வவுனியாவில் மனோ கணேசனின் இணைப்புக் காரியாலயம் திறந்துவைக்கப்பட்டு மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படும்!!

வவுனியாவில் அமைச்சர் மனோ கணேசனின் இணைப்புக் காரியாலயம் ஒன்று மிக விரைவில் திறந்து வைக்கப்பட்டு அதனூடாக மக்களுடைய அடிப்படைப் பிரச்சினைகள் தீர்த்துவைக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய ஒருமைப்பாடு அரச கருமமொழிகள் சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசனின் வடமாகாண இணைப்பாளர் ச.விமலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று காலை வன்னி இன் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்,

வன்னி மாவட்ட அபிவிருத்திக்காக அமைச்சர் மனோ கணேசன் முன்னூறு மில்லியன் ரூபாவை ஒதுக்கீடாக வழங்கியுள்ளார். இந்நிதியூடாக பாடசாலைகள், விளையாட்டுக்கழகங்கள், திருத்தி உட்கட்டமைப்பு வசதிகள் மேலும் பல வேலைத்திட்டங்களை மேற்கொள்ள முடியும். சமூக மேம்பாட்டு அமைச்சின்னூடாக பரந்துபட்ட வித்தில் எல்லாவிதமான வேலைத்திட்டங்களையும் மேற்கொள்ள முடியும். வவுனியா மாவட்டத்திற்காக நூறு மில்லியன் ரூபா முதற்கட்டமாக நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சமூக மேம்பாட்டு அமைச்சினூடாக இந்த வேலைத்திட்டங்களை மேற்கொள்ள இருக்கின்றது, இதன் முதற்கட்டமாக பதினொரு மில்லியன் ரூபாவிற்கான வேலைத்திட்டங்கள் நாளைய தினத்தில் வவுனியா மாவட்டத்தில் ஆரம்பிக்கப்டவுள்ளது.

இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட வவுனியா பிரதேச செயலகத்தினூடாக இந்த நிதி சென்று செல்லக்கூடிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமைச்சர் மனோ கணேசன் அமைச்சராக இருகின்ற இக்காலத்தில் வன்னி மாவட்டத்திற்கான அபிவிருத்தி போதாமை இருக்கின்றது. கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் வவுனியா மாவட்டங்களைத்தாண்டி வேறு மாவட்டங்களுக்கு வழங்கியிருந்தபோதிலும் நேரடியாக வவுனியா முல்லைத்தீவு, மன்னார் போன்ற வன்னி மாவட்டங்களுக்கு சென்று நேரடியாக நிலைமைகளைப் பார்வையிட்டதன் மூலமாக வன்னி மாவட்டத்தின் இந்த மூன்று மாவட்டத்தின் அபிவிருத்தியில் உரியளவில் இடம்பெறவில்லை என்பதை நேரடியாக இனங்கண்டு கொண்டதன் மூலமாக இந்த நிதி ஒதுக்கீடுகளை அமைச்சர் வழங்கியுள்ளார். தேவைப்படின் மேலும் நிதி ஒதுக்கீட்டினை வழங்கவுள்ளார்.

வாழ்வாதார உதவி என்பது இன்னுமொரு நிதி ஒதுக்கீட்டிலிருந்து செயற்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இவ்வாறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருவதால் வன்னி மாவட்ட மக்களை மேலும் மேம்படுத்தக்கூடியதாக இருக்கும் என்பதனூடாக இவ்வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.

வவுனியா மாட்டத்தில் வேலைத்திட்டங்களை அமைச்சரின் வவுனியா இணைப்பாளர் எம்.பி.நட்ராஜ் ஊடாக நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம். நேரடியாகவும் மக்கள் எம்முடன் தொடர்புகொண்டு இன்னுமதிகமான வேலைத்திட்டங்களையும் ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

அபிவிருத்தியுடன் நாங்கள் நின்றுவிடாது மிக விரைவில் இமைச்சரின் இணைப்புக் காரியலாயம் ஒன்றினை வவுனியாவில் திறந்துவைத்து அதனூடாகவும் மக்கள் பிரச்சினைகளை நேரடியாக தீர்த்துவைப்பதற்கான சகல நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றோம் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் புகையிரத்தைக் கடவை காப்பாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!!

கவனயீர்ப்பு போராட்டம்

வடக்கு கிழக்கைச் சேர்ந்த ரயில் கடவைக்காப்பாளர்கள் இன்று (11.07) காலை 10.30 மணியளவில் வவுனியா புகையிரத நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நிரந்தர நியமனம் வழங்கப்படவேண்டும், பொலிஸாரின் கட்டுப்பாட்டிலிருந்து தமது கடமையை ரயில்வே திணைக்களத்தின் கீழ் கொண்டு வரப்படவேண்டும் என தெரிவித்தே இப்போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர்.

ரயில் கடவை காப்பாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இவ் ஆர்ப்பாட்டத்தில் 250 ரூபா சம்பளத்தினை உயர்த்து, பொலிஸாரிடம் இருந்து எம்மை மீட்க வேண்டும், எமது பிள்ளைகளின் எதிர்காலம் என்ன?, எம்மை நிரந்தர நியமனத்தில் உள்வாங்கு என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை தாங்கியிருந்தனர். சுமார் ஒரு மணி நேரமாக இவ் ஆர்ப்பாட்டம் புகையிரத நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றிருந்தது.

மாங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பரிதாபமாக பலி!!

இளைஞர்கள் பரிதாபமாக பலி

மாங்குளம் – மல்லாவி வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்தனர் என்று மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். மாங்குளம் வடகாடுப் பகுதியில் நேற்று புதன்கிழமை இந்த விபத்து இடம்பெற்றது.

மாங்குளத்திலிருந்து மல்லாவி நோக்கிச் சென்ற பிக்கப் வாகனம் வடகாடுப் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின் கம்பத்துடன் மோதித் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியது. அதில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலும் மற்றொருவர் மாங்குளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையிலும் உயிரிழந்தார்.

மல்லாவி பாலிநகரைச் சேர்ந்த ஜே.தினேஷ்குமார் (வயது – 17), கே.திசாந்தன் (வயது -18) ஆகிய இருவருமே உயிரிழந்தனர். அவர்கள் இருவருமே வாகனத்தில் பயணித்தனர். விபத்து தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று மாங்குளம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இராஜின் முகநூல் பக்கத்தை அரசாங்கம் நீக்கவில்லை : இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம்!!

இராஜின் முகநூல் பக்கம்

பிரபல சிங்கள பாடகர் இராஜ் வீரரத்னவின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தை அரசாங்கம் நீக்கவில்லை என இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இராஜின் முகநூல் பக்கம் தொடர்பாக பயனாளிகள் அல்லது வேறு தரப்பினர் தொடர்ந்தும் முகநூல் நிறுவனத்திற்கு அனுப்பிய அறிக்கைகளின் பிரதிபலனாக, குறித்த முகநூல் பக்கம், தமது வழிக்காட்டுதல்களை பின்பற்ற பக்கம் (followers page) என கருதி, பக்கத்தை Unpublish செய்துள்ளது.

முகநூல் பக்கம் வழிக்காட்டுதல்களை பின்பற்றுவதில்லை எனவும் இதனால், Unpublish செய்யப்படும் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை செய்தி அனுப்பப்பட்டுள்ளதாகவும் இந்த எச்சரிக்கை செய்திக்கு பின்னர் இராஜின் முகநூல் பக்கம் Unpublish செய்யப்பட்டுள்ளது.

முகநூலில் Unpublish என்ற செயற்பாடானது தானியங்கியதாக நடக்கும் செயற்பாடாகும். இந்த தானியங்கி செயற்பாட்டுடன் முகநூல் பிரதிநிதிகளோ இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளோ எந்த தலையீடுகளை செய்யவில்லை என இலங்கை தகவல் தொழிற்நுட்ப சங்கம் குறிப்பிட்டுள்ளார்.

மகன் செய்த குற்றத்திற்காக சிறை சென்ற தாய்!!

சிறை சென்ற தாய்

மாத்தளையில் மகன் செய்த குற்றத்திற்காக தாய் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கனேமுல்ல, வேவெல்கார பிரதேசத்தில் மகன் நபர் ஒருவரை கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டில் மகன் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்கு பொலிஸாரை ஏமாற்றி தாய் குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டுள்ளார். அதற்கமைய குறித்த தாயாரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா நீதவான் டீ.ஏ.ருவன் பத்திரன உத்தரவிட்டுள்ளார்.

கனேமுல்ல பிரதேசத்தை சேர்ந்த சேபாலிக்கா மிஹிதுகுலசூரிய என்ற பெண்ணே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பணப்பிரச்சினையை தீர்ப்பதற்காக சென்ற நபரை மகன் கத்தியால் குத்தியுள்ள நிலையில், மகனின் கையில் இருந்த கத்தியுடன் தாய் குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டுள்ளார். காயமடைந்தவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய கத்தியால் குத்தியது மகன் என தெரியவந்துள்ளது.

இலங்கையர்களின் உயி ருக்கு ஆப த்தாக மாறியுள்ள ரம்புட்டான்!!

ரம்புட்டான்

கம்பஹா மாவட்டத்தில் டெங்கு நோய் தீவிரமாக பரவி வருவதாக சுகாதார பிரிவு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அந்தப் பகுதிகளில் நீக்கப்பட்ட ரம்புட்டான் தோல்களே இதற்கு காரணமாக மாறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரம்புட்டான் உட்கொள்ளும் பலர் அதன் தோல்களை வீதியில் வீசிவிட்டு செல்வதனை பழக்கமாக்கி கொண்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த தோல்களில் தேங்கும் நீரில் டெங்கு நுளம்பு முட்டையிடுவதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன் காரணமாக ரம்புட்டான் தோல்களை உரிய முறையில் சேகரித்து கழிவுப்பொருட்களுடன் சேர்க்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் மாத்திரம் டெங்கு நோயின் காரணமாக 32 பேர் உயிரி ழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் புகையிரத விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் உயிரிழப்பு!!

இளைஞன் உயிரிழப்பு

வவுனியா புதூர் புளியங்குளம் பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையில் நேற்று மாலை இடம்பெற்ற புகையிரத விபத்தில் சிக்கிய இளைஞன் நேற்று இரவு சிகிச்சைப்பலனின்றி அனுராதபுரம் வைத்தியசாலையில் உயிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்று மாலை 3.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடுகதி புகையிரதத்தில் புதூர் ஆலயப்பகுதியிலிருந்து பிரதான வீதியைக் கடக்க முற்பட்டபோது மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் மீது புகையிரதம் மோதியுள்ளது.

இதையடுத்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் மேலதிக சிகிச்சைக்காக நேற்று இரவு அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து இடம்பெற்ற பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையை பாதுகாப்பான கடவையாக அமைத்துத்தருமாறு பலரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு தீர்வு பெற்றுத்தரவில்லை இதனால் இப்பகுதியில் இடம்பெற்ற இரண்டு விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

டிக்டாக்கால் சிதைந்த அழகான குடும்பம் : இளம்மனைவி செய்த செயல் குறித்து வேதனையுடன் கணவன்!!

சிதைந்த அழகான குடும்பம்

தமிழகத்தில் இளம்பெண் டிக்டாக்குக்கு அடிமையானதால் அவர் குடும்பமே சிதைந்துள்ளது. திருச்சியை சேர்ந்த இளம் தம்பதி மகேஷ் – திவ்யா. காதல் திருமணம் செய்த இவர்களுக்கு 5 வயதில் மகன் உள்ளான்.

இருவருக்கும் சில வருடங்களுக்கு முன்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்து வாழ்கின்றனர். இவர்களின் மகன் திவ்யாவுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், “குழந்தைகள் நலக்குழு” வில் மகேஷ் ஒரு புகாரை அளித்தார். அதில், என் மனைவி திவ்யாவுக்கு டிக்டாக் செயலி மூலம் அன்சாரி என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது.

அவர் எனது மகனை அடி த்து துன் புறுத்து வதாக கூறியுள்ளார். மகனை மீட்டு தன்னுடன் அழைத்து செல்வதற்கும், மகனை அடித்து கொடு மைப்படுத்திய அன்சாரி மீது நடவடிக்கை எடுக்க கோரியும் புகாரில் கூறியுள்ளார்.

இதோடு மனைவியுடன் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் டிக்டாக், பேஸ்புக் போன்றவை தான் திவ்யா தன்னை விட்டு பிரியவும், மணவாழ்க்கையில் விரிசல் ஏற்படவும் முக்கிய காரணம் என்று மகேஷ் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

அவங்க தான் காரணம் : அழு தபடி வி ஷம் குடிக்கும் வீடியோவை வெளியிட்ட இளம்பெண்!!

இளம்பெண்

தமிழகத்தை சேர்ந்த இளம்பெண் த ற்கொ லை செய்வதாக நாடகமாடி வீடியோ வெளியிட்ட நிலையில் அவருக்கு விசித்திரமான தண்டனையை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

காரைக்குடியை சேர்ந்த பெண் கார்த்திகா. இவர் கடந்த மாதம் ஒரு வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டார். அதில் அழுதுகொண்டே பேசிய அவர், நான் த ற்கொ லை செய்ய போகிறேன். இதற்கு காரணம் நான் பணியாற்றும் கடையில் உள்ள நான்கு பேர் தான்.

அங்கு எனக்கு பா லி யல் தொந்தரவு கொடுத்தார்கள், இதன் காரணமாக கணவருடன் தகராறு ஏற்பட்டது, நான் பொய் சொல்லி தண்ணீர் குடித்து ஏமாற்றுவேன் என நினைப்பீர்கள், ஆனால் பாருங்கள் என கூறியவாறே தாம் த ற்கொ லை செய்வதாக வி ஷம் அருந்தும் வீடியோ காட்சியை வெளியிட்டார்.

மேலும் இந்த வீடியோவை ஷேர் செய்யுங்கள் எனவும் கூறியிருந்தார். இதனைக் கண்ட காவல் துறை எஸ்.ஐ. தினேஷ் கார்த்திகாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால் கார்த்திகா சோப் ஆயில் குடித்து விட்டு நாடகமாடியது தெரிய வந்தது. இதையடுத்து இந்த வீடியோ காரைக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி பாலமுருகன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

பின்னர் காவல் உதவி ஆய்வாளர் தினேஷ் மற்றும் கார்த்திகாவிடம் விசாரணை நடத்திய நீதிபதி , கார்த்திகா அரசு மருத்துவமனையில் ஒருமாத காலத்திற்கு தினமும் சென்று த ற்கொ லைக்கு முயன்று சிகிச்சை பெறுவோருக்கு உயிரின் மதிப்பை விளக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளார்.

காதலனை நம்பிச் சென்ற இளம்பெண் : பதறியடித்து வந்த சகோதரனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

காத்திருந்த அதிர்ச்சி

இந்தியாவின் ஐதராபாத் மாநிலத்தில் காதலனை நம்பி ஓட்டலுக்கு சென்ற பெண் கழு த்தறுக்க ப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் ஐதராபாத்தில் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெற்று வருகிறார். அதே பயிற்சி நிறுவனத்தில் படித்து வந்த மானஸ்வியும் இவரும் நண்பர்களாகி, பின்னர் காதலித்ததாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாகவே மானஸ்வி, வெங்கடேஷ் உடனான பேச்சை துண் டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ், தனியாக பேச வேண்டும் எனக்கூறி, ஓட்டல் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அதனை நம்பி சென்ற மானஸ்வி தனியாக ஒரு அறை எடுத்து வெங்கடேஷ் உடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டதால், தனக்கு ஏதாவது நடந்துவிடும் என நினைத்த மானஸ்வி தன்னுடைய சகோதரனுக்கு போன் செய்து, என்னுடைய உயி ருக்கு ஆப த்து எனக்கூறியுள்ளார்.

மேலும் மெசேஜில் தன்னுடைய இருப்பிடத்தையும் அனுப்பியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மானஸ்வியின் சகோதரன் வேகமாக ஓட்டலுக்கு வந்து அறையை திறந்துள்ளார். அப்போது கழு த்தில் அதிக ரத் தம் வெளியேறியபடியே மானஸ்வி உயி ருக்கு போரா டியுள்ளார்.

மறுபுறம் வெங்கடேஷ் கையில் அறுக் கப்பட்டு மயக்க நிலையில் கிடந்துள்ளார். இதற்கிடையில் சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏழு மணி நேரம் தாமதம் : ஒரே ஒரு பயணிக்காக புறப்பட்ட விமானம்!!

ஒரே ஒரு பயணிக்காக..

அமெரிக்காவில் தனியார் விமான சேவை நிறுவனத்தின் விமானம் ஒன்று 7 மணி நேரம் தாமதமான நிலையில், ஒரே ஒரு பயணிக்காக விமானம் இயக்கப்பட்ட சம்பவம் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் பி.எஸ்.ஏ விமான சேவை நிறுவனத்தில் விமானியாக செயல்பட்டு வருகிறார் ரியான் மெக்கார்மிக். இவர் தமது பேஸ்புக் பக்கத்தில் தமது வாழ்க்கையில் ஏற்பட்ட சுவாரஸ்ய சம்பவம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

சம்பவத்தன்று மெக்கார்மிக் பணியாற்றிய பி.எஸ்.ஏ விமானம் ஒன்று சில தொழில்நுட்ப காரணங்களால் 7 மணி நேரம் தாமதமானது. குறித்த விமானத்தில் முன்பதிவு செய்த பயணிகள் பெரும்பாலானோர் வேறு விமானங்களுக்கு பதிவு செய்து புறப்பட்டு சென்றுள்ளனர்.

ஆனால் ஒரே ஒரு பயணி மட்டும், தாம் காத்திருப்பதாக கூறியுள்ளார். அவர் மெக்கார்மிக்கின் சொந்த தாயார். ஒரே ஒரு பயணி என்றாலும் விமானத்தை கண்டிப்பாக இயக்க வேண்டும் என்ற விதி இருப்பதால், மெக்கார்மிக்கின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் போனது.

தாயார் மேரியுடன் எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்ட மெக்கார்மிக், தமது தாயாரின் தனிப்பட்ட விமானியாகும் வாய்ப்பு அமைந்த அந்த சம்பவம் தம்மால் மறக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மெக்கார்மிக்கின் தாயாரும் விமானி என்பதால், தமது மகனுக்கு விளையாட்டு பொருட்களாக விமானங்களையே அவர் வாங்கித் தந்துள்ளார். இதனாலையே, எதிர்காலத்தில் தாயாரை போன்று தாமும் ஒரு விமானியாக வேண்டும் என மெக்கார்மிக் ஆசைப்பட்டுள்ளார்.

சம்பவத்தன்று தாமதமாகும் விமானத்தின் விமானி தமது மகன் என அறிந்த பின்னர் மேரி, வேறு விமானத்தில் பதிவு செய்ய முயற்சிக்கவில்லை என்பது மட்டுமின்றி, நீண்ட 7 மணி நேரம் அவர் காத்திருக்கவும் செய்துள்ளார் என மெக்கார்மிக் தமது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கம்பீரமான காளை என பரிசு வாங்கிய காளை : உரிமையாளரையே தா க்கி நிரூபித்த புகைப்படங்கள்!!

பரிசு வாங்கிய காளை

விவசாய நிகழ்ச்சி ஒன்றில் விலங்குகள் கம்பீர நடைபோட, கம்பீரமான காளை என பரிசு பெற்ற ஒரு காளை, தனது உரிமையாளரையே புரட்டிப் போட்ட புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

North Yorkshireஇல் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் கம்பீரமாக நடைபோட்ட அந்த காளைக்குத்தான் முதல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால் பரிசு அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்தில் தன்னை நடத்தி வந்தவரின் கட்டுப்பாட்டை மீறிய அந்த காளை அங்குமிங்கும் துள்ளிக் குதித்து ஓட ஆரம்பித்தது.

அது இழுத்துச் சென்றதில் கீழே விழுந்த காளையின் உரிமையாளர் கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த நபருக்கு உயி ருக்கு ஆபத்து எதுவும் இல்லை என்றும், பின்னர் அவர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு திரும்பியதாகவும் தெரியவந்துள்ளது. திடீரென அந்த காளை ஏன் அப்படி நடந்து கொண்டது என்பதற்கான காரணம் தெரியவில்லை.

மனைவியை மாமியார் வீட்டிற்கு நம்பி அனுப்பி வைத்த கணவன் : அதன் பின் பார்க்க சென்று அவருக்கு நேர்ந்த கதி!!

மாமியார் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்ட மனைவி

இந்தியாவில் மாமியார் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்ட மனைவியைப் பற்றி எந்த ஒரு தகவலும் தெரியாததால், அங்கு சென்ற கணவன் பொலிசார் முன்பே கொடூ ரமாக கொ லை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம், குட்ச் மாவட்டம், காந்திதம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரேஷ் குமார் சோலங்கி. 25 வயதான இவர் அகமதாபாத்தில் உள்ள ஊர்மிளா ஜலா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் சோலங்கி, பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் இருவரின் காதலுக்கும் பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதனால் பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி இருவரும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். திருமணத்துக்குப் பிறகு இருவரும் சோலங்கியின் பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஊர்மிளாவின் உறவினர்கள் அவரை சந்தித்து சில நாள்கள் தங்கள் வீட்டில், அதாவது அவருடைய தாய் வீட்டில் வந்து தங்கும் படி அழைப்பு விடுத்துள்ளனர்.

தாய் வீட்டிற்கு செல்ல விரும்பாத அவரை, உறவினர்கள் சில நாட்கள் மட்டும் தானே, அதன் பின் நாங்களே உன்னை இங்கு வந்து ஒப்படைத்துவிடுகிறோம் என்று கூற, கணவர் சோலாங்கியும் அனுப்பி வைத்துள்ளார். தாய் வீட்டிற்கு சென்ற மனைவி, இரண்டு மாதங்களாக பேசாமல் இருந்ததால், சந்தேகமடைந்த அவர் மனைவியை பார்ப்பதற்கு முயற்சி செய்துள்ளார், ஆனால் எந்த ஒரு பலனும் கிடைக்கவில்லை.

இதனால் சோலாங்கி சமீபத்தில் குஜராத் பெண்கள் பாதுகாப்பு காவலருக்கு போன் செய்து தன் மனைவி பற்றிய விவரங்களையும் அவரை வெளியில் விடாமல் பெற்றோர்கள் அடைத்து வைத்துள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து மனைவியான ஊர்மிளாவின் வீட்டிற்கு பொலிசார் மற்றும் வழக்கறிஞருடன் சோலாங்கி சென்ற போது, அங்கிருந்த உறவினர்கள் கூர் மையான ஆயுத த்தால் தாக் கியுள்ளனர்.

பொலிசார் வீட்டின் உள்ளே ஊர்மிளா இருக்கிறாரா என்பதை பார்க்க சென்ற இடைவெளியில் இந்த செயலை செய்துள்ளார். அதன் பின் பொலிசார் வந்து அவரை காப்பாற்ற முயன்ற போது அவர்களையும் சரமாரியாக கு த்த காவலர்கள் கண்முன்பே சோலங்கி கொ டூர மாகக் கொ லை செய்யப்பட்டுள்ளார்.

இதில் காவலர்களின் வாகனம் பலத்த சேதமடைந்ததோடு காவலர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த அனைத்துச் சம்பவங்களும் நடந்து முடியும் வரை ஊர்மிளா அந்த இடத்தில் இல்லை எனக் காவலர்கள் தெரிவித்துள்ளனர். அவரை எங்கேயோ கட த்தி வைத்திருப்பதாகவும் காவலர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.

சோலங்கி கொ லை வழக்கில் முக்கிய குற்றவாளியாக ஊர்மிளாவின் தந்தை தசரத்சிங் ஸாலா மற்றும் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது கொ லை, பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தது, அதிகாரிகளை காயப்படுத்தியது போன்ற பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

லண்டனில் வரை சென்றடைந்த புகழ் : 13 வயதில் ஆச்சரியப்படுத்தும் இந்த இந்திய சிறுவன் யார்?

லண்டனில் வரை சென்றடைந்த புகழ்

இந்தியாவை சேர்ந்த 13 வயது சிறுவன் 100 புத்தகங்களுக்கு மேல் எழுதி சாதனை படைத்துள்ள நிலையில் லண்டன் பல்கலைக்கழகம் அவரை கெளரவிக்க முன்வந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மிரிகேந்திர ராஜ் என்ற சிறுவன் ஆஜ் கா அபிமன்யு என்ற புனை பெயரில் புத்தகங்களை எழுதி வருகிறார்.

தனது 6 வயது முதல் புத்தகங்களை எழுதி வருவதாக கூறும் மிரிகேந்திர ராஜ், இதுவரை 135 புத்தகங்கள் எழுதி உள்ளதாகவும் அவை அனைத்தும் 25 முதல் 100 பக்கங்களை கொண்டவை எனவும் கூறியுள்ளார். மேலும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யா நாத் உட்பட பல பிரபலங்கள் குறித்து புத்தகங்கள் எழுதி உள்ளதாகவும் அச்சிறுவன் கூறி உள்ளார்.

தற்போது வரை தான் 4 உலக சாதனைகளை புரிந்துள்ளதாகவும், தனக்கு லண்டன் உலக சாதனைகள் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் தர முன்வந்தது எனவும் மிரிகேந்திர ராஜ் தெரிவித்துள்ளார். வருங்காலத்தில் எழுத்தாளராகி பல புத்தகங்களை எழுதுவதே தனது லட்சியம் என மிரிகேந்திர ராஜ் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் இருந்து பிரித்தானியாவுக்கு காரில் பயணம் செய்த தமிழக குடும்பத்தினர்!!

தமிழக குடும்பத்தினர்

சென்னையைச் சேர்ந்த குடும்பத்தினர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்கு, சிங்கப்பூரில் இருந்து பிரித்தானியாவுக்கு காரிலேயே பயணம் செய்து ஆச்சரியப்பட வைத்துள்ளனர்.

சிங்கப்பூரில் வசித்து வருபவர்கள் அனுபம் மாத்தூர் குடும்பத்தினர். சென்னையைச் சேர்ந்த இந்த குடும்பத்தினர், 14 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வசித்து வருகின்றனர். குடும்பத்தின் முக்கிய உறுப்பினரான அனுபம், அங்கு வங்கிக் குழுமம் ஒன்றில் திட்டமிடல் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.

தற்போது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வருவதால், மூன்று தலைமுறைகளாக கிரிக்கெட் ரசிகர்களாக இருக்கும் மாத்தூர் குடும்பத்தினர், சிங்கப்பூரில் இருந்து பிரித்தானியாவுக்கு காரிலேயே பயணம் செய்ய முடிவெடுத்தனர்.

அதற்காக அவர்கள் 17 நாடுகள், இரண்டு கண்டங்கள் என 14,000 மைல்கள் பயணம் செய்ய வேண்டியிருந்தது. ஏழு இருக்கைகள் கொண்ட தங்களுடைய காரில் பயணம் செய்ய நினைத்த அவர்களுக்கு, விசாக்கள் பெறுவது மட்டுமே பெரிய பணியாக இருந்துள்ளது.

தனது பெற்றோர் அகிலேஷ்-அஞ்சனா, மனைவி அதிதி, பிள்ளைகள் அவிவ், அவ்யா ஆகியோருடன் அனுபம் மாத்தூர் பயணத்தை தொடங்கினார். உலகக்கோப்பை தொடங்கி நாளன்று, சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து அனுபமின் குடும்பத்தினர் தங்கள் பயணத்தை தொடங்கினர்.

சீனாவில் தான் அதிக நாட்கள் இந்த குடும்பத்தினர் செலவிட்டனர். ஆசியாவில் பாதுகாப்பு கருதி, ஓர் இடத்தில் மட்டும் அவர்கள் பயணத்தை மாற்றிக் கொள்ள வேண்டியிருந்தது. மற்றபடி திட்டமிட்ட பாதையில் தான் பயணம் செய்திருக்கின்றனர்.

பயணத்தில் வீட்டில் உள்ள சவுகர்யங்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக, சாலையோரத்திலேயே சமையல் செய்துள்ளனர். ஸ்வீடனில் சாலை வழியாக சென்றபோது, ஆர்டிக் சர்க்கிளை கடந்த தருணத்தை அனுபம் குடும்பத்தினர் கொண்டாடியுள்ளனர். 48 நாட்கள் பயணித்த இந்த குடும்பத்தினர், இறுதியில் பிரித்தானியாவின் லண்டன் நகரை அடைந்தனர்.

ஹெட்டிங்லேவில் நடந்த இந்தியா-இலங்கை போட்டியை கண்டுகளித்த பின்னர், இந்தியா-நியூசிலாந்து அரையிறுதி போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர். இவர்களின் பயணத்தில் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, சீனா, உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, பின்லாந்து, ஸ்வீடன், டென்மார்க், ஜேர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், பிரான்ஸ், அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளை கடந்திருந்தனர்.

இந்தப் பயணம் குறித்து அனுபம் மாத்தூர் கூறுகையில், ‘உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிறது என்பதை மார்ச் மாதம் நாங்கள் அறிந்தோம். இந்தியாவுக்கு ஆதரவு அளிக்க நாங்கள் அங்கே இருக்க வேண்டும் என்று விரும்பினோம். விமானத்தில் செல்வது எளிய காரியமாக இருந்திருக்கும்.

ஆனால், நாட்டுக்காக நாம் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும். இதில் எல்லோரும் இடம்பெற வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். சாலை வழியாக எப்படி செல்வது, எந்த நாடுகள் வழியாக செல்ல வேண்டும் என்பதை முதலில் அறிந்து கொண்டேன்.

அவை எல்லாமே சாலை இணைப்பில் இருந்ததை அறிந்து கொண்டேன். அதன்பிறகு மேலதிக விவரங்களுக்கு திட்டமிடத் தொடங்கினோம். சில நாடுகளில் உண்மையிலேயே அனுபவம் மிகுந்த வழிகாட்டுநர்கள் எங்களுக்கு கிடைத்தது அதிர்ஷ்டமான விடயம்.

பிள்ளைப் பருவத்தில் இருந்தே நீண்ட தொலைவுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. உலகம் முழுக்க காரில் செல்வது என்பது தான் உச்சபட்ச கனவு. வாகனம் ஓட்டுவதில் ஆர்வம் கொண்டவராக இதையெல்லாம் செய்தோம். இதை எங்கள் நாட்டுக்காக, கிரிக்கெட்டுக்காக செய்கிறோம் என்று பயணம் முழுக்க நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம்’ என தெரிவித்துள்ளார்.

கடிதம் எழுதிவிட்டு மாயமான திருமணமான பெண் : வேறு ஊரில் உயிரோடு இருப்பது அம்பலம்!!

மாயமான பெண்

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில், த ற்கொ லை செய்து கொண்டார் என கூறப்பட்ட பெண் தற்போது வேறு ஊரில் உயிரோடு இருக்கிறார் என தெரியவந்துள்ளது. டெல்லியை சேர்ந்த கோமல் என்ற பெண் கடந்த 5ஆம் திகதி வீட்டிலிருந்து மாயமானார். இது குறித்த புகாரின் பேரின் பொலிசார் கோமலை தேடி வந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு இடத்தில் அவர் காரை கண்டுபிடித்தனர்.

காரின் உள்ளே கோமல் எழுதி வைத்திருந்த கடிதம் இருந்தது, அதில் கணவரும், அவர் குடும்பத்தாரும் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், அதன் காரணமாக த ற்கொ லை செய்ய போவதாகவும் எழுதியிருந்தது. அந்த இடத்தின் அருகிலேயே பெரிய நதி இருந்ததால் அதில் குதித்து கோமல் த ற்கொ லை செய்திருக்கலாம் என கருதிய பொலிசார் இரண்டு நாட்களாக கோமலை அங்கு தேடி வந்தனர்.

ஆனால் கோமல் கிடைக்காததால் தேடுவது நிறுத்தப்பட்டது. ஆனால் இவ்வழக்கில் திடீர் திருப்பமாக கோமல் மும்பையில் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் அங்கு பொலிசார் சென்ற போது, அவர் பெங்களூரில் இருப்பதாக கூறப்பட்டது. இறுதியில் பெங்களூரில் அவர் இருப்பது உறுதி செய்யப்பட்டு பொலிசார் அங்கு சென்றனர். அங்கு கோமல் சுற்றி திரிந்ததை பார்த்த பொலிசார் அங்கிருந்து அவரை சொந்த ஊருக்கு அழைத்து வருகின்றனர்.

இதனிடையில் உள்ளூர் ஊடகத்துக்கு பேட்டியளித்த கோமல், கணவரும், அவர் குடும்பத்தாரும் என்னை துன் புறுத்தியால் வெறுப்படைத்து வீட்டை விட்டு வெளியேறினேன். நான் பெங்களூக்கு வரவேண்டும் என திட்டம் போடவில்லை, நான் எங்கு செல்கிறேன் என தெரியாமலேயே இங்கு வந்துவிட்டேன் என கூறியுள்ளார். கோமலின் பேச்சு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் பொலிசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.