ஆசையை நிறைவேற்றாத கணவன் : விரக்தியில் புதுமணப்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு!!

அதிர்ச்சி முடிவு

உத்திரபிரதேச மாநிலத்தில் திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் மட்டுமே ஆகியிருக்கும் நிலையில் புதுமணப்பெண் தூ க்குபோ ட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த அமித், கடந்த மே 13ம் திகதியன்று அஞ்சனா (21) என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் சனிக்கிழமையன்று வீட்டில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்துள்ளது. தன்னிடம் பழைய புடவைகள் மட்டுமே இருப்பதால் புதிதாக ஒரு புடவை வாங்கி தருமாறு அஞ்சனா கணவனிடம் கேட்டுள்ளார்.

அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால், இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு அமித் அங்கிருந்து சென்றுவிட்டார். ஆனால் மன உளைச்சலில் இருந்த அஞ்சனா, தூ க்குபோ ட்டு த ற்கொ லை செய்துள்ளார். இதற்கிடையில் வெளியில் சென்றிருந்த அமித் வீடு திரும்பியதும், மனைவி தூக் கில் தொங் குவதை பார்த்து கதறி அழ ஆரம்பித்துள்ளார்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அமித் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு தன்னுடைய மகளை கொ லை செய்துவிட்டதாக, அஞ்சனாவின் தந்தை ஆதார் சிங் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், அஞ்சனாவின் த ற்கொ லை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய நடிகர் : உண்மையிலேயே உயி ரிழந்த சோகம்!!

போஸ்டர் ஒட்டிய நடிகர்

தமிழகத்தில் இறந்ததாகக் கூறி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய வில்லன் நடிகர் ஒருவர் உண்மையில் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்தவர் ஆர்.எஸ்.கோபால். இவர் வலியுடன் காதல் என்ற படத்தில் நடித்துள்ளதுடன் நகர ரஜினி ரசிகர் மன்ற செயலாளராகப் பொறுப்பு வகித்தவர்.

தற்போது இவர் பூதமங்கலம் போஸ்ட் என்ற படத்தில் வட்டம் வரதன் என்ற வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார். அதில் அவர் இறப்பது போன்ற காட்சிக்காகக் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களையும், சவபெட்டியில் மாலையுடன் இருப்பது போன்ற தன்னுடைய வீடியோவையும் வாட்ஸ் ஆப்பில் நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார்.

அவர் காயல்பட்டினத்தில் பானை முதல் யானை வரை கிடைக்கும் என்ற பெயரில் கடை வைத்திருந்ததால், அவருக்கு தெரிந்த பலர் ஆர்.எஸ்.கோபால் மரணம் அடைந்ததாகக் கருதி வீட்டிற்கு இறுதி அஞ்சலி செலுத்த மாலையுடன் சென்றுள்ளனர்.

அப்போது அது நான் நடிக்கும் புது படத்திற்காக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் என்று விளக்கமளித்த அவர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களையும் கிழித்துள்ளார். இந்த நிலையில் மீண்டும் கோபால் இறந்ததாக காயல்பட்டினம் பகுதியில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டது. இதனையும் சினிமாவிற்காக ஒட்டியிருக்கலாம் என்று அப்பகுதியினர் கருதியுள்ளனர்.

ஆனால் உடல் நலக்குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆர்.எஸ்.கோபால் உண்மையிலேயே உயிரிழந்தது தாமதமாகவே தெரியவந்தது. அதன்பின்னர் தான் அப்பகுதி மக்கள் ஆர்.எஸ்.கோபாலுக்கு அஞ்சலி செலுத்த சென்றுள்ளனர். சினிமாவுக்காக போலியாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய அடுத்த சில நாட்களிலேயே ஆர்.எஸ். கோபால் உண்மையிலேயே இறந்திருப்பது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

இந்திய அணியில் பிளவா? கோஹ்லி-ரோஹித்துக்கு ஆதரவாக பிரிந்த வீரர்கள்?

இந்திய அணியில் பிளவா?

உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததால், அணிக்குள் பிளவு உள்ளதாகவும், கோஹ்லி-ரோஹித்திற்கு ஆதரவாக அணி வீரர்கள் பிரிந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

நியூசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதனால் தோல்விக்குப் பொறுப்பேற்று கோஹ்லியை கேப்டன் பொறுப்பில் மாற்றிவிட்டு, ரோஹித் ஷர்மாவை கேப்டனாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தைனிக் ஜாக்ரன் என்ற நாளேடு, இந்திய அணிக்குள் பிளவு இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது. அதில், இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும், கேப்டன் கோஹ்லியும் சேர்ந்துகொண்டு அணியில் தன்னிச்சையான பல முடிவுகளை எடுக்கிறார்கள்.

தங்களுக்கு தேவைப்பட்ட வீரர்களை மட்டுமே தேர்வு செய்கின்றனர். மற்றவர்களிடம் கலந்து பேசாமல் முடிவெடுப்பதால், அணியில் நல்ல விதமான சூழல் கெட்டு பிளவு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் கூறுகையில்,

கோஹ்லி தனக்கு தேவையான, தன்னுடைய பேச்சைக் கேட்டு நடப்பவர்களை மட்டுமே அணியில் முன்னுரிமை தருகிறார். ரோஹித் ஷர்மா அறிவுறுத்தும் வீரர்களை அவர் தேர்வு செய்வதில்லை. குறிப்பாக அம்பத்தி ராயுடுவை விடுத்து 4வது வரிசைக்கு விஜய் ஷங்கரை தேர்வு செய்ததே ஒரு தரப்பான முடிவு தான்.

கே.எல்.ராகுல் உலகக்கோப்பை போட்டிக்கு முன்பாக மிகவும் மோசமாக செயல்பட்டபோதிலும், அவருக்கு அணி நிர்வாகத்தின் ஆதரவு இருந்ததால் அவர் அணியில் நீடித்தார். அத்துடன் தவானுக்கு காயம் ஏற்பட்டதால் 4வது வரிசைக்கு தெரிவான ராகுல், தொடக்க வீரராக களமிறங்கினார்.

அதேபோல் தொடர்ந்து மோசமாக பந்துவீசிய போதிலும், ஐ.பி.எல்லில் கோஹ்லியின் ஆர்.சி.பி அணியில் விளையாடியதால் சாஹலுக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பல வீரர்களுக்கு பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் இருவரையும் பிடிக்கவில்லை.

பி.சி.சி.ஐ நிர்வகிக்க உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் குழுவின் ஆதரவை, ரவி சாஸ்திரி பெற்றிருப்பதால் அவரும், விராட் கோஹ்லியும் எந்த விதமான முடிவுகளை எடுத்தாலும் அதற்கு ஆதரவு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை தவிர, அடுத்த உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில், ரோஹித் ஷர்மாவை புதிய கேப்டனாக உருவாக்க வேண்டும் என்றும் வீரர்களிடையே பேசப்படுகிறது என்றும் அந்த நாளேடு தெரிவித்துள்ளது.

தண்டவாளத்திற்குள் நுழைந்து விபத்திற்குள்ளான பயணிகள் பேருந்து!!

விபத்திற்குள்ளான பயணிகள் பேருந்து

கொஸ்கொட – துவமோதர பகுதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது. கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த தனியார் பேருந்து இன்று காலை 8.30 மணியளவில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி தண்டவாளத்தில் மோதுண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து இடம்பெறும் போது பேருந்தில் சுமார் 45 பயணிகள், பயணித்துள்ள நிலையில், அவர்களில் சிலருக்கு சிறிதளவு காயங்கள் ஏற்பட்டுள்ளன. தொடரூந்து தண்டவாளத்தில் மோதுண்டிருந்த நிலையில், அந்த தொடரூந்து பாதையில் பயணித்த தொடரூந்து ஒன்று விபத்து இடம்பெற்ற அருகில் வந்தே நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உணவகத்திற்கு வந்த பெண்களுக்கு காத்திருந்த அதிா்ச்சி : சி.சி.டி.வி காணொளி!!

காத்திருந்த அதிா்ச்சி

காலி – ​தேவட்ட பகுதியில் உணவகம் ஒன்றில் நபரொருவர் பணத்தை திருடி செல்லும் விதம் சி.சி.டி.வி காணொளியில் பதிவாகியுள்ளது.

இரண்டு பெண்கள் உணவு பெற்றுகொள்வதற்காக உணவகத்திற்கு வந்த பொழுது குறித்த நபர் அங்கு வேலை செய்பவரை போல நடித்துள்ளார்.

பின்னர் அந்த பெண்கள் வாங்க வந்த உணவுகளுக்கான பணத்தை பெற்றுகொண்டு குறித்த நபா் அங்கிருந்து தப்பி செல்லும் விதம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காணொளியில் பதிவாகியுள்ளது. சம்பவம் குறித்து காலி காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் 30ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகள்!!

வீரமக்கள் தின நிகழ்வுகள்

வவுனியா கோவில்குளம் பகுதியில் அமைந்துள்ள தோழர் க.உமாமகேஸ்வரன் நினைவுத்தூபியில் இன்று (13.07) காலை 9.30 மணியளவில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 30ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகள் இடம்பெற்றது.

திருவுருவப் படத்திற்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டு மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. அதனை தொடர்ந்து அஞ்சலி உரைகள் இடம்பெற்றிருந்தது.

தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் உபதலைவரும் நகரசபை உறுப்பினருமான சந்திரகுலசிங்கம் மோகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் வடக்குமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், பிரதேசசபை உறுப்பினர்களான யோகன், உத்தரியநாதன், நந்தன், ஜெகதீஸ்வரன், குகதாசன், நகரசபை உறுப்பினர் நா.சேனாதிராஜா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் பல கிராமங்களிற்கு அமைச்சர் மனோ கணேசன் விஜயம்!!

அமைச்சர் மனோ கணேசன்

அமைச்சர் மனோ கணேசன் இன்றையதினம் வவுனியாவில் பல கிராமங்களுக்குச் சென்று மக்கள் சந்திப்புகளை மேற்கொண்டுள்ளார்.

தமது அமைச்சின் ஊடாக ஒதுக்கப்பட்ட நிதியினை மக்களின் தேவைகளை அறிந்து பகிர்ந்தளிக்கும் முகமாகவே இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த விஜயத்தின் போது வவுனியா சிவபுரம் , கற்பகபுரம், புதிய கற்பகபுரம், பம்பைமடு, மடுக்குளம், கோவில் மோட்டை, ஆச்சிபுரம், ஆனந்தபுரம், தரணிக்குளம், சிதம்பரபுரம், கற்பகபுரம், மதுராநகர், ரம்பைவெட்டி , புதிய வேலர் சின்னகுளம் ஆகிய கிராமங்களுக்கு சென்று சந்திப்புக்களை மேற்கொண்டார்.

இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், தேசிய அமைப்பு செயலாளர் வினாயகமூர்த்தி ஜனகன், வட மாகாண அமைப்பாளர் விமல், ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரச்சார செயலாளர் பரனிதரன், வவுனியா மாவட்ட அமைப்பாளர் நடராஜா, மன்னார் மாவட்ட அமைப்பாளர்கள் தீபன், ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இலங்கையில் மற்றுமொரு பெரும் சோகம் : கடல் அலையில் சிக்கிய தாயும் பிள்ளைகளும்!!

மற்றுமொரு பெரும் சோகம்

சிலாபம் கடற்கரையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் 3 பிள்ளைகள் இன்று கடல் அலையில் சிக்கியுள்ளனர். தாயும் இரு மகளும் காப்பாற்றப்பட்டு சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் கடைசி மகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒரு வயதுடைய குழந்தை ஒன்றே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. தாய் மற்றும் 8 – 12 வயதுடைய இரண்டு மகள் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கடந்த மாதம் தென்னிலங்கை கடலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தனர். இந்த அனர்த்தத்தில் தகப்பன், தாய் மற்றும் இரு பெண் பிள்ளைகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் அதிகாலை இடம்பெற்ற விபத்து : சாரதி பலி!!

அதிகாலை இடம்பெற்ற விபத்து

கிளிநொச்சி – பூநகரி, பரந்தன் வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ரிப்பர் வாகனமும், சிறிய ரக வாகனமும் நேருக்கு நேர் மொதியமையினால் இவ்விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது, சிறிய ரக வாகனம் செலுத்திய சாரதியே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 33 வயதான ஜெனராசா சசிகுமார் என்பவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தில் படுகாயமடைந்த 7 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

விபத்தில் படுகாயமடைந்த 7 வயது சிறுவன்

திருகோணமலை – குச்சவெளி பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளுடன் உழவு இயந்திரம் மோதியமையினால் நேற்று இவ்விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுவன் குச்சவெளி-காசீம் நகர் பகுதியைச் சேர்ந்த 07 வயதுடைய றினோஸ் நிஸ்ரி ஷெரீப் என தெரியவந்துள்ளது.

உழவு இயந்திரத்தின் பெரிய டயருடன் மோட்டார் சைக்கிள் மோதியதையடுத்து சைக்கிளில் சென்றவர்கள் கீழே வீழ்ந்ததுடன் சிறுவன் டயருக்குள் சிக்குண்டதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த சிறுவனின் சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இவ்விபத்து தொடர்பில் உழவு இயந்திரத்தின் சாரதியை கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் கடும் காற்று : 10 வீடுகள் சேதம்!!

கடும் காற்று

வவுனியாவில் வீசிய கடும்காற்று காரணமாக 10 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது. வவுனியாவின் பல பகுதிகளிலும் நேற்று மாலை கடும் காற்று வீசியிருந்தது.

இதன்காரணமாக வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பம்பைமடு பகுதியில் 5 வீடுகளும், மாளிகை பகுதியில் ஓரு வீடும், ஆறுமுகத்தான்புதுக்குளம் பகுதியில் 3 வீடுகளும், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பிரம்பமடு பகுதியில் ஓரு வீடும் என 10 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதனால் 10 குடும்பங்களைச் சேர்ந்த 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காற்றின் காரணமாக தற்காலிக மற்றும் அரை நிரந்தர வீடுகளின் கூரைப்பகுதிகளே இவ்வாறு சேதமடைந்துள்ளது. பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைகளை அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் முன்னெடுத்துள்ளது.

நடுவானில் மின்னல் தாக்கியதால் கொந்தளித்த விமானம் : தூக்கி எறியப்பட்ட பயணிகள்!!

கொந்தளித்த விமானம்

கனடாவில் இருந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கி சென்றுகொண்டிருந்த விமானம் மீது நடுவானில் மின்னல் தாக்கியதை அடுத்து, அவசரமாக அமெரிக்காவின் ஹவாயில் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஏர் கனடா 33 ரக விமானம் 269 பயணிகள் மற்றும் 15 விமான பணியாளர்களுடன், நள்ளிரவு 12.33 மணிக்கு வான்கூவரில் இருந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கி புறப்பட்டுள்ளது.

ஹொனலுலுவிலிருந்து தென்மேற்கே 600 மைல் தொலைவில் 36,000 அடி உயரத்தில் விமானம் பறந்துகொண்டிருந்த போது திடீரென மின்னல் தாக்கியுள்ளது.

இதில் நிலைகுலைந்த விமானம் கொந்தளிக்க ஆரம்பித்துள்ளது. பயணிகள் அனைவரும் இருக்கைகளில் இருந்து தூக்கி எறியப்பட்டுள்ளனர். உடனே அங்கிருந்து வேகமாக திருப்பப்பட்ட விமானம், அமெரிக்காவின் ஹவாயில் அதிகாலை 6.45 மணியளவில் தரையிறக்கம் செய்யப்பட்டது.

இதில் 35 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன. குறைந்தபட்சம் 9 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பெரும்பாலான பயணிகளுக்கு தலை மற்றும் கழுத்து பகுதியில் காயங்கள் ஏற்பட்டிருந்தது என செய்திகள் தெரிவிக்கின்றன.

வருங்கால மனைவியை உயிருடன் எரி த்துக் கொ லை செய்த இளைஞர்!!

மனைவியை உயிருடன்..

தன்னுடைய காதலி வேறு ஆண் நண்பர்களுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகித்த காதலன், உயிருடன் தீ வைத்து எரி த்துக் கொ லை செய்துள்ள சம்பவம் உக்ரைன் நாட்டில் நடந்துள்ளது. உக்ரைன் நாட்டை சேர்ந்த அனஸ்தேசியா கோவலேவா (22) என்கிற இளம்பெண்ணுக்கு, அவருடைய காதலன் விட்டலி சாய்கோவ்ஸ்கி (28) என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தன்னுடைய காதலி வேறு ஆண்களுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகித்த விட்டலி , 2ம் திகதியன்று அனஸ்தேசியாவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அங்கிருந்து கிளம்பினாள் காதலனின் கோபம் குறைந்துவிடும் என நினைத்த அனஸ்தேசியா, வேகமாக புறப்பட்டுள்ளார்.

ஆனால் இன்னும் அதிகமாக கோபமடைந்த விட்டலி, வெளியில் சென்று பெட்ரோல் வாங்கி வந்துள்ளார். வீட்டு கதவின் ஓரத்திலேயே நின்று கொண்டிருந்த விட்டலி, அனஸ்தேசியா வந்ததும் உ டலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.

மளமளவென உடல் முழுவதும் தீ பற்றியதால், அனஸ்தேசியா கதற ஆரம்பித்துள்ளார். இதனை தாங்கிக்கொள்ள முடியாத விட்டலி, தன்னுடைய ஆ டையை கழற்றி தீயை அணைக்க முயன்றுள்ளார். ஆனால் அனஸ்தேசியா உடலில் 90 சதவீத காயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அனஸ்தேசியா, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழ ந்துள்ளார். இதனை தொடர்ந்து விட்டலியை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 15 ஆண்டுகள் வரை சி றை தண் டனை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கற்பை இணையத்தில் ஏலம் விட்ட இளம்பெண் : அதன் பின்னர் அவருக்கு நேர்ந்த துயரம்!!

இளம்பெண்

ரஷ்யாவில் கற்பை இணையத்தில் ஏலம் விட்ட இளம்பெண் ஒருவர், பா லியல் தொழிலில் ஈடுபடும் கும்பலிடம் சிக்கிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குறித்த கும்பலிடம் இருந்து பொலிசார் சாமர்த்தியமாக அந்த இளம்பெண்ணை மீட்டு அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

ரஷ்யாவில் 16 வயது இளம்பெண் ஒருவர் தமது கற்பை 4,000 பவுண்டு தொகைக்கு விற்பனை செய்ய இருப்பதாக இணையத்தில் விளம்பரம் செய்துள்ளார். இதை யூரி என்ற பெயரில் அறியப்படும் பாலி யல் தொழில் செய்யும் கும்பல் ஒன்று அறிந்து, அவரிடம் பேசி அவரை குறிப்பிட்ட பகுதிக்கு வரவழைத்துள்ளது.

மட்டுமின்றி, தங்களுக்கு அறிமுகமான நபரே அவர் எனவும், பாதுகாப்பான் இடம் அது எனவும், குறித்த பெண்ணிடம் யூரி என்ற கும்பலின் உறுப்பினர் ஒருவர் ஆசை வார்த்தை கூறியுள்ளார் இதை நம்பிய அந்த இளம்பெண் சுவாஷியா பிராந்தியத்தில் இருந்து மாஸ்கோ நகருக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

தொடர்ந்து அந்த 16 வயது பெண்ணை தொழிலதிபர் ஒருவருடன் சந்திக்க யூரி கும்பல் ஏற்பாடு செய்துள்ளது. ரஷ்யாவில் 16 வயதுக்கு உட்பட்டவர்களுடன் உறவு வைத்துக் கொள்வது என்பது சட்டவிரோதமாகும்.

இந்த நிலையில் அந்த இளம்பெண் தொழிலதிபர் ஒருவருடன் சந்திக்க ஏற்பாடு செய்ததுடன், அவரிடம் சுமார் 6,300 பவுண்டுகள் கட்டணமாக அந்த கும்பல் கோரியுள்ளது. ஆனால் தொழிலதிபர் என்ற பெயரில் அந்த சந்திப்புக்கு சென்றவர் உளவு அளதிகாரி என யூரி கும்பல் அறிந்திருக்கவில்லை.

யூரி கும்பலிடம் இருந்து, அவர்கள் கேட்ட தொகைக்கு இளம்பெண்களை வாங்கினால், பின்னர் அவர்களின் முழு பொறுப்பும் வாங்குபவர்களுக்கே என்பது அந்த கும்பலின் எழுதப்படாத சட்டமாகும். இதனிடையே, அந்த உளவு அதிகாரி அவர்கள் கேட்ட தொகையை அளித்து அந்த பெண்ணை மீட்டுள்ளார்.

தொடர்ந்து அந்த யூரி கும்பலின் 32 வயது நபரையும் பொலிசார் கைது செய்துள்ளனர். மீட்கப்பட்ட 16 வயது பாடசாலை மாணவி, அவரது குடும்பத்தில் எவரிடமும் தாம் மாஸ்கோ செல்வதாகவும், தொழிலதிபரை சந்திக்க செல்வதாகவும் தெரிவிக்கவில்லை எனவும் அவர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

தற்போது அவர் மருத்துவ சோதனைக்கு பின்னர், உளவியல் ஆலோசனைகளும் வழங்கப்பட்டு, குடும்பத்துடன் பின்னர் அனுப்பி வைக்கப்படும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

239 பேருடன் மாயமான மலேசிய விமானத்தின் மர்மம் விலகியது : பிரான்ஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

மலேசிய விமானத்தின் மர்மம் விலகியது

காணாமல் போன மலேசிய விமானமான எம்.எச்.370-யின் விமானியே, அனைவரையும் வேண்டுமென்றே கொ ன்றார் என பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2014 ஆம் ஆண்டு, எம்.எச் 370 விமானம், கோலாலம்பூரில் இருந்து, பீஜிங் நோக்கி 239 பயணிகளுடன் சென்றுகொண்டு இருந்த போது மாயமானது.விமானத்திற்கு என்ன ஆனது என்பது தொடர்பில் இதுவரை உறுதியான எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில், மூன்று பிரெஞ்சு பயணிகளின் நிலை குறித்து அறிய, காணாமல் போன விமானத்திலிருந்து அதிக அளவு விமான டேட்டாகளை பாரிஸ் அதிகாரிகள் அணுகினர்.

ஒரு வருடங்களாக டேட்டாகளை ஆய்வு செய்து வரும் பிரான்ஸ் அதிகாரிகளின் முதற்கட்ட விசாரணையில், இந்தியப் பெருங்கடலில் விமானம் விழுந்தபோது சிலர் கட்டுப்பாட்டு அறையில் இருந்தனர் என தெரியவந்துள்ளதாம். மனச்சோர்வடைந்த நிலையில் இருந்த விமானி கடைசி வரை கட்டுப்பாட்டில் இருந்தார் என கூறியுள்ளனர்.

டேட்டாகளின் மூலம் விமானத்தில் ஏற்பட்ட சில அசாதாரண திருப்பங்களை மனிதர்களால் மட்டுமே செய்ய முடியும் என கண்டறிந்துள்ளனர். மேலும், புதிய ஆதாரங்களின் மூலம் இந்த பேரழிவு ஒரு கொ லை தற் கொ லை என குறிப்பிட்டுள்ளனர்.

இதன் மூலம், பதற்றமாக, தனிமையாக இருந்த விமானி ஜஹரி அஹ்மத் ஷா, விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளையும் ஊழியர்களையும் வேண்டுமென்றே கொன் றார் என்ற முடிவுக்கு பிரான்ஸ் அதிகாரிகள் வந்துள்ளனர்.

இந்த முடிவு மிக விரைவில் திட்டவட்டமாகக் எடுக்கப்பட்டாலும், வேறு யாரும் விமான கட்டுபாட்டு அறைக்குள் நுழைந்திருக்க வாய்ப்பு இல்லை என பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சிலர் வாதிடுவதால், பலர் பிரான்ஸ் புலனாய்வாளர்களுடன் உடன்படவில்லை.

விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த மகளின் சோக முடிவு : அதிர்ச்சியடைந்த பெற்றோர்!!

மகளின் சோக முடிவு

ஐதராபாத் மாநிலத்தில் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த மகள் திடீரென தூ க்குபோட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத் மாநிலத்தை சேர்ந்த லிங்கா என்பவரின் மகள் விஜயா (23). இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் தங்கி படித்து வருகிறார்.

இந்த நிலையில் விடுமுறைக்காக வீடு திரும்பிய விஜயா, தன்னுடைய அறையில் தூ க்குபோ ட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், விஜயாவின் உ டலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் விஜயாவின் சகோதரர் ரகுமா, நரேஷ் என்கிற இளைஞர் தன்னுடைய சகோதரிக்கு தொடர் தொல்லை கொடுத்து வந்ததாகவும், த ற்கொ லை செய்துகொள்வதற்கு முன்தினம் இரவு 8 மணியளவில் போன் செய்ததாகவும் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.