வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து போராட்டம்!!

போராட்டம்

வவுனியா வடக்கு பிரதேச செயலாளரை இடமாற்றக் கோரி வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று (21.08.2019) காலை 10 மணியளவில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மக்களினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் நியமன காலத்திலிருந்து இன்று வரை 16 ஆண்டு காலமாக வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக கடமையாற்றி வருகின்றார். அந்த வகையில் பொதுமக்களிடம் இருந்து பல முறைப்பாடுகள் அரசாங்க அதிபர் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் இதுவரையும் எந்தவொரு நடவடிக்கையோ விசாரணைகளோ முன்னெடுக்கப்பட்டு தீர்வு வழங்கப்படவில்லை,

எனவே காலம் தாழ்த்தாது விரைவாக வவுனியா வடக்கு பிரதேச செயலாளரை இப் பிரதேச செயலக பிரிவிலிருந்து வேறு பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் செய்யுமாறும் இவர் தொடர்பிலான முறைகேடுகளையும் உரியமுறையில் நேர்மையாகவும் நீதியாகவும் விசாரணை செய்யுமாறும் தெரிவித்தும்,

பரசன்குளம் பகுதியில் அமைந்துள்ள வயல்காணி பிரித்து வழங்குதலில் முறைகேடு இடம்பெற்றுதாகவும் தெரிவித்து குறித்த போராட்டம் இடம்பெற்றிருந்தது.

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் அரசே வவுனியா வடக்கு பிரதேச செயலாளரை இடமாற்றம் செய், எமக்காக குளத்தினை கட்டி பருந்துகளிடம் கொடுத்தது யார்? ஏழைகளின் வயிற்றில் அடிக்காதீர்கள் , 15 வருடகாலம் வவுனியா வடக்கு மக்களுக்கு வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் செய்த அநீதி போதும்,

சஞ்சீவிக் காட்டுக்கு யார் காணி உறுதி கொடுத்தது போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்திவாறு போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

போராட்டகாரர்கள் வவுனியா மாவட்ட செயலக வாசலிருந்து பேரணியாக வவுனியா மாவட்ட செயலகத்தின் அரசாங்க அலுவலகத்தினை சென்றடைந்து வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனீபா அவர்களிடம் பல்வேறு கோரிக்கைகள் உள்ளடங்கிய மகஜரினையும் கையளித்தனர். அரசாங்க அதிபருக்கு வழங்கப்பட்ட மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஒர் அரச உத்தியோகத்தரின் கடமைக்காலம் 5வருட காலமாகும் ஆனால் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் 16 ஆண்டு காலமாக இப்பிரதேச செயலகத்தில் கடமையாற்றுக்கின்றார்.

அரசினால் வழங்கப்பட்ட நிரந்தர வீட்டுத்திட்டத்தில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை புறம்தள்ளி முறையற்ற விதத்தில் வெளிமாவட்டத்தினை சேர்ந்தவர்களுக்கும் வெளிநாட்டினை சேர்ந்தவர்களுக்கும் வழங்கி வருதல், புளியங்குளம், கனகராயன்குளம் ஏ9 வீதியில் உள்ள அரசகாணிகளை முறையற்ற விதத்தில் குத்தகை அடிப்படையிலும் குடியிருப்பு காணிகளாவும் வழங்குதல்,

வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவு காட்டுப்பகுதியில் முறையற்ற விதத்தில் கிரவல் அகழ்விற்கு அனுமதி வழங்குதல், வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் கட்டுமான பணிகளுக்கான மணல் அகழ்விற்கான அனுமதியினை குறைத்து முகவர்கள் ஊடாக வெளிமாவட்டங்களுக்கு விற்பனை செய்தல், வவுனியா வடக்கு பிரதேசத்தில் கால்நடைகளை ஒரு நபர் ஊடாக ஒப்பந்த அடிப்படையில் கொள்ளவனவு செய்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கல்,

வீட்டுதிட்டம் என்ற பெயரில் காடுகளை அழித்து பயனாளிகளை பயன்படுத்தி விறகு விற்பனையில் ஈடுபடுதல், பிரதேச செயலாளரின் ஊழல் மோசடிகளுக்கு துணைபுரியும் அரச ஊழியர்களுக்கு காணி வீடு வழங்குதல், துணைபோகாத ஊழியர்களை பழிவாங்குதலும் வெளியேற்றலும் என்று பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் மீது வவுனியா வடக்கு மக்களினால் முன்வைக்கப்பட்டுள்ளதுடன்,

மேற்குறிப்பிட்ட காரணங்களின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுக்குமாறும் பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்து வவுனியா வடக்கு பிரிவுக்கு புதிய பிரதேச செயலாளரை நியமிக்குமாறு குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்!!

இ றந்து மிதக்கும் மீன்கள்

வவுனியா நகரில் உள்ள வவுனியா குளத்தில் மீன்கள் இ றந்து மிதக்கின்றமையால் அப்பகுதியில் சுகாதார பிரச்சனை எழுந்துள்ளது.

வவுனியாயில் கடந்த சில மாதங்களாக நிலவிய வறட்சி காரணமாக வவுனியா குளத்தின் நீர்மட்டம் சடுதியாக குறைவடைந்து குளத்தின் பெரும் பகுதி உலர்ந்து காணப்படுகின்றது.

குறுகிய பகுதிலேயே நீர் காணப்படுகின்றது. இந்நிலையில் குறித்த நீர்ப்பகுதியில் பரவலாக மீன்கள் இறந்து நீரில் மிதக்கின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார பிரச்சனையும், சுவாசம் சம்மந்தமான பிரச்சனைகளும் எழுந்துள்ளது.

நீரில் மீன்கள் இறந்து மிதக்கின்ற போதும் குறித்த குளத்தில் மீன்பிடியில் ஈடுபடுவோர் தொடர்ந்தும் தமது மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் இக்குளத்து மீனை உண்பவர்களுக்கும் நோய் ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து யாழ். சென்ற வாகனம் விபத்து : 6 பேருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!!

வாகனம் விபத்து

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் – அநுராதபுரம் வீதியில் சாலியவெவ 19ஆம் மைல்கல் பிரதேசத்தில் வைத்து இன்று அதிகாலை விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் குழந்தை உட்பட 6 பேர் படுகாயமடைந்து நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேன் ஒன்று, எதிரே பயணித்துக்கொண்டிருந்த லொறியின் பின் பகுதியில் மோதியமையினால் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் காயமடைந்த அனைவரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்னர்.

விபத்தில் காயமடைந்தவர்களை பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சாலியவெலல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இளம் பெண்ணுடன் மொத்த குடும்பமும் தூ க்கிட்டு த ற்கொ லை : பகீர் கடிதம் சிக்கியது!!

தூ க்கிட்டு த ற்கொ லை

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பெற்றோருடன் இளம் பெண்ணும் தூ க்கிட்டு த ற்கொ லை செய்து கொண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அ திர்வலைகளை கிளப்பியுள்ளது. கேரள மாநிலம் கொச்சி அருகே வைப்பின் பகுதியிலேயே இந்த அ திர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

54 வயதான சுபாஷ், அவரது மனைவி 53 வயதான கீதா மற்றும் இவர்களது மகள் 24 வயதான நயனா ஆகிய மூவருமே தூ க்கிட்டு தற் கொ லை செய்து கொண்ட நிலையில் ச டலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் மேற்கொண்ட சோதனையில், தூ க்கிட்டு த ற்கொ லை செய்துகொள்வதற்கு முன்னர் எழுதிய கடிதமும் சிக்கியுள்ளது.

சுபாஷின் சகோதரர் சுரேஷ் திங்களன்று பகல் குடியிருப்புக்கு தேடிச் சென்ற நிலையிலேயே இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வேலை நிமித்தம் கர்நாடகா மாநிலம் பெங்களூருவுக்கு சென்ற நயனா பின்னர் மாயமானதாக உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் நடந்த இச்சம்பவத்தில், பொலிசாருக்கு புகார் அளிக்கப்பட்டு, அங்குள்ள பொலிசார் நயனாவை மீட்டுள்ளனர். தொடர்ந்து கடந்த ஞாயிறன்று நயனா கேரளா திரும்பியுள்ளார். இந்த நிலையிலேயே பெ ற்றோர் உள்ளிட்ட மூவரும் தூ க்கிட்டு த ற்கொ லை செய்து கொண்டுள்ளனர்.

சுபாஷ் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில், இந்த முடிவுக்கு வேறு எவரும் காரணம் இல்லை என்றும், மூவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட முடிவே இது எனவும் குறிப்பிட்டிருந்தனர். நயனாவுக்கு பெங்களூருவில் என்ன நடந்தது, ஏன் நயனா மாயமானார் உள்ளிட்ட கேள்விகளுக்கு உரிய விசாரணைக்கு பின்னரே உண்மை தெரியவரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வயிற்று வலியால் துடித்த 14 வயது சிறுமி… ஸ்கேன் ரிப்போர்ட்டில் என்ன இருந்தது தெரியுமா?

14 வயது சிறுமி

இந்தியாவில் வயிற்று வலி மற்றும் வாந்தியால் கடும் அவதிப்பட்டு வந்த சிறுமியின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்த போது , சிறுமியின் வயிற்றின் உள்ளே சுமார் 1 கிலோவிற்கு மேல் முடி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேசத்தின் Gonda-வைச் சேர்ந்த பூஜா என்ற 14 வயது சிறுமி கடுமையான வயிற்று வலி மற்றும் தொடர்ந்து வாந்தி எடுத்து வந்துள்ளார். இதனால் பூஜாவின் பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிடிஸ்கேன் எடுக்கும் படி கூறியுள்ளனர்.

அதன் பின் சிசிஸ்கேன் சோதனையில் வயிற்றின் உள்ளே எதோ உருண்டையாக இருப்பதைக் கண்டுள்ளனர். இதையடுத்து மருத்துவர்கள் நடத்திய அறுவை சிகிச்சையில், சிறுமியின் வயிற்றில் இருந்து சுமார் 1.4 கிலோவிற்கு முடி உருண்டை போன்று இருந்துள்ளது.

அந்த சிறுமியிடம் விசாரித்த போது அவருக்கு முடி திண்ணும் பழக்கம்(Rapunzel syndrome) இருந்துள்ளது, இதை அந்த சிறுமியே மருத்துவர்களிடம் ஒப்புக் கொண்டுள்ளார். இது குறித்து சிறுமிக்கு சிகிச்சை பார்த்த மருத்துவர் கூறுகையில், இதை அப்படியே கவனிக்காமல் விட்டிருந்தால், சிறுமியின் உயிருக்கூட ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்று அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

நின்று கொண்டே சாப்பிடும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? கண்டிப்பா இந்த தகவல் உங்களுக்கு தான்!!

நின்று கொண்டே சாப்பிடும் பழக்கம்

பெரும்பாலானோர் வீட்டில் அல்லது வெளி இடங்களில் நின்று கொண்டே சாப்பிட்டு பழகியிருப்பார்கள். ஆனால் சாப்பிடும் போது நாம் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

சாப்பிடுவதற்கு முன்போ, சாப்பிட்ட உடனேயோ நிறைய தண்ணீர் குடிக்க கூடாது, சாப்பிடும்போது பழங்களை உட்கொள்ளக்கூடாது. குறிப்பாக நின்று கொண்டே சாப்பிட கூடாது . ஏனெனில் நின்றுகொண்டு சாப்பிடுவதால் மன அழுத்தம் மற்றும் நாவின் சுவை அரும்புகள் பாதிக்கப்படும்.

நாம் சாப்பிடும்போது, நேராக அமர்ந்து சாப்பிட வேண்டும். அப்போதுதான் உணவின் ருசி அதிகமாக இருக்கும். நம் உடலில் உணவின் மணம் மற்றும் ருசியை கடத்த வெஸ்டிபுலார் சென்ஸ் மிகவும் அவசியம்.

நின்று கொண்டு சாப்பிடும்போது, புவி ஈர்ப்பு விசையின் காரணமாக உடலில் இரத்த ஓட்டம் கீழ் நோக்கியே பாய்கிறது. இதன் விளைவாக, உடலில் இரத்தத்தை மேல் நோக்கியும் பாய செய்வதற்காக, இதயம் பெரும்பாடு படுகிறது.

மேலும் இது ஹைப்போதலாமிக் பிட்யூட்ரி அட்ரினலை தூண்டி மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கார்டிசால் ஹார்மோனை சுரக்க செய்கிறது. இந்நிலை தொடர்ந்தால் உடலில் ருசியை அறியக்கூடிய மற்றும் உணர்வுகளை கடத்தக்கூடிய பகுதிகள் பாதிக்கப்படும். இதனால் மன அழுத்தமும் ஏற்படும். அதனால், எப்போதும் சம்மணமிட்டு சாப்பிட வேண்டும்.

புதிதாக வாங்கிய மோட்டார் சைக்கிளை பறித்துச் சென்ற கும்பல் : யாழில் இளைஞனுக்கு நடந்த சோகம்!!

இளைஞனுக்கு நடந்த சோகம்

யாழ்ப்பாணத்தில் புதிதாக வாங்கிய மோட்டார சைக்கிளை மர்மக் கும்பல் ஒன்று பறித்துச் சென்றுள்ளதாக பொலிஸாரில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இணுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பேற்றைய தினம் யாழ். நகரில் அமைந்துள்ள மோட்டார் சைக்கிள் விற்பனையகத்தில் புதிதாக வாங்கியுள்ளார். குறித்த மோட்டார் சைக்கிளின் பெறுமதி 2 இலட்சத்து 38 ஆயிரம் ரூபாய் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இன்று மாலை புதிதாக வாங்கிய மோட்டார் சைக்கிளை ஆலயத்துக்கு கொண்டு சென்று பூஜை வழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர் தனது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மக் கும்பல் இளைஞரை தாக்கிவிட்டு மோட்டார் சைக்கிளைப் பறித்துச் சென்றுள்ளனர்.

மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த 9 பேர் கொண்ட கும்பலே இச்செயலில் ஈடுபட்டதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞன் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகிறார் இலங்கைத் தமிழர்!!

நிஷான் கனகராஜா

பிரித்தானியா லெஸ்ரர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான பேராசிரியர் நிஷான் கனகராஜா நியமனம் பெறவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நியமனம் எதிர்வரும் நவம்பர் 04 ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேராசிரியர் கனகராஜா 1985 ஆம் ஆண்டு கணிதத்துறையில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி நான்கு பாடங்களிலும் அதிவிசேட சித்தி பெற்று கேம்பிறிஜ் பல்கலைக்கழத்திற்குத் தெரிவாகிக் கல்வியைப் பெற்றுள்ளார்.

கடந்த 1966 இல் சுண்டிக்குளியில் பிறந்த பேராசிரியர் நிஷான் கனகராஜாவின் தந்தை கனகராஜா யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரியின் ஆசிரியராகவும் தாய் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியின் ஆசிரியையாகவும் இருந்தவர்கள்.

உலகப் பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் 2018 ஆம் ஆண்டுத் தரவுகளின் படி லெஸ்டர் பல்கலைக்கழகம் 167 ஆம் இடத்தில் உள்ளது. பிரித்தானியாவில் 25 ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சென் ஜோன்ஸ் கல்லூரியில் 1985 ஆம் ஆண்டின் உயர்தரப் பிரிவில் கற்ற பேராசிரியர் றமா திருநாமச்சந்திரன் பிரித்தானியாவின் Canterbury Christ Church University இல் துணைவேந்தராக உள்ளார் என்பதுவும் சுட்டிக்காட்டத்தக்கது.

வாக்குவாதம் மோதலாக மாறியதன் விளைவு!!

வாக்குவாதம்

சியம்பலாந்துவ-களுகலவத்த பகுதியில் தடி ஒன்றினால் தாக்கப்பட்டு நபரொருவர் கொ லை செய்யப்பட்டுள்ளார். இரண்டு நபர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்ததை அடுத்தே குறித்த தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்றுவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 37 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சியம்பலாந்துவ காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா ‌புதிய கற்பகபுரம் கிராம மக்கள் அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பு!!

மகஜர் கையளிப்பு

வவுனியா அரசாங்க அதிபரிடம் தமது கிராமத்தின் குறைபாடுகளை சுட்டிக்காட்டி மகஜரொன்றினை கற்பகபுரம் கிராம மக்கள் இன்று கையளித்துள்ளனர்.

புதிய கற்பகபுரம் கிராமத்தில் கிராம அபிவிருத்தி சங்கம் கடந்த 3 வருடங்களாக செயற்படாமல் உள்ளது என்றும் அதனை புதுப்பித்து தருமாறு தெரிவித்த மக்கள், கிராமத்திற்கு வீதிகள் புனரமைப்பு செய்யப்படவில்லை, வீதியால் மக்கள் பயணிக்க முடியாதுள்ளது. எனவே இவற்றை சரிசெய்து தருமாறு கேட்டுக்கொண்டனர்.

மக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்த அரசாங்க அதிபர் பிரதேச செயலாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு புதிய கற்பகபுரம் கிராமத்தவர்களின் விடங்களை கேட்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணித்ததுடன். கிராம மக்களை பிரதேச செயலாளரிடம் சென்று குறித்த விடயங்களை தெரிவிக்குமாறும் அறிவுறுத்தியிருந்தார். இதனையடுத்து பிரதேச செயலாளாரிடம் சென்ற கிராமத்தவர்கள் பிரதேச செயலாளரிடமும் தமது கிராமத்தின் பிரச்சனைகளை எடுத்தியம்பியிருந்ததுடன் தமக்கான தீர்வை பெற்றுத்தருமாறும் கிராம அபிவிருத்தி சங்கத்தின் பொதுக்கூட்டத்தினை கூட்டி நிர்வாகத் தெரிவை செய்யுமாறும் கோரியிருந்தனர்.

மகளின் திருமணம் தாமதம் : நளினியின் மனுவை பரிசீலித்த நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மகள் திருமணம் ஏற்பாட்டிற்காக வழங்கிய ஒரு மாத பிணையை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க கோரி நளினி தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளது

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் 52 வயதான நளினி, அவரது மகள் ஹரித்ரா திருமணத்திற்காக யூலை 25ம் திகதி முதல் ஒரு மாத பிணையில் உள்ளார்.

முன்னதாக, லண்டனில் இருந்த மகள் வருவதில் தாமதம் ஏற்படுவதால் பிணையை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கும்படி உள்துறை செயலாளர் மற்றும் சிறைத்துறை தலைவர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பியிருந்தார். ஆனால், நளினியின் கோரிக்கையை ஏற்க சிறைத்துறை தலைவர் மறுத்துள்ளார்.

இந்நிலையில், மகள் திருமண ஏற்பாட்டிற்காக வழங்கிய ஒரு மாத பிணையை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க கோரி நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம், இந்த மனு தொடர்பாக நாளை மறுநாள் ஆகஸ்ட் 22ம் திகதி பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

மேலும், 7 பேர் விடுதலை தொடர்பாக அளித்த மனுவை பரசீலிக்க கோரி நளினி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை, திகதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்தது. 7 பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானம் குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது என நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் வாகன விபத்து : ஒருவர் பலி!!

வாகன விபத்து

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில்குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு அருகாமையில் இன்று நண்பகல் இடம்பெற்ற விபத்து ஒன்றில் சிக்கிய மற்றுமொரு குடும்பஸ்தர் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ் உணவகங்களில் இப்படியும் சீர்கேடுகளா?

யாழ் உணவகங்களில்..

யாழ்ப்பாணம் சங்கானை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் உணவுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் செயலணி என்பன இணைந்து உணவங்கள் மற்றும் மருந்தகங்கள் மீது நேற்று திடீர் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டனர்.

இந்தச் சோதனை நடவடிக்கையின் போது 15 உணவகங்கள் சுகாதாரச் சீர்கேடுகளுடன் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் 9 உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

பல உணவகங்கள் வெளி தோற்றத்தில் அழகாக காணப்படுவதாகவும் பின் பகுதி சுகாதார சீர்கேடுகளுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

4 மருந்தகங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 2 மருந்தகங்களில் தகுதியற்ற மருந்து வழங்குனர்கள் சேவையில் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வடமாகாணத்தின் அனைத்து பிரதேசங்களிலும் இந்த சோதனை நடவடிக்கள் தொடரும்.

தகுதியற்ற உணவங்கள் காணப்படின் மக்கள் ஆளுநர் அலுவலகத்தின் 021 221 9375 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அறியத்தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வவுனியாவில் வெள்ளை வானில் க டத்திச் செல்லப்பட்ட 17 வயது யுவதி : நடந்தது என்ன?

யுவதியை க டத்த முயற்சி

வவுனியா வடக்கு, காஞ்சிராமோட்டை பகுதியில் 17 வயது யுவதி ஒருவரை க டத்திச் சென்ற 11 பேரை கிராம மக்களின் உதவியுடன் நேற்று (19.08) இரவு 12.30 மணியளவில் கைது செய்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த யுவதி உட்பட அவரது குடும்பத்தினர் கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் இடம்பெயர்ந்து வசித்து வந்துள்ளதுடன் மூன்று வருடங்களுக்கு முன்னர் வவுனியா வடக்கு காஞ்சிராமோட்டை, நாவலர் பாம் பகுதியில் மீள் குடியேறியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்றிரவு (19.08) 11 மணியளவில் திடீரென வெள்ளை ஹயஸ் ரக வான் மற்றும் முச்சக்கர வண்டிகளில் வந்த சந்தேக நபர்கள் யுவதியை க டத்திச் செல்ல முயற்சித்துள்ளனர்.

17 வயதான யுவதியை வானில் ஏற்றிக்  கடத்திச் சென்ற போது, உடனடியாக செயற்பட்ட கிராமவாசிகள் வானை பின்தொடர்ந்து சென்றதுடன், புளியங்குளம் பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

உடனடியாக செயற்பட்ட புளியங்குளம் பொலிசார் கிராம மக்களுடன் இணைந்து வாகனத்தை மடக்கிப் பிடித்து யுவதியை மீட்டதுடன், வான் மற்றும் முச்சக்கர வண்டிகளில் இருந்த 10 பேரையும், இக் க டத்தலுக்கு உடந்தையாக செயற்பட்ட சாரதியையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட போது குறித்த நபர்கள் ம து போ தையில் இருந்துள்ளனர். இதன்போது சந்தேக நபர்கள் மீது மக்கள் தா க்க முயற்சித்ததுடன் வாகனத்தையும் தா க்க முயற்சித்தனர். இருப்பினும் பொலிசார் நிலமையை கட்டுப்படுத்தியுள்ளனர்.

யுவதியை கடத்திச் செல்ல முயற்சித்தவர்களின் பிரதான சந்தேக நபர், யுவதியின் வீட்டை நிர்மாணித்த மேசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேக நபர்கள் வவுனியா ஆச்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், க டத்தல் சந்தேக நபர்களில் ஓருவர் குறித்த யுவதியை காதலித்துள்ளார் எனவும் தெரிவித்ததுடன், காதல் விவகாரமே க டத்தலுக்கு காரணம் என புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த நபர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

வவுனியா தாண்டிக்குளத்தில் கன்றுக்குட்டிகளை மோதித்தள்ளிய புகையிரதம்!!

தாண்டிக்குளத்தில்..

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் புகையிரதம் மோதி இரண்டு கன்றுக்குட்டிகள் உ யிரிழந்ததுடன் கன்றுக்குட்டி ஒன்று காயமடைந்துள்ளது. இன்று காலை யாழ்ப்பாணம் நோக்கி சென்ற புகையிரத்திலேயே தண்டவாளத்தில் நின்ற மூன்று பசுக்கன்றுகள் மோதுண்டுள்ளன.

இதன் காரணமாக இரு கன்றுகள் சம்பவ இடத்திலேயே உ யிரிழந்ததுடன்
காயமடைந்த கன்றுக்கு அப்பகுதி மக்கள் சிகிச்சை அளித்திருந்தனர். தாண்டிக்குளம் பகுதியில் அண்மைல் 10 மாடுகள் புகையிரத்தில் மோதுண்டு ப லியாகியிருந்திருந்தன.

இதேவேளை யாழ்.தென்மராட்சி, எழுதுமட்டுவாழ், பகுதியில் நேற்று புகையிரதம் மோதி 5 கால்நடைகள் உ யிரிழந்துள்ளன. புகையிரதத்தில் கால்நடைகள் மோதி உ யிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

கால்நடை வளர்ப்போர் அவைகளைக் கட்டாக்காலிகளாக விடுவதாலேயே விபத்துக்கள் இடம்பெறுகின்றன என்று சுட்டிக்காட்டப்படுகின்றன. இவ்வாறான உ யிரிழப்புக்களைத் தவிர்ப்பதற்கு மக்கள் தமது கால்நடைகளைக் கட்டி வளர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா கச்சேரியில் மருத்துவச் சான்றிதழ் எடுக்கச் சென்ற பாலூட்டும் தாய்க்கு நடந்த கொடுமை!!

வவுனியா கச்சேரியில் உள்ள தேசிய போக்குவரத்து வைத்திய நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களின் செயற்பாடு குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.

புதிதாக சாரதி அனுமதிப்பத்திரம் எடுப்பவர்களும் காலாவதியான அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கும் மருத்துவச் சான்றிதழ் பெறுவதற்காக செல்லும் மக்களை அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மிகவும் உதாசீனமாக நடத்தி வருவதுடன் அவர்களை அலைக்கழிக்கும் வகையிலும் நடந்து கொள்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

90 வீதமான தமிழ்மக்கள் சேவை பெறும் அலுவலகத்தில் தமிழை கொச்சையாகவும் தவறாகவும் பேசும் பெரும்பான்மை இனத்தவர்கள் பணியாற்றுவதால் அவர்கள் சொல்வது மக்களுக்கு புரிவதுமில்லை மக்கள் சொல்வது அவர்களுக்கு புரிவதுமில்லை. இதனால் பலர் மருத்துவச்சான்றிதழ் பெறுவதற்காக இரண்டு மூன்று நாட்கள் நேரத்தை செலவுசெய்ய வேண்டியுள்ளது.

அங்கு பொறுப்பான பதவி வகிக்கும் பெண் அதிகாரி ஒருவர் சேவைபெற வரும் மக்களுடன் அதிகார தோரணையில் நடந்து கொள்வதுடன் தூர இடங்களிலிருந்து அலுவலக நேரமான காலை 9.00 மணிக்கு வருபவர்களையும் திருப்பி அனுப்பி அவர்களை அலைய விடுவதாக பலர் ஆதங்கப்படுகின்றனர்.

இன்று காலை 8.20 மணிக்கு பாலூட்டும் தாயொருவரும் இரண்டு குழந்தைகளும் கணவரும், பெண்ணின் சாரதி அனுமதிப்பத்திரத்தை புதிப்பிப்பதற்காக மருத்துவச்

சான்றிதழ் பெற்றுக்கொள்ள அலுவலகத்திற்கு சென்றிருந்தனர். 9.00 மணிவரை காத்திருந்துவிட்டு குறித்த தாய் குழந்தைக்கு பாலூட்டுவதற்காக அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்ற நேரம், அலுவலகத்தில் இலக்கமிடப்பட்ட விண்ணப்ப படிவங்கள் விநியோகிக்கப்பட்டது. இதன்போது குறித்த பெண்ணுக்கு பதிலாக அவரின் கணவர் மனைவிக்கான விண்ணப்ப படிவத்தை பெற முயன்ற போது உரியவர் இல்லாமல் படிவம் தரமுடியாதென கூறி அங்கிருந்த ஊழியர் அலுவலகத்திற்கு பொறுப்பான பெண் ஒருவரிடம் அனுப்பி வைத்தார்.

அவரிடம் தாய் பாலூட்ட சென்ற விடத்தை சொல்லி கேட்கவும் அப்படி தரமுடியாது. உரியவர் வரவேண்டும் என கூறி அனுப்பி விட்டார். கணவர் உடனடியாக சென்று குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருந்த மனைவியை ஐந்து நிமிடங்களுக்குள் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார். அங்கு வந்த தாய்க்கு இன்று சாரதி அனுமதிப் பத்திரத்தை புதுப்பிப்பதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட மாட்டாது என திருப்பி அனுப்பியுள்ளனர்.

இன்றைய நாளை மருத்துவச் சான்றிதழ் பெறுவதற்காக வீணடித்தும் எந்தப் பயனுமின்றி குறித்த குடும்பம் உள்ளிட்ட பலர் வீடு திரும்பியுள்ளனர்.

நாளாந்தம் இவ்வாறு பல மக்கள் இந்த அலுவலகத்தில் உதாசீனப்படுத்தப்படுவதாக பலர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

அரச அதிகாரிகள் அனைவரும் மக்களின் வரிப்பணத்தில் ஊதியம்பெறும் மக்கள் சேவகர்கள் என்பதை மறந்து மக்கள் மீது அதிகாரத்தையும் அடாவடித்தனத்தையும் காட்ட முயல்வதை அவர்களின் மேலதிகாரிகள் கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுப்பதன் மூலம் சரியான மக்கள் சேவையை வழங்க ஆவண செய்ய வேண்டும்.