அமெரிக்கா-ரஷ்யா போர் : 10 ஆண்டுகள் பூமி இருளில் மூழ்கும் : உலகிற்கு பேரழிவு எச்சரிக்கை!!

உலகிற்கு பேரழிவு எச்சரிக்கை

அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான அணு ஆயுத போர் பூமியை பத்து வருட குளிர்காலத்தில் மூழ்கடிக்கக்கூடும், உலகம் மொத்தமும் இருளில் மூழ்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

ஏவுகணைகளில் இருந்து வெளியேறும் தீ, 147 மில்லியன் டன் புகைக்கரி மற்றும் தூசியை வளிமண்டலத்தில் வெளியிடும். இது பல ஆண்டுகளாக சூரிய ஒளியைத் தடுக்கும். ஒளி இயல்பு நிலைக்கு வர பத்து ஆண்டுகள் ஆகும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். மேலும், பூமியின் சராசரி மேற்பரப்பு வெப்பநிலை 9 செல்சியஸ் வீழ்ச்சியடையும் என குறிப்பிட்டுள்ளனர்.

ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தின் வளிமண்டல விஞ்ஞானி ஜோசுவா கூப், அணு ஆயுத போருக்கு காலநிலை எவ்வாறு எதிர்விளையாற்றும் என்பதை உருவகப்படுத்தியுள்ளார். ஜோசுவா கூப் தலைமையிலான குழு தங்கள் கண்டுபிடிப்புகளை, நீண்ட குளிர்காலத்தை கணித்த 2007 ஆம் ஆண்டு நாசாவின் ஆய்வோடு ஒப்பிட்டுள்ளது.

அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் பெரிய அளவிலான அணு ஆயுத போரின் விளைவாக பூமியில் அணு குளிர்காலம் ஏற்படும். அத்தகைய அணு ஆயுத தாக்குதலை நடத்த முடிவு செய்யும் நாட்டிற்கு, அது தற்கொ லையாக இருக்கும். அமெரிக்காவும் ரஷ்யாவும் அத்தகைய முறையில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது உலகளவில் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும்.

இறுதியில், அணு ஆயுதங்களை குறைப்பது மற்றும் அணு ஆயுத திறன் கொண்ட அனைத்து நாடுகளையும் நிராயுதபாணியாக்குவதே இந்த பூமியின் நலனுக்கு முக்கிய தேவை என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டி : முதல் வெற்றியை பதிவு செய்து இலங்கை அணி சாதனை!!

இலங்கை அணி

நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் போட்டியில் அணித் தலைவரின் நிதான ஆட்டத்துடன் கூடிய சதம் கைகொடுக்க, இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணியானது இலங்கை கிரிக்கெட் அணியுடன் 2 டெஸ்ட், 3 இருபதுக்கு – 20 சர்வதேச கிரக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

இந்நிலையில், காலியில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணியானது முதலில் துடுப்பெடுத்தாடி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 249 ஓட்டங்களை பெற்றது.

நியூசிலாந்து அணி சார்பாக துடுப்பாட்டத்தில் டெய்லர் 86 ஓட்டங்களையும் நிக்கொலஸ் 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா 5 விக்கெட்டுகளையும் சுரங்க லக்மால் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன் பின்னர் பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 267 ஓட்டங்களைப் பெற்று 18 ஓட்டங்களால் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றிருந்தது. இலங்கை அணி சார்பாக டிக்வெல்ல 61 ஓட்டங்களையும் குசல் மென்டிஸ் 53 ஓட்டங்களையம் மெத்தியூஸ் 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் பட்டேல் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த நிலையில் 18 ஓட்டங்களால் பின்னிலை வகிக்க தனது 2 ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த நியூசிலாந்து அணி 285 ஓட்டங்களைப் பெற்று அனைத்து விக்கெட்டுகளையும்இழக்க இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 267 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

தனது 2 ஆவது இன்னிங்ஸில் இலங்கை அபாரமாக விளையாடி வெற்றி இலக்கை அடைந்து 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. திரிமான்னேயின் அரைச்சதமும் (64) அணித்தலைவரின் நிதான ஆட்டத்துடன் கூடிய சதம் (122) கைகொடுக்க இலங்கை அணி தனது சொந்த மண்ணில் கைத்து நியூசிலாந்து அணியை வெற்றி கொண்டு 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி எதிர்வரும் 22 ஆம் திகதி கொழும்பு பி. சரவணமுத்து மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

வடக்கு கிழக்கில் இன்று ஏற்படப்போகும் மாற்றம் : மக்களே அவதானம்!!

மக்களே அவதானம்

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உயர்வாக காணப்படுவதாக, வளி மண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.


சுமார் 75 மில்லி மீற்றர் வரையான பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் மேல் மாகாணங்களில் இடைக்கிடை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் காலை வேளையிலும் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுவதோடு, மணிக்கு 70 – 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிகமாக வீசும் பலத்த காற்றினாலும் மின்னல் தா க்கங்களினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான மு ன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

வவுனியாவில் மிகுதி பணத்திற்கு பதிலாக இனிப்புக்கள் : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ஓர் அறிவிப்பு!!

வர்த்தக நிலையங்களில் மிகுதி பணத்திற்கு பதிலாக இனிப்புக்கள் வழங்கப்பட்டால் பொதுமக்கள் வர்த்தக சங்கத்தில் முறைப்பாட்டினை மேற்கொள்ளுமாறு வவுனியா வர்த்தக சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

வவுனியாவில் உள்ள பல வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது மிகுதி சில்லறைப் பணத்திற்கு பதிலாக இனிப்புக்கள் வழங்கப்படுவதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், வர்த்தக நிலையங்களில் சில்லறை நாணயங்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதன் காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக வர்த்தகர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இதற்கு தீர்வு காணும் வகையில் அரச மற்றும் தனியார் வங்கி முகாமையாளர்களுடன் வர்த்தக சங்கத்தினர் கலந்துரையாடி சில்லறை நாணயங்களை பெறுவதற்குரிய நடவடிக்கையினை வவுனியா வர்த்தக சங்கத்தினர் மேற்கொண்டிருந்தனர்.

அத்துடன், சில்லறை நாணயங்கள் தேவைப்படும் வர்த்தகர்கள் வர்த்தக சங்கத்தின் காரியாலத்தில் அலுவலக நேரங்களில் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே, இதற்கு பின்னரும் வர்த்தக நிலையங்களில் மிகுதி பணத்திற்கு பதிலாக இனிப்புக்கள் வழங்கப்பட்டால் வர்த்தக சங்கத்தில் முறைப்பாடு செய்யுமாறு வர்த்தக சங்கத்தினர் மக்களுக்கு அறிவித்துள்ளனர்.

இலங்கையில் தாயை வாழ வைப்பதற்காக இப்படியொரு மோசமான செயலா?

கொ ள்ளையில் ஈடுபட்ட ஆசிரியர்

திவுலபிட்டியவில் சூட்சுமான முறையில் மக்களை ஏமாற்றி கொ ள்ளையில் ஈடுபட்ட ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நபர் காணி அதிகாரியாக நடித்து வீடுகளுக்கு சென்று வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு வீடுகள் மற்றும் காணிகளை வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.

அதற்காக வீட்டில் உள்ளவர்களை புகைப்படம் எடுக்க வேண்டிய அவசியம் உள்ளதாக கூறியுள்ளர். புகைப்படம் எடுக்கும் போது நகைகளை போட்டு எடுக்க வேண்டாம் என கூறுகின்றார். அவர் கூறுவதனை கேட்கும் மக்கள் நகைகளை அகற்றி அருகில் வைத்துவிட்டு புகைப்படம் எடுத்துக்கொள்கின்றார்கள்.

பின்னர் தனக்கு குடிக்க தண்ணீர் வழங்குமாறு ஆசிரியர் கேட்கும் நிலையில், தண்ணீர் எடுப்பதற்கு வீட்டவர்கள் செல்லும் சந்தர்ப்பத்தில் அந்த தங்க நகைகளை கொ ள்ளையடித்து செல்வதாக குறிப்பிடப்படுகின்றது.

இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடம் நகை அடகு பிடிக்கப்பட்ட பல ரசிதுகளும் பல்வேறு அடையாள அட்டைகளும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்டுநாயக்க பிரதேசத்தை சேர்ந்த இந்த நபர் நீர்க்கொழும்பில் மேலதிக வகுப்பு நடத்திய ஆசிரியர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனது தாயை வாழ வைப்பதற்காக இவ்வாறான கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக குறித்த ஆசிரியர் விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

வெளிநாடு செல்ல முயற்சித்த 10 தமிழர்கள் : சுற்றிவளைத்து பிடித்த பொலிஸார்!!

வெளிநாடு செல்ல முயற்சித்த தமிழர்கள்

சட்டவிரோ தமான முறையில் கடல் வழியாக வெளிநாடு செல்ல முயற்சித்த 10 பேர் சிலாபம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். ச ந்தேகத்திற்குரிய முறையில் சிலர் பயணிப்பதாக கிடைத்த தகவல்களுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சு ற்றிவளைப்பின் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறிய ரக லொறி ஒன்றில் சிலாபம், இரணவில வீதியில் பயணித்து கொண்டிருந்த போது இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு ஆதரவு வழங்கிய லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட அனைவரும் வாழைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த 20 – 40 வயதுடைய தமிழர்களாகும். லொறியின் சாரதி மற்றும் உதவியார்கள் மாரவில மற்றும் தொடுவாவ பிரதேசத்தை சேர்ந்த சிங்களவர்களாகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கனடாவுக்கு சென்ற பெருமளவு இலங்கையர்கள் கைது!!

இலங்கையர்கள் கைது

கனடாவுக்கு சென்ற இலங்கையர்கள் உட்பட 67 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்கள் மெக்சிக்கோ கரையோர அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் இலங்கை, பங்களாதேஷ் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று மெக்சிக்கோ பொலிஸார் அறிவித்துள்ளார்கள். நீர், உணவு இல்லாமையினால் இவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க தேச எல்லைக்குள் மெக்சிக்கோவின் ஊடாக நுழைவது இவர்களின் நோக்கமாகும்.

இவர்கள் கட்டார் ஊடாக துருக்கி, கொலம்பியா, ஈக்குவாடோர், பனாமா, குவத்தமாலா ஆகிய நாடுகள் ஊடாக மெக்சிக்கோ சென்றடைந்துள்ளார்கள். லத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து படகு மூலம் மெக்சிக்கோ – அமெரிக்க எல்லையை சென்றடைந்துள்ளார்கள் என்று மெக்சிக்கோ பொலிஸார் அறிவித்துள்ளார்கள். கனடாவை சென்றடைவது இவர்களின் பிரதான இலக்காகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்து : ஒருவர் படுகாயம்!!

விபத்து

திருகோணமலை, கந்தளாயில் இன்று அதிகாலை வேகக் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனமொன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த டிப்பர் வாகனம் வயல் வெளியில் விழுந்தமையினால் வாகனத்தின் சாரதிக்கு படுகாயம் ஏற்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது, படுகாயமடைந்தவர் கந்தளாய், கெமுனு மாவத்தை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ரொசான் சிறிமேவன் என தெரியவந்துள்ளது. இவ்விபத்து தொடர்பில் கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் சிறப்பாக நடைபெற்ற சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்கங்களின் சங்கமம் நிகழ்வு!!

சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்கங்களின் சங்கமம் நிகழ்வு

சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களின் சங்கம நிகழ்வு வவுனியாவில் இன்று (17.08) சிறப்பாக நடைபெற்றது.

வவுனியா மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களின் சமாசம் மற்றும் சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வு நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், சிறப்பாக செயற்பட்ட உத்தியோகத்தர்களுக்கும், சிறந்த பரீட்சைப் பெறுபேறுகளைப் பெற்ற அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கும் பரிசளிப்பும், சமாசத்தின் கணொளி வெளியீடும் இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களின் சமாசத் தலைவர் அ.ச.பாரதி ஆனந்தம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 50 வருடகாலம் கூட்டுறவுச் சேவையில் இணைந்து செயற்பட்டமைக்காக சமாசத்தின் முன்னாள் தலைவரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான நா.சேனாதிராஜா அவர்களுக்கு ஆளுனர் கௌரவிப்பை வழங்கினார்.

இந்நிகழ்வில் வடமாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன், அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா, கூட்டுறவு ஆணையாளர் பொ.வாகீசன், இலங்கை சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் பி.ஏ.ஹிரிவந்தெனிய, வவுனியா நகரசபை உறுப்பினர்களான த.பரதலிங்கம், ரி.கே.இராஜலிங்கம், க.செந்தில்ரூபன், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன், வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா, செட்டிகுளம் பிரதேச செயலாளர் க.சிவகரன், கூட்டுறவு உத்தியோகத்தர்கள், சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்க அங்கத்தவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் ஒரு இலட்சம் பனை விதைகளை நடவதற்கு நடவடிக்கை!!

ஒரு இலட்சம் பனை விதை

வவுனியா மாவட்டத்தில் ஒரு இலட்சம் பனை விதைகளை நடுவதற்கு சுயாதீன தமிழ் இளைஞர் அமைப்பினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு ஒரு இலட்சம் பனை விதைகளை விதைக்கும் நோக்கத்துடன் வவுனியா சுயாதீன தமிழ் இளைஞர் அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கையின் முதல் கட்டமாக இன்று (17.08.2019) ஆயிரம் பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ளது.

வவுனியா கூமாங்குளம் குளக்கரை அண்டிய பகுதிகளில் வவுனியா சுயாதீன தமிழ் இளைஞர்களால் முதற்கட்டமாக பனை விதைகளை விதைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு வவுனியா சுயாதீன தமிழ் இளைஞர் அமைப்பினரால் 10 ஆயிரம் பனை விதைகள் வவுனியா பிரதேசத்தில் விதைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கொல்ல வந்த மர்ம நபர்கள் : எஜமானை காப்பாற்ற உ யிரைவிட்ட நாய்!!

உ யிரைவிட்ட நாய்

மதுரையில் அரிவாளுடன் வந்த மர்ம நபர்களிடம் இருந்து எஜமானரை காப்பாற்றிவிட்டு வாயில்லா ஜீவன் உ யிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையை சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கும், அதேபகுதியை சேர்ந்த அசோக் என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு த கராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆ த்திரத்தில் இருந்த அசோக், தன்னுடைய நண்பர்கள் 8 பேரை ஏற்பாடு செய்து முத்துக்குமாரை கொ லை செய்ய அனுப்பி வைத்தனர்.

அதன்படி முகத்தில் துணியை கட்டிக்கொண்டு 8 மர்ம நபர்கள் முத்துக்குமார் வேலை செய்யும் இடத்திற்கு சென்றுள்ளனர். அந்த இடத்தில் நிறுவனத்தின் உரிமையாளர் செந்தில் என்பவருக்கும் மர்ம நபர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

உடனே கையில் வைத்திருந்த அரிவாளை கொண்டு செந்திலை வெ ட்டியுள்ளனர். கதறல் சத்தம் கேட்டு பதறிப்போய் ஓடிவந்த அவருடைய மனைவியையும் அந்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டியுள்ளது. இதற்கிடையில் அங்கு வந்த செந்திலின் வளர்ப்பு நாய் குரைத்துகொண்டே மர்ம நபர்கள் மீது பாய்ந்து தாக்க ஆரம்பித்தது.

ஆனால் இரக்கமில்லாத அந்த மிருகங்கள் வாயில்லா ஜீவனையும் கத்தியால் கு த்தி கொ ன்றுவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொலிஸார் காயமடைந்த தம்பதியினரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விஜய் (22), ஹரி (19), பிரவீன்பாலா (18), சிவா (19), ஜாகீர்உசேன் (19) மற்றும் 17 வயதுடைய சிறுவர்கள் 2 பேர் என மொத்தம் 7 பேரை கைது செய்துள்ளனர். தப்பிச் சென்ற விக்னேஷ் என்பவரை தேடி வருகிறார்கள். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தன் அழகால் ஆண்களை மயக்கிய நடிகை : வெளியான வீடியோவால் ஏற்பட்ட சிக்கல்!!

சுருதி

வெளிநாட்டில் வாழும் தமிழர்களிடம் அழகை காட்டி பண மோசடி செய்த வழக்கில் சிக்கிய சுருதி தனது புகைப்படங்கள், வீடியோக்கள் தவறாக சித்தரிக்கப்படுவதால் தனது திருமணம் தடைபடுவதாக பொலிசில் புகார் அளித்துள்ளார்.

சென்னையை சேர்ந்த பாலமுருகன் என்பவர் ஜேர்மனியில் பணிபுரிந்து வரும் நிலையில், மேட்ரிமோனியல் திருமண தகவல் மையம் மூலம் சுருதி என்ற பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. ஆடி போனா ஆவணி படத்தில் கதாநாயகியாக சுருதி நடித்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த நிலையில் மூன்று மாதங்கள் பழகியுள்ளனர்.

இந்நிலையில் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என பாலமுருகனிடம் கூறிய சுருதி அவரிடம் 45 லட்ச ரூபாய் பணம் கேட்டுள்ளார். இதையடுத்து பாலமுருகன் அந்த பணத்தை சுருதி வங்கி கணக்கில் செலுத்திய பின்னர் அவருடனான தொடர்பை சுருதி துண்டித்தார்.

இதையடுத்து சுருதி மோசடி பேர்வழி என்பதை உணர்ந்த பாலமுருகன் பொலிசில் புகார் அளித்தார். விசாரணையில் வெளிநாட்டில் வாழும் பலரிடம் சுருதி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து பொலிசார் சுருதி உள்ளிட்ட மூவரை கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.

இந்நிலையில் நேற்று கோவை சைபர் க்ரைம் பொலிஸ் அலுவலகத்துக்கு வந்த சுருதி புகார் ஒன்றை கொடுத்தார். பின்னர் நிரூபர்களிடம் பேசிய அவர், நான் கைதுசெய்யப்பட்ட போது ஒளிபரப்பான வீடியோக்கள், சமூக வளைதளங்களில் அதிகளவில் உள்ளன. இதன் காரணமாக என்னுடைய திருமணம் தடைபடுகிறது.

எனது புகைப்படங்கள், வீடியோக்கள் தவறாக சித்திரிக்கப்பட்டு பரப்பப்படுவதோடு எனது குடும்பத்தினர் குறித்தும் அசிங்கமான வகையில் தகவல்களைப் சிலர் பரப்புகின்றனர்.
இது போன்ற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அகற்றவேண்டும் என புகார் கொடுத்தேன் என கூறியுள்ளார்.

திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை இல்லை : நி ர்வாண நிலையில் வீட்டில் ச டலமாக கிடந்த தம்பதி!!

ச டலமாக கிடந்த தம்பதி

தமிழகத்தை சேர்ந்த தம்பதி வட இந்தியாவில் நி ர்வாண நிலையில் ச டலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தை சேர்ந்தவர் ஜெயபாலன். இவர் மனைவி மாலினி கேசவன். இருவரும் ஒடிசாவில் வசித்து வந்த நிலையில் ஜெயபாலன் பேராசிரியராக பணியாற்றி வந்தார். தம்பதிக்கு திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை.

ஜெயபாலனும், மாலினியும் குடியிருப்பு ஒன்றில் தங்கியிருந்தனர், இரண்டு நாட்களாக அவர்கள் வீடு உள்பக்கமாக பூட்டியிருந்த சூழலில் வீட்டிலிருந்து இன்று காலை து ர்நாற்றம் வீசியது.
இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து பொலிசில் புகார் அளித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் வீட்டு கதவை உடைத்து பார்த்த போது ஜெயபாலனும், மாலினியும் நி ர்வாண நிலையில் ச டலமாக கிடந்தனர். இருவரின் ச டலங்களையும் கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவர்கள் வீட்டிலிருந்து கடிதத்தை பொலிசார் கைப்பற்றினார்கள். இருவரும் விஷம் குடித்து த ற்கொ லை செய்திருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள். இதனிடையில் பெற்றோர்கள் தங்களை மன்னித்துவிடுமாறு ஜெயபாலனும், மாலினியும் கூறியதாக தகவல் கிடைத்துள்ளது.

சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இருவரின் இ றப்புக்கான காரணம் விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வவுனியா பூந்தோட்டம் அகதி முகாமில் ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் அகமட் கீட்!!

அகமட் கீட்

இலங்கைக்கு வந்துள்ள மத அல்லது நம்பிக்கைச் சுதந்திரம் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் அகமட் கீட் அவர்கள் இன்று (17.08) வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகளை பார்வையிட்டார்.

உயிர்த்த ஞாயிறுதினத்தில் இடம்பெற்ற தீ விரவாத தா க்குதலையடுத்து நீர்கொழும்பில் தங்கியிருந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு அகதிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர்.

அவர்களில் ஒரு தொகுதியினர் மூன்று கட்டங்களாக வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் உள்ள புனர்வாழ்வு நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டனர். அவர்களில் குறிப்பிட்ட ஒரு தொகுதியினர் மீண்டும் சுய விருப்பின் பேரில் நீர்கொழும்பு திரும்பிச் சென்றுள்ள நிலையில் ஒரு பகுதியினர் புனர்வாழ்வு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தங்க வைக்கப்பட்டவர்களை பார்வையிட்ட ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் அவர்களது தற்போதையநிலை, தீ விரவாத தா க்குதலின் பின்னரான நிலமைகள் மற்றும் அவர்களது பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடினார். குறித்த சந்திப்பானது சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்றது.

முன்னதாக வவுனியா, குருமன்காடு கிராம அபிவிருத்திச்சங்க கட்டிடத்தில் வவுனியா மாவட்ட மதநல்லிணக்க குழுவினரை சந்தித்து தீ விரவாத தா க்குதலின் பின்னர் மத நல்லிணக்கம் குறித்தும், தற்போது மத நிலைகள் தொடர்பாகவும் கலந்துரையாடிருந்தார்.

குறித்த இரு நிகழ்வுகளுக்கும் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்ததுடன் ஐ.நா சிறப்பு அறிக்கையாளரும் அவரது குழுவினரும் கருத்து கூற மறுத்திருந்தனர்.

அன்று ஆடு மேய்த்தவர்.. இன்று ஆட்ட நாயகன் : சாதித்த தமிழன்!!

சாதித்த தமிழன்

டிஎன்பிஎல் தொடர் மூலம் தமிழகத்திற்கு கிடைத்த அற்புதமான விளையாட்டு வீரராக பார்க்கப்படுகிறார், தொடர் நாயகன் விருது பெற்ற பெரியசாமி. 2019ம் ஆண்டு டிஎன்பிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது. இறுதிப் போட்டியில் திண்டுக்கல்லை சாய்த்து, கிண்ணத்தை தட்டிச் சென்றிருக்கிறது சென்னை சேப்பாக் கில்லீஸ்.

தொடரில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இளம் வீரர் தான் பெரியசாமி. இறுதி போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் கைப்பற்றி, ஒட்டு மொத்த தொடர்நாயகன் விருதுக்கும் சொந்தகாரானார் பெரியசாமி. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ஏழை குடும்பத்தில் பிறந்த பெரிய சாமியின் தாயார் ஆடு மாடுகளை வளர்த்து வருகிறார்.

தந்தை கணேசன் லொரி சாரதியாக இருந்து தற்போது உடல் நலனை கருத்தில் கொண்டு வீட்டிலேயே டீக்கடை நடத்தி வருகிறார். சிறுவயதிலேயே படிப்பில் ஆர்வமில்லாத பெரியசாமி ஆடு மேய்ப்பது முதல் நெசவு, நூல் மில் வரை பல்வேறு வேலைகளை செய்து வந்திருக்கிறார்.

கிரிக்கெட்டில் இவருக்கு இருந்த ஆர்வத்தையும் திறமையையும் கண்ட இளைஞர் ஒருவர் பந்து வீச்சு நுணுக்கங்களை பயிற்சி அளித்துள்ளார். தொடர்ந்து மாவட்ட அளவிலான போட்டிகளில் சிறப்பாக விளையாடி பல பரிசுகளை அள்ளிய பெரியசாமி,

தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் சென்னை சேப்பாக் அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். அந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டு பயன்படுத்திய பெரியசாமி தனது திறமையை தமிழகம் அறிய செய்துள்ளார். ஆடு மேய்த்த பெரியசாமி தற்போது கிரிக்கெட் ஆடுகளத்தில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள திடீர் எச்சரிக்கை!!

திடீர் எச்சரிக்கை

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யகூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் மணிக்கு 70-80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என அத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பகுதியில் 75 மில்லிமீற்றர் அளவில் மழை வீழ்ச்சி பதிவாக கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் இருந்து திருகோணமலை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யகூடிய சாத்தியம் காணப்படுவதுடன் 70-80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்பகுதிகளில் அதிக காற்று வீசக்கூடிய நிலை காணப்படுவதனால் மீனவர்களும், கடற்படை சமூகமும் அது தொடர்பில் அவதானமாக செயல்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் வவுனியாவிலும் திருகோணமலையிலும் தொடர் வறட்சியை தொடர்ந்து இன்று அடைமழை பெய்தமையும் குறிப்பிடத்தக்கது.