காருக்குள் புகைப்பிடிக்க ஆசைப்பட்ட நபர் : இறுதியில் நேர்ந்த துயரம்!!

நேர்ந்த துயரம்

சுவிஸ்லாந்தின் பாஸல் மண்டலத்தில் பூட்டிய காருக்குள் இருந்து புகை பிடிக்க முயன்ற நபரால், மொத்த காருமே நெருப்புக்கு இரையான சம்பவம் நடந்தேறியுள்ளது. குறித்த சம்பவத்தில் தீக்காயங்களுடன் காப்பாற்றப்பட்ட அந்த நபரை உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

பாஸல் மண்டலத்தின் Liestal நகரத்திலேயே இச்சம்பவம் நடந்துள்ளது. ஞாயிறு மாலை சுமார் 7.30 மணியளவில் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினருக்கு அவசர தகவல் ஒன்று கிடைத்துள்ளது. தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு குழுவினர் சம்பவயிடத்தில் தீப்பற்றி எரியும் கார் ஒன்றை கண்டுள்ளனர்.

அதன் அருகாமையில் தீக்காயங்களுடன் 60 வயது முதியவரும் இருந்துள்ளார். அவருக்கு முதலுதவி வழங்கிய மீட்பு குழுவினர் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் நெருப்பை கட்டுப்படுத்தினாலும், அந்த கார் மொத்தமாக சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. குறித்த 60 வயது நபர் பூட்டிய காருக்குள் இருந்து புகை பிடிக்க முயன்றதே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. இருப்பினும் உரிய ஆய்வுக்கு பின்னரே உறுதியான காரணம் என்ன என்பது தெரியவரும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

9 வயது சிறுமிக்கு துஸ் பிரயோகம் : தட்டிக்கேட்ட மனைவிக்கு நேர்ந்த கொ டுமை!!

இந்திய மாநிலம் கேரளாவில் 9 வயது சிறுமியை சீர ழித்த விவகாரத்தை தட்டிக்கேட்ட மனைவியை கொன்ற செய்த அசாம் மாநில இளைஞருக்கு 23 ஆண்டுகள் சி றை தண் டனை வழங்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் பெரும்பாவூர் பகுதியில் வேலை நிமித்தம் குடும்பத்துடன் குடியிருந்து வந்தவர் 29 வயதான அப்துல் ஹக்கீம் என்ற அசாம் மாநில இளைஞர்.

இவர் அதே பகுதியில் பெற்றோருடன் குடியிருந்து வந்த அசாம் மாநிலத்து 9 வயது சிறு மியை ஏமாற்றி ரப்பர் காட்டுக்குள் வைத்து பாலி யல் ரீதியாக தாக்கி யுள்ளார்.

அந்த இளைஞரிடம் இருந்து தப்ப முயன்ற சிறுமியின் கை கால்களை கயிற்றால் கட்டிவிட்டு, கொடூ ரமாக வன்மத்தை தீர்த்துள்ளார். இச்சம்பவத்தை வெளியே தெரிவித்தால் பெற்றோரை கொ லை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

ஆனால் குடியிருப்புக்கு தப்பி வந்த சிறுமி நடந்தவற்றை ஹக்கீமின் மனைவியிடம் ஒப்புவித்துள்ளார். இச்சம்பவத்தில் ஆத்திரமடைந்த ஹக்கீம் மனைவியை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். பின்னர் தொடர்புடைய சிறுமியை தமது படுக்கை அறையில் அடைத்து வைத்து தொடர் பாலி யல் தாக்குதல் நடத்தியுள்ளார்.

மட்டுமின்றி 23 வயதான தமது மனைவியையும் பிறந்து 2 மாதம் மட்டுமேயான சொந்த பிள்ளையையும், ஏமாற்றி கூட்டி சென்று கிராமத்திற்கு வெளியே காட்டுப்பகுதியில் வைத்து கழு த்தை துண் டித்து கொ லை செய்து அங்கேயே புதைத் துள்ளார்.

2015 ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பில் எந்த பாதிப்பும் இன்றி அப்துல் ஹக்கீம் தொடர்ந்து கேரளாவிலேயே வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு குறித்த அசாம் சிறுமி பாடசாலையில் சேர்ந்த பின்னர், தமக்கு ஏற்பட்ட துயரத்தை பாடசாலை நிர்வாகிகளிடம் ஒப்புவித்துள்ளார்.

உடனடியாக பாடசாலை நிர்வாகம், பொலிசாரை தகவல் அறிவித்து, ஹக்கீமை கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையிலேயே மனைவி மற்றும் 2 மாத குழந்தையை கொ லை செய்த சம்பவமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மனைவி மற்றும் குழந்தையை ஊருக்கு அனுப்பி வைத்ததாகவே அப்பகுதி மக்களிடம் ஹக்கீம் கூறி வந்துள்ளதும் அம்பலமானது.
இந்த வழக்கின் விசாரணை தற்போது முடிவடைந்துள்ள நிலையில், அவருக்கு 23 ஆண்டுகள் சி றை தண் டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டுள்ளது.

330 கிலோ உடல் எடை கொண்ட நபர் சிகிச்சையின் போது மரணம்!!

330 கிலோ உடல் எடை

பாகிஸ்தான் நாட்டில் 330 கிலோ உடல் எடையை குறைப்பதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்ட நபர் மருத்துவமனையில் ஏற்பட்ட ஒரு ரகளையால் கவனிப்பார் யாருமின்றி மரணமடைந்துள்ளார்.

பாகிஸ்தான் நட்டின் லாகூர் நகர் அருகே சாதிக்காபாத் பகுதியை சேர்ந்தவர் நூருல் ஹசன். சிறு வயதில் இருந்தே உடல் பருமன் நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவருக்கு தற்போது 55-வது வயதில் சுமார் 330 கிலோ எடை என அதிகரித்தது.

அவருக்கு எடை குறைப்புக்கான அறுவை சிகிச்சை செய்ய குடும்பத்தார் விரும்பிய நிலையில், பாகிஸ்தான் ராணுவ தளபதி காமர் ஜாவெத் பாஜ்வா அவருக்கு உதவ முன்வந்தார். இதனையடுத்து குடியிருப்பின் சுவற்றை உடைத்து நூருல் ஹசனை வெளியே கொண்டுவந்த சிறப்பு குழுவினர்,

அவரை லாகூர் நகரில் உள்ள சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வசதியாக ராணுவ ஹெலிகாப்டர் ஒன்றையும் பயன்படுத்தினர். லாகூரில் உள்ள ஷலாமார் மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் நூருல் ஹசனுக்கு ‘லிப்போசக்‌ஷன்’ எனப்படும் எடை குறைப்புக்கான சிறப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சைக்கு பின்னர் மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அவரை அனுமதித்து மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர். இந்நிலையில், அதே தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த ஒரு பெண் நோயாளி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இறந்தவர்களின் உறவினர்கள் பலர் அந்த அறைக்குள் கும்பலாக வந்து கூச்சலிட்டு, அழுது ரகளை செய்தனர். இதனால், அங்கு சற்றுநேரம் கலவரமான சூழல் ஏற்பட்டது.

இதனிடையே அதே அறையில் கண்காணிப்பில் இருந்த நூருல் ஹசனின் உடல்நிலை திடீரென்று மோசமடைந்தது. மூச்சுத்திணறலால் அவர் திக்குமுக்காடிக் கொண்டிருந்த நிலையில் அங்கு ஏற்பட்ட ரகளை காரணமாக அவரை கவனிக்க அங்கு மருத்துவர்களோ, செவிலியர்களோ அருகில் இல்லை என கூறப்படுகிறது.

இதனால், நூருல் ஹசன் மற்றும் அங்கே சிகிச்சை பெற்றுவந்த இன்னொரு பெண் என இருவர் பரிதாபமாக உயிரி ழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம், மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு கொண்டிருந்த நூருல் ஹசனுக்கு முதலுதவி செய்து,

அவரது உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முயன்றதாகவும், அதற்குள் நிலைமை கைமீறி போய் விட்டதாகவும் தெரிவித்துள்ளது. இருப்பினும், அங்கு நடந்த களேபரத்தின்போது என்ன நடந்தது? என்பதை தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள கண்காணிப்பு கெமரா பதிவுகளை ஆய்வு செய்த பின்னர்தான் உண்மை நிலவரம் தெரியவரும் என மனித உரிமை ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

50 பேருடன் பாலத்தை உடைத்துக் கொண்டு வாய்க்காலில் பாய்ந்த பேருந்து : 29 பேர் ப லி!!

வாய்க்காலில் பாய்ந்த பேருந்து

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் 50 பேருடன் பயணித்த பேருந்து, வாய்க்காலில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்விபத்தில் 29 பலியாகியுள்ளனர்.

யமுனா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் ஆக்ராவிற்கு அருகே இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து லக்னோவிற்கு பயணித்த அவத் டிப்போக்கு சொந்தமான டபுள் டக்கர் பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

50 பேருடன் பயணித்த பேருந்து, யமுனா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில், ஆக்ரா அருகே சாலையின் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு 15 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

தகவல் அறிந்த சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், பேருந்தில் சிக்கி தவித்த பயணிகளை மீட்டுள்ளனர். இதில், 29 பேர் பலியான நிலையில், பலர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

விபத்தில் சிக்கி உயி ரிழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து விதமான உதவிகளை வழங்குமாறு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

உயி ரிழந்தவர்களின் குடும்பதினருக்கு ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என உத்தர பிரதேச சாலைப் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

வெளியூரில் இருந்து இளம் மனைவியை காண ஆசையாக ஊருக்கு வந்த கணவன் : வீட்டில் நடந்த சம்பவம்!!

வீட்டில் நடந்த சம்பவம்

இந்தியாவில் மனைவியை கொ லை செய்துவிட்டு தனது மர்ம உறுப்பை அறுத்து கொண்ட கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் அன்வருல் அசன். இவருக்கும் 20 வயது பெண் ஒருவருக்கும் ஒரு ஆண்டுக்கு முன்னர் திருமணம் நடந்தது. அசன் குஜராத்தில் தங்கி பணிபுரிந்து வந்த நிலையில் வார இறுதி நாட்களில் ஊருக்கு வருவார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அசன் ஊருக்கு வந்த நிலையில் மனைவியுடன் தனிமையில் இருக்க நினைத்துள்ளார். ஆனால் இதற்கு அசன் மனைவி கணவரை பார்த்து, உன் ஆசைக்கு சம்மதிக்க முடியாது என கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அசன் மனைவியை கழு த்தை நெரி த்து கொ லை செய்துள்ளார்.

பின்னர் கத்தியால் தனது மர்ம உறுப்பை தானே வெட்டி கொண்டார். இதையடுத்து அசன் அலறிய சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அசன் மனைவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையில் தனது மகளை அசன் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக அசன் மாமனார் பொலிசில் புகார் அளித்துள்ளார். இதை தொடர்ந்து பொலிசார் அசன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள பேரிடியான தகவல்!!

பேரிடியான தகவல்

பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் மின்சார சபைக்கு இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் காரணமாக நாட்டு மக்கள் பெரிதும் பாதிப்படையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மின்சார சபைக்கு பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் வழங்க மறுத்துள்ளதால், மின் உற்பத்தியில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாடு தழுவிய ரீதியில் 1 மணி நேர மின்சாரம் துண்டிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் கொழும்பு துறைமுகத்தில் இருந்து கொலன்னாவை எரிபொருள் களஞ்சியம் வரை குழாய் இடும் நடவடிக்கையின் போது மோதரை பிரதேசத்தில் குழப்பம் ஏற்பட்டது.

இதற்கு உரிய தீர்வு காணாவிட்டால் மின்சார சபைக்கு எரிபொருள் விநியோகிப்பதை நிறுத்துவதாக பெற்றோலிய தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன. இதன்படி கடந்த மாதம் 30 ஆம் திகதி நள்ளிரவு முதல் மின்சாரசபைக்கு எரிபொருள் விநியோகிப்பதை நிறுத்துவதற்கு பெற்றோலியத்துறை தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுத்தது.

எனினும் இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என மின் சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

பெண் ஒருவரின் தங்கச் சங்கிலி சூறையாடப்பட்ட விதம் : அதிர்ச்சிக் காணொளி!!

தங்கச் சங்கிலி சூறையாடப்பட்ட விதம்

கல்கிஸ்ஸ – கங்கெதர பகுதியில் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை உந்துருளியில் வருகை தந்த இருவர் கொள்ளையிட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்துள்ளது.

உந்துருளியில் வருகை தந்த இருவர் திடிரென குறித்த யுவதிக்கு அருகில் சென்று கையடக்க தொலைபேசியை காண்பித்து கதைத்தவாறே கழுத்தில் கையை வைத்து அணிந்திருந்த ங்கச் சங்கிலியை கொள்ளையிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

உந்துருளியில் வருகை தந்த இரு நபர்கள் தங்க மாலையை சூறையாடிய விதம் அங்கு பொருத்தப்பட்டுள்ள சீசி ரீ.வி பாதுகாப்பு கெமராவில் இவ்வாறு பதிவானது.

எதிர்பார்த்ததனை விடவும் நன்றாக விளையாடினோம் : இலங்கை அணித் தலைவர்!!

இலங்கை அணித் தலைவர்

தமது எதிர்பார்ப்பினை விடவும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி சிறப்பாக விளையாடியது என அணித் தலைவர் திமுத் கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல் சுற்றிலேயே வெளியேறிய இலங்கை அணி இன்று நாடு திரும்பியது. இதன்போது அணித் தலைவர் திமுத் கருணாரட்ன ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.

இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், அணியைத் தெரிவு செய்யும் போது இருக்கும் சிறந்த வீரர்கள் தெரிவு செய்யப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அணியின் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினார்கள் அவர்கள் ஒத்துழைப் வழங்கியிராவிட்டால் புள்ளிப் பட்டியலில் 5ஆம் இடத்தை அடைந்திருக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். ஆரம்பப் போட்டிகளில் துடுப்பாட்டத்தில் ஜொலிக்கத் தவறியமை முன்னோக்கிச் செல்வதில் தடையாக அமைந்திருந்தது என தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் போட்டிகளின் முடிவில் தோல்வியடைந்திருந்தால் வீடுகளுக்கு கல் வீசப்படும் என்ற போதிலும் இலங்கையில் அவ்வாறான நிலைமைகள் கிடையாது என திமுத் கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பிறக்கும் குழந்தைகளுக்காக அறிமுகமாகும் புதிய நடைமுறை!!

புதிய நடைமுறை

நாட்டில் பிறக்கின்ற அனைத்து குழந்தைகளுக்கும் பிறந்த உடனேயே தேசிய அடையாள அட்டைக்கான இலக்கம் வழங்கும் நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அமைச்சர் வஜிர அபேவர்த்தன அறிவித்துள்ளார்.

இதற்கான வேலைத்திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை குடிவரவு குடியகல்வு திணைக்களத்துடன் இணைந்து புதிய கடவுச் சீட்டொன்றையும் பெற்றுக்கொள்ளும் நடைமுறையும் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் நாட்டில் பிறக்கின்ற அனைத்து குழந்தைகளுக்கும் பிறந்த உடனேயே தேசிய அடையாள அட்டைக்கான இலக்கம் வழங்கும் நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது.

மன்னார் தொங்குபாலத்தில் பயணிப்பவர்களுக்கு நேர்ந்துள்ள நிலை!!

மன்னார் தொங்குபாலம்

மன்னார், தொங்குபாலத்தில் பயணிப்பவர்கள் அச்ச நிலையை எதிர்கொண்டுள்ளதுடன் பாலம் நீண்டகாலமாக புனரமைப்பு செய்யப்படாமல் கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு பாதுகாவலர்கள் இன்றிக் காணப்படுவதால் செல்லும் சுற்றுலாப்பயணிகள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

மன்னார் தொங்குபாலம் பல வருட வரலாற்றினைக் கொண்டுள்ளது. மன்னாரிலுள்ள பல்வேறு வழிபாட்டுத்தளங்களுக்குச் செல்லும் தமிழ், சிங்கள, முஸ்லிம் சுற்றுலாப்பயணிகள் தமது குடும்பத்தினருடன் தொங்குபாலத்திற்குச் சென்று அங்குள்ள இயற்கை அழகுகளைப் பார்வையிட்டு வருகின்றனர்.

தொங்குபாலத்தில் நடைபாதையில் அமைக்கப்பட்ட தகட்டின் ஒரு பகுதி திறந்து காணப்படுகின்றது. இதனால், அப்பாலத்தைக் கடந்து செல்லும் பொதுமக்கள் பாலத்தில் அச்சத்துடன் செல்லவேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

வடமாகாணங்களிலிருந்து பல திசைகளிலுள்ள பல்வேறு பாடசாலைகளிலிருந்து சுற்றுலாவிற்கு அழைத்து செல்லும் மாணவர்கள் இவ்வாறு பிரசித்தி பெற்ற இயற்கை வளங்களுக்குக் கூட்டிச் செல்வது வழமை. அவ்வாறு செல்லும் மாணவர்களுக்கு பாதுகாப்பான சுற்றுலாத் தளங்களாக அமைத்துக்கொடுக்க வேண்டியது இப்பகுதிக்குப் பொறுப்பாகவுள்ள அதிகாரிகளின் கடமையாகும்.

பாலத்தின் கீழ்ப்பகுதியில் ஆறு காணப்படுகின்றது. ஆற்றைக்கடந்து செல்லும்போது பாதுகாப்பு வேலிகள் பாதுகாப்பானதாகவும் இல்லை இவ்வாறு அழிந்து செல்லும் பிரபல்யமான சுற்றுலா மையங்களை அழகுபடுத்தி மாகாணத்தை வருமான துறையாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் இதன் போது பாதுகாப்பினை பலப்படுத்தி இதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு சுற்றுலாப்பயணிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.

குடும்பத்தகராறு காரணமாக குடும்பஸ்தர் எடுத்த விபரீத முடிவு!!

விபரீத முடிவு

அம்பாறை – கல்முனை, சேனைக்குடியிருப்பில் குடும்பஸ்தர் ஒருவர் தூக் கிட்டு தற்கொ லை செய்துகொண்டுள்ளார். வீட்டுமுற்றத்திலுள்ள மரத்திலே நேற்றிரவு குறித்தநபர் தூக் கிட்டு தற்கொ லை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு பிள்ளைகளின் தந்தையும் 53 வயதுடையவருமான கந்தையா யோகலிங்கம் எனும் நபரே இவ்வாறு தற்கொ லை செய்துள்ளார். குடும்பத்தகராறு காரணமாக குறித்த நபர் தற்கொ லை செய்துள்ளதாக தெரியவந்துள்ளதுடன்,

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சட லத்தை மீட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சட லம் தற்போது உடற்கூற்று ஆய்வுக்காக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய சுற்றுலாப்பயணிகள்!!

விபத்து

வவுனியா ஈரப்பெரியகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்குணாமடுப்பகுதியில் இன்று(08.07) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பிலிருந்து சுற்றுலாப்பயணிகளை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் சென்ற சொகுசு பேருந்து கண்டி வீதி கல்குனாமடு பகுதியில் இன்று அதிகாலை 12.30 மணியளவில் வீதியைவிட்டு விலகி அருகிலுள்ள மின்கம்பத்துடன் மோதியுள்ளது.

இதன்போது சொகுசு பேருந்தில் பயணித்த பயணி ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சாரதிக்கு ஏற்பட்ட நித்திரையின் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றிருக்கலாம் என்றும் சம்பவ இடத்திற்குச் சென்று போக்குவரத்துப் பொலிசார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் புகையிரதம் மோதி நான்கு உயிர்கள் பரிதாபமாக பலி : புகையிரத இயந்திரமும் செயலிழந்தது!!

புகையிரதம் மோதி..

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கடுகதி புகையிரதம் மோதியதில் வவுனியாவில் நான்கு மாடுகள் உயிரி ழந்துள்ளன.

குறித்த கடுகதி புகையிரதம் இன்று மாலை 5.45 மணியளவில் வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது புகையிரத கடவையை ஊடறுத்துச் சென்ற மாட்டுக் கூட்டத்தில் மோதியது. இதில் 4 மாடுகள் உயிரி ழந்துள்ளன.

அத்துடன் குறித்த விபத்தினால் புகையிரத இயந்திரப் பகுதியும் செயலிழந்தமையால் புகையிரத பயணமும் நிறுத்தப்பட்டு திருத்த வேலை நடைபெறுகிறது. இதேவேளை குறித்த பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் இதே புகையிரதம் மோதி 6 மாடுகள் உயிரி ழந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் நட்சத்திர ஹோட்டல்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!!

உயிர்த்த ஞாயிறு தாக் குதலின் பின்னர் சுற்றுலா பயணிகளின் குறைவடைந்துள்ளமையினால் 10 அதிக சொகுசு ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளதாக இலங்கை ஹோட்டல் சங்கம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் நடந்த தாக் குதலின் பின்னர் பல ஹோட்டல்கள் சிரமங்களுக்குள்ளாகியுள்ளதாகவும், அதன் முடிவாக சில ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன.

ஊழியர்களுக்கு தொடர்ந்தும் சம்பளம் வழங்குவதில் பல்வேறு சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் சனத் உக்வத்த தெரிவித்துள்ளார்.

கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளின் சுற்றுலா பயணிகளின் வருகை காணப்பட்ட போதிலும், அவர்களில் அதிமானோர் அந்த நாடுகளில் வாழும் இலங்கையர்கள் என தெரியவந்துள்ளது.

ஹோட்டல்களை இவ்வாறு குறைந்த கட்டணத்தின் கீழ் நடத்தி செல்ல முடியாதெனவும், சில ஹோட்டல்கள் தங்களை தொடர்ந்தும் தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கின்றனர்.

எனினும் அந்த ஹோட்டல்களில் சேவை செய்யும் ஊழியர்களுக்கு உட்பட இலவசமாக உணவுகள் வழங்குவதற்கேனும் முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் முழுமை அடைந்த தெற்காசியாவின் அதிசயம்!!

தெற்காசியாவின் அதிசயம்

தெற்காசியாவில் மிகவும் உயர்ந்த கோபுரமாக கொழும்பில் அமைக்கப்பட்டு வரும் தாமரை கோபுர நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளன. கோபுரத்தின் நிர்மாண செயற்றிட்டத்தின் இறுதிக்கட்ட மேற்பார்வை நடவடிக்கைகள் தற்சமயம் முன்னெடுக்ப்பட்டு வருவதாக செயற்திட்ட ஆலோசகர் பேராசிரியர் சமித்த மானவடு தெரிவித்தார்.

2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆரம்பமான இந்த செயற்திட்டம் ஏழு ஏக்கர் நிலப்பரப்பில் முன்னெடுக்கப்பட்டது. இந்த கோபுரத்தின் உயரம் 356 மீற்றர்களாகும். இந்த கோபுரத்தின் கீழ்மட்ட 3 மாடிகள் வர்த்தக நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள 8 மாடிகளில் 2 மாடிகள் களியாட்ட நிகழ்வுகளுக்கும் தொலைத்தொடர்பு நடவடிக்கைகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாடியிலும் சுமார் 400 பேரை உள்ளடக்கக் கூடிய இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த கோபுரத்தில் 250 வாகனங்களை நிறுத்துவதற்கான தரிப்பிட வசதிகளும் உண்டு. தொலைத்தொடர்பு நெறிப்படுத்தல் ஆணைக்குழுவின் கீழ் இந்த நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு ராஜாங்க அமைச்சின் செயலாளரின் மேற்பார்வையில் இந்த நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரை கோபுரம் தெற்காசியாவின் அதிசயம் என பலராலும் வர்ணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

விமானியாக கனவு கண்ட இளம்பெண் : விமான விப த்திலேயே ப லியான சோகம்!!

இளம்பெண்

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் விமானியாக பெயர் எடுக்க வேண்டும் என கனவு கண்ட இளம்பெண் விமான விப த்திலேயே ப லியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள Starkville நகரில் பெற்றோருடன் குடியிருந்து வந்தவர் 18 வயதான லேக் லிட்டில்.

இவரே விமான விபத்தில் சிக்கி படுகாயத்துடன் மீட்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மர ணமடைந்தவர். லேக் லிட்டில் அவரது குடியிருப்பு பகுதியில் மிகவும் பிரபலமானவர் மட்டுமின்றி, நகரின் அழகிப் போட்டிகளில் கலந்துகொண்டு முக்கிய பட்டங்களை அள்ளியவர்.

விமான பயிற்சிக்கான உரிமம் பெற்றுள்ள லேக் லிட்டில், எதிர் காலாத்தில் அறியப்படும் விமானியாக வேண்டும் என கனவுடன் வாழ்ந்தவர். இந்த நிலையில் சனிக்கிழமை பயிற்சி மேற்கொள்ள குட்டி ரக விமானத்தில் பறந்தவர், விமானம் விபத்தில் சிக்கியதில் படுகாயத்துடன் மீட்கப்பட்டார்.

தொடர்ந்து மெம்ஃபிஸ் நகர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கே தீவிர சிகிச்சையில் இருந்தவர், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். லேக் லிட்டில், தெற்கு மிசிசிப்பி பல்கலைக்கழகத்தில் ஆடியோலஜி பிரிவில் கல்வி பயின்று வருகிறார்.