யாழில் இளைஞர் ஒருவரின் மோசமான செயற்பாடு : மடக்கிப் பிடித்த பாதுகாப்பு அதிகாரிகள்!!

மோசமான செயற்பாடு

யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் மருத்துவ சேவையாளர்களின் அலைபேசிகளைத் திருடிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.. வைத்தியசாலைப் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் பிடிக்கப்பட்ட சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்த ஒருவாரத்துக்குள் மருத்துவ சேவையாளர்கள் இருவரின் அலைபேசிகள் திருட்டுப் போயிருந்தன. வெளிநோயாளர் பிரிவின் மருந்தகத்தில் பணியாற்றும் மருந்தாளர் ஒருவரின் அலைபேசி திருட்டுப்போயிருந்தது. கடந்த சனிக்கிழமை 10வது நோயாளர் விடுதியில் மருத்துவர் ஒருவரின் அலைபேசியும் திருட்டுப் போயிருந்தது.

இந்தச் சம்பவங்களையடுத்து வைத்தியசாலைப் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உஷார் அடைந்தனர். மருத்துவ சேவையாளர்கள் இருவரினது அலைபேசிகளையும் திடிய அதே இளைஞன் இன்று 27வது விடுதியில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தரின் அலைபேசியை திருடிக்கொண்டு தப்பி ஓடிய போது பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

திருநெல்வேலியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு பிடிக்கப்பட்டார். அவர் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

பகிடிவதையின் பேரால் பா லியல் வதைபுரிந்த பல்கலைக்கழக மாணவர்கள்!!

பகிடிவதை

பகிடிவதையின் பேரால் புதிய மாணவர் ஒருவருக்கு பா லியல் வதை செய்த ருஹுணு பல்கலைக்கழக மாணவர்கள் 19 பேருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ருஹுணு பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றிய முக்கியஸ்தர்கள் 19 பேரே இவ்வாறு கைது செய்ய்பபட்டு விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த புதிய மாணவர் ஒருவரை பல்கலைக்கழக விடுதிக்குள் வைத்து பகிடி வதை என்ற பேரில் பா லியல் வதை செய்ததாக அந்த மாணவர் முதலில் சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் பின்னர் ஊடவியலாளர் சந்திப்பொன்றின் மூலமும் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.

அதனையடுத்து கைது செய்ய்பபட்ட மாணவர்கள் 19 பேரும் மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

யாழில் இருந்து ஆரம்பமாகின்றது நேரடி விமான சேவை!!

நேரடி விமான சேவை

யாழ். பலாலி விமான நிலையத்தில் இருந்து ஒக்டோபர் நடுப்பகுதியில் நேரடி விமான சேவைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உதவித் தலைவர் பிரியந்த காரியப்பெரும இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,

“பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 80 பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடிய விமானங்களை இயக்கும் வகையில் இந்த விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படும்.

விமான நிலைய முனையக் கட்டடம், விமான தரிப்பிடத் தொகுதி, கட்டுப்பாட்டுக் கோபுரம், மற்றும் விமான ஒடுதளம் ஆகியவற்றை அமைக்கும் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பயணிகள் விமானங்களை இயக்குவதற்கு ஏற்றவாறு, பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எவ்வாறாயினும், இது பிராந்திய விமான நிலையமாக பயன்படுத்தப்படும். ஒக்டோபர் நடுப்பகுதியில் இந்த விமான நிலையம் பயணிகள் போக்குவரத்துக்கு தயாராகி விடும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய கடல் நீர் : கடற்கரையில் குவிந்த மக்கள்!!

சென்னையின் கடல் நீர் நிறம் மாறியதால் கடற்கரையில் பொதுமக்கள் குவிந்ததுடன் அங்கு பரபரப்பு ஏற்பட்டதாகவும் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவான்மியூர், கொட்டிவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு கடல் திடீரென நீல நிறமாக மாறியது.

இது தொடர்பில் அறிந்த பொதுமக்கள் நள்ளிரவிலேயே கடற்கரையை நோக்கி படையெடுத்தனர். இதனால் ஏராளமானோர் திருவான்மியூர் கடற்கரை பகுதிகளில் குவிந்தனர்.

கடற்கரையில் திரண்ட பெண்கள் மற்றும் இளைஞர்கள் கடல் நிறம் மாறியுள்ளதை பார்த்து ஆச்சரியமடைந்தனர். இதனால் நள்ளிரவு திருவான்மியூர் மற்றும் சென்னை நகரின் கடற்கரை பகுதியில் நீண்ட நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதை கேள்விப்பட்டு கடல்நீர் ஆராய்ச்சியாளர்கள் கடல்நீர் நீல நிறத்தில் மின்னியது ஏன் என்பது குறித்து ஆய்வினை மேற்கொண்டனர்.

கடல் பாசியால்தான் நிறம் மாறியதாகவும், கடல்நீரில் நைட்ரஜன் வாயு கலந்ததால் நிற மாற்றம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஆராய்ச்சியாளர்களும் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து சில மீனவர்கள் கூறுகையில், “கடல் வாழ் உயிரினங்கள் கக்கும் உமிழ்நீர் அனைத்தும் ஒன்றாக கலந்து இப்படி நீல நிறத்தில் தோன்றும். இது வழக்கமானத நிகழ்வுதான். அதுவும் இரவில் மட்டும்தான் காணப்படும். பகலில் தெரியாது.

நீல நிறத்தில் மாறும் நேரத்தில் கடல்வாழ் உயிரினங்களுக்கு கண்கள் தெரியாது. இந்த நிற மாற்றத்தால் யாரும் பயமோ, பீதியோ ஏற்பட வேண்டாம். சாதாரணமாக நடக்கும் ஒரு சம்பவம்தான்” என்றனர்.

இதேவேளை, மாமல்லபுரம் கடற்கரை பகுதியிலும் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் கடல் இரு வண்ணங்களில் காட்சி அளித்தது. சிறிது தூரத்திற்கு வெளிர் நீல நிறமாகவும், சிறிது தூரத்திற்கு அடர் நீல நிறமாகவும் மாறியது.

இதையடுத்து மீனவர்களும், சுற்றுலாப் பயணிகளும் ஆர்வத்துடன் சென்று பார்த்தனர். இது சுமார் அரை மணி நேரம் நீடித்த பிறகு, வழக்கமான நிறத்திற்கு மாறியது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முல்லைத்தீவு கடலில் ஏற்பட்ட மாற்றம் : கரைகளில் படியும் மர்மம் என்ன? சுனாமி ஆபத்தா?

முல்லைத்தீவு கடலில் ஏற்பட்ட மாற்றம்

முல்லைத்தீவு நாயாருவில் இருந்து கொக்கிளாய் வரையிலான கடற்கரையில் நேற்று பிற்பகல் முதல் கடுமையான மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அந்தப் பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். கடல் நீர் கறுப்பு நிறத்தில் காணப்பட்டுள்ள நிலையில், கரைக்கு அலை வந்து சென்றதன் பின்னர் கடற்கரையில் கறுப்பு நிறத்தில் தார் போன்ற கரையில் படிந்து விடுகின்றது.

அந்த தார் போன்ற மர்ம பொருள் மீண்டும் அலையில் சிக்கி கடலுக்கு செல்லாமல் இருப்பதாக கடற்றொழிலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். கறுப்பு நிறத்திலான இந்த திரவம் பாதங்களில் பட்டால், அதனை நீக்குவது சிரமமாகும். அத்துடன் கடுமையான துர்நாற்றம் வீசுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் முல்லைத்தீவு கடல் நீர் மட்டம் 5 அடி உயர்வடைந்த நிலையில் சுனாமி அச்சம் ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக அந்த பகுதியிலிருந்த மக்கள் பாதுகாப்பாக இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

எனினும் இது தொடர்பில் கொழும்பில் இருந்து சென்ற விஞ்ஞானிகள் மற்றும் கடல் ஆய்வாளர்கள், கடலில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இது சுனாமி ஆபத்தை ஏற்படுத்தாது எனவும் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய நாடொன்றிலிருந்து யாழ்ப்பாணம் வந்த இளம் பெண் மரணம்!!

இளம் பெண் மரணம்

ஜேர்மனியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த பெண்ணொருவர் சிசிக்சை பெற்றிருந்த நிலையில் நேற்று உ யிரிழந்துள்ளார். வீதி விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று உ யிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நல்லூரைச் சேர்ந்த சத்தியா செல்வரஞ்சன் என்பவரே இவ்வாறு உ யிரிழந்துள்ளார். கடந்த மாதம் 29ம் திகதி அனுராதபுரம் – மதவாச்சி வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் சத்தியாவின் 11 வயதான மகன் ஸ்மிநாத் செல்வரஞ்சன் உ யிரிழந்தார்.

ஜேர்மனியிலிருந்து குடும்பமாக தாயகம் வந்த நிலையில், யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த போது கோர விபத்து ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஒரே நேரத்தில் கர்ப்பமடைந்த 9 தாதிகளுக்கும் ஒன்றாக பிரசவம் : இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!

இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்

அமெரிக்காவின் போர்ட்லாந்து மாகாணத்தில் ஒரே நேரத்தில் கர்ப்பமடைந்த ஒன்பது செவிலியர்களும் ஒரே நேரத்தில் பிள்ளை பெற்றுக் கொண்டுள்ளனர். தற்போது அந்த பிள்ளைகளின் புகைப்படங்கள் இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.


கடந்த மார்ச் மாதம் ஒரே மருத்துவமனையைச் சேர்ந்த ஒன்பது செவிலியர்களும் கர்ப்பமாக இருந்த புகைப்படங்கள் இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்தது. தற்போது அவர்கள் ஒன்பது பேருக்கும் குழந்தைப் பிறந்துள்ளது. அந்தப் புகைப்படங்கள் தற்போது மீண்டும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.

அமெரிக்காவின் போர்ட்லாந்து மாகாணத்தைச் சேர்ந்த மெயின் மெடிக்கல் சென்டரைச் சேர்ந்த ஒன்பது செவிலியர்கள் ஒரே நேரத்தில் கர்ப்பமாகினர்.

அந்த செவிலியர்களே சில மாதங்களுக்கு முன் அதைப் புகைப்படமாக எடுத்து மெயின் மெடிக்கல் செண்டர் பேஸ்புக்கில் பதிவு செய்திருந்தது. பின்னர் அந்த புகைப்படம் வரவேற்பை பெற்றதும் பல ஊடகங்களிலும் பேசப்பட்டது.

தற்போது அந்த ஒன்பது செவிலியர்களுக்கும் குழந்தைப் பிறந்துள்ளது. அந்த ஒன்பது செவிலியர்களும் தங்கள் குழந்தைகளுடன் அமர்ந்தவாறு புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

அந்த புகைப்படத்தில் மூன்று மாதக் குழந்தை தொடங்கி மூன்று வாரக் குழந்தை வரை இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

15 வருடங்களுக்கு பின் முதன்முறையாக முடிவெட்டிய இளைஞர் : நெகிழ வைக்கும் காரணம்!!

முடிவெட்டிய இளைஞர்

கேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக 15 வருடங்கள் ஆசையாக வளர்த்த முடியினை அமெரிக்காவை சேர்ந்த ஒரு இளைஞர் தானமாக கொடுத்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த ரெனால்டோ அரோயோ (23) என்கிற இளைஞர் கடந்த 15 வருடங்கள் ஆசையாக முடி வளர்த்து வந்துள்ளார். வியாழக்கிழமைன்று இ ராணுவத்தில் கா லாட்படை பிரிவுக்கான ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற்றுள்ளது. அதில் முக்கிய விதியாக, வீரர்களின் முடி காது மற்றும் புருவத்தை தொடக்கூடாது என்பதாகும்.

தான் வளர்த்த முடியின் மீது அதிக ஆசை இருந்தாலும், இ ராணுவத்தில் சேர்வதற்காக அதனை எடுப்பதற்கு ரெனால்டோ முடிவு செய்தார். அதன்படி ரெனால்டோ தன் தலைமுடியை ‘லாக்ஸ் ஆஃப் லவ்’ என்ற நிறுவனத்திற்கு நன்கொடையாக அளித்துள்ளார்.

இந்த நிறுவனம் முடி நன்கொடைகளை வைத்து புற்றுநோய் சிகிச்சைகள் அல்லது அலோபீசியா அரேட்டா எனப்படும் திடீர் முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் ஒரு ஆட்டோ இம்யூன் நோயிலிருந்து முடி உதிர்தலை அனுபவிக்கும் குழந்தைகளுக்கு விக் செய்கிறது.

இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ரெனால்டோ அதிர்ஷ்டமுள்ள சிறுமிகள் என் தலைமுடியினை பெறுவார்கள் என கூறியுள்ளார்.

பெட்ரோல் டேங்கர் லொறி வெடித்து தீப்பிடித்தது : 20 பேர் பலி!!

டேங்கர் லொறி

கென்யாவில் இருந்து காங்கோவிற்கு பெட்ரோல் ஏற்றிக்கொண்டு நேற்று இரவு டேங்கர் லாரியும் சரக்கு வாகனமும் மோதி பெட்ரோல் டேங்கர் வெடித்து தீப்பிடித்ததுள்ளது. குறித்த விபத்தில் 20 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

உகாண்டாவின் மேற்கு பகுதியில் உள்ள ருபிரிசி மாவட்டத்தில், லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியதால் சாலையில் சென்றுகொண்டிருந்த சரக்கு வாகனம் மீது மோதியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன் போது இரண்டு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்து. அருகில் உள்ள கடைகள், சிறிய ஸ்டால்களும் தீப்பிடித்து எரிந்துள்ளது.

பின்னர் விபத்தில் காயமடைந்த பலர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றன.

குறித்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தவுள்ள விண்கல் : வெளியான அதிர்ச்சித் தகவல்!!

விண்கல்

அண்டவெளியில் காணப்படும் விண்கற்கள் தொடர்பில் வானியல் ஆய்வாளர்கள் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர். அதேபோன்று பூமியில் மோதி ஆபத்து விளைவிக்கக்கூடிய விண்கற்கள் தொடர்பிலும் எச்சரிக்கையாக இருக்கின்றனர்.

இதன்படி பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என நம்பப்படும் மற்றுமொரு விண்கல் தொடர்பான அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 1990 MU எனும் விண்கல்லே இவ்வாறு பூமிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போது சூரியனைச் சுற்றி வரும் இவ் விண்கல் 2027 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 6 ஆம் திகதி பூமிக்கு மிகவும் அண்மையாக வரும் எனவும், இதன்போது ஆபத்துக்கள் ஏற்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விண்கல் ஆனது 4 தொடக்கம் 9 கிலோ மீற்றர்கள் வரையான விட்டத்தினைக் கொண்டது எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

முதல் குழந்தை பிறந்து மூன்றே மாதங்களில் இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்த தாய் : ஒரு அபூர்வ நிகழ்வு!!

அபூர்வ நிகழ்வு

கசகஸ்தானில் முதல் குழந்தை பிறந்து மூன்றே மாதங்களில் ஒரு பெண் இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்த அபூர்வ நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இரட்டைக் குழந்தைகளை கர்ப்பத்தில் சுமந்த கசகஸ்தானைச் சேர்ந்த Liliya Konovalova (29), 11 வாரங்கள் வித்தியாசத்தில் தனது குழந்தைகள் இரண்டையும் பெற்றெடுத்தார்.

மே மாதம் 24ஆம் திகதி Liya என்னும் அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்த Liliya, ஆகத்து மாதம் 9ஆம் திகதி Liyaவின் தம்பி Maximஐப் பெற்றெடுத்து மருத்துவர்களை ஆச்சரியத்துக்குள்ளாக்கினார். காரணம், இது ஒரு அபூர்வ நிகழ்வாகும், 50 மில்லியனில் ஒருவருக்குதான் இப்படி நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இப்படி மூன்று மாத இடைவெளியில் Liliya குழந்தைகளைப் பெற்றெடுத்ததற்கு காரணம், அவரது உடலில் இரண்டு கர்ப்பப்பைகள் இருந்ததாகும். இரட்டையர்களாக இருந்தாலும் தங்களுக்கென்று தனித்தனி கர்ப்பப்பைகளில் வளர்ந்திருக்கிறார்கள் Liyaவும் Maximமும்.

தனக்கு இப்படி ஒரு நிலைமை இருப்பதை அறிந்தபோது அதிர்ச்சியடைந்ததாகவும், மருத்துவர்களின் அக்கறையால் தான் நல்லபடியாக குழந்தை பெற்றெடுத்ததாகவும் தெரிவிக்கும் Liliya, முதல் குழந்தை குறை பிரசவத்தில் பிறந்ததாகவும், இரண்டாவது பிரசவம் கடினமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.


தற்போது தனது இரண்டு குழந்தைகளையும் வீட்டுக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ள Liliyaவுக்கு ஏற்கனவே ஏழு வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.

காதலியை மீட்க 71 ஆடுகளை இழப்பீடாக கணவனுக்கு அளித்த காதலன் : சுவாரசிய சம்பவம்!!

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் காதலியை மீட்க கணவனுக்கு 71 ஆடுகளை இழப்பீடாக வழங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

கோரக்பூர் பகுதியிலேயே இளைஞர்கள் இருவரின் பிரச்னையை தீர்க்க 71 ஆடுகளை இழப்பீடாக வழங்க கிராம சபை உத்தரவிட்டுள்ளது.

திருமணம் முடிந்த இளம்பெண் காதலனுடன் மாயமானதே பிரச்னைகளுக்கு துவக்கமாக அமைந்துள்ளது.

ஆனால் கணவரின் குடும்பத்தினர் இருவரையும் கண்டுபிடித்துள்ளனர். இருப்பினும், கணவருடன் தாம் வாழ முடியாது என அந்த இளம்பெண் அடம்பிடித்துள்ளார்.

தொடர்ந்து கணவனும் அந்த காதலனும் வாக்குவாதத்தில் ஏற்பட்டதுடன், கைகலப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து கிராமத் தலைவர்களிடம் இந்த பிரச்னை கொண்டு செல்லப்பட்டது. அவர்கள் விசாரித்த பின்னர்,

யுவதி காதலனுடன் செல்லலாம் எனவும், ஆனால் கணவருக்கு இழப்பீடாக 71 ஆடுகள் தர வேண்டும் என முடிவு செய்து அறிவித்தனர்.

இதனையடுத்து 71 ஆடுகளுக்கு மனைவியை விட்டுத்தர அந்த கணவரும் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஆடுகளை வழங்கி காதலன் தமது காதலியை சொந்தமாக்கினார். ஆனால் காதலன் தமது காதலியை திரும்ப பெற அளித்த ஆடுகள் அனைத்தும் குடும்ப சொத்து எனவும், அதில் தமது கருத்தினை அவர் கேட்கவில்லை என்றும் அவரது தந்தை தற்போது பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் தமது மகன், குடும்ப சொத்தில் இருந்து 71 ஆடுகளை திருடிவிட்டார் எனவும், அந்த ஆடுகளை மீட்டுத் தர வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

தற்போது இந்த விவகாரம் பொலிசார் விசாரணையில் உள்ளது.

தலை து ண்டித்து கொ ல்லப்பட்ட இளைஞர் : கைக்குழந்தையுடன் கதறும் மனைவி!!

கைக்குழந்தையுடன் க தறும் மனைவி

நெல்லை மாவட்டத்தில் கட்டிட தொழிலாளி ஒருவர் த லை துண்டித்து கொ லை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான மணிகண்டன், கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு முத்துமாரி என்பவரை திருமணம் செய்துள்ளார்.

இந்த தம்பதியினருக்கு மூன்று மாத கைக்குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று சரியாக இரவு 9.40 மணியளவில் மணிகண்டன் தன்னுடைய நண்பர்கள் கணேசன் மற்றும் சரவணனுடன் அப்பகுதியில் உள்ள ஆற்றுப்பாலம் அருகே பேசிக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது இரு சக்கர வாகனத்தில் அரிவாள்களுடன் வந்த மர்ம நபர்கள் 6 பேர், திடீரென மணிகண்டனின் காலில் ஓங்கி வெ ட்டியுள்ளனர். ஒரு கால் து ண்டானதால் அங்கிருந்து ஓட முடியாமல் திணறிய மணிகண்டனின் க ழுத்தில் மற்றொரு நபர் வெ ட்டியுள்ளார்.

இதில் அவருடைய த லை துண்டாக விழுந்துள்ளது. சம்பவ இடத்திலேயே மணிகண்டன் ர த்த வெ ள்ளத்தில் துடிதுடித்து இ றந்துள்ளார். இதனை பார்த்த மற்ற இருவரும் லேசான காயங்களுடன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பொலிஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் குற்றவாளிகளை கைது செய்யுமாறு மணிகண்டனின் உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விசாரணையில், பக்கத்து கிராமத்தை சேர்ந்த குறிப்பிட்ட சமூக மக்கள் இப்பகுதியை கடக்கும் போது, மணிகண்டன் சாதி பெயரை சொல்லி கேலி செய்திருப்பதாகவும், சாதித் தலைவருக்கு ப்ளக்ஸ் வைத்து கிழிக்கப்பட்ட பிரச்சனையில் மணிகண்டன் சிலரை தாக்கியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

புற்றுநோய் சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தை வெள்ள நிவாரண நிதிக்கு கொடுத்த நடிகை!!

நடிகை சரண்யா

புற்றுநோய் சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை சீரியல் மற்றும் திரைப்பட நடிகையான சரண்யா கேரள வெள்ள நிவாரண நிதிக்கு கொடுத்துள்ளார்.

கேரளாவில் சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சரண்யா. இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.


அதிலிருந்து தற்போது வரை 7 முறை புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை செய்துவிட்டார். இவருடைய சம்பளத்தில் மட்டுமே குடும்ப செலவுகள் அனைத்தும் கவனிக்கப்பட்டு வருவதால், 8வது முறை அறுவை சிகிச்சை செய்வதற்கு போதிய பணம் இல்லை என கடந்த சில மாதங்களுக்கு முன் சமூகவலைத்தளத்தில் கோரிக்கை வைத்தார்.

அதனை பார்த்த சில நடிகர்கள் அவருக்கு பண உதவி கொடுக்க முன்வந்தனர். இந்த நிலையில் அறுவை சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை, கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு நடிகை சரண்யா கொடுத்துள்ளார்.

அவருடைய இந்த சேவையினை இணையதளவாசிகள் பாராட்டி வருகின்றனர். இதேபோல நடிகர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு நிவாரண நிதியினை தொடர்ந்து அளித்து வருகின்றனர்.

2 மாதம் தான் ஆயுள் : சீமான் தயவுசெஞ்சு என்ன நிம்மதியுடன் வாழவிடுங்கள் : கண்ணீர் விட்டு கதறிய நடிகை!!

விஜயலட்சுமி

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கோரிக்கை விடுத்து நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் நடிகர் ரஜினகாந்திடம் உதவி கேட்டு நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டார். சில தினங்களுக்கு பிறகு ரஜினி தன்னை தொடர்புக்கொண்டு பேசிய உதவி செய்ததாக மற்றொரு வீடியோ பதிவிட்டார்.

தற்போது, சீமானுக்கு கோரிக்கை விடுத்து நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ரஜினிகாந்த உதவி செய்ததை பலர் அரசியல் ஆக்குகிறார்கள். என்னை தவறான பெண்ணாக சித்தரித்து பலர் செய்தி வெளியிடுகின்றனர்.

இதனால், நான் மிகுந்த வேதனை அடைந்துள்ளேன். எனக்கு இதயப்பிரச்சினை இருக்கிறது, 2 மாதம் தான் ஆயுள் அதற்குள் குடும்பத்திற்காக எதாவது நான் செய்ய வேண்டும். கமல், ரஜினி என யாரிடம் வேண்டுமானாலும் நான் உதவி கேட்பேன். அதை அரசியல் ஆக்குகிறார்கள்.

சீமானுக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. எனது வாழ்கை சூழ்நிலையே மோசமாக மாறிவிட்டது. அவருக்கு ஆதரவாக எழுதும் பலர் என்னை தவறாக சித்தரிக்கின்றனர். இது எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. நான் முன் குறிப்பிட்டது போல் அனைத்தையும் விளாவாரியாக எழுத்து வைத்து த ற்கொ லை செய்துக்கொள்வேன். உங்களுக்கு தான் பிரச்சினை.

எனவே, சீமான் நீங்கள் உங்கள் ஆதவாளர்களிடம் இனி என்னை தவறாக சித்தரித்து எழுதுவதை நிறுத்தும் படி கூற வேண்டும். அந்த நிலையில் தான் நீங்கள் இருக்கிறீர்கள் என கோரியுள்ளார்.

யாழ்.கொக்குவில் பகுதியில் உணவகம் ஒன்றின் மீது தா க்குதல்!!

உணவகம் ஒன்றின் மீது தா க்குதல்

யாழ்.கொக்குவில் – பூநாறி மரத்தடிப் பகுதியில் உள்ள உணகவத்தில் அடையாளந்தெரியாத குழுவினரால் தா க்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு குறித்த உணவத்திற்குள் புகுந்த அடையாளந்தெரியாத நபர்கள் அங்கு தா க்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதன்போது, உணவக உரிமையாளர் காயமடைந்துள்ளதுடன், அங்கிருந்த பெறுமதியான பொருட்களுக்கும் சே தம் ஏற்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.