பொலன்நறுவை மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களாக இருந்து வந்த வறட்சி மற்றும் வறட்சியான காலநிலை முடிவுக்கு வந்துள்ளதுடன் இன்று மழை பெய்துள்ளது.
வெலிகந்தை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் ஐஸ் மழை பெய்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னர் மன்னம்பிட்டி பகுதியிலும் ஐஸ் மழை பெய்துள்ளது.
பொலன்நறுவையில் கடந்த ஆறு மாதங்களாக நிலவிய வறட்சி காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். அத்துடன் மாவட்டத்தின் பல பகுதிகளில் குடிநீருக்கும் தட்டுப்பாடு நிலவியது.
நான்கு வயது சிறுமியை துஷ் பிரயோகம் செய்த குற்றவாளிக்கு 7 வருட கடூழிய சி றைத்த ண்டனை வழங்குமாறு திருகோணமலை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளவர் சேருநுவர சிரிதுவ பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நாகஸ்கெதர துஷார மனோஜ் எனவும் தெரியவருகின்றது. திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறிதுவ பகுதியில் தன் மனைவியின் முதல் கணவருடைய நான்கு வயது சிறுமியை பா லியல் துஷ் பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் இவருக்கு எதிராக வழக்கு இடம்பெற்றுக் கொண்டிருந்தது.
இந்நிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது நான்கு வயது சிறுமியை துஷ் பிரயோகம் செய்தமைக்காக 7 வருட கடூழிய சிறை தண்டனை வழங்குமாறும், 3000 ரூபாய் தண்டம் செலுத்துமாறும் அப்பணத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில் ஒரு மாத கால கடூழிய சிறை தண்டனை வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபாய் நஷ்ட ஈடு செலுத்துமாறும், அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் ஒரு வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்குமாறும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பின் புறநகர் பகுதியொன்றில் செயற்பட்ட விடுதியில் இளைஞர், யுவதிகள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலவத்துகொட இரவு நேர விடுதியில் சுற்றி வளைத்து பொலிஸார், அங்கு ஆபாச செயற்பாட்டில் இளைஞர் – யுவதிகளை செய்துள்ளனர்.
பேஸ்புக் ஊடாக அறிமுகமான நண்பர்கள் ஒன்றாக களியாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இதற்கு முன்னர் பல முறை களியாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களை கைது செய்யும் போது அவர்களிடம் பெருந்தொகை போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரும் 25 வயதிற்கு குறைந்தவர்கள் எனவும், நொச்சியாகம, இரத்தினபுரி மற்றும் இங்கிரிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டுக்கான வடமாகாண மெய்வல்லுனர் போட்டியில் வவுனியாவை பிரதிபலித்து கலந்துகொண்ட மாணவர்கள் ஏழு பதக்கங்களை சுவீகரித்துள்ளனர்.
வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களான கெ.நிசோபன் 1500 மீற்றர் ஓட்டத்தில் தங்கப்பதக்கத்தையும், 5000 மீற்றர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தையும், கெ.நிசாந்தன் 1500 மீற்றரில் வெள்ளி பதக்கத்தையும் சுவீகரித்திருந்தனர்.
வவுனியா அகில இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை மாணவியான எஸ்.கேமபிரியா 5000 மீற்றர் மற்றும் 1500 மீற்றரில் தங்கப்பதக்கத்தையும், 800 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கத்தையும்,
ஸ்ரீராமாபுரம் திருஞானசம்பந்தர் பாடசாலை மாணவியான ஜெ.தனுசியா 800 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கத்தையும் பெற்று வவுனியா மாவட்டத்திற்கும், பயிற்சியாளருக்கும் அவர்கள் கல்வி கற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
வவுனியா சிதம்பரபுரம் திருப்பழனி முருகன் ஆலயத்தின் அலங்கார நுழைவாயில் வளைவு இன்று (09.07.2019) திறக்கப்பட்டது.
ஆலயத்தலைவர் மாதவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ்.சந்திரகுமார், கோமரசன்குளம் மாகாவித்தியாலய அதிபர், சிதம்பரபுரம் பிரதேச வைத்தியசாலை வைத்தியர், பிரதேச இந்துக்கலாச்சார உத்தியோகத்தர், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் நிதி ஒதுக்கீட்டில் வளைவு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யட்டியாந்தோட்ட மீகஹவெல்ல பகுதியில் உள்ள யுவதி ஒருவர், களனி கங்கைகையில் நீராட சென்று காணாமல் போன நிலையில் சட லமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த யுவதி இன்று காலை சட லமாக மீட்கபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை குறித்த யுவதி நீராட சென்ற நிலையில் காணாமல் போயிருந்தார்.
இதனையடுத்து தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டிருந்த போதிலும் யுவதி கிடைக்கவில்லை. இந்நிலையில், இன்று காலை கடற்படையினர் மற்றும் பொது மக்கள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது யுவதி சட லமாக மீட்கப்பட்டுள்ளார்.
யட்டியாந்தோட்ட மீகஹவெல்ல பகுதியை சேர்ந்த 18 வயதுடைய ஜோன் ஞானமேரி என்ற யுவதியே இவ்வாறு சட லமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சட லம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கையில் தரையிறக்கப்பட்ட வெளிநாட்டு விமானம் தொடர்பில் சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கையின் நிலப்பரப்பை ஆய்வு செய்யும் நோக்கில் இந்த விமானம் இலங்கை ஊடாக இந்தியா பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தென்னாபிரிக்காவுக்கு சொந்தமான அதிவிசேட வசதிகளை கொண்ட விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
இந்த விமானத்தின் மூலம் பூமிக்கு கீழ் 800 மீற்றர் ஆழத்தை ஸ்கேன் செய்யும் வசதி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விமானம் தென்னாபிரிக்காவில் பதிவு செய்யப்பட்ட spectrem air property என்ற விமான நிறுவனத்திற்கு சொந்தமான HC – 47 ரக விமானம் ஒன்றாகும்.
இந்த விமானம் பறந்து கொண்டிருக்கும் போது 10000 அடி வரை கீழ் நோக்கி கொண்டு வந்தால் பூமிக்கு கீழ் 800 மீற்றர் வரையான ஆழமுள்ள பிரதேசங்களை சோதனையிடும் வசதிகளை கொண்டுள்ளது.
இந்த விமான நிறுவனத்திடம் இது போன்ற பாரிய அளவிலான விமானங்கள் உள்ள நிலையில், அவர்கள் இவ்வாறு பல்வேறு நாடுகளுக்கு சென்று பூமியை சோதனையிடுவதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த விமானத்தின் ஊழியர்கள் மூவரும் இவ்வாறு இலங்கை வந்துள்ள நிலையில் இலங்கையில் நிலக்கீழ் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதா என சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த விமானம் இன்றைய தினம் எரிபொருள் நிரப்பிக் கொண்டு இன்று மெனிலா நகரத்திற்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையின் கடற்பரப்பில் அதிகளவான பெற்றோலிய வளம் இருப்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் வைத்து நேற்றிரவு இளம் பெண்ணொருவர் போ தைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பெண் கொழும்பு மத்திய வலய ஊழல் தடுப்பு பிரிவினரால் கொம்பனித்தெரு, வேகந்த வீதி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சம்பவம் தொடர்பில் 27 வயதுடைய பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து 5.52 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சந்தேகநபரான பெண் கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளதுடன், அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ம துபோ தையில் வாகனம் செலுத்திய 1500 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். கடந்த 5ஆம் திகதியிலிருந்து இன்று 9ஆம் திகதி காலை வரையான காலப்பகுதிக்குள்ளேயே 1500 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ம துபோ தையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கைதுசெய்யும் பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை கடந்த 5ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இதற்கமைய, இன்று காலை வரை 1500 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இவர்களில் 284 சாரதிகள் நேற்று மாலை 6 மணியிலிருந்து இன்று காலை 6 மணிவரை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கரும்புத் தோட்டங்களில் பணிபுரியும் பெண்கள் பலர், தங்களின் வேலைகளுக்காக கருப்பையை அகற்றுவதாக அதிர வைக்கும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்தின் பீட், ஆஸ்மானாபாத், சங்க்லி மற்றும் சோலாப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மேற்கு மாவட்டங்களுக்கு வாழ்வாதாரத்தை தேடி வருகின்றன.
அவர்கள் பெரும்பாலும் அங்குள்ள கரும்புத் தோட்டங்களில் 6 மாத காலம் தங்கி, அறுவடை வேலைகளை செய்து வருகின்றனர். இவ்வாறாக பணிபுரிபவர்களில் பெண்களே அதிகம். எனினும், கரும்பு வெட்டுதல் என்பது கடினமான பணி என்பதாலும், மாதவிடாய் காரணங்களால் அவர்கள் விடுப்பு எடுத்தால் வேலை பாதிக்கும் என்பதாலும், பெண்களை வேலைக்கு எடுக்க தயக்கம் காட்டப்படுகிறது.
இதன் காரணமாக அவர்கள் பணிக்கு வரவில்லை என்றால் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் கூறப்படுகிறது. சுகாதாரமற்ற, எந்தவித அடிப்படை வசதியும் அற்ற சூழலிலேயே கூடாரங்கள் அல்லது சிறிய குடிசைகளில் குறித்த பெண்கள் தங்க வைக்கப்படுகின்றனர். அறுவடையின்போது இரவு நேரங்களில் கூட அவர்கள் வேலை செய்ய வேண்டும்.
இவ்வாறாக பல நோய் தொற்றுகளுக்கு ஆளாகும் அந்த பெண்கள், சிறிய பிரச்சனைகளுக்கு கூட கருப்பையை எடுக்க சில மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதிலும், இளம் வயதிலேயே திருமணமான பெரும்பாலான பெண்கள், இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் இருப்பதால் கருப்பை எடுப்பது சரி என்றே நினைத்து அதனை அகற்றுவதாக தெரிகிறது.
இதன் காரணமாக, அப்பகுதியில் உள்ள பல கிராமங்கள் ‘கருப்பை அற்ற பெண்களை கொண்ட கிராமங்களாக’ உள்ளன. 40 வயதுக்கும் குறைவான பல பெண்கள் கருப்பையை அகற்றுவதால், அறுவை சிகிச்சைக்கு பின்னர் தங்களின் உடல்நிலை மேலும் மோசமடைவதாக தெரிவிக்கின்றனர்.
இதேபோல் தமிழகத்தில் உள்ள பல ஆடை தொழிற்சாலைகளில், மாதவிடாய் சமயங்களில் பெண்களுக்கு வரும் வலியை தவிர்க்க மாத்திரைகள் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், அவை பெரும்பாலும் மருத்துவர்களின் பரிந்துரையில்லாமல் அளிக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.
இந்த மருந்துகளால் மன அழுத்தம், பதற்றம், கருப்பையில் கட்டிகள், சிறுநீர் குழாயில் தொற்று, கருக்கலைப்பு போன்ற உடல்நல கோளாறுகள் ஏற்படுவதாக அப்பெண்கள் தெரிவிக்கின்றனர். எனினும், தமிழகத்தில் ஆடை தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களின் உடல்நலம் குறித்து கண்காணிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் காதலனுடன் ஹொட்டலில் தங்கிய இளம் தூக் கிட்டு தற் கொ லை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லியை சேர்ந்தவர் ரோசி (22). இவர் தனது காதலருடன் நேற்று பஹர்கஞ் பகுதியில் உள்ள ஹொட்டலுக்கு வந்து அறை எடுத்து தங்கினார். அப்போது ரோசிக்கும் அவர் காதலனுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.
இதையடுத்து காதலன் அறையை விட்டு வெளியேறினார். இதன்பின்னர் ரோசி, அறையில் தூ க்கிட்டு த ற்கொ லை செய்து கொண்டார். காதலன் சண்டை போட்டு செல்வதை பார்த்த ஹொட்டல் ஊழியர்கள் ரோசி அறைக்கு சென்று வெகுநேரமாக கதவை தட்டியும் அவர் திறக்கவில்லை.
இதன்பின்னர் கதவை உடைத்து பார்த்த போது அவர் தூக் கில் தொங்கியபடி இருந்ததை பார்த்து பொலிசுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் ரோசி உடலை கைப்பற்றிவிட்டு, அவர் காதலனை கைது செய்துள்ளனர். ரோசி தற் கொ லைக்கு முன்னர் கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை என கூறியுள்ள பொலிசார் அவர் காதலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்
இந்தியாவில் இரவில் கணவர் நண்பருடன் ஓட்டம் பிடிக்க முயன்ற மனைவியை கணவன் தடுத்து நிறுத்திய நிலையில் ஆத்திரமடைந்த மனைவி கணவன் வீட்டை தீயிட்டு கொளுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தபிரதேச மாநிலத்தில் உள்ள புத்தா கிராமத்தில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் கணவரின் நண்பருடன் மனைவிக்கு தொடர்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று தம்பதி வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். அப்போது இரவு 10.30 மணிக்கு மனைவி நைசாக எழுந்து காதலனுடன் ஓட்டம் பிடிக்க முயன்றார்.
ஆனால் கண்விழித்து பார்த்து அதிர்ந்த கணவன் மனைவி செல்வதை தடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி வீட்டுக்கு தீவைத்தார். தீயானது மளமளவென அருகில் இருந்த வீடுகளுக்கும் பரவியது. பின்னர் ஊர் மக்கள் சேர்ந்து தீயை அணைத்தனர். இதில் மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டது.
இது தொடர்பாக பொலிசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் பொலிசார் மனைவியை கைது செய்தனர். இதனிடையில் மாடுகளை கொ ன்ற வழக்கு ஏற்கனவே கணவர் மீது பதியப்பட்டுள்ள நிலையில் அவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவை சேர்ந்த ஷாஹான் மியா என்கிற 30 வயது இளைஞர் பலமுறை முயற்சி செய்தும் காதலி கிடைக்காததால், விரக்தியில் டேட்டிங் இணையதளம் ஒன்றினை துவங்கியுள்ளார்.
அதற்கான விளம்பரத்தினையும் ட்விட்டரில் துவங்கி தனக்கான காதலியை தீவிரமாக தேடி வருகின்றார்.
இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், “எனக்கு ஒருபோதும் நீண்டகால உறவு அல்லது தீவிரமான காதலி எதுவும் இருந்ததில்லை. டேட்டிங் இணையதளங்களை நான் வெறுக்கிறேன்”. “அவை அனைத்தும் ஆளுமையை விட தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டவை. அவை வெறும் ஹூக்-அப் தளங்கள் மற்றும் ஒரு இரவு நேரத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன”.
“நான் ஆசைப்படுகிறேன் என்று நான் கூறமாட்டேன், ஆனால் வாழ்க்கையில் குடியேறுவதற்காக ஒரு துணையை மிகவும் தீவிரமாக தேடுகிறேன்”. நான் பெரும்பாலும் வாழ்க்கையிலேயே அதிக கவனம் செலுத்தியதால் தனிமையில் மகிழ்ச்சியாக இருந்தேன்.
ஆனால் தற்போது எனக்கு ஒரு துணை தேவைப்படுகிறது. அவருடன் சேர்ந்து வாழ்க்கையை ரசிக்க விரும்புகிறேன்” எனக்கூறியுள்ளார். ஷாஹான் இணையதளம் துவங்கி ஒருவாரம் ஆகியிருக்கும் நிலையில் அவரை இதுவரை ஒருபெண் மட்டுமே தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.
ஒரு அவுஸ்திரேலிய தம்பதி தங்கள் மகனை விற்பனை செய்வதற்காக இணையத்தில் வெளியிட்டிருந்த விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன் தினம் டார்வினைச் சேர்ந்த ஒரு பெற்றோர் அந்த விளம்பரத்தைக் கொடுத்திருந்தனர். குழந்தை விற்பனைக்கு, 50 டொலர்கள் மட்டுமே… குழந்தையின் பாலினம் – ஆண்.
நீங்கள் விரும்பினால் உங்கள் வீட்டுக்கே கொண்டு தருவோம், இல்லை நீங்கள் பிக் செய்ய விரும்பினாலும் சரி… என்று கூறப்பட்டிருந்த அந்த விளம்பரத்தில், அந்த தம்பதியின் முகவரியும் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இணையதளம் ஒன்றின் பொம்மைகள் விற்பனை பிரிவில் இந்த விளம்பரம் கொடுக்கப்பட்டிருந்தது. விளம்பரத்தைக் கண்ட பலரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
தாங்கள் கொடுத்த விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தியதை அறிந்த அந்த தம்பதி நேற்று இரவு அந்த விளம்பரத்தை நீக்கி விட்டனர்.
விளம்பரம் தொடர்பாக அந்த இணைய தளத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் £17 மில்லியன் லொட்டரியில் வென்ற நபர் மொத்த பணத்தையும் தவறான முதலீட்டால் இழந்துள்ளார். ஷெரீப் கிர்கிஸ் என்பவருக்கு தற்போது 35 வயதாகிறது. இவருக்கு கடந்த 2007-ல் 23 வயதிருக்கும் போது லொட்டரியில் £17 மில்லியன் பரிசு விழுந்தது.
ஆனா இவ்வளவு பெரிய பரிசு பணம் அவர் வாழ்க்கையை வசந்தமாக மாற்றிவிடவில்லை என்றால் நம்பமுடிகிறதா? ஆம், ருசல் போலிவிகா என்ற நபரின் வழிகாட்டுதலோடு பரிசு பணத்தில் மதுபான விடுதியை விலை கொடுத்து வாங்கியது, சொகுசு படகை வாங்கியது போன்ற விடயங்களில் ஷெரீப் முதலீடு செய்தார்.
ஆனால் அவர் செய்த அனைத்து தொழில்களும் பெரும் நஷ்டத்தை சந்தித்தன. இதன் காரணமாக சில ஆண்டுகளில் அனைத்து பணத்தையும் ஷெரீப் இழந்தார். இதனால் பல கோடிகள் பணத்தை வைத்திருந்த ஷெரீப் சில ஆண்டுகளில் நடுத்தெருவுக்கு வரும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
இதை தொடர்ந்து தன்னுடைய பணத்தை முதலீடு செய்ததில் அனைத்திலும் உதவியாக இருந்த ருசல் தன்னை ஏமாற்றிவிட்டதாக அவர் மீது ஷெரீப் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியாகியுள்ள நிலையில் ஷெரீப்புக்கு £1.1 மில்லியன் பணம் மட்டும் ருசல் கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
20 வயதில் பல கோடிகளை சம்பாதித்தவரும், நடிகருமான கேமரூன் பாய்ஸ் தூக்கத்திலேயே உயிரி ழந்துள்ளார். டிஸ்னி தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் கேமரூன் பாய்ஸ் (20).
இவரின் சொத்து மதிப்பு ஐந்து மில்லியன் டொலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. குழந்தைகளைக் கவர்ந்த நடிகராக வலம் வந்த கேமரூன், சமீபத்தில் மூளையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
கேமரூனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று தூக்கத்திலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக அவரது செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். கேமரூனின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.