வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த இளைஞன் உடனடியாக விமான நிலையத்திலிருந்து நாடு க டத்தல்!!

இலங்கை வந்த இளைஞன்

ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து இலங்கை வந்த இளைஞன் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நாடு க டத்தப்பட்டுள்ளார். போலி இத்தாலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கையில் சுற்றுலா பயணம் மேற்கொள்வதற்காக வந்த வெளிநாட்டு இளைஞனே நாடு க டத்தப்பட்டுள்ளார்.

18 வயதான குறித்த இளைஞன் எந்த நாட்டுப் பிரஜை என அடையாளம் காண முடியவில்லை என விமான நிலைய குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துருக்கி இஸ்தான்புல் நகரத்தில் இருந்து TK-730 என்ற விமானத்தில் குறித்த இளைஞன் இலங்கை வந்துள்ளார்.

ஆங்கில மொழியில் புலமையற்ற குறித்த இளைஞன் அதிகாரிடம் பதிலளிக்க சிரமப்பட்டுள்ளார். இத்தாலிய மொழியிலும் அதிகாரிகள் கேள்விகள் கேட்ட போதும் அதற்கும் அவரால் பதிலளிக்க முடியவில்லை. இத்தாலி நாடு தொடர்பான எந்தவொரு தகவலையும் வழங்க முடியாமல் போயுள்ளதுடன்,

இலங்கையில் இருந்து திரும்பி செல்வதற்கான விமான டிக்கட்டும் அவரிடம் இருக்கவில்லை. எந்த நாட்டு பிரஜை என தன்னை அடையாளப்படுத்தும் எந்தவொரு நபரையும் இலங்கைக்குள் அனுமதிக்க முடியாது என சட்டம் உள்ளது. இதற்கமைய குறித்த இளைஞனை நாடு  கடத்துவதற்கு கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முச்சக்கரவண்டிகளை மீட்டர் கட்டணமில்லாமல் இயக்க முடிவு!!

முச்சக்கரவண்டி

மாதாந்தம் பெட்ரோல் விலையில் அதிகரிப்பு செய்யப்படுவதன் காரணமாக இலங்கை சுயதொழில் வல்லுனர்களின் தேசிய முச்சக்கர வண்டி கூட்டமைப்பு, தமது முச்சக்கரவண்டிகளை மீட்டர் கட்டணமில்லாமல் இயக்க முடிவு செய்துள்ளதாக தெரியவருகிறது.

மாதாந்தம் பெட்ரோல் விலை உயர்வடைவதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் மீட்டர் விகிதங்களை மாற்றும் போது தாங்கள் சிரமங்களை எதிர்கொள்வதாக முச்சக்கரவண்டி சம்மேளனத்தின் தலைவர் சுனில் ஜெயவர்தனா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், அத்துடன் 150,000 இற்கும் மேற்பட்ட முச்சக்கரவண்டிகளில் பயண கட்டணங்கள் மீட்டரால் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மாதாந்தம் எரிபொருள் விலை உயர்வு காரணமாக, ஒரு கிலோமீட்டருக்கு வசூலிக்கப்படும் தொகையை நாங்கள் மாற்ற வேண்டும்.

அத்துடன், அதிகரித்து வரும் கட்டணத்தின் விளைவாக, மக்கள் தங்கள் போக்குவரத்து தேவைகளுக்கு முச்சக்கரவண்டிகளை பயன்படுத்துவதை தவிர்க்கின்றனர். அதன் காரணமாகவே மீட்டர் கட்டணங்களை அகற்றவோ அல்லது மீட்டர்களை அணைப்பதன் மூலம் பயணிகளை கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

பிள்ளைகளை கொ லை செய்து தந்தையும் தற்கொ லை செய்தது ஏன்? பொலிஸார் வெளியிட்ட தகவல்!!

பொலிஸார் வெளியிட்ட தகவல்

புத்தளத்தில் இரண்டு பிள்ளைகளை கொ லை செய்து தந்தை ஒருவர் தற்கொ லை செய்தமை இலங்கை மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. குடும்பத்தில் ஏற்பட்ட மு ரண்பாடு காரணமாக இந்த கொ லை சம்பவம் இடம்பெற்றதாக விசாரணை மேற்கொண்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உடப்புவ பள்ளிவாசல்பாடு பகுதியில் பிள்ளைகளுக்கு நஞ்சு கொடுத்து கொ லை செய்து விட்டு தந்தை தற்கொ லை செய்துகொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. குழந்தைகள் இருவரும் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உ யிரிழந்ததாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

31 வயதான அஷங்க சனத் என்ற தந்தையே இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். 13 வயதான வில்யம் மெஷவ் மற்றும் 7 வயதான எஷோன் மில்ரோத ஆகியோர் உ யிரிழந்துள்ளனர்.

பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!!

அவசர எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு காய்ச்சல் மீண்டும் வேகமாக பரவி வருவதன் காரணமாக பொது மக்கள் மிகுந்த அவதானத்துடனும் , முன்னெச்சரிக்கையுடனும் செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் 60 பேர் உ யிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இதுவரையான காலப்பகுதியில் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டெங்கு காய்ச்சல் காரணமாக மேல் மாகாணத்திலேயே அதிகளவிலானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக டெங்கு ஒழிப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. மேலும் எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்தில் பலி : இருவர் படுகாயம்!!

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில்..

வவுனியா செட்டிகுளம் பகுதியில் இன்று (25.08) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சாவடைந்துள்ளதுடன் இரண்டு பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், செட்டிகுளத்திலிருந்து மெனிக்பாம் நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி கல்லாறு பாலத்திற்கருகில் சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டையிழந்து அருகிலுள்ள மின்சார கம்பத்துடன் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டியில் பின்னிருக்கையில் இருந்து பயணம் செய்த மினிக்பாம் பகுதியை சேர்ந்த சுரேஸ் ஜீவானந்தம் (வயது 29) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளதுடன்,

அதேபகுதியை சேர்ந்த இருவர் படுகாயமடைந்த நிலையில் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பாக செட்டிகுளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வெளியூரில் கணவன் ” இரவில் தனியாக சென்ற மனைவிக்கு நேர்ந்த கதி!!

மனைவிக்கு நேர்ந்த கதி

தமிழகத்தில் இரவில் தனியாக சென்ற கல்லூரி பேராசிரியை மீது கொ டூர தா க்குதல் நடத்திய நபர் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. புதுச்சேரியை சேர்ந்தவர் சாந்திமேரி (42). இவருடைய கணவர் மஞ்சினி. அங்குள்ள காப்பீடு நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

சாந்திமேரி திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தங்கி, அரசு கலைக்கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். கல்லூரி விடுமுறை நாட்களில் புதுச்சேரிக்கு இவர் செல்வது வழக்கம். வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் பேருந்து நிலையத்துக்கு சென்று ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு பேருந்தில் புதுச்சேரிக்கு செல்வார்.

இந்நிலையில் கல்லூரிக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால், புதுச்சேரி செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு 9.15 மணிக்கு வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் உடுமலை பேருந்து நிலையத்துக்கு சாந்திமேரி சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம ஆசாமி ஒருவர் திடீரென்று சாந்தி மேரியை வழிமறித்து, தான் கையில் வைத்திருந்த ம ரக்கட்டையால் சாந்திமேரியின் மு கத்தில் கொ டூரமாக தா க்கினார். இதில் அவர் முகத்தில் கா யம் ஏற்பட்டு ர த்தம் கொட்டியது.

பின்னர் உன்னை கொ ல்லாமல் விடமாட்டேன் என்று சத்தம் போட்டுக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார். சாந்திமேரியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

சம்பவம் குறித்து சாந்தி மேரியிடம் பொலிசார் விசாரித்ததில், கல்லூரியில் அவருக்கும் அந்த துறையின் தலைவரான, பேராசிரியர் ஒருவருக்கும் இடையே துறை சம்பந்தமாக பல்வேறு பிரச்னைகள் இருந்து வருவதாகவும்,

இது குறித்து கல்லூரி முதல்வரிடம் சாந்திமேரி புகார் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகவும் பொலிசார் விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையில் புதுச்சேரியில் இருந்து சாந்திமேரியின் கணவர் மஞ்சினி உடுமலைக்கு வந்துள்ளார்.

அரசியல் பழிவாங்கலுக்காகவே சிவமோகன் எம்.பி என்மீது குற்றம் சாட்டுகின்றார் : சாந்தி எம்பி காட்டம்!!

வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளரினால் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் உங்கள் மீது காணி சம்பந்தமான சில குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கின்றார்.

அது தொடர்பான விசாரணைகளும் தமிழரசு கட்சி மட்டத்திலே இடம்பெற்று வருகின்றது. இது தொடர்பாக உங்களுடைய கருத்து என்ன என வினவியபோதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழரசு கட்சி மட்டத்தில் அல்ல தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டத்திலேயே மூன்று கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தலைவர்களை ஒரு குழுவாக அமைத்து பாராளுமன்ற உறுப்பினர் இருவரையும் விசாரிக்குமாறு தீர்மானம் எடுக்கப்பட்டு இருக்கிறது.

அந்த வகையிலே அவரால் கூறப்பட்ட குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது. அவ்வாறாக நான் காணி அபகரிக்கவும் இல்லை. காணியை களவாக பிடிக்கவும் இல்லை.

அதற்குரிய சகல ஆவணங்களும் என்னிடம் இருக்கின்றது. அந்த காணிக்கென்று ஒரு வரலாறு இருக்கின்றது. அது எனது கணவரின் தந்தையாருக்கு சொந்தமான காணி. அந்த காணியிலே எனது கணவர் 40 வருடங்களாக வயல் செய்கின்றார், தோட்டம் செய்கின்றார்.

ஒரு அரசியல் பழிவாங்கல் என்ற வகையிலேயே சக பாராளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு வெளியிட்ட செய்தி என்பது உண்மைக்குப் புறம்பானது.

இதனுடைய விசாரணைகளின் முடிவில் அரசாங்க அதிபர் எழுத்து மூலமாக எனக்கு அறிவித்திருக்கிறார். இது கையகப்படுத்தப்பட்ட காணி அல்ல பாராளுமன்ற உறுப்பினர் என்ற அந்த போர்வையிலேயே நான் இந்த காணியை கையகப்படுத்தவில்லை. எனது கணவருக்கு அது சொந்தமான காணி என்பதை எழுத்து மூலம் அறிவித்திருக்கின்றார்.

விசாரணைகளின் முடிவில் இதற்கு ஒரு சரியான தீர்வு கிடைக்கும் என மேலும் தெரிவித்தார்.

வவுனியாவில் பல்வேறு நாடுகளில் இருந்து வருகைதந்த இளைஞர்களுக்கான தலைமைத்துவ நிகழ்ச்சித் திட்டம்!!

தலைமைத்துவ நிகழ்ச்சித் திட்டம்

பல்வேறு நாடுகளில் இருந்து வருகைதந்த இளைஞர்களுக்கான சமாதானம் மற்றும் தலைமைத்துவ நிகழ்ச்சித்திட்டம் வவுனியா, ஆண்டியாபுளியங்குளத்தில் ஆரம்பமானது.

பல்வேறு நாடுகளிலும் இருந்து வருகை தந்த இளைஞர்கள் கலந்துகொண்டுள்ள இந் நிகழ்வில் சமூக நலிணக்கம், சமாதானம் மற்றும் இளைஞர்களுக்கான தலைமைத்துவம் தொடர்பான கருத்துரைகள் இடம்பெற்றிருந்தது.

வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட இந் நிகழ்வில் இளைஞர்கள் மத்தியில் இருந்து தலைமைத்துவத்தினையும் நல்லிணக்கத்துடன் கூடிய சமாதானத்தினையும் கட்டியெழுப்புதல் தொடர்பான கலந்துரையாடல்களும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா பண்டார வன்னியன் நிகழ்வில் இருந்து வெளியேறிய சாந்தி எம்.பி!!

வன்னியன் நிகழ்வில் இருந்து வெளியேறிய சாந்தி எம்.பி

வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற வன்னியின் இறுதி மன்னன் மாவீரன் பண்டார வன்னியனின் 216 ஆவது நினைவு தின நிகழ்வில் இருந்து பாராளுமன்ற மன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா வெளிநடப்பு செய்ததுடன், இது ஈபிஆர்எல்எப் கட்சி நிகழ்வா எனவும் விசனம் வெளியிட்டுள்ளார்.

வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் தலைவர் இ.கௌதமன் தலைமையில் இன்று (25.08.2019) காலையில் பண்டார வன்னியனின் நினைவுச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது. தொடர்ந்து நகரசபை மண்டபத்தில் அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வின் ஆரம்பத்தில் பண்டார வன்னியனின் கொடியினை பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஏற்றி வைத்திருந்தார். அதனை தொடர்ந்து நிகழ்வுகள் இடம்பெற்ற போது ஈபிஆர்எல்எப் கட்சியின் செலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் உரையாற்றியிருந்தார்.

நீண்டநேரமாக விருந்தினர் வரிசையில் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா அமர்ந்திருந்த போதும் அவருக்கு உரையாற்ற சந்தர்ப்பம் வழங்கப்டபடவில்லை.

அதனைத் தொடர்ந்து தமிழரசுக் கட்சியின் வவுனியா நகரசபை உறுப்பினர் செந்தில்ரூபனை அழைத்து தனக்கு உரையாற்ற 5 நிமிடம் வழங்குமாறு சாந்தி சிறிஸ்கந்தராஜா கோரியிருந்தார். அவர் நகரசபைத் தலைவர் இ.கௌதமனிடம் கோரிய போதும் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இதனை குறித்த உறுப்பினர் எம்.பியிடம் தெரிவித்ததையடுத்து, இது பண்டாரவன்னியன் நிகழ்வா? அல்லது ஈபிஆர்எல்எப் கட்சி நிகழ்வா என கேள்வி எழுப்பியபடி மண்டபத்தில் இருந்து வெளியேறிருந்தார்.

இதன்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இன்றைய நிகழ்வு மிகவும் மதிக்கக் கூடிய ஒரு நிகழ்வு. பண்டார வன்னியனின் 216 ஆவது இந்த நிகழ்வை மிகவும் கோலகலமாக கொண்டாடியதையிட்டு மகிழ்வடைக்கின்றேன்.

நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்பதற்கு அப்பால் நான் ஒரு வன்னியாள். அந்த வன்னி மண்ணைச் சேர்ந்தவள். அந்த மண்ணில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பவள் என்ற உணர்வுடன் இந்த நிகழ்வில் பங்குபற்றியிருந்தேன்.

ஆனாலும் பண்டார வன்னியனின் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் நகரசபையில் இடம்பெற்ற நிகழ்வு ஒரு கட்சி சார்ந்த நிகழ்வு ஆக போய்விட்டதோ என்ற வேதனையை நான் உணர்கின்றேன். இந்த நிகழ்வில் சக பாராளுமன்ற உறுப்பினருக்கு உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் கொடுத்த அதேவேளை, பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் எனக்கும் எனது கருத்தை சொல்வதற்கான கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது.

இதனால் வன்னி மண்ணை காத்த வீரன் பண்டார வன்னியன் நிகழ்வு ஒரு கட்சி சார்ந்த நிகழ்வாக மாறிவிட்டதோ என்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. காட்டிக்கொடுப்புக்களால் தான் அன்று பண்டார வன்னியன் தோ ற்கடிக்கப்பட்டான். எங்களுடைய ஆ யுதப் போ ராட்டம் காட்டிக் கொடுப்பால் தான் தோற்கடிக்கப்பட்டது.

இன்று நடந்த வரவேற்பு நிகழ்வு சிங்கள தேசத்திற்கு நாம் தமிழ், சிங்களம் என்ற ஒற்றுமையுடன் வாழத்தயார் என்ற ஒரு செய்தியை சொல்கிறது. ஒரே நாட்டிற்குள் எங்களுக்குரிய சுதந்திரத்துடன் நாங்கள் ஒற்றுமையாக வாழ தாயராக இருக்கின்றோம்.

ஆனால் அதை தர சிங்களதேசம் தயாராகவில்லை என்பதை அந்த நிகழ்வு சொல்கிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருமித்த நாட்டிற்குள் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழக் கூடிய நிலையை உருவாக்க சம்மந்தன் ஐயா தலைமையில் முயன்று கொண்டிருக்கையில் காட்டிக்கொடுப்புக்களால் தோற்கடிக்கப்படுகின்றோம்.

மீண்டும் காட்டிக் கொடுப்புக்களால் எங்களது பிரச்சனை நீண்டு செல்கின்றது என்ற வேதனையையும் கூற விரும்புகின்றேன் எனத் தெரிவித்தார்.

வவுனியாவில் வன்னி இராச்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு நாள் நிகழ்வு!!

பண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு நாள்

வன்னி இராச்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு நாள் நிகழ்வு வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் தலைமையில் இன்று (25.08) இடம்பெற்றது.

வவுனியா நகரசபையும் பண்டாரவன்னியன் விழாக்குழுவும் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. காலை 9.30 மணியளவில் வவுனியா நகரசபை மண்டபத்தில் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து நினைவுப்பேருரையை மூத்த ஊடகவியலாளர் அருணா செல்லத்துரை நிகழ்தியதுடன், உரையோவியத்தை எழுத்தாளர் தமிழருவி த.சிவகுமாரன் வழங்கியிருந்தார்.

இந்த நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாந்தி சிறீஸ்கந்தராசா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

வன்னி இராட்சியத்தின் இறுதி மன்னனான பண்டார வன்னியன் இலங்கையில் பிரித்தானிய காலனித்துவத்தை எதிர்த்துப் போராடி மடிந்தவராவார்.

இவரின் திறமை மிகவும் வியக்கத்தக்க வகையில் இருந்தது என 1782இல் லூயி என்கிற டச்சு ஆட்சியாளர் ஒருவர் எழுதிய நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இத்தகைய மாபெரும் வீரத்தினை இந்த மாவீர மன்னனை தவிர்த்து உலகில் வேறொரு அரசனிடமும் கண்டதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளமை இவரின் வீரத்திற்கு சான்றாகும்.

இதே சமயம் காலை 8.30 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகம் முன்பாகவுள்ள பண்டாரவன்னியனின் சிலைக்கு மாலை அணிவித்தும் மலரஞ்சலி செலுத்தியும் நினைவு கூரப்பட்டதுடன், பண்டாரவன்னியனின் வரலாறு தொடர்பிலும் கருத்துரை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் பண்டாரவன்னியனின் நினைவுதினம் அனுஸ்டிப்பு!!

பண்டாரவன்னியனின் நினைவுதினம்

வன்னி மண்ணின் விடுதலைக்காக போராடிய இறுதி மன்னன் பண்டாரவன்னியனின் 216 ஆவது வெற்றி விழாவும், நினைவு தின அனுஸ்டிப்பும் இன்று (25.08.2019) நடைபெற்றது.

வவுனியா நகரசபைத் தலைவர் இ.கௌதமன் தலைமையில் வவுனியா மாவட்ட செயலகம் முன்பாகவுள்ள பண்டாரவன்னியனின் சிலைக்கு முன்னாள் இடம்பெற்றது.

இதன்போது பண்டாரவன்னியனின் சிலைக்கு மாலை அணிவித்தும் மலரஞ்சலி செலுத்தியும் நினைவு கூரப்பட்டதுடன், பண்டாரவன்னியனின் வரலாறு தொடர்பிலும் கருத்துரை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சி.சிவமோகன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, வவுனியா நகரசபை உறுப்பினர்கள், வவுனியா வடக்கு பிரதேச சபை தலைவர் மற்றும் உறுப்பினர்கள்,

செட்டிகுளம் பிரதேச சபை தலைவர் மற்றும் உறுப்பினர்கள், ஜனாதிபதி சட்டத்தரணியும் பண்ணாரவன்னியனின் சிலை நிறுவியவருமான மு.சிற்றம்பலம், சமூக ஆர்வலர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இரு பிள்ளைகளை கொ லை செய்து தானும் த ற்கொ லை செய்த தந்தை : பதற வைக்கும் சம்பவம்!!

ப தற வைக்கும் சம்பவம்

புத்தளத்தில் இரு பிள்ளைகளை ந ஞ்சு கொடுத்து கொ லை செய்த தந்தையொருவர் தானும் தற்கொ லை செய்துள்ளார். புத்தளம் – உடப்புவ பள்ளிவாசல் பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தற்கொ லை செய்து கொண்ட தந்தை 31 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

13 மற்றும் 7 வயது பிள்ளைகளை ந ஞ்சூட்டி கொ லை செய்து விட்டு தானும் தூ க்கிட்டு தற் கொ லை செய்து கொண்டார். பிள்ளைகளின் ச டலங்கள் புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

தற்கொ லை செய்து கொண்ட நபரின் ச டலம் மாத்திரம் அவரது வீட்டிலேயே வைக்கப்பட்டுள்ளது. சம்பவத்திற்கான காரணம் இன்னமும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் பலி!!

மோட்டர் சைக்கிள் விபத்து

கண்டி – நுவரெலியா பிரதான வீதியின் தவலந்தென்ன கெரண்டிஎல்ல பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் விபத்தொன்றில் 20 வயதுடைய இளைஞன் ஒருவர் உ யிரிழந்துள்ளார்.

கண்டி நகரிலிருந்து கொத்மலை புரட்டாசி பகுதியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டர் சைக்கிள் குறித்த பகுதியில் வைத்து வேக கட்டுப்பாட்டை இழந்து கால்வாய் ஒன்றில் விழுந்து இவ் விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்தில், மோட்டர் சைக்கிளை செலுத்திய 20 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உ யிரிழந்துள்ளார். இவ்வாறு உ யிரிழந்தவர் கண்டி கட்டுகஸ்தோட்டை ஜம்புகாபிட்டிய பகுதியை சேர்ந்த திலின சம்பத் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உ யிரிழந்தவரின் ச டலம் பிரேத பரிசோதனைக்காக கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா செட்டிக்குளத்தில் கோர விபத்து : 9பேர் படுகாயம்!!

கோர விபத்து

வவுனியா செட்டிக்குளம் ஆண்டியாபுளியங்குளம் பகுதியில் இன்று (25.08.2019) காலை 7.40 மணியளவில் வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் 9 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வத்தளை பகுதியிலிருந்து மடு நோக்கி பயணித்த வான் ஆண்டியாபுளியங்குளம் பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியின் அருகேயிருந்த மின்கம்பத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் வானில் பயணித்த 11 பேர் படுகாயமடைந்த நிலையில் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மரத்தில் ச டலமாக தொ ங்கிய இளம்காதல் ஜோடி : அதிர்ச்சியடைந்த கிராம மக்கள்!!

இளம்காதல் ஜோடி

இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தில் திருமணமாக இளம்காதல் ஜோடி மரத்தில் தூக்குபோட்டு தற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தின் பராபங்கி மாவட்டம் அருகே உள்ள கிராமத்தில் திருமணமாக இளம்காதல் ஜோடி வெள்ளிக்கிழமையன்று தூ க்கில் தொ ங்கியுள்ளனர்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், இருவரின் உ டலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் கூறுகையில், ஓம் சந்திர யாதவ் என்பவரின் மகன் சிவம் மற்றும் அதேபகுதியை சேர்ந்த சோனி வர்மா என்கிற இளம்பெண்ணும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர்.

ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், வீட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் மனமுடைந்த காதல் ஜோடி வீட்டை விட்டு தற்கொ லை செய்துகொண்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

டாக்சியில் ஏறிய மொடல் அழகி : ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சடலமாக மீட்பு!!

டாக்சியில் ஏறிய மொடல் அழகி

பெங்களூரில் மொடல் அழகி கொ லை செய்யப்பட்ட வழக்கில் கால் டாக்சி ஓட்டுனரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மொடல் அழகியாகவும், மேலாளராகவும் பதவி வகித்து வந்த கொல்கத்தாவைச் சேர்ந்த பூஜா சிங் தே என்பவர் கடந்த ஜூலை 30 ம் தேதி பெங்களூருக்கு வந்து, பின்னர் ஜூலை 31 அன்று மீண்டும் சொந்த ஊருக்கு கால் டாக்சியில் திரும்பியுள்ளார்.


அவரை காரில் ஏற்றி சென்ற எச்.எம்.நாகேஷ் (22) என்கிற இளைஞர், அதிகாலை 4.15 மணியளவில் ஓசூர் சாலையில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் காரை நிறுத்தி பணம் பறிக்க முயன்றுள்ளார். அதற்கு பூஜா மறுத்ததால், இரும்புக்கம்பியால் ஓங்கி தலையில் அடித்துள்ளார்.

இதில் பூஜா மயங்கியதும், அவருடைய பர்சில் இருந்த ரூ. 500 பணத்தையும், இரண்டு செல்போன்களையும் எடுத்துக்கொண்டு காரை மீண்டும் ஒட்டி சென்றுள்ளார். சிறிது தூரம் கார் சென்றதும், பூஜாவிற்கு சுயநினைவு திரும்பியுள்ளது. பூஜா தப்பி ஓடுவதற்கான கதவைத் திறந்தபோது, க த்தியால் சரமாரியாக அவரை குத்திக் கொ லை செய்துவிட்டு, முகத்தை கல்லால் அ டித்து சி தைத்துள்ளார்.

மறுநாள் காலையில் அப்பகுதியில் ச டலம் கிடப்பதை பார்த்த ஒருவர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், இளம்பெண்ணின் உ டலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அந்த பெண் அணிந்திருந்த ‘டைட்டன்’ கடிகாரத்தின் தனிப்பட்ட அடையாள எண்ணை வைத்து வடமாநிலத்தவர் என்பதை பொலிஸார் அடையாளம் கண்டனர். இதனையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய பொலிஸார், நாகேஷை கைது செய்து விசாரித்த போது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.