மன்னாரில் நண்பர்கள் இருவர் பரிதாபமாக பலி!!

இருவர் பரிதாபமாக பலி

மன்னார் – முருங்கன் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

அளவக்கையில் இருந்து முருங்கன் நோக்கி சென்ற போது வேக கட்டுப்பாட்டினை இழந்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் குறித்த இரண்டு இளைஞர்களும் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர்.

இதன்போது அளவக்கை, புதுக்குடியிருப்பை சேர்ந்த இராசதுரை பிரசாந்த் (வயது 24) , கணேஸ் தயாளன்(வயது19) ஆகிய இரண்டு இளைஞர்களே விபத்தில் பலியாகியுள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் சடலம் உடல் கூறு பரிசோதனைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து நடைபெற்ற இடத்தில் சிறிய வளைவு, வீதியோரத்தில் பற்றைகள் நிறைந்திருப்பதால் எதிரே வரும் வாகனங்கள் சாரதிகளுக்கு தென்படுவதில்லையெனவும்,குறித்த இடத்தில் மேலும் ஒருவர் பலியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை குடியேறிகளை ஏற்றிச்சென்ற படகுக்கு ஏற்பட்ட நிலை : தீயில் எரிந்து நாசம்!!

இலங்கை கு டியேறிகளை ஏற்றிச்சென்ற படகு ஒன்று தீ விபத்தில் எரிந்து அ ழிந்துபோயுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியூனியன் தீவிற்கு இலங்கை குடியேறிகளை ஏற்றிச்சென்ற படகு ஒன்றே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளதாக ரியூனியன் தீவின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் திகதி இலங்கை கு டியேறிகளை அழைத்துக்கொண்டு குறித்த படகு ரியூனியன் தீவை சென்றடைந்துள்ளது.

மீன்பிடி உபகரணங்களுடன் “ரோஷன்” என்று பெயரிடப்பட்ட குறித்த படகு ரீயூனியன் தீவில் உள்ள ஒரு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த படகு நேற்று முன்தினம் தீ க்கிரையாகியுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அந்நாட்டு பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக” அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் தாயை தேடும் ஐரோப்பிய நாடொன்றில் வாழும் அக்கா, தம்பி : நெகிழ்ச்சியான பாசப் போராட்டம்!!

பிரான்ஸில் வாழும் சகோதரர்கள் இருவர் இலங்கையிலுள்ள தமது பெற்ற தாயை தேடி வருகின்றனர். இலங்கையில் பிறந்து சில மாதங்களில் பிரான்ஸ் தம்பதிக்கு தத்துக் கொடுக்கப்பட்ட இரு பிள்ளைகளே இவ்வாறு தமது தாயை தேடுகின்றனர்.

இரு தாய்மாருக்கு பிறந்த பிள்ளைகள் இருவர், பிரான்ஸ் தம்பதிக்கு தத்துகொடுக்கப்பட்ட நிலையில் இருவரும் சகோதரன், சகோதரிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

இரத்தினபுரி வைத்தியசாலையில் 1986ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி பிறந்த நிலந்திகே என்ற குழந்தை பிறந்த ஒரு மாதத்திலேயே பிரான்ஸ் தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்டார். குறித்த பெண் தற்போது பிரான்ஸில் நடன கலைஞராக பணியாற்றி வருகின்றார்.

1987ஆம் ஆண்டு மற்றுமொரு குழந்தையை அதே பிரான்ஸ் தம்பதியர், இலங்கையில் தத்து எடுத்துள்ளனர். 1987ஆம் ஆண்டு ஜுன் மாதம் 20ஆம் திகதி சிறிவர்தன என்ற ஆண் குழந்தையே இவ்வாறு தத்து கொடுக்கப்பட்டுள்ளார்.

32 வருடங்களில் தமது சொந்த தாய்மாரை தேடி அக்காவும் தம்பியும் பிரான்ஸிலிருந்து இலங்கை வந்துள்ளனர். தாய்மாரை அடையாளம் காண டி.என்.ஏ சோதனை செய்வதற்கு அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

விமானப் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி : குறைந்த கட்டணத்தில் மற்றுமொரு விமான சேவை!!

குறைந்த கட்டணத்தில் விமான சேவை

உக்ரைனை தளமாக கொண்ட SkyUp LLC நிறுவனத்திற்கு சொந்தமான SkyUp Airlines விமான சேவை குறைந்த கட்டணத்தில் விமான சேவையை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளது. உக்ரைன் நாட்டு தலைநகரான Kyivவில் இருந்து கொழும்பு மற்றும் ஆஸ்திரியா ஆகிய இடங்களுக்கு குறைந்த கட்டனத்தில் விமான சேவையினை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பம், தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் வாரத்தில் Kyivவில் இருந்து கொழும்புக்கு சேவையினை ஆரம்பிப்பதற்கு அனுமதி கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், Kyiv-Salzburgக்குமான விமானங்களையும் அதே விதிமுறைகளில் தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, உக்ரைனில் இருந்து கொழும்பு மற்றும் Salzburgக்கு நேரடி விமான சேவைகள் இல்லை.

முன்னதாக, Kyiv மற்றும் கொழும்புக்கு இடையில், உக்ரைனின் மிகப்பெரிய விமான நிறுவனமான உக்ரைன் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (யுஐஏ) ஆல் இயக்கப்பட்டது, எனினும், திறமையின்மை காரணமாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது!

பாரிய வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாயின் பெறுமதி!!

ரூபாயின் பெறுமதி

அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாயின் பெறுமதி பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வட்டி வீதத்தை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

மத்திய வங்கி வெளியிட்ட புதிய அறிக்கைக்கமைய இந்த தகவல் வெளியாகியுள்ளது.  அதற்கமைய மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று வீதத்திற்கமைய, வார இறுதியில் டொலர் ஒன்றின் விற்பனை விலை 181.24 ரூபாயாக பதிவாகியுள்ளது.

ரூபாயின் பெறுமதி பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கியினால் வட்டி வீதத்தை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

திருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் படுகாயம்!!

திருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில்..

திருகோணமலை – ஹொரவ்பொத்தான பிரதான வீதியின் கம்பகொட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த விபத்து நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது படுகாயமடைந்த இளைஞர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் திருகோணமலை – கேணியடி பகுதியை சேர்ந்த 28 வயதுடைய இளைஞரே காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

திருகோணமலையிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த காரின் சாரதி வீதியின் குறுக்கே வந்த நாயை காப்பாற்ற முற்பட்ட போது கார் வீதியை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதி விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்!!

போராட்டம்

யாழ்ப்பாணத்தில் இன்று (24.08.2019) காலை காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டமை மற்றும் பளை மருத்துவமனை மருத்துவர் சிவரூபன் கைது செய்யப்பட்டமைக்கும் எதிர்ப்புத் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

வவுனியாவில் தொடர் போராட்டம் முன்னெடுத்து வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளே இன்று மதியம் இப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

வெளியேறு வெளியேறு ஓ.எம்.பி வெளியேறு, விடுதலை செய் விடுதலை செய் மருத்துவரை விடுதலை செய், எங்கே எங்கே எமது உறவுகள் எங்கே? வேண்டும் வேண்டும் எமது உறவுகள் வேண்டும், உறவுகளை மீட்க சர்வதேசம் வேண்டும்,

போன்ற கோசங்களை எழுப்பியவாறும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய கொடிகளைத் தாங்கியவாறு கதறி அழுது போராட்ட களத்தில் தமது போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியாவில் மக்கள் அதிகம் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் கலந்துரையாடல்!!

கலந்துரையாடல்

இலங்கையில் மனித மற்றும் தொழிலாளர் உரிமை மீ றல் தொடர்பிலான குழுவின் கலந்துரையாடல் ஒன்று வவுனியா புகையிரத நிலையத்திற்கு அருகேயுள்ள விருந்தினர் விடுதியில் இன்று (24.08.2019) 9.30 மணி தொடக்கம் 11.30 மணி வரை இடம்பெற்றிருந்தது.

இக் கலந்துரையாடலின் போது வவுனியா வடக்கில் பெருன்பான்மையினத்தவரின் ஆ க்கிரமிப்பு, வடக்கில் தமிழ் மொழிப் பு றக்கணிப்பு, தமிழர்களின் பூர்வீக இடங்களை தொல்பொருள் திணைக்களம் ஆ க்கிரமிப்பது , வவுனியாவில் பொதுமக்கள் அதிகமாக எதிர்நோக்கும் பிரச்சனைகள், வரிச்சலுகை தொடர்பான அறிக்கையிடல் அதுசார்ந்த தெளிவுத்தன்மை, வவுனியா மாவட்டத்தின் தற்காலிக நிலைமைகள், மனித உரிமைகள் சார்ந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இக் கலந்துரையாடலில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசார்பற்ற நிறுவனத்தின் பிரதிநிதிகள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இக் குழுவின் இவ்வாறான கலந்துரையாடல் நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற தமிழர் மேம்பாட்டு ஒன்றயத்தின் கலந்துரையாடல்!!

கலந்துரையாடல்

தமிழர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் தமிழர் மேம்பாட்டு ஒன்றியத்தின் கலந்துரையாடல் வவுனியா நகரசபை மண்டத்தில் இன்று (24.08.2019) மதியம் இடம்பெற்றது.

வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளில் பின்னடைந்துள்ள தமிழர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் பேராசிரியர் எஸ்.சந்திரசேகரன் மற்றும் பேராசிரியர் எம்.கருணாநிதி தலைமையில் தமிழர் மேம்பாட்டு ஒன்றியம் உருவாக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக ஒன்றியத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கும், பொதுமக்களின் அபிப்பிராயத்தை பெற்று ஒன்றியத்தின் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து கல்வி அபிவிருத்தியை ஏற்படுத்துடும் நோக்கில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது பலரும் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு கருத்துக்களையும், அதில் உள்ள சவால்கள் தொடர்பிலும் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

ஒன்றியத்தின் வடமாகாண இணைப்பாளர் இரா.ராஜேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கொழும்பு பல்கலைக்கழக போராசியர்களான எஸ்.சந்திரசேகரன் மற்றும் எம்.கருணாநிதி,

வவுனியா கல்வியற் கல்லூரியின் சிரேஸ்ட விரிவுரையாளர் எஸ்.பார்த்தீபன், ஒன்றியத்தின் கொழும்பு மற்றும் மலையக பகுதி இணைப்பாளர் இந்திரஜித், அதிபர்கள், ஆசிரியர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியால் யாழ்ப்பாணத்தில் நடந்த விநோத சம்பவம் : மகளின் பரிதாப நிலை!!

விநோத சம்பவம்

தென்னிந்தியத் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியால் யாழ்ப்பாணத்தில் விநோத சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்ச்சியால் நவாலிப் பகுதியில் வீடொன்றில் நாள் முழுவதும் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியிலுள்ள வீடொன்றில் பழைய பாடல்கள் மீது ஈர்ப்பு கொண்ட தந்தை ஒருவர் வானொலியில் பாடல் கேட்டுக் கொண்டிருந்தார். அவரது மகளுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆர்வம். தந்தை பாடல் கேட்டுக்கொண்டிருந்த நேரம் பிக்பாஸ் பார்த்துக் கொண்டிருந்தார்.

தொலைக்காட்சி சத்தத்தில் தந்தைக்கு பாடல் கேட்கவில்லை. அவர் வானொலியின் சத்தத்தைக் கொஞ்சம் அதிகரித்துள்ளார். தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த மகளுக்கு பாடல் சத்தம் இடையூறாக இருந்ததால் கொலைக்காட்சி சத்தத்தைக் கொஞ்சம் அதிகரித்தார். இருவரும் மாறி மாறி சத்தத்தை அதிகரித்தமையினால் இருவருக்கும் இடையே தர்க்கம் வெடித்தது.

பொறுமை இழந்த தந்தை ஒரு கட்டத்தில் அதிரடி முடிவு எடுத்தார். வீட்டுக்கு வெளியே சென்றவர் வீட்டு மின்சார மானிக்கான பியூஸை பிடுங்கி எடுத்து சட்டைப்பையில் போட்டுக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

வீடு இருளில் மூழ்க, மகளின் பிக்பாஸ் நிகழ்ச்சியும் தடைப்பட்டது. வீட்டை விட்டு பியூஸ் கட்டையுடன் சென்ற தந்தை மறுநாள் மாலை வீட்டுக்கு வந்தார். அதுவரை வீட்டில் இருந்தவர்கள் மின்சாரம் இல்லாதே இருந்துள்ளனர்.

வவுனியாவில் பிரமாண்டமாக இடம்பெற்ற திருக்குறள் பெருவிழா!!

திருக்குறள் பெருவிழா

வவுனியாவில் திருக்குறள் பெருவிழா இன்று (24.08.2019) குடியிருப்பு பிரதேச கலாசார மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

ஜனாதிபதியின் எண்ணக்கருவில் வடக்கு மாகாண ஆளுனரின் நெறிப்படுத்தலில் வடமாகாண பண்பாட்டாலுவல்கள் திணைக்களமும் கல்வி அமைச்சும் ஏற்பாடு செய்த திருக்குறள் விழா வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் சிறப்பான முறையில் இடம்பெற்றது.

வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் உள்ள திருவள்ளுவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து நினைவுகூரப்பட்டதுடன், அங்கிருந்து அதிதிகள் குடியிருப்பு கலாசார மண்டபம் வரை மேள தாளங்களுடன் அழைத்து செல்லப்பட்டனர்.

குடியிருப்பு கலாசார மண்டப முன்றலில் பு னரமைக்கப்பட்ட சரஸ்வதி சிலை திரையாக்கம்
செய்து வைக்கப்பட்டதுடன், கலாசார மண்டபத்தில் திருவள்ளுவரின் சிலை வைக்கப்பட்டு நினைவுகூரப்பட்டது.

அத்துடன், நிகழ்வில் வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் வரவேற்புரையை நிகழ்த்தியதுடன் வவுனியா கல்வியியல் கல்லூரியின் ஓய்வுநிலை பீடாதிபதி கு.சிதம்பரநாதன் தொடக்கவுரையை நிகழ்த்தியிருந்தார்.

இதனையடுத்து தமிழ்மணி அகளங்கன் இணைத் தலைமையுரையினையும் சிறப்புரையினை யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் சர்வேஸ்வரா சிறப்புரையினையும் நிகழ்த்தியிருந்தார்.

இதேவேளை கலை நிகழ்வுகளும் பெற்றிருந்ததுடன் நிகழ்விற்கு வருகை தந்திருந்த அனைவருக்கும் திருவள்ளுவரின் புகைப்படமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கனடா சென்ற யாழ் இளைஞன் பரிதாபமாக உ யிரிழப்பு : வெளியான புதிய தகவல்கள்!!

யாழ் இளைஞன்

கனடா செல்லும் போது இடைநடுவில் உ யிரிழந்த யாழ்ப்பாண இளைஞன் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. 30 வயதான சிறிஸ்கந்தராசா தர்மேந்திரன் என்ற இளைஞன் உ யிரிழந்துள்ளமை கைரேகை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக காணாமல் போனோருக்கான புலம்பெயர்ந்தோர் திட்டம் தொடர்பான அமைப்பு தெரிவித்துள்ளது.

எல்லை ரோந்து முகவர்களால் Rio Grande பள்ளத்தாக்கில் “காணாமல் போன புலம்பெயர்ந்தோர் திட்டம்” ஊடாக தேடும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த திட்டத்தின் மூலம் கைரேகை சேர்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது தர்மேந்திரனின் கைரேகையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

“இந்த சம்பவம் தொடர்பில் கனடா எல்லை ரோந்து முகவர்களாலும், விசாரணை நடத்தியவர்களாலும் சரியான முறையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஒரு மனிதாபிமான அடைப்படையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் இந்த உ யிரிழப்பு தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தால் உரிய மற்றும் சொந்த அடையாள தகவல்களை பயன்படுத்த வேண்டும்” என எல்லை ரோந்து முகவர் நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

கோப்பாய் பகுதியை சேர்ந்த சிறிஸ்கந்தராசா தர்மேந்திரன் நான்கு மாதங்களுக்கு முன்னர் கனடாவுக்கு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.

போ தையில் படுக்கையில் உருண்ட தாய் : அருகில் படுத்திருந்த குழந்தைக்கு நேர்ந்த சோகம்!!

குழந்தைக்கு நேர்ந்த சோகம்

பிரித்தானியாவில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட நான்கு மடங்கு அதிக ம துபானம் அருந்திய ஒரு தாய், போ தையில் புரண்டு படுத்ததில், அவர் பக்கத்தில் படுத்திருந்த நான்கு மாதக் குழந்தை பரிதாபமாக உ யிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லிவர்பூலைச் சேர்ந்த Milda Stucinskaite மற்றும் அவரது கணவரான Audrius Krupaitis ஆகிய இருவரும் சம்பவம் நடந்த அன்று நன்றாக ம து அருந்தியிருக்கிறார்கள், அத்துடன் க ஞ்சாவும் புகைத்ததாக தெரிகிறது.

அதிக போ தையிலிருந்த Audrius நாற்காலியில் சாய்ந்து உறங்க, Mildaவும் அவரது நான்கு மாத குழந்தையான Mija Krupaityteம் சோபாவில் உறங்கியிருக்கிறார்கள். அப்போது அதே வீட்டில் தங்கியிருந்த அந்த வீட்டின் உரிமையாளர் அங்கு வந்திருக்கிறார்.

அப்போது Milda தனது குழந்தையின்மீது படுத்திருப்பதைப் பார்த்து பதறிப்போய், அவரை எழுப்பியிருக்கிறார். அப்போதே குழந்தை மூச்சு பேச்சின்றி கிடந்திருக்கிறது. உடனடியாக அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் உட்பட, அந்த பகுதிக்கு வந்திருந்த மருத்துவ உதவியாளர்கள் வரை அந்த குழந்தையை காப்பாற்ற முயன்றிருக்கிறார்கள்.

ஆம்புலன்ஸ் வந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றும், Mijaவைக் காப்பாற்ற முடியவில்லை. பொலிசார் குழந்தையின் பெற்றோரான Mildaவையும் Audriusஐயும் கைது செய்து விசாரித்த நிலையில், குழந்தையின் உடலில் எந்த காயங்களும் இல்லாததால், அது தற்செயலாக நடந்த விபத்துதான் கொ லை அல்ல என்பது தெரியவர, அவர்களை விடுவித்துள்ளார்கள்.

வழக்கு விசாரணையின் முடிவில், அது விபத்துதான் கொ லை அல்ல என்று நீதிமன்றத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 வயது சிறுமியை கடித்து குதறி கொ டூரமாக கொ ன்ற நாய்கள் : உரிமையாளருக்கு 2 மில்லியன் டொலர் அபராதம்!!

9 வயது சிறுமி

அமெரிக்காவில் மூன்று பிட்புல் நாய்கள் சேர்ந்து 9 வயது சிறுமியை க டித்து கு தறி கொ டூரமாக கொ ன்ற துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.

டெட்ராய்ட் பகுதியிலே இச்சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியை சேர்ந்த 9 வயதான Emma Hernandez சைக்கிள் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக சிறுமியை சூழ்ந்த மூன்று பிட்புல் நாய்கள் கொ டூரமாக கடித்து கு தறியுள்ளது.

இதை பார்த்த சம்பவயிடத்தில் இருந்தவர்கள், சிறுமியை காப்பாற்ற நாய்களை கற்களால் தா க்கியும், கைத்துப் பாக்கியால் சூட்டும் விரட்ட முயன்றுள்ளனர். ஆனால், சிறுமியை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.

இதுதொடர்பாக நாய்களின் உரிமையாளர் 33 வயதான Pierre Cleveland மீது கொ லை உட்பட பல பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. குறித்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், Pierre Cleveland-க்கு இரண்டு மில்லியன் டொலர்கள் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கொ ல்லப்பட்ட சிறுமி Emma Hernandez-வுக்கு அப்பகுதி மக்கள் பூங்கொத்துக்கள், பலூன் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வவுனியாவில் இடம்பெறவுள்ள திருக்குறள் பெருவிழா அழைப்பிதழில் எழுத்துப்பிழைகள்!!

திருக்குறள் பெருவிழா

வவுனியாவில் இடம்பெறவுள்ள திருக்குறள் பெருவிழாவுக்கான அச்சிடப்பட்டுள்ள அழைப்பிதழில் சில எழுத்துப்பிழைகள் காணப்படுகின்றன.

வடமாகாண ஆளுநரின் நெறிப்படுத்தலில் நாளை சனிக்கிழமை காலை 9 மணிக்கு வவுனியா குடியிருப்பு பிரதேச கலாச்சார மண்டபத்தில் திருக்குறள் பெருவிழா நடைபெறவுள்ளது.

இதற்கான அழைப்பிதழில் எழுத்துப்பிழைகள் காணப்படுவதான சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மணிபுரம் அருள்மிகு ஸ்ரீ மீனாட்சிஅம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ விஞ்ஞாபனம் – 2019!!

அலங்கார உற்சவ விஞ்ஞாபனம்

வவுனியா மரக்காரம்பளை வீதி மணிபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி அம்மனுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் நிகழும் மங்களகரமான விகாரி வருடம் ஆவணித்திங்கள் 10ம் நாள் (27.08.2019) செவ்வாய்க்கிழமை கொடியேற்றதுடன் அலங்கார உற்சவம் ஆரம்பமாகி தொடர்ந்து 09 தினங்கள் காலை அபிஷேகம் இடம்பெற்று மாலை வசந்தமண்டப பூசை இடம்பெறவுள்ளது.

10ம் திருவிழா (05.09.2019) வியாழக்கிழமை சப்தமி திதியும் விசாக நட்சத்திரம் சித்த யோகமும் கூடிய சுபவேளையில் காலை 10.00 மணிக்கு அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்பாளுக்கு அஷ்டோத்திர (108) சங்காபிஷேகமும் இடம்பெறவுள்ளதுடன் திருவிழா சிறப்புற நிறைவுறவுள்ளது.

எனவே அடியவர்கள் அனைவரும் ஆலயத்திற்கு வருகை தந்து இறையருள் பெற்றுய்யுமாறு ஆலய பரிபாலன சபையினரும் விழா உபயகாரர்களும் அன்புடன் அழைக்கின்றனர்.