.

தொடர்புகளுக்கு

அதிபர்
தொழில்நுட்பக்கல்லூரி
மன்னார் வீதி
நெளுக்குளம்
வவுனியா

024 2223664
024 2050177
024 2050177

மதம் மாறி திருமணம் செய்துகொண்ட மகள் : ஒருமுறை முகத்தை பார்க்க கெஞ்சும் தாய்!!

தெலுங்கானா மாநிலத்தில் கட்டாய மதம் மாற்றம் செய்யப்பட்டு தங்களுடைய மகள் திருமணம் செய்துவைக்கப்பட்டிருக்கிறாள் என அவருடைய பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த இந்திரா என்கிற இளம்பெண், கடந்த ஆண்டு ஜூலை 29ம் திகதியன்று முஸ்லீம் மதத்தை சேர்ந்த முகமது ரிஸ்வான் அகமது என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு முன்பு இஸ்லாம் மதத்திற்கு மாற முடிவு செய்த இந்திரா, ஜுனைரா நர்மின் என தன்னுடைய பெயரை மாற்றிக்கொண்டு மதம் மாறியுள்ளார்.

இந்த நிலையில் திருமணம் முடிந்து ஒரு வருடம் கழித்து அவருடைய பெற்றோர், தங்களுடைய மகள் மூளைச்சலவை செய்யப்பட்டு, லவ் ஜிகாத் மூலம் திருமணம் செய்யவைக்கப்பட்டுள்ளார் என பொலிஸாரிடம் புகார் கொடுக்க முன்வந்துள்ளனர்.

ஆனால் அந்த புகாரை பொலிஸார் வாங்க மறுத்துள்ளனர். இதற்கு பின் செய்தியாளரை சந்தித்த இந்திராவின் பெற்றோர், “அவர்கள் இருவரும் மேஜர்களாக இருந்தாலும், அவர்கள் ஏன் காவல் நிலையத்திற்கு வந்து தங்கள் முகத்தை எங்களுக்குக் காட்டவில்லை? எங்கள் மகள் பாதுகாப்பாக இல்லை. நாங்கள் அவளுடைய முகத்தைப் பார்க்க விரும்புகிறோம்.

“எங்கள் மகள் எங்கே? அவள் வலுக்கட்டாயமாக மதம் மாற்றப்பட்டிருக்கிறாள். துபாய் அல்லது சிரியாவில் அவளை ‘விற்க’ ஒரு திட்டம் தயாரிக்கப்படுகிறது. எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் நாங்கள் த ற்கொ லை செய்துகொள்வோம் என தெரிவித்துள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொலிஸார், “இந்த ஜோடி 2018 ஜூலை மாதம் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டது. அப்போது நடந்த சம்பவம் அவரது பெற்றோருக்குத் தெரியும். கட்டாயமாக மாற்றப்பட்டதற்கு பெற்றோருக்கு ஏதேனும் ஆதாரம் இருந்தால், அவர்கள் அதனுடன் முன்வரலாம்.” என தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த இளம்பெண், என்னைப் பற்றி எந்த செய்தி பரப்பப்பட்டாலும் அது போலியானது. எனது விருப்பத்திற்கு ஏற்ப மதம் மாறி திருமணம் செய்து கொண்டேன்.

யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை. இந்தியாவில், ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பும் எந்த மதத்தையும் பின்பற்ற சுதந்திரம் உள்ளது. யாருக்காவது பிரச்சினை இருந்தால், அது அவர்களின் பிரச்சினை, என்னுடையது அல்ல. நான் வயதில் பெரியவள். இதைச் செய்ய எனக்கு சுதந்திரம் இருக்கிறது என கூறியுள்ளார்.

நேர்கொண்ட பார்வைக்குபின் நடந்த தகராறு : சினிமா பாணியில் நடந்த ஆவேச கொ லை!!

நேர்கொண்ட பார்வை..

நேர்கொண்ட பார்வை படத்திற்கு சென்ற இடத்தில் ஏற்பட்ட த கராறில், ஆவேசம் அடைந்த நண்பர்கள் குழு ஒன்று நண்பனை வெட்டி கொ லை செய்து எ ரித்துள்ளது.

திருச்சியை சேர்ந்த தமிழழகன் நேர்கொண்ட பார்வை படம் பார்க்க சென்று விட்டு வீடு திரும்பவில்லை. இந்நிலையில், பொலிசாருக்கு புகார் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வந்த பொலிசார். நண்பர்களிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழழகனின் நண்பர்களான, காக்கா கார்த்திக், மணிகண்டன் மற்றும் ஆட்டோ ஜெகன் ஆகியோர் ம து அருந்தும் போது, தமிழழகனை கொ ன்று தாங்கள் எ ரித்தாக உளறியுள்ளனர். இதை சுற்றி கவனித்து கொண்டிருந்தவர்கள், பொலிசாருக்கு தகவல் கொடுக்கவே விசாரணையில் இறங்கிய பொலிசார் மூவரையும் கைது செய்து விசாரித்தனர்.

அப்போது, உண்மையயை ஒத்துக்கொண்ட மூவரும், நடந்ததை விளக்கி உள்ளனர். நேர்கொண்ட பார்வை படம் பார்க்க தழிழகனும் கார்த்திக்கும் இணைந்து சென்றுள்ளனர். அங்கு பிரபாகரன் என்பவருடன் ச ண்டை ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரம் அடைந்த தமிழழகன் பிபாகரனின் முதுகில் க த்தியால் கு த்தி உள்ளான். இதனால் பொலிஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. இதற்கு பயந்து கார்த்திக் மற்றும் தமிழழன் தலைமறைவாக இருந்துள்ளன.

இந்நிலையில் கார்த்திக், தமிழழகன், மணிகண்டன், ஜெகன் இணைந்து ம து அருந்தியுள்ளன. அப்போது மணிகண்டன் தமிழழகனை பார்த்து பிரபாகரனை குத்திவிட்டு வந்துவிட்டாய் கத்தியால் வெட்டி கொ லை செய்ய கூட உனக்கு தெரிவில்லை என்று கிண்டல் அடித்துள்ளான்.

இதனால், ஆ த்திரம் அடைந்த தமிழழகன், மணிகண்டனை வெட்ட சென்றுள்ளான். இதனை பார்த்த மற்ற நண்பர்கள் இணைந்து தமிழழகனை தாக்கி உள்ளன. அதில் படுகாயம் அடைந்த தமிழழகன் ப லியானான்.

பயந்துபோன நண்பர்கள் மூவரும் இணைந்து தமிழழகனின் உ டலை எரித்துள்ளனர். திருச்சி பகுதியில் சில தினங்கள் மழை பொழிந்ததால், எரிந்த சாம்பல் தண்ணீரில் கலந்து வெளியேறி உள்ளது. பொலிசார் தற்போது கிடைத்த சிறு தடையங்களை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.