பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்ள வ ற்புறுத்திய குடும்பத்தார் : மாணவி எடுத்த வி பரீத முடிவு!!

மாணவி எடுத்த வி பரீத முடிவு

தமிழகத்தில் பள்ளி மாணவிக்கு திருமணம் செய்ய குடும்பத்தார் ஏற்பாடு செய்ததால் ம னமுடைந்த அவர் வி ஷம் கு டித்து த ற்கொ லை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி அருகில் உள்ள சிறுமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் – பெரியம்மாள் தம்பதியரின் மகள் சரண்யா.

இவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளியிலிருந்து வீடு திரும்பிய சரண்யா வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூ ச்சி மருந்தை கு டித்ததாகவும், உடனடியாக அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் வழியிலேயே அவர் உ யிரிழந்து விட்டதாக கூறிய மருத்துவர்கள் சரண்யாவின் உ டலை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே சரண்யாவின் தாய் பெரியம்மாள் காவல் நிலையத்தில் தனது மகள் வயிற்றுவலியால் விஷம் கு டித்து த ற்கொ லை செய்து கொண்டதாக புகார் கூறியுள்ளார். ஆனால் பொலிஸ் விசாரணையில் வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சரண்யாவின் தந்தை இ றந்துவிட்ட நிலையில் சரண்யாவின் அண்ணன் வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளார். அவர் செல்வதற்குள் சரண்யாவிற்கு திருமணம் முடிக்க ஏற்பாடுகள் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. இதில் விருப்பமில்லாத சரண்யா த ற்கொ லை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சில நாட்களில் திருமணம் : எ மனாக மாறிய கைத்தொலைபேசி : இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!

இளம்பெண்ணுக்கு நேர்ந்த வி பரீதம்

தமிழகத்தில் இன்னும் 8 நாட்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் பெண்ணொருவர் ரயில் மோதி உ யிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரத்தின் சின்ன நெற்குணம் பகுதியை சேர்ந்தவர் ஜான்சிராணி. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கு வருகிற செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி திருமணம் நிச்சயமிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் இன்று காலையில் பணிக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து கிளம்பிய ஜான்சி ராணி, வழியிலுள்ள சென்னை – திருச்சி ரயில் பாதையை செல்போனில் பேசிக்கொண்டே கடக்க முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது அந்த வழியாக வந்த அதிவிரைவு ரயில் ஜான்சிராணி மீது மோ தியதில், தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே து டிதுடித்து உ யிரிழந்தார்.

திருமணமாவதற்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் செல்போன் ஜான்சிராணிக்கு எ மனாக வந்து அவர் உ யிரை ப றித்ததை அறிந்த உறவினர் வேதனையில் க தறி அ ழுதனர். இதனிடையில் விபத்து குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வவுனியாவிலிருந்து நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு நடைபவனி ஆரம்பம்!!

நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு நடைபவனி

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலயத்தின் தேர்த் திருவிழாவை முன்னிட்டு வவுனியாவிலிருந்து வேல் தாங்கிய பாதயாத்திரை இன்று(23.08.2016) காலை வவுனியா வேப்பங்குளம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் தேவஸ்தானத்தில் விஷேட பூஜை வழிபாட்டுடன் ஆரம்பமானது.

ஆலய நிர்வாகியும் அறநெறிச் செல்வியுமான கு.ஜெயராணி (சாமி அம்மா) தலைமையில் ஆரம்பமான பாதயாத்திரையில் பெருந்திரளான நல்லூர்க் கந்தன் அடியார்கள் கலந்து கொண்டனர்.

வவுனியா வேப்பங்குளம் ஸ்ரீபத்திரகாளி அம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்ட வேல்தாங்கிய பாதயாத்திரைக் குழுவினர் மன்னார் வீதியூடாக வவுனியா நகரை அடைந்து பின்னர் A9 வீதியூடாக நல்லூர் கந்தன் ஆலயத்தினை நோக்கிப் புறப்பட்டுள்ளனர்.

9வது வருடமாக இடம்பெறும் இவ் வேல்தாங்கிய பாத யாத்திரை வரும் 29.08.2019 அன்று நல்லைக்கந்தன் திருத்தலத்தினை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விடுதி அறையில் தூ க்கில் தொங்கிய கல்லூரி மாணவி : அதிர்ச்சியடைந்த தோழிகள்!!

அ திர்ச்சியடைந்த தோழிகள்

ஆந்திர மாநிலத்தில் விடுதி அறையில் கல்லூரி மாணவி தற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் அனந்தபூர் பகுதியை சேர்ந்த லிங்கராஜு என்பவரின் மகள் காவ்யா (20). இவர் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் படித்து வருகிறார்.

இந்த நிலையில் புதன்கிழமை காலை வயிற்றுவலி இருப்பதாக கூறி கல்லூரியிலிருந்து காவ்யா விடுதிக்கு சென்றுள்ளார். அந்த சமயத்தில் அறையில் யாரும் இல்லாததால் து ப்பட்டாவால் தூ க்குபோட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ளார்.

பின்னர் கல்லுரி முடிந்து அறைக்கு திரும்பிய சகமாணவிகள் காவ்யா தூ க்கில் தொ ங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொலிஸார் காவ்யாவின் உ டலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சிறுவயதில் இருந்தே தெலுங்கு மொழியில் படித்து வளர்ந்த காவ்யா கல்லூரியில் ஆங்கிலம் பயில முடியாமல் பின் தங்கியதாக தெரிகிறது. இதனால் மனஉ ளைச்சலில் இருந்த அவர் தற்கொ லை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

தனி ஆளாக திருடனுடன் போராடிய 11 வயதுச் சிறுவனுக்கு நேர்ந்த கதி!!

சிறுவனுக்கு நேர்ந்த கதி

இந்தியாவில் தாயின் நகையை திருடிய திருடினை துணிச்சலுடன் பிடிக்க உதவிய 11 வயது சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. மும்பையில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வருபவர் பிரபாகர். இவர் மனைவி திவ்யா. மகன் தனிஷ் மகதிக் ( 11). நேற்று முன்தினம் பிரபாகர் அலுவலகத்துக்குச் சென்றுவிட்ட நிலையில் திவ்யா வெளியே சென்றிருந்தார்.

தனிஷ் மதிய உணவுக்காக, வீட்டுக்கு வந்திருந்தான். அப்போது அங்கு வந்த ஒருவர், தான் மின் ஊழியர் என்றும் வீட்டில் ஒயரை சோதனை செய்ய வேண்டும் என்றும் சொன்னார். இதையடுத்து தனிஷ், தனது அம்மா வீட்டில் இல்லை, பிறகு வாருங்கள் என கூற அதைக் கேட்காத அவர், அவனை படுக்கறையில் தள்ளி கொன்றுவிடுவதாக மிரட்டினார். பின்னர் பீரோவில் இருந்த ரூ.55 ஆயிரம் மதிப்புள்ள தங்க நெக்லஸை திருடிவிட்டு தப்பியோடினார்.

திருடனை பிடிக்க முயன்ற தனிஷால் அது முடியாமல் போக திருடன், அவனைப் பிடிங்க என்று கத்தினான். அதற்குள் திவ்யா குடியிருப்பின் மாடியில் ஏறிக்கொண்டிருந்தார். மகனின் சத்தம் கேட்டு, அந்த திருடனை பிடித்து, இழுத்தாள். ஆனால் திவ்யாவை படியில் தள்ளிவிட்டு ஓடினான் திருடன். இதில் திவ்யாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

சிறுவன் தொடர்ந்து கத்தியதால், அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து அவனை அமுக்கினர். கையை கட்டி, சரமாரியாக தாக்கினர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் அவனை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவன் பெயர் அப்துல் கான் (52) என்பதும் அவன் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

திருடனை பிடிக்கத் துணிச்சலுடன் செயல்பட்ட தனிஷ் கூறும்போது,என்னை திருடன் படுக்கையில் தள்ளினான், ஆனால் என்னை அவன் அடிக்கவில்லை. அந்த நெக்லஸ் அம்மாவுக்கு மிகவும் பிடித்தமானது. அதை திருடன் திருடிச் சென்றுவிடாமல் தடுக்க நினைத்து போராடினேன் என கூறினார். தனிஷின் இந்த துணிச்சலான செயலுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.

படப்பிடிப்பில் திடீரென மயங்கி விழுந்த நெஞ்சம் மறப்பதில்லை சரண்யா : மருத்துவமனையில் அனுமதி!!

நெஞ்சம் மறப்பதில்லை சரண்யா

சின்னத்திரை நடிகை சரண்யா விஜய் டிவியின் நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் பிரபலமமானவர். இவர் தனது சிறப்பான நடிப்பின் மூலம் பல்வேறு தரப்பு சின்னத்திரை ரசிகர்களையும் கவர்ந்துள்ளார் . இவர் தற்போது சன் டிவியின் ரன் சீரியலில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் படப்பிடிப்புக்கு சென்ற நடிகை சரண்யா படப்பிடிப்பு தளத்தில் திடீரென ம யங்கி விழுந்தார். இதனை அடுத்து நடிகை சரண்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் . இதனால் படப்பிடிப்பு தளத்தில் சற்று நேரம் ப ரபரப்பு நிலவியது.

மேலும் நடிகை சரண்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . இவரின் இந்த புகைப்படம் ஆனது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சென்னையில் திடீரெனெ பெய்த மழையால் ஏற்பட்ட கால நிலை மாற்றத்தினால் வைரல் பீவர் வந்துள்ளதாகவும் இதனால் சோர்வு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சரண்யா அந்த இன்ஸ்டாகிரம் பக்கத்தில் கூறியுள்ளார்.

கிளிமாஞ்சாரோ மலையில் ஏறி சாதனை படைத்துள்ள இலங்கையர்கள்!!

சாதனை படைத்துள்ள இலங்கையர்கள்

ஆபிரிக்கா கண்டத்தின் தான்சானியா நாட்டில் அமைந்துள்ள உயர்ந்த மலையான கிளிமாஞ்சாரோ மலையில் ஏறிய இலங்கையை சேர்ந்த இளைஞர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பினார்.

கிளிமாஞ்சாரோ உலகில் தனியாக இருக்கும் உயர்ந்த மலையாகும் என்பதுடன், ஆபிரிக்காவில் உள்ள உயரமான மலையுமாகும்.

கொழும்பு ஆனந்த கல்லூரியின் பழைய மாணவர்களான 33 வயதான ரங்க மடுபத்ம கங்கபட ஆராச்சி மற்றும் 36 வயதான சுதம் கமகே ஆகியோர் மலை உச்சியை அடைந்து சாதனை படைந்துள்ளனர்.

ரங்க மடுபத்ம கங்கபட ஆராச்சி அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னிலும் சுதம் கமகே இங்கிலாந்தின் மேஞ்சேஸ்டர் நகரிலும் கணக்காய்வாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

மலையேறிய பின்னர் ரங்க மடுபத்ம, துபாயில் இருந்து இன்று அதிகாலை 1.10 கட்டுநாயக்க வந்தடைந்தார். இவரை வரவேற்க பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் என பலர் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.

மயக்கமுற்ற பல்கலைக்கழக மாணவன் திடீர் மரணம்!!

மாணவன் தி டீர் ம ரணம்

மயக்கமுற்ற நிலையில் இன்று காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவரொருவர் சிகிச்சை பலனின்றி உ யிரிழந்துள்ளார். தன்சில்வத்த, பூண்டுலோயாவை சேர்ந்த 24 வயதான ஜெ.துர்கேஸ்வரன் என்ற தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவரே உ யிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவன் மயக்கமுற்ற நிலையில் சுயநினைவின்றி காணப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உ யிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து கோர விபத்து : இருவர் பலி, 27 பேர் படுகாயம்!!

கோர விபத்து

தம்புளை – ஹபரண சாலையில் உள்ள திகம்பத்தஹ பகுதியில்  இன்று காலை இடம்பெற்ற சாலை விபத்தில் இருவர் பலி, 27 பேர் காயமடைந்தனர்.

திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற  இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மஹரகமவில் இருந்து கின்னியா நோக்கிச் சென்ற வேனில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த இரண்டு ஓட்டுநர்கள் உட்பட 27 பேர் தம்புள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 2 பேர் உ யிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து காரணமாக தம்புள்ளை -ஹபரன சாலை அதிக போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது. விபத்து தொடர்பிர் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்!!

முக்கிய அறிவுறுத்தல்

நாடு முழுவதும் தற்போது காணப்படும் காற்றுடனான நிலைமையில் அவ்வப்போது அதிகரிப்பு ஏற்படுவதுடன், நாட்டின் தென்மேற்கு பிரதேசத்தில் நிலவும் மழையுடனான காலநிலை அடுத்த சில நாட்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தால் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும்,

குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் தற்போது காணப்படும் காற்று நிலைமை அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

மேல், மத்திய சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வட மாகாணத்திலும் பதுளை மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதுடன் மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

காங்கேசந்துறையிலிருந்து மன்னார், புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது சடுதியாக மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரைஅதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரைஅதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும். கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

பரிதவித்து நின்ற 32 சிறுமிகள் : தேசத்தின் ஹீரோவாக மாறிய மென்பொறியாளர்!!

ஹீரோவாக மாறிய மென்பொறியாளர்

வீட்டிற்கு செல்ல முடியாமல் பரிதவித்து நின்ற 32 காஷ்மீர் சிறுமிகளை ஒன்றாக திரட்டி அவர்களை பத்திரமாக வீடு சேர்த்த மென்பொறியாளருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு ஒரு தன்னாட்சி அடையாளத்தை வழங்கிய 370 வது சட்டப்பிரிவினை மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன் ரத்து செய்ததை அடுத்து, உள்ளூர் மக்களிடையே அனைத்துவிதமான தகவல்தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன.

இணையம், தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி இணைப்புகளை துண்டித்து, மாநிலத்திற்கு வெளியே வசிக்கும் காஷ்மீர் மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளவோ அல்லது வீடு திரும்பவோ முடியாத வகையில் இராணுவம் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதனால் வெளிமாநிலங்களில் தங்கி படிக்கும் காஷ்மீர் சிறுமிகள் பலரும் தங்களுடைய குடும்பத்தினர் குறித்து பெரும் கவலையில் தவித்து வந்தனர்.

இந்த நிலையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி டெல்லியைச் சேர்ந்த ஒரு மென்பொருள் பொறியாளர் ஹர்மிந்தர் சிங் அலுவாலியா, தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் நேரலை செய்தார். அதில், பாதுகாப்பற்றதாக உணரும் மாநிலத்திற்கு வெளியே உள்ள அனைத்து காஷ்மீரிகளும் என்னை தொடர்பு கொள்ளலாம் அல்லது அருகிலுள்ள குருத்வாராக்களில் தஞ்சமடையலாம் என்று கூறியிருந்தார்.

இதனை பார்த்த ருகாயா என்கிற பெண் ஹர்மிந்தர் சிங்கை தொடர்பு கொண்டு, அரசாங்கத்தின் நகர்வுகள் காரணமாக வறிய குடும்பங்களைச் சேர்ந்த 32 காஷ்மீர் சிறுமிகள், வீடு திரும்புவதற்காகக் காத்திருக்கிறார்கள் என உதவி கேட்டுள்ளார்.

17 முதல் 22 வயதுக்குட்பட்ட அந்த சிறுமிகள் அனைவரும் நர்சிங் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு திட்டத்திற்காக புனேவில் இருந்தனர். அவர்கள் ஸ்ரீநகரை அடைந்த பின்னர் ராணுவத்தின் உதவி உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், முதலில் ஸ்ரீநகருக்குச் செல்ல அவர்களிடம் நிதி இல்லை.

இதைக் கேட்ட ஹர்மிந்தர் மற்றொரு பேஸ்புக் நேரலை மூலம் நன்கொடையாளர்களை நாடினார். உடனே ஒரு சீக்கிய தொழிலதிபர் அவரை தொடர்பு கொண்டு அந்த சிறுமிகள் மற்றும் நான்கு தன்னார்வாளர்களுக்கான விமான டிக்கெட்டுகளை நிதியுதவி செய்வதாக கூறியுள்ளார்.

அவரது முயற்சியால் பின்னர் சிறுமிகள் அவர்களுடைய குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்தனர். இந்த செய்தி இணையத்தில் வெளியானதை அடுத்து, அவர்தான் ‘தேசத்தின் உண்மையான ஹீரோ’ என பலரும் புகழ்ந்து வருகின்றனர்.

மனைவி, மகனை காணவில்லை : கணவரின் புகாரை கேட்டு அதிர்ச்சியடைந்த பொலிஸார்!!

அதிர்ச்சியடைந்த பொலிஸார்

சென்னையில் மனைவி, மகனை காணவில்லை என பொறுமையாக 10 நாட்கள் கழித்து புகார் கொடுக்க வந்த கணவரின் செயலை பார்த்து பொலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னையை சேர்ந்த சம்பத்குமார் என்பவருக்கு பானு என்கிற மனைவியும், 4 வயதில் விசாகன் என்கிற மகனும் உள்ளனர்.

கடந்த 13ம் திகதியன்று சென்னையில் உள்ள லேடி வெலிங்டன் பள்ளியில் நிகழ்ந்த கலந்தாய்வுக்காக சம்பத்குமாரின் தங்கை திருச்சியிலிருந்து வருகை தந்துள்ளார். அவரை தன்னுடைய மகனுடன் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் பானு அழைத்து சென்றுள்ளார். ஆனால் கலந்தாய்வு முடிந்த பின்னர், சம்பத்குமாரின் தங்கையை மட்டும் ஆட்டோவில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு, பின்னாலே வீட்டிற்கு வருவதாக பானு கூறியுள்ளார்.

ஆனால் சம்பத்குமாரின் தங்கை மட்டுமே வீட்டிற்கு வந்துள்ளார். அவருடைய மகனும், மனைவியும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அவர்கள் இருவரும் தொலைந்து 10 நாட்களை கடந்திருக்கும் நிலையில், சம்பத்குமார் பொலிஸ் நிலயத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பொலிஸார், சந்தேகத்தின் பேரில் சம்பவத்குமாரிடமே விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெளியூருக்கு சென்ற கணவன் : தனியாக இருந்த மனைவி : எதேச்சையாக அங்கு வந்த பக்கத்துவீட்டு பெண் கண்ட காட்சி!!

பக்கத்துவீட்டு பெண் கண்ட காட்சி

தமிழகத்தில் இளம்பெண் தனது குழந்தையுடன் தீ க்குளித்து தற்கொ லை செய்து கொண்ட நிலையில் அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர். கோவையை சேர்ந்தவர் ஈஸ்வரசாமி (30). தேங்காய் உரிக்கும் தொழிலாளி. இவருக்கும் மாலதி (27) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு சசிக்குமார் (7) என்ற மகனும், மகாஸ்ரீ (1) என்ற பெண் குழந்தையும் இருந்தது.

மாலதி சிறுசேமிப்பு சீட்டு நடத்தி வந்துள்ளார். அவரிடம் அக்கம், பக்கத்தினர் சீட்டில் சேர்ந்து பணம் செலுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலையில் தேங்காய் உரிக்கும் வேலைக்காக ஈஸ்வரசாமி பழனிக்கு சென்று விட்டார்.

மகன் சசிக்குமார் பள்ளிக்கு சென்றுவிட்டார். மாலதி தனது மகளுடன் வீட்டில் இருந்தார்.
மாலை 3 மணிக்கு பக்கத்து வீட்டு பெண் ஒருவர், பொதுக்குழாயில் தண்ணீர் வந்ததால், அதுபற்றி சொல்வதற்காக மாலதியின் வீட்டுக்கு சென்றார். வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதனால் அவர்கள் சத்தம்போட்டு மாலதியை அழைத்துள்ளார்.

ஆனால் மாலதியிடம் இருந்து எந்த பதிலும் வராததால் சந்தேகத்துடன் வீட்டின் அறைக்குள் எட்டிப்பார்த்தார். அப்போது மாலதி தனது குழந்தையுடன், தீ க்கு ளித்து த ற்கொ லை செய்து கொண்டது தெரியவந்தது. இதனால் அ திர்ச்சியடைந்த பக்கத்து வீட்டு பெண், அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கொடுத்தார்.

இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் க ருகிய நிலையில் இருந்த மாலதி மற்றும் மகாஸ்ரீ ஆகியோரின் உ டல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையில் மாலதி எழுதி வைத்திருந்த கடிதத்தில், என்னால் யார் மனமும் புண்படக்கூடாது. சீட்டு பணம் வீட்டில் உள்ளது. அனைவருக்கும் கொடுத்து விடவும். என்னை மன்னித்து விடுங்கள் மாமா என்று எழுதப்பட்டு இருந்தது.

பொலிசார் கூறுகையில், ஈஸ்வரசாமி புறப்பட்டபோது, சாப்பாடு செய்து இருக்கிறாயா? என்று மாலதியிடம் கேட்கையில் அவர் இல்லை என்று கூறினார். இதனால் ஈஸ்வரசாமி கோபித்துக்கொண்டு சென்று விட்டார்.

இதையடுத்து தனது மாமியார் தைலாவை செல்போனில் தொடர்பு கொண்டு, மாலதி எனக்கு சாப்பாடு செய்து கொடுப்பதில்லை என்று பு கார் கூறியுள்ளார். உடனே தைலா தனது மகள் மாலதியை தொடர்பு அவரை திட்டியுள்ளார்.

கணவரும், தாயாரும் சாப்பாடு செய்து கொடுக்க வில்லை என்று கூறியதால் வி ரக்தி அடைந்த மாலதி தனது குழந்தையுடன் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவை த்து த ற்கொ லை செய்து கொண்டுள்ளார். சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகிறோம் என கூறியுள்ளனர்.

இந்தியாவை உலுக்கிய ஆணவக் கொ லை : 10 பேர் குற்றவாளிகள் : நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு!!

ஆணவக் கொ லை

இந்தியாவின் கேரள மாநிலத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதாக கூறி இளைஞர் படுகொ லை செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயத்தில் நடந்த இந்த படுகொலை யில், கொ ல்லப்பட்ட இளைஞரின் மாமனார் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. மூன்று மாதத்தில் முடிக்கப்பட்ட இந்த வழக்கு விசாரணையில் தற்போது 10 பேர் குற்றவாளிகள் என மாவட்ட நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.

கோட்டயம், தென்மல பகுதியில் சாக்கோ என்பவரின் மகள் நீனு தலித் கிறிஸ்தவரான கெவின் என்ற இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதில் ஆத்திரமடைந்த சாக்கோ தமது மகன் சானு, அவரது நண்பர்கள் சிலருடன் இந்த கொ லையை திட்டமிட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர்கள் மீது ஆ ட்கடத்தல், பேரம் பேசுதல், திட்டமிடுதல், வீடு புகுந்து தா க்குதல் உள்ளிட்ட 10 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டு, தற்போது மாவட்ட நீதிமன்றத்தில் நிரூபணமாகியுள்ளது. பாதிக்கப்பட்ட நீனுவின் தந்தை அளித்த வாக்குமூலத்தில் இது ஆணவக் கொ லை என நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

கெவினின் சாதியே இந்த திருமணத்தை சாக்கோ எதிர்க்க முக்கிய காரணம் என கூறப்படுகிறது. கெவின் கொ ல்லப்படுவதற்கு முன்பு, இந்த வழக்கில் தொடர்புடைய நியாஸ் என்பவர் கொ லை மிரட்டல் விடுத்துள்ளதாக கெவின், தமது மனைவி நீனுவிடம் தொலைபேசியில் தெரிவித்ததும் நீதிமன்றத்தில் நிரூபணமானது.

இந்த கொ லையை எவரும் நேரில் பார்த்ததில்லை என்பதால், கண்காணிப்பு கமெரா காட்சிகள், மற்றும் உடற்கூறு ஆய்வு தகவல்கள் உள்ளிட்டவை முக்கிய சாட்சியமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிகப்பட்டது.

ஆனால் கெவின் சம்பவத்தன்று ம து போ தையில் இருந்ததாகவும், சாக்கோவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்னர் கொ லை செய்து விடுவார்களோ என்ற பயத்தில் ஓடியதில் ஓடையில் தவறி விழுந்து இறந்ததாகவும் கூறப்பட்ட வாதம் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. தற்போது இந்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் சனிக்கிழமை மாவட்ட நீதிமன்றம் அறிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

20 வருடங்களாக கழிப்பறையில் வசித்து வரும் தமிழ்ப் பெண் : கண்ணீர் வரவழைக்கும் புகைப்படங்கள்!!

கண்ணீர் வரவழைக்கும் புகைப்படங்கள்

தமிழகத்தில் பெண்ணொருவர் 20 ஆண்டுகளாக பொது கழிப்பறையில் வாழ்க்கை நடத்தி வருவது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் கருப்பாயி.

இவருக்கு ஒரு மகள் உள்ள நிலையில் அனைத்து உறவுகளாலும் கைவிடப்பட்டு வசிப்பிடம் இல்லாமல் கடந்த 20 ஆண்டுகளாக மதுரை அருகே அனுப்பானடி பேருந்து நிறுத்தம் பக்கத்தில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கழிப்பறை வளாகத்தில் வசித்து வருகிறார்.

கழிப்பறைக்கு வரும் பொதுமக்கள் தரும் சில்லறை மற்றும் ரேஷனில் கிடைக்கும் அரிசியை வைத்து மூன்று நாட்களுக்கு ஒருமுறை சமைத்து சாப்பிடுவதாக கண்ணீர் மல்க கவலையுடன் அவர் தெரிவிக்கிறார்.

முதியோர் உதவித் தொகைக்காக சில இடை தரகர்களிடம் 5 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்து ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியதாகவும், இதுவரை எந்த உதவியும் கிடைக்காமல் தவித்து வருவதாகவும் கருப்பாயி கூறியுள்ளார்.

கோடை காலங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் கழிப்பறை மூடப்படும் போது எந்தவித வருமானமும் இல்லாமல் பசியோடு வாழும் நிலை ஏற்படுவதால், அரசால் வழங்கப்படும் முதியோர் உதவி தொகை கிடைத்தால் பட்டினியை போக்கிக்கொள்ள முடியும் என்கிறார் கருப்பாயி.

இது தொடர்பான செய்தி வருவாய்த்துறை அதிகாரிகளிக்கு சென்ற நிலையில் கருப்பாயியிடம் நேரில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்போம் என அவர்கள் கூறியுள்ளனர்.

10 பேர் கொண்ட கும்பலால் நள்ளிரவில் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொ லை செய்யப்பட்ட நபர்!!

வெட்டிக் கொ லை செய்யப்பட்ட நபர்

மதுரையில் 10 பேர் கொண்ட மர்மகும்பலால் திமுக பிரமுகர் வெட்டி படுகொ லை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை சேர்ந்த திமுக பிரமுகரான ராஜா (47), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அதேபோல வட்டிக்கு பணம் கொடுப்பது, சேவல் சண்டை போன்ற வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார். இதனால் ராஜா அந்த பகுதியில் சற்று பிரபலமானவர்.

இந்த நிலையில் ராஜா நேற்று இரவு 11 மணியளவில் ம துக்கடையில் இருந்து வீட்டிற்கு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் திரும்பி கொண்டிருந்துள்ளார். அப்போது அரிவாள்களுடன் அங்கு வந்த 10 பேர் கொண்ட மர்ம கும்பல் ராஜாவை சுற்றிவளைத்துள்ளது. இதனை பார்த்து அ திர்ச்சியடைந்த ராஜா அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்துள்ளார்.

ஆனால் அந்த கும்பல் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜா உ யிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தற்போது வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் சந்தேகத்தின் பேரில் 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2016-ம் ஆண்டு வாடிப்பட்டியில் நடந்த சேவல் சண்டையில் வாடிப்பட்டி ஸ்ரீதர் தரப்புக்கும், ராஜா தரப்புக்கும் இடையே வா க்குவாதம் ஏற்பட்டது. இதில் ஸ்ரீதர் படுகொ லை செய்யப்பட்ட்டார். இதற்கு ராஜா தான் காரணாம் என வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ராஜா கொ ல்லப்பட்டிருப்பதால், ஸ்ரீதர் தரப்பினர் பழிவாங்கியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.