வவுனியாவில் நேற்று காலை இரண்டாம் குறுக்குத்தெரு சந்தியில் அமைந்துள்ள சுவாமி விபுலானந்தரின் நினைவுச்சிலையில் அன்னாரின் 72ஆவது நினைவு தினம் நினைவுகூரப்பட்டுள்ளது.
நகரசபையினரின் ஏற்பாட்டில் உபநகரபிதா சு.குமாரசுவாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முத்தமிழ் முனிவர் சுவாமி விபுலானந்தரின் வாழ்க்கை நினைவுப் பேருரையை தமிழ்மணி அகளங்கன் நிகழ்த்தினார்.
வவுனியா நகரசபை உறுப்பினர்களான எஸ்.சந்திரகுலசிங்கம், சுமந்திரன், சேனாதிராஜா, பாலபிரசன்னா, கலை இலக்கிய நண்பர்கள் வட்ட தலைவர் தமிழ் மணி அகளங்கன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ். சந்திரகுமார், சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
யாழ்ப்பாணம் – கச்சேரி வீதி மூத்த நாயகர் கோயில் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் இனம் தெரியாத கும்பலொன்று புகுந்து உடமைகளை சேதப்படுத்தி தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 நபர்கள் குறித்த வீட்டுக்குள் புகுந்து கண்ணாடிகளை அடித்து உடைத்துள்ளதுடன், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். மேலதிக விசாரணைகளை குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சியில் நேற்று இரவு இடம்பெற்ற புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் கிளிநொச்சி – அறிவியல்நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தபால் புகையிரதத்துடனேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த இளைஞர்கள் தமது வீட்டுக்கு அருகில் புகையிரத கடவையில் அமர்ந்திருந்து பேசித்துக்கொண்டிருந்ததாகவும், புகையிரதம் வருவதினை அவதானிக்காமையினாலேயே இவ்விபத்து இடம்பெற்றிருக்கலாம் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனினும் இவ்விபத்து தொடர்பில் இதுவரை பொலிஸார் எவ்வித உத்தியோகபூர்வ தகவல்களையும் வழங்கவில்லையென அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களின் சடலங்கள் புகையிரத அதிகாரிகளினால் கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்றுக் கொடுத்த துலஞ்சலீ திசாநாயக்க என்ற மாணவியின் கற்றல் நடவடிக்கைகளுக்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க உதவி பணம் வழங்கி வைத்துள்ளார்.
குறித்த நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
துலஞ்சலீ திசாநாயக்க என்ற மாணவியின் கோரிக்கையின் அடிப்படையிலே குறித்த உதவிப்பணம் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தனது உத்தியோக பூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட நெடுங்கேணி பட்டடைப்பிரிந்தக்குளம் அ.த.க.பாடசாலையினை மூடுவதற்கான உத்தரவினை வவுனியா வடக்கு வலய பணிமனை தெரிவித்திருந்தது. இதனை எதிர்த்து அவ்வூர் மக்களால் கடந்த 15.07.2019 அன்று கண்டன ஆர்ப் பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
இதில் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களான பொ.தேவராசா, ஜேசுதாகர், பார்த்தீபன், தமிழ்செல்வன், கோட்டக்கல்வி அதிகாரி திரு. கிருபானந்தன் ஆகியோர் கலந்து கொண்டு, இப்பாடசாலையினை தற்காலிகமாக மூடப்படுவதனை அவ்வூர் மக்கள் விரும்பாத நிலையில் கல்வி திணைக்கள அதிகாரிகளுக்கு இவ்விடயம் தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டு அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
மேற்படி பாடசாலையில் கடந்த 2017இல் புலமை பரிசில் பரீட்சையில் ஓரேயொரு மாணவன் (கெங்காதரன்.கென்றிக்சன்)தோற்றி 160 புள்ளிகளைப்பெற்று சித்தியடைந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவில் சூ தாட்டத்தில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்த நபர் தமது மனைவியை 60 முறை கொ டூரமாக தா க்கி கொ லை செய்துள்ள சம்பவத்தில் விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
வங்கதேச நாட்டவரான 47 வயது ஜலால் உதின் என்பவரே தற்போது மனைவியை கொ டூரமாக கொ லை செய்த வழக்கில் ஆயுள் தண் டனையை எதிர்நோக்கியுள்ளார். இந்திய உணவகம் ஒன்றில் சமையல் கலைஞராக பணியாற்றி வந்துள்ள ஜலால் உதின் சூதாட்டத்தில் அடிமை என கூறப்படுகிறது.
இதனால் பலமுறை இவருக்கும் 31 வயதான இவரது மனைவி அஸ்மா பேகத்திற்கும் இடையே பண விவகாரம் தொடர்பில் வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. மட்டுமின்றி கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், இது தொடர்பில் அஸ்மா பொலிசாரிடமும் முறையிட்டுள்ளார்.
சூதா ட்டத்திற்காக மனைவியிடம் பணம் கேட்டு தக ராறில் ஈடுபடுவதையே வழக்கமாக கொண்டுள்ள ஜலாலிடம் இருந்து தப்ப, அஸ்மா, தமது கணவர் கேட்கும்போதெல்லாம் பணம் தந்தும் வந்துள்ளார். ஆனால் சூதா ட்டத்தில் பெரும்பாலும் தோல்வியையே ஜலால் சந்தித்துள்ளார்.
அஸ்மா கொ ல்லப்படுவதற்கு முந்தைய நாள் உணவு மற்றும் இதர செலவினங்களுக்காக தமது வங்கி கணக்கில் இருந்து 200 பவுண்டுகள் எடுத்துவர தமது கணவர் ஜலாலை அனுப்பியுள்ளார். ஆனால் அந்த பணத்தை ஜலால் சூதா ட்டத்திற்கு பயன்படுத்திவிட்டு வெறும் 20 பவுண்டுகளில் பொருட்களை வாங்கிவிட்டு குடியிருப்புக்கு திரும்பியுள்ளார்.
இந்த விவகாரத்தை அஸ்மா கண்ணீருடன் தமது உறவினர் ஒருவருக்கு தொலைபேசியில் பகிர்ந்துள்ளார். அடுத்த நாள், வங்கதேசத்தில் உள்ள ஜலாலின் சகோதரர் தொலைபேசியில் அழைத்து அஸ்மாவின் சகோதரரிடம் நடந்தவற்றை கூறி,
அவர்களின் குடியிருப்புக்கு சென்று விசாரித்துவர கோரியுள்ளார். அதன்படி அஸ்மாவின் சகோதரர் ஜலாலின் குடியிருப்புக்கு சென்றுள்ளார். அங்கே அஸ்மா கொ டூரமாக கொல் லப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். அவரது முகம் கத் தியால் பலமுறை சிதைக்கப்பட்டுள்ளது.
அவரது உடலில் எத்தனை முறை கத்தியால் தா க்கப்பட்டுள்ளது என்பதை எண்ணுவதே கடினமாக இருந்தது என மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் ஜலால், தமது மனைவியே தம்மை தாக்கியதாகவும், அவரது தாக்குதலில் இருந்து தப்பிக்க தாம் கடுமையாக முயன்றதாகவும் விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.
இருப்பினும் ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் அனைத்தும் ஜலாலுக்கு எதிராக அமைந்ததால் அவர் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார். அவருக்கான தீர்ப்பு விபரங்கள் வியாழனன்று அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தென் கொரியாவை சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் அமெரிக்காவில் தனித்தனியாக சிறுவயதிலிருந்து வசித்த நிலையில் அவர்கள் சகோதரிகள் என டிஎன்ஏ பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது.
தென் கொரியாவை சேர்ந்தவர் ஆஸ்லே என்ரைட் (31). இவரை அமெரிக்காவை சேர்ந்த மைக்கேல் மற்றும் பவுல்டி தம்பதி கடந்த 1988-ல் தத்தெடுத்து அமெரிக்காவுக்கு அழைத்து வந்தனர். அதே போல தென் கொரியாவை சேர்ந்த இன்னொரு பெண் த்ரிஷா தாம்சன் (30). இவரை கடந்த 1989ஆம் ஆண்டு ராண்டி மற்றும் பவுலா தம்பதி தத்தெடுத்து அமெரிக்காவுக்கு அழைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையின் மூலம் என்ரைட்டும், த்ரிஷாவும் சகோதரிகள் என தெரியவந்தது. இதையடுத்து இருவரும் மகிழ்ச்சியடைந்தனர். இது குறித்து த்ரிஷா கூறுகையில், நானும் என்ரைட்டும் ஒரே ஷாப்பிங் மாலுக்கு பலமுறை சென்றுள்ளோம், ஆனால் ஒருவரையொருவர் பார்த்து கொண்டதில்லை.
இந்நிலையில் கடந்த 2017-ல் கிறிஸ்துமஸ் பரிசாக டிஎன்ஏ பரிசோதனை பெட்டகம் என்ரைட்டுக்கு வந்தது. அந்த பரிசோதனையை செய்த அவர் மெயில் பெட்டியில் பரிசோதனை முடிவை வைத்தார். அதே போல நானும் டிஎன்ஏ பரிசோதனை செய்தேன், அதன் முடிவுகள் வந்த நிலையில் நானும் என்ரைட்டும் சகோதரிகளாக இருக்கலாம் என பரிசோதனை செய்த நிறுவனம் தெரிவித்தது.
பின்னர் நாங்கள் பேஸ்புக் மூலம் நண்பர்களானோம், நாங்கள் இருவரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருப்பது தெளிவாக எங்களுக்கு தெரிந்தது. இதையடுத்து நாங்கள் தத்து கொடுக்கப்பட்ட ஆவணங்களை பார்த்த போது எங்கள் இருவருக்கும் ஒரே தாய் என்பது தெரியவந்தது. இதன்பின்னர் நாங்கள் சகோதரிகள் என்பது உறுதியானது.
இத்தனை ஆண்டுகள் கழித்து நாங்கள் ஒன்று சேர்வோம் என நினைக்கவில்லை, நாங்கள் இணைந்த தருணம் மிகவும் உணர்ச்சிபூர்வமாக இருந்தது என கூறியுள்ளார்.
இந்தியாவில் தன்னைக் கடித்த பாம்பு ஒன்றை பழி வாங்க, அதைக் கடித்தே கொன்ற ஒரு நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். Parvat Gala Baria (60), மக்காச்சோளக் கதிர்களை லொறியில் ஏற்றும் இடத்தின் அருகே நின்று கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது மக்காச்சோளக் கதிர்களுக்குள் இருந்து ஒரு பாம்பு வெளியே வந்திருக்கிறது. அங்கிருந்த மற்றவர்கள் பாம்பைக் கண்டதும் ஓட்டம் பிடிக்க, Baria மட்டும் தான் ஏற்கனவே பாம்புகளைப் பிடித்திருப்பதாகக் கூறி அங்கேயே நின்றுகொண்டிருந்திருக்கிறார்.
அப்போது அந்த பாம்பு அவரது கையிலும், முகத்திலும் கொத்தியிருக்கிறது. அந்த பாம்பை பிடித்த Baria, அதை பழி வாங்குவதற்காக, பல்லால் கடித்தே கொன்றிருக்கிறார். பின்னர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, சில மணி நேரங்களுக்குப் பிறகு அவரது உயிர் பிரி ந்திருக்கிறது. இந்த சம்பவம் குஜராத்திலுள்ள Mahisagar என்ற இடத்தில் நிகழ்ந்துள்ளது.
பிரித்தானியாவில் இருந்து துருக்கி பயணித்த விமானத்தில் இளம்பெண் ஒருவர் ரக ளையில் ஈடுபட்ட சம்பவம் பயணிகளிடையே கடும் ஆத் திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனின் ஸ்டான்ஸ்ட்டில் இருந்து துருக்கிக்கு ஜெட் 2 நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் பயணித்த பெர்க்ஷயர் பகுதியை சேர்ந்த 25 வயதான சோலி ஹைன்ஸ் என்ற பெண், விமானத்தை கடத்தி, அனைவரையும் கொ ல்லப்போவதாக மி ரட்டல் விடுத்துள்ளார்.
இதனையடுத்து, விமானம் நடுவானில் பறந்துக்கொண்டிருந்த போது கதவை திறக்க முயன்றுள்ளார். பின்னர், விமானி அறைக்குள் அதி ரடியாக நுழைய முயன்றுள்ளார்.
மேலும், விமான உதவியாளரை தாக்க, ஆத் திரமடைந்த பயணிகள் ஹைன்ஸை கட்டுப்படுத்தியுள்ளனர். விமானத்தில் ஏற்பட்ட சில பிரச்சனை காரணமாக விமானம் மீண்டும் ஸ்டான்ஸ்ட்டில் தரையிறங்கியுள்ளது. இதனையடுத்து, சோலி ஹைன்ஸை பொலிசார் கை து செய்துள்ளனர்.
சம்பவம் குறித்து ஜெட் 2 நிறுவனம் கூறியதாவது, மிகவும் சீர்குலைக்கும் நடத்தைக்காக 85,000 பவுண்ட் கட்டணம் செலுத்த வேண்டும் என சோலிக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், அவர் விமானத்தில் செய்த செயல்களுக்கு விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும் என்றும், வாழ்நாள் த டை விதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
திருச்சியில் திருமணம் முடிந்த மூன்று நாட்களில் புதுமாப்பிள்ளை வி பத்தில் சிக்கி ப லியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி லால்குடியை சேர்ந்த மோகன் (24) என்பவர் பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார். இவரும் ரமணி (20) என்கிற பெண்ணும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.
இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து, கடந்த 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருமணம் செய்து வைத்தனர். இந்த நிலையில் புதுமண தம்பதியினர் இருவரும் விருந்துக்காக உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கிருந்து மோகனின் நண்பன் ரஞ்சித் என்பவரின் இருசக்கர வாகனத்தில் மூன்று பேரும் வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.
அப்போது அவர்களின் பின் புறமாக வந்துகொண்டிருந்த லாரி திடீரென அவர்கள் மீது மோதியுள்ளது. இதில் ரஞ்சித் மற்றும் மோகன் சம்பவ இடத்திலேயே உயி ரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ரமணிக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் தப்பி ஓடிய லாரி ஓட்டுனரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள ஷிடால்பட்டி எனும் இடத்தில், தனது குழந்தையை காப் பாற்ற ஆற்றில் குதி த்த தாயுடன் மேலும் 3 குழந்தைகளும் சேர்ந்து குதித்து ப லியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வட மாநிலங்களான பீகார், உத்தரப் பிரதேசம், அசாம் ஆகியவற்றில் தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக அசாமின் லட்சுமிபூர், சோனித்பூர், ஜோர்ஹாட் உள்ளிட்ட 30 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதுவரை 67 பேர் அங்கு வெள்ளத்தால் உயி ரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பீகார் மாநிலத்தில் ஒரு துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஷிடால்பட்டி என்ற இடத்தில் ராணி தேவி என்ற பெண், தனது 4 குழந்தைகளுடன் அருகில் உள்ள ஆற்றுக்கு குளிக்கச் சென்றுள்ளார். அப்போது வெள்ளத்தினால் ஆற்றில் நீரோட்டம் அதிகரித்ததால், ஒரு குழந்தை தவ றி விழுந்துள்ளது.
இதனால் பத றிப்போன ராணி தேவி, உடனே ஆற்றுக்குள் குதி த்துள்ளார். தாய் ஆற்றுக்குள் குதிப்பதை பார்த்த மற்ற மூன்று குழந்தைகளும் ஆற்றில் குதித்துள்ளனர். இதனைக் கண்டவர்கள் விரைந்து சென்று அவர்களை காப்பாற்ற முயற்சித்துள்ளனர். ஆனால் ராணி தேவியுடன், ஒரு குழந்தையை மட்டுமே அவர்களால் காப்பாற்ற முடிந்துள்ளது.
மற்ற 3 குழந்தைகளும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில், அடித்துச் செல்லப்பட்ட குழந்தைகளில் அர்ஜூனின் உ டல் மீட் கப்பட்டுள்ளது. இந்த குழந்தையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் அதிக வட்டி வசூலித்த பெண்ணை அடி த்து கொ லை செய்து கிணற்றில் தூக்கி வீசியுள்ள சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அல்போன்ஸ் மேரி, சென்னையில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார். காலையில் வட்டி வசூலிக்கும் வேலையும், மாலையில் இட்லி கடையும் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 15ம் திகதியன்று அல்போன்ஸ் மேரி திடீரென மாய மாகியுள்ளார்.
இதுகுறித்து அவருடைய கணவர் இருதயநாதன் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது, மதுராந்தகம் அருகே உள்ள கிணற்றில் சட லமாக நேற்று கண்டெடுக்கப்பட்டார்.
கொ லைக்கான காரணம் மற்றும் கொ லையாளிகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தேவி – மணி என்கிற தம்பதியினர் அடி த்து கொ லை செய்திருப்பது தெரியவந்தது. இந்த கொ லைக்கு வள்ளி அவரது கணவர் சுரேஷ் ஆகியோரும் உதவி செய்திருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் நான்கு பேரையும் கைது செய்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
வவுனியாவில் பிரபல உணவகம் ஒன்றில் உணவருந்திய பின் பணத்தை செலுத்தி மீதிப்பணம் கேட்ட நபரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்க முயற்சி செய்த சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. வவுனியா, பழைய பேரூந்து நிலையம் முன்பாக அமைந்துள்ள பிரபல சைவ உணவகத்தில் உணவருந்திய நபர் ஒருவருக்கு மீதிப்பணத்திற்கு பதிலாக ‘டொபி’ ஒன்றை கடை உரிமையாளர் வழங்கியுள்ளார்.
குறித்த நபர் ‘டொபியை’ ஏற்க மறுத்து மீதிப்பணத்தை வழங்குமாறு கோரிய நிலையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர் கருத்து தெரிவிக்கையில், குறித்த உணவகத்தில் உணவருந்தியதற்காக 105 ரூபாய் பில் தரப்பட்டது. அதற்காக 120 ரூபாவை கொடுத்த நிலையில் மீதி 15 ரூபாவிற்கு ஒரு 10 ரூபாவும் ஐந்து ரூபாவிற்கு ஒரு 2.00 ரூபா பெறுமதியான ‘டொபியும்’ வழங்கப்பட்டது.
குறித்த டொபியை ஏற்க மறுத்து ஐந்து ரூபா மீதிப் பணத்தை கேட்டபோது சில்லறை நாங்கள் அச்சடிப்பதில்லை என பேசி என்னை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்க முயற்சித்தனர். குறித்த சம்பவத்தின் காரணமாக தான் பெரிதும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும்,
இவ்வாறாக அப்பாவிகளிடம் ஏமாற்றி நூதன முறையில் கொள்ளையிடும் வர்த்தக நிலையங்கள் மீதும், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் பாவனையாளர்கள் அலுவலக அதிகார சபையினர் குறித்த உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன், வவுனியாவில் இது போன்று சரியான சில்லறை வழங்காது ‘டொபி, இனிப்புக்களை’ வழங்கும் வர்த்தக நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் பல வர்த்தக நிறுவனங்களில் ‘குபேரன்’ சிலையை வைத்து அதற்குள் சில்லறைப் பணத்தை போட்டு பகிரங்கமாகவே பதுக்கி வைக்கும் வர்த்தகர்களால் செயற்கையாக சில்லறைத் தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பல பகுதிகளில் நிலவி வரும் சீரற்ற காலநிலையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை 5 பேர் உயி ரிழந்துள்ளனர்.
ஹம்பாந்தோட்டையில் இன்று பிற்பகல் ஏற்பட்ட விபத்தில் தாய் மகள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். சூரியவெவ 11ஆம் மைல்கல் பகுதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தவர்களே இந்த நிலைமைக்குள்ளாகியுள்ளனர். 31 வயதான தாய், அவரது மகள் மற்றும் இன்னுமொரு பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நேற்றைய தினம் நுவரெலியாவில் வீதி ஏற்பட்ட வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட இரட்டை சகோதரிகள் உயிரிழந்தனர். தற்போதும் நாட்டில் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய காலநிலை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக ஆற்று நீரில் இழுத்துச் செல்லப்பட்ட மற்றுமொரு சிறுமியின் சடல மும் மீட்கப்பட்டுள்ளது. அக்கரபத்தனை – டொரிங்டனில் ஆற்றுவெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட இரட்டை சகோதரிகளில் மற்றுமொரு சிறுமியின் சட லம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டொரிங்டன் பாடசாலையில் தரம் 07 கல்வி கற்கும் 12 வயதுடைய இரட்டை சகோதரிகளான மதியழகன் லெட்சுமி, மதியழகன் சங்கீதா ஆகிய மாணவிகளே இவ்வாறு உயிரிழந்தனர். பாடசாலை விட்டு வீட்டுக்கு செல்லும் வழியில் வெள்ளநீரில் இழுத்துக் செல்லப்பட்டனர்.
இந்த நிலையில் குறித்த மாணவியின் சட லம் கொத்மலை நீர்தேகத்திற்கு நீரேந்தி செல்லும் டொரிங்கடன் தோட்ட கால்வாய் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து சுமார் 300 அடி தூரத்திலேயே குறித்த மாணவியின் சட லம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மலையகத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா சிதம்பரபுரம் ஈழத்து பழனி முருகன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் கடந்த 09.07.2019 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 17.07.2019 அன்று தேர்த்திருவிழா இடம்பெற்று 18.07.2019 அன்று தீர்த்தோற்சவதுடன் நிறைவுபெற்றது.