ஐதராபாத் மாநிலத்தில் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த மகள் திடீரென தூ க்குபோட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத் மாநிலத்தை சேர்ந்த லிங்கா என்பவரின் மகள் விஜயா (23). இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் தங்கி படித்து வருகிறார்.
இந்த நிலையில் விடுமுறைக்காக வீடு திரும்பிய விஜயா, தன்னுடைய அறையில் தூ க்குபோ ட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், விஜயாவின் உ டலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் விஜயாவின் சகோதரர் ரகுமா, நரேஷ் என்கிற இளைஞர் தன்னுடைய சகோதரிக்கு தொடர் தொல்லை கொடுத்து வந்ததாகவும், த ற்கொ லை செய்துகொள்வதற்கு முன்தினம் இரவு 8 மணியளவில் போன் செய்ததாகவும் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை விடுதியில் கல்லூரி மாணவி த ற்கொ லை செய்துகொண்டதாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக அவர் கொ லை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. சவுகார்பேட்டையை சேர்ந்தவர் காஜல் (19). கல்லூரி மாணவியாவார். இவரும் சுமேர்சிங் (23) என்ற இளைஞரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இந்தநிலையில் கடந்த ஜூன் 10ம் திகதி அன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள லாட்ஜ் அறை ஒன்றில் காஜல் இ றந்து கிடந்தார். சுமேர்சிங் வாயில் நுரை தள்ளியநிலையில் உயி ருக்கு போராடியபடி கிடந்தார்.
லாட்ஜ் ஊழியர்கள் அறை கதவை உடைத்து போது உள்ளே அவர்கள் இருந்த நிலையை கண்டு அதிர்ச்சியடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் காஜல் சட லத்தை கைப்பற்றிவிட்டு, சுமேர்சிங்கை மருத்துவமனையில் சேர்த்தனர். பொலிஸ் சுமேர்சிங்கிடம் நடத்திய விசாரணையில் காஜலும், நானும் த ற்கொ லை செய்து கொள்வதற்காக குளிர்பானத்தில் ‘சயனைடு’ விஷம் கலந்து குடிக்க முடிவு செய்தோம்.
எங்களது திட்டப்படி காஜல் சயனைடு கலந்த குளிர்பானத்தை குடித்துவிட்டார். ஆனால் நான் லேசாக குடித்துவிட்டு பின்னர் துப்பிவிட்டேன். இருந்தாலும் சயனைடு விஷம் என்னை தாக்கிவிட்டது என்று தெரிவித்தார். இதனால் பொலிசார் முதல்கட்டமாக த ற்கொ லை வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.
இந்தநிலையில் காஜலின் மருத்துவ பரிசோதனை முடிவில் அவர் குளிர்பானத்தில் கலந்து குடித்த சயனைடு விஷத்தால் சாகவில்லை என்றும், கழுத்தை நெரி த்து அவர் கொ லை செய்யப்பட்டுள்ளார் என்றும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்தது.
இதனால் பொலிசார் அதிர்ச்சியடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சுமேர்சிங்கிடம் மீண்டும் தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் காதலி காஜலை கொ லை செய்ததை சுமேர்சிங் ஒப்புகொண்டார். அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், காஜலும், நானும் 3 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்தோம். எங்கள் காதலை காஜல் குடும்பத்தார் எதிர்த்தனர்.
காஜலுக்கு உடனடியாக வேறொரு மாப்பிள்ளை பார்த்து நிச்சயதார்த்தம் நடைபெற்றது. காஜல் என்னோடு செல்போனில் தொடர்புகொண்டு பேசினார். மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என்று கூறினார். அப்படியானால் நாம் இருவரும் ஓடிச்சென்று எங்காவது பதிவு திருமணம் செய்துகொண்டு வாழலாம் என்று தெரிவித்தேன். ஆனால் காஜல் அதை ஏற்கவில்லை. ஓடிச்சென்று திருமணம் செய்துகொண்டால் எனது குடும்பத்திற்கு அவமானமாகிவிடும் என்று காஜல் மறுத்துவிட்டார்.
எங்காவது ஓடிச்சென்று போய் இருவரும் த ற்கொ லை செய்துகொள்ளலாம் என்று காஜல் தெரிவித்தார். த ற்கொ லை முடிவில் எனக்கு விருப்பம் இல்லை. பின்னர் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி சேப்பாக்கத்தில் உள்ள லாட்ஜ் அறையில் தங்கினோம்.
த ற்கொ லை செய்து கொள்வதற்காக ஆன்லைன் மூலம் ரூ.6 ஆயிரம் கட்டி சயனைடு விஷம் வாங்கினேன். குளிர்பானத்தில் சயனைடு விஷத்தை கலந்தேன். ஆனால் மனதளவில் எனக்கு த ற்கொ லை செய்துகொள்வதில் விருப்பம் இல்லை.
முதலில் சயனைடு விஷம் கலந்த குளிர்பானத்தை காஜல் குடித்துவிட்டார். நான் குடிப்பதுபோல நாடகமாடிவிட்டு, சிறிதளவு குடித்துவிட்டு பின்னர் அதை வெளியில் துப்பிவிட்டேன். இதற்குள் காஜல் மயக்கமடைய தொடங்கினார். நீ ஏன் குடிக்கவில்லை? என்று அந்த அரைகுறை மயக்கத்திலும் என்னிடம் சண்டை போட்டார்.
மேலும் குளிர்பானத்தை வாந்தி எடுத்ததால் காஜல் உயி ர்பிழைத்து கொள்வார் என்று நினைத்தேன். உயிர் பிழைத்தால் நமக்கு பிரச்சினை ஏற்படலாம் என்று பயந்தேன். இதனால் காஜல் அணிந்திருந்த துப்பட்டாவால் அவரது கழு த்தை இறுக்கினேன். சற்று நேரத்தில் அவர் பிண மாகிவிட்டார்.
சயனைடு விஷம் கலந்த குளிர்பானத்தை நான் சிறிதளவு குடித்து, அதை துப்பிவிட்டாலும் அதன் விஷத்தன்மை என்னை தாக்கியது. நானும் மயக்கமடைந்து விட்டேன் என கூறியுள்ளார். இதையடுத்து பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.
சென்னையில் சிறுமியிடம் தாய்க்கு விபத்து ஏற்பட்டதாக கூறி கடத்த முயன்றவரை சிறுமி சாமர்தியமாக சிக்க வைத்துள்ளார். சென்னை புது வண்ணாரபேட்டை பகுதியில், துறைமுக குடியிருப்பு வளாகத்தில் இயங்கி வரும் பள்ளியில் 5ஆம் வகுப்பு பயிலும் சிறுமி ஒருவர் பள்ளி நேரம் முடிந்து வீட்டிற்கு செல்ல வந்துள்ளார்.
அப்போது அங்கு நின்றிருந்த வடமாநில இளைஞன் ஒருவன், சிறுமியிடம் அவரது தாய்க்கு விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவமனைக்குச் செல்லலாம் என்றும் அழைத்துள்ளார்.
சிறுமி சுதாரித்துக்கொண்டு பள்ளிக்குள் சென்று ஆசிரியரை பார்த்து விவரத்தை தெரிவித்துள்ளார். வெளியில் வந்து பார்த்த ஆசிரியர் அப்போ அந்த இளைஞன் சாக்லேட் கொடுத்தவாறு வேறு ஒரு குழந்தையுடன் பேசிக்கொண்டிருந்துள்ளான். ஆசிரியர் அவனை விசாரிக்க முயன்றபோது தப்பியோட முயற்சித்துள்ளான். உடனடியாக அங்கிருந்தவர்கள், அவனை விரட்டிப்பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் அவன் பெயர் லிப்புதாஸ் என்பதும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவன் என்பதும் தெரியவந்துள்ளது. குழந்தையை ஏமாற்றி கடத்த முயன்றதும், அலார்ட் ஆகிய சிறுமி செய்த நல்ல செயலே கடத்தலை தடுக்க முடிந்தது என்ற பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அரியலூரில் உறவினரின் துக்க வீட்டுக்கு செல்லாதே என கணவன் கூறியதால், மனவேதனையடைந்த மனைவி குழந்தையுடன் சேர்ந்து தூக் கில் தொங்கியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூரை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருடைய முதல் மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். இதனையடுத்து சுமிதா என்பவரை வீட்டார் சம்மதத்துடன் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். அதேபோல சுமிதாவின் முதல் கணவர் விபத்தில் இறந் துவிட்டார்.
இரண்டாவது திருமணம் செய்துகொண்ட தம்பதியினருக்கு ரித்தீஷ் என்ற மகன் இருந்தார்.
இந்த நிலையில் சுமிதாவின் பெரியப்பா வீட்டில் துக்க நிகழ்வு நடந்துள்ளது. அங்கு தனக்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை எனக்கூறி அவருடைய கணவர் செல்வதற்கு அனுமதி மறுத்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையில் கடும் வாக்குவாதம் எழுந்துள்ளது. சத்தம் கேட்டு வந்த கீழ் வீட்டை சேர்ந்த நபர், ஜெயக்குமார் வெளியில் சென்றார், வாக்குவாதம் நின்றுவிடும் என நினைத்து வெளியில் அனுப்பியுள்ளார்.
ஆனால் தொடர்ந்து கோபத்தில் இருந்த சுமிதா, “எனக்குப் போட்ட நகைகளை வீட்டில் உள்ள பீரோ லாக்கரில் வைத்திருக்கிறேன். அதை எடுத்துக்கொள்ளுங்கள்” என தன்னுடைய தாய்க்கு போன் செய்து கூறிவிட்டு சுவிட்ச் ஆப் செய்துள்ளார்.
பின்னர் மகனை தூக் கில் மாட்டி கொன் றுவிட்டு, தானும் தூ க்குபோட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து சுமிதாவின் தாய் கொடுத்த புகாரின் பேரில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிரிக்கெட் விளையாடி கொண்டிருக்கும் போது பந்து கழுத்தை தாக்கியதில் இளம் வீரர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள பட்டான் பகுதியை சேர்ந்தவர் ஜஹாங்கிர் அகமது வார் (18). இவர், அரசு சார்பில் அங்கு நடத்தப்பட்ட 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் நேற்று பங்கேற்றார்.
அப்போது அகமது பேட்டிங் செய்துகொண்டிருந்த போது, வேகமாக வந்த பந்து அவர் கழுத்தில் தாக்கியதில் அவர் சுருண்டு விழுந்தார்.
உடனடியாக, அங்கிருந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இது குறித்து மருத்துவர் ரஹ்மான் கூறுகையில், ஷார்ட் பிட்ச் பந்தை அகமது அடிக்க முயன்ற போது அது அவர் கழுத்தைத் தாக்கியது.
இதையடுத்து அவர் சுயநினைவின்றி மயங்கி விழுந்துவிட்டார், ஹெல்மெட் அணிந்திருந்தும் பந்து அவரை தாக்கியது தான் சோகம் என கூறியுள்ளார்.
வவுனியா – புளியங்குளம் பகுதியில் உத்தரவை மீறி பயணித்த கெப் ரக வாகனத்தின் மீது பொலிஸார் துப் பாக்கிப் பிர யோகம் மேற்கொண்டுள்ளனர். இதன்போது வாகனத்தின் பின்பக்க ரயரிற்கு துப் பாக்கி பிர யோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சட்டவி ரோதமான முறையில் மரக்குற்றிகளை கடத் துவதாக முள்ளிக்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த வாகனத்தில் ஏற்றிச்சென்ற 12 தேக்கு மரக்குற்றிகள் கைப்ப ற்றப்பட்டதுடன், இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இதன்போது 2 பேர் தப்பிச் சென்றுள்ளனர் அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஐக்கிய அமீரகத்தின் துபாயில் சாலை விபத்தில் சிக்கி 12 இந்தியர்கள் உட்பட 17 பேர் பலியாவதற்கு காரணமான சாரதிக்கு சிறைத்தண்டனை, நாடு கடத்தல் உள்ளிட்ட தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஜூன் 6 ஆம் திகதி ஓமனிலிருந்து துபாய்க்கு பேருந்து ஒன்று புறப்பட்டு வந்தது. துபாயில் பேருந்துகளுக்கு ஒதுக்கப்படாத பகுதிக்குள் நுழைந்த அந்த பேருந்து, சிக்னல் இரும்புக் கம்பி மீது பலமாக மோதியது.
அதில், பேருந்தின் இடது ஓரத்தில் இருந்த பயணிகள் 17 பேர் பரிதாபமாக பலியானார்கள். மேலும், 13 பேர் காயமடைந்தனர். பலியானவர்களில் இரு பாகிஸ்தானியர்கள், ஓமன், பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த தலா ஒருவரும் அடங்கும்.
இந்த விபத்து தொடர்பாக துபாய் போக்குவரத்து நீதிமன்றம் விசாரணையை முன்னெடுத்தது.
விசாரணையில், ஓமன் நாட்டைச் சேர்ந்த சாரதி 53 வயதான முகமது அலி தமாமி மீது தவறு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த சாரதிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், துபாய் நிர்வாகத்துக்கு 13,000 அமெரிக்க டொலர்கள் அபராதம் செலுத்தவும்,
பலியானவர்கள் குடும்பத்துக்கு 92,500 அமெரிக்க டொலர்கள் நஷ்டஈடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது. மட்டுமின்றி, சிறைத்தண்டனை முடிந்ததும் குறித்த சாரதியை ஓமன் நாட்டுக்கு நாடு கடத்தவும் தீர்ப்பாகியுள்ளது.
வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலய மாணவர்கள்
வடமாகாணப் பாடசாலைகளிற்கு இடையிலான 2019ம் ஆண்டிற்கான விளையாட்டு நிகழ்வுகளின் அடிப்படையில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயம் புதிய சாதனைகளுடன் தனது பெயரினை பதித்துள்ளது.
16 வயதின் கீழ் பெண்கள் பிரிவில் உயரம் பாய்தலில் கே.காவியா தங்கப்பதக்கத்தினை பெற்றதுடன் 18 வயதின் கீழ் ஆண்கள் பிரிவில் பிரிவில் 4 X 100 மீற்றர் அஞ்சல் ஒட்டத்தில் அரிச்சந்திரகுமார், டனுசன், கரிகரசுதன், சரன்ராஜ், விஸ்வா, கபிஸ்கரன் ஆகிய ஆறு மாணவர்கள் தங்கப்பதங்கத்தினை பெற்றுள்ளனர்.
அத்துடன் ஒட்ட நிகழ்ச்சியில் 18 வயதின் கீழ் ஆண்கள் பிரிவில் 200 மீற்றரில் வெள்ளிப்பதக்கம் மற்றும் 100 மீற்றரில் வெண்கலப்பதக்கம் ஆகியவற்றை பி.அரிச்சந்திரகுமார் தனதாக்கிக்கொண்டதுடன், 1500 மீற்றர் மற்றும் 800 மீற்றர் ஆகியவற்றில் வெள்ளிப் பதக்கத்தினை ச.டனுசன் தனதாக்கிக்கொண்டார். மேலும் 200 மீற்றர் மற்றும் 100 மீற்றரில் வை.கரிகரசுதன் 4வது இடத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
அத்துடன் நீளம் பாய்தலில் 16 வயதின் கீழ் ஆண்கள் பிரிவில் பிரிவில் எஸ்.கரிகரன் 4வது இடத்தினையும் 18 வயதின் கீழ் உயரம் பாய்தல் ஆண்கள் பிரிவில் கே.சரன்ராஜ் வெண்கலப்பதக்கத்தினையும், 4x400m அஞ்சல் ஓட்டத்தில் பி.அரிச்சந்திரகுமார், ச.டனுசன், வை.கரிகரசுதன் , கே.சரன்ராஜ், எஸ்.விஸ்வா , வி.கபிஸ்கரன் ஆகியோர் தங்கப்பதக்கத்தினையும் பெற்றுள்ளனர்.
பெருவிளையாட்டுக்களில் 16 வயதின் கீழ் பெண்கள் வலைப்பந்தாட்டம் 2ம் இடத்தினையும் 18 வயதின் கீழ் பெண்கள் கொக்கி 3ம் இடத்தினையும் வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயம் தனதாக்கிக்கொண்டுள்ளது.
2019ம் ஆண்டிற்கான வடமாகாணப் பாடசாலைகளிற்கு இடையிலான விளையாட்டு நிகழ்வுகளின் அடிப்படையில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயம் 18 வயது ஆண்கள் பிரிவு மெய்வல்லுனர் சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டதுடன்,
வடமாகாணப் பாடசாலைகள் தரப்படுத்தலில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயம் 8ம் இடத்தினையும் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்கும் பெருமை தேடித்தந்துள்னர்.
இலங்கை போக்குவரத்து துறையில் பாரிய புரட்சியை ஏற்படுத்தி, Google transit செயலியை அறிமுகப்படுததும் அடிப்படை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் நடைபெற்ற தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் 20 ஆண்டு நிறைவு நிகழ்வில் இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கூகுள் மெப் என்பது கூகுள் வழங்கும் இணையத்தள வரைப்பட சேவையாகும். அந்த வரைப்பட சேவையின் மூலம் தற்போது இலங்கைக்கு Google transit வழங்கப்பட்டுள்ளது. Google transit தனியார் போக்குவரத்து தகவல்கள், தனியார் போக்குவரத்துக்கான இடங்கள் மற்றும் வரைப்பட தகவல்களை வழங்கும்.
எனினும் கூகுள் மெப், பொது போக்குவரத்து சேவைகளுக்கான தகவல்களை வழங்கும் Google transit இலங்கைக்கு வழங்கப்படவில்லை. Google transit சேவையை இலங்கையில் பயன்படுத்துவதை ஆரம்பிக்க தேவையான விபரங்கள் கூகுள் நிறுவனத்திற்கு உத்தியோகபூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் அமெரிக்காவின் பனாமா ஏரி சேற்று பிரதேசத்தில் சிக்கிய உயிரி ழந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. நேற்று முன்தினம் குறித்த இளைஞன் சேற்றுக்குள் சிக்கிய நிலையில் உயிரிழ ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வீதி பிரதேசத்தை சேர்ந்த 34 வயதான பீ.சுதர்ஷன் என்ற இந்த இளைஞன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்கா நோக்கி சென்றுள்ளார்.
பயண முகவர் ஊடாக அமெரிக்கா செல்லும் வேளையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
பனாமா ஏரி பிரதேசத்தில் நடைப்பயணத்தில் ஈடுபட்ட போது சேற்றுக்குள் சிக்கி அவரால் வெளியே வர முடியாமல் போனதாக அவருடன் சென்ற ஏனைய இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். உயிரி ழந்த இளைஞனின் சட லம் பொலிஸாரினால் பனாமா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அவரது மர ணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது. உயிரி ழந்த இளைஞனின் சட லத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தேவையான உதவிகளை செய்யுமாறு உறவினர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வவுனியாவில் நாளை காலை 7 மணி தொடக்கம் 5 மணிவரை மின்தடை ஏற்படும் என பிரதம பொறியியலாளர் திருமதி மைதிலி தயாபரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா உப மின் நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய அவசர திருத்த வேலை காரணமாக நாளை (13.07) சனிக்கிழமை காலை 07.00 மணியிலிருந்து மாலை 05.00 மணி வரை வவுனியா
பிரதேசத்தின் பல இடங்களில் மின் தடைப்படும்.
அந்தவகையில் வவுனியா நகரம், இறம்பைக்குளம், மூன்றுமுறிப்பு, மதவுவைத்தகுளம், ஈரப்பெரியகுளம், கற்குண்டமடு, அளுத்கம, பூஓயா, பஹல அளுத்வத்த, கண்டி வீதி, தவசிக்குளம், குட்செட்வீதி, பண்டாரிக்குளம், நெடுங்குளம், தெற்கிலுப்பைக்குளம், கோவில்குளத்திலிருந்து சிதம்பரபுரம் வரை, வெளிக்குளத்திலிருந்து துட்டுவாகை வரை, கருவேலப்புளியங்குளம், மலையாபருத்திக்குளம், மடுகந்த, அட்டம்பஸ்கட உட்பட்ட இடங்களிலும் மின் தடைப்படும்.
மேலும் மாமடுவிலிருந்து பொகஸ்வெவ வரை, பறயனாலங்குளத்திலிருந்து முகத்தான்குளம் வரை, நெளுக்குளத்திலிருந்து பறயனாலங்குளம் வரை, பூவரசங்குளத்திலிருந்து செட்டிக்குளம் வரை, புளிதறித்தபுளியங்குளத்திலிருந்து செக்கட்டிப்புலவு வரை,
பிரமனாளங்குளத்திலிருந்து பெரியதம்பனை வரை, பூந்தோட்டம், வைரவபுளியங்குளம், பட்டானிச்சூர், குருமன்காடு, வேப்பங்குளம், குளுமாட்டு சந்தி, கூமாங்குளம், மரக்காரம்பளை, நெளுக்குளம், சாம்பல்தோட்டம், பாரதிபுரம், விநாயகபுரம், இராசேந்திரகுளம், நாகர்இலுப்பைகுளம், அறுகம்புல்வெளி, அவுசதப்பிட்டிய, நவகம, பழையனூர், உளுக்குளம், சின்னத்தம்பனை, நேரியகுளம், இலுப்பைக்குளம், அழகாபுரி, முதலியார்குளம், சின்னசிப்பிக்குளம், முகத்தான்குளம், செட்டிக்குளம் உள்ளிட்ட கிராமம் வரையும் மின்சார விநியோகம் தடைப்படும். மேலும் பின்வரும் தொகை வளங்கள் மின் பாவனையாளர்களுக்கும் மின் தடை ஏற்படவுள்ளது.
வவுனியா வைத்தியசாலை, பூங்கா வீதி, சூசைப்பிள்ளையார்குளம், கொக்கெலிய, அக்கோபுர, கச்சேரியடி நீர்பாசன சபை, சுகாதார திணைக்களம், இலங்கை தொலைத்தொடர்பு நிலையம், மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, இலங்கை வங்கி, ஓவியா விடுதி, எஸ்.வீ.ஆர் அரிசி ஆலை, ராணி அரிசி ஆலை, லங்கா அரிசி ஆலை, கார்கில்ஸ் பூட் சிற்றி, விமானப்படை முகாம் உப இல 01, மன்டெரின் ஆடைத்தொழிற்சாலை, வவுனியா இராணுவ முகாம், வவுனியா விமானப்படை இணைந்த பராமரிப்பு நிலையம், மூன்றுமுறிப்பு இராணுவ முகாம், ஆகிய தொகைவளங்கல்களுக்கும் மின்சாரம் தடைப்படவுள்ளது.
மேலும் கௌவ்லூம் ஆடைத்தொழிற்சாலை, ஈரப்பெரியகுளம் இராணுவ முகாம், எஸ் எல் பி சி ஈரப்பெரியகுளம், கீர்த்தி அரிசி ஆலை, ஹொரவப்பொத்தானை வீதி, குடாகச்சக்கொடிய கல்லுடைக்கும் ஆலை, பிரசன்னா கல்லுடைக்கும் ஆலை, சிஈசீ கல்லுடைக்கும் ஆலை, யுஎன்எச்சீஆர் குருமன்காடு, ஸ்ரீரங்கன் அரிசி ஆலை, தெய்வேந்திரம் அரிசி ஆலை, ஜீவன் அரிசி ஆலை, சுஜன் அரிசி ஆலை, அஸ்வி அரிசி ஆலை, சுஜன் அரிசி ஆலை காத்தான்கோட்டம் , நெளுக்குளம் நீர்ப்பாசன சபை, தந்திரமலை சந்தி (கஜசிங்கபுர இராணுவ முகாம்),
வவுனியா பல்கலைக்கழகம், பம்பைமடு பல்கலைக்கழகம், நெளுக்குளம் தொழிநுட்பக்கல்லூரி, விமானப்படை வேளாங்குளம், செட்டிகுளம் வைத்தியசாலை, செட்டிகுளம் தொலைத்தொடர்பு நிலையம், செட்டிகுளம் பலநோக்கு கூட்டுறவுச்சங்கம், சக்திகம மல்வத்துஓயா இல 02, மெனிக்பாம் வலயம் 02 ஆகிய தொகை வளங்கள் பாவனையாளர்களுக்கும் மின்விநியோகம் தடைப்பட்டிருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வவுனியா புகையிரத நிலைய வீதியில் பாடசாலை மாணவர்களை மோட்டார் சைக்கில் மோதி தள்ளியதில் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று (12.07.2019) மாலை இடம்பெற்ற இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
புகையிரத நிலைய வீதியூடாக துவிச்சக்கரண்டியில் பயணித்த மாணவர்கள் பண்டாரிக்குளம் நோக்கி பாதையின் மறுபக்கம் மாற முற்பட்ட சமயத்தில் புகையிரநிலைய வீதியூடாக குருமன்காடு நோக்கி அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கில் வீதியினை கடக்க முயன்ற துவிச்சக்கரவண்டியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த மாணவர் ஒருவர் காயமடைந்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த பண்டாரிக்குளம் பொலிஸ் காவலரணில் காவலில் நின்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த புகைப்படங்களால் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதி தங்கள் வேலையை இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அந்த தம்பதி தாங்கள் வேட்டையாடிக் கொன்ற ஒரு நீர் யானை, வரிக்குதிரை, சிறுத்தை மற்றும் சிங்கம் ஒன்றின் அருகில் அமர்ந்து போஸ் கொடுத்திருந்தனர்.
இதனால் விலங்குகள் நல ஆர்வலர்கள் முதல் பொதுமக்கள் வரை ஆத்திரமுற்றனர். எனவே அந்த தம்பதி நடத்தி வரும் சூப்பர் மார்க்கெட்டை புறக்கணிக்க பேஸ்புக்கிலேயே அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த சூப்பர் மார்க்கெட் குழுமம், சம்பந்தப்பட்ட தம்பதி தங்கள் பணியிலிருந்து உடனடியாக விலகுவதாக தெரிவித்தது.
நேற்று வட கிழக்கு பிரான்சிலுள்ள அந்த தம்பதி நடத்தி வந்த கடை மூடப்பட்டிருந்ததோடு, அவர்கள் வேலையை ராஜினாமா செய்து விட்டதாக சூப்பர் மார்க்கெட் கூட்டுறவுக் குழுமமும் அறிவித்தது.
தாங்கள் வேலையை விடுவதைக் குறித்து குறிப்பிட்ட தம்பதி சமூக ஊடகங்களில் எந்த விமர்சனமோ கருத்தோ தெரிவிக்கவில்லை.
பவேரியாவின் Windischeschenbachஐச் சேர்ந்த Justin Fischer (13), நீச்சல் குளம் ஒன்றின் அடியில் ஒரு சிறுவன் அசைவின்றி கிடப்பதைக் கண்டுள்ளான். சற்றும் யோசிக்காமல் குளத்தில் குதித்த Justin, அந்த சிறுவனை கரைக்கு இழுத்துக் கொண்டு வந்திருக்கிறான்.
அந்த சிறுவனின் உதடுகள் நீலமாகி விட்டன, அவனுக்கு மூச்சு வரவில்லை என்கிறான் Justin. உடனடியாக Justin உதவி கோரி சத்தமிட, நீச்சல் குள ஊழியர் ஒருவர் ஓடி வந்து அந்த சிறுவனுக்கு முதலுதவி அளித்திருக்கிறார்.
சற்று நேரத்தில் அந்த சிறுவன் மூச்சு விட ஆரம்பித்திருக்க்கிறான். பொலிசார், நீச்சல் குள உதவியாளர்கள் என ஆளாளுக்கு Justinஐப் பாராட்ட, அவனோ குளத்தில் குதித்து அந்த சிறுவனுக்கு உதவியது சாதாரண விடயம்தான் என்கிறான். இதற்கிடையில் விளையாடிக் கொண்டிருந்த மகனைக் காணாமல் தேடி வந்த அந்த சிறுவனின் தாய் நீச்சல் குளத்திற்கு வரவும், அந்த சிறுவன் மூச்சு விடவும் சரியாக இருந்திருக்கிறது.
உடனடியாக அந்த சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். மருத்துவமனையில் அவனை அனுமதித்த பொலிஸ் அதிகாரிகள் அவனுக்கு ஆறுதல் கூறிவிட்டு, அவன் உடல் நலம் பெற்றதும் தாங்களே வந்து அவனை வீட்டில் கொண்டு விடுவதாக கூறிவிட்டு வந்திருக்கிறார்கள்.
அதேபோல், அவன் உடல் நலம் பெற்றதும், அவனை தங்கள் பொலிஸ் வாகனத்தில் கொண்டு வீட்டில் விட்டுள்ளதை ட்விட்டர் பதிவு ஒன்றின்மூலம் அறிய முடிகிறது. Jakob என்று அழைக்கப்படும் அந்த சிறுவன் நலம் பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மர மனிதன் அறிகுறி என்ற நோயால் பாதிக்கப்பட்டு கைகளில் மரம் போன்ற வளர்ச்சியால் வலியும் வெட்கமும் அனுபவித்து வந்த ஒரு நபரிடம் இப்போது அறுவை சிகிச்சைக்குப்பின் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது.
காஸாவைச் சேர்ந்த Mahmoud Taluli (44), epidermodysplasia verruciformis (EV) என்னும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். உடலில் தோன்றும் அசாதாரண வளர்ச்சிகளை உண்டாக்கும் வைரஸ்களுடன் போரிட இயலாத நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் இந்த நோய் ஏற்படுவதாக கருதப்படுகிறது.
தனது கைகளில் ஏற்பட்ட இந்த வளர்ச்சியால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவதியுற்று வந்த Taluliக்கு இரண்டு ஆண்டுகளுக்குமுன் அறுவை சிகிச்சை மூலம் அந்த மரம் போன்ற வளர்ச்சி அகற்றப்பட்டது.
என்றாலும் அவை மீண்டும் வளர்ந்ததால் 2017இலிருந்து நான்கு அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டிய நிலை Taluliக்கு ஏற்பட்டது. அவருக்கு இன்னும் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அந்த வளர்ச்சிக்கு காரணமான வேர்களும் அகற்றப்பட வேண்டியுள்ளது.
ஒரு கட்டத்தில் சில மருத்துவர்கள் Taluliயின் கைகளை அகற்ற வேண்டியதுதான் என்று கூறிவிட, Hadassahவைச் சேர்ந்த எலும்பியல் மருத்துவரான Dr Michael Chernofsky, வெற்றிகரமாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்து அவரை ஒரு சாதாரண மனிதனாக்கியிருக்கிறார். எப்படியோ, ஒரு வழியாக ஒரு சாதாரண மனிதனாக, கடைசியில் தனது பிள்ளைகளுடன் தன்னால் விளையாட முடியும் என்பதில் தனக்கு மிக்க மகிழ்ச்சி என்கிறார் Taluli.
இந்தியாவில் தன்னை இரண்டாவதாக திருமணம் செய்த மனைவி, முதல் கணவர் மற்றும் குடும்பத்தாருடன் தொடர்ந்து நட்பாக பழகியதால் ஆத் திரமடைந்த கணவர் மனைவியை கொ லை செய்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவை சேர்ந்தவர் குருசரண். இவருக்கும் சுரிந்தர் என்ற பெண்ணுக்கும் இரண்டாண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. திருமணமான சில காலத்துக்கு பின்னர் சுரிந்தருக்கு ஏற்கனவே திருமணமாகி இரு குழந்தைகள் இருப்பதை குருசரண் கண்டுபிடித்து அதிர்ச்சியடைந்தார்.
ஆனாலும் மனைவியுடன் அவர் சமாதானம் பேசி, இனி முதல் கணவர் மற்றும் குடும்பத்தாருடன் பழகக்கூடாது என கூறினார். இதற்கு சுரிந்தர் ஒப்பு கொண்டார். ஆனாலும் வாக்குறுதியை மீறி முதல் கணவர் மற்றும் குடும்பத்தாருடன் நட்பாக இருந்தார்.
இதை குருசரண் கண்கூடாக பார்த்த நிலையில் அவருக்கு கோபம் ஏற்பட்டு மனைவியுடன் சண் டை போட்டார். இதையடுத்து சுரிந்தர் காவல் நிலையத்துக்கு சென்று தனது பிரச்சனையை தீர்த்து வைக்க கோரினார். பின்னர் பொலிசார் குருசரணையும், சுரிந்தரையும் அழைத்து சமாதானம் பேசினார்கள். அப்போது சுரிந்தரின் சகோதரி மற்றும் மகனும் உடனிருந்தார்.
இதை தொடர்ந்து காவல் நிலையத்தில் இருந்து மூவரும் வெளியில் வந்த போது ஆத்தி ரமடைந்த குருசரண் அவர்களை கூ ரான ஆயு தத்தை கொண்டு தாக் கினார். இதில் சம்பவ இடத்திலேயே சுரிந்தர் உயிரி ழந்துவிட மற்ற இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அங்கிருந்து தப்பியோடிய குருசரணை பொலிசார் தேடி வருகிறார்கள்.