லட்சாதிபதியாக நினைத்து வீட்டு வேலைக்கார பெண் செய்த செயல் : விசா ரணையில் திடு க்கிடும் தகவல்!!

வேலைக்கார பெண் செய்த செயல்

தமிழகத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக லட்சாதிபதியாக நினைத்த பெண், வீட்டில் வேலை பார்த்த குழந்தையையே கட த்தி நாடகம் ஆடியுள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சென்னை செனாய் நகரைச் சேர்ந்தவர் அருள்ராஜ். சாப்ட்வேர் இன்ஜினீயரான இவருக்கு நந்தினி என்ற மனைவியும், அன்விகா என்ற மகளும் உள்ளனர். இதில் நந்தினி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இவர்களின் வீட்டில் வேலை பார்க்கும் விராலிமலையைச் சேர்ந்த அம்பிகா என்ற பெண்ணும், மகள் அன்விகாவை, திடீரென்று காரில் வந்த மர்பநபர்கள் கட த்திச் சென்றுள்ளனர்.
இதனால் அதி ர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக இது குறித்து காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்க, பொலிசார் குழந்தை மற்றும் வேலைக்கார பெண் கடத்தப்பட்ட இடத்தில் இருந்த சிசிடிவி கமெராக்களை ஆராய்ந்து பார்த்துள்ளனர்.

அப்போது அந்த காரின் எண்ணைக் கொண்டு டிராக் செய்துள்ளனர். இதற்கிடையில் வேலைக்கார பெண் வைத்திருந்த மொபைல் போனிலிருந்து பேசிய கட த்தலில் ஈடுபட்ட நபர் 60 லட்சம் ரூபாய் கொடுத்தால், உன் மகளையும், வேலைக்கார பெண்ணையும் விட்டுவிடுகிறோம்.

அதை விட்டு விட்டு பொலிசுக்கு சென்றால், மகளை கொ லை செய்துவிடுவோம் என்று மி ரட்ட, அவர்கள் பதற் றமடைந்துள்ளனர். இருப்பினும் கட த்தல்காரன் மிர ட்டிய விவகாரத்தை பொலிசாரிடம் கூறியதால், அந்த மொபைல் போனில் சிக்னலை பொலிசார் பின் தொடர்ந்துள்ளனர். அப்போது முதலில் கோவளத்தில் இருந்த அந்த சிக்னல், அப்படியே மெல்ல மெல்ல நகர்ந்து புழல் நோக்கி வருவதைக் கண்ட பொலிசார், அங்கு ஒரு டீம்மை அனுப்பியுள்ளனர்.

இதையடுத்து அங்கு கிடைத்த செல்போன் சிக்னலை வைத்து பொலிசார் வாலிபரை பிடித்து விசாரி த்துள்ளனர். அந்த நபர் தன்னுடைய பெயர் முகமது கலிபுல்லா சேட் எனவும், இதற்கு மூளையாக செயல்பட்டதே வேலைக்கார பெண் அம்பிகா தான் என்ற திடு க்கிடும் தகவலை கூறியுள்ளார். அதன் பின் இவர்கள் இருவர் பற்றியும் பொலிசார் விசாரித்த போது, அம்பிகா, இணையதளத்தில் வீட்டு வேலைக்காகப் பதிவுசெய்துள்ளார்.

அந்த நேரத்தில் தான்அருள்ராஜ், அவரை கடந்த 25 நாள்களுக்கு முன் வீட்டு வேலைக்குச் சேர்த்துள்ளார். வீட்டிலேயே தங்கியிருந்த அம்பிகா, அருள்ராஜ்-நந்தினி சொகுசாக வாழ்வதைப் பார்த்து அதே போன்ற சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார்.

இதற்கு முன் முகப்பேரில் இருக்கும் உணவகம் ஒன்றில் சில ஆண்டுகல் வேலை பார்த்த போது, லிபுல்லா சேட்டுவின் பழக்கம் கிடைக்க, அவரை இந்த கட த்தலுக்கு பயன்படுத்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

காதலனின் தாயை மரத்தில் கட்டி வைத்து அடித்த காதலியின் தந்தை!!

கடலூர் மாவட்டத்தில் காதல் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் காதலனின் தாயை, காதலியின் தந்தை மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூரை சேர்ந்த பொன்னுச்சாமி – செல்வி தம்பதியினருக்கு 25 வயதில் ஒரு மகன் உள்ளார். இவரும் அதே பகுதியை சேர்ந்த கொளஞ்சி (60) என்பவரின் மகளும் காதலித்து வந்துள்ளனர்.

இது பெண் வீட்டாருக்கு தெரியவந்ததை அடுத்து, வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துள்ளனர். இதுபிடிக்காத காதல் ஜோடியினர் இருவரும் கடந்த மாதம் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதனால் இரு வீட்டாருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் செல்வி வீட்டிற்கு வந்த கொளஞ்சி, மகள் எங்கே எனக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளார்.

அதன்பிறகு செல்வியை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளார். இதனை பார்த்த உள்ளூர் மக்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பெற்ற செல்வி, பொலிஸாரிடம் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் தற்போது பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சக்கணக்கில் சம்பாதிக்கப்போகும் தமிழ்ப் பெண் : வேண்டாமுக்கு கிடைத்த மிகப் பெரிய கெளரவம்!!

தமிழ்ப் பெண்

தமிழகத்தில் பெற்றோரால் வேண்டாம் என்று பெயர் வைக்கப்பட்ட மாணவி இன்று வெளிநாட்டி கம்பெனியால் லட்சகணக்கில் சம்பாதிக்கவுள்ள நிலையில், அவரை மாவட்ட ஆட்சியர் அழைத்து கெளரவித்துள்ளார்.

திருத்தணியை அடுத்த நாராயணபுரத்தைச் சேர்ந்த தம்பதி அசோகன் – கௌரி. இவர்களுக்கு அடுத்தடுத்து இரண்டு பெண் குழந்தைகள் பிறந்ததால், அடுத்து பிறக்கப்போகும் குழந்தையாவது மூன்றாவது குழந்தையாக பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டனர்.

ஆனால் மூன்றாவது குழந்தையும் பெண்ணாகவே பிறந்ததால், அந்த குழந்தைக்கு வேண்டாம் என்று பெயர் வைத்தனர். அதாவது இனி பெண் குழந்தை வேண்டாம் என்பதற்காகவே அவர்கள் அந்த குழந்தைக்கு இப்படி ஒரு பெயரை வைத்துள்ளனர்.

இந்த பெயரை வைத்து அவரை பலரும் கிண்ல் செய்து வந்துள்ளனர். ஆனால் அவர் இதை எல்லாம் கண்டு கொள்ளாமல் கேலில், கிண்டல்கள் அனைத்தையும் தாண்டி கல்வியில் தன்னுடைய திருமைபை நிரூபித்தார். தற்போது கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வரும் வேண்டாமை, ஜப்பான் நாட்டு நிறுவனம் ஒன்று ஆண்டிற்கு 22 லட்சம் ரூபாய் சம்பளம் தருவதாக கூறி வேலைக்கு எடுத்துள்ளது.

பெற்றோரால் வேண்டாம் என்று கூறப்பட்ட அந்த குழந்தை தான் தற்போது பெற்றோருக்கு வேண்டும்..வேண்டும் என்றளவிற்கு சம்பாதித்து கொடுக்கவுள்ளார். இது குறித்த தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாக, அவரை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி அழைத்து பாராட்டியுள்ளார்.

அதோடுமட்டுமின்றி பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற சிறப்பு திட்டத்திற்கு மாணவி வேண்டாமை தூதுவராக நியமித்தும் ஆட்சியர் மகேஸ்வரி கெளரவித்துள்ளார்.

வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தம்பதி : அதிகாலை 4 மணிக்கு நடந்த விபரீதம்!!

உறங்கிக்கொண்டிருந்த தம்பதி

தமிழகத்தில் குழந்தையுடன் ரயில் முன்னர் பா ய்ந்து இளம் தாய் த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூரை சேர்ந்தவர் செல்வம் . இவரது மனைவி கோமதி, தம்பதிக்கு நாகஸ்ரீ (7), நவிஸ்ரீ (3) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன்- மனைவி இடையே குடும்ப பிரச்சனை தொடர்பாக அடிக்கடி தக ராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதில் மனமுடைந்த கோமதி த ற்கொ லை செய்ய முடிவு செய்துள்ளார். இதைத் தொடர்ந்து நேற்று இரவு வீட்டில் நான்கு பேரும் தூங்கி கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 4 மணி அளவில் கோமதி தனது மகள் நவிஸ்ரீயுடன் வீட்டை விட்டு வெளியேறி ரெயில் தண்டவாளம் பகுதிக்கு சென்று சென்னையில் இருந்து மன்னார்குடி வந்த மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய் ந்துள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த கோமதியும், நவிஸ்ரீயும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இற ந்தனர். இது பற்றி தகவலறிந்த பொலிசார் இருவரின் உட ல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகிறார்கள்.

சொந்த மகனின் சட லத்திற்கு ஒரு இரவு முழுவதும் காவல் இருந்த தந்தை : அம்பலமான கொடூர கொ லை!!

காவல் இருந்த தந்தை

இந்தியாவிம் மராட்டிய மாநிலத்தில் தொடர்ந்து தொ ல்லை அளித்து வந்த மகனை கொடூ ரமாக கொ லை செய்த வழக்கில் தந்தை ஒருவர் பொலிசாரிடம் ச ரண் அடைந்துள்ளார். ஒரு இரவு முழுவதும் மகனின் சட லத்திற்கு காவல் இருந்த பின்னரே 71 வயதான தாமோதர் பலாபுரே தமது குடும்பத்தாருக்கு நடந்த சம்பவத்தை தெரியப்படுத்தியுள்ளார்.

மராட்டிய மாநிலம் நாக்பூரில் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. மது போ தையில் கலாட்டாவில் ஏற்பட்ட 38 வயதான சஞ்சய் என்பவரே சொந்த தந்தையால் கொல் லப்பட்டவர். இருசக்கரவாகனம் ஒன்று வாங்க 25,000 ரூபாய் தர வேண்டும் என கூறியே சஞ்சய் குடும்பத்தாருடன் தக ராறில் ஈடுபட்டுள்ளார்.

பணம் தர மறுத்தால் பெற்றோரை கொ லை செய்துவிடுவதாகவும் மிர ட்டியுள்ளார். இதனிடையே மகன் தூக்கத்தில் இருந்த வேளையில் தாமோதர் வாளால் கழு த்தில் வெட் டியுள்ளார். பின்னர் கொ ல்லப்பட்ட மகனின் சடலத்தின் அருகே விடியும்வரை காவல் இருந்துள்ளார். பகலில் மருமகனை அழைத்து தகவல் தெரிவித்ததுடன், பொலிசாருக்கும் தகவல் அளித்துள்ளார்.

மர வேலை செய்துவரும் தாமோதர் மற்றும் சஞ்சய், கிடைக்கும் பணம் முழுவதும் ம துவுக்கு செலவிட்டு வருவதில் மகனுடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். மட்டுமின்றி, தமது பண தேவைக்காக பெற்றோரை தொடர்ந்து தொல்லைப்படுத்தியும் வந்துள்ளார்.
மனைவியின் தந்தை கொ ல்லப்பட்ட வழக்கில் சில காலம் சஞ்சய் சிறையிலும் இருந்து வந்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் செல்ல முயற்சித்த சாரதி பொலிஸில் சரண்!!

சாரதி பொலிஸில் சரண்

மத்திய மாகாணம் – திம்புள்ள பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் காயங்களுக்குள்ளான நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கெப் ரக வாகனம் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியமையினால் இவ்விபத்து நேர்ந்துள்ளது.

கெப் ரக வாகன சாரதி குறித்த முச்சக்கரவண்டியை மோதி விட்டு நிறுத்தாமல் சென்றுள்ளதாகவும், பின்னர் கெப் ரக வாகன சாரதியை பிரதேசவாசிகள் துரத்திப் பிடிக்க முற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, குறித்த கெப் ரக வாகனத்தின் சாரதி நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார். பின்னர் அவரின் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்ட பொலிஸார் சாரதியை திம்புள்ள பத்தனை பொலிஸாருக்கு ஒப்படைத்துள்ளனர். இவரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையை விட்டு வெளியேறும் லசித் மலிங்க!!

லசித் மலிங்க

இலங்கை கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேற தயாராகுவதாக கிரிக்கெட் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. உலக கிண்ண சுற்று பயணத்தின் கீழ் தனது குடும்ப உறுப்பினர்களுடன் அவுஸ்திரேலியா சென்ற லசித் மாலிங்க அங்கு சில நண்பர்களை சந்தித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, இந்த மாத இறுதி வாரத்தில் ஆரம்பிக்கப்படவிருந்த பங்களாதேஷ் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் விளையாடிய பின்னர் லசித் மாலிங்க ஒரு நாள் போட்டிகளுக்கு ஓய்வு வழங்க தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அவுஸ்திரேலியாவில் இருந்து தெரிவு குழு தலைவர் அனந்த டி மல் என்பவருக்கு அழைப்பேற்படுத்தி தான் பங்களாதேஷ் போட்டியில் கலந்து கொள்வதற்காக 22ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக அறிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் குடியேற செல்லும் லசித் மாலிங்க அதன் பயிற்சியாளராக செயற்படுவதற்கு ஆயத்தங்கள் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

யாழில் பொலிஸாரினால் சுட் டுக் கொ ல்லப்பட்ட இளைஞன் யார்? முழுமையான விபரம்!!

யாழில் பொலிஸாரினால்..

யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு சுட் டுக்கொ ல்லப்பட்ட இளைஞன் யார் என்பது தொடர்பில் அவரது உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர். நேற்றிரவு மானிப்பாயில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப் பாக்கி சூட் டில் இளைஞன் ஒருவர் உயி ரிழந்தார். கொடிகாமம் கச்சாயைச் சேர்ந்த 23 வயதான செல்வரத்தினம் கவிகஜன் என்ற இளைஞனே உயி ரிழந்தார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சட லத்தை இன்று அதிகாலையில் அவரது உறவினர்கள் பார்வையிட்டனர். இதன்போது குறித்த இளைஞன் யார் என்பது தொடர்பில் உறுதி செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆ வா குழுவை சேர்ந்த ஆறு பேர் மானிப்பாயிலுள்ள வீடொன்றின் மீது தாக் குதல் நடத்த சென்ற போது பொலி ஸார் சோத னை செய்ய முயன்றுள்ளனர். இதன்போது இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட மு றுகல் நிலையை அடுத்து பொலிஸார் துப் பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். இந்தச் சம்பவம் நேற்றிரவு 8.40 மணியளவில் இடம்பெற்றது.

இவ்வாறு உயி ரிழந்தவர் ஆவா குழுவைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கும் பொலிஸார் பொலிஸார் சம்பவஇடத்திலிருந்து 2 வாள்களையும் மீட்டிருந்தனர். அத்துடன், உயி ரிழந்தவர் பயணித்த மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகடு போலியானதுஎன்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதில் இளைஞன் ஒருவர் உயி ரிழந்ததுடன் இன்னொருவர் காயம் அடைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் படுகாயம்!!

இளைஞன் படுகாயம்

வவுனியா காமினி பாடசாலைக்கு முன்பாக இன்று காலை 8 மணியளவில் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ் விபத்து சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

காமினி பாடசாலையிலிருந்து மன்னார் பிரதான வீதிக்கு செல்ல முற்பட்ட இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு உரித்துடைய வாகனத்துடன் குருமன்காட்டிலிருந்து வவுனியா நகர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற 23 வயதுடைய இளைஞனே விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இதன் காரணமாக தூக்கி வீசப்பட்ட இளைஞன் படுகாயமடைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளும் கடும் சேதத்திற்குள்ளாகியுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் புகையிரதத்துடன் மோதுண்டு யானை பலி!!

யானை பலி

வவுனியா புளியங்குளம் பகுதியில் தபால் புகையிரதத்துடன் மோதுண்டு யானை பலியாகியுள்ளது. இன்று (20.07.2019) நான்கு மணியளவில் கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற தபால் புகையிரதமே குறித்த யானையில் மோதுன்டுள்ளது.

இப்பகுதியில் இவ் யானை தினமும் புகையிரத கடவையை கடந்து வருவதாக தெரிவிக்கின்ற போதும் குறித்த பகுதியில் யானை தொடர்பான சமிக்கைகள் இல்லாத போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதேவேளை இம்மாதத்தில் தாண்டிக்குளம் பகுதியிலும், மூனாமடு பகுதியிலும் 15க்கு மேற்பட்ட மாடுகளும் புகையிரதத்துடன் மோதி பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா ஊடக அமையத்தின் அங்குரார்ப்பன நிகழ்வு!!

வவுனியா ஊடகவியலாளர்களின் நலன்காக்கும் ஊடக அமையம் PRESS CLUB அங்குரார்ப்பன ஆரம்ப நிகழ்வு இன்று தனியார் பல்கலைக்கழக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்களின் நலன்கருதியும், இணைய ஊடகவியலாளர்களுடன் ஏனைய ஊடகவியலாளர்களையும் இணைத்துக்கொண்டு (VAVUNIYA PRESS CLUB) வவுனியா ஊடக அமையம் செயற்படுவதற்கு அங்குரார்ப்பனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த ஊடக அமையத்தின் புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றதுடன், நிர்வாக உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் விடயங்களில் கவனமெடுத்து செயற்படவும், ஏனைய வடகிழக்கிலுள்ள ஊடக அமைப்பினருடன் இணைந்து பயிற்சி நெறிகளை மேற்கொண்டு பணியாற்றவும், ஊடகவியலாளர்கள் தமது பொறுப்புக்களை சரியான முறையில் மேற்கொள்ளவும் இந்த நிர்வாகக்கூட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சற்றுமுன்னர் யாழில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் பலி!!

துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் பலி

சற்றுமுன்னர் யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கி சூட்டிற்கு இலக்கான இளைஞன் சம்பவ இடத்திலேயே உயி ரிழந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். உயி ரிழந்த இளைஞனின் சடலம் தற்போது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞன் ஆவா குழுவினை சேர்ந்தவராக இருக்கலாமெனவும், பொலிஸார் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையில் கறுப்பு நிற துணியால் முகத்தை மூடியவாறு சென்ற போதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பேஸ்புக் ஊடாக இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து : அரசாங்கம் எச்சரிக்கை!!

அரசாங்கம் எச்சரிக்கை

இலங்கையில் இணையம் வழியாக நடத்தி செல்லப்படும் நிதி சேவை ஊடாக பணம் பெற்றுக்கொள்வதற்கு பலர் ஆர்வம் காட்டி வருவதாக தெரிய வந்துள்ளது. இந்த செயற்பாடு குறித்து இலங்கை கணினி பிரிவு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பேஸ்புக் ஊடாக குறைந்த வட்டிக்கு கடன் வழங்கும் நிறுவனம் ஒன்று இலங்கையர்களை ஏமாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் இந்த நிறுவனம் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி பிரிவு பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த நாட்களில் இயங்கும் flashcashloan.lk என்ற நிறுவனத்தினால் 2 வீதம் வரையிலான குறைந்த வட்டிக்கு கடன் வழங்குவதாக பேஸ்புக் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பேஸ்புக் பக்கம் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளமையினால் குறித்த பேஸ்புக் பக்கத்தை முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறைந்த வட்டியின் கீழ் கடன் வழங்குவதாக கூறி பொது மக்களிடம் பண மோசடி செய்வதற்காக இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் ரயில் விபத்தில் படுகாயமடைந்த முதியவர் பலி : இனம் காண உதவுமாறு வேண்டுகோள்!!

இனம் காண உதவுமாறு வேண்டுகோள்

வவுனியா பொது வைத்தியசாலையில் புகையிரதக்கடவையில் காயமடைந்த முதியவர் ஒருவர் கடந்த 17ஆம் திகதி வைத்தியசாலையின் விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியா ஈரப்பெரியகுளம் புகையிரதக்கடவையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 60 தொடக்கம் 65வயது மதிக்கத்தக்க வயோதிபரை இனங்காணுமாறு வைத்தியசாலை நிர்வாகத்தினர் நேற்று முந்தினம் அறிவித்துள்ளனர்.

எனினும் இன்றுவரையில் குறித்த வயோதிபரின் விபரங்கள் எவையும் கிடைக்கவில்லை நேற்று இரவு சிகிச்சை பலனின்றி வயோதிபர் உயிரிழந்துள்ளதாகவும் இவர் யார் என்பது குறித்து எவரும் உரிமை கோர முன்வரவில்லை. தற்போது சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. உரியவர்கள் வந்து பெற்றுக்கொள்ளுமாறு வைத்தியசாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் காணப்பட்ட பொதியால் பரபரப்பு!!

பொதியால் பரபரப்பு

வவுனியா, பழைய பேரூந்து நிலையத்தில் காணப்பட்ட பொதி ஒன்றினால் பதற்றநிலை காணப்பட்டதுடன், விசேட அதிரடிப் படையினர் வருகை தந்து சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர். இன்று மாலை 7 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, பழைய பேரூந்து நிலையத்தில் உள்ள பேரூந்து ஏறுமிடத்தில் பொலித்தீன் ஒன்றினால் முழுமையாக சுற்றப்பட்ட பொதி ஒன்று நீண்ட நேரமாக காணப்பட்டுள்ளது. குறித்த பொதி தொடர்பில் அருகில் இருந்த வர்த்தகர்கள் விசாரித்த நிலையில் எவரும் உரிமை கோராமையால் வவுனியா பொலிசாருக்கு தெரியப்படுத்தினர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா பொலிசார் குறித்த பொதி தொடர்பில சந்தேகம் அடைந்து விசேட அதிரடிப் படையினருக்கு தெரியப்படுத்தியிருந்தனர். அங்கு வருகை தந்த இராணுவத்தினர் மற்றும் விசேட அதிடிப்படையினர் குறித்த பொதியை மீட்டதுடன், விசேட அதிரடிப்படையினர் அதனை முழுமையாக சோதனையிட்டனர்.

இதன்போது குறித்த பொதியில் ஆடைகள் காணப்பட்டதுடன் அவை வெளிநாடு ஒன்றில் இருந்து வந்தவரால் கொண்டு வந்திருந்தமைகான ஆதாரங்கள் காணப்பட்டன. குறித்த பொதியானது வெளிநாடு ஒன்றில் இருந்து வருகை தந்த சரவணன் ஆரணி என்பருடையது என தெரியவந்துள்ளது.

உரிமையாளர் இல்லாமையால் சோதனையின் பின் குறித்த பொதி வவுனியா பொலிசாரினால் எடுத்துச் செல்லப்பட்டது. இதனால் வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் சுமார் அரைமணி நேரம் பதற்றமான நிலமை காணப்பட்டது.

இதேவேளை, குறித்த பொதியை தவறவிட்டு சென்றவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஆதாரத்தினை காட்டி பெற்றுக் கொள்ள முடியும் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியாவில் நிலவும் வறட்சியினால் 120 ஏக்கர் நெற்செய்கை அழிவு!!

வறட்சி

வவுனியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி காலநிலை காரணமாக 89 குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் 120 ஏக்கர் நெற்செய்கை காணிகள் முற்றாக அழிவடைந்துள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார். அத்துடன் 49 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது எனவும் கூறியுள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியின் பாதிப்புக்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர், நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலை வவுனியா மாவட்டத்திலும் தொடர்கிறது. வவுனியா மாவட்டத்தில் இவ்வறட்சி காரணமாக 89 குடும்பங்களைச் சேர்ந்த 120 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளது.

இந்த வறட்சிக் காலநிலை இன்னும் தொடர்ந்தால் பயிர்செய்கை பாதிப்புக்கள் இன்னும் அதிகரிக்கக் கூடிய நிலை ஏற்படும். ஓமந்தை, பம்பைமடு, கோவில்குளம் போன்ற கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட நெற்செய்கை நிலங்களே இவ்வாறு அழிவடைந்துள்ளன.

இராசேந்திரங்குளத்தின் கீழான 60 ஏக்கர் நெற்செய்கை அழிவடைவதைத் தடுக்கும் நோக்கில் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஊடாகவும், மத்திய நீர்பாசன திணைக்களம் ஊடாகவும் நீர்ப் பம்பிகள் மூலம் நீர் விநியோகிக்கப்படுகிறது.

இதுதவிர, வவுனியா வடக்கு ஊஞ்சல் கட்டி, மருதோடை ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் 49 குடும்பங்களைச் சோந்த 140 பேர் பாதிப்படைந்துள்ளனர். இவர்களுக்கான குடிநீர் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துடன் இணைந்து வழங்கப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.