தமிழகத்தில் சாதி தீண்டாமை கொ டுமைகள் தொடர்ந்து அரங்கேறி வரும் நிலையில் வேலூர் மாவட்டத்தில் நிகழ்ந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக வெளியான வீடியோவில், இ றந்தவரின் உடலை சுமந்த வந்த உறவினர்கள், பாடையில் கயிறு கட்டி பாலத்தின் மீது இருந்த கீழே இறக்குகின்றனர். கீழே இருக்கும் நபர்கள் பாடையை பிடித்து சுமந்து செல்கின்றனர். இந்த வீடியோ குறித்து வெளியான தகவலின் படி, வேலூரில் இச்சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இறந்த நபர் தலித்து என தெரியவந்துள்ளது.
இந்நிலையில், மாயனத்திற்குள் நுழையும் வழி சில உயர் சாதியினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆக்கிரமிப்பாளர்கள் பண்ணை நிலம் வழியாக உடலை எடுத்து செல்ல அனுமதி மறுத்துள்ளனர். எனவே, தலித்துகளுக்கு மயானத்தை அணுக அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், உறவினர்கள் பாலத்திலிருந்து கயிறுகளால் உ டலை இறக்கி இறுதி சடங்கு செய்துள்ளனர். குறித்த காட்சி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய 1997ஆம் ஆண்டு மாணவர்களான நடராஜா செல்வகுமார், கி.குறூஸ், ஞா.ஜினேஸ் ஆகியோரின் நிதி உதவியில் வசதியற்ற வறிய 50 மாணவர்களுக்கு பல்வேறு உதவிகள் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் இன்று (22.08.2019) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட செயலகத்தினால் தெரிவு செய்யப்பட்ட 10 வசதியற்ற மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள், 20 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், 20 மாணவர்களுக்கு மூக்குக்கண்ணாடிகள் என்பன மாவட்ட செலயக கேட்போர் கூடத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் அரசாங்க அதிபர் எம். ஹனீபா மாவட்ட செயலக பிரதம கணக்காளர் ஏ.பாலகுமார், பிரதம உள்ளக கணக்காய்வாளர் திருமதி எம்.சிவகுமாரி, மாவட்ட சிறுவர் நன்னடத்தை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஜெ.ஜெயக்கெனடி,
மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. உ.லதா, பிரதேச மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. சி.சுபாசினி மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பேருந்து நிறுத்துமிடத்தில் ஒரு தொகை தங்கத்துடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இருந்து தங்கத்தை கொண்டு செல்வதற்கு முயற்சித்த இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.
கொழும்பை சேர்ந்த 23 வயதான இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தியாவிலிருந்து வந்த நபர் ஒருவர் இந்த பொதியை கொழும்பிற்கு கொண்டு வந்து ஒப்படைக்குமாறு கேட்டுள்ளார்.
அதற்கமைய இந்த தங்கத்தை பைக்குள் மறைத்து வைத்து குறித்த இளைஞனிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், கட்டுநாயக்க விமான நிலைய பேருந்து தரிப்பிடத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இளைஞனிடம் சிக்கிய தங்கத்தின் பெறுமதி 21 இலட்சம் ரூபா என சுங்கப் பிரிவு பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
விமான நிலையங்களில் மற்றவர்களால் கொடுக்கப்படும் எந்தவொரு பொதியையும் பெற்றுக்கொள்ள வேண்டாம். அது உங்களுக்கே ஆபத்தாக அமையலாம் என விமான நிலைய பொலிஸார் பயணிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருமண நிகழ்வில் அன்பளிப்பாக வழங்கப்பட்ட பணத்தை கொள்ளையிட்ட விவகாரத்தில் கைதான நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் அமைந்துள்ள நண்பர்கள் விருந்தினர் விடுதியில் கடந்த யூன் மாதம் 05ஆம் திகதி நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் அன்பளிப்பாக வழங்கப்பட்ட பெருந்தொகை பணத்தை கொள்ளையிட்ட வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்றபோது, இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
பணம் கொள்ளையிடப்பட்டது தொடர்பில், யூன் மாதம் 09ஆம் திகதி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
விசாரணைகளை முன்னெடுத்த கிளிநொச்சிப் பொலிஸார் விடுதியில் பொருத்தப்பட்ட சீ.சீ.ரீ.வி கமரா பதிவுகளை பார்வையிட்டு சந்தேக நபர் ஒருவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
சந்தேக நபரை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து, குறித்த சந்தேக நபர் நேற்று (21) வரையும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
சந்தேக நபரை நேற்று (21) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிமன்ற நீதிவான் ரீ. சரவனராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தியதுடன் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிசார் சந்தேக நபரின் தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி மேலும் இரண்டு பேரைக் கைது செய்ய வேண்டியுள்ளதாக தெரிவித்தனர்.
இதையடுத்து சந்தேக நபரை எதிர் வரும் 04ஆம் திகதி வரையும் மேலும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கட்டளையிட்டுள்ளது.
முறைப்பாட்டாளர் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட பலரைக் கைது செய்ய வேண்டியுள்ளதாக பொலிசார் தெரிவித்தாலும் சந்தேக நபருக்கு சார்பாகவே செயற்படுவதாகவும் உரிய முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என்றும் குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி மன்றில் ஆஜராகவில்லை எனவும் கடந்த தவணையில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிராக கிளிநொச்சி உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற வூசூ குத்துச்ச ண்டை போட்டியில் வட மாகாணத்திற்கு பதினொரு பதக்கங்கள் பெற்று வவுனியா வீர, வீராங்கனைகள் பெருமை சேர்த்துள்ளனர்.
கொழும்பு மகரகமவில் அமைந்துள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் விளையாட்டு உள்ளக அரங்கில் 2019 ஓகஸ்ட் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் நடைபெற்ற தேசிய ரீதியிலான வூசூ குத்துச்ச ண்டை போட்டியில் வடக்கு மாகாணத்தை பிரதிபலித்து கலந்துகொண்ட வவுனியாவைச் சேர்ந்த வீர, வீராங்கனைகள் 11 பதக்கங்களை பெற்று வடமாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
தேசிய இளைஞர் விளையாட்டு கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் என்.எதிரிசிங்க தலைமையில் நடைபெற்ற வூசூ குத்துச்சண் டை போட்டியில் நாடு பூராவும் இருந்து 500 க்கு மேற்பட்ட் வீர,வீராங்களைகள் கலந்து கொண்டிருந்தனர்.
வவுனியா ஏழாம் அறிவு தற்காப்புகலை சங்கத்தின் தலைவரும் வடக்கு மாகாண வூசூ குத்துச்ச ண்டை பயிற்றுவிப்பாளருமான எஸ்.நந்தகுமார் தலைமையில்; வவுனியாவை சேர்ந்த வீர,வீராங்கனைகள் தேசிய ரீதியிலான வூசூ குத்துச்சண் டையில் கலந்து கொண்டு ஏழு தங்கப்பதக்கத்தையும் ஒரு வெள்ளிப்பதக்கத்தையும் மூன்று வெண்கலப்பதக்கத்தையும் சுவீகரித்துள்னர்.
பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரி, வவுனியா தமிழ் மத்திய மகா வித்திலாயம், வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை, வவுனியா காமினி மகாவித்தியாலயம், கூமாங்குளம் சித்திவினாயகர் வித்தியாலயம், மடுக்கந்த ஸ்ரீதம்மரத்ன வித்தியாலயம், நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தை சேர்ந்த வீர, வீராங்கனைகள் கலந்து கொண்டிருந்தனர்.
தேசிய ரீதியில் நடை பெற்ற ஒன்பதாவது வூசூ போட்டியில் ‘தாவுலு’ என்ற சீன தற்காப்புக்கலை போட்டியிலும் வீர, வீராங்கனைகள் கலந்துகொண்டிருந்தனர்.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாடுதழுவிய 24 மணிநேர வேலை நிறுத்த போராட்டத்தினை இன்று (வியாழக்கிழமை) காலை 8மணி முதல் ஆரம்பித்துள்ளது. அந்தவகையில் வவுனியாவிலும் மருத்துவ அதிகாரிகள் இவ் வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இருப்பினும் உயிர்காப்பு நடவடிக்கை மட்டும் இயங்குவதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர்களின் வேலை நிறுத்த போராட்டத்தினால் நோயாளிகள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருவதனையும் தூர இடத்திலிருந்து பெரும் சிரமத்திற்கு மத்தியில் வந்த நோயாளர்கள் அசௌகரியங்களுக்குள்ளாகி வருவதனையும் அவதானிக்க முடிகிறது.
இந்த வேலைநிறுத்தத்திற்கு பின்னரும் தகுந்த தீர்வு எட்டப்படவில்லை எனின் அதற்கு அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் எனவும் அறிவித்திருந்தது.
சுகாதாரத் துறையில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாறு கோரி தொடர்ந்தும் 2 வாரங்கள் வரையில் இந்த சங்கம் அரசாங்கத்திற்கு கால அவகாசம் அளித்திருந்தது. இருப்பினும் அவர்களுடைய கோரிக்கைக்கு அரசாங்கம் கவனம் செலுத்தாத பட்சத்திலேயே இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இருப்பினும் உரிய தரப்பினருடனான கலந்துரையாடல்களின் போது மக்களுக்கு நன்மைபயக்கும் வகையிலான தீர்மானங்கள் எட்டப்படும் பட்சத்தில் வேலை நிறுத்தத்தை தவிர்க்கமுடியும் எனவும் அறிவித்திருந்தனர்.
இன்றைய வேலை நிறுத்தத்தின் பின்னரும் தமது கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக முன்னெடுக்கப்படக் கூடிய நடவடிக்கைகள் குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்றும் அச் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
அனைத்து அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளமும் அதிகரிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார். 2020 ஜனவரி முதலாம் திகதி அரச ஊழியர்களின் சம்பளம் 2500 ரூபாய் முதல் 10277 ரூபா வரை அதிகரிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
5 கட்டங்களாக சம்பள உயர்வு வழங்க எமது அராசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இறுதிக் கட்டத்தின் கீழ் 2020 ஜனவரியில் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 2,500 ரூபாவில் இருந்து 10,277 ரூபா வரை அதிகரிக்கப்படும்.
சம்பள மு ரண்பாட்டை தீர்க்க ஜனாதிபதியினால் விசேட சம்பள மீளாய்வு ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. அதன் பரிந்துரை அடிப்படையிலான அறிக்கை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் முடிவு வரும் வரை அரச ஊழியர்களுக்கு 2,000 ரூபா இடைக்கால கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களின் கொடுப்பனவையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு தனியார் துறையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தனியார்துறை சம்பளத்தை அதிகரிக்க எமக்கு உத்தரவிட முடியும். ஆனால் அதனூடாக அவற்றின் வர்த்தக செயற்பாடுகள் வீழ்ச்சி அடைந்து பலர் தொழில் இழக்கலாம். அவற்றுக்கு தடையின்றி செயற்பட இடமளிக்க வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது தொடர்பில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே முன்வைத்த ஒத்திவைப்பு வேளை பிரேரணைக்கு பதிலளிக்கும் போது இராஜாங்க அமைச்சர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.
தமிழகத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட மனைவியை கொ டூரமாக கொ லை செய்த கணவனை பொலிசார் பல இடங்களில் தேடி வந்த நிலையில் பூட்டிய வீட்டுக்குள் புகுந்த அவர் த ற்கொ லை செய்து கொண்டது அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில் உள்ள பனப்பாளையம் – பெத்தாம்பாளையம் சாலையில் ஒரு காட்டுப்பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இரு வாரங்களுக்கு முன்னர் மு கம் சி தைக்கப்பட்டு, ஆ டைகள் வி லகிய நிலையில் ச டலமாக கிடந்தார்.
சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பெயர் சுகன்யா (25) என்பது தெரியவந்தது. மேலும் 9 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையை சேர்ந்த இமானுவேல் என்பவரை பெற்றோர் எ திர்ப்பை மீறி அவர் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.
இமானுவேலுக்கு க ஞ்சா பழக்கம் இருந்தது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி த கராறு ஏற்பட்டது. சுன்யாவின் நிலையை அறிந்த பெற்றோர் சுகன்யா குடும்பத்தை அருகிலேயே கு டி வைத்தனர்.
கடந்த 3 மாதத்துக்கு முன்பு சுகன்யாவை ம யக்கம் அடைய செய்து விட்டு இமானுவேல் அவர் அணிந்திருந்த நகை மற்றும் மொபட்டை திருடிச்சென்றார். சில நாட்கள் தொடர்பு இல்லாமல் இருந்த இமானுவேல் மீண்டும் சுகன்யாவை தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் பல்லடம் மகாலட்சுமி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தனது பெற்றோருடன் இமானுவேல் வசித்து வந்தார்.
சேர்ந்து வாழ்வது குறித்து சுகன்யாவிடம் பேச கடந்த 31ஆம் திகதி இமானுவேல் அழைத்த நிலையில் பெற்றோருக்கு தெரியாமல் மொபட்டில் புறப்பட்டார். இமானுவேலுவை சுகன்யா சந்தித்த பின்னர் இருவரும் காட்டுப்பகுதிக்கு சென்றனர்.
அங்கு ஏற்பட்ட வா க்குவாதத்தில் இமானுவேல் மனைவி சுகன்யாவை கொ லை செய்து முகத்தை க ல்லால் சி தைத்தது தெரியவந்தது. இது குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து இமானுவேலுவை தேடி வந்தனர்.
இமானுவேலுவின் பெற்றோர் சொந்த ஊரான மதுரைக்கு சென்று விட்டனர். இதனால் வீட்டு உரிமையாளர் இமானுவேல் தங்கிருந்த வீட்டுக்கு பூட்டு போட்டார். இந்நிலையில் நேற்று அந்த வீட்டில் இருந்து து ர்நாற்றம் வீசியது.
இது குறித்து தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இமானுவேல் தூ க்குபோட்டு த ற்கொ லை செய்து கொண்டது தெரியவந்தது. அழு கிய நிலையில் இருந்த உ டலை மீட்டு பொலிசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெளியில் பூட்டிய வீட்டுக்குள் குளியல் அறை வழியாக இமானுவேல் நுழைந்தது தெரியவந்த நிலையில் பொலிசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
சீனாவில் மார்பக அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண், கண், காது, மூக்கு மற்றும் வாயிலிருந்து அதிக இரத்தம் வெளியேறி திடீரென இ றந்துள்ளார். சீனாவை சேர்ந்த Yang Xue என்கிற 28 வயது பெண் கடந்த 18ம் திகதியன்று வெளியில் சென்றுவிட்டு வருவதாக கணவரிடம் கூறிவிட்டு, காலை 10 மணிக்கு கிளம்பியுள்ளார்.
பின்னர் அவர் வீடு திரும்பியதும் மாலை 5.35 மணியளவில் திடீரென கண், காது, மூக்கு மற்றும் வாயிலிருந்து இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அவருடைய கணவர் பதறிப்போய் ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு போன் செய்தார்.
விரைந்து வந்த ஊழியர்கள் Yang Xue-ஐ பரிசோதனை செய்துவிட்டு அவர் ஏற்கனவே உ யிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதற்கிடையில் அவருடைய கழுத்து பகுதியில் ஊசி குத்தப்பட்டதற்கான ஏராளாமான அடையாளங்கள் இருப்பதாய் பார்த்து Yang Xue-வின் கணவர் அதிர்ச்சியடைந்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதன்பேரில் பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது, Yang Xue வீட்டிற்கு தெரியாமல் ஹெனான் மாகாணத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்திருப்பது தெரியவந்தது.
பின்னர் மருத்துவமனைக்கு சென்ற பொலிஸார் அங்கிருந்த இரண்டு மருத்துவர்கள் மற்றும் ஒரு செவிலியரிடம் விசாரணை மேற்கொண்ட போது, மூன்று பேருமே பிளாஸ்டிக் அறுவகை சிகிச்சை செய்வதற்கான தகுதியற்றவர்கள் என்பது தெரியவந்தது.
இந்த நிலையில் மருத்துவமனைக்கு தற்காலிகமாக சீல் வைத்து பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மலேசியாவில் தொழில் செய்து வரும் நபர் ஒருவர் ஊருக்கு திரும்பிய நிலையில் சாலை விபத்தில் மகள்கள் இருவருடன் பலியாக சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் உஸ்மான் அலி. தொழிலதிபரான இவருக்கு ராமநாதபுரத்தில் ஹொட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு ஸ்தாபனங்கள் உள்ளன. மட்டுமின்றி மலேசியாவிலும் உஸ்மானுக்குச் சொந்தமாக ஹொட்டல்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், உஸ்மான் அலி நேற்று விமானம் மூலம் மலேசியாவிலிருந்து மதுரை சென்றுள்ளார். உஸ்மானுடன் அவரின் மகள்கள் ஹைநூல் ரசியா, தஸ்லிமா பானு மற்றும் மருமகன் முகம்மது கஸாலி ஆகியோரும் சென்றுள்ளனர். மதுரை விமான நிலையத்திலிருந்து சொந்த ஊரான சாத்தான்குளத்துக்கு காரில் வந்துள்ளனர்.
அப்போது பரமக்குடி அருகே உள்ள சோமநாதபுரம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் இவர்களது கார் வந்துகொண்டிருந்தபோது சாலையின் மறுபுறத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த சங்கர் என்பவர், காரின் குறுக்கே வந்துள்ளார்.
இவர் மீது மோதுவதைத் தவிர்க்க நினைத்த கார் சாரதி வண்டியை திருப்ப முயன்றுள்ளார். ஆனால், கட்டுப்பாட்டை இழந்த கார், சங்கரின் மீது மோதியபடி சாலையில் இருந்த தடுப்புச்சுவரில் பலமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்தக் கோர விபத்தில் காரில் பயணித்த உஸ்மான் அலி, அவரின் மகள்கள் ஹைநூல் ரசியா, தஸ்லிமா பானு ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மோட்டார் சைக்கிளில் சாலையைக் கடக்க முயன்ற சங்கரும் மரணமடைந்துள்ளார்.
உஸ்மானின் மருமகன் முகம்மது கஸாலி படுகாயத்துடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கோர விபத்து குறித்து தகவல் அறிந்த பரமக்குடி பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்கு பதிவுசெய்து தப்பி ஓடிய கார் சாரதியை தேடிவருகின்றனர்.
சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் த ற்கொ லை வழக்கில் அவருடைய உடலில் 15 இடங்களில் கா யம் இருந்ததாக பொலிஸார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
திருவனந்தபுரத்தின் காங்கிரஸ் எம்பி சசி தரூரின் மனைவியும், தொழிலதிபருமான சுனந்தா புஷ்கர் (51) கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் திகதி அன்று டெல்லியில் உள்ள லீலா சொகுசு ஹோட்டலில் நள்ளிரவில் ம ர்மமான முறையில் இ றந்து கிடந்தார்.
சுனந்தாவிற்கும் அவருடைய கணவருக்கும் இடையே ட்விட்டரில் கடும் மோ தல் ஏற்பட்ட சிலமணி நேரங்களில் இந்த சம்பவம் நிகழ்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த டெல்லி பொலிஸார்,
சசி தரூர் மனைவியை சி த்ரவதை செய்து த ற்கொ லைக்கு தூண்டியதாக, இந்திய தண்டனையை சட்ட பிரிவு 498-ஏ (கணவர் அல்லது அவரது உறவினர் ஒரு பெண்ணை கொ டுமைக்கு உட்படுத்துதல்) மற்றும் (ஐபிசி) 306 (த ற்கொ லைக்கு தூ ண்டுதல்) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் இந்த வழக்கில் சசி தரூர் முன்ஜாமீன் பெற்றிருந்ததால் கைது செய்யப்படவில்லை.
இந்த நிலையில் வழக்கு நேற்று டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் பி ரேத பரிசோதனையின்படி, புஷ்கரின் ம ரணத்திற்கு காரணம் வி ஷம் என்றும், அவரது உடலின் பல்வேறு பாகங்களில் முன்கை, கைகள், கால் போன்றவற்றில் 15 கா யங்கள் காணப்பட்டதாகவும் விசாரணை பொலிஸார் சிறப்பு நீதிபதி அஜய் குமார் குஹாரிடம் தெரிவித்தனர்.
மேலும், இருவருக்கும் இடையிலான ச ச்சரவு காரணமாக புஷ்கர் வருத்தமடைந்து மன வேதனையால் பா திக்கப்பட்டிருந்ததாக சிறப்பு அரசு வக்கீல் அதுல் ஸ்ரீவாஸ்தவா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதனை கேட்டறிந்த நீதிபதி அடுத்தகட்ட வழக்கு விசாரணையை ஆகஸ்டு 31ம் திகதிக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவத்தில் குற்றம் உறுதி செய்யப்பட்டால் சசி தரூருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் சுழற்சி முறையில் 914 நாட்களாக தமது உறவுகளைத் தேடி போராடி வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா, ஏ9 வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்னால் உள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளில் போராட்ட தளத்தின் முன்னால் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்ட களத்தில் இருந்த தந்தை ஒருவர் ஓமந்தை சோதனைச் சாவடியில் ஒப்படைத்த தனது மகனான செல்வராசா அச்சுதன் (வயது 21) என்ற மகனை தேடி வந்த நிலையில் மகன் பற்றிய எந்த தகவலுமின்றி செவ்வாய்கிழமை தனது 56 ஆவது வயதில் காலமானார். இதனை வெளிப்படுத்தும் முகமாகவே குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மரணித்தவரின் பதாதை மற்றும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியக் கொடிகளையும் ஏந்தியிருந்தனர். கவனயீர்ப்பு போராட்ட முடிவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்,
தமது பிள்ளைகளை தேடி போராட்டம் நடத்தி வரும் தாய், தந்தையர்கள் தினமும் மரணித்து வருகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் அரசாங்கத்துடன் இணைந்து எமது போராட்டத்தை மழுங்கடித்து வருவதுடன்,
சர்வதேச விசாரணையை உள்ளூர் விசாரணையாக மாற்றியமைத்துள்ளது. இருப்பினும் எமக்கான நீதி கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தனர்.
கந்தளாயில் ஓய்வு பெற்ற இராணுவ கொப்ரலின் முக்கிய ஆவணங்கள் மற்றும் பத்தாயிரம் ரூபாவுடன் காணாமல் போன பை சில மணி நேரங்களில் அவரிடமே மாணவி ஒருவர் சேர்த்துள்ளார். கொப்ரல் ஜீ.ஜீ.தர்மதாஸ காலையிலேயே தனது மோட்டார் சைக்கிளுக்கான மாதாந்த கட்டணத்தை செலுத்துவதற்காக சென்ற போதே அவர் இந்த பையை தொலைத்துள்ளார்.
வீட்டை விட்டு சென்று ஒரு மணித்தியாலத்தில் பணம் அவசியம் ஏற்பட்டு தேடிய போது பை காணாமல் போயுள்ளதனை அவர் அறிந்து கொண்டார். பின்னர் தான் பயணித்த வீதியில் பையை தேடிய போதிலும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் அவர் வீடு திரும்பியுள்ளார். வீடு திரும்பியவுடன் 9 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் பணப்பையை அவரிடம் ஒப்படைத்துள்ளார். அந்த பையில் பணம் மற்றும் ஆவணங்களில் எந்தவொரு மாற்றமும் காணப்படவில்லை என கொப்ரல் தெரிவித்துள்ளார்.
வறுமையான அந்த மாணவியின் வீட்டிற்கு சென்ற கொப்ரல், அவருக்கு தேவையான உதவிகளை செய்வதாக வாக்குறுதியளித்துள்ளார். வறுமையிலும் நேர்மையாக செயற்பட்ட மாணவியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
குருணாகலில் திருமணமாகி நான்கு வருடங்களின் பின்னர் தனது மனைவி தொடர்பில் இளம் கணவன் ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த பெண் ஏற்கனவே திருமணமானவர் என்று அறிந்து அதிர்ச்சிக்கு உள்ளான இளம் கணவன் அந்த பெண்ணை விவாகரத்து செய்ய வேண்டும் என கோரி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
29 வயதான இந்த இளைஞன் வெளிநாட்டில் தொழில் புரிந்து வந்துள்ளார். அப்போது அழகிய இளம் பெண் போன்ற தோன்றம் கொண்ட பெண்ணுடன் முகநூலில் பழகி அந்த பெண்ணை காதலித்துள்ளார்.
இலங்கை திரும்பியதும் இளைஞன் அந்த பெண்ணை திருமணம் செய்துக்கொண்டுள்ளார். நான்கு ஆண்டுகள் இருவரும் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழித்துள்ளனர். இந்த நிலையில், பெண் ஏற்கனவே திருமணமானவர் என்ற தகவல் கணவனுக்கு தெரியவந்தததையடுத்து குடும்ப வாழ்க்கை சிதறியுள்ளது.
29 வயதான இளைஞன் தனது மனைவி தொடர்பாக மேலும் தகவல்கள் தேடியுள்ளார். மனைவிக்கு 42 வயது எனவும் அவருக்கு 18 வயதான மகளும் 12 வயதான மகனும் இருப்பதை கண்டுபிடித்துள்ளார்.
இதனையடுத்து தன்னை ஏமாற்றிய பெண் மனைவி மீது வெறுப்பும், அதிர்ச்சியும் அடைந்த இளைஞன் சம்பவம் குறித்து மாவத்தகமை பொலிஸ் நிலையத்தின் பெண்கள் பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் பெண்ணிடம் இருந்து விவாகரத்து பெற்று தருமாறும் கோரியுள்ளார்.
மாவத்தகமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் ஆரியதாசவின் ஆலோசனைக்கு அமைய பொலிஸ் நிலைய பெண்கள் பணியகத்தின் பொறுப்பதிகாரி நிமாலி இந்திகா தெல்கந்துர சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.
நாட்டின் பல பகுதிகளில் தற்போது நிலவி வரும் காலநிலையில் மாற்றம் ஏற்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. காலநிலை தொடர்பில் இன்றைய தினம் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும்,
நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் தற்போது காணப்படும் காற்றுடனான நிலைமை அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.
அத்துடன் நாட்டின் தென்மேற்கு பிரதேசத்தில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பதுளை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, களுத்துறை காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதுடன் வடமேல் மாகாணத்திலும் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
காங்கேசந்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது சடுதியாக மணித்தியாலத்துக்கு 60-65 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும். அவ்வேளைகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும். கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் பேஸ்புக் பயன்படுத்துபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பாதுகாப்பற்ற பேஸ்புக் கணக்குகளை ஊடுருவ சில குழுக்கள் முயற்சிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை இலங்கை தகவல் தொழிநுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் யசிரு குருவிட்டகே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், பாதுகாப்பற்ற நிலையில் காணப்படும் இலங்கையர்களின் பேஸ்புக் கணக்குகள் Phishing Attack எனும் முறையில் திருடப்படுகின்றன.
இவ்வாறு பேஸ்புக் கணக்குகள் திருடப்படுவது கடந்த சில வாரங்களுக்குள் அதிகரித்துள்ளது. எனவே பேஸ்புக் பயனாளர்கள் தமது பேஸ்புக் கணக்குகளை பாதுகாப்பான முறையில் வைத்துக் கொள்ளுமாறு எச்சரித்துள்ளார்.