யாழிலிருந்து சென்ற ரயிலில் மோதுண்டு உயிரி ழந்தவர்களின் முழுமையான விபரங்கள்!!

ரயிலில் மோதுண்டு..

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்ற ரயிலில் மோதுண்டு உயி ரிழந்த தந்தை மற்றும் மகள் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளது. வெயங்கொட – வந்துரவ ரயில் வீதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் தந்தை மற்றும் மகளே உயிரி ழந்தனர். நேற்று காலை 6.30 மணியவில் இந்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் ஜா-எல கொட்டுகொட பகுதியை சேர்ந்த ருவன் சஞ்ஜீவ சிந்தக்க சில்வா என்ற 44 வயதான நபர் மற்றும் அவரது மகளான 11 வயதுடை ருசதி டிலன்சா ஆகியோர் உயிரி ழந்துள்ளனர்.

ருவன் சஞ்ஜீவ தனது மனைவியின் தந்தையின் தானத்தில் கலந்து கொண்டு, மகளை பாடசாலைக்கு அழைத்து செல்ல சென்ற சந்தர்ப்பத்தில், கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலில் இருவரும் மோதுண்டு உயிரி ழந்துள்ளனர்.

உயிரிழந்த மகள் 6ஆம் வகுப்பில் கல்வி கற்கின்ற நிலையில் பாடசாலையில் இடம்பெற்ற பரீட்சைக்கு முகம் கொடுப்பதற்காக தனது தந்தையுடன் செல்லும் போது இந்த விபத்தில் சிக்கியுள்ளார். உயி ரிழந்த தந்தை மகளின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வத்துப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீரினால் மூழ் கிய கிராமங்கள் மீண்டும் தோன்றியது : படையெடுக்கும் மக்கள்!!

மூழ்கிய கிராமங்கள்

இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மிகவும் பாரிய செயற்திட்டமான மொரகஹகந்த நீர்த்தேக்கத்தில் மூடப்பட்ட கிராமங்கள் மீண்டும் தென்பட்டுள்ளன.

நாட்டில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் நூற்றுக்கு 34 வீதம் வரை குறைவடைந்துள்ளது. இதன்காரணமாக நீரில் மூழ் கியிருந்த பல கிராமங்கள் மீண்டும் காட்சியளித்துள்ளதனை காண முடிந்துள்ளது.

நேற்று அந்த பிரதேசங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பொறியியலாளர்களால் இவை அவதானிக்கப்பட்டுள்ளது. மொரகஹகந்த நீர்த்தேக்கம் காரணமாக வேறு பிரதேசங்களுக்கு குடியேறிய மக்கள், மீண்டும் தோன்றிய தங்கள் கிராமங்களை பார்ப்பதற்கு படையெடுத்து வருகின்றனர்.

மீண்டும் தோன்றிய தங்கள் கிராமத்தில் உடை ந்த தங்கள் வீடுகளை பார்ப்பதற்கு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வருவதனை அவதானிக்க முடிந்துள்ளது. தங்கள் வீடுகளை மூழ் கடித்து நீர்த்தேக்கம் உருவாக்கிய போதிலும் தமக்கு குடிப்பதற்கு சுத்தமான நீர் இல்லை என அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

திடீரென நிலப்பகுதிக்குள் வந்த கடல் நீரால் பீதி யடைந்த மக்கள்!!

தென்னிலங்கையில் திடீரென கடல் நீர் நிலப்பரப்பிற்குள் வந்தமையினால் அந்தப் பகுதிகள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.

அம்பலங்கொட, கஹவ பிரதேசத்தில் இருந்து கொடகம வரை ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு கடல் நீர் தரைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக காலி – கொழும்பு பிரதான வீதிக்கு கல் மற்றும் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இன்றையதினம் கடல் மிகவும் கொந்தளிப்பு நிலையில் காணப்படும் என வளிமண்டவியல் திணைக்களம் நேற்று எச்சரித்திருந்தது.

இதன் காரணமாக கடல் நீர் தரைக்கு வந்திருக்கலாம் எனவும், அடிக்கடி இந்த பகுதியில் கடல் நீர் தரைக்கு வருவதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

வவுனியா ஓமந்தையில் 7 மிதிவெ டிகள் மீட்பு!!

மிதிவெ டிகள் மீட்பு

வவுனியா ஓமந்தை இரா ணுவச் சோ தனை நிலையத்திற்கும் விடுதலைப்புலிகளின் முன்னரங்க காவல் அர ணுக்கும் இடைப்பட்ட விளக்குவைத்தகுளம் பகுதியிலிருந்து இன்று காலை 7 மிதி வெ டிகளை மீட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா ஓமந்தைப்பகுதியில் முன்னர் இராணுவத்தரப்பினர் விடுதலைப்புலிகளின் முன்னரங்கப்பகுதியான விளக்குவைத்தகுளம் சூனியப்பிரதேசப்பகுதியிலிருந்து இராணுவத்தினர் வெளியேறிய பகுதியில் தனியாரிற்குச் சொந்தமான காணி ஒன்றிலில் நேற்று முதல் கனரக இயந்திரத்தின் உதவியுடன் துப்பரவுப்புணிகள் இடம்பெற்று வந்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை குறித்த பகுதியில் 7 மிதி வெ டிகள் காணப்பட்டுள்ளது இதையடுத்து இத்தகவலை பொலிசாருக்கு காணி உரிமையாளரினால் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அப்பகுதிக்குச் சென்ற பொலிசார் மிதி வெ டிகள் காணப்படும் பகுதியை அடையாளப்படுத்தியதுடன் நீதிமன்றத்தின் அனுமதியுடன் விஷேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அப்பா வயதுடையவரை மணந்த இளம்பெண் : மக்கள் எங்களை தவறாகவே புரிந்து கொள்கிறார்கள்!!

அப்பா வயதுடையவரை மணந்த இளம்பெண்

தன்னை விட 27 வயது மூத்த நபரை மணந்த அமெரிக்க இளம்பெண், தங்களை எல்லோரும் தவறாகவே புரிந்து கொள்வதாக வருத்தப்படுகிறார். Marylandஐச் சேர்ந்த Tori Barron (21) என்னும் இளம்பெண்ணும், Eddie Smith (48) என்பவரும் karaoke பார் ஒன்றில் சந்தித்துக் கொண்டார்கள்.

இருவர் கண்களும் சந்தித்துக் கொள்ள கண்டதும் காதல் உருவானது இருவருக்கும். இசை விரும்பிகளான இருவரும் தங்கள் நண்பர்களுடன் இரண்டு குழுக்களாக ஒரு karaoke பாருக்கு சென்றபோது சந்தித்திருக்கிறார்கள்.

அதில் Toriயின் குழுவில் இருந்த ஒரு ஆணுக்கும் அவர் மீது ஒரு கண் இருந்த நிலையில், Eddie மோசமானவர் என்றும், அவர் Toriயின் உடல் மீதுள்ள ஆசையினால்தான் அவரை விரும்புவது போல் நடிக்கிறார் என்றும் கூறி இருவரையும் பிரிக்கப் பார்த்திருக்கிறார்.

என்றாலும் Eddie தன் மீது வைத்திருக்கும் அன்பு உண்மையானது என்று அறிந்த Tori, தங்களைப் பிரிக்க முயன்ற நபரை அறவே ஒதுக்கியிருக்கிறார். பல சந்திப்புகளுக்குப்பின் இருவரது விருப்பங்களும் ஒரே போல் இருக்க, இறுதியாக இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள்.

ஆரம்பத்தில் பலத்த எதிர்ப்பு இருந்தாலும் பின்னர் ஒருவழியாக எல்லாம் சரியாகி தாங்கள் இணைந்து வாழத் தொடங்கி விட்டாலும், ஜோடியாக வெளியே சுற்றும் விருப்பம் உடைய இருவருக்கும் ஒரு புதுப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இருவரையும் பார்ப்பவர்கள் அவர்களை தந்தையும் மகளும் என்றே நினைத்து விடுகிறார்களாம்.

தாங்கள் இருவரும் கணவனும் மனைவியும் என்று சொல்லி சொல்லி போரடித்துப் போய், இப்போதெல்லாம் அதைப் பற்றி தாங்கள் கவலைப்படுவதில்லை என்றாலும், மக்கள் மட்டும் இன்னும் தங்களை தவறாகவே புரிந்து கொள்கிறார்கள் என்கிறார் Tori. ஒரு பெண், ஒரு படி மேலே போய், அவர் உன் சுகர் டாடியா என்று வேறு கேட்டிருக்கிறார்.

எங்கள் உறவைக் குறித்து யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும், அப்படிச் சொல்பவர்களிடம், இது என் வாழ்க்கை, உங்கள் வாழ்க்கை அல்ல, உங்கள் வேலையைப் பாருங்கள், ஒத்த வயதுடைய தம்பதியரைப் போலவே நாங்களும் ஒருவரை ஒருவர் நேசிக்கும் சாதாரணமான ஒரு தம்பதி என்று சொல்கிறேன் என்கிறார் Tori.

காதல் மனைவியை கழு த்தை நெரி த்து கொ ன்று விட்டு நாடகமாடிய கணவன்!!

நாடகமாடிய கணவன்

குஜராத் மாநிலத்தில் காதல் மனைவியை கொ லை செய்துவிட்டு, த ற்கொ லை என நாடகமாடிய கணவனை பொ லிஸார் கை து செய்துள்ளனர். குஜராத் மாநிலத்தை சேர்ந்த மிஷ்பா என்கிற இளம்பெண் கடந்த 3 வருடங்களுக்கு முன் தன்னுடைய பாட்டி வீட்டிற்கு சென்று போது ஷோயிப் என்கிற இளைஞரை சந்தித்துள்ளார்.

நண்பர்களாக பழகிய இருவரும் நாளடைவில் காதலிக்க துவங்கியுள்ளனர். 3 வருடங்கள் காதலித்து வந்தது வீட்டிற்கு தெரியவந்ததை அடுத்து கடந்த ஒரு வருடத்திற்கு முன் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

திருமணம் முடிந்த சில மாதங்களிலே கணவன் – மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. மேலும், ஷோயிப் தான் பார்த்து வந்த பெயிண்டர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததால், மிஷ்பாவை வீட்டிற்கு சென்று பணம் வாங்கி வருமாறு வற்புறுத்த ஆரம்பித்துள்ளார்.

இதனால் அடிக்கடி வீட்டிற்கு செல்லும் சமயத்தில் எல்லாம் கணவன் துன் புறுத்துவதாக மிஷ்பா தன் தாயிடம் கூறியுள்ளார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த மிஷ்பா, திடீரென தூ க்கு போ ட்டு த ற்கொ லை செய்துகொண்டதாக அவருடைய தாய் வீட்டாருக்கு ஷோயிப் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனை நம்பாத மிஷ்பாவின் தாய் ஷெய்கன் (35), ஷோயிப் தன்னுடைய மகளை கொ லை செய்துவிட்டதாக பொ லிஸ் நிலையத்தில் பு கார் கொடுத்துள்ளார். அதன்பேரில் வழ க்கு பதிவு செய்துள்ள பொலிஸார், ஷோயிப்பை கை து செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்து 16 வயது மகளை பார்த்து கதறிய தந்தை!!

களை பார்த்து கதறிய தந்தை

இந்தியாவில் பள்ளி மாணவி ஒருவர் மரத் தில் தூ க்கி ட்டு த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர பிரதேச மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் மது ஸ்ரீ (16). பத்தாம் வகுப்பை முடித்த இவர் இடைநிலை முதலாமாண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் ஒரு வருடமாக அகில் ராஜேஷ் என்ற மாணவன் மதுவை பின் தொடர்ந்து வந்து தன்னை காதலிக்குமாறு தொந் தரவு செய்து வந்தான். இது குறித்து மது பெற்றோர் உதவியுடன் பொலிசில் புகார் அளித்த நிலையில் அகிலை அழைத்த பொலிசார் அவனுக்கு புத்திமதி கூறி எச்சரித்து அனுப்பினார்கள்.

அவன் 18 வயதாகாத சிறுவன் என்பதால் பொலிசார் அவனை தண்டிக்கவில்லை. இதையடுத்து இந்த பிரச்சனையை தவிர்க்க மதுவை அவர் பெற்றோர், பாட்டி வீட்டில் தங்க வைத்திருந்தனர். ஆனால் பொலிஸ் எச்சரி க்கையையும் மீறி அகில் மீண்டும் மதுவை பின் தொடர்ந்து தொல்லை கொடுத்தான்.

இதனால் மனமுடைந்த மது தனது வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக் கிட்டு த ற்கொ லை செய்து கொண்டார். இது குறித்து அரபு நாட்டில் இருக்கும் அவர் தந்தைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் ஊருக்கு வந்த அவர் மகள் சடலத்தை பார்த்து க தறி அழுதார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் தலைமறைவாக உள்ள அகிலை தேடி வருகிறார்கள். இதனிடையில் அகில் தனது வாட்ஸ் அப் ஸ்டேடஸில், என்னை விட்டு போய் விட்டாயா மது? என வருத்தமுடன் பேசியபடி டிக்டாக் வீடியோவை வெளியிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க நயினை நாகபூசனி ஆலயத்தின் தேர்த்திருவிழா!!

நயினை நாகபூசனி ஆலயத்தின் தேர்த்திருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் தேர் திருவிழா இன்றையதினம் வெகு கோலாகலமாக இடம்பெற்றுள்ளது.

இலட்சக்கணக்கான பக்தர்கள் புடை சூழ வசந்த மண்டப பூசையை தொடர்ந்து பிள்ளையார் மற்றும் முருகனுடன் நாகபூசனி அன்னையின் உள்வீதி உலா இடம்பெற்றது.

அலங்கரித்த தேரில் பிரம்மாண்டமான கோலத்துடன் இடம்பெற்ற அன்னையின் தேர்த்திருவிழாவை காண இலட்சக்கணக்கானவர்கள் குழுமியிருந்தமை சிறப்பம்சம்.

பாடசாலை மாணவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான தகவல்!!

மாணவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான தகவல்

மாணவர்களின் பாடசாலை புத்தகப் பைக்களின் எடையை குறைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை கல்வி வெளியீட்டக ஆணையாளர் நாயகம் ஜயந்த விக்ரமநாயக்க வெளியிட்டுள்ளார்.

தரம் 6 முதல் தரம் 11 வரையிலான மாணவர்களுக்கு ஒரு வருடத்தில் மூன்று பாடப் புத்தகங்கள் மாத்திரமே அச்சிடப்படவுள்ளது. இந்த பாடப் புத்தகங்கள் மூன்றிலும் மூன்று தவணைகளுக்கான கற்பித்தல் நடவடிக்கைகளுக்குத் தேவையான அனைத்து விடயங்களும் மூன்று பிரிவுகளாக உள்ளடக்கப்படவுள்ளது.

எனினும் குறித்த திட்டத்தினை 2021 ஆம் ஆண்டே நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாடப் புத்தக எடைகளினால் ஏற்படும் சுமையை பெருமளவு குறைக்கப்பதற்காகவே இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை பாடப் புத்தகங்களை மூன்றாக அச்சிடுவதன் மூலம் பதிப்பக செலவு, போக்குவரத்து மற்றும் களஞ்சியப்படுத்தல் செலவுகளையும் குறைக்க முடியும்.

இலங்கையில் மக்களை அச் சுறுத்திய குள்ள மனிதன் சிக்கினான் : மிர ண்டுபோன பொலிஸார்!!

குள்ள மனிதன்

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் மக்களை அச் சுறுத்திய குள்ள மனிதன் பொலிஸாரினால் கை து செய்யப்பட்டுள்ளார். கடந்த 4 மாதங்களாக குள்ள மனிதனராக நடித்து கலவான மக்களை அச் சத்தில் வைத்திருந்த நபர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களாக கலவான, வெலிகும்புர மற்றும் அழுத்வத்தை ஆகிய பகுதிகளில் பெண்கள் பலரை அச்சப்படுத்திய செய்தி வெளியாகியிருந்தது. அவ்வாறான செயல்களில் குள்ள மனிதர்கள் அல்லது வேற்று கிரகவாசிகள் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் பரவியது.

முகம் முழுவதும் முடி வளர்த்திருந்த இந்த உருவம் குள்ள மனிதனுக்கு சமமானதாக காணப்பட்டதாக மக்கள் குறிப்பிட்டனர். இது தொடர்பில் தீவிர விசா ரணைகளை மேற்கொண்ட பொலிஸார், எவரையும் கைது செய்ய முடியவில்லை.

இந்த நிலையில் கலவான பேருந்து நிலையத்திற்கு அருகில் சந்தேகத்திற்குரிய முறையில் நடந்து கொண்ட நபர் ஒருவர் கை து செய்யப்பட்டுள்ளார். 34 வயதாக இந்த நபர் அக்குரஸ்ஸ பிரதேசத்தில் வைத்து கை து செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அவரது கையில் இருந்த பையை சோதனையிட்ட போது அதில் 25 ஆணு றைகளும், இறப்பரினால் செய்யப்பட்ட ஆணு றுப்பு ஒன்றும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாட்டு மக்களை பெரும் அச் சத்தில் வைத்திருந்த இந்த மர் மநபர், பா லியல் சம்பந்தமான பொருட்களுடன் சிக்கிய தொடர்பில் பொலிஸார் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீண்ட கால காதலரை மணமுடித்த இளம்பெண் : பிறந்தநாளில் எடுத்த அதிர்ச்சி முடிவு!!

இளம்பெண்

செர்பியா நாட்டில் பிரசவத்திற்கு பிறகான மனச்சோர்வால் அவதிப்பட்டுவந்த இளம்பெண் ஒருவர் துப் பாக்கியால் சு ட்டு த ற்கொ லை செய்துகொண்ட சம்பவம் அவரது குடும்பத்தாரை அதி ர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறித்த யுவதியின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வாங்குவதற்காக கணவன் வெளியே சென்ற நிலையிலேயே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

செர்பிய யுவதியான 28 வயது சுசானா பாபிக் என்பவரே த ற்கொ லை செய்துகொண்டவர். பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக நண்பர்கள் குடியிருப்புக்கு சென்ற போது, ர த்த வெள் ளத்தில் கிடந்த சுசானாவை கண்டு அதிர்ந்துள்ளனர். சம்பவத்தின்போது கணவரும் இல்லை என்பதால் அவரை மீட்டு உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இற ந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிள்ளை பிறக்கும் வரை சுசானாவும் கணவரும் உற்சாகமான வாழ்க்கையை முன்னெடுத்து வந்துள்ளனர்.

இரு மாதங்களுக்கு முன்னரே சுசானாவுக்கு பிள்ளை பிறந்துள்ளது. பாடசாலை காலம் முதல் காதலித்து வந்த இருவரும், கல்லூரியிலும் ஒன்றாகவே கல்வி பயின்றுள்ளனர். நீண்ட பல ஆண்டுகள் காதலித்த பின்னரே இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

குழந்தை பிறக்கும் வரை இவர்களுக்கு இடையே எந்த மனஸ்தாபவும் ஏற்பட்டது இல்லை என நண்பர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் குழந்தை பிறந்தது முதல் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டது போன்ற செயல்களை வெளிப்படுத்தியுள்ளதாக அவரது உறவினர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

10 வயது சிறுமியை உயி ருடன் கொளுத்திய தாயார் : தந்தையால் வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!

உயி ருடன் கொளுத்திய தாயார்

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணத்தில் வளர்ப்பு தாயாரால் கொ டுமைப்படுத்தப்பட்டு குப்பைத் தொட்டியில் வைத்து உயி ருடன் கொளு த்தப்பட்ட சம்பவத்தின் பின்னணி வெளியாகியுள்ளது.

ஜோர்ஜியா மாகாணத்தை உலுக்கிய இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட டிஃப்பனி மோஸ், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மர ண தண் டனை விதிக்கப்பட்டார். மாகாணத்திலேயே இவர் மட்டுமே பெண் ம ரண தண் டனை கை தியாக தற்போது உள்ளார். இமான் மோசின் முன்னாள் மனைவிக்கு பிறந்தவர் 10 வயதாகும் இமானி மோஸ். டிஃப்பனியை திருமணம் செய்த பின்னர் சிறுமி இமானி மோசும் இவர்களுடனையே வசித்து வந்துள்ளார்.

ஆனால் சிறுமி இமானி மீது எந்த ஒட்டுதலும் இன்றி, அவரை துன் புறுத்துவதையே வாடிக்கையாக கொண்டு வந்துள்ளார் டிஃப்பனி மோஸ். ஒருகட்டத்தில் நாளுக்கு ஒரு வேளை மட்டுமே உணவு வழங்கியுள்ளார் சிறுமி இமானிக்கு.

இந்த தகவல்கள் தெரிந்தும் தந்தையான இமான் மோஸ் கண்டுகொள்ளவில்லை என்பது மட்டுமின்றி, மனைவிக்கு ஆதரவாக மகளை துன் புறுத்தவும் செய்துள்ளார். பல நாட்கள் உணவின்றி வாடிய இமானி, அவரது கழிவுகளின் மீதே படுத்து தூங்கியுள்ளார்.

ஆனால் டிஃப்பனியின் எஞ்சிய பிள்ளைகள் வேளா வேளைக்கு உணவருந்தி ஆரோக்கியமாக இருந்துள்ளது. இதனிடையே 2013 அக்டோபர் மாதம் 911 எண்ணுக்கு அழைப்பு விடுத்த இமான் தமது 10 வயது மகள் இற ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசாருக்கு கடும் அதி ர்ச்சி காத்திருந்தது. இமானின் குடியிருப்பு அருகே உள்ள குப்பைத் தொட்டியில் மொத்தமாக எரி ந்த நிலையில் சிறுமி இமானியின் சட லம் மீட்கப்பட்டது.

இந்த வழக்கில், சொந்த பிள்ளைகளுடன் தலைமறைவான டிஃப்பனியை பொலிசார் கைது செய்தனர். வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் டிஃப்பனிக்கு மர ண தண் டனையும், மகளின் கொ லைக்கு உடந்தையாக இருந்த இமானுக்கு ஆயுள் தண் டனையும் விதித்து மாகாண நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

2 வயது மகளுடன் மாடியில் இருந்து குதித்த பெண் : வெளியான சோகப் பின்னணி!!

இந்தியாவின் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் குழந்தையுடன் பெண் ஒருவர் மா டியிலிருந்து குதி த்து த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தன்னை நிகழ்ச்சி ஒன்றுக்கு அழைத்து செல்ல கணவன் மறுத்ததாலையே குழந்தையுடன் அவர் மாடியிலிருந்து குதி த்து த ற்கொ லை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

2 வயது கைகுழந்தையுடன் மாடியிலிருந்து கீழே குதித்த அவர் சம்பவ இடத்திலே உயி ரிழந்துள்ளார்.

அவரது இரண்டு வயதுப் பெண் குழந்தை காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறது. குறித்த பெண்ணின் உ டல் பிரே த பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவரின் இந்த செயலுக்கு அந்த பெண்ணின் கணவர் தான் காரணமா என்று காவல்துறையினர் விசாரணை தொடங்கியுள்ளனர்.

முதல்கட்ட விசாரணையில், உயி ரிழந்த பெண், அவர் கணவரிடம் நிகழ்ச்சி ஒன்றுக்கு அழைத்துச்செல்லுமாறு கேட்டுள்ளார். அதற்கு அவரது கணவர் மறுப்புதெரிவித்துள்ளார். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட அந்த பெண், த ற்கொ லை செய்யும் மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அவர்கள் இருவரும் மகிழ்ச்சியான தம்பதிகளாக்கத்தான் வாழ்ந்துள்ளனர். அவர்கள் அண்மையில் இலங்கைக்கு சுற்றுலா சென்று திரும்பியதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மனைவியின் பொலிஸ் சீருடையை திருடிய கணவன் : காதலியுடன் சேர்ந்து செய்த காரியம்!!

திருடிய கணவன்

மனைவியின் பொலிஸ் சீருடையை திருடி காதலியுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கணவனை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஜிதேந்திர ராய். இவருடைய மனைவி தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் ஜிதேந்திர ராயின் மனைவி பொலிஸார் நிலையத்தில், தன்னுடைய கணவன் வீட்டில் இருந்து வெளியேறி மஸ்கீட் சங்கீதா என்கிற பெண்ணுடன் வசித்து வருவதாக புகார் கொடுத்தார். அதன்பேரில் பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது, ஜிதேந்திர ராய் தன்னுடைய மனைவியின் பொலிஸ் சீருடையை திருடி சங்கீதாவிற்கு கொடுத்துள்ளார்.

மேலும், போலியான அடையாள அட்டை தயார் செய்து காதலியுடன் சேர்ந்து கொள்ளைச்சம்பவங்களில் ஈட்டுபட்டு வந்திருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் இருவரையும் கைது செய்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தோல்வி எதிரொலி : கோஹ்லி பதவி விலகும் நேரம் வந்துவிட்டது : அடுத்த தலைவர் இவர்தான்!!

அடுத்த தலைவர் இவர்தான்

விராட் கோஹ்லி குறைந்த பட்ச ஓவர் கிரிக்கெட்டில் அணித்தலைவர் பதவியை விட்டுக்கொடுக்கும் நேரம் வந்துவிட்டதாக உள்நாட்டு வீரரும் முன்னாள் இந்திய சர்வதேச வீரருமான வாசிம் ஜாஃபர் பரிந்துரைத்துள்ளார்.

இந்திய அணித்தலைவராக ரோகித்தை நியமனம் செய்யுங்கள் என்று மறைமுகமாக டெஸ்ட் அணி முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் கோரி இருக்கிறார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார்.

இந்திய ஒருநாள் அணித்தலைவர் பொறுப்பை ரோகித் சர்மாவிடம் ஒப்படைக்கும் நேரம் வந்துவிட்டதா?, 2023ம் ஆண்டு உலக கோப்பையில் ரோகித் சர்மா இந்திய அணியை வழிநடத்த நான் விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.வாசிம் ஜாஃபரின் கருத்து இந்திய கிரிக்கெட்டில் ஒரு விவாதத்தை தொடங்கியுள்ளது.

மேலும், ரோகித் மற்றும் பும்ரா போன்ற உறுதியான திறன்கள் அடிப்படையில் அணியில் இடம் பிடித்தவர்களைத் தவிர்த்து, கோஹ்லி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரால் விரும்பப்படும் வீரர்களை மட்டுமே இந்திய அணி கொண்டுள்ளது என்று ஒரு டைனிக் ஜாக்ரான் அறிக்கை கூறுகிறது.

மீண்டும் சினிமாவில் குஷ்பு : அரசியலில் இருந்து விலக திட்டம்!!

மீண்டும் சினிமாவில் குஷ்பு

குஷ்பு, தீவிர அரசியலில் இருந்து விலகி மீண்டும் சினிமாவுக்கு திரும்ப விரும்புவதாக தெரிவித்துள்ள அவரின் டுவிட்டர் பதிவிற்கு ஆதரவு குவிந்து. காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக உள்ள குஷ்பு, தீவிர அரசியலில் இருந்து விலகி மீண்டும் சினிமாவுக்கு திரும்ப விரும்புவதாக தெரிவித்துள்ள அவரின் டுவிட்டர் பதிவிற்கு ஆதரவு குவிந்து வருகிறது.

மக்களவை தேர்தலில், காங்கிரஸ் கட்சி கடந்த முறை போல, இந்தமுறையும் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெறமுடியாமல் படுதோல்வியடைந்தது. இதனையடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல், அப்பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளார்.

பல்வேறு மாநிலங்களின் தலைவர்கள் தொடர்ந்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக உள்ள நடிகை குஷ்புவும், மீண்டும் நடிக்க வந்துவிடவா என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, குஷ்பு, டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, தாம் மீண்டும் சினிமாவுக்கு வர விரும்புவதாகவும் இது தொடர்பாக கருத்துகளை தெரிவிக்குமாறும் அவர் கேட்டிருந்தார். குஷ்புவின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் ஆதரவு குவிகிறது. மனோபாலா, நடிகை கஸ்தூரி, நீத்து சந்திரா உள்ளிட்டோர், குஷ்பு மீண்டும் சினிமாவிற்கு வர ஆதரவும் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல். அதனால் நீங்கள் இப்படி சிந்திப்பது இயல்பானதுதான். அரசியலில் நடிப்பதைவிட சினிமாவில் நடிப்பதற்கு அதிக வாய்புகள் கிடைக்கும் என ஒரு ரசிகர், பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.