மனைவி, தந்தையை கொ ன்றுவிட்டு அப்பாவி போல உறவினர்களுடன் உணவருந்திய கணவன்!!

உறவினர்களுடன் உணவருந்திய கணவன்

கொல்கத்தாவில் மனைவி மற்றும் தந்தையை கொ லை செய்துவிட்டு பொறுமையாக உறவினர்களுடன் சென்று உணவருந்திய கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சீனாவை பூர்விகமாக கொண்ட லீ வான் தோ (66) என்பவர் தன்னுடைய மனைவி லீ ஹான் மை (62) மற்றும் அவருடைய தந்தை லி கா சாங் (89) ஆகியோருடன் கொல்கத்தாவில் வசித்து வருகிறார்.


இவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று பெண்களுடன் விருந்துக்கு செல்வதாக மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால் அதற்கு அவருடைய மனைவி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையில் கடும் வா க்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த லீ வான் திடீரென அங்கிருந்த அலுமினிய வாளியை எடுத்து மனைவியின் தலையில் ஓ ங்கி அ டித்துள்ளார்.

சத்தம் கேட்டு அவருடைய தந்தை லி கா சாங் அறையிலிருந்து வெளியில் வந்து பார்த்துள்ளார்.
உடனே அவரையும் த லையில் அடித்து தா க்கியுள்ளார். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உ யிரிழந்த பின்னர், தடயங்களை அழித்தட்டுவிட்டு பின்பக்க கதவின் வழியாக வெளியில் சென்று உறவினர்களுடன் மதிய விருந்துக்கு சென்றுள்ளார்.

ஒரு மணி நேரம் கழித்து வீடு திரும்பிய அவர், ஒன்றுமே நடக்காதவர் போல நீண்ட நேரமாக கதவை தட்டியுள்ளார். பின்னர் மனைவிக்கு போன் செய்வதை போல நடித்துவிட்டு, வீட்டின் மேற்புறம் வழியாக உள்ளே நுழைந்து பக்கத்து வீட்டார்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இருவரும் ர த்த வெள்ளத்தில் இ றந்து கிடப்பதை பார்த்து அ திர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் நீண்ட நேர சோதனைக்கு பின்னர், தாக்குதலுக்கு பயன்படுத்திய வாளியை கண்டுபிடித்தனர்.

சந்தேகத்தின் பேரில் அவருடைய கணவரிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது ஆரம்பத்தில் குற்றத்தை மறைத்த அவர், பின்னர் ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் அவரை கைது செய்துள்ள பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

இலங்கையில் புதிய வாகனங்களின் பதிவில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

வாகனங்களின் பதிவில்..

இலங்கையில் புதிய வாகனங்களின் பதிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் இவ்வாறு மாற்றம் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.

ஏனெனில் கடந்த ஜுன் மாதம் இலங்கையில் குறைந்த எண்ணிக்கையிலான வாகனப் பதிவுகளே இடம்பெற்றுள்ளன.

எனினும் ஜுலை மாதம் அந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. அத்துடன் ஜுலை மாதம் மொத்தமாக 2,584 புதிய வாகனங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த துப்பாக்கிகளுடன் தமிழகத்தில் பெண் அதிரடிக் கைது!!

இலங்கைக்கு க டத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த து ப்பாக்கி மற்றும் தோ ட்டாக்களுடன் தமிழகத்தில் வள்ளி என்ற பெண்ணொருவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாக்குதல் நடத்துவதற்காக இலங்கையில் இருந்து ப யங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த எச்சரிக்கையின் அடிப்படையில் தமிழகம் முழுவதும், அதிலும் குறிப்பாக இலங்கைக்கு மிக அருகாமையில் உள்ள ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தமக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார், உச்சிப்புளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் அடிப்படையிலேயே இலங்கைக்கு கடத்துவதற்காக கைத்துப்பாக்கி மற்றும் 32 தோட்டாக்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்த வள்ளி சிக்கியுள்ளார்.

வேறு ஏதேனும் வெ டிபொருட்கள் அங்கு உள்ளதா என்பதை அறிய மேலும் தீவிர சோதனை நடத்தப்பட்டுள்ளதுடன், வள்ளி கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மண்டபம் யூனியன் உச்சிப்புளி பகுதியில் கடலோர கிராமமான பிரப்பன்வலசையை சேர்ந்த பூமிநாதன் என்பவர் கடந்த இரு வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட்டிருந்தார்.

திருட்டு, போ தைப்பொருள் க டத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பான சந்தேகநபரான பூமிநாதன் தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலேயே வள்ளி தொடர்பான தகவல்கள் அம்பலமாகியுள்ளன.

ஏற்கனவே திருமணமான பூமிநாதன், பிரப்பன்வலசை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த வள்ளியுடன் (42) கடந்த சில ஆண்டுகளாக தகாத உறவில் இருந்து வந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

அத்துடன், பூமிநாதனுக்கு கோவையை சேர்ந்த 3 பேர் அந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை கொடுத்ததாகவும், அவர் அதனை இலங்கையை சேர்ந்தவர்களுக்கு க டத்துவதற்காக வள்ளியின் வீட்டில் வைத்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

யாழிலிருந்து இத்தனை நாடுகளுக்கு விமான சேவைகளா? மகிழ்ச்சியில் வடக்கு மக்கள்!!

யாழ். பலாலி

யாழ். பலாலி விமான ஓடுதளத்திலிருந்து இந்தியா, சீனா மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு விமான சேவைகள் இடம்பெறும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையேயான சந்திப்பு நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். “பலாலி விமானத்தள அபிவிருத்திப் பணிகள் துரிமாக நடைபெற்று வருகின்றன. அபிவிருத்திப் பணிகள் ஒக்டோபர் நடுப்பகுதியில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அதன் பின்னர் பலாலி விமான நிலையம் பிராந்திய நிலையமாக தரமுயர்த்தப்பட்டு இந்தியா, சீனா மற்றும் அவுஸ்திரேலியாவுக்கான விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும்” என்று பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தாயொருவரின் கொடூர செயல் : பரிதாப நிலையில் மகள்!!

கொடூர செயல்

பலங்கொட நகரத்திற்கு அருகில் உள்ள பிரதேசத்தில் தாய் ஒருவர் தனது 14 வயதான மகள் மீது கொதிக்கும் நீரை ஊற்றி கொ டுமைப்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு சிறுவர் பாதுகாப்பு பணியகத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய, பலங்கொட சிறுவர் மற்றும் பெண்கள் பணியக அதிகாரிகள் அந்த சிறுமியின் வீட்டிற்கு சென்று சோதனைகளை ஆரம்பித்துள்ளார். அதற்கமைய அந்த சிறுமியின் முதுகு முழுவதும் சுட்ட கா யங்கள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மகளின் தந்தை உ யிரிழந்த நிலையில் பொலிஸா் வீடுகளுக்கு செல்லும் சந்தர்ப்பத்தில் அங்கு தாய் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேக நபராக தாயை கைது செய்வதற்காக பலங்கொட பொலிஸார் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது

வவுனியாவில் பல்வேறு பகுதிகளில் மோதல் : பெண் உட்பட ஐவர் வைத்தியசாலையில் அனுமதி!!

ஐவர் வைத்தியசாலையில்

வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் மற்றும் கைகலப்பு காரணமாக காயமடைந்த பெண் உட்பட 5 பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை 6 மணி தொடக்கம் இரவு 9 மணிவரை குறித்த மோதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அந்தவகையில், வவுனியா கூமாங்குளம், நெளுக்குளம், தோணிக்கல், ஈரப்பெரியகுளம், மெனிக்பாம் ஆகிய பகுதிகளில் உள்ள சில குழுக்கள் மற்றும் சில நபர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக பெண் உட்பட 5 பேர் காயமடைந்துள்ளனர்.

அதில் தோணிக்கல் பகுதியில், இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய பெண் ஒருவர் தனது காணியில் குடியேற நடவடிக்கைகள மேற்கொண்ட போது அருகில் வசித்தவர்களினால் காணிப் பிரச்சினை தொடர்பில் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவங்கள் தொடர்பில் வவுனியா, செட்டிகுளம், ஈரப்பெரியகுளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ம ர்மமாக இ றந்த மொடல் அழகியின் கொ லை : சிக்கிய சாரதி!!

சிக்கிய சாரதி

பெங்களுர் விமான நிலையத்தின் பின்புறத்தில் ச டலமாக மீ ட்கப்பட்ட மொடல் அழகியின், இ றப்பிற்கு யார் காரணம் என்பது குறித்து தெரியவந்துள்ளது. பெங்களுர் விமான நிலையத்தின் பின்புறத்தில் கடந்த யூலை 31ஆம் திகதி ஒரு ச டலம் கிடப்பதாக கிராம மக்கள் கண்டறிந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால், அவர் யார் என்று கண்டறிய பெரும் சிரமமாக இருந்துள்ளது.

இந்நிலையில், விமான நிலையத்தின் அருகில் ச டலமாக மீட்கப்பட்டதால் அவர் நிச்சயம் வெளிமாநிலத்தரவராக இருக்கலாம் என்று கொல்கத்தா, டெல்லி போன்ற முக்கிய நகரங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், அவர் கொல்கத்தாவை சேர்ந்த பூஜாசிங் என்ற தகவல் பொலிசாருக்கு தெரிய வந்துள்ளது. ஆனால், அவர் எதற்காக கொ ல்லப்பட்டார் என்ற தகவல் தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட பொலிசார், அவர் பயண விவரங்களை பெற்று, அதன் மூலம் விசாரிக்க தொடங்கினர்.

அதில் இறுதியாக பயணம் செய்த cab சாரதியை பிடித்து விசாரித்தனர். அவர் பின் தன் கு ற்றத்தை ஓப்பு கொண்டு உண்மையை தெரிவித்துள்ளார். அவர் கூறியது ”பூஜா என் கேப்-ல் பயணம் செய்திருந்தார். அப்போது என்னுடைய எண் அவரிடம் இருந்தது. இதனால் 30ஆம் திகதி இரவு அழைத்து நாளை(31 ஆம் திகதி) காலை விமான நிலையம் செல்ல வேண்டும், வர முடியுமா என்று கேட்டார்.

நானும் ஒப்புக்கொண்டேன். பின் விமான நிலையம் செல்லும் வழியில் திசை திருப்பி வேறு இடத்திற்கு கொண்டு சென்று பணம் கேட்டு மி ரட்டினேன். அவர் தர மறுத்தார். இந்நிலையில் அவரை தா க்கினேன் ம யக்கம் அடைந்தார். பின் அவர் கை பையை சோதனை செய்த போது, அதில் 500ரூபாய் மட்டுமே இருந்தது.

இதனால் ஆ த்திரமுற்று க டுமையாக தா க்கினேன் இதில் அவர் ப லியாகினார். உடலை விமான நிலையம் அருகில் கொண்டு சென்று விட்டுவிட்டு தப்பித்தேன் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறுத்தை இருந்த கூண்டை தெரியாமல் திறந்த விட்ட நபர் : அதன் பின் நடந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி புகைப்படங்கள்!!

சிசிடிவி காட்சி புகைப்படங்கள்

தாய்லாந்தில் விலங்குகள் பூங்காவிற்கு பேரனுடன் வந்திருந்த தாத்தா தெரியாமல் சிறுத்தை இருந்த கூண்டை திறந்ததால், சிறுத்தை அதிலிருந்து தப்பி அனைவரையும் கடிக்க முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பார்ப்போரை கதிகலங்க வைக்கிறது.

இஸ்ரேலைச் சேர்ந்த குடும்பத்தினர் கடந்த 22-ஆம் திகதி தாய்லாந்தின் Koh Samui-ல் இருக்கும் safari park-க்கு சென்றுள்ளனர். அப்போது அவர்கள் யானை சவாரி முடித்துவிட்டு, அதன் பின் சிறுத்தை இருக்கும் இடத்தை நோக்கி நகர்ந்து வந்தனர்.

அந்த நேரத்தில் தன்னுடைய இரண்டு வயது பேரனுடன் இருந்த தாத்தா திடீரென்று உள்ளே சிறுத்தை இருப்பது தெரியாமல், அந்த கூண்டின் கதவை திறந்ததால், முதலில் தயங்கிய அந்த சிறுத்தை அதன் பின் அடுத்த சில நொடிகளில் வெளியில் வந்த சுற்றுலாப்பயணிகளை கடிக்க முற்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த சுற்றுலாப் பயணிகள் பீதியில் உயிரைக் காப்பாற்றி கொள்ள அலறி அடித்து ஓடினர். இரண்டு வயது சிறுவனை சிறுத்தை துரத்தியுள்ளது. அடுத்த சில நிமிடங்களில், பூங்காவின் ஊழியர் உடனடியாக வந்து சிறுத்தையை மிரட்டி மீண்டும் கூண்டிற்குள் கொண்டு சென்று அடைத்தார்.

இதனால் சிறுவனின் உடலில் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு சிறிய விபத்து ஏற்பட்டு காயமடைந்தால் கூட, அழைத்துச் செல்ல இங்கு ஆம்புலன்ஸ் வசதி இல்லை, என் பேரனை காரில் வைத்து தான் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம் என்று குற்றம் சாட்டினார்.

மேலும் இந்த சம்பவத்தால் சிறுவனின் உடலில் சிறிய அளவில் மட்டுமே காயம் ஏற்பட்டுள்ளதாகவும், உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

தண்டவாளத்தில் மூன்று சடலங்களுக்கு நடுவே மழையில் கதறி அழுதுகொண்டிருந்த குழந்தை!!

மழையில் கதறி அழுதுகொண்டிருந்த குழந்தை

பீகார் மாநிலத்தில் 35 வயது தாய் தன்னுடைய மூன்று குழந்தைகளுடனும் ரயில்முன் பாய்ந்து த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் பாட்னா-கயா பகுதிகளுக்கு இடைப்பட்ட ரயில் தண்டவாளத்தில் நேற்று மதியம், மூன்று வயது குழந்தை மழையில் நனைந்தபடியே அழுதுகொண்டிருந்துள்ளது.

சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள், குழந்தையின் அருகே 35 வயது மதிக்கத்தக்க பெண் மற்றும் அவருடைய இரண்டு ஆண் குழந்தைகளின் ச டலம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் காயங்களுடன் உயிர்தப்பிய குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், குழந்தைகள் உடுத்தியிருந்த ஆடைகள் கந்தலாக காணப்பட்டது. இதனால் வறுமை அல்லது வீட்டில் ஏற்பட்ட மனக்கசப்பால் குழந்தைகளுடன் சேர்ந்து அவர்களுடைய தாய் த ற்கொ லை செய்துகொண்டிருக்கலாம்.

இ றந்தவர்களை பற்றிய அடையாளம் இதுவரை கண்டறிப்படவில்லை. அதனை கண்டுபிடிப்பதற்கான தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறோம். மேலும் த ற்கொ லைக்கான காரணம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

அப்பா, அம்மாவை க த்தியால் கு த்தினார் : நேரில் பார்த்த 5 வயது மகனின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

5 வயது மகனின் அ திர்ச்சி வாக்குமூலம்

அம்மாவை, அப்பா க த்தியால் கு த்தி கொ லை செய்தார் என்று 5 வயது மகன் பொலிசாரிடம் அ திர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். திருவண்ணாமலை, செஞ்சி, மேலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவருக்கு அகிலா(32) என்ற சகோதரி உள்ளார்.


அகிலாவுக்கும் சென்னையைச் சேர்ந்த தனசேகரனுக்கும் கடந்த 2013-ஆம் ஆண்டில் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 5 வயதில் மகன் இருக்கிறான். திருமணமான 6 மாதத்திலேயே கணவன், மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால், குணசேகரன் வீட்டுக்கு அகிலா வந்துவிட்டார்.

குணசேகரனும் அகிலாவும் சென்னை பெருங்குடி பகுதியில் குடியிருந்து வந்தனர். சகோதரிக்காக குணசேகரன் திருமணம் செய்யாமல் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 25-ம் திகதி அகிலா, அகிலேஷை அழைத்துக்கொண்டு தனசேகரன் குடியிருக்கும் நீலாங்கரை திருவள்ளூர் நகருக்கு சென்றுள்ளார்.

அப்போது அவரிடம், அகிலேஷ் படிப்பு செலவுக்குப் பணம் வேண்டும் என்றும் தன்னுடைய தங்க நகைகளைத் தரும்படியும் அகிலா கேட்டுள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே கடும் வா க்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு கட்டத்தில் ஆ த்திரமடைந்த தனசேகரன் அவரை ச ரமாரியாக க த்தியால் கு த்தியதால் ப ரிதாபமாக உ யிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் அவரின் உ டலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையில் கொ லையை நேரில் பார்த்த 5 வயது சிறுவன் அகிலேஷ், அம்மாவை அப்பா க த்தியால் கு த்தினார். அப்போது அம்மா சத்தம் போட்டாங்க, ஆனாலும் அப்பா விடவில்லை. ர த்தம் வந்தது என்று மழலை மொழியில் தெரிவித்துள்ளார். இதையடுத்து மனைவியைக் கொ லை செய்த குற்றத்துக்காகத் தனசேகரன் மீது கொ லை வழக்கு பதிவு செய்த பொலிசார் அவரை தேடி வருகின்றனர்.


மேலும் பொலிசார் நடத்திய தொடர் விசாரணையில், தனசேகரன் வேலை செய்யாமல் ஊர் சுற்றியபடி இருந்துள்ளார். ஆனால் திருமணத்திற்கு முன்பு, தான் ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக கூறி, கம்ப்யூட்டர் முன்பு இருக்கும் புகைப்படத்தை காட்டி அவரை ஏமாற்றியுள்ளார்.

அகிலாவும் இவரை நம்பி திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பின்பு இது குறித்து கேட்ட போது, தனசேகரன் நீ வேலை செய்து என்னைக் காப்பாற்று என்று கூறியதாக உறவினர்கள் பொலிசாரிடம் கூறியுள்ளனர்.

வவுனியாவை வந்தடைந்த நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடைபவனி!!

நடைபவனி

அண்மையில் நாட்டில் இடம்பெற்ற கு ண்டு தாக் குதலிற்கு பின்னர் இங்கு பாதுகாப்பான நிலை உருவாகியிருப்பதை உறுதிப்படுத்தும் நோக்குடன், மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியைச் சேர்ந்த ஜனாதிபதி சாரணர்களான துசாந்தன், சஞ்சீவன் ஆகிய இருவர் பருத்தித்துறையில் இருந்து தெய்வேந்திர முனைவரைக்கும் மேற்கொண்டுள்ள நடைபவனி இன்றையதினம் வவுனியாவை வந்தடைந்து.

வவுனியாவை அடைந்த இருவரையும் நகரசபை உறுப்பினர் சு.காண்டீபன், தமிழ்விருட்சம் அமைப்பை சேர்ந்தவர்களான சந்திரகுமார், சபாநாதன் மற்றும் தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலய மாணவர்கள், ஆசிரியர்கள், ஜனாதிபதி சாரணிய சங்க உறுப்பினர்கள் ஆகியோர் வரவேற்றனர்.

இதன்போது அவர்கள் தெரிவித்ததாவது, நாட்டில் அண்மையில் இடம்பெற்ற கு ண்டுத் தா க்குதலிற்கு பின்னர் நாட்டில் பாதுகாப்பு இல்லாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளதாக பன்னாட்டு சமூகம் எண்ணியிருக்கின்றது.

எனினும் நாம் பாதுகாப்பாகவே இருப்பதனை வெளிப்படுத்தும் நோக்குடனும், இன ஐக்கியத்தை வலியுறுத்தும் நோக்குடனும் குறித்த நடைபவனியை எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் மேற்கொண்டுள்ளோம் என்றனர்.

குறித்த நடைபவனி நேற்று முன்தினம் பருத்தித்துறையில் ஆரம்பித்து எதிர்வரும் 4 ஆம் திகதி தெய்வேந்திர முனையில் முடிவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுவன் ஒருவர் மோட்டார் சைக்கிளை திருடும் பரபரப்பு காணொளி!!

பரபரப்பு காணொளி

மிஹிந்தலை மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த உந்துருளி ஒன்றினை கொள்ளையிட்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதுடன் சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் 15 வயதுடைய மிஹிந்தலை பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சம்பவம் அங்கு பொறுத்தப்பட்டிருந்த சீ.சீ.டி.வி கொமராவில் இவ்வாறு பதிவாகியுள்ளது.

சிலாபத்தில் கோர விபத்து : 10 பேர் வைத்தியசாலையில் : ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி!!

கோர விபத்து

சிலாபம் – குருநாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உ யிரிழந்துள்ளதோடு 10 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரவூர்தி ஒன்றுடன் மகிழூர்தி ஒன்று மோதுண்டமையினால் இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்து இடம்பெற்ற வேளையில் பாரவூர்தியில் 8 பேர் காணப்பட்டுள்ளதுடன் மகிழூர்தியில் 3 பேர் பயணம் செய்துள்ளனர்.  சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் 65 வயதுடைய குருநாகல் பகுதியை சேர்ந்த குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இரகசியமாக அதிவேக நெடுஞ்சாலைக்குள் புகுந்த வாகனம் தீப்பற்றி எரிந்து சேதம்!!

வாகனம் தீப்பற்றி எரிந்து

ஹம்பாந்தோட்டை அதிவேக நெடுஞ்சாலையில் சட்டவிரோதமாக நுழைந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. தீ விபத்தில் முச்சக்கரவண்டி முழுமையாக தீயில் எரிந்து நாசமாகியதுடன், அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதிக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை அதிகவேக நெடுஞ்சாலையின் நுழைவாயிலில் இருந்து 5ஆம் கிலோ மீற்றருக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதிவேக வீதியின் இந்த பகுதி நிர்மாணிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள போதிலும், வாகனங்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கு பாதுகாப்பு அதிகாரிகள் கடமையில் ஈடுபட்டிருந்த நிலையில் முச்சக்கர வண்டி உள்ளே நுழைந்துள்ளது. சூரியவெவ பகுதி நோக்கி பயணித்த இந்த முச்சக்கர வண்டியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு தீப்பற்றி எரிந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மல்வத்து ஓயா தந்திரிமலை நீர்தேக்கத்திற்கான அடிக்கல் பிரதமரால் நாட்டி வைப்பு!!

மல்வத்து ஓயா தந்திரிமலை

கீழ் மல்வத்து ஓயா தந்திரிமலை நீர்த்தேக்க நிர்மாணத்திற்கான அடிக்கல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் நாட்டப்பட்டதுடன், நினைவுக் கல்லும் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.

நேற்றையதினம் கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசன, மீன்பிடி மற்றும் நீரியல் வழங்கள் அமைச்சர் ஹரிசன் தலைமையில் தந்திரிமலையில் நடைபெற்ற நிகழ்வின் போதே பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டினார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட குறித்த திட்டம் தொடர்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி தற்போது நிர்மாணப் பணிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் இதற்கு 2290 கோடி ரூபாய் நிதி ஓதுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், ரவி கருணாநாயக்க, சந்திராணி பண்டார, கயந்த கருணாதிலக, இராஜாங்க அமைச்சர்களான அமீர் அலி, வசந்த அலுவிகார, பாலித ரங்கே பண்டார, வட மத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க,

பாராளுமன்ற உறுப்பினர்களான இஷாக் ரஹ்மான், சந்திம கமகே, பௌத்த மதகுருமார், கமநல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மீன் பிடித்து விட்டு கரைக்கு வந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

காத்திருந்த அ திர்ச்சி

பொத்துவில் களப்புக்கட்டு பிரதேசத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவரின் வலையில் 81 மி.மீட்டர் மோ ட்டார் கு ண்டுகள் சிக்கியுள்ளன.  இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீன்பிடித்துக் கொண்டிருந்த போது வலையில் ஏதோ சிக்கியிருப்பது அறிந்த மீனவர்கள் கரைக்கு திரும்பிய பின் வலையை பரிசோதித்துள்ளனர். அப்போது தான் கறுப்பு நிற பொலித்தீனால் சுற்றப்பட்ட நிலையில் மூன்று மோ ட்டார் கு ண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் அவர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.