டென்மார்க்கை சேர்ந்த இளம்பெண் போ தை பழக்கத்துக்கு அடிமையான இந்தியரை காதலித்து மணந்த நிலையில் கணவருக்கு சிகிச்சையளித்து அவரை நல்லநிலைக்கு மாற்றியுள்ளார்.
டென்மார்க்கை சேர்ந்தவர் நடாசா நடாலி. இளம்பெண்ணான இவருக்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மல்கித் சிங் என்பவருடன் சமூகவலைதளம் மூலம் நட்பு ஏற்பட்டது.
பின்னர் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள், அந்த சமயத்தில் தான், போ தை மரு ந்து அடிமையானவர் என்றும், எந்த வேலையும் தனக்கு கிடையாது என்றும் மல்கித் நடாலியிடம் கூறினார். மேலும் தனது தாயுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவே தான் போ தை பழக்கத்துக்கு அடிமையானதாகவும் கூறினார்.
இதையடுத்து மல்கித்தின் நேர்மையும், கள்ளங்கபடமற்ற குணமும் நடாலியை ஈர்த்த நிலையில் அவர் இந்தியாவுக்கு வந்து மல்கித்தை சந்தித்தார். பின்னர் இருவரும் காதல்வயப்பட்ட நிலையில் தனது பெற்றோர் சம்மதத்துடன் மல்கித்தை நடாலி மணந்தார்.
அதை தொடர்ந்து போ தை பழக்கத்தில் இருந்து விடுபடும் சிகிச்சையை மல்கித் பெற நடாலி ஏற்பாடு செய்தார். நடாலி கூறுகையில், சொந்த நாட்டில், மனதுக்கு நெருக்கமான சூழலில் மல்கித் சிகிச்சை பெறவேண்டும் என விரும்பினேன்.
அதன்படியே சிகிச்சை பெற்று அவர் குணமாகிவிட்டார். அடுத்த வாரம் டென்மார்க் விசாவுக்கு மல்கித் விண்ணப்பிக்கவுள்ளார்.
அதை தொடர்ந்து என்னுடன் அவர் டென்மார்குக்கு வந்து செட்டில் ஆகிவிடுவார். அங்கு அவருக்கு கார் கேரேஜ் தொழில் தொடங்க என் குடும்பத்தார் உதவி செய்யவுள்ளனர் என கூறியுள்ளனர்.
உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா தோற்ற நிலையில் ரோகித் சர்மா கண்கலங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இறுதிபோட்டிக்கு முன்னேறியது. இப்போட்டியில் இந்தியா தோற்றதால் உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது.
இந்திய அணி தோல்வியடைந்த நிலையில் பெவிலியனில் நின்றிருந்த ரோகித் சர்மா அதை தாங்க முடியாமல் கண்கலங்கினார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்கள் வெளியாகி ரசிகர்களையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
வவுனியா- மன்னார் பிரதான வீதியில் இன்று (11.07.2019) காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்,
வவுனியா நகரிலிருந்து இராசேந்திரகுளம் பகுதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் வான் வவுனியா – மன்னார் பிரதான வீதியூடாக ஆடைத்தொழிற்சாலையினை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தது.
இதன் போது வேப்பங்குளம் பகுதியினை அண்மித்த இடத்தில் குறித்த வாகனத்தின் சாரதி திடீரென பிரேக் பிரயோகித்து வாகனத்தினை பின் நோக்கி செலுத்தியுள்ளார். இதன் போது வாகனத்தின் பின்புறமாக நின்ற மோட்டார் சைக்கில் மீது வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்துக்கொண்டிருந்த தாய் (வயது 36) மற்றும் பாடசாலை மாணவன் (வயது 7) காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் விபத்து இடம்பெற்ற பகுதியிலிருந்து வாகனத்தினை சாரதி எடுத்துக்கொண்டு அவ்விடத்திலிருந்து தப்பித்துச்சென்றுள்ளார்.
இதனை அவதானித்த அப்பகுதியினை சேர்ந்த இளைஞர்கள் வாகனத்தினை பின்தொடர்ந்து சென்று மடக்கிக்பிடித்து விபத்து இடம்பெற்ற இடத்திற்கு அழைத்துச் சென்றதுடன் போக்குவரத்து பொலிஸாருக்கும் தகவல் வழங்கியமையினையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வந்ததுடன் வான் மற்றும் மோட்டார் சைக்கிளை வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்றனர்.
ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் தினசரி அதிவேகத்துடனேயே பயணிக்கின்றன. இன்று மூன்று ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற வாகனங்கள் ஒன்றுக்கு ஒன்று போட்டி போட்டு பயணித்தது.
இதன் போது வீதியின் குறுக்கே வாகனமொன்று மாற முற்பட்ட சமயத்தில் குறித்த மூன்று வாகனங்களும் திடீரென பிரேக் பிரயோகித்தன. இதன் போது பின்னர் நின்ற குறித்த வாகனம் பின்பக்கம் நோக்கி பயணித்து இரு வாகனங்களையும் முந்திச்செல்ல முற்பட்டது இதன் போதே இவ் விபத்து நேர்ந்துள்ளதாக விபத்தினை நேரடியாக பார்வையிட்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் நவாலியை பிறப்பிடமாகவும் வவுனியா உக்கிளாங்குளத்தை நிரந்தர வதிவிடமாகவும், தற்போது மாபொல வத்தளையை வதிவிடமாகவும் கொண்டவருமான திருமதி கணேஸ்வரி இராமச்சந்திரன் அவர்கள் 09.07.2019 செய்வாய்க்கிழமையன்று காலமானார்.
அன்னார் நவாலியூர் சோமசுந்தர புலவரின் பேத்தியும், அமரர் சின்னத்தம்பி(பிஸ்கால், வவுனியா) அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், அமரர் இராமச்சந்திரன் (முன்னாள் தொலைத்தொடர்பு திணைக்களம் வவுனியா) அவர்களின் அன்பு மனைவியும்,
திருமதி யோகேஸ்வரி (வசந்தா- புத்தளம்) திரு.மோகன ரஞ்சன் (மோகன் பண்டாரிகுளம் வவுனியா), திருமதி சுதாகினி (சுதா-வத்தளை), திரு.சுதாகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 11.07.2019 வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் வெலிசறை மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவின் துயரத்தில் மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் : மோகனரஞ்சன் (மகன்) – 0776669488
சஜீஸ்வரன் (பேரன்) – 0770777701
முல்லைத்தீவு – மாங்குளம், வெள்ளாங்குளம் வீதியின் வடகாட்டுப்பகுதியில் கப் ரக வாகனமொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
முல்லைத்தீவு மாங்குளத்திலிருந்து இன்று மாலை மல்லாவி நோக்கி பயணித்த கப் ரக வாகனம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வடகாடு பகுதியில் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தின் போது வாகனத்தில் பயணித்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த ஒருவரின் சடலம் மல்லாவி வைத்தியசாலையிலும் மற்றையவரின் சடலம் மாங்குளம் வைத்திய சாலையிலும் வைக்கப்பட்டுள்ளன. இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை மல்லாவி மற்றும் மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மாங்குளத்தில் இருந்து வெள்ளாங்குளம் வீதியில் பயணித்த வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வடகாட்டுப்பகுதியில் மின் கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதன் போது பாலிநகர் வவுணிக்குளத்தைச் சேர்ந்த ஜீவகுமார் ஜெனிஸ்குமார் (வயது-18) மற்றும் குனாளன் டிசாந்தன் (வயது-18) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
நுவரெலியா பஸ் நிலைய பகுதியில் மேல் மாடி கடை ஒன்றில் இனந்தெரியாத நபர் ஒருவர் பெறுமதி மிக்க இரண்டு கையடக்க தொலைபேசிகளை திருடியுள்ளார்.
குறித்த நபர் இரண்டு கையடக்க தொலைபேசிகளை திருடும் விதம் கடையில் இருந்த சீ.சீ.டீ.வீ யில் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் ஜூன் 14 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக கடை உரிமையாளர் தெரிவித்தார்.
குறித்த நபர் வெலிமட, பதுளை மற்றும் பண்டாரவளை பகுதிகளிலும் கையடக்க தொலைபேசிகளை திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் குறித்து நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா சிதம்பரபுரம் கிராமத்தில் உள்ள நான்கு கிராம மக்கள் பயன்படுத்தும் மயானத்தினை பெரும்பான்மை இன மக்கள் தமக்குரியது என உரிமை கோருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
வவுனியாவின் எல்லையோர கிராமமான சிதம்பரபுரத்தில் அமைந்துள்ள பொது மயானம் கற்குளம் படிவம் 1, 2 சிதம்பரபுரம், சிதம்பரநகர் கிராம மக்கள் 1992 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து பயன்படுத்தி வந்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த மயானத்தில் இம் மக்கள் தமது கிராமத்தில் இறந்தவர்களை புதைத்தமைக்கான நினைவுக்கற்களையும் நாட்டியுள்ளனர்.
தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டு வந்த குறித்த பொது மயானத்திற்கு அண்மையாக அருகில் உள்ள பெரும்பான்மை இன மக்கள் காணிகளை அடா த்தாக பிடித்து குடியேறிவருகின்றனர்.
இந் நிலையில் நேற்றைய தினம் (09.07) குறித்த பொது மயானத்தினை அப்பகுதி தமிழ் மக்கள் துப்பரவு செய்துகொண்டிருந்தபோது அங்கு வந்த பெரும்பான்மை இன மக்கள் குறித்த காணி தமக்குரியது எனவும் துப்பரவு செய்ய வேண்டாம் எனவும் தெரிவித்திருந்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று (10.07) குறித்த பகுதிக்கு வருகை தந்த பெரும்பான்மை இன பிரதேசசபையின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் குறித்த காணியில் எவ்வித வேலைகளையும் செய்ய வேண்டாம் எனவும் இவ்விடயம் தொடர்பாக பிரதேசசபையில் கலந்துரையாட வேண்டியுள்ளதால் நாளை தமிழ் கிராமத்தவர்கள் சார்பில் தமது பிரதேசசபைக்கு வருமாறு தெரிவித்து சென்றிருந்ததாகவும் கூறினர்.
இந் நிலையில் குறித்த மயானம் தொடர்பான விடயம் பெரும் முறு கல் நிலையை தோற்றுவித்துள்ளது.
வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான 12 ஆவது தடகள விளையாட்டு போட்டியின் 18 வயது பெண்கள் பிரிவில் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் மன்னார் முத்தரிப்புத்துறை றோ.க.த.க பாடசாலையைச் சேர்ந்த சௌமியா பெர்னாண்டோ 13செக்கன்களில் ஓடி முடித்து புதிய சாதனையை நிலைநாட்டி உள்ளார்.
அத்துடன் 200 மீட்டர் ஓட்டப்போட்டியில் 27.8 செக்கனில் ஓடிமுடித்து முதல் இடம்பெற்றதுடன் வர்ணச்சாண்றிதழையும் பெற்றுள்ளார். மேலும் இவர் 18 வயது பெண்கள் பிரிவில் சுவட்டு நிகழ்ச்சியின் சிறந்த வீராங்கனையாக தெரிவு செய்யப்டுள்ளார் .
அத்தோடு இதே பாடசாலையை சேர்ந்த அபிசா நீளம் பாய்தலில் 1ம் இடத்தினையும், 200 மீட்டர் ஓட்டப்போட்டியில் 2ம் இடத்தினையும், 400 மீட்டர் ஓட்டப்போட்டியில் 2ம் இடத்தினையும் பெற்றுள்ளனர். இவர் 18 வயது பெண்கள் பிரிவில் மைதான நிகழ்ச்சியின் சிறந்த வீராங்கனையாக தெரிவு செய்யப்டுள்ளார்.
இந்திய அணியை 18 ஓட்டத்தினால் வீழ்த்தி நியூஸிலாந்து அணி இரண்டாவது தடவையாகவும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டம் இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கிடையே நேற்று மாலை 3 மணிக்கு மான்செஸ்டரில் ஆரம்பமானது.
நேற்றைய தினம் நியூஸிலாந்து அணி 46.1 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 211 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை மழை காரணமாக போட்டி இடை நிறுத்தப்பட்டு இன்றைய தினம் தொடரப்பட்டது. இன்றைய தினம் 211 ஓட்டத்துடன் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி இறுதியாக 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 239 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
240 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்திய அணியின் முன்னணி வீரர்கள் நியூஸிலாந்து அணியின் பந்து வீச்சுகளில் திணறி அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறி அதிர்ச்சியளித்தனர். ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ராகுல் ஆகியோர் தலா ஒவ்வொரு ஓட்டத்துடன் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேற அடுத்த வந்த தினேஷ் கார்த்திக்கும் சற்று நேரம் தாக்குப் பிடித்தாடி ஒன்பதாவது ஓவரின் இறுதிப் பந்தில் 6 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.
இதனால் இந்திய அணி முதல் 10 ஓவரில் 4 விக்கெட்டுக்களை இழந்து 24 ஓட்டங்களை பெற்றது. 5 ஆவது விக்கெட்டுக்காக ரிஷாத் பந்த் மற்றும் பாண்டியா ஜோடி சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
அதனால் இந்திய அணி 15 ஓவரில் 4 விக்கெட்டுக்களை இழந்து 43 ஓட்டத்தையும், 20 ஓவரில் 70 ஓட்டத்தையும் பெற்றது. எனினும் 22.5 ஆவது ஓவரில் ரிஷாத் பந்த் 32 ஓட்டத்துடன் மிட்செல் சாண்டனரின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார் (71-5) . தொடர்ந்து தோனி களமிறங்கிய துடுப்பெடுத்தாட மறுமுணையில் பாண்டியா 30.3 ஆவது ஓவரில் 32 ஆட்டமிழந்தார் (92-6).
7 ஆவது விக்கெட்டுக்காக களமிறங்கிய ஜடேஜா தோனியுடன் கைகோர்த்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பிக்க இந்திய அணியின் ஓட்ட குவிப்பு வேகம் அதிகரித்தது. அதன்படி 35 ஓவரில் 119 ஓட்டங்களையும், 40 ஓவரில் 150 ஓட்டங்களையும் இந்தியா பெற்றது. இந் நிலையில் 41.5 ஆவது ஓவரில் ஜடேஜா அரைசதம் விளாசினார்.
இதேவேளை 44 ஆவது ஓவருக்காக ஜேம்ஸ் நீஷம் பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள அந்த ஓவரில் இரண்டு பிடியொடுப்புக்களை நியூஸிலாந்து அணி நழுவ விட்டது. ஒரு கட்டத்தில் இந்திய அணி 45 ஓவருக்கு 6 விக்கெட்டுக்களை இழந்த் நிலையில் 188 ஓட்டங்களை பெற்றது. ஆடுகளத்தில் ஜடேஜா 66 ஓட்டத்துடனும், தோனி 33 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடிவர வெற்றிக்கு 30 பந்துகளுக்கு 52 ஓட்டம் தேவைப்பட்டது.
இதன் பின்னர் தோனி மற்றும் ஜடேஜாவின் இணைப்பாட்டம் 45.3 ஆவது ஓவரில் 100 ஓட்டங்களை தொட்டதுடன் இந்திய அணி 46.3 ஓவரில் 200 ஓட்டங்களை பெற்றது. இந் நிலையில் ஜடேஜா 47.5 ஆவது ஓவரில் மொத்தமாக 59 பந்துகளை எதிர்கொண்டு 4 நான்கு ஓட்டம், 4 ஆறு ஓட்டம் அடங்கலாக 77 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேறினார் 208-7) இதனால் வெற்றிவாய்ப்பு நியூஸிலாந்து அணிப் பக்கம் திரும்பியது.
ஒரு கட்டத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 31 ஓட்டம் என்ற நிலையுமிருக்க தோனி 48.3 ஆவது ஓவரில் 50 ஓட்டத்துடன் ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சஹால் களமிங்கி துடுப்பெடுத்தாட இந்திய அணி இறுதியாக 49.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 221 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 18 ஓட்டத்தினால் வெற்றிபெற்றது.
பந்து வீச்சில் நியூஸிலாந்து அணி சார்பில் ஹென்றி 3 விக்கெட்டுக்கயைும், டிரெண்ட் போல்ட், மிட்செல் சாண்டனர் ஆகியோர் 2 விக்கெட்டுக்களையும், லொக்கி பெர்குசன் மற்றும் ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக இன்று நள்ளிரவு முதல் எரிபொருளின் விலை குறைக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி 92 ரக ஒக்டேன் பெற்றோல் இரண்டு ரூபாவினாலும் (136 ரூபா), 95 ரக ஒக்டேன் பெற்றோல் ஐந்து ரூபாவினாலும் (159 ரூபா) குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சுப்பர் டீசல் ஐந்து ரூபாவினால் (131 ரூபா), குறைக்கப்பட்டுள்ளதுடன் ஒட்டோ டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
இலங்கையில் ஆயிரத்து 500 முகநூல் பக்கங்கள் நீக்கப்பட்டுள்ளதாக பிரபல பாடகர் இராஜ் வீரரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
சமூக ஊடகங்கள் தற்போது எந்தளவுக்கு பலமாக இருக்கின்றது. இலங்கையில் ஆயிரத்து 500 முகநூல் பக்கங்கள் நீக்கப்பட்டுள்ளன. தற்போது எமக்கு குரல் எழுப்ப வழியில்லை. எனது முகநூல் பக்கத்தில் 11 லட்சம் பேர் நண்பர்களாக இருந்தனர். நாங்கள் முகநூல் பல நல்ல பணிகளுக்கு பயன்படுத்தினோம். எமக்கு பலர் இணைந்தனர். இவற்றை அடக்கவா எனது முகநூல் பக்கம் நீக்கப்பட்டது.
இந்த விடயத்தின் பின்னர் சிலர் இருக்கின்றனர் என்று நான் சந்தேகப்படுகிறேன். எனது முகநூல் பக்கம் கடந்த வெள்ளிக் கிழமை நீக்கப்பட்டது. இது நாளை உங்களுக்கு நடக்கலாம். எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நடக்கலாம்.
நான் இனவாதத்துடன் சம்பந்தப்படவில்லை. எனினும் எமக்குரியவை பற்றி பேசினேன். கூரகல பற்றி பேசினேன். கலகொட அத்தே ஞானசார தேரரின் ஒரு புகைப்படத்தை கூட முகநூலில் பதிவேற்ற முடியாது. இந்த பிரச்சினை யார் உலகத்திற்கு கொண்டு செல்வது. இந்த பின்னணியில் இருப்பது யார். முகநூல் நிறுவனத்தில் பணியாற்றும் இலங்கையர்கள் இருக்கின்றனர்.
இவர்களின் முகநூல் பக்கத்தை பார்த்தால், அவற்றில் ஐக்கிய தேசியக் கட்சியின் பதிவுகள் இருக்கும். ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்தவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு பணியில் சேர்த்துள்ளனர். முகநூலை கட்டுப்படுத்துவது யார்.
அப்துல் ராசிக்கின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய முடியும். அது தடை செய்யப்படவில்லை. இது திட்டமிட்டு செய்யும் வேலை. இவர்கள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். முகநூலை புதிய வாக்காளர்களே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர் எனவும் இராஜ் வீரரத்ன குறிப்பிட்டுள்ளார்.
பிரபல சிங்கள பாடகரான இராஜ், அம்பா சமுத்திரம் அம்பானி என்ற தமிழ் திரைப்படத்தில் பாடல் ஒன்றை பாடியுள்ளார். அத்துடன் அவர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தரப்பினருக்கு ஆதரவாக செயற்பட்டு வருவதுடன் அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
குருநாகலில் பசியின் கொடுமை காரணமாக தாயும் மகளும் ரயிலில் பாய் ந்து தற் கொ லை செய்து கொள்ள முயன்ற சம்பவம் நாட்டு மக்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கல்கமுவ பிரதேசத்தில் பல நாட்களாக உணவின்றி தவித்த தாயும் மகளுமே தற் கொ லை செய்ய முயன்றுள்ளனர். எனினும் பொலிஸார் அவர்களை காப்பாற்றியுள்ளனர்.
கணவனால் கைவிடப்பட்ட 38 வயதான பெண்ணும் அவரது 10 வயது மகளுமே இவ்வாறு தற் கொ லை செய்து கொள்ள முயற்சித்துள்ளனர்.
தாயும் மகளும் ரயில் தண்டவாளத்திற்கு அருகில் கண்ணீருடன் நிற்பதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய அவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
அவர்களை அவ்விடத்தில் இருந்து காப்பாற்றிய வேளையில், கோட்டையில் இருந்து வவுனியா நோக்கி ரயில் ஒன்று பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உடனடியாக பொலிஸ் அதிகாரிகள் செயற்பட்டிருக்கவில்லை என்றால் இரண்டு உயிர்களும் ப றி போயிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண்ணுடன் கணவனுக்கு ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அவர் விட்டுச் சென்றுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
எந்தவித வருமானமும் இல்லாத நிலையில், வீதியில் சென்றவர்களிடம் உதவி கோரிய போதிலும் எவரும் உதவி செய்யவில்லை.
வீட்டில் உடல் நிலை கோளாறுடன் வயோதிப தந்தை ஒருவரும் உள்ளார். பசிக்கொடுமையை தாங்கிக்கொள்ள முடியாமல் தற் கொ லை முயற்சியை எடுத்ததாக அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை வழங்க அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர்.
இதேவேளை கடந்த மாதம் வறுமையின் காரணமாக தமிழ் பெண்ணும் அவரது இரு பிள்ளைகளும் ரயி லில் வீழ்ந்து தற் கொ லை செய்து கொண்டனர். இந்த சம்பவம் கொள்ளுப்பிட்டி – பம்பலப்பிட்டிக்கு இடையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
மொனராகலை கொழும்பு பிரதான வீதியில் ஹொரெம்புவகந்த பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியர் பயணித்த மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதியதினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் கும்புக்கென 7ம் ஏக்கர் பகுதியில் வசித்த 26 வயதான குசேலன் கேதிஷ்வரன் என்ற ஆசிரியரே உயிரிழந்துள்ளார்.
இந்த ஆசிரியர் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளதோடு தற்போது அவர் அலியாவத்தை தமிழ் பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றி வந்துள்ளார். வேகமாக பயணித்த மோட்டர் சைக்கிளை கட்டுப்படுத்த முடியாமல் போனமையே விபத்துக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த ஆசிரியர் தனது வீட்டிலிருந்து 2 கிலோ மீற்றர் தொலைவிலேயே இவ்விபத்துக்குள்ளாகியுள்ளார். உயரிழந்த ஆசிரியரின் சடலம் மொனராகலை வைத்தியசாலையில் வைக்கபட்டுள்ளதோடு, லொறி சாரதி கைது செய்யப்பட்டு மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
மொனராகலை பொலிஸார் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்தின் விவகாரங்கள் இன்றைய தினம் வவுனியா மேல் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன் இரு தரப்பினரும் வவுனியா மேல் நீதிமன்றில் முன்னிலையாகி தமது தரப்பு வாதங்களை முன்வைத்து வருகின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் ஆலய வளாகத்தை சுவீகரித்து அங்கு பௌத்த விகாரை அமைத்து குடிகொண்டிருக்கின்றனர்.
மேதானந்த தேரர் என்ற பௌத்த துறவியால் பாரிய புத்தர் சிலை ஒன்று நாட்டப்பட்டு பிள்ளையார் ஆலயத்தில் கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் திகதி வழிபாடுகளுக்கு சென்ற மக்களோடு முரண்பட்ட நிலையில் குறித்த இடத்திலேயே அமைதிக்கு பங்கம் ஏற்பட்டதாக தெரிவித்து முல்லைத்தீவு பொலிசாரால் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந் நிலையில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் கடந்த ஆறாம் மாதம் ஆறாம் திகதி குறித்த பிரதேசம் தொல்பொருள் திணைக்களத்துக்கு இன்னமும் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படவில்லை எனவும் இந்நிலையில் ஆறாம் மாதம் ஆறாம் திகதி இரண்டு தரப்பினரும் எந்தவித மத வழிபாடுகளுக்கும் இடையூறு இல்லாமல் வழிபாடுகளை மேற்கொள்ளுமாறு அதை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் இந்த தீர்ப்புக்கு எதிராக பௌத்த துறவி மற்றும் பௌத்த துறவி சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணிகள் உள்ளிட்டோரால் வவுனியா மேல் நீதிமன்றில் குறித்த விடயம் தொடர்பாக மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் சார்பில் சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம், ஆலய நிர்வாக சபையினர் கலந்துகொண்டுள்ளனர்.
வவுனியா புளியங்குளம் புகையிரதக்கடவையில் இன்று(10.07) பிற்பகல் கடுகதி புகையிரதத்துடன் மோதி இளைஞன் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று பிற்பகல் 3 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடுகதி புகையிரதத்துடன் புதூர் ஆலயத்திலிருந்து பிரதான வீதிக்குச் மோட்டார் சைக்கிளில் செல்ல முற்பட்ட இளைஞன் மீது புகையிரதம் மோதியதில் இலகநாதன் நர்மதன் (வயது 18) என்ற புதூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த புதூர் பகுதியில் கடந்த வருடமும் இடம்பெற்ற புகையிரத விபத்தில் இரு இளைஞர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான், முத்துவிநாயகபுரம் முதலாம் கண்டம் பகுதியில் தற்காலிக வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று முற்பகல் 11.30 மணியவில் நடைபெற்றதாக ஒட்டுசுட்டான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எரிவாயு கசிவினால் இந்த தீ விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது. இதன்போது தற்காலிக வீட்டில் இருந்த அனைத்து உடமைகளும் எரிந்து சாம்பலாகி உள்ளன.
தீவிபத்து நேர்ந்த வீட்டிலிருந்து சிறுவர்கள் உள்ளிட்டோரை அயலவர்கள் காப்பாற்றியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸார் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.