இலங்கையில் விரியன் பாம்பை பயன்படுத்தி மனைவியின் கதையை முடிக்க திட்டம் போட்ட கணவன் தப்பியோட்டம்!

கணவன் தப்பியோட்டம்

கம்பஹா பிரதேசத்தில் பெண்ணொருவரின் உடம்பில் விரியன் பாம்பை போட்டு தீண்ட செய்து கொ ல்ல முயற்சித்த பெண்ணொருவரை கம்பஹா தலைமையக பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண், பெண்ணின் கணவருடன் தவறான உறவில் இருந்து வந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கடந்த 30ஆம் திகதி பாம்பாட்டி ஒருவருக்கு 25 ஆயிரம் ரூபாயை வழங்குவதாக உறுதியளித்து, விரியன் பாம்பு ஒன்றை கொண்டு வருமாறு கூறி, அந்த நபரை பயண்படுத்தி, குறித்த பெண்ணின் மீது இரண்டு முறை பாம்பை போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சம்பவத்தில் பெண்ணுக்கு எந்த பாதிப்பு ஏற்படாது அவர் தப்பித்துள்ளார். பாம்பாட்டியை கம்பஹா பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியுள்ளதுடன் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதற்கு உடந்தையாக இருந்த பெண்ணின் கணவரான 54 வயதான நபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். அவரை கைது செய்ய விசாரணை நடத்தப்பட்ட போது, அந்த நபருடன் தவறான உறவை வைத்திருந்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கம்பஹாவை சேர்ந்த 42 வயதான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தான், குறித்த நபர் நடத்தி வரும் காலணி தயாரிப்பு தொழிற்சாலையில் உதவியாளராக இருந்து வருவதாகவும் அவரது வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளதாகவும் இந்த பெண் விசாரணைகளின் போது கூறியுள்ளார்.

பெண்ணை கொ லை செய்யும் முயற்சியுடன் இந்த பெண்ணுக்கு தொடர்பு உள்ளதா என்பதை அறிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட பெண் இன்று நீதவான் முன்னிலையில், ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார். தப்பிச் சென்றுள்ள நபரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நடுக்கடலில் மாயமான நான்கு மீனவர்கள் : அச்சத்தில் உறவினர்கள்!!

அச்சத்தில் உறவினர்கள்

பாம்பன் வடக்கு கடற்கறை பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்கள் தொடர்பில் மூன்று நாட்களாகியும் எந்தவித தகவலும் கிடைக்காமையினால் மீனவர்களின் உறவினர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் 60இற்கும் குறைவான நாட்டுபடகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இவர்கள் மீன்பிடித்துவிட்டு வழக்கம் போல் மறுநாள் காலை கறைத் திரும்ப வேண்டிய நிலையில் இன்று வரை நான்கு மீனவர்கள் கறை திரும்பவில்லை.

ஸ்டீபன், அந்தோனி, வின்சன்ட், சின்தாஸ் ஆகிய நான்கு மீனவர்களே இவ்வாறு கரை திரும்பவில்லை எனத் தெரியவந்துள்ளது. இதனையடுத்து திரும்பாத மீனவர்களை மீன்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று கடந்த இரண்டு நாட்களாக சக மீனவர்கள் தேடி வருகின்றனர். ஆனால், மாயமான மீனவர்கள் நிலை குறித்து இதுவரை தகவல்கள் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் மூன்று நாட்களாக கரை திரும்பாத மீனவர்களை பத்திரமாக உயிரோடு மீட்டுத் தர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்க அமைப்புகள் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலுக்கு மீன் பிடிக்க சென்று கடல் சீற்றத்தால் மீனவர்கள் கடலில் காணமல் போன சம்பவம் மீனவ கிராமங்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ். கடற்பரப்பில் நடந்த விபரீதம் : பத்துபேர் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்பு!!

கடற்பரப்பில் நடந்த விபரீதம்

யாழ்ப்பாணம் கரம்பனில் இருந்து அனலதீவிற்கு படகில் செல்லும் போது குறித்த படகு விபத்திற்குள்ளானதுடன், அதிலிருந்த பயணிகள் பத்து பேர் கடற்படையினரினால் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கரம்பன் கரையிலிருந்து 1.5 கடல் மைல் தொலைவில் உள்ள கடலில் வைத்து படகின் கயிறு புரொப்பல்லருடன் சிக்கியதன் காரணமாக இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து கடற்படைக்கு அறிவிக்கப்பட்ட பின்னர், ஒரு கடற்கரை ரோந்து கைவினை மற்றும் வடக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட ஒரு டிங்கி படகு உதவிக்காக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது.

விரைவாக அந்த இடத்தை அடைந்த கடற்படை வீரர்கள், படகு உரிமையாளர் மற்றும் அதன் உதவியாளருடன் 08 பயணிகளை மீட்டு பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வந்தனர்.

இலங்கையில் யாசகம் பெறும் பெண் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல் : சொந்தமாக இத்தனை வீடுகளா?

யாசகம் பெறும் பெண்

இலங்கையில் 25 வருடங்களாக யாசகம் பெற்ற பெண்ணொருவரின் சொத்து மதிப்பு தொடர்பில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது. கம்பஹா நகரிலுள்ள ரயில் நிலையங்களில் 25 வருடங்களாக யாசகம் பெற்று வந்த பெண்ணுக்கு பல்வேறு சொத்துக்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

65 வயது பெண்ணுக்கு சொந்தமாக 3 வீடுகள் உள்ளதாகவும், அவரது வங்கிக் கணக்கில் பல இலட்சம் ரூபா பணம் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. குறித்த யாசகம் பெறும் பெண் ரயில்வே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார். இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது இந்த விடயங்கள் தெரிய வந்துள்ளது.

யாசகம் பெறுவது தனது மகள்களுக்கும் தெரியும் என்றும், அவரது மருமகன்கள் நல்ல வேலைகளில் இருப்பதாகவும் குறித்த பெண் தெரிவித்துள்ளார். வயோதிப பெண் கைது செய்யப்பட்ட நிலையில் மகள்களில் ஒருவர் வந்து அவரை பார்த்துச் சென்றதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

கம்பஹா மற்றும் கோட்டை ரயில் நிலையங்களில் யாசம் பெறும் அவர், நாள் ஒன்றுக்கு சுமார் 4000 ரூபாவும் மாதத்திற்கு 150,000 ரூபா பெறுவதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த 25 வருடங்களாக யாசகம் பெற்ற பணத்தில் 3 வீடுகளையும் கட்டியதாகத் தெரிவித்துள்ளார். அவற்றில் 2 வீடுகளை அவரது மகள்களுக்கு வழங்கியுள்ளதாகவும் மூன்றாவது வீட்டை வாடகைக்கு விட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. அத்துடன் அவரது வங்கிக் கணக்கில் ஐந்து இலட்சம் ரூபா பணம் இருப்பதும், தெரியவந்துள்ளது.

வீட்டு மொட்டை மாடியில் தனியாக படுத்திருந்த திருமணமான இளம்பெண் : நள்ளிரவில் நடந்த சம்பவம்!!

நள்ளிரவில் நடந்த சம்பவம்

உத்தரபிரதேசத்தில் திருமணமானதை மறைத்த இளம்பெண்ணை அவர் குடும்பத்தார் சுட் டு கொ ன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் நொய்டாவை சேர்ந்தவர் நிஷா. இவர் சுனில் என்பவரை காதலித்து வந்த நிலையில் கடந்தாண்டு ஜூன் மாதம் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் தனக்கு திருமணமான விடயத்தை சில மாதங்களுக்கு முன்னர் குடும்பத்தாரிடம் நிஷா கூறினார். ஆனால் நிஷாவும், சுனிலும் தூரத்து உறவினர்கள் என்பதால் நிஷா குடும்பத்தார் இந்த திருமணத்தை ஏற்க முடியாது என கூறிவிட்டனர். இந்நிலையில் நேற்றிரவு நிஷா தனது வீட்டு மொட்டை மாடியில் சென்று தனியாக படுத்தார்.

அப்போது நள்ளிரவில் அங்கு வந்த குடும்பத்தாருக்கும் அவருக்கும் சண்டை ஏற்பட்ட நிலையில் திடீரென அவரை யாரோ துப் பாக்கியால் சுட் டுள்ளனர். பின்னர் சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த பொலிசார் உயி ருக்கு போரா டிய நிஷாவை மருத்துவமனைக்கு தூக்கிச்சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரி ழந்துவிட்டது தெரியவந்தது.

இதையடுத்து சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணையை தொடங்கினார். நிஷா கணவர் சுனில் கூறுகையில், நிஷா தந்தை என்னிடம், நான் சொந்த வீடு கட்டினால் நிஷாவுடன் வாழ அனுமதிப்பதாக கூறினார். ஆனால் நான் அதை செய்தும் அவர் குடும்பத்தார் எங்களை வாழ அனுமதிக்கவில்லை.

நிஷாவின் பெற்றோர், சகோதரர்கள் தான் அவளை கொன்றுவிட்டதாக கூறினார். பொலிசார் கூறுகையில், நிஷாவுக்கு சுனில் தூரத்து உறவினர் ஆவார், இதனால் தான் நிஷா குடும்பத்தார் அவர் திருமணத்தை ஏற்கவில்லை. சம்பவம் தொடர்பாக 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம் என கூறியுள்ளனர்.

காதல் திருமணத்தால் இந்தியாவை பரபரப்பாக்கிய இளம்பெண்ணின் புதிய முயற்சி!!

இளம்பெண்ணின் புதிய முயற்சி

மதம் மாறி திருமணம் செய்துகொண்டதால் இந்தியா முழுக்க பரபரப்பாக பேசப்பட்ட இளம்பெண் ஹாதியா கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் மருத்துவமனை தொடங்கியுள்ளார்.

இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஹாதியா, தமிழகத்தில் உள்ள சேலம் ஓமியோபதி கல்லூரியில் படித்து வந்தார். அப்போது அவர் கேரளாவை சேர்ந்த ஷெபின் ஜஹான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து பெண்ணின் தந்தை அசோகன் தனது மகளை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்துள்ளனர் என்று கேரளா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் திருமணத்துக்கு தடை விதித்தது.

இவர்கள் காதல் திருமணம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஹாதியா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை.

எனது விருப்பத்தின் பேரில் காதலித்து திருமணம் செய்து கொண்டேன். எனது திருமணத்தை அங்கீகரித்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று முறையிட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஹாதியா, ஷெபின் ஜஹான் திருமணத்தை அங்கீரித்தது. மேலும் சேலத்தில் படிப்பு முடியும் அவரை அவருக்கு பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டது.

இந்நிலையில் மருத்துவ படிப்பை முடித்த ஹாதியா கேரள மாநிலம் மலப்புறத்தில் உள்ள ஒட்டுகுங்கலில் கிளினிக் தொடங்கினார். அந்த கிராம பஞ்சாயத்து தலைவர் கிளினிக்கை திறந்து வைத்தார். தனது மனைவி மருத்துவமனை தொடங்கியது குறித்து அவரது கணவர் ஷெபின் ஜஹான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தீ விபத்தில் கொல் லப்பட்ட தாய், மகள் : சொத்துக்காக பெற்றோரே திட்டமிட்ட சதி அம்பலம்!!

சதி அம்பலம்

தமிழகத்தின் சத்தியமங்கலம் அருகே தாளவாடி மலைப்பகுதியில் குடிசை தீப்பிடித்து எரிந்து, தாய் மகள் கொல் லப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 4 பெண்கள் உட்பட அவர்களின் 7 உறவினர்களை தாளவாடி பொலிசார் கைது செய்துள்ளதில், இந்த சதியின் பின்னணி அம்பலமாகியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதி கிராமத்தைச் சேர்ந்தவர் 40 வயதாகும் ராஜம்மாள். கணவர் நாகண்ணா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் ராஜம்மாள் விவசாயக் கூலி வேலை செய்து வந்துள்ளார்.

இவருக்கு மாதேவ பிரசாத்(20) என்ற மகனும் கீதா(18) என்ற மகளும் உள்ளனர். ராஜம்மாள் தனது மகள் மற்றும் மகனுடன், அதே ஊரில் உள்ள தனது தாய் தந்தை வசித்து வந்த வீட்டில் இருந்தபடி கூலி வேலைக்கு சென்று வந்தார். இதனிடையே கடந்த 10 நாட்களுக்கு முன்பு ராஜம்மாள், அதே ஊரில் ஒதுக்குப்புறமாக உள்ள தனது இடத்தில் தனியாக குடிசை அமைத்து குடியேறியுள்ளார்.

மகன் மாதேவ பிரசாத் கடந்த 3 தினங்களுக்கு முன்பு கேரளாவிற்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுவிட்டார். இந்நிலையில் ராஜம்மாளின் குடிசை வீடு முற்றிலும் தீப்பிடித்து எரிந்த நிலையில் ராஜம்மாள், கீதா இருவரும் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த தாளவாடி பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தபோது இருவரின் உடல்களும் தீயில் கருகிய நிலையில் இருந்தது. இதனால் சம்பவ இடத்தில் வைத்து பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக உயிரிழந்தவர்களின் உறவினர்களை சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் விசாரித்துள்ளனர்.

அப்போது சொத்து பிரச்னை காரணமாக குடிசை வீட்டில் தீ வைத்து இருவரும் கொல் லப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக ராஜம்மாளின் தந்தை, ராஜம்மாளின் தாயார் சிவமல்லம்மா, ராஜம்மாளின் மாமியார் தொட்டமாதம்மா, ராஜம்மாளின் தம்பி பிரேஸ்,

உறவினர்கள் மாதேவம்மா, நாகரத்தினா, லிங்கராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். உயி ரிழந்த ராஜம்மாள், கீதாவுக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை அபகரிக்க தீவைத்து கொல்லப்பட்டதாக வாக்குமூலத்தில் அவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்த போது தாயை கண்டு அதிர்ந்த மகன் விவகாரத்தில் அதிரடி திருப்பம்!!

தாயை கண்டு அதிர்ந்த மகன்

தமிழகத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண் கழு த்தறுத்து கொல் லப்பட்டதாக முதலில் கூறப்பட்ட நிலையில் அது தற் கொ லை என தற்போது தெரியவந்துள்ளது. ஊட்டியை சேர்ந்தவர் உமா. இவர் தனது கணவர் பசுவராஜுடன் வசித்து வந்த நிலையில் கருத்துவேறுபாட்டால் கணவரை சில காலத்துக்கு முன்னர் பிரிந்தார்.

இதையடுத்து தனது மகன்களான உமாசங்கர் மற்றும் அபிஷேக்குடன் வசித்து வந்தார். உமாசங்கருக்கு கோவையில் வேலை கிடைத்ததால் அங்கு சென்றுவிட்டார். இளைய மகன் அபிஷேக் தனியார் காட்டேஜ் ஒன்றில் பார்ட் டைம் வேலை இரவு நேரங்களில் பார்க்கிறார்.

இந்நிலையில் வழக்கம்போல, 2 தினங்களுக்கு முன்பு வேலைக்கு சென்றுவிட்டு, மறுநாள் காலை அபிஷேக் வீட்டுக்கு வந்தார். அப்போது உமாவின் கழு த்து அறு பட்டு, சடலமாக கிடப்பதை கண்டு அலறினார். உடனடியாக இது குறித்து அவர் பொலிசாருக்கு தகவல் சொல்ல, மோப்ப நாயுடன் விசாரணை ஆரம்பமானது.

வீட்டிற்குள் எந்த பொருளுமே திருடு போகவில்லை என்பதால், இந்த கொ லையை கொள்ளையர்கள் செய்திருக்க வாய்ப்பில்லை என்பது தெரிய வந்துள்ளது. ஆனால் படுக்கையறையில் உமாவின் ரத் தக்கறை இருந்தது பல சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து இது கொ லை வழக்காகவே பார்க்கப்பட்டது. இந்நிலையில் உமா எழுதிய கடிதம் நேற்று கைப்பற்றப்பட்டது. அதில், நான் தனிமையில் வாழ விரும்பவில்லை, என் தற் கொ லைக்கு யாரும் காரணம் இல்லை. மகன்கள் இருவரையும் உறவினர்கள் பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என எழுதப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொலிசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வாய் கட்டப்பட்டு கொடூரமாக.. மனைவி, குழந்தைகளுக்கு நேர்ந்த கொடுமை!!

நேர்ந்த கொடுமை

மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் ஒன்றுமே அறியாத தன்னுடைய 3 குழந்தைகள் மற்றும் மனைவியை கொ ன்றுவிட்டு கணவனும் த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பிரதீப் குமார் (37). இவருக்கு சங்கீதா (35) என்கிற மனைவியும், மானஸ்வி (8), யஷ்வி (5) மற்றும் ஓஜாஸ்வி (3) என்கிற மூன்று மகள்கள் உள்ளனர்.

மது போதைக்கு அடிமையாக இருந்த பிரதீப் கடந்த ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் வெட்டியாக இருந்து வந்துள்ளார். இதனை அவருடைய மனைவி சங்கீதா கடுமையாக எதிர்த்து வந்துள்ளார். அதோடு அல்லாமல் பிரதீப் தன்னுடைய மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து சண் டையிட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் அதிகாலை 4.30 மணிக்கு பிரதீப் குடும்பத்தினர் தங்கியிருந்த அறையிலிருந்து ஒரு மாதிரியான சத்தம் வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த பிரதீப்பின் தந்தையும், சகோதரி ரீனா அறையை திறந்து பார்த்த போது ஓரத்தில் பிரதீப் செல்போன் பயன்படுத்தி கொண்டிருந்துள்ளார்.

பின்னர் இரண்டு பெரும் உறங்க சென்றுவிட்டனர். 10 நிமிடங்கள் கழித்து குழந்தைகள் கதறும் சத்தம் அறையிலிருந்து கேட்டுள்ளது. உடனே இருவரும் அறையை திறக்க முயன்றுள்ளனர். மனைவியுடன் பேசிக்கொண்டிருக்கிறேன் என கூறி பிரதீப் அறையை திறக்க மறுத்துள்ளார்.

அடுத்த சில நிமிடங்களில் அறையிலிருந்து எந்த சத்தமும் இல்லத்தில் அமைதியாக இருந்தது. இதற்கிடையில் சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் கதவை திறந்து பார்த்த போது, சத்தம் வெளியில் கேட்கக்கூடாது என்பதற்காக அனைவரின் வாயிலும் பேண்டேஜ் போடப்பட்டிருந்தது.

பலத்த காயங்களுடன் சங்கீதா மற்றும் அவருடைய கடைசி மகள் மட்டும் உயி ருக்கு போராடி கொண்டிருத்துள்ளனர். இதனையடுத்து அவர்களை வேகமாக மீட்ட பொலிஸார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் இருவரும் உயிரி ழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், கடிதம் ஒன்றினை கைப்பற்றி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டாணி வாங்க கடைக்கு போனவருக்கு அடித்த அதிர்ஷ்டம் : பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் திணறல்!!

அடித்த அதிர்ஷ்டம்

பட்டாணி வாங்க கடைக்கு சென்ற ஒரு பிரித்தானியர் தற்செயலாக லொட்டரி டிக்கெட் ஒன்றை வாங்க, அதில் 1 மில்லியன் பவுண்டுகள் பரிசு விழ, செலவு போக மீதிப்பணத்தை என்ன செய்வது என்று அவரும் அவரது மனைவியும் திணறிக் கொண்டிருக்கிறார்களாம்.

Sophie Richards (26), சமையல் செய்து கொண்டிருக்கும்போது பட்டாணி இல்லாததைக் கவனித்து, பட்டாணி வாங்கி வருமாறு தன் கணவர் William (33)க்கு குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார்,
பட்டாணி வாங்க கடைக்குச் சென்ற William, கடைசி நேரத்தில் லொட்டரி சீட்டு ஒன்றை வாங்க முடிவு செய்துள்ளார்.

அப்படி அவர் வாங்கிய சீட்டில் 1 மில்லியன் பவுண்டுகள் பரிசு விழ, மகிழ்ச்சியில் மூழ்கிப்போயுள்ளார்கள் அந்த தம்பதியர். ஒரு கார், சொந்த தொழில், வீடு என அனைத்து தேவைகளையும் சந்தித்த பின்னரும் மீதியும் பணம் வர, என்ன செய்வது என்று யோசித்த தம்பதி கடைசியாக முதலீடு செய்ய முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில் பட்டாணி வாங்கப்போன இடத்தில் தம்பதிக்கு அதிர்ஷ்டம் அடித்த செய்தியைக் கேள்விப்பட்ட பலரும், தாங்களும் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பதற்காக பட்டாணி வாங்கி வருவதாக அவர்களுக்கு செய்திகள் அனுப்பி வருகிறார்களாம்.

தான் குளித்த நீரை 30 டொலர்களுக்கு விற்ற இளம்பெண்!!

இளம்பெண்

இன்ஸ்டாகிராமில் பிரபலமான பெண்ணொருவர், தான் குளித்த நீரை தனது Followers-க்கு 30 டொலர்களுக்கு விற்றுள்ளார். சமூக வலைதளங்களில் தற்போது பலர் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வருகின்றனர்.

 அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்றவற்றை போல இன்ஸ்டாகிராமில் பலர் தங்களை பிரபலப்படுத்தி, பொருட்களை விற்று வருகின்றனர். இவ்வாறு அதிகப்படியான பொருட்கள் விற்கப்படுவதுடன், வித்தியாசமாகவும் இருக்கும். இந்நிலையில், பிரித்தானியாவில் வசித்து வரும் Belle Delphine(19) என்ற இளம்பெண் வித்தியாசமான ஒன்றை விற்பனை செய்துள்ளார்.

இவருக்கு இன்ஸ்டாகிராமில் 39 லட்சம் Followers இருக்கிறார்கள். இவர் ஒரு Cosplay கலைஞர் ஆவார். இந்த நிலையில் தனது Followers-யிடம், தான் குளித்த நீரை பாட்டிலில் அடைத்து 30 டொலர்களுக்கு விற்கப் போவதாக அறிவித்தார் Belle.

உடனே அவருக்கு ஆர்டர்கள் குவிந்தன. மூன்றே நாளில் மொத்த போத்தல்களும் விற்றுத் தீர்ந்தன. அந்த போத்தலின் மீது ‘This water is not for drinking and should only be used for sentimental purposes’ என Belle பதிவிட்டுள்ளார்.

அதாவது இந்த நீர் குடிப்பதற்கு இல்லை, உணர்வுப்பூர்வமான நோக்கத்திற்காக மட்டுமே என தெரிவித்துள்ளார். இதற்கு ஒருபுறம் விமர்சனங்கள் எழுந்தாலும், மறுபுறம் டொலர்களை குவித்துக்கொண்டிருக்கிறார் Belle.

கணவருக்கு தெரியாமல் மனைவி வாங்கிய லொட்டரி சீட்டு : எத்தனை கோடிகள் கிடைத்தது தெரியுமா?

லொட்டரி சீட்டு

ஐக்கிய அமீரகத்தின் அபுதாபியில் குடும்பத்துடன் குடியிருக்கும் யுவதி ஒருவர் லொட்டரி சீட்டில் 22 கோடி ரூபாய் அள்ளியுள்ளார். அபுதாபி பிக் டிக்கெட் என அறியப்படும் லொட்டரியில் கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த சொப்னா என்பவருக்கு 22.47 கோடி ரூபாய் பரிசாக கிடைத்துள்ளது.

அபுதாபியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணியாற்றி வருகிறார் சோப்னா. லொட்டரியில் தமக்கு 22 கோடி ரூபாய் பரிசாக கிடைத்த தகவலை அப்போதே அவர் தமது கணவர் பிரேமுக்கு தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.

தமது மனைவி லொட்டரி சீட்டு வாங்கிய தகவல் அப்போதுதான் கணவருக்கே தெரியவந்துள்ளது. சொப்னா பிரேம் தம்பதிகளுக்கு 5 வயதில் நட்சத்திரா என்ற மகள் இருக்கிறார். அவரது அதிர்ஷ்டமே தங்களுக்கு இதுவரையான அனைத்து முன்னேற்றத்திற்கும் காரணம் என சொப்னா தெரிவித்துள்ளார்.

லொட்டரி பணத்தில் ஒருபகுதியை மக்கள் நல உதவிகளுக்கு பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர். கடந்த 9 ஆண்டுகளாக அபுதாபியில் குடியிருக்கும் சொப்னா, தற்போதுள்ள வேலையை விட்டுவிடும் எண்ணம் இல்லை எனவும், ஆனால் தமது கணவருடன் இணைந்து எதிர்காலம் தொடர்பில் பின்னர் முடிவு செய்வதாகவும் சொப்னா தெரிவித்துள்ளார்.

ஐஸ் கிரீமை நக்கிய பெண்ணின் அடையாளம் தெரிந்தது : 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு!!

ஐஸ் கிரீமை நக்கிய பெண்

அமெரிக்காவில் ஐஸ் கிரீம் கண்டெய்னர் ஒன்றை திறந்து நக்கிவிட்டு மீண்டும் பிரிட்ஜுக்குள் வைத்து மூடிச் சென்ற இளம்பெண்ணின் அடையாளம் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

டெக்சாசில் சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு சென்ற இளம்பெண் ஒருவர், அங்கிருந்த பிரிட்ஜ் ஒன்றிலிருந்து ஐஸ் கிரீம் கண்டெய்னர் ஒன்றை எடுத்து, திறந்து, ஐஸ் கிரீமை நக்கிவிட்டு, மீண்டும் பிரிட்ஜுக்குள் வைத்து மூடி விட்டார். இதை அவருடன் வந்த ஒரு இளைஞர் வீடியோ எடுக்க, பின்னர் அந்த வீடியோ சமூக ஊடகம் ஒன்றில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

எதிர்மறையான கருத்துக்களுடன் 11 மில்லியன் முறை பார்க்கப்பட்ட அந்த வீடியோ வைரலாக, அது, சம்பந்தப்பட்ட ஐஸ் கிரீமை தயாரித்த நிறுவனத்தின் கவனத்திற்கும் எட்டியது. அமெரிக்காவில் உணவை சேதப்படுத்துவது கடுமையான குற்றம் என்பதால் பொலிசார் அந்தப் பெண்ணை தேடி வந்தனர்.

இந்நிலையில், அந்த பெண்ணின் அடையாளம் தெரியவந்துள்ளதாக இன்று தெரிவித்த பொலிசார், அதை உறுதி செய்யும் பணியில் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அவரது அடையாளம் உறுதி செய்யப்பட்டதும், அவரை கைது செய்வதற்கான வாரண்ட் பிறப்பிக்கப்படும். அப்படி அவர் கைது செய்யப்பட்டால், உணவுப்பொருளை சேதப்படுத்தியதற்காக அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 10,000 டொலர்கள் அபராதமும் விதிக்கப்படலாம்.

இதற்கிடையில் அந்தப் பெண்ணுடன் வந்த இளைஞரையும் CCTV கெமரா காட்சிகளின் அடிப்படையில் அடையாளம் காணும் முயற்சியிலும் பொலிசார் இறங்கியுள்ளனர்.

அரை நிர் வாண போஸ் கொடுத்ததால் வீதியில் வசிக்கும் ஈரான் மொடல்!!

ஈரான் மொடல்

ஈரான் நாட்டைச் சேர்ந்த மொடல் ஒருவர், அரை நிர் வாணமாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்ததால், அவரது நாட்டில் தண்டனைக்கு தப்புவதற்காக பிரான்சுக்கு தப்பியோடி வந்த நிலையில், தெருவில் தூங்க வேண்டிய நிலைக்கு ஆளானார்.

நாட்டின் சட்டங்களை மீறி அரை நிர்வாண போஸ் கொடுத்த ஈரானிய மொடலான Negzzia (29), அரசாங்கத்திடம் சிக்கினால், சிறைக்கு செல்ல வேண்டியிருக்கும், சவுக்கடி வாங்க வேண்டியிருக்கும் என்பதால் நாட்டை விட்டு தப்பி ஓடினார்.

Negzzia முன்பு வேலை செய்த புகைப்படக்காரர் ஒருவர், அவரது அரை நிர்வாண புகைப்படங்களை பொலிசாரிடம் கொடுத்ததையடுத்து ஈரானிலிருந்து தப்பி துருக்கிக்கு ஓடினார். பின்னர் பாரீசுக்கு வந்த அவர், புகலிடம் கோரி விண்ணப்பித்தார். ஆனால் உடனடியாக ஒன்றும் நடந்தபாடில்லை.

பாரீஸ் என்றதும் மொடலாக வேலை செய்யலாம் என்ற அவரது கனவு நிறைவேறவில்லை. தங்க இடமின்றி, தெருவோரத்திலும், பூங்காக்களில் உள்ள பெஞ்சுகளிலும் படுத்து உறங்கினார் Negzzia.

ஒரு கட்டத்தில் சாப்பாட்டுக்கு வழியின்றி, தான் வைத்திருந்த பையை துணிகளுடன் சேர்த்து 10 யூரோக்களுக்கு விற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது Negzziaவுக்கு. பின்னர் சமூக ஊடகங்களில் அவரது கதை வெளியாக, சர்வதேச ஊடகங்களின் பார்வை அவர் மீது திரும்பியது.

அதனால் தற்போது புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான தற்காலிக தங்குமிடத்தில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது. இதற்கிடையில் அவரது விண்ணப்பத்தை பிரான்ஸ் அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

உள்துறை அமைச்சகம் Negzziaவை தொடர்பு கொண்டுள்ளதாகவும், அவரது விண்ணப்பம் குறித்து ஆவன செய்யப்படும் என்றும் உள்துறை அமைச்சர் Christophe Castaner தெரிவித்துள்ளார்.

தான் ஈரானை விட்டு வந்ததற்காக வருத்தப்படவில்லை என்று கூறும் Negzzia, தான் ஈரானின் கட்டுப்பாடுகள் நிறைந்த மதச் சட்டங்களிலிருந்து தப்பி வந்த பெண்என்கிறார். பெண்களுக்கு எந்த மரியாதையும் அளிக்காத நாட்டின் சட்டங்களை மீறி வெளியே வந்த பெண் என்பதில் தான் பெருமை கொள்வதாக தெரிவிக்கிறார் Negzzia.

ஜோதிகாவால் சூர்யாவுக்கு வந்த புது சிக்கல்!!

சூர்யாவுக்கு வந்த புது சிக்கல்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா, வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபடுவதோடு, வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். நடிப்பு மட்டும் இன்றி, தனது அகரம் பவுண்டேஷன் மூலம் ஏழை மாணவர்களின் கல்விக்கு பெரும் உதவி செய்து வருகிறார்.

தற்போது நடிப்பதுடன், தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் திரைப்படங்களையும் சூர்யா தயாரித்து வருகிறார். சூர்யாவை திருமணம் செய்துக் கொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்ட ஜோதிகா, தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.

அவரது நடிப்பில் நேற்று வெளியான ‘ராட்சசி’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இதற்கிடையே, ஜோதிகாவின் பேச்சால் சூர்யா புது சிக்கலில் சிக்கியிருக்கிறார். அதாவது, ராட்சசி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் பேசிய ஜோதிகா, “ஒன்று இரண்டு ஹீரோயின்களுடன் டூயட் பாடுவது, அவர்களை காதலிப்பது போன்ற ரெகுலர் விஷயங்களை தான் முன்னணி ஹீரோக்கள் செய்து வருகிறார்கள்” என்று கூறியதோடு, ”சினிமாவில் ஹீரோக்களின் ஆதிக்கம் தான் இருக்கிறது, இது மாற வேண்டும். அதேபோல் சினிமாவில் பெண்களை இழிவாக பேசுவது, தறக்குறைவாக பேசுவதையும் கைவிட வேண்டும்.” என்று பேசினார்.

இந்த நிலையில், சூர்யாவின் ‘காப்பான்’ படத்தின் ஒரு பாடலின் வரிகள் வீடியோ வெளியாகியுள்ளது. “சிரிக்கி மக” என்று தொடங்கும் இந்த பாடலில் பெண்களை இழிவாக சித்தரிக்கும் வார்த்தைகள் அதிகமாக இடம் பெற்றுள்ளது.

”ஒருவனை காதலித்துவிட்டு, இன்னொருவருடனுன் குழந்தை பெற்றுக்கொண்டாள்” என்ற ரீதியில் பெண்களை கேவலப்படுத்தும் விதமாக இந்த பாடல் வரிகள் அமைந்திருக்கிறது. இதனை சுட்டிக்காட்டியிருக்கும் நெட்டிசன்கள், ”ஊருக்கு உபதேசம் செய்யும் ஜோதிகா முதலில் அவரது கணவருக்கு உபதேசம் செய்திருக்கலாம்” என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

பிரியாணி சாப்பிட நினைத்து 40,000 ரூபாவை இழந்த பெண்ணின் சோகக் கதை!!

பெண்ணின் சோகக் கதை

பசி நேரத்தில் சூடாக பிரியாணி சாப்பிட நினைத்த பெண்ணிடம் இருந்து 40 ஆயிரம் ரூபாய் பறிக்கப்பட்ட சம்பவம் பிரியாணி பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, ஒரு கிலோ பிரியாணி என எந்த பிரியாணியை ஆர்டர் செய்தாலும் அதன் மதிப்பு 300 ரூபாயை தாண்டாது. ஆனால் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி பிரியா ஒரு பிளேட் பிரியாணியை ரூ. 40 ஆயிரம் கொடுத்து வாங்கியுள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

சென்னை சவுகார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரியா இவர் நேற்று முன் தினம் ஆன்லைனில் ஹைதராபாத் பிரியாணியை ஆர்டர் செய்துள்ளார். பிரியாணிக்கான பணம் 76 ரூபாயையும் ஆன்லைன் மூலம் செலுத்தியுள்ளார்.

இந்நிலையில், ஆர்டர் செய்யப்பட்ட பிரியாணி கேன்சல் செய்யப்பட்டுள்ளது. பின்னர், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தனது பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அப்போது, தொலைபேசியில் பேசியவர், 76 ரூபாய் பெரிய தொகை இல்லை என்பதால், 5 ஆயிரம் ரூபாயை செலுத்தமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அவ்வாறு செலுத்தினால், 5 ஆயிரத்து 76 ரூபாயாக உங்கள் அக்கவுன்ட்-ல் டெபாசிட் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதை நம்பிய பிரியா, 5 ஆயிரம் ரூபாயை செலுத்தியுள்ளார். அதன் பிறகு, மீண்டும் பிரியாவை தொடர்பு கொண்ட அந்த நபர், உங்கள் கைப்பேசிக்கு வரும் ஓடிபி நம்பரை கூறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

ஓடிபி நம்பரை தெரிவித்த பிரியா, இதேபோல், 8 முறை 5 ஆயிரம் ரூபாயை செலுத்த, பிரியாணிக்கு பதிலாக செலுத்த வேண்டிய பணம் 40 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. இருப்பினும், பிரியாணியும் வரவில்லை, பிரியாணிக்காக செலுத்திய பணமும் வந்தபாடில்லை. இதன் பின்னர் தான், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரியா, செய்வதறியாமல் திகைத்து நின்றுள்ளார். இதனையடுத்து, வடபழனி காவல் நிலையத்திற்கு சென்ற பிரியா நடந்த நிகழ்வுகளை எடுத்துரைத்துள்ளார்.