உறங்கிக்கொண்டிருந்த தம்பதி : நள்ளிரவில் வீடு புகுந்த கும்பல் : மனைவி காலில் விழுந்து கெஞ்சியும் நடந்த சம்பவம்!!

உறங்கிக்கொண்டிருந்த தம்பதி

தமிழகத்தில் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் இளைஞரை வெ ட்டி கொ லை செய்துள்ள சம்பவம் பரப ரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை சேர்ந்தவர் நிரூபன் சக்கரவர்த்தி. இவர் தந்தையை முத்து இருள் என்பவர் கடந்தாண்டு அடித் துள்ளார். இதனை நிரூபன் தட்டிக்கேட்டதால் இருவருக்கும் சண் டை ஏற்பட்டது.

இந்நிலையில் திருட்டு வழக்கில் முத்து இருள் கடந்த ஆண்டு சி றை சென்றார். சி றையில் இருந்து சில நாட்களுக்கு முன் வெளிவந்த அவர், நிரூபனை ப ழிவாங்க எண்ணியதாக தெரிகிறது.

இது குறித்து அவர் திட்டம் போட்டார். பின்னர் ஹெல்மெட் அணிந்த 6 பேர் கொண்ட கும் பலுடன் சென்ற முத்து நள்ளிரவில் நிரூபனின் வீட்டுக்குள் புகுந்தார். அங்கு நிரூபன் தனது மனைவி குழந்தைகளுடன் தூங்கி கொண்டிருந்த நிலையில் நிரூபனை வெ ட்டி கொ லை செய்ததாக கூறப்படுகிறது.

அப்போது நிரூபன் மனைவி தனது குழந்தைகளுடன் அவர்கள் காலில் விழுந்து கெஞ்சியும் அந்த கும்பல் கொ டூர கொ லையை அரங்கேற்றியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

துபாய் அரசரிடம் பிள்ளைகளை ஒப்படைக்கக்கூடாது : இலங்கைக்கு தப்ப முயன்று பிடிபட்ட இளவரசியின் நண்பர்!!

துபாய் அரசர்

பிரித்தானிய வரலாற்றில் அதிக செலவு பிடிக்கும் விவாகரத்துகளில் ஒன்று என கருதப்படும் துபாய் அரசர், அவரது ஆறாவது மனைவியின் விவாகரத்து லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற இருக்கும் நிலையில், பிள்ளைகளை அரசரிடம் ஒப்படைக்கக்கூடாது என்று இலங்கைக்கு தப்ப முயன்று பிடிபட்ட இளவரசி லத்தீபாவின் நண்பர் ஒருவர் கூறியுள்ளார்.

துபாய் அரசர் Sheikh Mohammedஇன் ஆறாவது மனைவி Haya bint al-Husseinதுபாயிலிருந்து தப்பியோடி லண்டனில் மறைந்திருக்கும் நிலையில், அவர்களது விவாகரத்து வழக்கு லண்டன் நீதிமன்றம் ஒன்றில் நடைபெற உள்ளது. விவாகரத்து வழங்கப்படும்போது, பிள்ளைகளை யார் பார்த்துக் கொள்வது என்ற பிரச்சினை எழும்.

அப்படி வரும்போது எக்காரணம் கொண்டும் பிள்ளைகளை அரசரிடம் ஒப்படைக்ககூடாது என இளவரசி லத்தீபாவின் நண்பர் ஒருவர் கூறியுள்ளார். ஏனென்றால், ஏற்கனவே துபாயிலுள்ள தங்கள் வீட்டிலிருந்து அரசரின் மகளான இளவரசி லத்தீபா (33) தப்பியோட முயலும்போது, அவரும் அவரது மற்றொரு சகோதரியும் கடத்தப்பட்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறைக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

லத்தீபா இலங்கைக்கு தப்ப முயலும்போது, இந்திய கடற்பகுதியில் சிக்கினார். லத்தீபா தப்புவதற்கு திட்டம் வகுத்துக் கொடுத்த முன்னாள் பிரெஞ்சு உளவாளியான Captain Herve Jaubert, லத்தீபா ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளதால், அவரால் தந்தையின் விவாகரத்து வழக்கில் பங்கேற்க இயலாது என்றும், அதனால் அவரது சார்பில் பேச தனக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இப்படி மகளையே கடத்தக்கூடிய ஒரு நபரிடம் பிள்ளைகளை ஒப்படைப்பதால் அவர்களுக்கு எதுவும் நடக்கலாம் என்பதை வழக்குடன் தொடர்புடையோர் நினைவில் கொள்ளவேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கிடையில், விவாகரத்து வழக்கிற்காக அரசர் Sheikh, Helen Ward என்ற வழக்கறிஞரை நியமித்துள்ளார். Helen Ward, பாடகி மடோனாவிற்கு அவரது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றுக் கொடுத்தவர்.

அரசரின் மனைவியான இளவரசி ஹயா தனது சார்பில் வழக்காட Steel Magnolia என்ற பட்டப்பெயர் கொண்ட Fiona Shackletonஐ நியமித்துள்ளார். Fiona Shackleton ஒன்றும் சாதாரண ஆளில்லை, இளவரசர் சார்லசுக்கு இளவரசி டயானாவிடமிருந்து விவாகரத்து வாங்கிக் கொடுத்தவர் அவர்தான்.

30 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா வந்த வெளிநாட்டவர் செய்த நெகிழ்ச்சி செயல் குவியும் பாராட்டு!!

கென்யாவை சேர்ந்த எம்.பி ஒருவர் 30 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் படித்தபோது வாங்கிய 200 ரூபாய் கடனைத் திருப்பிக் கொடுக்க இந்தியா வந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கென்யாவின் யாரிபாரி சாச்சே தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ரிச்சர்ட் டோங்கி என்பவர், 1980களில் மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள கல்லூரியில் படித்துள்ளார்.

அப்போது அருகில் இருந்த காசிநாத் ஹவ்லி என்பவரின் மளிகைக் கடையில் கடன் வாங்குவதும், கொடுப்பதுமாக இருந்துள்ளார் டோங்கி. இந்நிலையில் படிப்பை முடித்து கென்யா சென்றபின் அரசியல் கட்சியில் பணியாற்றி எம்.பி.யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆண்டுகள் பல கடந்த போதும், இந்தியாவில் தனக்கு கிடைத்த உதவியை நன்றியை மறவாமல் நினைவில் வைத்திருந்த டோங்கி, மனைவியுடன் இந்தியா வந்து, தனக்கு கடன்கொடுத்த மளிகைக்கடைக்காரரை அவுரங்காபாத்தில் தேடி அலைந்துள்ளார்.

ஒருவழியாக சிரமப்பட்டு அவரின் வீட்டை கண்டுபிடித்த டோங்கி, 200 ரூபாயை திரும்பக் கொடுத்ததுடன், கென்யாவிற்கு தமது விருந்தினராக வருமாறு காசிநாத் ஹவ்லி குடும்பத்தாருக்கு அழைப்பு விடுத்தார்.

வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்யும் பலர் வாழும் உலகில் இப்படியும் ஒரு நேர்மையான மனிதரா என டோங்கியை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

டோனியின் ரன் அவுட்டைக் நேரலையில் பார்த்த இளைஞருக்கு நேர்ந்த கதி : பரிதாப சம்பவம்!!

பரிதாப சம்பவம்

நியூசிலாந்து அணிக்கெதிரான அரையிறுதிப் போட்டியில் டோனியின் ரன் அவுட்டைக் கண்டவுடன் மாரடைப்பால் இளைஞர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் கடைசி கட்டத்தில் டோனி அவுட்டான ரன் அவுட் தான் இப்போது சமூகவலைத்தளங்களில் பெரிய விவாதமாகவே சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கொல்கத்தாவின் Hooghly மாவட்டத்தைச் சேர்ந்த Srikanta Maity என்ற 30 வயது நபர் தன்னுடைய சைக்கிள் ரிப்பேர் செய்யும் கடையில் மொபைல் போனில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதிய அரையிறுதிப் போட்டியை பார்த்துள்ளார்.

போட்டி இறுதிகட்டத்தில் பரபரப்பாக சென்று கொண்டிருந்தால், யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்விக் குறி எழுந்து கொண்டே இருந்தது. இதில் இறுதிக்கட்டத்தில் டோனியை கப்தில் அற்புதமாக ரன் அவுட் செய்ய, மூன்றாவது நடுவர் அவுட் என்று கொடுத்தவுடன் அதைக் கண்ட Srikanta Maity அந்த இடத்திலே மயங்கி விழுந்துள்ளார்.

அதன் பின் அங்கிருப்பவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ள. ஆனால் அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்துவிட்டார் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மனைவிக்காக உயி ரை தியாகம் செய்த கணவன் : நாட்டு மக்களை நெகிழச்செய்த மனிதர்!!

தியாகம் செய்த கணவன்

தம்புள்ளையில் தனது மனைவி உயி ரிழந்த சோகம் தாங்காமல், கணவர் ஒருவர் ஏரியில் குதி த்து தற் கொ லை செய்துள்ளமை அந்தப் பகுதி மக்களை பெரும் துய ரத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரத்மல்கஹாஎல பகுதியை சேர்ந்த பியசேன என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரி ழந்துள்ளார்.

பிற்பகல் முதல் வீட்டில் காணா மல் போயிருந்த குறித்த நபரை தேடும் போதே அவரது சட லம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் மனைவி உயிரி ழந்துள்ளார். மிகவும் நேசித்த மனைவி உயிரிழந்த பின்னர் மன வேதனையிலேயே அவர் காணப்பட்டுள்ளார் என த ற்கொ லை செய்து கொண்டவரின் மகன் தெரிவித்துள்ளார்.

இனி நான் தனியாக வாழ்ந்து என்ன பயன் என கூறி அவர் பல நாட்களாக தனியாக அழுவார் என மகன் குறிப்பிட்டுள்ளர். கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்னர் வி ஷம் அரு ந்தி த ற்கொ லை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.

எனினும் இந்த முறை அவரை காப்பாற்ற முடியாமல் போனதாக மகன் பொலிஸாரிடம் கூறியுள்ளார். சமகாலத்தில் மனைவிக்காக உயிரை தியாகம் செய்ய துணிந்த கணவனின் அன்பை எண்ணி இலங்கையர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

வெளிநாடுகளிலிருந்து வெளியேற்றட்ட 858 இலங்கையர்கள்!!

மத்திய கிழக்க நாடுகளில் பணி புரிந்த நிலையில், அங்கிருந்து 858 பெண்கள் நேற்று இலங்கையை வந்தடைந்துள்ளனர். வெளிநாடுகளில் தூதரக அலுவலகங்களில் தொழிலாளர் பிரிவின் கீழ் நடத்தப்பட்டு வரும் பாதுகாப்பு நிலையங்களில் தங்கியிருந்தவர்களே இவ்வாறு தாயகம் திரும்பியுள்ளனர்.

குவைத், சவுதி அரேபியா, ஜோடான் ஆகிய நாடுகளில் நடத்தப்படும் பாதுகாப்பு நிலையங்களில் இருந்த பெண்களில் ஒரு தொகுதியினர் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

சவுதி அரேபியா ரியாத் தூதரக அலுவலகத்தின் பாதுகாப்பு நிலையத்தில் தங்கியிருந்த 18 பேர் இலங்கை வந்துள்ளனர். இதுவரையில் இன்னும் 33 பேர் அங்கு தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜோடான் தூதரக அலுவலக பாதுகாப்பு நிலையத்தில் தங்கியிருந்த 12 பெண்கள் இலங்கை வந்துள்ளனர். அங்கு தற்போது எவரும் அங்கு தங்கியிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

உலக நாடுகளில் உள்ள தூதரக அலுவலக தொழிலாளர் பிரிவு 12 இன் கீழ் நடத்தப்படும் பாதுகாப்பு நிலையங்களில் இது வரையில் தங்கியிருந்த பணியாளர்களின் எண்ணிக்கை 263 ஆகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் முதல் தடவையாக முதுமாணி பட்டம் பெற்றுள்ள மரண தண்டனை கைதி!!

மரண தண்டனை கைதி

இலங்கையில் மரண தண்டனை கைதி ஒருவர் முதுமாணி பட்டம் ஒன்றை பெற்றிருக்கிறார். இவர் சர்வதேச ரீதியில் 5ஆம் இடத்தை பெற்றிருப்பதுடன், இலங்கையில் முதல் தடவையாகவும், உலகில் 5 தடவையாகவும் சிறைக்கை தி ஒருவர் முதுமாணி பட்டம் பெறும் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இந்திக்க ஏக்கநாயக்க என்ற இலங்கையர் தனது முதுமாணி பட்டத்தை பெற்றுக் கொண்டுள்ளார். இவர் தற்போது குற்றச்சாட்டு ஒன்றின் பேரில் மரணதண்டனை கைதியாக உள்ள நிலையில் ஆயுள் தண்டனை கைதியாக மாற்றப்பட்டிருக்கின்றார்.

அந்தவகையில் அவர் ஏற்கனவே, பட்டம் பெற்ற ஒருவராக இருந்தார். இதன்பின்னர் 2017ஆம் ஆண்டு அவர் களனி பல்கலைகழகத்தில் முதுமாணி பட்டம் கற்கையை மேற்கொண்டார். அந்தவகையில் நேற்று அவருக்கு முதுமாணி பட்டத்திற்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தனது முயற்சிக்கு தனது மனைவியே முழுமையான ஆதரவை வழங்கியதாக இதன்போது அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் தேசிக்காய்க்கு ஏற்பட்ட பெரும் மதிப்பு : ஒரு கிலோ இத்தனை ஆயிரம் ரூபாவா?

தேசிக்காய்க்கு ஏற்பட்ட பெரும் மதிப்பு

வவுனியா வர்த்தக நிலையங்களில் ஒரு கிலோ கிராம் தேசிக்காய் 1500 ரூபா வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறியளவிலான தேசிக்காய் ஒன்று 20 ரூபாவுக்கும் சற்று பெரிய தேசிக்காய் ஒன்று 30 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

வவுனியா வர்த்தகர்கள் ஒரு கிலோ கிராம் தேசிக்காயை 800 ரூபாவுக்கு கொள்வனவு செய்து அதனை 1500 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றனர். தற்போதைய நிலையில் வர்த்தக நிலையங்கள், சந்தைகளில் தேசிக்காய்க்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதாக குறிப்பிடப்படுகின்றது.

கடுமையான வறட்சி காரணமாக இவ்வாறு விலை அதிகரித்துள்ளதாகவும் தேசிக்காய் மரங்களுக்கு தண்ணீர் போதாமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இந்து ஆலயங்களின் ஒன்றியத்தினர் போராட்டம்!!

போராட்டம்

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வீதி வளைவினை மீண்டும் நிர்மானிப்பதில் பிரதேசசபைத் தவிசாளர் அனுமதித்த பின் அதனை திரும்பவும் அவரே இடைநிறுத்துமாறு இடைக்காலதடை உத்தரவினை பிறப்பித்தமையினை ஆட்சேபித்து வவுனியா பிரதேச இந்து ஆலய ஒன்றியம், வவுனியா வடக்கு இந்து ஆலய ஒன்றியம், வெங்கலச் செட்டிக்குளம் இந்து ஆலய ஒன்றியம் இணைந்து ஏற்பாடு செய்த கண்டணப்பேரணி வவுனியாவில் இன்று (12.07.2019) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

வவுனியா கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக 15 நிமிடங்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் அதன் பின்னர் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு சென்று வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக அமைச்சர் மனோ கணேசனிடம் ஒப்படைப்பதற்கான மகஜரை வவுனியா மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் சாந்தினி தனபாலன் அவர்களிடம் கையளித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எம்மவரை பங்குபோடாதே வீடுவிடாய் திரியாதே, ஆயரே பிரதேச சபையை ஆட்சி செய்யாதே, ஆட்களை வெருட்டாதே, அன்பு செய்வது போல் ஆணவம் காட்டாதே, வளைவை உடைப்பதனால் வளைந்து விடமாட்டோம் என்று எழுதப்பட்ட பாதாதைகளை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியாவில் தீக்காய ங்களுடன் கணவன் மனைவி வைத்தியசாலையில் : பொலிசாரின் விசாரணை ஆரம்பம்!!

கணவன் மனைவி வைத்தியசாலையில்

வவுனியா பொதுமண்டப வீதி 1ம் ஒழுங்கையில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து தீக்காய ங்களுக்கு உள்ளாகிய நிலையில் காணப்பட்ட கணவன் மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (12.07.2019) வெள்ளிக்கிழமை காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த வீட்டில் கத றல் சத்தம் கேட்டுள்ளது. அதனையடுத்து அயலவர்கள் வீட்டின் கதவினையுடைத்துக்கொண்டு உள்ளே சென்ற சமயத்தில் வீடு முழுவதும் மண்ணெண்ணய் ஊற்றிக்காணப்பட்டதுடன் அவர்கள் தீப் பற்றிய நிலையில் காணப்பட்டுள்ளனர்.

அதன் பின்னர் அயவர்கள் கணவன் மனைவியான இருவரையும் மீட்டெடுத்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

29 வயதுடைய கணவன் மற்றும் 27 வயதுடைய மனைவி ஆகிய இருவருமே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கை, கால், நெஞ்சு ஆகியபகுதிகளில் தீக்காயங்கள் காணப்படுவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மர்மமான முறையில் உயி ரிழந்த ஆண் ஒருவரின் சட லம் வான் ஒன்றில் இருந்து மீட்பு!!

ஆண் ஒருவரின் சட லம்

மர்மமான முறையில் உயி ரிழந்த ஆண் ஒருவரின் சட லம் வான் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம், நாவலப்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ரம்புக்பிட்டிய எனும் 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு சட லமாக மீட்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. மது போ தையில் உறங்கிய நிலையில் குறித்த நபர் இவ்வாறு உயிரிழந்திருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இலங்கையில் மென்பானங்களை அருந்துபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

மென்பானங்கள்

நாளாந்தம் 100 மில்லிமீற்றர் இனிப்புச் சுவை ஊட்டப்பட்ட மென்பானங்களை அருந்துவோருக்கு புற்றுநோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் 18 சதவீதத்தால் அதிகரித்திருப்பதாக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது, “இனிப்பு சுவை ஊட்டப்பட்ட மென்பானங்களுக்கும் புற்றுநோய்களுக்கும் இடையில் நெருக்கிய தொடர்புகள் இருப்பதாகவும் ஆய்விலிருந்து தெரியவந்துள்ளது.

இதனால் மார்பக புற்றுநோய்க்கு உள்ளாகும் பெண்களின் எண்ணிக்கை 22 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள். நாளாந்த சீனிப் பாவனையை பத்து சதவீதத்தை விட குறைக்குமாறு உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைந்துள்ள நிலையில் புதிய ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சுவிஸ்லாந்தில் இடம்பெற்ற கோர விபத்து : இலங்கை தமிழ் இளைஞர் பரிதாபமாக பலி!!

கோர விபத்து

சுவிஸ்லாந்து Waldstatt a Töfffahrer பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயரிழந்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இதில் 25 வயதான இலங்கை தமிழ் இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலையை பிறப்பிடமாகவும், சுவிட்ஸர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட ரதீபன் ரவீந்திரன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வாகனம் ஒன்றை முந்திச்செல்ல முற்பட்ட போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், குறித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் குறித்து அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதிவேகத்தால் முகம் சிதறி பலியான இளைஞர் : படங்கள்!!

பலியான இளைஞர்

சூரியவெவ – டி 10 சந்தியில் உந்துருளியும், டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதுண்ட விபத்தில் உந்துருளி செலுத்துனர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த விபத்தில் சூரியவெவ பகுதியை சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அதிக வேகத்தில் பயணித்த உந்துருளி கட்டுப்பாட்டை இழந்து டிப்பர் ரக வாகனத்தில் மோதியுள்ளது. இதில் உந்துருளி செலுத்துனர் முகம் சிதைவடைந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் டிப்பர் ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். உந்துருளி செலுத்துனரின் கவனயீனமே விபத்திற்கு காரணமாக அமைந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வவுனியா பொலிசாரின் திடீர் சுற்றிவ ளைப்பு நடவடிக்கையில் 3 வாகனங்களுடன் 9பேர் கைது!!

திடீர் சுற்றிவளைப்பு

வவுனியாவில் கடந்த மூன்று தினங்களாக மரக்க டத்தலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிராக பொலிசார் மேற்கொண்ட விஷேட நடவடிக்கையின் போது 3வாகனங்களுடன் 9பேரை பொலிசார் கைது செய்துள்ளதாகவும், அவர்களிடமிருந்து 20 இலட்சம் ரூபா பெறுமதியான மரக்குற்றிகளையும் கைப்பற்றப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர அபேயவிக்கிரம தலைமையின் கீழ் செயற்பட்ட விஷேட பொலிஸ் பிரிவில் 7 பேரடங்கிய பொலிஸ் குழுவினரால் கடந்த மூன்று தினங்களாக வவுனியா புளியங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நொச்சிக்குளம், புதூர், பரசங்குளம், அனந்தர்புளியங்குளம் பகுதிகளில்

மேற்கொண்ட திடீர் சுற் றிவளை ப்புக்களின் போது 20 இலட்சம் ரூபா பெறுமதியான முதிரை குற்றிகள் 35, தேக்கங்குற்றிகள் 15 என்பனவற்றைக் கைப்பற்றியுள்ளதுடன் இதற்குப்பயன்படுத்திய பாரஊர்தி, பட்டா ரக கப் வாகனங்கள் என்பனவற்றுடன் சந்தேக நபர்கள் 9 பேரையும் கடந்த மூன்று தினங்களில் கைது செய்துள்ளதாகவும் இவர்கள் நீண்டகாலமாக இவ்வாறான சட்டவி ரோதமான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளது விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

கைப்பற்றிய பொருட்களுடன் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் பெண் பிள்ளைகளின் முழு விபரமும் வீதியில் : பெற்றோர் விசனம்!!

பெற்றோர் விசனம்

வவுனியாவில் தனியார் கல்வி நிலையமொன்று தமது நிலையத்தில் கற்கும் மாணவிகளின் புகைப்படங்கள் தாங்கிய விண்ணப்பப் படிவங்களை வீதியில் வீசியமை தொடர்பாக பெற்றோர் விசனம் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் உள்ள தனியார் கல்வி நிலையமொன்று தமது நிலையத்தில் கற்கும் மாணவர்களின் விபரங்களை சேகரிப்பதற்காக விண்ணப்பபடிவங்களை பயன்படுத்தியுள்ளது. இதில் மாணவிகள் மற்றும் மாணவர்களது புகைப்படங்களும் அவர்கள் தொடர்பான விபரங்கள் பெற்றோரது தொலைபேசி இலக்கங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் குறித்த விபரங்கள் அடங்கிய விண்ணப்படிவங்கள் நெளுக்குளம் பகுதியிலுள்ள ஒழுங்கையின் குளப்பகுதியில் வீசப்பட்டுள்ளது.

இந் நிலையில் இன்று காலை இவ் வீதியில் பயணித்தவர்கள் பெண்களின் புகைப்படங்கள் ஒட்டப்பட்ட விண்ணப்பபடிவங்கள் அதிகளவில் காணப்படுவதை அவதானித்து இது தொடர்பில் ஆராய்ந்தபோதே தனியார் கல்வி நிலையத்தினரின் அசமந்தப்போக்கு தொடர்பில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் பெற்றோர் விசனமடைந்துள்ள நிலையில் குறித்த தனியார் கல்வி நிலையத்தினருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தனர். இவ்விடயம் தொடர்பாக தனியார் கல்வி நிலையத்தின் உரிமையாளரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது,

தமது கல்வி நிலையம் இடம் மாற்றப்பட்டபோது பழைய விண்ணப்பபடிவங்களை அழிப்பதற்காக வைத்திருந்தபோது அவை களவாடப்பட்டு வீதியோரங்களில் வீசப்பட்டுள்ளதாகவும் அவற்றில் சிலவற்றை தான் எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். எனினும் இப் படிவங்கள் களவாடப்பட்டமை தொடர்பாக பொலிஸ் முறைப்பாடு எதனையும் தான் செய்யவில்லை எனவும் தெரிவித்தார்.