உயிரை பணயம் வைத்து லண்டன் விமானத்தில் திருட்டுப் பயணம் செய்தவரின் இன்றைய நிலை!!

விமானத்தில் திருட்டுப் பயணம்

விமானத்தின் சக்கரம் அமைந்துள்ள பகுதியில் ஒளிந்திருந்து லண்டனுக்கு திருட்டுப் பயணம் மேற்கொண்ட இளைஞரின் இன்றைய நிலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1996 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், இந்தியாவில் இருந்து இரு சகோதரர்கள் திருட்டுத்தனமாக ஒரு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் சக்கரம் அமைந்துள்ள பகுதியில் ஒளிந்திருந்து பிரித்தானியாவுக்குள் நுழைய திட்டமிட்டனர்.

அப்போது 22 வயதான பர்தீப் சைனி மற்றும் அவரது சகோதரர் 19 வயதான விஜய் ஆகிய இருவருமே, போயிங் 747 ரக ராட்சத விமானத்தில் திருட்டுப் பயணம் மேற்கொண்டவர்கள். 40,000 அடி உயரத்தில், -60C வெப்பநிலையில் சுவாஸிக்க ஆக்ஸிஜன் கூட அரிதான அந்த குட்டி அறையில் இந்த இரு இளைஞர்களும் சாகச பயணம் மேற்கொண்டனர்.

இந்திய தலைநகர் டெல்லியில் இருந்து லண்டனின் ஹீத்ரோ வரையான இந்த 11 மணி நேர சாகச பயணத்தில் பர்தீப் வெற்றி கண்டாலும் அவரது சகோதரர் விஜய் மரணமடைந்தார். விமானம் தரையிறங்கி சில மணி நேரங்களில் ஓடு தளத்தில் காலூன்றிய பர்தீப் குழப்பத்தில் இருந்துள்ளார். அவரை மீட்ட அங்குள்ள ஊழியர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தொடர்ந்து தீவிர சிகிச்சைக்கு பின்னர் அவரை தடுப்பு காவல் முகாமுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கேயே தமது சகோதரர் விஜய் இறந்த தகவலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த கொடூரமான நிலையில் விஜய் தாக்குப்பிடிக்க முடியாமல் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

விமானம் தரையிறங்க சக்கரங்களுக்கான பெட்டி திறக்கும்போது, தரையில் இருந்து 2,000 அடி உயரத்தில் இருந்து விஜயின் சடலம் விமானத்தில் இருந்து கீழே விழுந்துள்ளது. பின்னர் 5 நாட்கள் கடந்த பின்னரே ரிச்மண்ட், சர்ரே பகுதியில் இருந்து விஜய்யின் சடலத்தை மீட்டுள்ளனர். பர்தீப் கூட விமானம் புறப்பட்டு சில நிமிடங்களில் மயக்க நிலைக்கு சென்றுள்ளதாக அப்போது தெரிவித்திருந்தார்.

தற்போது வெம்ப்லி, வடக்கு லண்டன் பகுதியில் குடியிருக்கும் பர்தீப் சைனி நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பின்னரே பிரித்தானியாவில் குடியிருக்க அனுமதிக்கப்பட்டுள்ளார். மட்டுமின்றி, திருமணம் செய்து கொண்டு, இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான பர்தீப் சைனி, அவர் திருட்டுத்தனமாக நுழைந்த அதே ஹீத்ரோ விமான நிலையத்திலேயே சாரதியாக பணியாற்றி வருகிறார்.

இங்கிலாந்து ராணியிடம் பதக்கம் பெற இருந்த இந்திய வம்சாவளி பெண்ணுக்கு நடந்த கொடுமை!!

இந்திய வம்சாவளி பெண்

ஸ்காட்லாண்ட் காவல்துறையில் பணிபுரியும் இந்திய வம்சாவெளி பெண் மீது பாகுபாடு காட்டுவதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. Parm Sandhu என்ற 54வயதுடைய இந்திய வம்சாவெளி பெண் 1989ஆம் ஆண்டிலிருந்து ஸ்காட்லாண்ட் காவல் துறையில் பணியாற்றி வருகிறார். அந்நாட்டு காவல்துறையில் வெள்ளையர் அல்லாத இவர், தற்காலிக தலைமை கண்காணிப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் Parm sandhu, இங்கிலாந்து ராணியின் காவல்துறை பதக்கத்தைப் பெறுவதற்காக சட்டத்தை மீறி செயல்பட்டதாக சமீபத்தில் இவர் மீது தவறாக குற்றம் சுமத்தப்பட்டது. அந்தக் குற்றம் உண்மையல்ல என நிரூபித்த பிறகு தற்போது, காவல்துறையில் தனக்கு இன ரீதியிலான பாகுபாடு நிகழ்வதாக புகார் அளித்துள்ளார்.

இந்திய வம்சாவளி கருப்பினத்தவரான Parm sandhu இன ரீதியாக கடும் தாக்கபடுவதாகவும், வேலைவாய்ப்புகள், பதவி உயர்வு மறுக்கப்படுவதாகவும் காவல்துறை மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்நாட்டு விதிகளின்படி காவல்துறை அதிகாரிகள் தங்களுக்கு பதக்கம் வழங்குவது தொடர்பாக பிற காவலர்களிடம் தன்னை பரிந்துரைக்கக் கூறியோ, அதில் பங்களிக்கவோ, பதக்கத்தின் நிலை பற்றி அறிந்துகொள்ளவோ முயற்சி செய்யக் கூடாது.

ஆனால் sandhu , இங்கிலாந்து ராணி காவல்துறை பதக்கத்துக்காக சக காவலர்கள் தன்னை ஆதரிக்கும்படி கேட்டுக்கொண்டதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. தன் மீதான குற்றச்சாட்டிலும் உள்நோக்கம் உள்ளதாக sandhu தெரிவித்துள்ளார்.

23 வருடங்கள் வயிற்று வலியால் துடித்த பெண் : மருத்துவ அறிக்கையில் மருத்துவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

ரஷ்யாவில் 23 வருடங்கள் பெண் ஒருவர் வயிற்றில் கத்திரிக்கோலை சுமந்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவை சேர்ந்த எலீட்டா கோபீவாவுக்கு 1996 ஆம் ஆண்டு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அதிலிருந்து அவ்வப்போது அவருக்கு அடிவயிற்றில் ஏற்பட்டது. வலி வரும்போதெல்லாம் எலீட்டா மருத்துவர்களிடம் செல்வார். அதற்கு மருத்துவர்கள் தற்காலிக நிவரணி ஒன்றை வழங்குவர்.
இப்படி 23வருடங்களாக அவர் தொடர்ந்து இதை சந்தித்து வந்துள்ளனார்.

இந்நிலையில் ஒரு மருத்துவர் அவருக்கு ஈரலில் நோய் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு அடிக்கடி வயிற்றுவலி வந்திருக்கலாம் என்ற நோக்கிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இப்படி தொடர் வாடிக்கையாக நடந்து வந்த சூழலில், இறுதியாக ஒரு மருத்துவர் வயிற்றுப் பகுதியை எக்ஸ்ரே எடுக்குமாறு பரிந்துரைத்தார்.

எலீட்டாவுக்கு எக்ஸ்ரே பரிசோதனை செய்த சிறப்பு மருத்துவருக்கு தன் கண்களையே நம்ப இயலவில்லை. எலீட்டாவின் வயிற்றுக்குள் கத்தரிகோல் ஒன்று இருந்தது. எக்ஸ்ரே எடுக்கும் அறைக்குள் எலீட்டா கத்தரிகோலை தவறுதலாக எடுத்துச் சென்றிருக்கூடும் என்று நினைத்தார்.

ஆனால், உண்மையில் வயிற்றினுள்ளேதான் கத்தரி இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வயிற்றினுள் கத்தரிகோல் எப்படி வந்திருக்கக்கூடும் என்று மருத்துவர்கள் கேட்டபோது எலீட்டாவுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.

தனக்கு 23 ஆண்டுகளுக்கு முன்பு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்று கூறினார். அப்போது அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் கத்தரியை மறந்துபோய் எலீட்டாவின் வயிற்றுக்குள் வைத்துவிட்டது தெரிய வந்தது. 23 ஆண்டுகள் தேவையில்லாமல் வேதனைப்பட்டதற்கு எலீட்டாவுக்கு நஷ்ட ஈடு வழங்கவும் சம்மந்தபட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

11 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நேருக்குநேர் மோதும் கோஹ்லி-வில்லியம்சன் : உலகக்கோப்பையில் சுவாரஸ்ய நிகழ்வு!!

கோஹ்லி-வில்லியம்சன்

உலகக்கோப்பை தொடரில் 11 ஆண்டுகளுக்கு பின் கோஹ்லி தலைமையிலான அணியும், வில்லியம்சன் தலைமையிலான அணியும் மோத உள்ளன.

இங்கிலாந்து நடந்து வரும் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி 11 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த போட்டியை நினைவுபடுத்துகிறது.

அதாவது, கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை அரையிறுதியில், இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின. அப்போது விராட் கோஹ்லி இந்திய அணியின் தலைவராகவும், கேன் வில்லியம்சன் நியூசிலாந்து அணியின் தலைவராகவும் செயல்பட்டனர்.

அந்தப் போட்டியில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், 11 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் கோஹ்லியும், வில்லியம்சனும் மோத உள்ளனர்.

எனவே, நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இந்திய அணியை பழிதீர்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால், 2008ஆம் ஆண்டு நடந்த போட்டியில் இந்திய அணியில் விளையாடிய ஜடேஜாவும், நியூசிலாந்து அணியில் விளையாடிய டிம் சவுதியும் தற்போதைய உலகக்கோப்பை தொடரிலும் இருக்கின்றனர்.

மயக்க மருந்தை தடவி பெண் பொலிஸாருக்கு பாலி யல் தொல்லை!!

தொல்லை கொடுத்த சாமியார்

மதுரையில் மருந்து தடவி பாலி யல் தொல்லை கொடுத்ததாக சாமியார் உள்பட 4 பேர் மீது பெண் பொலிஸார் புகார் கொடுத்துள்ளார். மதுரையை சேர்ந்த 29 வயதான சந்தான லட்சுமி என்கிற பெண் பொலிஸார் தல்லாகுளம் காவல்நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும், சீனிவாச பெருமாள் என்பவருக்கும் கடந்த 2007–ம் ஆண்டு திருமணம் முடிந்து ஒரு பெண், ஒரு ஆண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவன்- மனைவி இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 9 மாதங்கள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் அவருடைய கணவர் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

அதனை தீர்த்து வைப்பதற்காக தனது சமூகத்தை சேர்ந்த தலைவர் ஒருவரான பூமிநாதன் என்பவரின் உதவியை சந்தான லட்சுமி நாடியுள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பூமிநாதன், ஆறுமுகம் என்பவருடன் சேர்ந்து ஒரு லட்சம் ரூபாய்க்கு மேலாக பணம் பெற்றுள்ளார். இந்நிலையில் சாமியார் உள்பட 3 பேர் தனக்கு பாலி யல் தொல்லை கொடுத்ததாக சந்தான லட்சுமி மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில், கேரளாவை சேர்ந்த ஜோதி என்கிற சாமியார் பூஜை நடத்தினால், கணவருடன் இருக்கும் பிரச்னை சரியாகிவிடும் என பூமிநாதன் கூறியிருந்தார். இதற்காக நான் என்னுடைய கணவரின் சட்டை, காலடி மண் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அவர்கள் கூறிய இடத்திற்கு சென்றேன்.

நாங்கள் நான்கு பேரும் காரில் சென்றுகொண்டிருந்த சமயத்தில் சாமியார் ஒருவிதமான மையை என் மீது தடவினார். இதனால் நான் மயக்கமடைந்து விட்டேன். பின்னர் விழித்து பார்த்தபோது என்னுடைய ஆடைகள் கலைந்திருந்தன.

நான் பாலி யல் ரீதியாக துன்புறுத்தப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்ததும், பூமிநாதனுடன் சண்டையிட்டு அங்கிருந்து வந்துவிட்டேன். அப்போது பூமிநாதனின் தந்தை எனக்கு போன் செய்து, இந்த சம்பவம் குறித்து வெளியில் கூறினால், கஞ் சா வியாபாரிகளை வைத்து என்னை கொ லை செய்துவிடுவதாக மிரட்டினார் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட மாநகர காவல் ஆணையர், இதுகுறித்து விசாரணை நடத்தி சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் தமிழ்ப் பெண்களுக்கு நடந்த கொடுமை!!

துபாயில் வீட்டில் அடைத்து வைத்து சித் ரவதை செய்யப்பட்ட தமிழக பெண்கள் இரண்டு பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரின் மனைவி வீரம்மாள் (28). இந்த தம்பதியினருக்கு 14 வயதில் மகள் உள்ளார். ராதாகிருஷ்ணன் வேலை இல்லாமல் வீட்டில் இருந்ததால், குடும்பத்தை வறுமை சோதித்து பார்த்துள்ளது.

இந்த நேரத்தில் வீரம்மாளை தொடர்பு கொண்ட ஒரு பெண் ஏஜென்ட், துபாயில் சமையல் வேலை வாங்கி தருகிறேன். கைநிறைய சம்பளம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
அதில் மயங்கிய வீரம்மாள் சுற்றுலா விசாவில் அவருடன் துபாய்க்கு சென்றுள்ளார்.

அங்கு பல்வேறு வீடுகளில் வேலை செய்த வீரம்மாள் மாதம் 900 திர்ஹாம் (இந்திய மதிப்பில் சுமார் 17 ஆயிரம் ரூபாய்) சம்பளமாக பெற்றுள்ளார். வீரம்மாளின் பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக்கொண்ட பெண் ஏஜென்ட், தினமும் காலை 3 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை வேலை செய்யுமாறு கொடுமைப்படுத்தியுள்ளார்.

இதனால் உடல்நிலை சரியில்லாமல் போன வீரம்மாளை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து வேலை செய்ய வற்புறுத்தி வந்துள்ளார். அங்கு ஒரு வீட்டினுள் பல பெண்களுடன் சேர்த்து வீரம்மாளையும் அடைத்து வைத்து சித் ரவதை செய்ய ஆரம்பித்துள்ளார்.

இதற்கிடையில் இந்திய ஓட்டுநர் ஒருவரின் உதவியுடன் அங்கிருந்து தப்பிய வீரம்மாள், இந்திய தூதரகத்தில் தஞ்சம் புகுந்து தனக்கு நடந்த கொடுமை பற்றி கூறியுள்ளார். தூதரக அதிகாரி ஸ்மிதா பாண்ட் தலைமையிலான குழு வீரம்மாளுக்கு தேவையான உதவிகளை செய்தனர்.

இந்த சம்பவம் அறிந்த ஏஜென்ட் அங்கிருந்து தப்பி தமிழகத்திற்கு தப்பி ஓடிவந்துள்ளார். அவரை கண்டுபிடிப்பதற்கான வேலைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோன்று பாதிக்கப்பட்ட மற்ற பெண்களையும் மீட்க அமீரக அரசு உதவியை அதிகாரிகள் நாடியுள்ளனர்.

இந்த நிலையில் வீரம்மாளுடன் சேர்ந்து தமிழகத்தை சேர்ந்த லோகேஷ்வரி என்கிற பெண்ணும் மீட்கப்பட்டுள்ளனர். விரைவில் இருவரும் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை அதிரவைத்த இரட்டைக் கொ லை : பைக்கில் வந்த 4 பேரைத் தேடும் பொலிஸ்!!

4 பேரைத் தேடும் பொலிஸ்

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பைக்கில் சென்ற இரண்டு இளைஞர்களை வெ ட்டி கொ லை செய்த 4 பேர் கொண்ட கும்பல் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொ லையாளிகள் விட்டுச் சென்ற பைக்கை கைப்பற்றிய பொலிசார் சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து விசாரித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் பகுதியை சேர்ந்த அஜித்(19) என்பவரும் வண்டி குடியிருப்புப் பகுதியை சேர்ந்த அர்ஜுன்(17) என்பவரும் நண்பர்கள். இந்த நிலையில் நண்பர்கள் இருவரும் இன்று நாகர்கோவிலை அடுத்த பறக்கை சி.டி.என்.புரம் பகுதியில் பைக்கில் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது இவர்கள் பைக் மீது இரண்டு பைக்குகளில் வந்த 4 பேர் திடீரென மோதினர். கீழே விழுந்த அஜித் மற்றும் அர்ஜுன் ஆகியோர் சுதாரிப்பதற்கு முன், அவர்கள் நால்வரும் அரி வாளால் சரமாரியாக வெட் டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த இருவரையும் அப்படியே விட்டுவிட்டு அந்த கும்பல் தப்ப முயன்றுள்ளனர்.

அப்போது பொதுமக்கள் அங்கு கூடியதால் ஒரு பைக்கை அந்த இடத்தில் விட்டுவிட்டு மற்றொரு பைக்கில் ஏறி நால்வரும் தப்பியுள்ளனர். இதனிடையே படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே மர ணமடைந்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிசார்,

கிரிக்கெட் விளையாட்டின்போது கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சிலருடன் அஜித் மற்றும் அர்ஜுனுக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், அந்த முன்விரோதம் காரணமாக அவர்கள் கொ லை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி காதல் விவகாரம் காரணமாகவும் இந்த கொ லை நடந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. கொ லை நடந்த இடத்தில் கொ லையாளிகள் விட்டுச் சென்ற பைக்கின் விபரங்களை சேகரித்து, அதன் அடிப்படையில் மூன்றுபேரை பிடித்து விசாரணை நடத்திவருவதாக காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

செல்போன் பேச்சால் விபரீதம் : கிணற்றுக்குள் 3 நாட்களாக உயிருக்கு போராடிய இளைஞர்!!

இந்திய மாநிலம் கேரளாவில் கிணற்றங்கரையில் நின்று செல்போனில் பேசி இளைஞர் தவறி விழுந்து 3 நாட்கள் உயிருக்கு போராடிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வெம்பாயம் பகுதியைச் சேர்ந்தவர் 38 வயதான பிரதீப். தாயார் சரளாவுடன் வசித்து வரும் இவர் கடந்த புதன்கிழமை மாலை அவரது வீட்டின் அருகில் உள்ள கிணற்றங்கரையில் நின்று செல்போனில் பேசி கொண்டிருந்தார்.

அப்போது திடீரென்று அந்த கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். கிணற்றில் 2 அடி தண்ணீர்தான் இருந்துள்ளது. இதனால் அவர் உயிர்தப்பினார். ஆனால் அந்த கிணற்றில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்துள்ளார்.

அக்கம் பக்கத்தில் குடியிருப்புகள் ஏதும் இல்லாததால் இவரது அலறல் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை என கூறப்படுகிறது. நீண்ட நேரமாக சத்தம்போட்டதால் தளர்ச்சியடைந்து பிரதீப் மயக்கமிட்டு சாய்ந்துள்ளார்.

3வது நாளான நேற்று அவ்வழியாக சென்ற ஒருவர், கிணற்றில் இளைஞர் ஒருவர் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் கிணற்றில் இருந்து மீட்டுள்ளனர். சம்பவத்தின் போது பிரதீபின் தாயார் சரளா அவரது உறவினர்களை சந்திக்க வெளியூர் சென்றதாக கூறப்படுகிறது.

வெளிநாட்டில் இருந்து வந்த மனைவியை கொடூ ரமாக கொ லை செய்த கணவன்!!

நீண்ட காலமாக முரண்பாடு..

வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த மனைவியை கத் தியால் குத்தி கொ லை செய்த கணவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். குறித்த இருவருக்கும் இடையில் நீண்ட காலமாக முரண்பாடு காணப்பட்டுள்ளதாக ஹசலக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹசலக பிரதேசத்தை சேர்ந்த 42 வயதான ஸ்ரீயானி தயாரத்ன என்ற 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொ லை செய்யப்பட்டுள்ளார். கத்தி குத் துக்கு இலக்கான மனைவி சம்பவ இடத்திலேயே உயிரி ழந்த நிலையில், அவரது சட லத்தை வயல் வெளியில் வைத்து எரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து இரண்டு வருடங்களுக்கு பின்னர் நாடு திரும்பிய மனைவியே இவ்வாறு கொல் லப்பட்டுள்ளார். தாயகம் திரும்பிய பெண், வீட்டிற்கு செல்லாமல் தனது தாயாரின் கம்பளை வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு ஒரு வாரம் தங்கியிருந்த அவர் தனது தாயாருடன் நேற்று முன்தினம் கணவரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

நேற்று காலை தாயாரை கண்டி பேருந்தில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பி வைத்த நிலையில் கணவருடன் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் போது கணவர் மனைவியை கத்தியால் கு த்தி கொ லை செய்துள்ளார். சரணடைந்த கணவன் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

மீண்டும் இலங்கையில் வசமாக சிக்கிய நூற்றுக்கணக்கானோர்!!

சிக்கிய நூற்றுக்கணக்கானோர்

நாடு பூராகவும் நேற்று முன்தினத்திலிருந்து நேற்று வரையான 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது நூற்றுக்கணக்கான சாரதிகள் சிக்கியுள்ளனர்.

இதன்போது ம து போ தையில் வாகனம் செலுத்திய 433 பேரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 6 மணி முதல் நேற்று அதிகாலை 6 மணி வரை நடத்தப்பட்ட சோதனையில் ம து போ தையில் வாகனம் ஓட்டிய 363 சாரதிகளை பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் திடீரென தரையிறக்கிய அதிவிசேட விமானம் : காரணம் என்ன?

அதிவிசேட விமானம்

அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய விமானம் ஒன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. உயர் தொழினுட்பத்துடன் கூடிய ZS-ASN ரகத்திலான The Basler BT-67 என்ற விமானமே தறையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விமானம் ஒரே நேரத்தில் 1000 மீற்றர் உயரத்தில் இருந்து நிலத்தை துல்லியமாகவும் மேலோட்டமாகவும் படம் பிடிக்கக்கூடியது. 3 நாட்கள் திட்டத்துக்காக குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவில் இருந்து இலங்கைக்கு வந்துள்ள குறித்த விமானம் எதிர்வரும் 09 ஆம் திகதி இந்தியா நோக்கி செல்லவுள்ளது. இந்தியாவுக்கு செல்லவுள்ள குறித்த விமானத்தின் பயணப்பாதை இலங்கை வழியாக திட்டமிடப்பட்டுள்ளமை அடுத்து குறித்த விமானம் இன்று தரையிறங்கியுள்ளது.

எனினும் குறித்த விமானத்தின் வருகை தொடர்பில் தாம் அறிந்திருக்கவில்லை எனவும், நாட்டில் எவ்வித கண்காணிப்பு நடவடிக்கைக்கும் அனுமதி வழங்கப்படவில்லை எனவும் புவிசரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

மலிங்க சிறந்த மேட்ச் வின்னர் : அவரை கிரிக்கெட் உலகம் இழக்கும் : ரோஹித் ஷர்மா நெகிழ்ச்சி!!

ரோஹித் ஷர்மா நெகிழ்ச்சி

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவுடன் சிறப்பான நட்பு இருப்பதாகவும், அவர் சிறந்த மேட்ச் வின்னர் என்றும் இந்திய அணியின் துணைத்தலைவர் ரோஹித் ஷர்மா நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை தொடரில், இலங்கை அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணியை எதிர்கொண்டது. முதலில் ஆடிய இலங்கை 7 விக்கெட் இழப்புக்கு 264 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இந்திய அணி ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுலின் அபார சதத்தினால் 3 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

அத்துடன் லசித் மலிங்காவின் உலகக்கோப்பை வாழ்க்கை முடிவுக்கு வந்தது. ரோஹித் ஷர்மா உலகக்கோப்பையில் 5 சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இந்நிலையில் நேற்றைய போட்டி குறித்து ரோஹித் ஷர்மா கூறுகையில், ‘இந்தச் சாதனைகளை நினைத்ததில்லை. வழக்கம்போல் மைதானத்திற்கு சென்று ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தினேன். நன்றாக விளையாடினால், இதெல்லாம் நடக்கும் என்று எனக்குத் தெரியும்.

ஆடும்போது, ஷாட்களை தெரிவு செய்வது முக்கியம். அதை எனக்குள்ளேயே கூறிக்கொண்டேன். அடிக்கக் கூடிய ஷாட்களை மட்டுமே தெரிவு செய்து ஆடினேன், முந்தைய தவறுகளில் இருந்து கற்ற பாடம் இது’ என தெரிவித்துள்ளார்.

மலிங்கா குறித்து அவர் கூறுகையில், ‘அவர் இலங்கைக்கும், மும்பை இந்தியன்ஸுக்கும் சாம்பியன் பந்துவீச்சாளராக இருந்திருக்கிறார். அவர் சிறந்த மேட்ச் வின்னர். அவருக்கும் எனக்கும் சிறப்பான நட்பு இருக்கிறது. நெருக்கமாகப் பார்த்திருப்பதால் கூறுகிறேன், அவரை கிரிக்கெட் உலகம் நிச்சயம் இழக்கும்’ என தெரிவித்தார்.

மேலும், கிரிக்கெட்டில் ஒவ்வொரு நாளும் புதிய நாள் தான். ஒவ்வொரு போட்டியையும் புதிதாகவே பார்ப்பதாகவும், ஆனால் தன்னைச் சுற்றி இருப்பவர்கள் சதத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பதாகவும் ரோஹித் ஷர்மா குறிப்பிட்டார்.

விடைபெற்றார் லசித் மலிங்க!!

லசித் மலிங்க

2019 உலகக் கோப்பை தொடருடன் இலங்கை நட்சத்திர பந்து வீச்சாளர் லிசித் மலிங்காவின் உலகக் கோப்பை வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. நேற்று லீட்ஸ் மைதானத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான போட்டியே உலகக் கோப்பை தொடரில், மலிங்காவின் கடைசி போட்டியாகும். இப்போட்டியில், இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வியடைந்தது.

இப்போட்டியில், 10 ஓவர்கள் வீசிய மலிங்கா 82 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார். இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் 55 விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரமை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்தை பிடித்தார் மலிங்க.

இப்பட்டியலில் 71 விக்கெட்களுடன் அவுஸ்திரேலியா வீரர் க்ளென் மெக்ராத் முதலிடத்திலும், 68 விக்கெட்டுகளுடன் இலங்கை வீரர் முரளிதரன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். 56 விக்கெட்டுகளை வீழ்த்திய மலிங்கா, 3 வது அதிக விக்கெட் கைப்பற்றிய வீரராக தனது உலகக் கோப்பை வாழ்க்கையை முடித்தார்.

இராணுவ வாகனம் விபத்து : 10 இராணுவ வீரர்கள் வைத்தியசாலையில் அனுமதி!!

இராணுவ வாகனம் விபத்து

நிந்தவூர் – அல்லிமூலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தி 10 இராணுவீரர்கள் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. வேகமாக வந்துகொண்டிருந்த இராணுவ வாகனம் வீதியின் குறுக்கே பாய்ந்த ஆடொன்றினைபாதுகாக்க முற்படுகையில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விசேட கடமைக்காக அக்கரைப்பற்று பகுதியில் இருந்து கல்முனை நோக்கி செல்லும் போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் வாகனத்தில் சென்ற 10 இராணுவ வீரர்களும் காயமடைந்த நிலையில் பல்வேறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, குறித்த விபத்தினை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர்களின் கமராக்கள் பறிமுதல் செய்யப்பட்டு படங்கள் இராணுவ வீரர்களினால் அழிக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், சில ஊடகவியலாளர்களுக்கு நேரடி அச்சுறுத்தல் இராணுவ அதிகாரிகளினால் விடுக்கபட்டதாகவும் அவர் கூறினார். விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-தமிழ்வின்-

யாழில் இருந்து விமான சேவைகளுக்கான கட்டணங்கள் குறைப்பு?

யாழில் இருந்து விமான சேவை

யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ள விமானப் போக்குவரத்துக்கான கட்டணத்தை குறைந்த செலவில் மேற்கொள்வதற்கு தாம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

நிதியமைச்சினூடாக குறிப்பிட்டதொகை நிதிப் பங்களிப்புடன் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு தாம் தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டிருந்த அவர்,

“2015க்கு பின்னர் வடக்கில் அதிகளவான அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதில் எமது அரசாங்கம் ஆர்வமாக இருந்துவருகிறது. துறைமுக அமைச்சராக இருந்தபோது காங்கேசந்துறை துறைமுகத்தின் மேம்பாடு குறித்து கூடிய கவன செலுத்தினேன். அதற்கு ஒரு நல்ல வாய்ப்பும் கிடைத்தது. மேலும் எமது பிரதமர் இந்திய அரசுடன் கிழமைக்கு ஒரு தடவையேனும் சந்தித்து நாட்டின் அபிவிருத்தித் திடங்கள் குறித்து கலந்துரையாடல்கள் மேற்கொண்டுவருகிறார்.

அதன் ஒரு வெளிப்பாடே இந்த விமான நிலையத் தரமுயர்வு. இந்த விமான நிலையத்தின் மூலம் இந்தியாவுக்கு மிகக் குறுகிய நேரத்தில் பயனம் செய்வதற்கான வழி கிடைத்துள்ளது. இந்தியாவிடமிருந்து ஒருதொகை புகையிரதங்களைக் கொள்வனவு செய்கிறோம்.

அதில் ஒன்றை வடக்குக்கு வழங்கியிருந்தோம். இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் வேண்டுகோளுக்கிணங்க இந்த விமானப் போக்குவரத்துக்கான கட்டணக் குறைப்பு தொடர்பில் நான் கவனமெடுப்பேன். நிதியமைச்சினூடாக இதற்கான ஒரு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற ரயிலில் ஏற்பட்ட விபரீதம்!!

ஏற்பட்ட விபரீதம்

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்ட ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை கிளிநொச்சி 155ம் கட்டை பகுதியிலுள்ள ரயில் தண்டவாளத்தில் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. எனினும் அவரின் விபரங்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

கிளிநொச்சி 155ம் கட்டை பகுதியிலுள்ள ரயில் தண்டவாளத்தில் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.