இந்தியாவில் புதுப்பெண் ஒருவர் செல்பி மோகத்தால் ஆற்றில் மூழ்கி உ யிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ரூபாலி. இவருக்கும் ராகுல் என்பவருக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் ரக்ஷாபந்தன் பண்டிகையையொட்டி தனது சகோதரர் வீட்டுக்கு ரூபாலி இரு தினங்களுக்கு முன்னர் சென்றார். பின்னர் அங்கிருந்து கணவருடன் தனது வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது அங்குள்ள ஒரு ஆற்றின் பாலத்தின் மீது ரூபாலி உட்கார்ந்த நிலையில் செல்பி புகைப்படம் எடுத்து கொண்டார். அப்போது அங்கு பலத்த காற்று வீசி கொண்டிருந்ததால் நிலை தடுமாறிய ரூபாலி அப்படியே ஆற்றுக்குள் விழுந்தார்.
அவர் தண்ணீரில் மூழ்குவதை பார்த்து செய்வதறியாமல் திகைத்த கணவர் ராகுல் கதறி அழுதார். பின்னர் பரிதாபமாக ரூபாலி உ யிரிழந்தார், சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தாய் நாட்டுக்கு வர முடியாமல் டுபாயில் சிக்கித் தவிக்கும் இலங்கை குடும்பம் தொடர்பில் மத்திய கிழக்கு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மொஹமட் பெராட் அப்பாஸ் என்ற நபரும் அவரது மனைவியான இஷாரா விஜேதுங்க, அவரது 5 வயது மற்றும் 6 வயதுடைய பிள்ளைகளே இவ்வாறு டுபாயில் சிக்கியுள்ளனர்.
மொஹமட் பெராட் அப்பாஸ், 2008ஆம் ஆண்டில் இருந்து டுபாய் தனியார் நிறுவனம் ஒன்றில் சேவை செய்துள்ளார். 2016ஆம் ஆண்டு அவர் தனது தொழிலை இழந்துள்ளார். பின்னர் பெடார் அப்பாஸ் மற்றும் அவரது மனைவி இணைந்து பல்வேறு வர்த்தகங்களை மேற்கொண்டுள்ளனர். எனினும் அவர்களால் லாபத்தினை பெற முடியாமல் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளனர்.
இந்நிலையில் வங்கிகளில் பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாமல் போயுள்ளது. கடனை செலுத்தாமல் இலங்கைக்கு செல்ல அவர்களுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. கடன் சுமை காரணமாக 10 மாதங்கள் சிறைப்படுத்தப்பட்டுள்ள இஷாரா விஜேதுங்கவுக்கு பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
தங்கள் பிள்ளைகள் இருவருடன் அந்த குடும்பத்தினர் இலங்கை வர வேண்டும் என்றால் அதற்கு 52000 டிராம் பணம் செலுத்த வேண்டும். அவர்களின் விசா காலமும் காலாவதியாகியுள்ளதாக குறிப்பிடக்கின்றது. பெற்றோரின் கடன் சுமை காரணமாக பிள்ளைகளுக்கு கல்வி நடவடிக்கைகளும் இடை நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது நண்பர்களினால் வழங்கப்பட்ட சிறிய அறை ஒன்றில் இந்த குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். எவ்வித வருமானமும் இன்றி கடன் செலுத்துவது எவ்வாறு என்ற சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சர்வதேச ஊடகத்திடம் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளுராட்சி மன்ற பெண் உறுப்பினர்களுக்கான பயிற்சிப்பட்டறை வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று (19.08.2019) காலை 9 மணி முதல் இடம்பெற்று வருகின்றது.
டிரான்ஸ்பரன்சி இன்டநெசனல் ஸ்ரீலங்கா நிறுவனத்தினால் நடத்தப்படும் இவ் பயிற்சி பாசறையின் வளவாளராக நளினி ரட்ணராஜா பங்குபற்றி உள்ளுராட்சி மன்ற பெண் உறுப்பினர்களுக்கு சுயநம்பிக்கையினை வளர்ப்பதற்கான வழிகள், தனிநபர் சுயமதிப்பீடு, பலம் மற்றும் பலவீனம், சந்தர்ப்பம், அச்சுறுத்தல், ஊடகப் பயன்பாடு மற்றும் அதன் நுட்பங்கள் என்பன பற்றிய கருத்துக்களை வழங்கியிருந்தார்.
டிரான்ஸ்பரன்சி இன்டநெசனல் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர் எம்.எச்.எம் மக்கீன் , சட்ட ஆலோசனை முகாமையாளர் மங்களா சங்கர் ஆகிய இருவரினதும் வழிகாட்டலில் 18,19ம் திகதி ஆகிய இரு தினங்களாக நடைபெறும் இவ் பயிற்சி பாசறையில் 20க்கு மேற்பட்ட பெண் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா நகரப்பகுதிகளில் அண்மைய சில நாள்களாக கட்டாக்காலி நாய்களின் தொல்லைகள் அதிகரித்துக் காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இதனால் வீதிகளில் செல்லும் மக்கள் அசௌகரியங்களை எதிர் நோக்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா நகரில் மக்கள் நடமாடும் பகுதிகளில் அதிகளவான கட்டாக்காலி நாய்கள் நடமாடித் திரிகின்றது. இதனால் நகருக்கு பல்வேறு தேவைகளின் நிமித்தம் செல்லும் மக்கள் வீதிகளிலுள்ள கட்டாக்காலி நாய்களினால் விபத்துக்களையும் எதிர்நோக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனைக் கட்டுப்படுத்த நகரசபை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலை – சீனக்குடா பகுதியில் தங்கையை தாக்கி காயப்படுத்திய அண்ணனை சீனக்குடா பொலிஸார் நேற்றிரவு கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தீவரகம்மானை, இரண்டாம் பியவர, சீனக்குடா பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்வியில் ஆர்வம் செலுத்தாமல் இளைஞரொருவரை காதலித்து வந்துள்ள நிலையிலேயே தங்கையை அண்ணன் தாக்கியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. காயங்களுக்குள்ளான தங்கை திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சந்தேகநபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கண்டியைச் சேர்ந்த ஒரு இளம் தாயொருவர் தன் இரண்டு குழந்தைகளுடன் ஆசனங்கள் கிடைக்காததால் புகையிரதத்தில் தரையில் அமர்ந்து கொழும்புவரை பயணித்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. கண்ணீரை சிந்த வைக்கும் இந்த காட்சி தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
கடந்த சனிக்கிழமை கண்டியில் இருந்து கொழும்பு செல்லும் நகர்சேர் கடுகதி புகையிரதத்தின் இரண்டாம் வகுப்பிற்கான பயணச்சீட்டை தாயொருவர் பெற்றுக் கொண்டுள்ளார். பிறந்து சில மாதங்களேயான குழந்தை மற்றும் மூன்று வயது நிரம்பிய சிறுவனுடன் அவர் புகையிரதத்தில் ஏறியுள்ளார்.
எனினும் அவர்களுக்கு ஆசனங்கள் கிடைக்காததால், அந்த தாய் தனது பிள்ளைகளுடன் புகையிரதத்தில் தரையில் அமர்ந்து கொழும்பு வரையில் பயணித்துள்ளனர். குழந்தையுடன் வந்த அந்த தாய்க்கு மனிதாபிமான முறையில் ஒரு ஆசனத்தை கூட கொடுக்க யாரும் முன்வரவில்லை என்பது கலைக்குரிய விடயம் என சமூக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
வவுனியாவில் நேற்று மாலை பெய்த கடும் மழையினால் வீதிகள் அனைத்தும் நீர் நிரம்பி வெள்ள காடாக காட்சியளித்ததுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு மணித்தியாலங்கள் நீடித்த மழையினால் வவுனியா, மன்னார் வீதி, காமினி மகாவித்தியாலயத்திற்கு முன்பான பகுதி மற்றும் தாண்டிகுளம், குடியிருப்பு ஆகிய பகுதிகளில் வெள்ளநீர் வீதிகளில் தேங்கி நிற்பதுடன், தாழ்நில பிரதேசங்களும் நீரில் மூழ்கியுள்ளன.
இதன் காரணமாக குறித்த வீதிகளினூடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்ததுடன், வவுனியா நகரின் சில வர்த்தக நிலையங்களிற்குள்ளும் வெள்ள நீர் உட்சென்றமையால் வியாபார நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
வடிகான்கள் சீர் செய்யப்படாமையாலேயே வெள்ள நீர் உட்புகுந்துள்ளதாக வர்த்தகர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
புத்தளத்தில் முத்தம் கொடுக்க மறுத்த பாடாலை மாணவனை, நபர் ஒருவர் கொ டூரமாக தா க்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனமடுவ, ஆடிகம நகரத்திற்கு கு டிபோ தையில் வந்த நபர் ஒருவர், இம்முறை சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்கள் இருவரிடம் முத்தம் வழங்குமாறு கோரியுள்ளார்.
எனினும் மாணவர்களை முத்தம் வழங்க மறுத்துள்ளனர். இதனால் கோபமடைந்த குறித்த நபர் பாடசாலை மாணவன் ஒருவரை கொ டூரமாக தா க்கியுள்ளார்.
இந்த சம்பவம் அருகில் இருந்த சிசிடீவி கமராவில் பதிவாகியுள்ளது. எனினும் இந்த தா க்குதலுக்கு எதிராக மிகவும் மந்தமான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
வவுனியாவில் பல இடங்களில் தென்னை மரங்களில் வண்டுத்தாக்கம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இனந்தெரியாத வண்டு இனம், இளம் தென்னங்கன்றுகளை தாக்குவதால் அவை முறிந்து வீழ்ந்தும், ஓலைப்பகுதி கருகியும் அழிந்து வருகின்றது.
ஒலுமடு, மருதோடை, மாமடு கிராமங்களில் இந்த வண்டுத்தாக்கம் ஏற்ப்பட்டுள்ளது. இதன் காரணமாக தென்னைச்செய்கையை கைவிடும் நிலைக்கு தாம் சென்றுள்ளதாக தென்னைப்பயிர்ச்செய்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) உயர்மட்டக் கூட்டம் கட்சியின் வவுனியா அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
ரெலோவின் அடுத்த கட்ட நகர்வு, சமகால அரசியல் நிலவரங்கள், வரவிருக்கும் தேர்தலை எவ்வாறு எதிர் கொள்வது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடலில் பேசப்பட்டது.
கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் கலந்துரையாடலில் கட்சியின் செயலாளர் ஸ்ரீகாந்தா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், விந்தன் கனகரட்ணம், கோவிந்தன் கருணாகரன் , முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா உள்ளிட்ட உயர்மட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஒடிசாவில் தமிழகத்தை சேர்ந்த தம்பதி தற்கொ லை செய்து கொண்ட நிலையில் அவர்கள் கடிதத்தில் எழுதி வைத்திருந்த உருக்கமான வரிகள் குறித்து தெரியவந்துள்ளது. தமிழகத்தை சேர்ந்தவர் ஆர்.ஜெயபாலன் (38). ஒடிசா மாநிலத்தில் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார்.
இவரது மனைவி மாலினி (35). இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகின்றன. குழந்தைகள் இல்லை. ஜெயபாலன் தனது மனைவியுடன் அங்குள்ள குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில் இரண்டு நாட்களாக அவர்கள் வீடு உள்பக்கமாக பூட்டியிருந்த சூழலில் வீட்டிலிருந்து நேற்று காலை துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது ஜெயபாலனும், மாலினியும் நி ர்வாண நிலையில் இ றந்து கிடந்தனர். இருவரும் விஷம் குடித்து தற்கொ லை செய்து கொண்டதாகக் கூறப்படும் நிலையில் உடலை கைப்பற்றிய பொலிசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையில் ஜெயபாலன் எழுதிய 4 பக்க கடிதம் வீட்டில் கிடைத்துள்ளது. அதில், தங்களது சா வுக்கு யாரும் காரணம் இல்லை என்றும் குழந்தை இல்லாத ஏக்கத்தால் தற்கொ லை செய்துகொண்டதாகவும் எழுதப்பட்டுள்ளது.
மேலும் தங்கள் பெற்றோர், இந்த முடிவுக்காகத் தங்களை மன்னிக்க வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேற்கத்திய கலாசாரத்தை காரணம் காட்டி அமெரிக்க தாயிடம் இருந்து 4 வயது மகளை சவுதி நீதிமன்றம் பிரித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பெத்தானி வியர்ரா (32) கடந்த 2011ம் ஆண்டு உள்ளூர் பல்கலைக்கழகத்தில் கற்பிப்பதற்காக மத்திய கிழக்கு நாட்டிற்கு குடிபெயர்ந்தார்.
அங்கு சவுதியை சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 4 வயதில் Zaina என்கிற மகள் இருக்கிறார். தம்பதியினருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். அதேசமயம் குழந்தை Zaina யாரிடம் வளர வேண்டும் என்பது குறித்து நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.
பெத்தானியா இஸ்லாமிய அல்லாத வாழ்க்கை முறையை வாழ்ந்து வருவதாக அவருடைய முன்னாள் கணவர் சமூகவலைத்தளத்தில் இருந்த ஆதாரங்களை சமர்ப்பித்தார். மேலும், அவருடைய சமூகவலைத்தளத்தில் அதிகமான ஆ பாச படங்கள் இருப்பதாகவும், நமது மதம் மற்றும் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளுக்கு மு ரணான பல விடயங்களில் அவர் ஈடுபடுவதாகவும் பெத்தானியாவின் முன்னாள் கணவர் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் தெரிவித்தார்.
தனது முன்னாள் கணவர் வாய்மொழியாக து ஷ்பிரயோகம் செய்ததோடு, போ தைப் பொருளைப் பயன்படுத்தி வந்தாலே விவாகரத்து செய்ததாக வியர்ரா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவரது கணவர் அந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
இந்த நிலையில் வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, குழந்தையின் தாய் மேற்கத்திய கலாசாரத்தை சேர்ந்தவர் என்பதால், இளம்வயதிலே குழந்தையும் அந்த முறைக்கு மாறிவிடும் எனக்கூறி பெத்தானியாவின் முன்னாள் கணவரின் தாயிடம் ஒப்படைத்துள்ளார்.
இதனை எதிர்த்து பெத்தானியா நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளார். இதற்கிடையில் பெத்தானியாவை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் அடுத்த 10 வருடங்களுக்கு அந்த நாட்டை விட்டு வெளியேற முடியாது எனவும் வாஷிங்டன் நகரத்தில் வசிக்கும் அவருடைய தந்தை வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய கல்லூரி மாணவிக்கு, பெற்ற தாயே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பன்னீர்செல்வம்-அமராவதி தம்பதிக்கு 3 மகள்கள்.
பன்னீர்செல்வம் 4 ஆண்டுக்கு முன் திடீரென்று இறந்துள்ளார். 3 மகள்களில் மூத்த மகளுக்கு மட்டும் திருமணமாகி உள்ளது. 2வது மகள் அபி (19) தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். 3வது மகள் பள்ளியில் படித்து வந்தார். இந்த குடும்பம் வசிக்கும் பகுதியில் சந்தோஷ் (21) என்பவர் வசித்து வந்த நிலையில் அபிக்கும், சந்தோஷுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
ஆனால் சந்தோஷின் நடவடிக்கை சரியில்லாததால் தனது மகளின் காதலை அமராவதி ஏற்க மறுத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதற்கிடையில் அபியின் வீடு அருகில் வசித்து வந்த சந்தோஷ் குடும்பத்தினர், இடையன்குடி சாலையில் பகுதியில் புதிய வீடு கட்டி அங்கு சென்றுவிட்டனர். இருப்பினும் காதல் நீடித்தது.
அதற்கு எதிர்ப்பும் எகிறியது. இதனால் மனமுடைந்த அபி கடந்த 14ம் திகதி வீட்டை விட்டு வெளியேறி தனது காதலன் சந்தோஷை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. இதனால் ஆவேசமான அமராவதி தனது பேச்சை கேட்காமல் வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து கொண்ட தனது மகள் அபி இறந்து விட்டதாக ஊராருக்கு அறிவிப்பதற்காக 100 கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் அச்சிட்டு ஒட்டியது தெரியவந்தது.
இது தொடர்பாக விளக்கமளித்த அமராவதி, சந்தோஷுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் அவனை தனது மகள் அபி காதலித்து ஓடிபோனதால், அவள் உ யிரிழந்துவிட்டதாக அறிவிக்க கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியதாகவும் மேற்கொண்டு எதுவும் பேச விரும்பவில்லை என்றார்.
இந்த சம்பவத்தில் இரு தரப்பும் காவல் நிலையத்தில் எழுத்துபூர்வ புகார் ஏதும் தெரிவிக்காததால் வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை. மகள் காதலனுடன் சென்றதால் அவர் இறந்துவிட்டதாக தாயே போஸ்டர் ஒட்ட ஏற்பாடு செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தோனேஷியாவின் தலைநகரான ஜகார்த்தாவின் மூன்றில் ஒருபகுதி 2050ம் ஆண்டுக்குள் கடலுக்குள் மூழ்கிவிடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மனிதனின் செயல்பாடுகளால் பூமியின் வெப்பநிலை உயர்ந்து கொண்டே செல்கிறது, இதுதொடர்பான ஆய்வுகளும் நடந்த வண்ணம் இருக்கின்றன.
இதனால் பனிப்பாறைகள் உருகுவதுடன், ஓசோன் மண்டலத்தில் துளை, நச்சு வாயுக்களால் பாதிக்கப்படுதல், தோல் சம்பந்தமான நோய்கள் என பல மோசமான விளைவுகளும் ஏற்படுகின்றன.
மிக முக்கியமாக மலைகளில் உள்ள பனிக்கட்டுகள் உருகுதல், வெப்பத்தினால் கடல்நீரின் கனஅளவு அதிகரித்தல் போன்ற காரணங்களினால் கடலின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே போகின்றது.
ஒரு வருடத்திற்கு 0.4 மி.மீ அல்லது ஒரு நூற்றாண்டுக்கு 2 அங்குலம் அளவிற்கு நீர்மட்டம் உயருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கடந்த 100 ஆண்டுகளில் மட்டும் 4 முதல் 8 அங்குலம் வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இந்தோனேஷியாவின் தலைநகரான ஜகார்த்தாவின் மூன்றில் ஒரு பகுதி 2050ம் ஆண்டுக்குள் மூழ்கிவிடும் என எச்சரித்துள்ளனர். நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதாலும், பருவ நிலை மாற்றத்தாலும் இது நடப்பது நிச்சயம் என்கின்றனர் நிபுணர்கள்.
ஏற்கனவே அந்நகரின் பல பகுதிகள் மூழ்கியுள்ள நிலையில், தீவிர நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இந்தோனேஷியா புதிய தலைநகரை தேட வேண்டியிருக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் ஓய்வு பெற்ற தலைமைக்காவலரின் மனைவி நடுவீட்டில் 21 அடி ஆழத்தில் குழி தோண்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமைக்காவலர் ராஜா என்பவரின் மனைவி மைதிலி. சில நாட்களாகவே இவர்களுடைய வீட்டிற்கு வெளியில் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், உள்ளே குழி தோண்டும் சத்தம் கேட்பதாகவும் பொலிஸாருக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுத்துள்ளனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்று பொலிஸார் ஆய்வு மேற்கொண்ட போது, வீட்டிற்கு நடுவில் 21 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டிருப்பதும், அதிலிருந்த மணலை மூட்டையாக அங்கு கட்டி வைத்திருப்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து மைதிலியிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது, குடும்பத்தில் பல இழப்புகள் நிகழ்ந்ததாலும் தன்னுடைய கணவர் ராஜா பக்கவாதத்தில் இருந்ததால் மந்திரவாதி சுரேஷ் என்பவரை மைதிலி அணுகியுள்ளார்.
அவர், வீட்டினுள் செய்வினை வைக்கப்பட்டிருப்பதாவதும், அதனை வெளியில் தோண்டி எடுக்குமாறு மைதிலிக்கு அறிவுறுத்தியுள்ளார். இதனை நம்பிய மைதிலியும் ஆள் வைத்து குழி தோண்டும் போது, உள்ளிருந்து கயிறு மற்றும் பொம்மையை எடுத்ததாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக மைதிலி மணல் திருட்டில் ஈடுபடவில்லை என்பதும், மணல் மூட்டைகளை பாதுகாப்போடு வைத்திருந்ததும் தெரியவந்தது. பின்னர் பொலிஸார் வழக்கு எதுவும் பதிவு செய்யாமல், மைதிலியிடம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர்.
ரஷ்யாவில் சமீபத்தில் சோதனை முயற்சியில் வெடித்துச் சிதறிய doomsday ஏவுகணை தொடர்பில் பதற வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்யாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள செவரோட்வின்ஸ்க் என்ற நகரத்தில் இருந்து சோதனை மேற்கொள்ளப்பட்ட Burevestnik எனப்படும் doomsday ஏவுகணை முதல் முயற்சியிலேயே வெடித்துச் சிதறியுள்ளது.
இதனால் அந்த பகுதி முழுவதும் அணு கதிர்வீச்சு ஏற்பட்டது. மட்டுமின்றி நேரம் செல்லச் செல்ல அதன் தாக்கம் அதிகரித்து, சாதாரண நிலையை விட சுமார் 16 மடங்கு கூடுதலாக காணப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் தரப்பில் இருந்து, அணுக்கதிர்வீச்சின் தாக்கத்தை அயோடின் ஓரளவு கட்டுப்படுத்தும் என்பதால் அயோடின் மருந்தை வாங்கி சாப்பிடுமாறு அறிவிக்கப்பட்டது .
சிறிது நேரத்தில் மருந்து கடைகளிலும் மருத்துவமனைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. வெறும் ஏவுகணை வெடித்ததால் கதிர்வீச்சு ஏற்படுமா? அணு ஆயுதத்துடன் ஏவுகணை வெடித்து சிதறியதால் கதிர்வீச்சு ஏற்பட்டதா போன்ற கேள்விகள் உலக நாடுகளிடையே எழத் தொடங்கின.
இந்த நிலையில், கடந்த ஆண்டு ரஷ்ய நாடாளுமன்றத்தில் ஜனாதிப்தி விளாடிமீர் புடின் ஆற்றிய உரையில், இதுவரை இல்லாத புதிய வகை ஏவுகணைகள் தயாரிப்பில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து இருந்ததை சுட்டிக்காட்டி சர்வதேச ஊடகங்கள், அந்த doomsday ஏவுகணை தொடர்பில் பகீர் கிளப்பும் பின்னணி தகவல்களை வெளியிட்டுள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி குறிப்பிட்ட இதுவரை இல்லாத புதிய வகை என்பது ஏவுகணைகளுக்கான எரிபொருளாகவே அணுசக்தியை பயன்படுத்துவதுதான். தற்போது எரிபொருளாகவே அணுசக்தியை பயன்படுத்தும் தொழில்நுட்பத்தில் ரஷ்யா இறங்கியுள்ளது.
இதன் நோக்கம் தொலை தூரத்தில் உள்ள இலக்கையும் குறிவைத்து தாக்கி அழிக்கலாம் என்பதுதான். இந்த ஏவுகணை சோதனை வெற்றி பெற்றால், அது, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும்.
அணு ஏவுகணை தாக்குதல் நடந்தால் கதிர்வீச்சு கட்டாயம் இருக்கும். ஏவப்பட்ட வினாடியில் இருந்து பாதிப்பு தொடங்கிவிடும். வருங்காலத்தில் ஏவுகணைகள் சுமந்து வருவது மட்டும் அணு ஆயுதமாக இருக்காது. ஏவுகணைகளே அணு ஆயுதமாக இருக்கும்.
இதில் ஆர்டிஜி எனப்படும் மிகச்சிறிய வகை அணுசக்தி ராக்கெட்டுகள் பயன்படுத்தப்படும். இதில் அணுக்கழிவுகள் வெளியேறுவது இல்லை. ராக்கெட்களில் பயன்படுத்தப்படும் ஆர்டிஜி தொழில்நுட்பத்தில் அணுவை பிளப்பதோ, இணைப்பதோ இல்லை.
ஆனால், ஏவுகணைகளை செலுத்த ஆர்டிஜி தொழில்நுட்பம் போதாது, மிகப்பெரிய அளவிலான அணுசக்தி பூஸ்டர்கள் தேவைப்படும். இங்கேதான் அணு கதிர்வீச்சு கொண்ட கழிவுகள் வெளியேறுகின்றன. இந்த வகை ஏவுகணைகளை எதிரி நாட்டின் மீது ஒன்றை ஏவினால் போதும், பல கி.மீ. தூரம் பஸ்பமாகி விடும்.
அங்கு புல், பூண்டு கூட இருக்காது. திரும்பவும் முளைக்க பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இதனிடையே புதிய ஏவுகணை சோதனை தொடர்பில் விளக்கமளித்த ரஷ்யா, திரவ எரிபொருள் ஏற்றப்பட்ட ஒரு ஏவுகணை திடீரென வெடித்தது. இந்த விபத்தில் 5 பொறியாளர்கள் இறந்துள்ளனர் என ஒப்புக்கொண்டுள்ளது. மட்டுமின்றி கதிர்வீச்சு கட்டுப்பாட்டு மையம் பதிவு செய்த கதிர்வீச்சு 4 முதல் 16 என்ற அளவில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.