வீட்டில் தனியாக இருந்த மனைவி : வேலை முடிந்து வீட்டுக்கு வந்த கணவர் கண்ட காட்சி!!

கணவர் கண்ட காட்சி

தமிழகத்தில் மகனை கொ லை செய்துவிட்டு தாயும் தூக் கிட்டு த ற்கொ லை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகையை சேர்ந்தவர் சுமிதா. இவரின் முதல் கணவர் இற ந்துவிட்ட நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயக்குமார் என்பவரை இரண்டாம் திருமணம் செய்தார்.

ஜெயக்குமாரின் முதல் மனைவி ஏற்கனவே இற ந்து விட்டார். ஜெயக்குமார்- சுமிதா தம்பதிக்கு 2 வயதில் ரித்திஷ் என்கிற மகன் உள்ளான். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் ஜெயக்குமார் வேலைக்கு சென்று விட்டார்.

இந்நிலையில் வீட்டில் மகனுடன் தனியாக இருந்த சுமிதா தனது தாய் அமுதாவை செல்போனில் தொடர்பு கொண்டு நீங்கள் திருமணத்திற்காக எனக்கு போட்ட நகை மற்றும் பொருட்களை எடுத்து செல்லுங்கள் என கூறிவிட்டு உடனடியாக தொடர்பை துண்டித்து விட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அமுதா தனது மகளை செல்போனில் தொடர்பு கொண்டபோது, அவர் போனை எடுக்கவில்லை. இதற்கிடையே வேலைக்கு சென்றிருந்த ஜெயக்குமார் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் உள்ள அறையில் ஒரே சேலையில் மனைவி சுமிதாவும், மகனும் ரித்திசும் தூக் கில் பி ணமாக தொங் கியதை கண்டு கதறி அழுதார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் சுமிதா, ரித்திஷின் உட ல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவிட்டு இது தொடர்பாக விசாரித்து வருகிறார்கள்.

இலங்கையில் சமூக வலைத்தளங்களினூடாக வெறுப்பூட்டும் கருத்துக்களைப் பரப்புவோருக்கு எச்சரிக்கை!!

எச்சரிக்கை

ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களினூடாக சமூகங்களுக்கிடையே வெறுப்பூட்டும் கருத்துக்களைப் பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் காலிங்க இந்ததிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற கருத்தரங்கின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், இனங்களுக்கிடையே முறுகல் நிலையை ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டு ஒருசில குழுக்கள் இயங்குகின்றன. எந்த சமூகமாக இருந்தாலும், இந்த நடவடிக்கை தவறானதாகும்.

சட்டம் அனைவருக்கும் பொதுவானதாகும். இலங்கை பல இனங்களைக் கொண்ட நாடு எனும் வகையில், அனைத்து மதங்களையும் மதிப்பதற்கு நாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதுடன், சமாதானமாக வாழ பழகிக் கொள்ள வேண்டும்.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையின் பிரகாரம், சமய ரீதியாக வெறுப்பை தூண்டிவிடல் முதல் தணித்து விடல், பகைமையைத் தூண்டல் அல்லது வன்முறையை ஏற்படுத்தல் போன்ற நடவடிக்கைகளை அல்லது தேசிய மட்டத்தில் இனங்களுக்கிடையே முறுகல் நிலையை தூண்டல் அல்லது யுத்தத்தை தூண்டல் போன்ற நடவடிக்கைகளில் எந்தவொரு நபரும் ஈடுபட முடியாது என்றார்.

சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட முடியாது என உள்நாட்டு காவல்துறையில் தவறான நிலைப்பாடு நிலவுகின்றது. இது தவறானதாகும். ஏனெனில், வாய் மூலமாக ஒரு சமூகத்துக்கு அல்லது தரப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கருத்தை ஒரு நபர் வெளிப்படுத்துவது குற்றமாக கருதப்படுவதை போன்று, சமூகவலைத்தளங்களிலும் அவ்வாறான பதிவு இடப்படுவது தண்டனைக்குரியதாகும்.

அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோர் சட்டத்துக்கு முன் நிறுத்தப்பட்டு ICCPRஇன் பிரகாரம் தண்டிக்கப்பட வேண்டும். வித்தியாசம் யாதெனில், ஆதாரமாகும். ஆரம்ப கட்டமாக இந்த குற்றச்சாட்டுக்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளை அதிகார அமைப்புகள் ஆரம்பிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டில் இறுதி சந்திரக் கிரகணம் : யாருமே பார்க்க முடியாது!!

சந்திரக் கிரகணம்

இந்த ஆண்டுக்கான இறுதி சந்திரக்கிரகணம் எதிர்வரும் 16ஆம் திகதி தென்பட உள்ளது. முழு பூரண தினமான 16ஆம் திகதி இந்த சந்திரக்கிரகணத்தை பார்க்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் அன்றைய தினம் அப்பலோ விண் கலம் நிலவில் தரையிறங்கிய 50ஆவது ஆண்டு நிறைவு நாளாகும்.

இந்தநிலையில் சந்திரக்கிரகணம் அவுஸ்திரேலியா, ஆபிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா, ஆசியா போன்ற இடங்களில் தென்படுமென தெரிவிக்கப்படுகிறது. வடஅமெரிக்காவில் இது தென்படாது. அதேபோல ஏனைய இடங்களிலும் இது தென்படாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தச் சந்திரக் கிரகணத்தையடுத்து, எதிர்வரும் 2020ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் திகதி அடுத்த சந்திரக்கிரகணம் தென்படுமென இலங்கையின் வானியல் ஆய்வாளர் சந்தன ஜெயவர்தன தெரிவித்திருக்கிறார்.

கழிப்பறை அருகில் சென்ற கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கதி!!

மாணவிக்கு நேர்ந்த கதி

இந்தியாவில் கல்லூரி மாணவி ஒருவர் கழிப்பறைக்குள் செல்ல முயன்ற நிலையில் அவர் தாழ்ந்த சாதி என கூறி அனுமதி மறுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர் ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ளது பனாராஸ் பல்கலைக்கழகம். இங்கு படிக்கும் மாணவி அங்குள்ள கழிப்பறைக்குள் செல்ல முயன்றுள்ளார்.

அப்போது அவரை தடுத்த காவலர்கள், நீ கழிப்பறைக்குள் செல்லக்கூடாது, வேறு எங்காவது சென்று அங்குள்ள கழிப்பறையை பயன்படுத்தி கொள் என கூறியுள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவி இது தொடர்பாக பல்கலைகழக நிர்வாகத்திடம் புகார் கொடுத்தார்.

புகாரில், சாதி அடிப்படையில் பாகுபாடு பார்த்து என்னை கழிப்பறைக்குள் அனுமதிக்க மறுத்தனர். இது மனித தன்மையற்றது மற்றும் சட்டவிரோதமானது என குறிப்பிட்டுள்ளார். இதை தொடர்ந்து குறிப்பிட்ட காவலர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மாணவி ஒருவர் சாதி பாகுபாடு பார்க்கப்பட்டு கழிப்பறைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உதவி செய்யப்போய் சிக்கலில் மாட்டிய இளைஞரின் அதிரவைத்த வாக்குமூலம்!!

அதிரவைத்த வாக்குமூலம்

தமிழகத்தில் இளம்பெண்ணை கொ லை செய்த கொ லையாளி, திருமணத்துக்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் கொ லை செய்ததாக பொலிசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். துாத்துக்குடியை சேர்ந்தவர் நடேஷ் (36). இவரது மனைவி மகாராணி (29). இவர்களது மகன் விம்ரித் (5). மகாராணி கடந்த 2ம் திகதி வீட்டில் தனியாக இருந்தபோது, மர்மநபரால் கழுத்தை அறு த்துக்கொ லை செய்யப்பட்டார்.

வெளியில் சென்றிருந்த நடேஷ் வீட்டுக்குள் நுழைந்த போது மனைவி இற ந்துகிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தார். இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தினார். இந்த நிலையில், மகாராணி கொ லை வழக்கு தொடர்பாக இளவரசன் (25) என்பவர் கடந்த 3ம் திகதி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

அவரை பொலிசார் காவலில் எடுத்து கைது செய்து விசாரித்தனர். இந்நிலையில் கொ லை தொடர்பாக இளவரசன் அளித்த பரபரப்பு வாக்குமூலம் தற்போது வெளியாகியுள்ளது. அவர் பொலிசில் கூறுகையில், மகாராணிக்கும், எனக்கும் 4 ஆண்டுகள் பழக்கம் இருந்தது. அவருடைய மகனை பள்ளிக்கூடத்துக்கு அழைத்து செல்வது, பின்னர் வீட்டுக்கு அழைத்து வருவது போன்ற எல்லா உதவியும் நான் தான் செய்து வந்தேன்.

மகாராணியின் கணவர் வெளிநாட்டில் இருந்ததால் நானும், மகாராணியும் பல நேரங்களில் தனிமையில் இருந்துள்ளோம். இந்த நிலையில் மகாராணியின் கணவர் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு திரும்பினார். இதனால் மகாராணி என்னிடம் பேசுவதை குறைத்துக் கொண்டார்.

சில நாட்களுக்கு முன்பு அவரிடம், நாம் திருமணம் செய்து கொண்டு வெளியூருக்கு சென்று விடலாம் என்று கூறினேன். அதற்கு அவரும் தயாராக இருந்தார். ஆனால் தற்போது வேண்டாம் என்று மறுத்து வந்தார். இது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

சம்பவத்தன்று காலையில் மகாராணி வீட்டுக்கு சென்றேன். அப்போது, நாம் திருமணம் செய்து கொள்வோம், அல்லது 2 பேரும் த ற்கொ லை செய்து கொள்வோம் என்று கூறினேன். அதற்கு அவர், தற்போது திருமணம் செய்து கொள்ள முடியாது என்று மறுத்து விட்டார்.

இதனால் வீட்டில் இருந்த பிளே டால் என் கையை அறு த்துக்கொண்டேன். பின்னர் அவரது கையையும் அறு த்தேன். அதனை அவர் தடுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நான், அவரது கழு த்தில் பிளே டால் பல முறை அறு த்தேன். ரத் தம் அதிக அளவில் வெளியேறியதால் நான் அங்கிருந்து வெளியே வந்து விட்டேன். பின்னர் பொலிசுக்கு பயந்து நீதிமன்றத்தில் சரணடைந்துவிட்டேன் என கூறியுள்ளார்.

வெளிநாட்டில் மாட்டி கொண்ட மகன்கள் : தனியாளாக அவர்களை மீட்ட வீரத்தாய்!!

வீரத்தாய்

வெளிநாட்டு வேலைக்காக சென்று பல்வேறு கொடு மைகளை அனுபவித்த தனது மகன்களை பல போரா ட்டங்களுக்கு பின்னர் தனியொருத்தியாக மீட்டுள்ளார் ஒரு தாய். தமிழகத்தின் திருப்பூரை சேர்ந்தவர் மாரியம்மாள். கணவரை பிரிந்து வாழும் இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் வெளிநாட்டு வேலைக்கு அனுப்பிவைக்கும் ரஞ்சித் என்ற ஏஜெண்ட் மாரியம்மாளின் மகன்கள் மணிகண்டன், மணித்துரை இருவருக்கு தாய்லாந்தில் கார்மென்ட் நிறுவனத்தில் 40 ஆயிரம் சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளார். இதையடுத்து மாரியம்மாள் அவரிடம் ரூபாய் 2,70,000 கட்டிய நிலையில் கடந்த ஜனவரி 21ஆம் திகதி மணிகண்டனும், மணித்துரையும் தாய்லாந்துக்கு சென்று ஹொட்டலில் தங்கவைக்கப்பட்டனர்.

பின்னர் அவர்களை தமிழர் ஒருவரின் உணவகத்தில் வேலைக்கு சேர்த்துவிட்டுள்ளனர் அங்குள்ள ஏஜெண்டுகள். அப்போதுதான், அவர்கள் அழைத்துவரப்பட்டது டூரிஸ்ட் விசா என்றும், அது முடிந்தவுடன் உணவகத்தில் ஏமாற்றிச் சேர்த்துவிட்டுச் சென்றனர் என்றும் தெரியவந்துள்ளது. பின்னர் அந்த உணவக உரிமையாளர், அவர்களுக்கு முடிந்தவரை அடைக்கலம் தருவதாகவும் அதற்குள் இந்தியாவில் யாரிடமாவது உதவி கேட்டுச் சென்றுவிடுமாறும் கூறியுள்ளார்.

இது குறித்து தகவலறிந்த மாரியம்மாள், ரஞ்சித் குறித்து பொலிசில் புகாரளித்தார். ஆனால் சரியான நடவடிக்கை இல்லாததால் கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார். கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்தது தெரிந்து, ரஞ்சித் உஷாராகி தாய்லாந்துக்குத் தகவல் கொடுத்து, ஏஜென்ட்டுகள் மூலம் மாரியம்மாளின் இளைய மகன் மணிகண்டனை மட்டும் பாங்காக் அழைத்து வந்துள்ளார்.

ஆனால் மேலும் பணம் கொடுத்தால் தான் பையனை விடுவோம் என்று கூறி அங்குள்ள ஹொட்டலில் அவரை விட்டுச் சென்றுவிட்டனர். அங்கிருந்த பரம்ஜித் சிங் என்பவர், அந்தப் பையனுக்கு அடைக்கலம் கொடுத்து வீட்டுக்குத் தகவல் கூறியுள்ளார். அவருக்கு டிக்கெட்டுக்கான பணம் அனுப்பி, அவரின் உதவியால் மகன் மணிகண்டனை ஜூன் 13 அன்று இந்தியா வரவழைத்துள்ளார் மாரியம்மாள்.

இன்னொரு மகன் மணித்துரையை அழைத்துவர கலெக்டரிடம் மனு கொடுத்துப் பார்த்தார். பதில் ஏதும் இல்லாமல்போகவே, இந்தியத் தூதரகத்தின் உதவியை நாடினார், மாரியம்மாள். இதையடுத்து இந்திய அதிகாரிகள், மணித்துரையை பாங்காக் இந்தியத் தூதரகத்தில் சரணடையக் கூறியுள்ளனர். மாரியம்மாளிடமும் அரசு அதிகாரிகள் விவரங்களைச் சேகரித்து மேலிடத்துக்கு அனுப்பி மகனை மீட்டுத்தருவதாகக் கூறியுள்ளனர்.

ஆனால், தூதரகத்து அதிகாரிகள் அவரை 15 நாள்கள் சிறையில் அடைத்து வைத்துள்ளனர். இந்திய அதிகாரிகளும் மேலதிக நடவடிக்கைகள் எடுக்காமல் விடவே, மீண்டும் பரம்ஜித் சிங்கிடம் உதவி கேட்டு அவருக்கு மீண்டும் பணம் அனுப்பி மணித்துரை இந்தியாவுக்கு வரவழைத்துள்ளார். மாரியம்மாள் கூறுகையில், என் மகன்களை இந்தியா கொண்டு வர அதிகம் போராடினேன். எனக்கு இந்திய அரசு அதிகாரிகளும், பொலிசாரும் எந்த உதவியும் செய்யவில்லை என்று ஆதங்கத்துடன் பேசினார்.

தந்தையை தேடிச் சென்ற சிறுமி : அமெரிக்கா – மெக்சிகோ எல்லையில் சட லமாக மீட்பு!!

தந்தையை தேடிச் சென்ற சிறுமி

குருபிரீத் வட இந்தியாவின் ஹசன்பூரில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர். பியூ ஆராய்ச்சி மையத்தின் 2017ம் ஆண்டு ஆய்வின்படி, இந்தியாவில் இருந்து அமெரிக்கக் கடற்கரையை அடைந்த 20 குடியேறியவர்களில் குருபிரீத்தின் தந்தையும் ஒருவர்.

குருபிரீத் பிறந்த சில மாதங்களுக்குப் பிறகு அவர் தனது சொந்த ஊரை விட்டு வெளியேறினார். நியூயார்க்கில் வசித்து வந்த அவரது ஆவணங்கள் அமெரிக்க குடிவரவு நீதிமன்ற முறை மூலம் உருவாக்கப்பட்டிருந்தன.

அமெரிக்காவைச் சேர்ந்த சீக்கிய கூட்டணி கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையின்படி, குருபிரீத்தும் அவரது தாயும் அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையைத் தாண்டியவுடன் தனது தந்தையுடன் மீண்டும் இணைவதற்குத் திட்டமிட்டனர்.

மக்களை கடத்தல்காரர்கள் கையாள்வது, அதிக வெப்பநிலை மற்றும் குறைந்த உணவு எடுத்துக்கொள்தல் போன்றவற்றால் இந்த பயணம் ஆபத்தானது என்பதை அறியாமலே அவர்கள் புறப்பட்டுள்ளனர்.

இருப்பினும், அவர்கள் அரிஸோனாவில் உள்ள ஒரு சிறிய பாலைவன நகரத்திற்குச் சென்றனர். அங்கு அவர்கள் எதிர்பாராத விதமாக பிரிந்துள்ளனர். இதனையடுத்து குருபிரீத்தின் தாயார், மற்றொரு பயணிகளுடன் சேர்ந்து பயணத்தை துவங்கினார்.

அதன்பிறகு “அவர்கள் ஒருவரையொருவர் மீண்டும் கண்டுபிடிக்க முடியவில்லை” என்று எல்லை ரோந்து டியூசன் துறையின் சிறப்பு செயல்பாட்டு மேற்பார்வையாளர் முகவர் பீட் பிட்கெய்ன் இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியினை மேற்கோளிட்டுள்ளார். அவர்கள் பிரிந்த மறுநாளே வெப்ப பக்கவாதத்தால் நாவறண்டு சிறுமி இறந்த நிலையில் கிடந்ததை எல்லை ரோந்து முகவர்கள் கண்டுபிடித்தனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாத்தா மற்றும் பாட்டி பெரும் வேதனை தெரிவித்துள்ளனர். அந்த செய்தியை கேள்விப்பட்டதும் நான் மயக்கமடைந்து விழுந்துவிட்டேன். தெளிந்ததும் அவள் பெயரை தொடர்ந்து கூறிக்கொண்டே இருந்தேன் என அவருடைய பாட்டி கூறியுள்ளார்.

இந்தியாவில் ஒரு மதத்தினை சேர்ந்தவர்களின் தாக்குதல்களில் இருந்து தப்புவதற்காகவே அவர்கள் புறப்பட்டதாக குருபிரீத் பெற்றோரின் வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர். இதனையே நியூயார்க்கை தளமாகக் கொண்ட சீக்கிய கூட்டணியும் கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது. ஆனால் இதனை சிறுமியின் தாத்தா – பாட்டி மறுத்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி : இலங்கை பங்கேற்காமைக்கு காரணம் இதுவா?

கிரிக்கெட் போட்டி

பிரித்தானியாவில் இடம்பெற்ற சர்வதேச நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை பங்கேற்கவில்லை.

இதற்கு காரணம் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக் குதல்களையடுத்து இலங்கை தமது அணியை அங்கு அனுப்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும் இலங்கை அதனை தவிர்த்து விட்டது.

இந்த போட்டியிலே இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூஸ்லாந்து, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து அணிகள் பங்கேற்றிருந்தன.

கடந்த வெள்ளிக்கிழமை இறுதிப்போட்டி நடைபெற்றது. இதன்போது, பாகிஸ்தான் நாடாளுமன்றக் குழு பங்களாதேஷ் நாடாளுமன்றக் குழுவை 9 விக்கட்டுக்களால் தோற்கடித்து வெற்றியாளர் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.

இலங்கையை பொறுத்தவரை இதற்கான அழைப்பிதழ் விடுக்கப்பட்டிருந்த போதும், உயிர்த்த ஞாயிறு தாக் குதலின் பின்னர் அதற்கான மனநிலையில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லை என்ற அடிப்படையிலேயே அந்த அழைப்பை தாம் நிராகரித்து விட்டதாக இலங்கையின் சபாநாயகர் அலுவலகம் அறிவித்திருக்கின்றது.

வவுனியாவில் கோவிலுக்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த நிலை!!

பெண்ணுக்கு நேர்ந்த நிலை

வவுனியாவில் கோவிலுக்கு சென்ற பெண்ணின் தங்கச் சங்கிலியை அடையாளந்தெரியாதோர் அறுத்து சென்ற சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் நேற்று இரவு 8.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வவுனியா தாண்டிக்குளத்திலுள்ள வயோதிப பெண் தனது வீட்டிலிருந்து அப்பகுதியிலுள்ள ஐயனார் கோவிலுக்கு சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளந்தெரியாத இரு நபர்கள் அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை அறுத்து சென்றுள்ளனர்.

சம்பவத்தில் நிலை குலைந்த பெண் செய்வதறியாது கூக்குரலிட அவ்விடத்தில் இளைஞர்கள் ஒன்று கூடியதையடுத்து தங்கச்சங்கிலியை அவ்விடத்தில் போட்டுவிட்டு தப்பித்து சென்றுள்ளனர். அறுக்கப்பட்ட தங்கசங்கிலி இரண்டு பவுண் மதிப்பிலானது என்று கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு தெரியப்படுத்தபட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் தங்க சங்கிலியை அறுத்துவிட்டு தப்பித்து சென்ற இளைஞர்களை அப்பகுதியிலுள்ள சிசிரீவி கமராவின் உதவியுடன் தேடுதல் வேட்டையை மேற்கொண்டு வருகின்றனர்.

முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்து : ஒரு சிப்பாய் ப லி, 8 பேர் காயம்!!

விபத்து

முல்லைத்தீவு – கேப்பாபுலவில் இரா ணுவ படைத்தலையகம் அமைந்துள்ள பகுதியில், இன்று காலை இடம்பெற்ற விபத்தில் சிப்பாய் ஒருவர் பலியாகியதுடன் 8 இரா ணுவத்தினர் காயமடைந்துள்ளனர்.

இரா ணுவ மு காம் அமைந்துள்ள பகுதியின் வீதியின் வளைவு ஒன்றில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த கெப் ரக வாகனம் விபத்துக்கு உள்ளாகி உள்ளது.

காயமடைந்தவர்களில் 3 இரா ணுவத்தினர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு ஏனைய 5 சிப்பாய்கள் இரா ணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சர்ச்சையில் சிக்கிய பேஸ்புக் நிறுவனம் : வெளியான உண்மை!!

பேஸ்புக் நிறுவனம்

சமூகவலைத்தளங்களில், தொழில்நுட்ப நிறுவனங்களில் முக்கிய இடம்பிடித்துள்ள முகப்புத்தக நிறுவனத்திற்கு 56 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முகப்புத்தக பயனாளர்களின் இரகசிய தகவல்களை சட்டவிரோதமாக திருடியமைக்காகவே குறித்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியில் அதிகளவில் பயன்படுத்தக்கூடிய வலைத்தளமாக காணப்படுகின்ற முகப்புத்தக நிறுவனமானது பயனாளர்களின் இரகசிய தகவல்களை கேம்பிரிட்ஜ் அனலெட்டிகா எனும் அரசியல் ஆலோசனை நிறுவனத்துக்கு திருடிக் கொடுத்துள்ளது.

இதற்கமையவே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சமூகவலைத்தள, தொழில்நுட்ப நிறுவனங்களில் பாரிய தொகை அபாரதம் செலுத்தவுள்ளமை இதுவே முதல் தடைவை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பிலிருந்து சென்ற பேருந்து ஒன்றுக்கு ஏற்பட்ட விப ரீதம் : 45 பயணிகளின் நிலை!!

ஏற்பட்ட விபரீதம்

கொழும்பிலிருந்து சென்ற பேருந்து ஒன்று பாரிய விபத்துக்கு முகங்கொடுத்த நிலையில் பெருமளவு பயணிகள் தெய்வாதீனமாக உயி ர் தப்பியுள்ளனர். கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று கொஸ்கொட துவமோதர பிரதேசத்தில் ரயில் வீதியை உடைத்துக்கொண்டு புகுந்தமையினால் விபத்துக்குள்ளாகியுள்ளது.

வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் இவ்வாறு பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்து இடம்பெற்ற போது பெலியத்த நோக்கி செல்லும் ரயில் அந்த ரயில் வீதியில் வரவிருந்தது. இந்நிலையில், பயணிகள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து ரயில் வீதியில் ஓடிச் சென்று ரயிலை நிறுத்தியுள்ளனர். எப்படியிருப்பினும் விபத்து இடம்பெற்ற தூரத்தில் இருந்து 10 மீற்றரில் ரயில் நிறுத்தப்பட்டுள்ளது.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பேருந்தில் 45 பயணிகள் பயணித்துள்ளனர். அனர்த்தம் காரணமாக சிலர் மாத்திரம் சிறு காயங்களுக்கு உள்ளான போதிலும் 45 பயணிகளும் காப்பாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பேஸ்புக் களியாட்ட விருந்து : இளம் இளைஞர்கள், யுவதிகளின் மோச மான செயல்!!

மோசமான செயல்

மாத்தறை, மிரிஸ்ஸ பிரதேசத்தில் நடத்தப்பட்ட பேஸ் புக் விருந்தில் 12 பேர் கை து செய்யப்பட்டுள்ளனர். குறித்த பிரதேசத்தில் படகு ஒன்றில் இந்த பே ஸ்புக் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில்,

பொலிஸார் சுற் றிவளைத்து கை து செய்துள்ளனர். போ தை ப் பொருளுடன் குறித்த 12 பேரும் கை து செய்யப்பட்டுள்ளதாக மிரிஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கை து செய்யப்பட்டவர்களில் 3 யுவதிகளும் அடங்குகின்றனர். 19 முதல் 25 வயதிற்கு உட்பட்டவர்களே இவ்வாறு கை து செய்யப்பட்டுள்ளனர்.

இறுதி மூச்சு வரை தனது மகனை தேடியலைந்த தாயின் பரிதாபநிலை!!

தாயின் பரிதாபநிலை

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடியலைந்த முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாபுலவை சேர்ந்த தாயார் ஒருவர் மரணமடைந்துள்ளார் . கடந்த 1990ம் ஆண்டு மன்னார் எருக்கலம்பிட்டி பகுதியில் வைத்து காணாமல் ஆக்கப்பட்ட வேலுப்பிள்ளை தியாகராஜா என்ற இளைஞரின் தாயாரான வேலுப்பிள்ளை வியாழம்மா என்ற வயோதிப தாயாரே முதுமை காரணமாக மரணமடைந்துள்ளார்.

கடந்த 29 வருடங்களாக காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனின் எந்தவிதமான விபரங்களும் அறியாத நிலையில், தனது மகனுக்கு நீதிகோரி பல்வேறு ஆணைக்குழுக்கள், மனிதவுரிமை அமைப்புக்களில் பதிவுகளை மேற்கொண்டு தனது மகனின் நிலை அறிய தொடர்ந்து போராடி வந்த தாயாரே மரணமடைந்துள்ளார் .

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் தொடர் போராட்டம் ஆரம்பமான இதுவரையான காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு பகுதிகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட உறவுகள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட் அணி வீரர் சேவாக்கின் மனைவி கூறியுள்ள பரபரப்பு புகார்!!

சேவாக்கின் மனைவி கூறியுள்ள  புகார்

தனது கையெழுத்தை முறைகேடாகப் பயன்படுத்தி ரூ.4.5 கோடி கடன்பெற்றதாகத் தனது தொழில் கூட்டாளி மீது நடவடிக்கை எடுக்கக் கூறி கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் மனைவி புகார் கொடுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக். இவரது மனைவி ஆர்த்தி. இவரது தொழில் கூட்டாளிகள், தனது கையெழுத்தை முறைகேடாகப் பயன்படுத்தி நிறுவனம் ஒன்றிடம் ரூ.4.5 கோடி கடன் பெற்றுள்ளார்கள் என்றும் அந்தப் பணத்தைத் திருப்பி கொடுக்காமல் தன்னை சிக்க வைத்துள்ளதாகவும் போலீசில் புகார் செய்துள்ளார்.

அவரது புகாரில், தனது கையெழுத்தை முறைகேடாக பயன்படுத்தியும், கணவர் வீரேந்திர சேவாக்கின் பெயரை தவறாகப் பயன்படுத்தியும் இந்த கடன் வாங்கப்பட்டிருக்கிறது என்றும் இதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த கடனுக்காக முன் திகதியிட்டு வழங்கப்பட்ட காசோலைகளும் பணம் இல்லாமல் திரும்பி சென்றுள்ளன என்றும், இதனால் தன்னை இதில் சிக்க வைத்துள்ள தொழில் கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆர்த்தி கூறியுள்ளார். இதையடுத்து பொலிசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆசையை நிறைவேற்றாத கணவன் : விரக்தியில் புதுமணப்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு!!

அதிர்ச்சி முடிவு

உத்திரபிரதேச மாநிலத்தில் திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் மட்டுமே ஆகியிருக்கும் நிலையில் புதுமணப்பெண் தூ க்குபோ ட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த அமித், கடந்த மே 13ம் திகதியன்று அஞ்சனா (21) என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் சனிக்கிழமையன்று வீட்டில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்துள்ளது. தன்னிடம் பழைய புடவைகள் மட்டுமே இருப்பதால் புதிதாக ஒரு புடவை வாங்கி தருமாறு அஞ்சனா கணவனிடம் கேட்டுள்ளார்.

அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால், இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு அமித் அங்கிருந்து சென்றுவிட்டார். ஆனால் மன உளைச்சலில் இருந்த அஞ்சனா, தூ க்குபோ ட்டு த ற்கொ லை செய்துள்ளார். இதற்கிடையில் வெளியில் சென்றிருந்த அமித் வீடு திரும்பியதும், மனைவி தூக் கில் தொங் குவதை பார்த்து கதறி அழ ஆரம்பித்துள்ளார்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அமித் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு தன்னுடைய மகளை கொ லை செய்துவிட்டதாக, அஞ்சனாவின் தந்தை ஆதார் சிங் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், அஞ்சனாவின் த ற்கொ லை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.