வவுனியா மாமடு பிரிவுக்குட்பட்ட நெடுக்குளம் பகுதியில் யானைத்தந்தங்களுடன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றையதினம் (09.07.2019) மாலை 5.30 மணியளவில் அப்பகுதியில் பயணிப்பவர்களை திடீர் சோதனைக்குட்படுத்திய சமயத்தில் இரு யானைத்தந்தங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
போகாஸ்வேவ பகுதியினை சேர்ந்த 46 வயதுடைய காமினி வீரசிங்க என்ற நபரேயே கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆயர்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியாவில் வர்த்தக நிலையமொன்றில் பொருளொன்றை கொள்வனவு செய்த பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் பணத்தை மீள் வழங்குமாறு கேட்டு அட்டகாசத்தில் ஈடுபட்டதாகவும் கடை ஊழியரை அச்சுறுத்தியதாகவும் வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் வவுனியா வர்த்தக சங்கத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் சி.சி.ரிவி கண்காணிப்பு கெமராவில் பதிவாகியுள்ள ஒளிப்பதிவும் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்திற்கு வழமையான சோதனை நடவடிக்கைக்காக சென்ற பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் பெண் உத்தியோகத்தர் இருவர் மின் பொருளொன்றை கொள்வனவு செய்ததுடன் அதற்கான உத்தரவாதப் பத்திரத்தை பெற்றுக்கொண்டதன் பின்னர் மீண்டும் குறித்த பொருளை கையளித்து பணத்தை திருப்பித்தருமாறு கோரியுள்ளனர்.
வர்த்தக நிறுவனத்தின் ஊழியர் பணத்தை திருப்பி கையளிக்க மறுத்ததன் காரணமாக சம்பவ இடத்திற்கு சென்ற பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர் சிலர் குறித்த வர்த்தக நிலையத்தை சோதனை செய்ததுடன் கடையின் ஊழியரை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டதாகவும் மேசை மீது வைத்திருந்த பணத்தை அவர்களாகவே எடுத்துச் சென்றுள்ளதாகவும் வர்த்தக உரிமையாளர் குறித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த வர்த்தக உரிமையாளர் பொருளை பணம் கொடுத்து பெற்றுக்கொண்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர் உத்தரவாதப்பத்திரம் எழுதப்படும் போது அதனை தடுத்திருந்தால் நாம் பணத்தை மீளளித்திருக்க முடியும். ஆனால் உத்தரவாதப் பத்திரம் குறித்த பொருளுக்கு எழுதப்பட்டதன் பின்னர் அதனை விற்பனை செய்ய முடியாது இதன் காரணமாக எமக்கு நஸ்டம் ஏற்பட்டுள்ளது.
பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் தமது அடையாளத்தை கூட நிருபிக்காமல் கடை ஊழியரை அச்சுறுத்தும் விதமாக கோதனை நடவடிக்கை என்ற பெயரில் அடாவடித்தனத்தில் ஈடுபட்டமையானது மிகுந்த கவலையளிக்கிறது என தெரிவித்தார்.
வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள வியாபார நிலையத்தினுள் இளைஞர் குழுவொன்று புகுந்து தாக் குதல் மேற்கொண்டதில் இருவர் படுகாய மடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (10.07.2019) புதன்கிழமை காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த வர்த்தக நிலையத்திற்கு முன்பான பட்டா ரக வாகனத்தில் நபர் ஒருவர் பழங்கள் விற்பனை செய்து வந்துள்ளார். இதனையடுத்து வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் பழங்களை விற்பனை செய்யும் நபரிடம் சென்று இவ்விடத்தில் வாகனத்தில் வியாபாரம் மேற்கொள்ளுவதினால் தமக்கு வியாபாரம் மேற்கொள்ள இடையூராக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பல நாட்கள் தெரிவித்தும் பட்டா ரக வாகனத்தில் பழ வியாபாரம் மேற்கொள்ளும் நபர் வர்த்தக நிலைய உரிமையாளரின் கருத்தினை செவிமடுக்காது அவ்விடத்திலேயே வியாபாரம் மேற்கொண்டு வந்துள்ளார்.
இந் நிலையில் இரு தரப்பினருக்கிடையே இன்று காலை கருத்து முர ண்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பட்டா ரக வாகனத்தில் வியாபாரம் மேற்கொண்ட நபர் இளைஞர் குழுவினை வரவழைத்து எம் மீது தாக் குதல் மேற்கொண்டனர் என தாக்குதலுக்கு உள்ளாகி காய மடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த வர்த்தக நிலையத்தில் கடமையாற்றும் இரு ஊழியர்களும் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் அவ்விடத்தில் விசாரணைகளை மேற்கொண்டதுடன் பட்டா ரக வாகனத்தினை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
சூடான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டு அகதிகள், தங்களது தஞ்சக்கோரிக்கை மனுவை ஐ.நா. அகதிகள் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் ஆணையம் அமைந்திருக்கும் வீதியில் வாழ்ந்து வருகின்றனர்.
சுமார் 30 அகதிகள் ஆணையம் உள்ள கட்டிடத்துக்கு எதிரே வசித்து வருகிறார்கள். அவர்களில் ஒருவரான ஆப்கான் அகதி லிசாவுக்கு 15 வயது. தாய் மற்றும் சகோதரருடன் தற்காலிக டெண்டில் உள்ள லிசா, “எங்களது தஞ்சக்கோரிக்கை மனு ஐ.நா.அகதிகள் ஆணையத்தால் பரிசீலிக்கப்படுவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்.
எங்களிடம் பணம் இல்லை, பணம் இருந்தால் இப்படி வீதியில் ஏன் படுத்திருக்க போகிறோம்,” என கேள்வி எழுப்புகிறார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் லிசா குடும்பம் இந்தோனேசியாவில் தஞ்சமடைந்திருக்கிறது.
சர்வதேச இடப்பெயர்வு அமைப்பு லிசாவின் தந்தைக்கு வீடு அளித்துள்ள போதிலும் வேலை செய்வதற்கான உரிமை வழங்கப்படவில்லை. மற்ற குடும்ப உறுப்பினர்கள் தந்தையுடன் வசிக்கவும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
சூடானிய அகதியான அப்துல் நஜிப் என்ற 35 வயது இளைஞரும் இதே நிலையை பகிர்ந்து கொள்கிறார். “நான் ஓராண்டுக்கு மேலாக இந்தோனேசியாவில் இருக்கிறேன். 10மாதங்களாக வீதியில் தான் வாழ்ந்து வருகிறேன்.
அகதிகள் ஆணையத்தின் உதவிக்காக காத்திருக்கிறேன்,” எனக் கூறியுள்ளார். தங்கள் குடும்பம் ஆவுஸ்திரேலியாவில் மீள்குடியமர விரும்புவதாகவும், அதே சமயம் வேறொரு பாதுகாப்பான நாட்டில் மீள்குடியமர்த்தப்பட்டாலும் அதை ஏற்றுக்கொள்வதாக லிசா குறிப்பிடுகிறார்.
“7மாத கர்ப்பிணி மனைவியுடன் மிருகங்களை போல வீதிகளில் வாழ்ந்து வருகிறோம்,” என வருந்துகிறார் அப்துல். இது தொடர்பாக, ஜகார்த்தாவில் உள்ள ஐ.நா.அகதிகள் ஆணையம் இதுவரை எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை.
ஜூன் 2017 கணக்குப்படி, ஐ.நா.அகதிகள் ஆணையத்தின் பாதுகாப்பின் கீழ் 5,274 தஞ்சக்கோரிக்கையாளர்களும் 8,819 அகதிகளும் இந்தோனேசியாவில் வாழ்ந்து வருகின்றனர்.
பேஸ்புக் தொடர்பிலான போலியான தகவலை பேஸ்புக் சமூக வலைதளத்தின் ஊடாக பரிமாற்றிக்கொள்வதை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்தின் தலைவர் யசிரு குருவிட்டகே இந்த கோரிக்கை விடுத்துள்ளார். பேஸ்புக் தொடர்பில் வெளியிடப்படும் போலி தகவல்களை அடையாளங் காண்பதற்காக அந்த நிறுவனத்தினால் பல்வேறுபட்ட கணிணி கண்காணிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட அசாதாரண நிலையை தொடர்ந்து மத, இன கலவரத்தை தூண்டும் வகையிலான போலி தகவல்களை வெயிட்டமை பேஸ்புக் முடக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
2035ஆம் ஆண்டில் மேல் மாகாணத்தின் மக்கள் தொகை 91 இலட்சம் வரை அதிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு தேவையான வகையில் வீதி அபிவிருத்தி உட்பட உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவில்லை என்றால் பாரிய நெருக்கடியை சந்திக்க நேரிடும் என மேல் மாகாண அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2012ஆம் ஆண்டு வரையில் மேல் மாகாணத்தின் மக்கள் தொகை 58 லட்சமாகும். 2025ஆம் ஆண்டில் அதன் எண்ணிக்கை 78 லட்சம் வரை அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதுவரை கொழும்பு நகரத்திற்கு நாள் ஒன்றுக்கு கார், வேன் மற்றும் முச்சக்கர வண்டி உட்பட இலகு வாகனங்ள் 4 இலட்சத்து 50 ஆயிரம் பயணிக்கும் நிலையில் நாள் ஒன்றுக்கு 29 ஆயிரம் பேருந்து உட்பட பொது போக்குவரத்து வாகனங்கள் பயணிக்கின்றன.
வெளி மாகாணங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 19 இலட்சம் பேர் கொழும்பிற்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் 2035ஆம் ஆண்டு வரையில் 44 லட்சம் பேர் வரையில் அதன் எண்ணிக்கை அதிகரிக்கும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலைமைக்கு முகம் கொடுப்பதற்கு திட்டம் ஏற்படுத்தவில்லை என்றால் தற்போதைய நிலையில் 10 மடங்குகளாக நெருக்கடி நிலை அதிகரிக்கும் ஆபத்துக்கள் உள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கௌதம் புத்தரின் பெயரை சொல்லிக்கொண்டு அநியாயம் செய்ய வேண்டாம் என மூதாட்டி ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். அந்த மூதாட்டி தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,
“பலாலி காணி எவ்வித நட்டஈடுகளும் கொடுக்கப்படாமல் 40 ஆண்டுகளாக படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது.
குறித்த காணிகள் விடுவிக்கப்படாமல் தொடர்ந்தும் படையினரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றது. குறித்த காணிகள் விரைவில் விடுவிக்கப்படவேண்டும்.
புத்த பெருமான் சொல்லித்தந்தது என்ன? புத்தர் அநியாயங்களை சொல்லித்தரவில்லை. எனினும், இன்று புத்தரின் பெயரை சொல்லிக்கொண்டு அநியாயம் செய்கின்றனர்.
இனவாதம் பரப்புகின்றனர். அடிதடியில் ஈடுபடுகின்றனர். இதனையா புத்தபெருமான் உங்களுக்கு சொல்லித்தந்தார்? என அந்த மூதாட்டி கேள்வியெழுப்பியுள்ளார்.
கடந்த ஆண்டு உறவினர் திருமணத்தில் கலந்துகொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி, ஹோட்டல் அறையில் உயிரி ழந்தார். அவரது மறைவு இந்திய திரையுலகை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதோடு, அவரது மரணத்திற்கு பல காரணங்களும் கூறப்பட்டது.
இந்த நிலையில், நடிகை ஸ்ரீதேவியின் மர ணம் இயற்கையானது அல்ல, திட்டமிட்ட படு கொ லை, என்று கேரள டிஜிபி அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளார்.
கேரள போலிஸின் மருத்துவ ஆலோசகராகவும் தடயவியல் மருத்துவ பேராசிரியராக பணிபுரிந்தவர் டாக்டர் உமாடாதன். இவர் கடந்த வாரம் உடல்நலக் குறைவால் உயிரி ழந்துள்ளார். இவர் இறப்பதற்கு முன்பாக கேரள டிஜிபி ரிஷிராஜ் சிங்கிடம், ஸ்ரீதேவி மர ணம் குறித்து பேசியுள்ளார்.
இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய டிஜிபி ரிஷிராஜ் சிங், ”நடிகை ஸ்ரீதேவி மரணம் குறித்து சொன்ன தடயங்களை பார்க்கும் போது ப டுகொ லை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஶ்ரீதேவி அதிகமாக குடித்துவிட்டு குளியல் அறையில் மூழ்கிவிட்டார் என்பது அபத்தம். அப்படியே அதிகமாக குடித்திருந்தாலும் 1 அடி தண்ணீரில் ஒருவர் மூழ்க முடியாது.
அவரது தலையை பிடித்து யாரேனும் அழுத்தினால் தான் மரணிக்க முடியும் என்பது உமாடாதனின் கருத்து.” என்று தெரிவித்துள்ளார். கேரள டிஜிபி-யின் இந்த தகவலால் பாலிவுட் சினிமா மட்டு இன்றி ஒட்டு மொத்த இந்திய சினிமாவிலேயே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சவுதி இளவரசி ஒருவர், பாரீஸில் உள்ள அவரது தந்தையின் வீட்டில் பழுது பார்க்கும் வேலை செய்ய வந்த நபர் தன்னை புகைப்படம் எடுத்ததாகக் கூறி, தனது பாதுகாவலரை வைத்து அந்த பணியாளரை அடித்து உதைத்து, தனது காலில் முத்தமிட வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
சவுதி இளவரசி Hassa bint Salman (43), மீது ஆயுதம் கொண்டு தாக்கியதற்கு துணைபோனது, எகிப்தில் பிறந்த ஒருவரை கடத்துவதற்கு துணை போனது ஆகிய குற்றச்சாட்டுகளின்பேரில் பிரான்சில் விசாரணை துவங்க உள்ளது. இளவரசி ஆஜராக மாட்டார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ள நிலையில், அவர் இல்லாமலே இன்று விசாரணை நடைபெற உள்ளது.
2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ஆம் திகதி இளவரசியின் பாதுகாவலர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டதோடு, அவருக்கு ஜாமீனும் மறுக்கப்பட்டது. Ashraf Eid என்னும் அந்த பணியாள் கூறும்போது, தன்னை இளவரசியின் பாதுகாவலர் அடித்து உதைக்கும்போது, இளவரசி தன்னை நாய் போல் நடத்தியதாகவும், நீ எப்படி ஒரு இளவரசியிடம் பேசுவாய் என்று பார்க்கிறேன் என்று மிரட்டியதாகவும் தெரிவித்திருந்தார்.
ஆனால் சவுதி பட்டத்து இளவரசர் Mohammed bin Salmanஇன் சகோதரியான Hassa தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். அவரது வழக்கறிஞரான Emmanuel Moyneம், இது பொய்யான குற்றச்சாட்டுகளின் பேரில் ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும், இளவரசி அப்படி எதுவும் சொல்லவேயில்லை என்றும் மறுத்துள்ளார்.
இளவரசி மிகவும் அக்கறை காட்டுபவர், தாழ்மையானவர் மட்டுமின்றி நாகரீகமானவர் என்று கூறியுள்ள Emmanuel Moyne, சவுதி சட்டப்படி, இளவரசியை பாதுகாக்கும் நோக்கில் அவரை புகைப்படம் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது என்றார். இந்த வழக்கு தொடர்பாக சவுதி அரசை தொடர்பு கொண்டபோது, சவுதி அரசு தகவல் தொடர்பு அலுவலகம் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
கோவையில் அக்கா மகள் கிடைக்காத விரக்தியில், தாய்மாமன் திருமணத்தை நிறுத்தியுள்ள சம்பவம் நடந்துள்ளது. கோவை மாவட்டத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மகன் பிரகாஷ் (28). இவருக்கும் ஈஸ்வர மூர்த்தி என்பவரது மகளுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
நேற்று காலை திருமணம் நடக்கவிருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி வந்தனர். அவர்களுடன் சேர்ந்து மணமகளின் தாயின் தம்பியும், தாய்மாமனுமான மோகன் (34) வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்து மணமக்களை வாழ்த்தியுள்ளார்.
பின்னர் விருந்தில் அமர்ந்து உணவருந்திவிட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார். நேராக கிராம நிர்வாக அலுவலரை சந்தித்து தன்னுடைய அக்கா மகள் பிறந்த தேதி 30.11.2001 என்றும், திருமணத்திற்கான வயது வருவதற்கு முன்பே திருமணம் செய்து வைப்பதாகவும் புகார் கொடுத்துள்ளார்.
அதன்பேரில் விரைந்து வந்த பொலிஸார் இரு வீட்டாரிடமும் பேச்சு வார்த்தை நடத்தி திருமணத்தை நிறுத்தியுள்ளனர். இதனால் மகிழ்ச்சியுடன் நிறைந்து காணப்பட்ட திருமண மண்டபம் சோக மையமாக மாறியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் திருமணம் செய்துகொண்ட புதுமணப்பெண் திடீரென மாயமாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்தவர் சூசை மகன் ராபின்சன்.
இவருக்கும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன் மகள் பிலோமினாள் (வயது20) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு ராபின்சன் வேலைக்காக சென்னை சென்றுவிட்டார். மனைவி மட்டும் சொந்த ஊரில் ராபின்சன் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார்.
சென்னை சென்ற ராபின்சனுக்கு பலமுறை போன் செய்து பிலோமினாள் மகிழ்ச்சியாக பேசியுள்ளார். ஆனால் வேலையை காரணம் காட்டி ராபின்சன் போனை துண்டித்து வந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த பிலோமினாள் கடந்த 1-ம் தேதி வீட்டிலிருந்து மாயமாகிவிட்டார். இது குறித்து பிலோமினாள் பெற்றோருக்கு ராபின்சன் குடும்பத்தினர் தெரியப்படுத்தினர்.
இதையடுத்து திருச்சியிலிருந்து பிலோமினாளின் தாய் செந்தாமரை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த பொலிஸார் மாயமான பிலோமினாளை தேடி வருகின்றனர்.
உலக சதுரங்க விளையாட்டு போட்டியில் தொடர்ந்து 6வது முறையாகத் தங்கப்பதக்கம் வென்று சாதித்த தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஜெனிதா ஆண்டோவுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
தமிழகத்தின் திருச்சி மாவட்டம், பொன்மலைப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெனிதா ஆண்டோ. இவர் 3 வயது குழந்தையாக இருக்கும்போதே போலியோ நோயால் பாதிக்கப்பட்டார். 90 சதவித உடல் நலக்குறைவால் மாற்றுத்திறனாளியான ஜெனிதா, தனது தந்தையின் உதவியுடன் சக்கர நாற்காலியில் நாட்களை கடக்க துவங்கினார்.
ஆனால், தன்னம்பிக்கையை மட்டும் கைவிடாத ஜெனிதா, சதுரங்க விளையாட்டில் தனது கவனத்தை செலுத்தினார். அதன் விளைவாக ஒரு சாம்பியனாக உருவெடுத்த அவர், இந்தியாவை தாண்டி சர்வதேச அளவில் பதக்கங்களை குவிக்க ஆரம்பித்தார்.
குறிப்பாக, தங்கப் பதக்கங்களை குவித்து, தங்க மங்கையாகவே மாறினார். இந்நிலையில், ஸ்லோவாக்கியா நாட்டில் 19வது உலக மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. கடந்த ஜூன் 28ஆம் திகதியில் இருந்து ஜூலை 6ஆம் திகதி வரை நடைபெற்ற இதில், பெண்களுக்கான சதுரங்க விளையாட்டு பிரிவில் ஜெனிதா ஆண்டோ கலந்துகொண்டார்.
தனது சிறப்பான ஆட்டத்தினால் தங்கப்பதக்கம் வென்ற அவர், தொடர்ந்து 6வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, நேற்றைய தினம் விமானம் மூலம் சொந்த ஊரான திருச்சிக்கு வந்த அவரை, பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த இளைஞர்கள், விளையாட்டு வீரர், வீராங்கனை மற்றும் சமூக ஆர்வலர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
குறிப்பாக, இளைஞர்கள் பலர் நீண்ட தூரம் வரிசையில் நின்று, கைதட்டி வரவேற்றதுடன் மாலை அணிவித்து, பூச்செண்டு மற்றும் சால்வை அணிவித்து ஜெனிதாவை வாழ்த்தினர். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த ஜெனிதா கூறுகையில், ‘ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் மாற்றுத்திறனாளிகளுக்காக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இந்த ஆண்டு நடைபெற்ற 19வது உலக மாற்றுத் திறனாளிகளுக்கான சதுரங்க போட்டியில் 12 நாடுகளைச் சேர்ந்த 44 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த முறை எப்போதும் இல்லாத அளவிற்கு இந்திய வீரர்கள் கூடுதலாக கலந்து கொண்டனர். இந்தியாவில் இருந்து 5 வீரர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இந்தப் போட்டியில் பெண்களுக்கான சதுரங்க போட்டியில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றுள்ளேன். உலகக்கோப்பை போட்டியில் ஆறாவது முறையாக நான் பெற்றுள்ள தங்கப்பதக்கம் இது. இந்த வெற்றிக்காக பாடுபட்ட எனது தந்தை, உதவிய எனது பயிற்சியாளர் சுந்தர்ராஜன், நண்பர்கள், உறவினர்கள், சதுரங்க விளையாட்டு கூட்டமைப்பின் நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கும் இந்நேரத்தில் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்.
வரும் 2020ஆம் ஆண்டில் நடக்க இருக்கும், ஆசிய கிராண்ட் மாஸ்டர் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வது தான் என் வாழ்நாள் லட்சியம். அதற்காக தொடர்ந்து பயிற்சி எடுக்க உள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.
திண்டுக்கலில் மனைவியை கவர நினைத்த நண்பனை காருக்குள் வைத்து கணவன் தீர்த்து கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேடசந்தூரை சேர்ந்தவர் விவேக். அவர் தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். விவேக்கிற்கு சிவா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிவா, நண்பன் எனக் கூறி கொண்டு விவேக்கின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தபோது அவருடைய மனைவியை சிவா கவர நினைத்ததாகக் கூறப்படுகிறது.
விவேக் வீட்டில் இல்லாத சமயத்தை சிவா பயன்படுத்திக் கொண்டு விவேக்கின் மனைவிக்கு பா லியல் தொல்லை கொடுத்துள்ளார். அதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டு தன்னுடன் உறவு கொள்ளுமாறு வற்புறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. இதை தனது கணவர் விவேக்கிடம் கூறி அவரது மனைவி கதறி அழுதுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த விவேக், சிவாவை பல முறை எச்சரித்த போதும் அவர் கேட்காமல் தொடர்ந்து இந்த செயலில் ஈடுபட்டு வந்துள்ளார். எனவே சிவாவை கொ லை செய்ய வேண்டும் என்று எண்ணிய விவேக், தனது நண்பர்கள் முனுசாமி, வடிவேலு ஆகியோரோடு சேர்ந்து கொண்டு திட்டம் தீட்டியுள்ளர்.
அதன்படி, நேற்று முன் தினம் ஊரில் நடைபெற்ற திருவிழாவில், சிவாவை கரகாட்டம் பார்க்க வருமாறு அழைத்துள்ளார். சிவா அங்கு செல்லவே அனைவரும் ம து வாங்கிக் கொண்டு புங்கம்பாடி என்ற இடத்திற்கு சென்று குடித்துள்ளனர்.
சிவாவுக்கு போ தை தலைக்கேறவே, அவரை மூன்று பேரும் கட்டையால் தாக் கியும், கழு த்தை நெரித்தும் கொ லை செய்து விட்டு, காரில் தூக்கி போட்டு கணவாய் பகுதிக்கு கொண்டு சென்று காருடன் சேர்த்து எரித் துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் 50 பேருடன் பயணித்த பேருந்து, யமுனா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் ஆக்ராவிற்கு அருகே வாய்க்காலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 29 பேர் உயிரி ழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரி ழந்த 29 நபர்களில் ஒருவர் தான் 29 வயதான மின்சார பொறியியலாளர் ஆசாத்பூரைச் சேர்ந்த ஹசூர் ஆலம். அவர், தனது மனைவி ஷாகுஃப்தாவை லக்னோவில் உள்ள அவரது வீட்டில் விட்டு, பேருந்தில் டெல்லி திரும்பும் வழியில் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
டெல்லியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஆலம் குறித்து அவரது உறவினர்கள் கூறியதாவது, ஆலம் பேருந்தில் அரிதாகவே பயணம் செய்வார். மேலும், அவரது சில பேருந்து பயணங்களில் ஒன்று அவரது வாழ்க்கையின் கடைசி பயணமாக மாறிவிட்டது என வருத்தம் தெரிவித்துள்ளனர்.
ஆலமின் குடும்ப உறுப்பினர்கள், லக்னோவில் உள்ள அவரது மாமியார் வீட்டிற்கு தனது மனைவி ஷாகுஃப்தாவை விட அனுமதித்ததற்கு இப்போது வருத்தப்படுகிறார்கள்.
என் மகன் வழக்கமாக ரயில் பயணங்களையே விரும்புவான். அவர் பணிபுரிந்த சூரிய உபகரணங்கள் உற்பத்தி நிறுவனத்தின் அலுவலகம் எங்கள் வீட்டிலிருந்து கிட்டத்தட்ட 30 கி.மீ தூரத்தில் உள்ள கிரீன் பூங்காவில் இருந்தது.
ஆலம் எப்போதும் மெட்ரோவில் பயணம் செய்தார். அவர் பேருந்துகள் அல்லது பைக்கைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தார் என்று ஆலமின் தந்தை மன்சூர் அலி கூறினார். நான் ஆலமிடம் என் இளைய மகன் சதாம் உசேன் உடன் மனைவியை அனுப்பும்படி சொன்னேன், அல்லது அவனுடைய மாமியார் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை அவளுடன் லக்னோவுக்குச் செல்லும்படி கேட்டேன்.
ஆனால் இந்த முறை அவர் தனது மனைவியை வேறொருவருடன் அனுப்ப தயங்கினார். இன்று, உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யக்கூடாது என்று அவரை கட்டாயப்படுத்தாததற்கு வருத்தப்படுகிறேன் என்று அலி கூறினார்.
ஐந்து உடன்பிறப்புகளில் மூத்தவரான ஆலம் அவரது குடும்பத்தின் முக்கிய வருவாய் உறுப்பினராகவும் இருந்தார். அவர் 2014 ஆம் ஆண்டில் வடமேற்கு டெல்லியில் உள்ள பாலிடெக்னிக் ஒன்றில் மின் பொறியியல் முடித்தார். ஆலம்-ஷாகுஃப்தாவுக்கு நவம்பர் 2017 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தாலி கட்டும் நேரத்தில் திடீரென மணப்பெண் மயங்கி விழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமாரி மாவட்டத்தில் இடைக்கோடு பகுதியை சேர்ந்த ஒரு இளைஞனுக்கும், பாகோடு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமண நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.
நேற்று காலை பாகோடு பகுதியிலுள்ள ஆலயத்தில் திருமணம் நடக்கவிருந்ததால், இரு வீட்டாரின் உறவினர்களும் மகிழ்ச்சியாக வருகை தந்தனர். திருமணத்திற்கான வழிபாடு துவங்கி விமரிசையாக சென்றுகொண்டிருந்தது. ஆலயத்தில் இருந்த போதகர் திருமணத்திற்கான வாக்குறுதிகளை வாசித்தார்.
அந்த வாக்குறுதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய மணப்பெண் திடீரென மயக்கம் போட்டு தரையில் விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக மணப்பெண்ணை மீட்டு ஆலயத்தின் உள்பகுதியில் உள்ள அறைக்கு கொண்டு சென்றனர்.
தகவலறிந்து வந்த மருத்துவர் மணப்பெண்ணை பரிசோதித்துவிட்டு, ஒன்றும் இல்லை திருமணத்தை தொடர்ந்து நடத்தலாம் எனக்கூறியுள்ளார். உடனே அந்த மணப்பெண் மருத்துவரின் கையை பிடித்துக்கொண்டு, இந்த திருமணத்தில் எனக்கு விருப்பமில்லை எனக்கூறியுள்ளார்.
இதனை கேள்விப்பட்ட மணமகன், மணப்பெண்ணிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் மணப்பெண் தன்னுடைய முடிவில் பிடிவாதமாக இருந்ததால், போதகர் திருமணத்தை நிறுத்தினார். இதனால் இரு வீட்டாருக்கு இடையில் கலகலப்பு ஏற்பட ஆரம்பித்தது. அப்போது பிரச்னை செய்யாமல் கலைந்து செல்லுமாறு போதகர் கடும் எச்சரிக்கை விடுத்ததால், அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.
தன்னுடைய உடலில் பெண் மாற்றும் ஏற்பட்டதை நண்பர்கள் கேலிசெய்ததால் அவமானம் தாங்க முடியாமல் மும்பையை சேர்ந்த இளைஞர் சென்னையில் த ற் கொ லை செய்துகொண்டுள்ளார். மும்பையை சேர்ந்த அவின்ஷு படேல் (20) என்கிற மாணவர் சென்னையில் தங்கி சலூன் கடை ஒன்றில் வேலை செய்து வந்தார்.
கடந்த சில நாட்களாகவே இவருடைய உடலில் ஏற்பட்ட ஹார்மோன் மாற்றத்தால், பெண்ணுக்கு உண்டான குணாதிசயங்கள் தென்பட்டுள்ளது. அவருடைய உடல் பாவனையிலும், நடையிலும் மாற்றம் ஏற்படுவதை கவனித்த அவனுடைய நண்பர்கள் சில ‘கே’ என கிண்டல் செய்ய ஆரம்பித்தனர். இதனால் அவின்ஷு படேல் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறான்.
இந்த நிலையில் கடந்த 4ம் திகதி மும்பையில் உள்ள தன்னுடைய பழைய நண்பனுக்கு போன் செய்துள்ளான். “எனக்குள் பெண் தன்மை ஏற்பட்டு வருகிறது என அனைவரும் கேலி செய்கிறார்கள். இதனால் நான் த ற்கொ லை செய்து கொள்கிறேன்” எனக்கூறிவிட்டு போனை துண்டித்துள்ளான்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவனுடைய நண்பன் பலமுறை போன் செய்தும் பதில் கிடைக்கவில்லை. மறுநாள் காலையில் போன் செய்யும் போது நீலாங்கரை கடற்கரையில் அவின்ஷு படேல் உ டல் ஒதுங்கியிருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அவின்ஷு பேஸ்புக் பக்கத்தை பொலிஸார் ஆராயும்பொழுது, “நான் ஒரு பையன் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் நான் நடப்பது, நினைப்பது, உணருவது, பேசுவது … இது ஒரு பெண் போன்றது. இந்தியாவில் வாழும் மக்கள் இதை விரும்புவதில்லை” என ஆங்கிலம் மற்றும் இந்தியில் பதிவிட்டிருப்பதை கண்டறிந்தனர்.
இதற்கிடையில் அவின்ஷுவின் பெற்றோர் சென்னை வந்து மகனின் உ டலை பெற்று செல்வதற்கான செலவினங்களை தனியார் அமைப்பு ஒன்று ஏற்றுக்கொண்டுள்ளது.