விராட் கோஹ்லி குறைந்த பட்ச ஓவர் கிரிக்கெட்டில் அணித்தலைவர் பதவியை விட்டுக்கொடுக்கும் நேரம் வந்துவிட்டதாக உள்நாட்டு வீரரும் முன்னாள் இந்திய சர்வதேச வீரருமான வாசிம் ஜாஃபர் பரிந்துரைத்துள்ளார்.
இந்திய அணித்தலைவராக ரோகித்தை நியமனம் செய்யுங்கள் என்று மறைமுகமாக டெஸ்ட் அணி முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் கோரி இருக்கிறார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார்.
இந்திய ஒருநாள் அணித்தலைவர் பொறுப்பை ரோகித் சர்மாவிடம் ஒப்படைக்கும் நேரம் வந்துவிட்டதா?, 2023ம் ஆண்டு உலக கோப்பையில் ரோகித் சர்மா இந்திய அணியை வழிநடத்த நான் விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.வாசிம் ஜாஃபரின் கருத்து இந்திய கிரிக்கெட்டில் ஒரு விவாதத்தை தொடங்கியுள்ளது.
மேலும், ரோகித் மற்றும் பும்ரா போன்ற உறுதியான திறன்கள் அடிப்படையில் அணியில் இடம் பிடித்தவர்களைத் தவிர்த்து, கோஹ்லி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரால் விரும்பப்படும் வீரர்களை மட்டுமே இந்திய அணி கொண்டுள்ளது என்று ஒரு டைனிக் ஜாக்ரான் அறிக்கை கூறுகிறது.
குஷ்பு, தீவிர அரசியலில் இருந்து விலகி மீண்டும் சினிமாவுக்கு திரும்ப விரும்புவதாக தெரிவித்துள்ள அவரின் டுவிட்டர் பதிவிற்கு ஆதரவு குவிந்து. காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக உள்ள குஷ்பு, தீவிர அரசியலில் இருந்து விலகி மீண்டும் சினிமாவுக்கு திரும்ப விரும்புவதாக தெரிவித்துள்ள அவரின் டுவிட்டர் பதிவிற்கு ஆதரவு குவிந்து வருகிறது.
மக்களவை தேர்தலில், காங்கிரஸ் கட்சி கடந்த முறை போல, இந்தமுறையும் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெறமுடியாமல் படுதோல்வியடைந்தது. இதனையடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல், அப்பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளார்.
பல்வேறு மாநிலங்களின் தலைவர்கள் தொடர்ந்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக உள்ள நடிகை குஷ்புவும், மீண்டும் நடிக்க வந்துவிடவா என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, குஷ்பு, டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, தாம் மீண்டும் சினிமாவுக்கு வர விரும்புவதாகவும் இது தொடர்பாக கருத்துகளை தெரிவிக்குமாறும் அவர் கேட்டிருந்தார். குஷ்புவின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் ஆதரவு குவிகிறது. மனோபாலா, நடிகை கஸ்தூரி, நீத்து சந்திரா உள்ளிட்டோர், குஷ்பு மீண்டும் சினிமாவிற்கு வர ஆதரவும் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல். அதனால் நீங்கள் இப்படி சிந்திப்பது இயல்பானதுதான். அரசியலில் நடிப்பதைவிட சினிமாவில் நடிப்பதற்கு அதிக வாய்புகள் கிடைக்கும் என ஒரு ரசிகர், பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஓமந்தை அரசர்பதி கண்ணகை அம்மன் கோவில் வருடாந்த பொங்கல் விழா கடந்த 08.07.2019 அன்று ஆரம்பமாகி ஆலயத்தின் வழிபாடுகள் இடம்பெற்று இன்று (15.07) பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது.
இன்று மாலை விஷேட பூஜை வழிபாட்டுடன் கூடிய பொங்கல் நிகழ்வும் சுவாமி உள்வீதி, வெளிவீதி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க இருக்கின்றார்.
பெருமளவு பக்த அடியார்கள் பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். அம்பாளின் அருளினைப் பெற்றுய்யுமாறும் நாளைய தினம் வைரவசாந்தி இடம்பெற்று பூஜைகளுடன் நிறைவுறவுள்ளதாக ஆலய நிர்வாகசபையினர் தெரிவித்துள்ளனர்.
அண்டவெளியில் நாளைய தினம் ஏற்படும் சந்திரகிரகணத்தை பார்க்கும் இலங்கை மக்களுக்கும் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கதிரவ ஒளியால் ஏற்படும் புவியின் நிழலிற்குள் நிலவு கடந்து செல்லும் போது நிகழ்வதே நிலவு மறைப்பு அல்லது சந்திர கிரகணம் (lunar eclipse) என்படும். ஒரு முழுநிலவு நாளில் மட்டுமே நிலவு மறைப்பு நிகழ்கிறது.
எனவே நாளை நள்ளிரவிற்கு பின்னர், அடுத்தநாள் அதிகாலை 12.13 இற்கு சந்திரகிரகணம் ஆரம்பமாககி, அதிகாலை 5.47 அளவில் சந்திர கிரகணம் நிறைவு பெறவுள்ளது. இது கதிரவன், புவி மற்றும் நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் போது மாத்திரமே சாத்தியமாகும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நிலவின் இடம் மற்றும் அதன் சுற்றுப்பாதையைப் பொறுத்து நிலவு மறைப்பின் வகையும் அது நீடிக்கும் கால அளவும் வேறுபடும். இதேவேளை முழுமையான நிலவு மறைப்பின் போது, நிலவின் மீது விழும் கதிரவ ஒளியை புவி முற்றிலும் தடுக்கிறது. அப்போது, கதிரவ வெளிச்சத்தின் மிகச் சிறிய அளவு புவியின் வளிமண்டலம் வழியாக ஒளிவிலகல் அடைந்து நிலவின் மீது படுகிறது.
இந்த வருடத்திற்கான இறுதி சந்திரகிரகணம் இது என்பதுடன், 2021 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதியே இலங்கையர்களுக்கு அடுத்த சந்திரகிரகணம் தென்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் ஆய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இலங்கை, அவுஸ்ரேலியா, ஆபிரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில நாடுகளில் இவ்வாறு சந்திர கிரகணம் தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
25 மில்லியன் Android தொலைபேசிகளுக்கு புதிய Malware அல்லது தீங்கிழைக்கும் தன்மை தாக்கப்படும் ஆபத்துக்கள் உள்ளதாக புதிய கண்டுபிடிப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த Malware ஆபத்து சீன இணைய நிறுவனத்திடம் உள்ள Android கட்டமைப்பிற்கான “9Apps” என்ற பெயரில் 25 மில்லியன் Android கையடக்க தொலைபேசிகளுக்கு பரவியுள்ளதாக கண்டுபிடிப்புகளில் தெரியவந்துள்ளது.
9 Apps என்ற இந்த Android ஆபத்து சீனா, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளை இலக்கு வைத்து இரண்டாம் தரப்பினால் நவீனமயப்படுத்தப்பட்டு விற்பனையாகும் Android கையடக்க தொலைபேசிகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை பிரபலமடைந்துள்ளது.
இந்த ஆபத்து 25 மில்லியன் கையடக்க தொலைபேசிகளுக்கு பரவியுள்ள நிலையில் அமெரிக்காவில் 303,000 தொலைபேசிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவ்வாறு பாதிக்கப்பட்ட 137,000 கையடக்க தொலைபேசிகள் இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விசேடமாக இரண்டாவது தரப்பு ஊடாக நவீனப்படுத்தப்பட்ட WhatsApp, Opera Mini, Flipkart, SwiftKey போன்றவைகளின் ஊடாக பரவியுள்ளது.
இந்த பாதிப்பின் மூலம் கையடக்க தொலைபேசியில் உள்ள ஆவணங்கள், புகைகப்படங்கள் இலக்கங்கள் போன்றவை வெளியாட்கள் பெற்றுகொள்ள முடியும் என்பதனால், இலங்கையர்கள் யாரும், இரண்டாம் தரப்பினரால் நவீனப்படுத்தப்பட்ட கையடக்க தொலைபேசிகளை பெற்றுக் கொள்ள வேண்டாம் என இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் இலங்கை மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில், மோட்டார் சைக்கிள் ஒன்று மோதுண்டதில், அதில் பயணித்த நபர் மற்றும் அவரது மகள் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 6.45 மணியளவில் வேயங்கொட, வதுரவ ரயில் வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர். 45 வயதுடைய தந்தையும் 11 வயதுடைய மகளுமே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் வத்துபிட்டவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. ரயில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், ரயில் வீதியில் இந்த இருவரும் பயணிக்க முயற்சித்த போது, வேறு திசையில் இருந்து வந்த ரயில் இவர்களில் மோதியதாக குறிப்பிடப்படுகின்றது.
வவுனியாவில் சிறைக்கைதி தப்பியோடியமையினால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலை ஏற்பட்டிருந்தது. வவுனியா சிறைச்சாலையில் இருந்து சிறைச்சாலைக்கு வெளியே சென்ற நபரே இவ்வாறு தப்பியோடியுள்ளார். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
நேற்று மாலை 2 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஹெரோயின் கடத்திய குற்றச்சாட்டில் கொழும்பை சேர்ந்த வீரசிங்கம் முதியன்சலாகே பியந்தஅப்புகாமி என்ற நபர் உட்பட பலர் சிறைச்சாலையை சுற்றி சுத்தப்படுத்தி கொண்டிருந்த போது தப்பித்து சென்றுள்ளார்.
வேலைசெய்த இடத்திலிருந்து கைதி பலமணிநேரமாக திரும்பாததால் சிறைக்காவலர் சென்று பார்த்தபோது கைதி தப்பிச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது. தப்பிச் சென்ற இக்கைதியைத் தேடி வவுனியா சிறைக்காவலர்கள் வவுனியா பொலிசாருடன் இணைந்து தேடுதல் நடவடிக்களை மேற்கொண்டு வருகின்றனர்.
தப்பிச் சென்ற கைதியை தேடி கண்டு பிடித்து சிறைச்சாலைக்கு கொண்டு வருவதற்குரிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இதன் பின்னணியில் யாரும் செயற்பட்டார்களா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
—
வாழ் நாள் முழுவதும் சாரதி அனுமதிப்பத்திரத்தை ரத்து செய்யும் வகையில் சட்டத் திருத்தம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, பயணிகள் போக்குவரத்து வாகனமொன்றை செலுத்தும் சாரதி குடி போ தையில் வாகனத்தைச் செலுத்தினால் அல்லது குடி போ தையில் வாகன விபத்தொன்றை மேற்கொண்டிருந்தால், குறித்த சாரதிக்கு வாழ்நாள் த டை விதிக்கப்பட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2019ம் ஆண்டு 10ம் இலக்க மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தின் 216 திருத்தத்தின் அடிப்படையில் குடி போ தையில் வாகனம் செலுத்தினால் மூன்று வகையிலான தண்ட னைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தனியார் வாகனமொன்றை செலுத்திய சாரதி குடி போ தையில் இருந்திருந்தால், 25000 ரூபா முதல் 30000 வரையிலான அப ராதம் அல்லது 3 மாத சி றைத் தண் டனை விதித்தல் அல்லது இரண்டு தண்ட னைகளையும் விதித்தல் மற்றும் 12 மாத காலம் சாரதி அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்படும்.
பயணிகள் போக்குவரத்து வாகனமொன்றின் சாரதி குடி போ தை யில் வாகனத்தை செலுத்தியிருந்தால் 25000 ரூபா முதல் 30000 வரையிலான அப ராதம் அல்லது 6 மாத சி றைத்த ண்டனை விதித்தல் அல்லது இரண்டு தண் டனைகளையும் விதித்தல் மற்றும் சாரதிக்கு வாகனம்செலுத்த வாழ்நாள் தடை விதிக்கப்பட முடியும்.
இதேவேளை, குடி போ தையில் வாகனம் செலுத்தி வாகன விபத்து ஒன்றை மேற்கொண்டிருந்தால் 100000 ரூபா முதல் 150000 வரையிலான அபராதம் அல்லது 2 ஆண்டுகளுக்கு குறையாத 10 ஆண்டுகளுக்கு மேற்படாத சி றைத்த ண்டனை விதித்தல் அல்லது இரண்டு தண் டனைகளையும் விதித்தல் மற்றும் சாரதிக்கு வாகனம்செலுத்த வாழ்நாள் தடை விதிக்கப்பட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறைத் திணைக்களம் இது பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாயின் பெறுமதி நூற்றுக்கு 4.1 வீதத்தில் வலுவடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. வார இறுதியில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 177.21 ரூபாயாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
180 ரூபாவை கடந்த நிலையில் காணப்பட்ட அமெரிக்க டொலரின் பெறுமதி தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிக்கைக்கமைய இந்த விடயம் வெளியாகி உள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாவின் பெறுமதி நூற்றுக்கு 16 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
தமிழ் நாடு, திருமுருகநாத சுவாமி திருமட முதல்வர் தவத்திரு சுந்தரராச அடிகளார் வவுனியாவிற்கு வருகை தந்து கந்தசாமி ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜையில் கலந்து கொண்டார்.
சிவபூமி திருவாசக விழாவிற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த தமிழ் நாடு, அன்னைப்புதூர், திருமுருகன்பூண்டி, திருமுருகநாத சுவாமி திருமட முதல்வர் தவத்திரு சுந்தரராச அடிகளார் மற்றும் தமிழ் நாடு திருமுறைக் கலாநிதி, பண்ணிசை பேரறிஞர் கலைமாமணி திருத்தணி நா.சுவாமிநாதன் ஓதுவார் ஆகியோர் நேற்று வவுனியாவிற்கு வருகை தந்த நிலையில் கந்தசாமி ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜையில் பங்கெடுத்ததுடன்,
ஆலயத்தையும் பார்வையிட்டனர். அத்துடன் ஆலயத்திற்கு வருகை தந்த அடியார்கள் மற்றும் அடிகளாரை தரிசிக்க சென்றவர்களுக்கு ஆசிகளையும் வழங்கினார்.
அடிகளார் மற்றும் பண்ணிசை ஓதுவார் ஆகியோருக்காக கந்தசாமி ஆலய பிரதம குரு உமா சுதக் குருக்கள் தலைமையில் விசேட பூஜை வழிபாடு இடம்பெற்றது.
இதில் சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் இலங்கைக் கிளைத் தலைவர் சிவ.கஜேந்திரகுமார், வவுனியா மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியத் தலைவர் திருக்கேதீஸ்வரன், வவுனியா நகரசபை உறுப்பினர் க.சுமந்திரன், கந்தசாமி ஆலய நிர்வாக சபை உறுப்பினர் சுந்தரராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நியூஸிலாந்து அணியுடனான இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி சூப்பர் ஓவரில் வெற்றிபெற்றுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி நேற்று மாலை இலங்கை நேரப்படி 3.00 மணியளவில் லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து, இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களை பெற்றது.242 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து அணி சார்பில் ஆரம்ப வீரர்களாக ஜோனி பெயர்ஸ்டோ – ஜோசன் ரோய் ஆகியோர் களமிறங்கினர்.
நியூஸிலாந்து அணியினர் மேற்கொண்ட பந்துப் பரிமாற்றங்களினால் திக்குமுக்காடிய ரோய் 17 ஓட்டத்துடன் 5.4 ஆவது ஓவரில் ஆட்டமிழந்து வெளியாறினார் (28-1). முதல் விக்கெட் 28 ஓட்டத்துக்கு வீழ்த்தப்பட்டதனால் இரண்டாவது விக்கெட்டுக்காக களமிறங்கிய ஜோ ரூட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வர மறுமுணையில் பெயர்ஸ்டோ ஓட்டங்களை வேகமாக பெற முற்பட்டார்.
இதனால் இங்கிலாந்து அணி 10 ஓவரில் 39 ஓட்டத்தையும், 15 ஓவரில் 56 ஓட்டத்தையும் பெற்றது. 17 ஆவது ஓவருக்காக பந்துப் பரிமாற்றம் மேற்கொண்ட கிரேண்ட்ஹோம் அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் ரூட்டை 7 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க வைத்து வெளியேற்ற, 19.3 ஆவது ஓவரில் பெயர்ஸ்டோ 36 ஓட்டத்துடன் லொக்கி பெர்குசனின் பந்தில் போல்ட் ஆனார் (71-3).
ரூட்டின் ஆட்டமிழப்பையடுத்து களமிறங்கிய அணித் தலைவர் இயன் மோர்கன் 23.1 ஆவது ஓவரில் 9 ஓட்டத்துடன் ஜேம்ஸ் நீஷமின் பந்தில் லொக்கி பெர்குசனின் அபார பிடியொடுப்பினால் களம் விட்டு நீங்கினார்.
இதனால் இங்கிலாந்து அணி 86 ஓட்டத்துக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து நிலை தடுமாறியது. இந் நிலையில் 5 ஆவது விக்கெட்டுக்காக பென் ஸ்டோக் மற்றும் பட்லர் ஜோடி சேர்ந்து நியூஸிலாந்து அணியின் பந்துகளை அனைத்து திசைகளிலும் அடி த்தாட அணியின் ஓட்ட எண்ணிக்கை அதிகரித்தது.
அதன்படி 27.3 ஆவது ஓவரில் பென்ஸ்டோக் ஒரு நான்கு ஓட்டத்தை விளாச இங்கிலாந்து அணி 100 ஓட்டங்களை கடந்ததுடன், 37.2 ஆவது ஓவரில் 150 ஓட்டங்களையும் கடந்தது. ஒரு கட்டத்தில் 40 ஓவருக்கு 170 ஓட்டங்களை இங்கிலாந்து அணி பெற்றவேளை வெற்றிக்கு 60 பந்துகளுக்கு 72 ஓட்டம் என்ற நிலை இருந்தது. ஆடுகளத்தில் பென் ஸ்டோக் 43 ஓட்டத்துடனும், பட்லர் 42 ஓட்டத்துடனும் தொடர்ந்து துடுப்பெடுத்தாடி வந்தனர்.
தொடர்ந்து 43.2 ஆவது பந்தில் ஒரு நான்கு ஓட்டத்தை விளாசி பட்லர் அரைசதம் கடக்க மறுமுணையில் பென் ஸ்டோக் அதே ஓவரின் ஐந்தாவது பந்தில் அரைசதம் பெற்றார். 32 பந்துகளுக்கு 46 ஓட்டம் என்ற இக்கட்டான நிலையிருந்த வேளையில் பட்லர் 44.5 ஆவது ஓவரில் மொத்தமாக 60 பந்துகளை எதிர்கொண்டு 6 நான்கு ஓட்டம் அடங்கலாக 59 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேற ஆட்டம் சூ டு பிடித்தது.
45 ஓவர்களுக்கு இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 196 ஓட்டங்களை பெற, வெற்றிக்கு 30 பந்துகளுக்கு 46 என்ற நிலையானது. (பென்ஸ்டோக் – 51, கிறிஸ் வோக்ஸ் – 0). 46.1 ஆவது ஓவரில் கிறிஸ் வோக்ஸ் லொக்கி பெர்குசனின் பந்து வீச்சில் 2 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க (203-6), நியூஸிலாந்து அணிப் பக்கம் அதிர்ஷ்ட காற்று வீசத் தொடங்கியது.
7 ஆவது விக்கெட்டுக்காக பிளாங்கட் களமிறங்கி துடுப்பெடுத்தாட 18 பந்துகளுக்கு 34 என்ற நிலையும் 12 பந்துகளுக்கு 24 என்ற நிலையுமிருக்க பிளாங்கட் 48.3 ஆவது ஓவரில் 10 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார் (220-7). தொடர்ந்து வந்த ஜோப்ர ஆர்ச்சரும் 49 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் எதுவித ஓட்டமின்றி டக்கவுட் ஆக இங்கிலாந்தின் வெற்றிக்கு 6 பந்துகளுக்கு 15 என்ற இக்கட்டான நிலையானது. ஆடுகளத்தில் பென்ஸ்டோக் 70 ஓட்டத்துடனும், அடில் ரஷித் எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
இறுதி ஓவரை எதிர்கொண்ட பென்ஸ்டோக் அந்த ஓவரின் முதல் இரு பந்துகளையும் டொட் ஆக்கினார். எனினும் மூன்றாவது பந்தில் 6 ஓட்டத்தை விளாசித் தள்ளினார். அத்துடன் நான்காவது பந்தில் 2 ஓட்டங்களை பெற முற்பட்ட வேளை இங்கிலாந்துக்கு அதிர்ஷ்ட காற்று வீசி அந்த பந்தில் மொத்தமாக 6 ஓட்டம் பெறப்பட்டது. இதனால் இங்கிலாந்துக்கு 2 பந்துகளில் 3 ஓட்டம் நிலையானது.
அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் இரண்டு ஓட்டம் பெற முற்பட்டபோது அடில் ரஷித் ரன் அவுட் ஆக, ஒரு பந்துக்கு 2 ஓட்டம் என்ற நிலையானது. இறுதிப் பந்தை பென்ஸ்டோக் எதிர்கொண்டார். எனினும் அந்த ஓவரில் 2 ஓட்டம் பெற முற்பட ஒரு ஒட்டம் மாத்திரம் பெறப்பட்டதுடன், மார்க்வூட் ரன் அவுட் ஆனார்.
இதனால் சூப்பர் ஓவர் என்ற நிலையானது. சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் அரங்கில் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டமை இதுவே முதற் தடவையாகும். பந்து வீச்சில் நியூஸிலாந்து அணி சார்பில் லொக்கி பெர்குசன் மற்றும் ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், கிரேண்ட்ஹோம் மற்றும் மேட் ஹென்றி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
சூப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 15 ஓட்டங்களை பெற, நியூஸிலாந்தின் வெற்றிக்கு 16 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது. 16 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணிக்கும் இறுதிப் பந்தில் இரண்டு ஓட்டம் என்ற நிலையானது எனினும் அந்தப் பந்தில் ஒரு ஓட்டம் மாட்டும் பெறப்பட, சூப்பர் ஓவர் விதிப்படி ஒரு அணி அதிகபடியான நான்கு ஓட்டங்களை பெற்ற அணிக்கே வெற்றி கிட்டும்.
அதன்படி இப் போட்டியில் இங்கிலாந்து அணியே அதிகபடியான நான்கு ஓட்டங்களை விளாசித் தள்ளியமையினால் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத்தை கைப்பற்றி 44 வருடகால கிரிக்கெட் கனவை நனவாக்கியது.
வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் நேற்று (14.07.2019) இரவு 10.00 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியாவிலிருந்து மன்னார் வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கில் மீது மன்னார் வீதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் மோதி விபத்துக்குள்ளானதுடன் வீதியில் துவிச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்து முதியவரையும் மோதித்தள்ளியுள்ளது.
இவ்விபத்தில் இரு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் துவிச்சக்கரவண்டி சேதமடைந்துள்ளதுடன் இரு மோட்டார் சைக்கிலிலும் பயணித்த நான்கு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து இடம்பெறுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னர் வவுனியா – மன்னார் பிரதான வீதி பகுதியில் விபத்துக்கு காரணமாகவிருந்த மோட்டார் சைக்கிலினை போக்குவரத்து பொலிஸார் மறித்த சமயத்தில் பொலிஸாரின் தடுப்பினை மீறி பயணித்ததாக சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸார் தெரிவித்ததுடன்,
பொலிஸாரின் தடுப்பினை மீறி பயணித்ததன் காரணமாகவே இவர்கள் அதிவேகமாக பயணித்திருக்கலாம் என போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
வெளிநாடு ஒன்றில் புதுமண தம்பதி ஒன்று தங்கள் திருமண விழாவில் கலந்துகொள்ள வந்தவர்களிடம் விருந்துக்கான பணத்தை வசூலித்தது தற்போது விவாததை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக குறித்த திருமணத்தில் கலந்துகொண்ட பெண் ஒருவர் தமது பேஸ்புக் பக்கத்தில் அம்பலப்படுத்தியுள்ளார்.
குறித்த சம்பவத்தை வாசித்த பலரும், திருமண விழாவுக்கான செலவை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் ஏன் விருந்தினர்களை அழைத்து திருமணம் செய்து கொள்ள வேண்டும்? ஆடம்பர விழா தேவையா? ஏன் நீங்கள் அரசு சார்பில் உள்ள அரங்கத்தில் திருமணம் செய்துகொள்ள கூடாது?
விருந்தினர்களை அவர்களின் உணவுக்கு பணம் செலுத்த கோருவது அவர்களை அவமானப் படுத்தும் செயல் அல்லவா என பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர். ஒருவர், இதுபோன்று எனது சொந்த சகோதரி அவரது திருமண விருந்துக்கு பணம் செலுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக அந்த விழாவை புறக்கணிப்பேன் என கூறியுள்ளார்.
இன்னொருவர், உங்களால் எத்தனை விருந்தினர்களுக்கு உணவு வழங்க முடியுமோ அந்த எண்ணிக்கையிலான விருந்தினர்களை மட்டும் அழைத்துக் கொள்ளுங்கள் என காட்டமாக பேசியுள்ளார். ஒரு பெண்மணி, சரி, எனது உணவுக்கான பணத்தை நான் அளிக்க விரும்புகிறேன், ஆனால் ஏன் கறாராக 50 டொலர் வசூலிக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒருவர், பரிசு பொருட்கள் கட்டாயமல்ல என்றால் உணவுக்கு தனியாக பணம் தருவதில் தவறில்லை என குறிப்பிட்டுள்ளார்.இந்த தகவலை பகிர்ந்து கொண்ட பெண்மணி, அந்த திருமண தம்பதிகளின் புகைப்படத்தையும் தமது பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். அந்த தம்பதிகளுக்கு தங்கள் திருமணத்தை ஆடம்பரமாக கொண்டாட வசதி இல்லை எனவும்,
இதனால் 40 விருந்தினர்களை மட்டுமே தங்களின் திருமணத்திற்கு அவர்கள் அழைத்துள்ளனர். மட்டுமின்றி, திருமணத்திற்கு வருபவர்கள் விருந்தில் கலந்துகொள்ள 50 டொலர் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர். இந்த கட்டணம் வசூலிக்கும் திட்டமே விருந்தினர்களை ஆத்திரம் கொள்ள வைத்துள்ளது.
இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ஒரு பிரித்தானிய இளம்பெண், அதிக மேற்கத்திய நாகரீகத்தில் வளர்வதாகக் கூறி அவர் எதிர்பாராத ஒரு தண்டனையை அவரது பெற்றோர் கொடுத்துள்ளனர். சிறு வயதாக இருக்கும்போது Nyla Khan (30)ஐ உறவினர் ஒருவருக்கு மணமுடித்துக் கொடுப்பதாக வாக்களித்திருந்தனர் அவரது பெற்றோர்.
ஸ்காட்லாந்தில் வளர்ந்து வந்த நிலையில் Nylaவை ஒரு நாள் விடுமுறைக்கு செல்வதாகக் கூறி பாகிஸ்தானுக்கு அழைத்துச் சென்றுள்ளனர் அவரது பெற்றோர். அங்கு, காலையில் தூங்கி எழுந்திருக்கும்போது, தன்னருகே குடும்பத்தினர் உறவினர் அனவருமே தன்னை சூழ்ந்து உட்கார்ந்திருப்பதைக் கண்ட Nylaவுக்கு வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது.
அன்று காலை முதல் மாலை வரை அனைவரும் மாறி மாறி Nyla மேற்கத்திய நாகரீகத்தில் வளர்வது பாவம் என்றும், அதற்கு பிராயச்சித்தமாக Nylaவின் உறவினரை மணக்க வேண்டும் என்று வற்புறுத்த, வேறு வழியின்றி மனதில்லாமல் தனது சகோதரன் உறவு முறை கொண்டவரை மணந்து கொண்டிருக்கிறார் Nyla.
அவருடன் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடாமலே சிறிது காலம் பாகிஸ்தானில் இருந்துவிட்டு, தனது புதிய கணவனை விட்டு விட்டு பெற்றோருடன் ஸ்காட்லாந்து திரும்பியிருக்கிறார் Nyla. தனது பெற்றோர் வீட்டை விட்டு தனியாக வந்து வாழ்ந்த நிலையிலும் பெற்றோர் மீதுள்ள அன்பால், அவருக்கு போன் செய்து ரிசீவரை காதில் வைத்துக் கொள்வாராம் Nyla, அம்மாவின் குரலையாவது கேட்கலாம் என்று.
பின்னர் சுமார் மூன்றாண்டுகளுக்குப்பின் தனது எண்ணங்களை தனது பெற்றோரிடம் விளக்கி, தான் விவாகரத்து பெற விரும்புவதாக கூறியுள்ளார் Nyla. தற்போது, விவாகரத்துக்குப்பின் தான் ஒரு சுதந்திரப் பெண்ணாக உணர்வதாகத் தெரிவிக்கிறார் Nyla.
வவுனியா மாவட்டத்தில் வறட்சி காரணமாக 95 ஏக்கர் சிறுபோக நெற் செய்கையும் 65 ஏக்கருக்கு மேற்பட்ட மேட்டு நிலப் பயிர் செய்கையும் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் சகிலாபானு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக வவுனியா மாவட்டமும் வெகுவாக பாதிப்படைந்துள்ளது. குளங்களின் நீரும் வற்றியுள்ளதுடன் கிணறுகளிலும் நீர் இன்றி மக்கள் பாதிப்படைந்துள்ளனர். விவசாயம் மற்றும் தோட்டச் செய்கையில் ஈடுபடும் மக்கள் வெகுவாக பாதிப்படைந்துள்ளனர். இதன் காரணமாக விவசாயிகள் தமது வாழ்வாதாரத்திற்காக வறட்சியுடன் போராடும் நிலை உருவாகியுள்ளது.
வறட்சியை சமாளிக்கும் வகையில் இம்முறை சிறுபோகத்திற்காக 3, 3 1/2 மாத நெற் பயிர்களை பயிட்ட போதும் மார்ச், யூன், யூலை போன்ற மாதங்களில் மழைவீழ்ச்சி இன்மையாலும் ஏப்ரல், மே மாதங்களில் 120 மில்லி மீற்றர் மழை மட்டுமே கிடைத்தமையாலும் வறட்சி நிலை நீடிக்கிறது.
இதன்காரணமாக 95 ஏக்கர் நெற்செய்கை பாதிப்படைந்துள்ளதுடன், விவசாயிகள் கடன் சுமையால் பாதிப்படைந்துள்ளனர். இது தவிர மேட்டு நிலப்பயிர்செய்கையும் வெகுவாக பாதிப்படைந்துள்ளது.
கச்சான், சிறிய வெங்காயம், பெரிய வெங்காயம், கௌப்பி, உழுந்து, கறிமிளகாய், கத்தரி, மிளகாய் உள்ளிட்ட 65 ஏக்கர் மேட்டு நில பயிர்செய்கை அழிவடைந்துள்ளது. வாழைப் பயிர்ச்செய்கையும் 10 ஏக்கர் அளவில் பாதிப்படைந்துள்ளது. இவற்றுடன் அன்னாசி செய்கையும் பாதிப்படைந்துள்ளது.
வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தமது வாழ்வாதாரத்திற்காக நஸ்டஈட்டினை கோரி நிற்கின்றனர். அத்துடன் வறட்சி நிலை நீடிக்குமாக இருந்தால் பாதிப்புக்கள் அதிகரிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் ஊடாக வவுனியாவில் 94 இந்துக் கோவில்களுக்கும், 24 கிறிஸ்தவ சபைகளுக்கும், விகாரைகளுக்கும் புனரமைப்புக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சரின் இணைப்பாளரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான அப்துல்பாரி தெரிவித்துள்ளார்.
வவுனியா, சோயா வீதி இயேசு இரட்சிக்கிறார் தேவாலயத்திற்கு முன்னாள் நீண்டகால மீள்குடியேற்ற அபிவிருத்தி அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களால் தேவாலய புனரமைப்புக்காக ஒதுக்கப்பட்ட 3 இலட்சம் ரூபாய் நிதியை வழங்கி வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த சபைக்கு முதல் கட்டமாக மூன்று இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை ஒரளவு குறைவடைந்து இருந்தாலும் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களே ஒரு இனவாதியாகவும், மதவாதியாகவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அவர் இனவாதியாக இருந்திருந்தால் இவ்வாறான சபைக்கோ அல்லது இந்து கோவிலுக்கோ நிதியை ஒதுக்கியிருக்கமாட்டார்.
இதுமாத்திரமல்ல 24 சபைகளுக்கு நிதி தரும்படி கேட்டிருக்கிறார்கள். அதனை பரிசீலனை செய்து அவர்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் 94 இந்துக் கோவில்களுக்கும், பௌத்த கோவில்கள், பள்ளிவாசல்கள் என்பவற்றுக்கும் வேறுபாடின்றி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இன, மத பேதமின்றி அவர் செயற்படுகின்றார் எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வவுனியா நகரசபை உறுப்பினர் லரீப், மதபோதகர், தேவாலய பங்கு மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.