வவுனியா ஆச்சிபுரம் கிராம வீதிகளின் அவலநிலை!!

வீதிகளின் அவலநிலை

வவுனியா, ஆச்சிபுரம் கிராமத்திற்கான உள்ளக வீதிகள் திருத்தப்படாமையால் தாம் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக அக் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆச்சிபுரம் கிராமம் யுத் தத்தின் காரணமாக இடம்பெயர்ந்த மக்களை குடியேற்றுவதற்காக 2000 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஓரு மீள்குடியேற்ற கிராமம் ஆகும்.

இக் கிராமத்தில் 373 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், பலரும் நாளாந்த கூலி வேலை மூலம் தமது சீவனோபாயத்தை மேற்கொள்பவர்களாக காணப்படுகின்றனர். இக்கிராமமானது அரசாங்கம் வழங்கும் சலுகைகளிலிருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். அதனை வெளிப்படுத்தும் வகையில் இக் கிராமத்தின் வீதிகளும், வறுமை நிலையும் காணப்படுகின்றது.

தங்கள் கிராமத்தின் பாதைகள் மோசமாக காணப்படுவதனால் போக்குவரத்து செய்யமுடியாத நிலைமை காணப்படுவதாகவும், பாடசாலை மாணவர்கள், நோயாளிகள் எனப் பலரும் இதனால் பாதிக்கப்படுவதாகவும், மழை காலங்களில் மழை நீரினாலும், கோடையில் புழுதி மண்டலத்தாலும் பாதிப்பு ஏற்படுவதாக மக்கள் கூறுகின்றனர்.

கம்பரலிய போன்ற அபிவிருத்திகள் சில கிராமங்களுக்கு மீண்டும் மீண்டும் கிடைக்கின்ற போதும் ஆச்சிபுரம் கிராமம் மட்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், தாம் பிள்ளைகளுடன் சிரமப்படுவதாகவும் கிராம மக்கள் கண்ணீர் விடுகின்றனர்.

கணவரை பிரிந்து வேறு நபருடன் வாழ்க்கை : 16 வயது மகளுக்கு நேர்ந்த கொடுமை!!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் 16 வயது மகளை தாய் கொன் றுவிட்டு கிணற்றில் தூக்கி வீசியதாக கூறப்பட்ட நிலையில், கிணற்றில் வீசும் போது சிறுமி உயி ரோடு இருந்தார் என தகவல் வெளியாகியுள்ளது.

திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் மஞ்சுஷா. இவருக்கு மீரா (16) என்ற மகள் உள்ளார். கணவரை பிரிந்து மகளுடன் வாழ்ந்து வந்த மஞ்சுஷாவுக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் அனீஷ் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது.

இதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். தாயின் தொடர்பை அறிந்த மீரா எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் தனது மகள் மீராவை அனீஷுக்கு திருமணம் செய்துவைக்க நினைத்த மஞ்சுஷா, திருமணத்துக்கு பின்னரும் அவருடனான கள்ளக்காதலை தொடர நினைத்தார்.

ஆனால் இந்த திருமணத்துக்கு மீரா ஒத்து கொள்ளவில்லை. இதனால் மீரா மீது மஞ்சுஷாவும், அனீஷும் ஆத்திரத்தில் இருந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் 11ஆம் திகதி இருவரும் சேர்ந்து துப்பட்டாவால் மீராவின் கழு த்தை நெரி த்தனர்.

இதையடுத்து மீரா சுயநினைவை இழந்தார். அவர் இறந் துவிட்டார் என கருதி பைக்கில் உட்காரவைத்து அனீஷ் வீட்டுக்கு சென்று மீரா உடலில் கல்லை கட்டி கிணற்றில் தூக்கி போட்டதாக கூறப்பட்டது. இதன்பின்னர் மீரா தற்கொ லை செய்ததாக மஞ்சுஷா நாடகமாடினார்.

ஆனால் பொலிஸ் விசாரணையில் அனைத்து உண்மைகளும் தெரியவந்த நிலையில் பொலிசார் இருவரையும் கைது செய்து, கிணற்றில் அழுகிய நிலையில் இருந்த மீராவின் உடலை கைப்பற்றினார்கள்.

இதையடுத்து மஞ்சுஷா மற்றும் அனீஷிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, முதலில் மீரா கழுத்தை நெரித்ததில் அவர் இறந் ததாக இருவரும் நினைத்தனர்.

ஆனால் பைக்கில் சென்று கொண்டிருந்த போது அவர் உடலில் அசைவு இருந்ததையடுத்து அவர் இறக் கவில்லை என தெரிந்த கொண்ட மஞ்சுஷா பின்னரே உடலில் கல்லை கட்டி கிணற்றில் தூக்கி போட்டதாக பொலிசிடம் கூறியுள்ளார்.

ஆனால் பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்னரே மீராவின் கழுத்து நெரிக்கப்பட்ட பின்னர் அவர் உயிருடன் இருந்தாரா என தெரியவரும் என பொலிசார் கூறியுள்ளனர்.

ஒவ்வொரு முடிவும் புதிய தொடக்கம்தான் : ஓய்வுபெற்ற மாலிக்கிற்கு மனைவி சானியாவின் ஆறுதல்!!

சோயிப் மாலிக்

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள தனது கணவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான சோயிப் மாலிக்கிற்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் வீரர் சோயிப் மாலிக், உலகக் கோப்பை தொடருடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். நேற்றைய தினம் போட்டி முடிந்த பின்னர், சக அணி வீரர்கள் மாலிக்கை தோளில் சுமந்தபடி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, ஓய்வு பெற்ற மாலிக்கின் சாதனைகளை பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் நினைவு கூர்ந்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல டென்னிஸ் வீராங்கனையும், மாலிக்கின் மனைவியுமான சானியா மிர்சா தனது கணவருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘ஒவ்வொரு கதைக்கும் முடிவு உண்டு. ஆனால், வாழ்க்கையில் ஒவ்வொரு முடிவும் புதிய தொடக்கம் தான். 20 ஆண்டுகளாக உங்கள் நாட்டுக்காக பெருமையுடன் ஆடியுள்ளீர்கள். நானும் மகன் இன்ஷானும் நீங்கள் யார் என்பது பற்றியும், நீங்கள் சாதித்திருப்பது குறித்தும் பெருமை அடைகிறோம்’ என தெரிவித்துள்ளார்.

வவுனியா கந்தபுரம் வாணி வித்தியாலய மாணவன் சஞ்சீவன் தங்கப்பதக்கம் பெற்று சாதனை!!

மாணவன் சஞ்சீவன்

2019ம் ஆண்டிற்கான வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான தடகள போட்டியில் 2ம் நாளாகிய நேற்றைய தினம் இடம்பெற்ற 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டப்போட்டியில் வவுனியாவின் கிராம்புர பாடசாலையான வவுனியா கந்தபுரம் வாணி வித்தியாலய மாணவன் செல்வன் எஸ்.சஞ்சீவன் முதலாம் இடத்தைபெற்று தங்கப்பதக்கத்தை சுவிகரித்துக்கொண்டுள்ளார்.

இவர் இத்தூரத்தினை 17நிமிடம் 7 செக்கன்களில் ஓடிமுடித்து இந்த வெற்றியை பெற்றுள்ளார். பின்தங்கிய பாடசாலையில் வறிய குடும்பத்தில் பிறந்த இந்த மாணவன், தொடர் பயிற்சியினாலும் உடற்கல்வி ஆசிரியரினால் வழங்கப்பட்ட பயிற்சியனாலும் அதிபர் ஆசிரியரகளின் ஒத்துழைப்புடனும் தான் இந்த வெற்றியை பெற்றதாக தெரிவித்தார்.

இவ் வெற்றியானது பாடசாலைக்கு பல வருடங்களுக்கு பின் கிடைத்த வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இனப்படுகொலை செய்துவிட்டு களியாட்டம் செய்கிறார்கள் விழித்தெழு தமிழினமே என போராட்டம்!!

போராட்டம்

21ம் நூற்றாண்டு இனப்படுகொலை செய்து விட்டு களியாட்டம் செய்கிறார்கள் விழித்தெழு தமிழினமே! என தெரிவித்து வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா, ஏ9 வீதியில், வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு முன்பாக 868 ஆவது நாளாக சுழற்சி முறை உணர்வுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினாலேயே இன்று (06.07.2019) இக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா கந்தசாமி கோவிலுக்கு சென்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அங்கு வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் 21ம் நூற்றாண்டு இனப்படுகொலை செய்து விட்டு களியாட்டம் செய்கிறார்கள் விழித்தெழு தமிழினமே! என்ற வசனத்தினை தாங்கிய பதாதையினை ஏந்திய வண்ணமும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை ஏந்தியவாறும் மணிக்கூட்டு கோபுரம் வழியாக ஊர்வலமாக வந்த அவர்கள் தமது போராட்ட தளத்தை அடைந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தையடுத்து அச்சம்பவத்திலிருந்து மக்களை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பவும் இனங்களுக்கிடையே ஏற்படுத்தப்பட்ட பிரிவினையை முற்றாக மாற்றிக்கொள்ளும் நோக்கிலும் வவுனியா வாழ் மக்களை மனதளவில் மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கிலும்,

இலங்கை இராணுவத்தின் 56வது படைப்பிரிவின் எற்பாட்டில் அக்கினி இசைக்குழுவின் இன்னிசை இரவு நிகழ்வு ஒன்று இன்று சனிக்கிழமை (06.07.2019) இரவு 7.00 மணியளவில் நகரசபை திறந்த மைதானத்தில் வர்த்தகர் சங்கம், வவுனியா முஸ்லிம் பள்ளிவாசல்களுடன் இணைந்து நடைபெறுகின்ற நிலையிலேயே இப் போராட்டம் முன்னேடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேகக் கட்டுப்பாட்டை இழந்த இராணுவ வாகனத்திற்கு நேர்ந்த கதி!!

இராணுவ வாகனத்திற்கு நேர்ந்த கதி

அம்பாறை – நிந்தவூர் பகுதியில் இராணுவ ஜீப் வாகனம் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இராணுவத்தினர் இன்று மதியம் விசேட கடமைக்காக அக்கரைப்பற்று பகுதியில் இருந்து கல்முனை நோக்கி செல்லும் போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த ஜீப் வண்டியில் அதிகளவான இராணுவத்தினர் பயணித்திருந்த நிலையில் இவ்விபத்தின் காரணமாக 10 பேர் காயமடைந்துள்ளனர்.

இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா வீதிகளில் வீசப்பட்ட வாக்காளர் விண்ணப்ப படிவம்!!

வாக்காளர் விண்ணப்ப படிவம்

வவுனியா – சூடுவெந்தபிலவு, பழைய பள்ளிவாசலுக்கு அருகே 2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் விண்ணப்ப படிவம் வீதியோரத்தில் வீசப்பட்ட நிலையில் ஊடகவியலாளர்களால் மீட்கப்பட்டுள்ளது. வன்னித் தேர்தல் தொகுதிக்கான வாக்காளர்களை வாக்காளர் இடாப்பில் பதிவு செய்வதற்காக நிரப்பப்படும் விண்ணப்பப்படிவமே சேதமாக்கப்பட்டு வீதிகளில் வீசப்பட்டிருந்தது.

குறித்த பகுதியில் நேற்று இவ்வாறு வாக்காளர் விண்ணப்பப்படிவம் நிரப்பப்பட்ட நிலையில் சேதமாக்கப்பட்டு வீசப்பட்டுள்ளது. இந் நிலையில் வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிவு செய்யுமாறு பல விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை தேர்தல்கள் திணைக்களம் மேற்கொண்டு வரும் நிலையில் விண்ணப்ப படிவம் நிரப்பப்பட்டு வீசப்பட்டிருப்பது தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் குறித்த பகுதிக்கு பொறுப்பான கிராம சேவகரிடம் காண்பிக்கப்பட்டபோது அது நிரப்பும் போது பிழையாக நிரப்பட்டவை என தெரிவித்திருந்தார்.

யாழ். கடலில் கண்டுபிடிக்கப்பட்ட இயற்கை அதிசயம்!!

இயற்கை அதிசயம்

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை கடற்பகுதியில் புதிதாக இது வரை கண்டுபிடிக்கப்படாத பவளப்பாறை ஒன்றை கடற்படையினர் கண்டுபிடித்துள்ளனர். வடக்கு கடற்படை கட்ளையின் கடற்படை நீர்முழ்கி பிரிவின் வீர்ர்களினால் கடந்த வாரத்தில் காங்கேசன்துறை கடல் பகுதியில் மேற்கொண்ட போது குறித்த நீர்முழ்கி நடவடிக்கையின் போது ஒரு புதிய பவளப்பாறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீரவின் மேற்பார்வையின் கீழ் கட்டளை நீர்முழ்கி அதிகாரி உட்பட நீர்முழ்கி பிரிவினரால் மேற்கொன்டுள்ள நீர்முழ்கி நடவடிக்கையின் போதே, குறித்த காங்கேசன்துறை கடலில் இருந்து இது வரை கண்டுபிடிக்கப்படாத பவளப்பாறயை கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் குறித்த பவளபாறைகள் கடற்பரப்பில் 400 மீற்றர் நீளத்தை கொண்டு மிகவும் அழகாகக் காணப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

கடற்வளத்திற்கான பல்வேறு அத்தியாவசியப் பிரிவுகளை இது கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும், மேலும் அவை இயற்கை காரணங்கள் அல்லது தீங்கு விளைவிக்கும் மனித நடவடிக்கைகள் காரணமாக சிதைந்துவிடும்.

இதனை கருத்திற் கொண்டு இந்த பவளப்பாறையை பாதுகாப்பதற்கான நடவடிக்கைளை வடக்கு கடற்படையினர் என கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் சபையால் பழிவாங்கப்பட்ட அம்பதி ராயுடு : சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்!!

அம்பதி ராயுடு

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் அம்பதி ராயுடு அறிவித்துள்ளார். உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இரண்டு வீரர்கள் காயம் காரணமாக விலகியும், 33 வயதான ராயுடுவிற்கு வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில், திடீரென தனது ஓய்வை அறிவித்து அதிரச்சிக்குள்ளாகியுள்ளார்.

தவானுக்கு பதிலாக ரிஷப் பந்த் அணியில் இணைக்கப்பட்டார். விஜய் சங்கருக்கு பதிலாக ராயுடுக்கு அழைப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பாராத விதமாக மயான்க் அகர்வால் அணியில் இணைந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் ஆணையம், ராயுடுவை கண்டுக்கொள்ளாததால் நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்தனர். இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள ராயுடு, ஐபிஎல் தொடரில் விளையாடுவேன் என தெரிவித்துள்ளார். எனினும், ஓய்வுக்கான காரணத்தை ராயுடு அறிவிக்கவில்லை.

இதுவரை 50 ஒரு நாள் போட்டி இன்னிங்ஸில் விளையாடி உள்ள ராயுடு, 3 சதம், 10 அரைசதம் என 1694 ஓட்டங்கள் எடுத்துள்ளார். ஐந்து டி20 இன்னிங்ஸில் விளையாடி உள்ள ராயுடு 42 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

இலங்கை எதிர்நோக்கி வரும் ஆபத்து!!

வேகமாக வயது முதிர்ந்தவர்களைக் கொண்ட நாடாக..

தெற்காசிய பிராந்திய வலயத்தில் மிகவும் வேகமாக வயது முதிர்ந்தவர்களைக் கொண்ட நாடாக இலங்கை மாற்றமடைந்து வருகின்றது. எதிர்வரும் 2030ம் ஆண்டளவில் இலங்கையில் ஒவ்வொரு ஐந்து பேரில் ஒருவர் அறுபது வயதைத் தாண்டியவர்களாக இருப்பார்கள் என ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு வயது முதிர்ந்தவர்களில் அதிகளவானவர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலைமையை எதிர்நோக்குவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தெற்காசிய பிராந்திய வலயத்தில் அதிக வேகமாக வயது முதிர்ந்த சனத்தொகையை அடையும் நாடாக இலங்கை அமையும் என தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் பெண்களின் சராசரி ஆயுட் காலம் 79 ஆகவும், ஆண்களிச் சராசரி ஆயுட் காலம் 72 ஆகவும் காணப்படுகின்றது.

தற்பொழுது நாட்டில் காணப்படும் சுகாதார வசதிகளின் காரணமாக ஆண்களினதும் பெண்களினதும் சராசரி ஆயுட்காலம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மகளுக்கு திருமணம் : பிணையில் வெளியில் வந்தார் நளினி!!

பிணையில் வந்தார் நளினி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு ஆயுட் தண்டனை அனுபவிக்கும் நளினி தமது மகளின் திருமண ஏற்பாடுகளுக்காக செல்ல இந்திய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இதன் பிரகாரம் நளனி ஒரு மாத காலம் சிறைச்சாலைக்கு வெளியே சென்று திருமண ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியும். அந்தக் காலத்தில் அவர் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கவோ, அரசியல்வாதிகளை சந்திக்கவோ கூடாதென நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ்காந்தி  வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, வேலூர் மத்திய சிறையில் இருப்பவர் நளினி. இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “என்னுடைய மகள் இங்கிலாந்தில் வசித்து வருகிறார். அவருக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கவேண்டும். எனவே, எனக்கு 6 மாதம் பிணை வேண்டும் நளினி கோரிக்கை விடுத்திருந்தார்.

27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் எனக்கு 6 மாதம் பிணை வழங்க உத்தரவிட வேண்டும். இந்த வழக்கில் நேரில் ஆஜராகி வாதிட எனக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். அந்த வகையில் ஜூலை 5ம் திகதி பிற்பகல் 2.15 மணிக்கு நளினியை ஆஜர்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி நளினி நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நேற்று விசாரணை நடைபெற்ற போது ஆறு மாதங்கள் பிணை வழங்க முடியாது என தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நளினிக்கு ஒரு மாத காலம் பிணை வழங்கி இந்திய நீதிமன்றம் உத்தரவிட்டது.

இலங்கையில் முதன்முறையாக அமுலாகும் நடைமுறை!!

கார்கள் அற்ற தினம்

இலங்கையில் முதல்தடவையாக மோட்டார் கார்கள் அற்ற தினம் ஒன்றை பிரகடனப்படுத்த கொழும்பு மாநகர சபை தீர்மானித்துள்ளது. கொழும்பிலுள்ள நெதர்லாந்து தூதகரம் இதற்கு ஒத்துழைப்பு வழங்குகிறது.

இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் 14ஆம் திகதி காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை கொழும்பு 7 சுதந்திர மாவத்தையில் இருந்து கிரீன்பாத் வரை இடம்பெறவுள்ளது.

குறித்த காலப்பகுதியில் கால் நடையாகவோ சைக்கிள்கள் மூலமோ பயணிக்க முடியும் என கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு அருகில் நிலநடுக்கம் : இலங்கைக்கு பாதிப்புகள் ஏற்படுமா?

நிலநடுக்கம்

இலங்கைக்கு அருகில் மிதமான நில நடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வங்காள விரிகுடாவில் அளவுக்கோலில் 5.2 ரிக்டர் அளவில் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இந்த நில நடுக்கத்தால் இலங்கைக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என திணைக்களம் தெரிவித்துள்ளது. திருகோணமலையில் இருந்து 650 கிலோ மீற்றர் தூரத்தில் வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

நேற்று இரவு 10.48 மணியளவில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கடல் தளத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

யாழில் கணவனின் கொடூர செயல் : இளம் தாய் பரிதாபமாக மரணம் : உயிரை காக்க போராடிய மகன்!!

தாய் பரிதாபமாக மரணம்

யாழ்ப்பாணத்தில் கணவனின் கொடூரமான துன் புறுத்தல்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் தாய் உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை ஐயனார் கோவில் அராலி கிழக்கை சேர்ந்த 32 வயதான சண்முகநாதன் அருகு என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் நான்கு பிள்ளைகளின் தாய் ஆவார்.

கணவனால் தீ வைக்கப்பட்ட நிலையில் படுகாயம் அடைந்து யாழ். போதான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 30ம் திகதி இரவு குறித்த பெண்ணின் கணவர் வீட்டுக்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் வன்முறையாக மாறியது. இதனால் ஏற்பட்ட கடும் கோபம் காரணமாக மனைவி மீது மண்ணெண்ணை ஊற்றி நெருப்பு வைத்துள்ளார். இதை பார்த்த 14 வயதுடைய மகன் தாயை கட்டியணைத்து தீயை அணைக்க முற்பட்டுள்ளார். எனினும், மகனையும் தாக்கிய தந்தை, தீயை அணைக்க விடாமல் தடுத்துள்ளார் .

தகப்பனின் கையை கடித்துவிட்டு, மகன் தீயை அணைத்து அயலவர்களின் உதவியுடன் வைத்தியசாலையில் சேர்த்துள்ளார். எனினும் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மரண விசாரணையை யாழ். போதனா வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டிருந்தார்.

பூமி நோக்கி வரும் இராட்சச சிறுகோள் : பேரழிவு ஏற்படும் என நாசா எச்சரிக்கை!!

இராட்சச சிறுகோள்

பூமியை நோக்கி இராட்சச சிறுகோள் ஒன்று 2,700 மெகா டொன் அழிவு சக்தியுடன் வேகமாக வந்து கொண்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் இந்த இராட்சச சிறுகோளிற்கு Asteroid FT3 என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இந்த சிறுகோள் சுமார் 1,115 அடி மற்றும் 340 மீ விட்டம் கொண்ட பாறையினால் ஆனது என்று நாசா ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாசா கணித்துள்ள கணிப்பின் படி 2019 ஆண்டு முதல் 2116 ஆம் ஆண்டு வரை சுமார் 165 சிறுகோள் தாக்குதலைப் பூமி சந்திக்க போகிறது என்ற அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளது. Asteroid FT3 என்று அழைக்கப்படும் இந்த சிறுகோள் எதிர்வரும் ஒக்டோபர் 3ம் திகதி பூமியை நோக்கி அல்லது பூமியைத் தாண்டி செல்லும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளது போல, இந்த சிறுகோள் பூமிக்கு அருகில் கடந்து சென்றால் பூமிக்கு ஏற்படும் பேரழிவு மற்றும் ஆபத்து குறைவானது. எனினும், இச்சிறுகோள் தற்பொழுது வந்து கொண்டிருக்கும் பாதையில் மாற்றம் ஏற்பட்டுபூமிக்கு நேராக வந்தால், முடிவுகள் பேரழிவு தரும் என்பதில் சந்தேகமில்லை என்று நாசா கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியாவில் கடும் வறட்சி : 434 ஏக்கர் நெற் செய்கை அழிவடையும் அபாயம்!!

நெற் செய்கை அழிவடையும் அபாயம்

வவுனியா மாவட்டத்தில் 6166.6 ஏக்கர் விவசாய நிலத்தில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ள கமக்கார அமைப்புக்களினால் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

எனினும் குளங்களில் நீர் மட்டம் குறைவடைந்து காணப்பட்டுள்ளதால் 6303 ஏக்கரில் விதை நிலத்தில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 273 விவசாயிகள் இதனை மேற்கொண்டுள்ளனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வரட்சியுடனான கால நிலை காரணமாக 120.75 ஏக்கர் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் வறட்சியுடனான கால நிலை நீடித்துச் செல்வதால் மேலும் 434 ஏக்கர் நெற் செய்கை அழிவடைய வாய்ப்புள்ளதாக கமநல அபிவிருத்தி மாவட்ட உதவி ஆணையாளர் ஆர்.விஜயகுமார் மாவட்ட செயலகத்திற்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.