என் கணவரின் உடையை நான் அணிவேன் : கண்ணீர் காயவில்லை : இளம் மனைவி உருக்கம்!!

இளம் மனைவி உருக்கம்

இந்தியாவில் விமான வி பத்தில் போர் விமானி உயிரி ழந்த நிலையில் அவர் மனைவி கணவரின் உடையை அணிந்து அவர் பணியை தொடர்வேன் என உருக்கமாக கூறியுள்ளார். பெங்களூரில் உள்ள உள்ள எச்ஏஎல் விமான நிலையத்தில் கடந்த பிப்ரவரி 1ம் திகதி காலை 10 மணியளவில் இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 ரக போர் விமானம் விபத்துக்குள்ளானது.

விமானமானது தரையை நெருங்கியபோது 2 விமானிகளும் வெளியே குதித்தனர். இதில் பலத்த காயமடைந்த விமானி சித்தார்த் நேகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு விமானி சமீர் அப்ரால், பலத்த காயமடைந்தார். ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிறிது நேரத்திலேயே உயிரி ழந்தார்.

உயிரி ழந்த சமீர் அப்ராலின் மனைவி கரீமா அப்ரால் ஆவார். இவர் போர் விமானிக்கான நேர்முக தேர்வில் பயிற்சிப் பெற்றுள்ளார். இவர் விமானப்படை அகாடமியில் அடுத்த ஆண்டு சேரவுள்ளார். கரீமா அப்ரால் கூறுகையில்,

என் கண்ணீர் இன்னமும் காயவில்லை. ஒரு கோப்பை தேனீரை கையில் கொடுத்தப்படி அவரை நாட்டுக்காக சேவை புரிய அனுப்புவேன். என் கணவரின் வாழ்க்கை பணியில் எப்படி இருந்தது என்பதை காண விரும்பினேன். அவர் அணிந்த சீருடையை நான் அணிவது என்னை மிகவும் ஊக்கப்படுத்தும். நிச்சயம் விரைவில் அணிவேன் என உருக்கமாக கூறியுள்ளார்.

ஒருவரின் சட லத்தை வாங்க வந்த மூன்று மனைவிகள்!!

மூன்று மனைவிகள்

புதுச்சேரியில் ஒருவரின் சட லத்தை வாங்க மூன்று பெண்கள் தாங்கள் தான் மனைவி என்று வந்த நிலையில் பொலிசார் குழப்பத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி போயினர்.

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்ற 30 வயது அழகுக் கலை நிபுணர். இவர் நேச்சுரல்ஸ் நிறுவனத்தில் அழகுக் கலை நிபுணராக பணி செய்து வந்துள்ளர். இந்நிலையில், அவர் தனது மாமன் மகள் சத்தியா என்பவரை காதல் வலையில் வீழ்த்தி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

அவருக்கு இரு குழந்தைகள் இருக்கும் நிலையில், தேனிக்கு பணி மாறுதல் பெற்று சென்றுள்ளார் ராஜா. அங்கு தனலெட்சுமி என்ற பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி உள்ளார். அவரை 2 வதாக திருமணம் செய்து குடும்பம் நடத்தினார். அவருக்கும் 2 குழந்தைகள் உள்ள நிலையில், மதுரைக்கு பணி மாறுதல் வந்துள்ளது.

அங்கு தாய் தந்தையரை இழ ந்து தனியாக வசித்து வந்த காவ்யா என்ற பெண்ணை காதலித்து 3வதாக சேர்த்துக் கொண்டார். இவரது மன்மத லீலைகள் தெரிந்ததால் மற்ற 2 மனைவிகளும் இவரிடம் தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ளனர். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன தகவல் 3 வது மனைவிக்கு தெரியாமல் இருந்துள்ளது.

இந்த நிலையில், நேச்சுரல்ஸ் நிறுவனம் ராஜாவை புதுச்சேரிக்கு இடமாற்றம் செய்துள்ளது. அங்கு தனியாக அறை எடுத்துத் தங்கியவர் தனது 3 வது மனைவியை குடித்தனம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். தன்னை திருமணம் செய்தால்தான் வருவேன் என்று அவர் நிபந்தனை விதித்துள்ளார் அவர்.

இந்நிலையில் மற்ற இரு மனைவிகளும் இவருடன் தொடர்ந்து சண் டையிட்டு வந்துள்ளனர். இவ்வாறு தொடர்ந்து வந்த நிலையில் மனம் உடைந்த அவர் த ற்கொ லை செய்துள்ளார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் ராஜாவின் சட லத்தை மீட்டு பி ரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்போது அவரது செல்போனை கைப்பற்றி உறவினர்களின் தொலைபேசி எண்களைத் தேடியுள்ளனர். அதில் மனைவி 1, மனைவி 2, மனைவி 3 என்று குறிப்பிடப்பட்டிருந்ததால்,

அவரது மனைவியின் 3 செல்போன் எண்கள் என்று கருதி காவல்துறையினர் தகவல் தெரிவித்த நிலையில், காலையில் குழந்தைகளுடன் 3 பேரும் தாங்கள் தான் மனைவி என்று வந்துள்ளனர். இதனால் குழப்பம் அடைந்த கால்துறையினர் மூன்று பேரிடமும் விசாரணை மேற்கொண்டதில் உண்மை தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், 3 பேரும் கணவர் ராஜாவின் சடல த்தை தங்களிடம் தான் தரவேண்டும் என்று கோரிக்கைவைத்து போரா ட்டத்தில் குதித்தனர். 3 வது மனைவி காவ்யா 19 வயது பெண் என்பதாலும் ஆதரவுக்கு வேறு யாரும் இல்லாததாலும் அவரது எதிர்காலம் கருதியும் போலீசார் எச்சரித்து அனுப்பிவைத்தனர்.

முதல் மனைவி உயி ரோடு இருக்கும்போது, அவரது அனுமதியின்றி 2 வது மனைவியை திருமணம் செய்ய சட்டத்தில் இடமில்லை என்பதால், கணவரின் சடலத்தை பெற்றுச்செல்ல முதல் மனைவியே தகுதியானவர் என்ற அடிப்படையில் ராஜாவின் சடலம் மாமன் மகளான சத்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப ரப்பை ஏற்படுத்தியது.

அழகான அவள் என்னை விட்டு சென்றுவிடுவாள் என பயந்தே இப்படி செய்தேன் : அதிரவைத்த இளைஞரின் வாக்குமூலம்!!

இளைஞரின் வாக்குமூலம்

இந்தியாவில் அழகான காதலி தன்னை விட்டு வேறு ஆணுடன் போய் விடுவாளோ என்ற சந்தேகத்தில் அவரை கொடூ ரமாக கொ லை செய்த காதலனின் செயல் அதிர் ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாக்பூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் முகம் முழுவதும் சிதை க்கப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் சட லம் கண்டெடுக்கப்பட்டது.

பொலிசார் விசாரணையில் கொ லை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் குஷி பரிகார் என்று தெரியவந்தது. கல்லூரி மாணவியான குஷி மொடலாக உள்ளதோடு, உள்ளூர் பேஷன் ஷோக்களிலும் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில் குஷியும் அஷ்ரப் ஷேக் என்ற இளைஞரும் காதலித்து வந்தனர். இதனால் பொலிசாருக்கு அஷ்ரப் மீது சந்தேகம் ஏற்பட அவரை பிடித்து விசாரித்ததில் குஷியை கொன் றதை ஒப்பு கொண்டார்.

இதையடுத்து பொலிசார் அஷ்ரப்பை கை து செய்தனர். அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், குஷி பார்ட்டிக்கு செல்வதில் தொடங்கி, செல்போனில் சாட்டிங் செய்வது வரை அவரது நடவடிக்கைகள் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தின.

அழகான குஷி என்னை விட்டு வேறு நபருடன் சென்றுவிடுவாள் என பயந்தேன். கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் நாங்கள் இருவரும் மது குடித்த பின்னர் அவள் பிற ஆண்களுடன் பேசியதை பார்த்து எனக்கு கோபம் வந்தது.

பின்னர் காரில் ஏற்பட்ட சண்டையில் நான் மறைத்து வைத்திருந்த மண்வெட்டியை வைத்து அவள் முகத்தில் பலமாக அடி த்து கொன் றேன், பின்னர் சட லத்தை சாலை ஓரத்தில் உள்ள புதரில் வீசி விட்டு சென்றேன் என்று கூறியுள்ளார்.

போர் விமானத்தில் உயி ரிழந்த கணவன் : மனைவி எடுத்த சபதம்!!

மனைவி எடுத்த சபதம்

போர் விமான சோதனையின் போது கணவன் உயிரி ழந்து 5 மாதங்கள் மட்டுமே ஆகியிருக்கும் நிலையில், தகுதி தேர்வை முடிந்து அவருடைய மனைவி பணியில் சேர உள்ளார்.

கடந்த 5 மாதத்திற்கு முன்னதாக பெங்களூரு எச்.ஏ.எல் விமான நிலையத்தில் மிராஜ் 2000 போர் விமானத்தின் சோதனை நடைபெற்றது. அப்போது நடந்த விபத்தில் விமானி சமீர் அப்ரோல் உயிரி ழந்தார்.

அந்த சமயத்தில் அவருடைய மனைவி கரிமா, “என் கண்ணீர் இன்னமும் காயவில்லை. ஒரு கோப்பை தேநீரை கையில் கொடுத்தப்படி எனது கணவரை இந்த நாட்டுக்கு சேவை செய்ய அனுப்பினேன்” என பதிவிட்டிருந்தார்.

மேலும், அந்த நேரத்தில் விமானிகள் யாரும் அழுவதில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், வாரணாசியில் உள்ள விமானப்படை தேர்வு வாரியத்தில் நடைபெற்ற நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு கரிமா தேர்ச்சி பெற்றுள்ளார்.

அவர் 2020 ஆம் ஆண்டில் டண்டிகலில் உள்ள விமானப்படை அகாடமியில் பயிற்சி பெற உள்ளார். பயிற்சி முடிந்ததும், விரைவில் தன்னுடைய கணவரின் பணியை தொடர்வார். இதுகுறித்து எழுத்தாளர் ஸ்வப்னில் பாண்டே, “நம்மில் பலர் ஒரு வாய்ப்பை இழந்தால் வாழ்வதற்கான வைராக்கியத்தை இழக்கிறோம், ஆனால் இங்கே இந்த பெண், அழிந்துபோவதை தேர்வு செய்யவில்லை – மாறாக கடினமாக உழைத்து, கண்ணீரைத் துடைத்து, விட்டு சென்ற தன்னுடைய கணவனின் காலணிகளை நிரப்ப உள்ளார்”.

“போலி பிரபலங்கள் பின் சுற்றி திரிவதை விட, இதுபோன்ற பெண்களை சந்தித்து உத்வேகம் அடைய வேண்டும். முரண்பாடுகளுக்கு மேலே உயர்ந்து, இன்னும், தலையை உயரமாக வைத்துக் கொண்டு சரியான பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கான முன்மாதிரியான பெண்களைப் பற்றி தங்கள் குழந்தைகளுக்கு குறிப்பாக இளம் பெண்களுக்குக் கற்றுக் கொடுங்கள்” என தெரிவித்துள்ளார்.

ஸ்வப்னில் பாண்டே கண்ட பேட்டியில் பேசிய கரிமா, “எனது கணவரது வாழ்க்கை எப்படி இருந்தது என பார்க்க விரும்பினேன். அவர் அணிந்த அதே சீருடையை அணிவது என்னை ஊக்கப்படுத்தும். மரபுகளை தொடர விரும்பினேன்” என தெரிவித்துள்ளார்.

சரிந்து விழுந்த நான்கு மாடி கட்டடம்.. உயி ருடன் புதைந்த 40 பேர் : மும்பையில் துயரம்!!

மும்பையில் துயரம்

இந்தியாவின் வர்த்தக மையமான மும்பையில் நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 12 பேர் ப லியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

டோங்ரியில் டண்டெல் தெருவில் உள்ள கேசர்பாய் கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. கட்டடத்தின் இடிபாடுகளில் 40 க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது.

தகவல் அறிந்த சம்பவயிடத்திற்கு விரைந்துள்ள தீயணைப்பு படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், தீவிரமாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மழை தொடர்ந்து பொழிந்து வரும் நிலையில், கட்டடம் சரிந்து விழுந்ததில் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்த கட்டடம் சமூக வீட்டுவசதி திட்டத்தின் ஒரு பகுதியாக, உள்ளூர் வீட்டுவசதி ஆணையத்தால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. பல பாழடைந்த கட்டிடங்களைக் கொண்ட இப்பகுதி சமீபத்திய வாரங்களில் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதே இந்த சரிவுக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

வவுனியாவில் பெண் இராணுவ சிப்பாய் மீது தாக் குதல் : சகோதரன் உட்பட இருவர் வைத்தியசாலையில்!!

பெண் இராணுவ சிப்பாய் மீது தாக் குதல்

வவுனியா ஓமந்தை புதியவேலர் சின்னக்குளம் பகுதியில் நேற்று(16.07) இரவு பெண் இராணுவ சிப்பாய் மீது வீடு புகுந்து வெட் டியதில் பெண் இராணுவ சிப்பாய் காயமடைந்துள்ளார்.

இதனை தடுக்கச் சென்ற சகோதரன் மீதும் தாக் குதல் மேற்கொள்ளப்பட்டதில் இருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு ஓமந்தை புதியவேலர் சின்னக்குளம் பகுதியில் வசித்து வரும் பெண் இராணுவ சிப்பாயின் வீட்டிற்குள் புகுந்த பக்கத்து வீட்டுக்காரர் இராணுவத்தில் பணிபுரிய வேண்டாம் அல்லது இங்கு இருக்கவேண்டாம் என்று தெரிவித்து அப் பெண்மீது தாக் குதல் நடாத்தியுள்ளார்.

இதன் போது வெட்டுக் காயத்திற்குள்ளான பெண் இராணுவ சிப்பாயை காப்பாற்றுவதற்காக ஓடிச் சென்ற சகோதரன் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த சகோதரியும் , சகோதரனும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலுடன் தொடர்புபட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவில் ஒரே போட்டியில் உலக சாதனை படைத்த தர்ஜினி ஷிவலிங்கம்!!

தர்ஜினி ஷிவலிங்கம்

பிரித்தானியாவின் லிவர்பூலில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கூடைப்பந்து போட்டியில் இலங்கை அணி தனது முதலாவது வெற்றியை பதிவு செய்து. சிங்கப்பூர் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் 88 – 50 என்ற கோல் கணக்கில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இலங்கை அணியின் வீராங்கனையான யாழ்ப்பாணத்தை சேர்ந்த தர்ஜினி ஷிவலிங்கம் புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். ஒரு போட்டியில் தனி நபராக 76 கோல்களை பெற்று இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.

இம்முறை உலகக்கிண்ண போட்டியில் ஒரு வீராங்கனை மாத்திரம் அதிக கோல் பெற்ற வீராங்கனையாக தர்ஜினி பெயரிடப்பட்டுள்ளார். 78 முறை மேற்கொண்ட முயற்சியில் 76 முறை கோல் பெற்றுள்ளமை விசேட அம்சமாக கருதப்படுகின்றது.

அதற்கமைய தர்ஜினி 97 சதவீதம் கோல்களை வெற்றிகரமாக பெற்றுள்ளார். அத்துடன் இம்முறை போட்டிகளில் அதிக கோல் பெற்றவர்கள் பட்டியலிலும் தர்ஜினி முன்னணி இடத்தை தக்க வைத்துள்ளார்.

3 போட்டிகளில் 183 கோல்கள் பெற்றுள்ளார். அந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பவர் 125 கோல்கள் மாத்திரமே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் காயமடைந்த முதியவரை இனங்காண உதவுமாறு கோரிக்கை!!

இனங்காண உதவுமாறு கோரிக்கை

வவுனியா வைத்தியசாலையில் இன்று(16.07) புகையிரதத்தில் மோதிய நிலையில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் 60 தொடக்கம் 65வயது மதிக்கத்தக்க வயோதிபரை இனங்காண உதவிடுமாறு வவுனியா வைத்தியசாலை நிர்வாகத்தினர் கோரியுள்ளனர்.

இன்று காலை வவுனியா ஈரப்பெரியகுளம் புகையிரதக் கடவைப் பகுதியில் படுகாயமடைந்து சுயநினைவு இழந்த நிலையில் காணப்பட்ட 60 தொடக்கம் 65வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவர் நோயாளர் காவுவண்டி மூலம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் பற்றிய தகவல்கள் எவையும் தெரியவில்லை புகையிரதத்தில் பயணித்தபோது கீழே வீழ்ந்து காயமடைந்திருக்கலாம் அல்லது த ற்கொ லை செய்ய முயற்சித்திருக்கலாம் அல்லது தவறி விழுந்திருக்கலாம் என்று பல்வேறு சந்தேகங்களுடன் குறித்த வயோதிபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு விபத்து பிரிவில் சிகிச்சைபெற்று வருகின்றார். இவர் குறித்த தகவல்கள் தெரிந்தவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையுடன் தொடர்புகொள்ளுமாறு வைத்தியசாலை நிர்வாகத்தினர் கோரியுள்ளனர்.

வவுனியா வைரவபுளியங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயம்!!

நால்வர் படுகாயம்

வவுனியா, வைரவபுளியங்குளம், புகையிரத வீதியில் மூன்று மோட்டர் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று மதியம் இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் இருந்து இரண்டு பிள்ளைகளை ஏற்றிக் கொண்டு குருமன்காடு நோக்கி செல்வதற்காக புகையிரத நிலைய வீதிக்கு திரும்பிய மோட்டர் சைக்கிளை வவுனியா நகரில் இருந்து குருமன்காடு நோக்கி சென்ற மோட்டர் சைக்கிள் மோதி விபத்தை ஏற்படுத்தியதுடன்,

வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டர் சைக்கிளுடனும் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் குறித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களிலும் பயணித்த இரு மாணவிகள் உட்பட நால்வர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழிலிருந்து சென்ற ரயிலில் மோதுண்டு உயிரி ழந்தவர்களின் முழுமையான விபரங்கள்!!

ரயிலில் மோதுண்டு..

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்ற ரயிலில் மோதுண்டு உயி ரிழந்த தந்தை மற்றும் மகள் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளது. வெயங்கொட – வந்துரவ ரயில் வீதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் தந்தை மற்றும் மகளே உயிரி ழந்தனர். நேற்று காலை 6.30 மணியவில் இந்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் ஜா-எல கொட்டுகொட பகுதியை சேர்ந்த ருவன் சஞ்ஜீவ சிந்தக்க சில்வா என்ற 44 வயதான நபர் மற்றும் அவரது மகளான 11 வயதுடை ருசதி டிலன்சா ஆகியோர் உயிரி ழந்துள்ளனர்.

ருவன் சஞ்ஜீவ தனது மனைவியின் தந்தையின் தானத்தில் கலந்து கொண்டு, மகளை பாடசாலைக்கு அழைத்து செல்ல சென்ற சந்தர்ப்பத்தில், கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலில் இருவரும் மோதுண்டு உயிரி ழந்துள்ளனர்.

உயிரிழந்த மகள் 6ஆம் வகுப்பில் கல்வி கற்கின்ற நிலையில் பாடசாலையில் இடம்பெற்ற பரீட்சைக்கு முகம் கொடுப்பதற்காக தனது தந்தையுடன் செல்லும் போது இந்த விபத்தில் சிக்கியுள்ளார். உயி ரிழந்த தந்தை மகளின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வத்துப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீரினால் மூழ் கிய கிராமங்கள் மீண்டும் தோன்றியது : படையெடுக்கும் மக்கள்!!

மூழ்கிய கிராமங்கள்

இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மிகவும் பாரிய செயற்திட்டமான மொரகஹகந்த நீர்த்தேக்கத்தில் மூடப்பட்ட கிராமங்கள் மீண்டும் தென்பட்டுள்ளன.

நாட்டில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் நூற்றுக்கு 34 வீதம் வரை குறைவடைந்துள்ளது. இதன்காரணமாக நீரில் மூழ் கியிருந்த பல கிராமங்கள் மீண்டும் காட்சியளித்துள்ளதனை காண முடிந்துள்ளது.

நேற்று அந்த பிரதேசங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பொறியியலாளர்களால் இவை அவதானிக்கப்பட்டுள்ளது. மொரகஹகந்த நீர்த்தேக்கம் காரணமாக வேறு பிரதேசங்களுக்கு குடியேறிய மக்கள், மீண்டும் தோன்றிய தங்கள் கிராமங்களை பார்ப்பதற்கு படையெடுத்து வருகின்றனர்.

மீண்டும் தோன்றிய தங்கள் கிராமத்தில் உடை ந்த தங்கள் வீடுகளை பார்ப்பதற்கு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வருவதனை அவதானிக்க முடிந்துள்ளது. தங்கள் வீடுகளை மூழ் கடித்து நீர்த்தேக்கம் உருவாக்கிய போதிலும் தமக்கு குடிப்பதற்கு சுத்தமான நீர் இல்லை என அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

திடீரென நிலப்பகுதிக்குள் வந்த கடல் நீரால் பீதி யடைந்த மக்கள்!!

தென்னிலங்கையில் திடீரென கடல் நீர் நிலப்பரப்பிற்குள் வந்தமையினால் அந்தப் பகுதிகள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.

அம்பலங்கொட, கஹவ பிரதேசத்தில் இருந்து கொடகம வரை ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு கடல் நீர் தரைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக காலி – கொழும்பு பிரதான வீதிக்கு கல் மற்றும் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இன்றையதினம் கடல் மிகவும் கொந்தளிப்பு நிலையில் காணப்படும் என வளிமண்டவியல் திணைக்களம் நேற்று எச்சரித்திருந்தது.

இதன் காரணமாக கடல் நீர் தரைக்கு வந்திருக்கலாம் எனவும், அடிக்கடி இந்த பகுதியில் கடல் நீர் தரைக்கு வருவதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

வவுனியா ஓமந்தையில் 7 மிதிவெ டிகள் மீட்பு!!

மிதிவெ டிகள் மீட்பு

வவுனியா ஓமந்தை இரா ணுவச் சோ தனை நிலையத்திற்கும் விடுதலைப்புலிகளின் முன்னரங்க காவல் அர ணுக்கும் இடைப்பட்ட விளக்குவைத்தகுளம் பகுதியிலிருந்து இன்று காலை 7 மிதி வெ டிகளை மீட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா ஓமந்தைப்பகுதியில் முன்னர் இராணுவத்தரப்பினர் விடுதலைப்புலிகளின் முன்னரங்கப்பகுதியான விளக்குவைத்தகுளம் சூனியப்பிரதேசப்பகுதியிலிருந்து இராணுவத்தினர் வெளியேறிய பகுதியில் தனியாரிற்குச் சொந்தமான காணி ஒன்றிலில் நேற்று முதல் கனரக இயந்திரத்தின் உதவியுடன் துப்பரவுப்புணிகள் இடம்பெற்று வந்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை குறித்த பகுதியில் 7 மிதி வெ டிகள் காணப்பட்டுள்ளது இதையடுத்து இத்தகவலை பொலிசாருக்கு காணி உரிமையாளரினால் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அப்பகுதிக்குச் சென்ற பொலிசார் மிதி வெ டிகள் காணப்படும் பகுதியை அடையாளப்படுத்தியதுடன் நீதிமன்றத்தின் அனுமதியுடன் விஷேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அப்பா வயதுடையவரை மணந்த இளம்பெண் : மக்கள் எங்களை தவறாகவே புரிந்து கொள்கிறார்கள்!!

அப்பா வயதுடையவரை மணந்த இளம்பெண்

தன்னை விட 27 வயது மூத்த நபரை மணந்த அமெரிக்க இளம்பெண், தங்களை எல்லோரும் தவறாகவே புரிந்து கொள்வதாக வருத்தப்படுகிறார். Marylandஐச் சேர்ந்த Tori Barron (21) என்னும் இளம்பெண்ணும், Eddie Smith (48) என்பவரும் karaoke பார் ஒன்றில் சந்தித்துக் கொண்டார்கள்.

இருவர் கண்களும் சந்தித்துக் கொள்ள கண்டதும் காதல் உருவானது இருவருக்கும். இசை விரும்பிகளான இருவரும் தங்கள் நண்பர்களுடன் இரண்டு குழுக்களாக ஒரு karaoke பாருக்கு சென்றபோது சந்தித்திருக்கிறார்கள்.

அதில் Toriயின் குழுவில் இருந்த ஒரு ஆணுக்கும் அவர் மீது ஒரு கண் இருந்த நிலையில், Eddie மோசமானவர் என்றும், அவர் Toriயின் உடல் மீதுள்ள ஆசையினால்தான் அவரை விரும்புவது போல் நடிக்கிறார் என்றும் கூறி இருவரையும் பிரிக்கப் பார்த்திருக்கிறார்.

என்றாலும் Eddie தன் மீது வைத்திருக்கும் அன்பு உண்மையானது என்று அறிந்த Tori, தங்களைப் பிரிக்க முயன்ற நபரை அறவே ஒதுக்கியிருக்கிறார். பல சந்திப்புகளுக்குப்பின் இருவரது விருப்பங்களும் ஒரே போல் இருக்க, இறுதியாக இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள்.

ஆரம்பத்தில் பலத்த எதிர்ப்பு இருந்தாலும் பின்னர் ஒருவழியாக எல்லாம் சரியாகி தாங்கள் இணைந்து வாழத் தொடங்கி விட்டாலும், ஜோடியாக வெளியே சுற்றும் விருப்பம் உடைய இருவருக்கும் ஒரு புதுப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இருவரையும் பார்ப்பவர்கள் அவர்களை தந்தையும் மகளும் என்றே நினைத்து விடுகிறார்களாம்.

தாங்கள் இருவரும் கணவனும் மனைவியும் என்று சொல்லி சொல்லி போரடித்துப் போய், இப்போதெல்லாம் அதைப் பற்றி தாங்கள் கவலைப்படுவதில்லை என்றாலும், மக்கள் மட்டும் இன்னும் தங்களை தவறாகவே புரிந்து கொள்கிறார்கள் என்கிறார் Tori. ஒரு பெண், ஒரு படி மேலே போய், அவர் உன் சுகர் டாடியா என்று வேறு கேட்டிருக்கிறார்.

எங்கள் உறவைக் குறித்து யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும், அப்படிச் சொல்பவர்களிடம், இது என் வாழ்க்கை, உங்கள் வாழ்க்கை அல்ல, உங்கள் வேலையைப் பாருங்கள், ஒத்த வயதுடைய தம்பதியரைப் போலவே நாங்களும் ஒருவரை ஒருவர் நேசிக்கும் சாதாரணமான ஒரு தம்பதி என்று சொல்கிறேன் என்கிறார் Tori.

காதல் மனைவியை கழு த்தை நெரி த்து கொ ன்று விட்டு நாடகமாடிய கணவன்!!

நாடகமாடிய கணவன்

குஜராத் மாநிலத்தில் காதல் மனைவியை கொ லை செய்துவிட்டு, த ற்கொ லை என நாடகமாடிய கணவனை பொ லிஸார் கை து செய்துள்ளனர். குஜராத் மாநிலத்தை சேர்ந்த மிஷ்பா என்கிற இளம்பெண் கடந்த 3 வருடங்களுக்கு முன் தன்னுடைய பாட்டி வீட்டிற்கு சென்று போது ஷோயிப் என்கிற இளைஞரை சந்தித்துள்ளார்.

நண்பர்களாக பழகிய இருவரும் நாளடைவில் காதலிக்க துவங்கியுள்ளனர். 3 வருடங்கள் காதலித்து வந்தது வீட்டிற்கு தெரியவந்ததை அடுத்து கடந்த ஒரு வருடத்திற்கு முன் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

திருமணம் முடிந்த சில மாதங்களிலே கணவன் – மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. மேலும், ஷோயிப் தான் பார்த்து வந்த பெயிண்டர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததால், மிஷ்பாவை வீட்டிற்கு சென்று பணம் வாங்கி வருமாறு வற்புறுத்த ஆரம்பித்துள்ளார்.

இதனால் அடிக்கடி வீட்டிற்கு செல்லும் சமயத்தில் எல்லாம் கணவன் துன் புறுத்துவதாக மிஷ்பா தன் தாயிடம் கூறியுள்ளார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த மிஷ்பா, திடீரென தூ க்கு போ ட்டு த ற்கொ லை செய்துகொண்டதாக அவருடைய தாய் வீட்டாருக்கு ஷோயிப் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனை நம்பாத மிஷ்பாவின் தாய் ஷெய்கன் (35), ஷோயிப் தன்னுடைய மகளை கொ லை செய்துவிட்டதாக பொ லிஸ் நிலையத்தில் பு கார் கொடுத்துள்ளார். அதன்பேரில் வழ க்கு பதிவு செய்துள்ள பொலிஸார், ஷோயிப்பை கை து செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்து 16 வயது மகளை பார்த்து கதறிய தந்தை!!

களை பார்த்து கதறிய தந்தை

இந்தியாவில் பள்ளி மாணவி ஒருவர் மரத் தில் தூ க்கி ட்டு த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர பிரதேச மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் மது ஸ்ரீ (16). பத்தாம் வகுப்பை முடித்த இவர் இடைநிலை முதலாமாண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் ஒரு வருடமாக அகில் ராஜேஷ் என்ற மாணவன் மதுவை பின் தொடர்ந்து வந்து தன்னை காதலிக்குமாறு தொந் தரவு செய்து வந்தான். இது குறித்து மது பெற்றோர் உதவியுடன் பொலிசில் புகார் அளித்த நிலையில் அகிலை அழைத்த பொலிசார் அவனுக்கு புத்திமதி கூறி எச்சரித்து அனுப்பினார்கள்.

அவன் 18 வயதாகாத சிறுவன் என்பதால் பொலிசார் அவனை தண்டிக்கவில்லை. இதையடுத்து இந்த பிரச்சனையை தவிர்க்க மதுவை அவர் பெற்றோர், பாட்டி வீட்டில் தங்க வைத்திருந்தனர். ஆனால் பொலிஸ் எச்சரி க்கையையும் மீறி அகில் மீண்டும் மதுவை பின் தொடர்ந்து தொல்லை கொடுத்தான்.

இதனால் மனமுடைந்த மது தனது வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக் கிட்டு த ற்கொ லை செய்து கொண்டார். இது குறித்து அரபு நாட்டில் இருக்கும் அவர் தந்தைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் ஊருக்கு வந்த அவர் மகள் சடலத்தை பார்த்து க தறி அழுதார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் தலைமறைவாக உள்ள அகிலை தேடி வருகிறார்கள். இதனிடையில் அகில் தனது வாட்ஸ் அப் ஸ்டேடஸில், என்னை விட்டு போய் விட்டாயா மது? என வருத்தமுடன் பேசியபடி டிக்டாக் வீடியோவை வெளியிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.