அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருக்கும் சுமார் 7500க்கும் மேற்பட்டவர்களின் அகதி விண்ணப்பங்கள், ஐந்து வருடங்களாக முடிவெடுக்கப்படாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதிக்கு முன்னர் படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வந்த சுமார் 30 ஆயிரம் அகதிகளின் மனித உரிமைகள் குறித்த தனது அறிக்கையிலேயே ஆணைக்குழு மேற்கண்ட தகவலை தெரிவித்துள்ளது.
குறித்த 30 ஆயிரம் பேரில் 22,280 பேரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அவர்களுக்கான பதில் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய 7526 பேரின் விண்ணப்பங்களே இவ்வாறு முடிவெடுக்கப்படாத நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீண்ட காலமாக அகதி விண்ணப்பங்கள் குறித்து முடிவெடுக்கப்படாமலும் வதிவிட உரிமைக்கான விசா அனுமதிகள் வழங்கப்படாமலும் வாழ்ந்துவருகின்ற மக்கள் குறித்து பொதுமக்களின் கரிசனை மிகக்குறைவாக உள்ளது.
இந்த அகதிகளுக்கான அரச உதவிகள் மற்றும் மருத்துவ அனுசரணைகளும்கூட குறைக்கப்பட்டிருக்கின்றன. இவர்களது விசா நிலை காரணமாக வேலை எடுத்துக்கொள்வதும் கடினமாக இருக்கிறது.
இவர்களிடையே காணப்படும் மொழிப்பிரச்சினையும்கூட தொழில் முனைப்புக்கு தடையாக உள்ளது. இத்தகையதொரு வறிய நிலையில் இந்த அகதிகளின் மன உளைச்சல் மேலும் அதிகமாகியிருக்கின்றது. இதன் விளைவாக இந்த அகதிகள் தற்கொலை ஆபத்தையும் எதிர்நோக்கியுள்ளனர். கடந்த 2014ம் ஆண்டு முதல் இவ்வாறான ஒன்பது அகதிகள் த ற்கொ லை செய்துகொண்டுள்ளனர். இது இந்த அகதிகளின் நம்பிக்கையீனத்தின் உச்சமாகும்.
ஆனால், குறிப்பிட்ட அகதிகளின் தாய்நாட்டில் நிலவும் சூழல் முன்பைவிட தற்போது மாற்றமடைந்திருப்பதால், இவர்களது விண்ணப்பங்களை பரிசீலிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியிருப்பதாக உள்துறை அமைச்சு தனது பதிலில் குறிப்பிட்டுள்ளது.
உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ள வட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் செயலிகளை பயன்படுத்தும் பயனாளர்களுக்கு சைபர் பாதுகாப்பு நிறுவனம் அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அந்த செயலிகள் ஊடாக ஆவணங்கள் பகிரும் போது முழுமையான பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு சைபர் பாதுகாப்பு நிறுவனமான சிமென்டெக் தெரிவித்துள்ளது.
மீடியா பைல் ஜெகின் (Media files jackin) என்ற பாதுகாப்பற்ற கோளாறு ஒன்று இந்த செயலிகளில் உள்ளதாகவும், அதன் மூலம் இந்த செயலிகளை பயன்படுத்துபவர்களின் அனுமதியின்றி மீடியா ஆவணங்களுக்குள் இணைந்து விடுகின்றன. அது தேவையற்ற முறையில் கையடக்க தொலைபேசியில் இயங்குவதாகவும், சிமென்டெக் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் தனிப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள், ஆவணங்கள், குரல் பதிவு மற்றும் முக்கிய தகவல்களை தவறாக பயன்படும் கும்பல்களுக்கு இலகுவாக பெற்றுக்கொள்ள கூடிய வகையில் செயற்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை – அனுராதபுரம் பிரதான வீதி பம்மதவாச்சி பகுதியில் காரொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. இவ்விபத்து இன்று (17.07) பிற்பகல் 3.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை பகுதியிலிருந்து வேகமாக சென்று கொண்டிருந்த கார் மாட்டுடன் மோதியதனாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
காரில் வருகைதந்திருந்த எவருக்கும் சேதம் ஏற்படவில்லை எனவும், காருக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
மத்துகம – ஹொரன பிரதான வீதியில் தெம்புவன நார்த்துபான பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயி ரிழந்துள்ளார். உயி ரிழந்தவர் பிலியந்தலை மடாபான பகுதியில் வசிக்கும் 28 வயதுடைய நபர் என காவற்துறை தெரிவித்துள்ளது.
மற்றொரு உந்துருளியை முந்திசெல்ல முற்பட்ட பொழுது சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபரை வைத்தியசாலையில் அனுமதித்த பொழுது அவர் உயி ரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து இடம்பெற்ற பொழுது மற்றொரு உந்துருளியில் பயணித்த இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தெம்புவன காவல் துறையினர் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
“சில நாள் ரொம்ப வருத்தமாயிடுச்சுனா, அன்னிக்கு எங்கப்பாகிட்டே போயி சண்டை போடுவேன். அவரும் ‘தப்பு பண்ணிட்டேன்மா’ என்று கலங்குவார்.” அந்தப் பொறியியல் கல்லூரியில் அன்றைக்கு ஃபிரெஷ்ஷர் டே. அதாவது, முதல் வருட மாணவர்களின் கல்லூரி முதல் நாள் அது. அந்தக் கல்லூரியின் பிரின்சிபால் டாக்டர் ஜே. எம். மதனா மாணவர்களிடம் உரையாடிக்கொண்டிருக்கையில்,
யதேச்சையாக ஒரு மாணவியிடம் ‘உன் பெயர் என்ன; உன் டிபார்ட்மென்ட் என்னம்மா’ என்று கேட்கிறார். ‘எலெக்ட்ரானிக் அண்ட் கம்யூனிக்கேஷன் டிபார்ட்மென்ட்’ என்று தன் துறையின் பெயரை சத்தமாகச் சொன்ன அந்த மாணவி, தன் பெயரை மட்டும் வாய்க்குள்ளேயே முணுமுணுப்பதுபோல சொல்கிறார். அந்த மாணவி சொன்னது காதில் சரியாக விழாததால், பிரின்சிபால் மறுபடியும் பெயரைக் கேட்டுள்ளார்.
அந்த மாணவி மறுபடியும் அதே தொனியிலேயே தன் பெயரைச் சொல்ல, இந்த முறை அந்த மாணவியின் அருகில் இருந்த மற்ற மாணவிகள் ‘வேண்டாம்’ என்று ஒரே குரலில் சத்தமாகச் சொல்கிறார்கள். ‘என்னது ‘வேண்டாம்’ என்று ஒரு பெயரா ?’ என்று வியப்போடு கேட்கிறார்.
அன்றைக்கு அந்தக் கல்லூரியே அந்த மாணவியின் பெயரைக் கேட்டு அதிர்ந்துபோய் நிற்கிறது. ‘வேண்டாம்’ மட்டும் அமைதியாக நின்றுக்கொண்டிருக்கிறார். ஆனால், அந்த இளம்பெண்ணின் முகம் அவமானத்தில் சிவந்து, கண்ணோரங்களில் நீர்த்துளிகள் உதிர்ந்துவிடட்டுமா என எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தன.
”என் பேரை முதல் தடவையா கேட்கிற எல்லோரும் இப்படித்தான் ரியாக்ட் பண்ணுவாங்கன்னு தெரிஞ்சிருந்தாலும், அந்த அனுபவத்தை ஒவ்வொரு தடவை கடக்கிறப்போவும் நான் தடுமாறிப்போயிடுறேன் மேம்” என்று பேச ஆரம்பிக்கிற வேண்டாம், சென்னை குன்றத்தூரில் இருக்கிற சென்னை இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் தற்போது ஃபைனல் இயர் எலெக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேஷன் படித்துக்கொண்டிருக்கிறார்.
தற்போது, இவரைப் பற்றி நாம் பேசுவதற்குக் காரணம் இவருடைய பெயர் மட்டுமல்ல, கேம்பஸ் இன்டர்வியூவில் ஜப்பானிய கம்பெனி ஒன்றுக்கு செலெக்டாகியிருப்பதும், வருடம் 22 லட்சம் ரூபாய் இவருடைய பேக்கேஜ் என்பதும்தான் மிக முக்கியக் காரணங்கள்.
”திருத்தணிக்குப் பக்கத்துல இருக்குற நாராயணபுரம்தான் என் சொந்த ஊரு. எங்க வீட்ல நாங்க நாலு பொண்ணுங்க. நான் அதுல மூணாவது பொண்ணு. மூணாவதும் பொண்ணா பொறந்திடுச்சுனு ஊருக்குள்ள என் அம்மாவையும் அப்பாவையும் எல்லோரும் கேலி பண்ணியிருக்காங்க.
அதனால, எங்க தாத்தாவும் பாட்டியும், ‘இந்தப் பொண்ணுக்கு வேண்டாம்னு பேர் வைச்சுடுறா, அப்பதான் அடுத்து பிறக்கிறதாவது பையனா பொறக்கும்’ன்னு எங்கப்பாகிட்டே சொல்லியிருக்காங்க. அவரும் வேற வழி தெரியாம, அவங்க சொன்னபடியே எனக்கு பேர் வைச்சுட்டாரு. ஆனா, எனக்கடுத்து பொறந்ததும் தங்கச்சிதான்.
அக்காங்களுக்கு ஷன்மதி, யுவராணி, தங்கச்சிக்கு சரண்யான்னு அழகழகா பேர் வைச்ச என் அப்பா அம்மா, எனக்கு மட்டும் இப்படி பேர் வைச்சுட்டதால ஸ்கூல்ல, காலேஜ்ல, வெளியே போற வர்ற இடங்கள்னு எங்கபார்த்தாலும் என் பேராலேயே நிறைய கேலி, கிண்டலை சந்திருச்சிருக்கேன். சில நாள் ரொம்ப வருத்தமாயிடுச்சுனா,
அன்னிக்கு எங்கப்பாகிட்டே போயி சண்டைபோடுவேன். அவரும் ‘தப்புப் பண்ணிட்டேன்மா’ என்று கலங்குவார்” என்கிற வேண்டாமுக்கு, தன்னுடைய பெயர் விஷயத்தைத் தவிர, தன் அப்பாவைப் பற்றி பெருமிதப்பட்டுக் கொள்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன.
ரெண்டாவது பி.எஸ்சி படிச்சுட்டு கவர்ன்மென்ட் வேலைக்கு முயற்சி பண்ணிட்டு இருக்கா. அடுத்து நானு, இன்ஜினீயரிங் படிச்சுக்கிட்டிருக்கேன். கடைசி தங்கையும் பி.எஸ்சி ஃபர்ஸ்ட் இயர் படிச்சுக்கிட்டிருக்கா. ஊர்ல எல்லோரும் எங்கப்பாகிட்டே, ‘பொண்ணுங்களை எதுக்கு படிக்கவைக்கிறே, அதுங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு வேற வீட்டுக்குப் போயிட்டா அவங்களுக்குத்தானே சம்பாதிச்சுக் கொடுக்கும் அசோகன்னு’ கேட்கிறப்போ எல்லாம்,
எங்கம்மா கெளரி’அவங்க சொல்றதெல்லாம் நிஜந்தானே’ன்னு மனசு உடைஞ்சு அழுவாங்க. எங்கப்பா மட்டும் அதையெல்லாம் காதுலேயே வாங்கிட்டது இல்ல. கடன் வாங்கியாவது எங்க நாலு பேரையும் நல்லா படிக்க வைச்சுடணும்கிறதுல தீர்மானமா இருந்தாரு. இப்ப நீங்க என்கிட்டே பேட்டி எடுக்கிறதுக்குக் காரணம் எங்கப்பாதான் மேடம்” என்று குரல் தழுதழுக்கிற வேண்டாமிடம், ஜப்பான் கம்பெனியில் வேலை கிடைத்தது பற்றி கேட்டோம்.
”எங்க காலேஜில் ஃபாரின் லாங்வேஜஸ் சொல்லிக் கொடுக்கிறாங்க. அதுல எனக்கு ஜப்பான் மொழி மேலே இன்ட்ரஸ்ட் வந்து கத்துக்கிட்டேன். ஃபைனல் இயர் படிக்கிறப்போ, ஜப்பான்ல இருந்து டிரெய்னர்ஸ் வந்து, இன்னும் நல்லா கத்துக்கொடுத்தாங்க. நானும் ஆர்வமா கத்துக்கிட்டேன். அதனாலதான் கேம்பஸ் இன்டர்வியூவில் செலெக்ட்டாக முடிஞ்சது. ‘ Human resocia’ ங்கிறது ஜப்பான்ல பெரிய கம்பெனி மேடம்” என்கிற அந்த இளம்பெண்ணின் குரலில் கோடி கோடி நம்பிக்கை நட்சத்திரங்கள்.
உங்களுக்கு ‘வேண்டாம்’ என்று பெயர் வைத்த தாத்தா, பாட்டி இப்போது என்ன சொல்கிறார்கள் என்றோம். ”பாட்டி ரொம்ப ஃபீல் பண்ணாங்க மேடம் . ‘நான் தெரியாம அப்படி பேர் வைச்சுட்டேன்’னு சொல்லி என் கையைப் புடிச்சுக்கிட்டு அழுதாங்க” என்று சிலிர்ப்பாகப் பேசுகிற வேண்டாம், கூடிய சீக்கிரம் தன் பெயரை தனக்குப் பிடித்தபடி மாற்றிக்கொள்ளப் போகிறாராம்.
வெளிநாட்டில் வேலைக்காக சென்ற தமது தாயின் நிலை தெரியாமல் இலங்கையிலுள்ள பிள்ளைகள் தவி த்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் முகவர் நிலையம் ஊடாக குறித்த பெண்மணி , டுபாய் சென்றுள்ளார்.
இந்நிலையில் தமது தாய் தொடர்பான எந்தவித தகவல்களும் தற்போது கிடைக்கவில்லை என அவரின் மூன்று பிள்ளைகளும் தெரிவித்துள்ளனர். கெக்கிராவ பிரதேசத்தை சேர்ந்த 50 வயதான பிசோமெனிக்கா என்ற பெண்ணே இவ்வாறு கா ணாமல் போயுள்ளார்.
டுபாய் சென்ற நிலையில் ஆறு மாத காலங்களாக அவர் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை. குறித்த முகவர் நிலையம் ஊடாக நிவாரணம் கிடைக்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது. கடந்த ஆறு மாதங்களாக தனது அம்மா தொடர்பில் தகவல் கிடைக்கவில்லை என கா ணாமல் போன பெண்ணின் மகள் தெரிவித்துள்ளார்.
அங்கு பணியாற்றும் பிலிபைன்ஸ் பெண்ணின் கையடக்க தொலைபேசியின் மூலம் அம்மா என்னை தொடர்பு கொண்டார். வேலை செய்யும் வீட்டில் தன்னை துன் புறுத்துவதாகவும், அங்குள்ளவர்கள் கடு மையாக தாக் கியதாகவும் கூறினார். இதன்காரணமாக முது கு வலி ஏற்பட்டதாக குறிப்பிட்டார்.
அம்மா தொடர்பான தகவல்களை பெற முகவர் நிலையத்தின் உதவியை நாடினோம். அதற்காக அவர்கள் 4 இலட்சம் ரூபா பணம் கேட்கின்றனர். அவ்வளவு பணம் எங்களிடம் இல்லை என மகள் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் ஆடிப்பிறப்புக் கொண்டாட்டம் மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தலைமையில் இன்று (17.07) நடைபெற்றது.
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ஆடிப்பிறப்பு கொண்டாட்ட நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட, மாவட்ட செயலகத்தின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
தமிழர்களின் ஆடிப்பிறப்பு கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஆடிக்கூழ் வழங்கப்பட்டது.
நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனீபா எமது பாரம்பரிய உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சிகளில் மாற்றம் ஏற்பட்டதன் காரணமாக 99 வீதமான தாய்மார்கள் சத்தி ரசிகி ச்சை மூலமே குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். ஆகவே உடற்பயிற்சிகள் மற்றும் எமது பாரம்பரிய உணவு முறைகளை கைவிடக்கூடாது என தெரிவித்தார்.
ஆடிக்கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய வைத்திய கலாநிதி செல்வராசா மதுரகன் கோதுமை மாவின் வருகையுடன் எமது பாரம்பரிய உணவுப்பழக்க வழக்கங்கள் தலைகீழாக மாறிவிட்டது,
எமது சமூதாயத்தில் ஏற்பட்டுள்ள தொ ற்றா நோ ய்க்கு காரணமாக இருக்கும் உணவுகளை தவிர்த்து எமது பாரம்பரிய உணவு முறைகளுக்கு மாறும்போது 99 வீதமான தொ ற்றா நோ ய்களை தவிர்க்க முடியும் என தெரிவித்தார்.
வவுனியா தர்மலிங்கம் வீதியிலுள்ள சோமசுந்தரப் புலவர் நினைவுச் சிலையடியில் இன்று (17.07.2019) காலை 8.30 மணியளவில் வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் அனுசரணையில் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் ஆடிப்பிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் சோமசுந்தரப் புலவரின் நினைவுரையினை தமிழருவி சிவகுமார் நிகழ்த்தியதுடன் வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவர்களின் ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை பாடசாலைப் பாடியதுடன் சோமசுந்தரப் புலவரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் வவுனியா நகரசபை செயலாளர் தயாபரன், வவுனியா நகரசபை உறுப்பினர்கள், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன், பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் வீ.பிரதீபன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன், செயலாளர் மாணிக்கம் ஜெகன், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தலைவர் ரவீந்திரன்,
வர்த்தக சங்க உறுப்பினர்கள், நகரசபை ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், வர்த்தகர்கள், விபுலானந்தா கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை சுரங்கப் பகுதியில் நேற்று (16.07.2019) மாலை 6.30 மணியளவில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் கடும்காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் – நுவரெலியா ஏ-7 பிரதான வீதியில் நுவரெலியா பகுதியிலிருந்து அவிசாவளை பகுதியை நோக்கிச் சென்ற மோட்டர் சைக்கிள் ஒன்றும் கினிகத்தேனை பகுதியிலிருந்து பதுளை பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த காரும் இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் மோட்டார்சைக்கிளை செலுத்தி சென்ற சாரதியும், அவரின் நண்பரும் கடும் காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும், மோட்டர் சைக்களின் சாரதி மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்த முடியாததனால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இவ்விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பல ஆண்டுகள் இடம்பெற்று வந்த ஆராய்ச்சியின் பலனாக பூமியில் நிலவு மண் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ் நாட்டின், சேலம் மாவட்டத்தில் உள்ள சித்தாம்பூண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் நிலவு மண் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதில் மேலும்,
தமிழ் நாட்டின், சேலம் மாவட்டத்தில் உள்ள சித்தாம்பூண்டி மற்றும் அதைச் சுற்றி உள்ள கிராமப் பகுதிகளில் நிலவு மண் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நடந்து வந்த இந்த ஆராய்ச்சியின் முடிவாக, நிலவில் உள்ள அதே கனிம வளம் கொண்ட நிலவு மண் தற்பொழுது பூமியில் அதுவும் தமிழ் நாட்டிலேயே கண்டறியப்பட்டுள்ளது.
சந்திரயான் 2 விண்கலத்துடன் விண்ணுக்கு அனுப்பப்படவுள்ள ரோவர் வாகனம் நிலவில் தரையிறங்கி நிலவின் மேற்பரப்பை ஆராய துவங்குவதற்கு முன், பூமியில் ரோவர் வாகனத்தை சோதனை செய்து பார்க்க வேண்டியது அவசியம்.
இதற்கு சுமார் 60 முதல் 70 டன் நிலவு மண் தேவைப்படுவதாக தெரியவருகிறது. விலை உயர்ந்த மிக அரிதான இந்த மண் அமெரிக்காவிலிருந்து ஒரு கிலோகிராம் 150 டொலர் என்ற விலைக்கு கிடைக்கப்பெறுகிறது.
இதனை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்தால், நிச்சயமாகப் பெரிய அளவில் நிதி செலவிட வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் இதற்காக மும்பை ஐஐடி உடன் இணைந்து பேராசிரியர் அன்பழகன் துவங்கிய நிலவு மண்ணை தேடும் ஆராய்ச்சி வெற்றியைக் கொடுத்துள்ளது. அதன்படியே தமிழ் நாட்டில் இந்த நிலவு மண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் இதனை பயன்படுத்தியே ரோவர் சோதனை பூமியில் நடத்தப்பட்டுள்ளது.
நிலவின் மேற்பரப்பில் பசால்ட் என்ற எரிமலை பறை மற்றும் அனார்த்தசைட் என்ற பாறை வகைகள் தான் பெருமளவில் இருக்கின்றன. அனார்த்தசைட் எனப்படும் இந்த அறிய வகை பாறைகள், சித்தாம்பூண்டி கிராமம் மற்றும் அதனைச் சுற்றி உள்ள கிராமப் பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சுமார் 400 முதல் 500 அடி வரை பூமியில் துளையிட்டு இந்த அறிய வகை நிலவு மண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பூமியில் உள்ள மண்ணை விட முற்றிலும் வேறுபாடுடைய நிலவு மண், குறைந்த புவி ஈர்ப்பு விசை,
நிலவின் தட்பவெப்ப நிலையுடன் கூடியது என தகவல்கள் குறிப்பிடுகின்றன. தமிழ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட அனார்த்தசைட் என்ற பாறைகள், மண் துகள்களாக மாற்றப்பட்டு ரோவரின் சோதனைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை உலக நாடுகள் அனைத்தும் அமெரிக்காவிடம் நிலவு மண் கேட்டு கொண்டிருக்கும் வேளையில் தமிழ் மண்ணிலேயே இந்த பொக்கிஷம் காணப்படுவது ஆராய்ச்சியின் பலனால் தெரியவந்துள்ளமை பெருமைக்குரியதே என மார்தட்டிக் கொள்கின்றனர் இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள்.
பலாங்கொட, பொலிஸ் பிரிவில் உள்ள வீடு ஒன்றில் ஆண் ஒருவர் மீது பெண்ணொருவர் கத் தியால் கு த்தி விட்டு தப் பிச் சென்றுள்ளார். வீட்டின் ஜன்னல் ஊடாக நுழைந்த பெண் ஒருவர், கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த நபரை கத் தியால் குத் தியுள்ளார். இந்த அன ர்த்தத்தில் பலாங்கொட பிரதேசத்தை சேர்ந்த 43 வயதான நபர் ஒருவரே காய மடைந்துள்ளார்.
காய மடைந்தவர் பலாங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளார். குறித்த நபர் தனது இரண்டாவது மனைவியுடன் வீட்டில் இருக்கும் போது, அதிகாலை வீட்டின் ஜன்னலை உடைத்து வீட்டிற்குள் நுழைந்த முதலாவது மனைவி இவ்வாறு கத் தியால் குத் தியுள்ளார்.
இந்த பெண் காய மடைந்த நபரின் இரண்டாவது மனைவியின் 9000 ரூபா பணம் மற்றும் தங்க நகைகளை திரு டியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான பெண்ணை கை து செய்வதற்கு பொலிஸார் விசார ணை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் இன்றைய தினம் நள்ளிரவு முதல் ஒரு இறாத்தல் பாணின் விலை அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பாண் இறாத்தல் ஒன்றின் விலையை 5 ரூபாவினால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கோதுமை மாவின் விலை நேற்றைய தினம் முதல் 8 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டிருந்த போதும் விலை அதிகரிப்பிற்கான காரணம் என்னவென தெரிவிக்கப்படவில்லை.
இதனையடுத்து பாண், பனிஸ் உட்பட கோதுமை மாவினால் தயாரிக்கப்படும் உணவு பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே பாணின் விலையை அதிகரிப்பது தொடர்பான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கணவனுக்கு தெரியாமல் தொலைபேசி பயன்படுத்திய மனைவியை தாக்கி காயப்படுத்திய கணவன் ஒருவரை இம்மாதம் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க உத்தரவிட்டார்.
கூம்புகார், பாலையூற்று பகுதியைச்சேர்ந்த 21 வயதுடைய ஒருவரே இன்று விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கணவனின் பேச்சினை மீறி மனைவி திருட்டுத் தனமாக தொலைபேசியை வைத்திருந்த நிலையில் அதனை கண்ட கணவன் மனைவியை தா க்கி காயப்படுத்தியுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை பொலிஸார் கைது செய்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். சந்தேக நபரின் மனைவி திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மழையுடன் கூடிய கால நிலையையடுத்து நாட்டின் ஒன்பது மாவட்டங்களில் மீண்டும் டெங்கு நோய் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. டெங்கு தொடர்பில் அலட்சியம்செய்ய வேண்டாம் என்றும் டெங்கு பாதிப்பிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்துவது அவசியமெனவும் அப் பிரிவு பொதுமக்களை அறிவுறுத்துகிறது.
இவ்வருடத்தில் இது வரையான காலப்பகுதியில் 40பேர் டெங்குநோயினால் உயிரிழந்துள்ளதாகவும் 27,088பேர் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அப் பிரிவு தெரிவித்தது. 2019ஜூலை 10ம் திகதி வரையான காலப்பகுதியில் 5,820பேர் கொழும்பு மாவட்டத்திலும் 3,536பேர் கம்பஹா மாவட்டத்திலும், 4138பேர் காலிமாவட்டத்திலும் நோயாளர்களாக பதிவாகியுள்ளதாகவும் அப் பிரிவு தெரிவித்தது.
வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் டெங்கு ஒழிப்பு பணிகள் தற்போது துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் வாரமொன்றில் சுமார் 30நிமிடங்களை டெங்கு ஒழிப்புப் பணிக்காக ஒதுக்கி சுற்றுப்புறச் சூழல்களை துப்புரவு செய்யுமாறும்பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிணங்க கொழும்பு, கம்பஹா, காலி, கண்டி, களுத்துறை, மாத்தறை அம்பாந்தோட்டை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களே டெங்கு எச்சரிக்கை மாவட்டங்களாக மேற்படி டெங்கு பிரிவு அறிவித்துள்ளது.
டெங்கு நுளம்பின் தாக்கமானது காலை 6.00மணி முதல் 11.00மணி வரையிலும் பிற்பகல் 3.00மணி முதல் இரவு 7.00மணி வரையான காலப் பகுதியிலும் காணப்படுமென இப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. இக்காலப் பகுதியில் மக்கள் தம்மை டெங்கு தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்துவது அவசியம் என்றும் தெரிவித்துள்ளது.
புது வகையான டெங்கு நுளம்பே இம்முறை பரவியுள்ளதாகவும் கடந்த வருடங்களை விட இம்முறை கூடுதலாக டெங்கு பரவும் அபாயம் உள்ளது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
டெங்கு நோயாளி ஒருவரிடமிருந்து மற்றுமொருவருக்கு டெங்கு தொற்றாத வகையில் நுளம்பு வலைகளைப் உபயோகிக்குமாறும் கடும் காய்ச்சல், வாந்தி, சிவப்பு நிற தழும்புகள் காணப்படின் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்கோ அல்லது தகைமையுள்ள வைத்தியர் ஒருவரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறும் அப்பிரிவு பொது மக்களை அறிவிறுத்தியுள்ளது.
அதேவேளை குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார், ஆகியோர் காய்ச்சல் ஆரம்பித்த முதல் நாளிலேயே மருத்துவரின் உதவியை நாடுமாறும் டெங்கு ஒழிப்புப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது. இவேளை காலி மாவட்டத்தில் டெங்கு நோய் அதிகரித்துக் காணப்படுவதுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2குழந்தைகள் உட்பட 8பேர் உயிரிழந்துள்ளதாக காலி மாவட்ட சுகாதார சேவைப் பணிப்பாளர் சந்திம சிறிதுங்க தெரிவித்துள்ளார்.
மரணமடைந்த 8பேரில் 7பேர் கராப்பிட்டி வைத்தியசாலையிலும் ஒருவர் பலப்பிட்டியிலும் பதிவாகியுள்ளனர். இவ்வருடத்தில் இதுவரை காலி மாவட்டத்தில் 4138பேர் டெங்கு நோயாளர்களாக இனம்காணப்பட்டுள்ளதுடன் காலி நகர் பகுதியில் 1196பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த 10நாட்களில் மாத்திரம் 20வயதிற்கு குறைவான இருவர் டெங்கினால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத் தக்கது.
ஹைலெவல் வீதியில் பயணித்த சொகுசு பேருந்து ஒன்று திடீரென தீப் பற்றி எரிந்தமையினால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
மீகொடை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், முழுமையாக எரிந்து நாசமாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹொரனை – கொழும்பு பயணிகள் பேருந்து ஒன்றை புதுப்பிக்கும் நடவடிக்கைக்காக கொண்டு செல்லும் போது பேருந்து பின்பக்கத்தில் திடீரென தீப்பற்றியுள்ளது.
குறுகிய நேரத்திற்குள் பேருந்து முழுமையாக தீப்பற்றி எரிந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
பேருந்து தீப்பற்றியவுடன் பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தீயை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்ட போதிலும், பேருந்து முழுமையாக தீப்பற்றி அழிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளர்.
தீ விபத்திற்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை எனவும் சம்பவம் தொடர்பில் மீகொட பொலிஸார் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்னாப்பிரிக்க சுற்றுலா ஒன்றின்போது, இற ந்த சிங்கம் ஒன்றின் பின்னால் அமர்ந்து ஒரு கனேடிய ஜோடி முத்த மிட்டுக் கொள்ளும் புகைப்படம் வெளியாகி கடும் கண்டனத்தைப் பெற்றுள்ளது.
வைரலான அந்த புகைப்படம், பேஸ்புக் பக்கம் ஒன்றில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அந்த புகைப்படத்தின் கீழ் அந்த தம்பதியின் பெயர் Carolyn மற்றும் Darren Carter என்றும் அவர்கள் எட்மண்டனைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த புகைப்படம் ஒரு பக்கம் வைரலாக, மறு பக்கம் கண்டனங்களும் குவியத் தொடங்கின. உங்கள் அருவருப்பான புகைப்படங்கள் தலைப்புச் செய்தியாகியுள்ளன என்று எழுதிய Justa Kruger என்பவர், நீங்கள் ஹீரோக்கள் அல்ல, வில்லன்கள், உங்களால் பெருத்த அவமானம் என்று விமர்சித்திருந்தார்.
சிலர் ஒருபடி மேலே போய், விதி உங்களை சும்மா விடாது என சாபம் கொடுத்திருந்தனர். Carolyn மற்றும் Darren Carter இருவரும் விலங்குகளைக் கொன்று பாடம் செய்யும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் கண்டனங்களும் சாபங்களும் குவிய, இருவரின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளும், தற்போது தனியாருக்கானது என மாற்றப்பட்டு விட்டன. ஆனாலும் அவர்களது ட்விட்டர் கணக்கில் அவர்களது சுயபுராணம் தொடர்கிறது.
அதில், மீண்டு தென்னாப்பிரிக்கா வந்திருக்கிறோம், என்று எழுதியிருப்பதைப் பார்க்கும்போது கண்டனங்கள், விமர்சனங்களை எல்லாம் கண்டு கொள்ளாமல் அவர்கள் மீண்டும் தங்கள் வேலையை தொடங்கி விட்டது தெரிகிறது. இது குறித்து கருத்து கேட்க முயன்றபோது, இருவரும் பதிலேதும் அளிக்கவில்லை.