வவுனியாவில் மாணவர்களுக்கு வழங்கப்படவிருந்த போசாக்கு உணவில் இறந்த பல்லி!!

உணவில் இறந்த பல்லி

வவுனியா பண்டாரிகுளம் விபுலானந்தா கல்லூரியில் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போசாக்கு உணவில் இறந்த பல்லி காணப்பட்டதையடுத்து உணவு விநியோகத்தருக்கு வவுனியா நீதிவான் நீதிமன்றால் இன்று 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா பண்டாரிகுளம் விபுலானந்தா கல்லூரி ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான போசாக்கு உணவினை வழங்கும் பொறுப்பு ஓப்பந்த அடிப்படையில் தனியார் ஒருவரிடம் ஓப்படைக்கப்பட்டுள்ளது.

வழமை போன்று இன்றும் போசாக்கான உணவினை வழங்க குறித்த நபர் வருகை தந்த போது பாடசாலையின் உணவு கண்காணிப்பு குழு குறித்த உணவினை பரிசோதித்துள்ளனர். இதன்போது உணவின் மேல் இறந்த பல்லி ஒன்று இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் பாடசாலை உணவு கண்காணிப்பு குழு பாடசாலை அதிபரின் கவனத்திற்கு சென்றதுடன், இதையறிந்த பழைய மாணவர்களும், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் அதிபருடன் கலந்துரையாடியதையடுத்து பொது சுகாதார பரிசோதகருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

பாடசாலைக்கு வருகை தந்த பொது சுகாதார பரிசோதகர் உணவினை பார்வையிட்டதுடன் பல்லி இறந்து காணப்பட்டமை தொடர்பில் உணவு விநியோகிஸ்தருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தார். வழக்கினை விசாரித்த வவுனியா நீதவான் நீதிமன்ற நீதிபதி குறித்த உணவு விநியோகஸ்தரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

ஐரோப்பிய நாட்டிலிருந்து இலங்கை வந்த தமிழருக்கு விமான நிலையத்தில் காத்திருந்த அதிர்ச்சி!!

காத்திருந்த அதிர்ச்சி

பிரான்ஸில் இருந்து இலங்கை வந்த தமிழர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு கிலோ தங்கத்துடன் வந்த நபரே இவ்வாறு நேற்று கைது செய்யப்பட்டிருப்பதாக இலங்கை சுங்க பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை தமிழரான இவர் பிரான்ஸ் பிரஜாவுரிமை கொண்டிருப்பதாக சுங்க பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேக நபரிடமிருந்து மீட்கப்பட்ட தங்கம் அரச உடமையாக்கப்பட்டுள்ளது. குறித்த தங்கத்தின் பெறுமதி 80 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

பிஸ்கட் பக்கட் ஒன்றினுள் வைத்து தங்கம் மறைத்து கொண்டு வரப்பட்டுள்ளதாக சுங்க பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 48 வயதுடைய என தெரிய வந்துள்ளது. அவர் பிரான்சில் இருந்து ஓமான் சென்று, அங்கிருந்து விமானம் ஊடாக நேற்று மாலை 3.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.  அவர் விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் போது ஒரு கிலோ கிராம் பெறுமதியான தங்க பிஸ்கட் ஒன்று மறைத்து வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பலாலி விமான நிலையம் விரைவில் சர்வதேச விமான நிலையமாக!!

பலாலி விமான நிலையம்

போர் நடைபெற்ற காலத்தில் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட யாழ், பலாலி விமான நிலையம் இன்று மீண்டும் சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் நடைபெற்றதுடன் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் அதில் கலந்துக்கொண்டார்.

பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யும் தேசிய வைபவம் என இந்த நிகழ்ச்சி பெயரிடப்பட்டிருந்த போதிலும் நிகழ்வில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை. இந்த நிகழ்வில் தேசிய கீதம் இசைப்பது நிகழ்ச்சி நிரலில் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பலாலி விமான நிலையத்தில் இருந்து எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் இந்தியாவுக்கான விமான போக்குவரத்து ஆரம்பிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. சென்னை, ஹைத்ராபாத், கொச்சின், பெங்களூர், மும்பாய் போன்ற இந்திய நகரங்களுக்கு விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

தலைப்புச் செய்தியாகியுள்ள சேவல் : பிரான்சில் இப்படியும் ஓர் வழக்கு!!

இப்படியும் ஓர் வழக்கு

பிரான்சில், மாரிஸ் என்னும் சேவல் தொடர்பான அசாதாரண வழக்கு ஒன்று தலைப்புச் செய்தியாகியுள்ளது. சேவல் அதிகாலையில் கூவுகிறது, எங்களால் கொஞ்ச நேரம் தூங்க முடியவில்லை என ஒரு தம்பதி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர் என சின்னதாக சொல்லிவிட்டுப் போகக்கூடிய விடயமல்ல இது.

Saint-Pierre-d’Oléron என்னும் கிராமத்தில் வசிக்கும் Corinne Fesseau என்னும் பெண்மணியின் சேவல், அதிகாலையில் கூவி ஒலி மாசு ஏற்படுத்துவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள் அவரது பக்கத்து வீட்டுக்காரர்கள்.

ஆனால் அவர்கள் வழக்கு இவ்வளவு பெரிய சென்சேஷனாக மாறும் என அவர்கள் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். நேற்று நீதிமன்றத்துக்கு வந்திருந்த Fesseau, மாரிசை நீதிமன்றத்திற்கு கொண்டு வரவில்லை. ஆனால் Fesseauக்கும் மாரிசுக்கும் ஆதரவாக பலர் தங்கள் சேவல்களுடன் நீதிமன்ற வாசலில் ஆஜராகியிருந்ததை யாரும் எதிர்பார்க்கவில்லை.

ஆண்டுக்கு சில நாட்கள் மட்டும் கிராமத்திற்கு வந்து தங்கும் தனது அயலகத்தார், ஒரு சேவல் குறித்து கொண்டுள்ள அணுகுமுறை, பிரான்சின் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையில் உள்ள பெரும் பிளவைக் காட்டுவதாக தெரிவிக்கிறார் Fesseau. நீங்கள் கிராமத்தில் வந்து தங்க விரும்பினால், சேவல் கூவுவதைப் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும் என்று கூறும் Fesseau, கிராமம் கிராமமாகத்தான் இருக்கும் என்கிறார்.

இதற்கிடையில் Fesseauவுக்கு பிரான்சில் ஆதரவு குவிந்து வருகிறது. மாரிசைக் காப்பாற்றுவதற்காக ஒன்லைனில் வெளியிடப்பட்டுள்ள புகார் மனு ஒன்றில், இதுவரை சுமார் 120,000 பேர் கையெழுத்திட்டுள்ளார்கள். கிராம மேயர் உட்பட பலரும் Fesseauவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ல நிலையில், வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 5 வாக்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இதற்கிடையில் வீட்டுக்கு செல்வதற்குமுன் பேட்டியளித்த Fesseau, தான் வீட்டுக்கு சென்றதும், மாரிசுக்கு ஒரு முத்தம் கொடுத்து நாம்தான் வழக்கில் வெல்லப்போகிறோம் என்று கூறப்போகிறேன் என்கிறார். மாரீசுக்கு பெருகி வரும் ஆதரவைப் பார்க்கும்போது, Fesseau சொல்வது உண்மைதான் என்றே தோன்றுகிறது. அதற்கு இன்னொரு முக்கிய காரணம், சேவல் பிரான்சின் தேசியப் பறவை.

செல்போனில் பேசிக்கொண்டிருந்த மனைவி : தொண்டையில் பரோட்டா சிக்கி கணவனுக்கு நிகழ்ந்த பரிதாபம்!!

நிகழ்ந்த பரிதாபம்

மனைவியுடன் செல்போனில் பேசிவாறு உணவு உண்ட கணவன் விக்கல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரி ழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியில் வசித்து வருகின்றனர் புருஷோத்தமன் சண்முகசுந்தரி தம்பதியினர். கடந்த 6மாதங்களுக்கு முன்புதான் இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில், சண்முகசுந்தரி பெற்றோரை காண வீட்டிற்கு செல்வதாக கூறியுள்ளார். இதனால் புருஷோத்தமன் அவரை தாய்வீட்டில் விட்டுவிட்டு இருதினங்களாக தனியாக வீட்டில் இருந்துள்ளார். இந்த நாட்களில் புருஷோத்தமன் தனக்கு நேரம் கிடைக்கும்போது எல்லாம், மனைவியிடம் செல்போனில் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு உண்ண பரோட்டா வாங்கிவிட்டு வீட்டிற்கு வந்து சப்பிட்டு கொண்டே மனைவியிடம் செல்போனில் பேசி கொண்டிருந்துள்ளார்.

அப்போது அவருக்கு திடீரென்று விக்கல் ஏற்பட்டுள்ளது. மனைவி செல்பேசியில் தண்ணீர் குடியுங்கள் என்று பலமுறை கத்தியும் அவர் அமைதியாக இருந்துள்ளார். இதனால் சண்முக சுந்தரி தொடர்பை துண்டித்துவிட்டு மீண்டும் அவருக்கு அழைத்துள்ளார் ஆனால் அழைப்பை எடுக்கவில்லை.

உடனடியாக சண்முகசுந்தரி உறவினர்களுக்கு தகவல் கொடுத்து, பார்க்க கூறியுள்ளார். அவர்கள் சென்று பார்த்தபோது புருஷோத்தமன் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு, உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தவர்களுக்கு புருஷோத்தமன் இறந் துவிட்டார் என்ற சோக செய்தியை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள், இறப்பிற்கு வேறு காரணங்கள் உள்ளதா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

காதல் மனைவி கழுத்தை நெரித்துக் கொ லை : தப்பியோடிய கணவன்!!

தப்பியோடிய கணவன்

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்த கணவனை பொலிசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சின்னநாகாச்சி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சிவகாமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த ஓராண்டாக இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தனது கணவர் மற்றும் மாமியார் உள்ளிட்டோர் சேர்ந்து தன்னை அடித்து சித்ர வதை செய்வதாக, கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிவகாமி பொலிசில் புகார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சிவகாமி தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த அவரது கணவர் ராஜா, ஆடு கட்டும் கயிற்றால் சிவகாமியின் கழுத் தை நெரி த்துக் கொ லை செய்துவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிசார், தலைமறைவான ராஜாவை தேடி வருகின்றனர்.

217 பேருடன் லண்டன் சென்ற விமானம் நடுவானில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு!!

தீப்பற்றி எரிந்த விமானம்

அமெரிக்காவில் இருந்து பிரித்தானியா தலைநகர் லண்டனுக்கு பயணித்த விமானத்தில் திடீரென தீ பிடித்ததால், பாஸ்டனில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. வர்ஜின் அட்லாண்டிக் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம், 217 பயணிகளுடன் அமெரிக்காவின் நியூ யார்க் நகரத்திலிருந்து பிரித்தானியா தலைநகர் லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்திற்கு பயணித்துள்ளது.

நடுவானில் பயணித்துக்கொண்டிருந்த போது, விமானத்தில் தீ பிடித்துள்ளது, இதை விமானக் குழுவினர் கண்டறிந்த நிலையில்,விமானம் பாஸ்டன் விமான நிலையில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பயணிகள் அனைவரும் பத்திரமாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொலைபேசி சார்ஜரால் பயணிகள் இருக்கையில் தீ பிடித்து பரவியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும், விபத்து குறித்து மாசசூசெட்ஸ் மாகாண பொலிசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் கொல்லப்பட்ட சகோதரி, சகோதரன் : பிரித்தானிய சகோதரனின் நெகிழ்ச்சியான செயல்!!

நெகிழ்ச்சியான செயல்

உயிர்த்த ஞாயிறு த ற்கொலை குண் டுத்தாக்கு தலில் உயிரிழந்த தனது சகோதரர் மற்றும் சகோதரியின் பெயரில் தர்ம ஸ்தாபனம் ஒன்றை உருவாக்கியுள்ளதாக பிரித்தானியாவில் வாழும் சகோதரர் தெரிவித்துள்ளார்.

தனது சகோதரங்கள் குண் டுத் தாக் குதலில் சிக்கி சிகிச்சை பெற்ற வைத்தியசாலைக்கு உதவி செய்யும் நோக்கில் அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக டேவிட் லின்சே என்ற பிரித்தானிய இளைஞன் தெரிவித்துள்ளார்.

உயிரி ழந்த தனது சகோதரர்கள் தங்கியிருந்த கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலுக்கு சென்று பார்வையிடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளனர். அங்கு சென்று அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினால் தான் தனக்கு அமைதி கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலையில் இலங்கைக்கு செல்வதற்கு பெற்றோர் முதலில் மறுப்பு தெரிவித்தனர். எனினும் அனுமதி கொடுத்துள்ளனர் என டேவிட் லின்சே தெரிவித்தார்.

தனது தந்தையும் சகோதரர்களும் இலங்கை சென்றதாகவும் எனினும் பல்கலைகழக பரீட்சை காரணமாக தான் இலங்கை செல்லவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். குண் டுத்தாக் குதலில் சகோதரன் டானியல் லின்சேயையும் சகோதரி அமெலியையும் உயிரிழந்தனர். அந்த நேரத்தில் அப்பா தொலைவில் இருந்தமையினால் உயிர் தப்பினார்.

அவர்கள் கொல் லப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்த வேண்டும் என நினைக்கின்றேன், அப்படி செய்யாவிட்டால் எனது மனோநிலையில் அது பாதிப்பை ஏற்படுத்தும். எனது மன அழுத்தத்தை குறைப்பதற்காக நான் இலங்கை செல்லப்போகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சகோதரங்கள் கொல் லப்பட்ட அடுத்த சில நாட்களில் அவர்களின் பெயரால் தான் அறக்கட்டளை ஒன்று ஏற்படுத்தியுள்ளேன். இலங்கையில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனது சகோதரங்களிற்கு மருத்துவ சிகிச்சை அளித்த வைத்தியசாலைக்கு உதவுவதே நோக்கமாகும்.

குறிப்பிட்ட வைத்தியசாலை குண் டுவெடி ப்பின் பின்னர் சிகிச்சை அளிப்பதில் சிரமத்தை எதிர்கொண்டது. அந்த வைத்தியசாலையின் தேவை குறித்து மதிப்பிடுவதற்கு ஏற்கனவே அமெரிக்காவிலிருந்து நிபுணர்கள் குழுவை அமர்த்தியுள்ளதாக டேவிட் லின்சே குறிப்பிட்டுள்ளார்.

வைத்தியசாலையில் ஒரே குழப்பநிலை காணப்பட்டதாக எனது அப்பா தெரிவித்தார். அங்கு குண்டுவெடிப்பிற்கு சிகிச்சை அளிப்பதற்கான திறன் இருக்கவில்லை எனவும் லின்சே தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண் டுவெடி ப்பில் கொல் லப்பட்டவர்களின் குடும்பத்தவர்களை சந்திக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவர்கள் நிச்சயமாக துயரத்தில் சிக்குண்டுள்ளனர். நான் அவர்களிற்கு வாழ்வதற்கான இடமும் கல்வியும் உளவியல் ஆற்றுகையும் கிடைப்பதை உறுதி செய்யப் போகின்றேன் என பிரித்தானியாவில் வாழும் உயிரிழந்தவர்களின் சகோதரான டேவிட் லின்சே தெரிவித்துள்ளார்.

வவுனியா விபுலானந்தா கல்லூரியில் புலமைப்பரீட்சை மாணவர்களுக்காக கருத்தரங்கு!!

வுனியா பண்டாரிகுளம் விபுலானந்தா கல்லூரியில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் கருத்தரங்கு இன்று (05.07.2019) காலை 8.30 தொடக்கம் 12.30 வரை இடம்பெற்றது.

நடைபெறவுள்ள புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பாடசாலை பழைய மாணவர் அபிவிருத்தி குழுவின் ஏற்பாட்டில் கா.பொ.த சாதாரண தர மாணவர்கள் (1995) மற்றும் கா.பொ.த உயர்தர பழைய மாணவர்களின் (1998) நிதிப்பங்களிப்புடன் இக் கருத்தரங்கு நடைபெற்றிருந்தது.

இக் கருத்தரங்கில் 100க்கு மேற்பட்ட தரம்5 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்திருந்தனர்.

வவுனியாவில் கட்டடப் பொருட்களின் விலை அதிகரிப்பு : வீட்டுத்திட்ட பயனாளிகள் அவதி!!

வவுனியாவில் கட்டிடப்பொருட்களின் விலை அதிகரிப்பினாலும் தர நிர்ணயம் இன்மையினாலும் வீட்டுத்திட்ட பயனாளிகள் பெரும் சிக்கல்களுக்கு முகம் கொடுத்து வருவதாக வவுனியா பிரதேச செயலாளர் அரசாங்க அதிபருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது, நீண்டகாலம் இடம்யர்ந்து மீள்குடியேறிய குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டம் மற்றும் தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரம் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்புவட மாகாண விருத்தி தொழிற்பயிற்சி தறின் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வீட்டுத்திட்டத்தில் 671 வீடுகளுக்கான கட்டுமான வேலைகள் நடைபெற்றவண்ணமுள்ளது.

இருப்பினும் கட்டுமானப்பொருட்கள் வெவ்வேறு விலைகளிலும் வெவ்வேறு தரத்திலும் விற்கப்பட்டு வருகின்றது. இவற்றின் தரங்கள் மிகக்குறைவாக உள்ளன.

மீள்குடியேறிய வறுமைப்பட்ட மக்கள் தங்களது வீட்டினை தங்களால் வழங்கப்பட்ட சரியான மதிப்பீட்டுக்குள் கட்டி முடிப்பதற்கு கட்டிடப்பொருட்களின் சரியான விலையும் தரமும் அவசியமானதாக உள்ளது.

எனவே பொருட்களின் விiலா மற்றும் அவற்றின் தரத்தினை சரியாக நடைறைப்படுத்துவதற்கு உரிய தீர்வை பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்வதாக பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் வவுனியா மாவட்டத்தில் கட்டுமானப் பொருட்களின் விலைகள் இடைத்தரகர்களின் மூலமாக அதிகரித்துள்ளதாக வீட்டுத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் பயனாளிகள் தெரிவிக்கின்றனர்.

வவுனியா சூடுவெந்தபுலவில் இது எங்களது பூர்வீக பூமி என தெரிவித்து முஸ்ஸிம்கள் போராட்டம்!!

முஸ்ஸிம்கள் போராட்டம்

வவுனியா சூடுவெந்தபுலவு பழைய குடிமனை பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாயிலுக்கு முன்பாக இன்று (05.07) மதியம் தொழுகை முடிந்த பின்னர் அப்பகுதியினை சேர்ந்த முஸ்ஸிம் சமூகத்தினர் கவனயீர்ப்பு போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர்.

சூடுவெந்தபுலவு மேற்குளம், கறக்கல் பாதை வழியே காணப்படும் எங்களது பூர்வீகமான மேட்டுக்காணியில் 1954, 1964ம் ஆண்டு காலம் தொடக்கம் பராமரித்து விவசாயம் மேற்கொண்டு வருகின்றோம்.

428 ஏக்கர் காணிகள் வறுமை ஒழிப்புக்காக பயிர்செய்கை மேற்கொள்ள அரசாங்கத்தால் எமக்கு வழங்கப்பட்டிருந்தன. நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக 1990 ஆம் ஆண்டு முதல் குறித்த காணிகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. யுத்தம் முடிவடைந்த பின்னர் எமது காணிகளில் மீளவும் பயிர்செய்கை செய்து வருகின்றோம்.

2013ம் ஆண்டு வடமாகாண சபை காணி ஆணைக்குழுவினரால் பார்வையிடப்பட்டு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு சிபார்சு செய்யப்பட்டு அனுமதிப்பத்திரமும் தயார் செய்யப்பட்டும் இதுவரை அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை. இவ்வாறான சூழ்நிலையில் இக்காணியினை வனபரிபாலன திணைக்களம் தங்களுக்கு சொந்தமான பகுதியென கூறி இக்காணிகளை அபகரிக்க பலதரப்பட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக அமைச்சர்கள், மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர் போன்ற அனைத்து தலைவர்களுக்கு தெரியப்படுத்தி, நேரில் வந்து பார்வையிட்ட போதிலும் அவர்களினாலும் எவ்வித பயனும் கிடைக்கவில்லை. எனவே எமக்கு எமது காணிகளைப் பெறுவதற்கு உரிய தீர்வு வேண்டும் என தெரிவித்தே இக் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

மதியம் 1 மணி தொடக்கம் 1.30 மணிவரை இடம்பெற்ற இக் கவனயீர்ப்பு போராட்டத்தின் போது, இது எங்களது பூர்வீக பூமி, 1940, 1960ம் ஆண்டுகளில் வழங்கப்பட்ட உறுதிகள் எம்மிடம் உண்டு, இது பாரம்பரியமாக பராமரிக்கப்படும் விவசாயப் பூமி, எமது பூர்வீக நிலங்ளை அபரிக்க துடிக்கம் வனவள திணைக்களமே, அரசே எமது வருமானத்தை பறித்து சொத்தை அழித்து எம்மை கொல்லாதே, அடிக்காதே அடிக்காதே ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே என்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பாதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

போராட்ட இடத்திற்கு உலுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்திரசேகர மற்றும் சூடுவெந்தபுலவு கிராம சேவையாளர் ஜெயபாலன் விஜயம் மேற்கொண்டிருந்ததுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜரை சூடுவெந்தபுலவு கிராம சேவையாளரிடம் ஒப்படைத்திருந்தனர்.

மைத்திரியின் நடவடிக்கைக்கு தடை : சற்றுமுன் நீதிமன்றம் விதித்த அதிரடி உத்தரவு!!

நீதிமன்றம் விதித்த அதிரடி உத்தரவு

மரண தண்டனை கைதிகள் எவரையும் தூக்கிலிடவும், தூக்கிலிட வழங்கப்பட்ட அனுமதிக்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் இன்று இந்த இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி வரை இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

12 வழக்குகள் இது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த போதும் மரண தண்டனை கைதியான மொஹம்மட் ஹனீபா என்பவரின் வழக்கே இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஜனாதிபதி சட்டத்தரணியான எம்.ஏ.சுமந்திரன் வழக்கு தொடர்பான தனது வாதத்தை தொடர்ந்த நிலையில் இதனை ஆராய்ந்த மூன்று நீதியரசர்கள் அடங்கிய நீதிபதிகள் குழாம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

மரண தண்டணையை அமுல்படுத்த கடந்த 26ஆம் திகதி ஜனாதிபதி கையெழுத்திட்டதையடுத்து 12 அடிப்படை மனித உரிமை மீறல் வழக்குகளை உயர் நீதிமன்றில் திருமதி கௌரி சங்கர் தவராஜா தாக்கல் செய்திருந்தார். மரண தண்டணையை எதிர்நோக்கும் கைதிகளின் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணிகள் எழுவரும், மனித உரிமை ஆர்வலர்கள், சமய பெரியார்கள் ஆகியோர் சார்பாக இந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களில் சட்டமா அதிபர், நீதி அமைச்சர், சிறைச்சாலை ஆணையாளர், வெலிக்கடை சிறைச்சாலை அத்தியட்சகர், ஜனாதிபதியின் செயளாளர், மனித உரிமை ஆணையாளர் சட்டத்தரணிகள் சங்க தலைவர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர். இதேவேளை கடந்த வருடம் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின் போதும் ஜனாதிபதிக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

அரசியலமைப்பை மீறி நாடாளுமன்றத்தை கலைத்தார் என மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதற்கு ஆதரவாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்நிலையில் இன்றைய தினமும் ஜனாதிபதியால் அமுல்படுத்தப்பட்ட மரண தண்டனை நடைமுறைக்கும் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கதறி அழுத லசித் மலிங்க : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

கதறி அழுத லசித் மலிங்க..

ஊறுபொக்க கின்னெலிய பகுதியில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த சிறுவனே லசித் மாலிங்க. லசித் மாலிங்க எனும் சிறுவன் கல்வியிலும் விளையாட்டு துறையிலும் அதிகம் ஆர்வம் கொண்டவனாக காணப்பட்டான். பாடசாலையில் அனைத்து ஆசியரியர்களின் கவனத்தை ஈர்த்தவனே லசித் மாலிங்க.

இந்நிலையில் தாய் தந்தை இருவரும் வீட்டில் அடிக்கடி முர ண்படுவது வழக்கமாக காணப்பட்டுள்ளது. இருவருக்குமிடையில் முர ண்பாடுகள் அதிகரித்து செல்கையில தாய்க்கு பிரிதொரு நபருடன் தகாத உறவு காணப்படுகின்றமையை தந்தை உணர்ந்துக்கொண்டுள்ளார். சிறிது காலம் செல்கையில் தாய் தகாத உறவு வைத்திருந்த நபரை மறுமணம் செய்துக்கொள்வதாக தெரிவித்து விட்டு அவரோடு சென்று விட்டார்.

தாய் சென்றவுடன் தாய் அன்பிற்காக ஏங்கிக்கொண்டிருந்த லசித் மாலிங்க கல்வி மீது காணப்பட்ட அக்கறையை குறைத்துக்கொண்டுள்ளார். கல்வியில் வீழ்ச்சியை கண்டு ஆசிரியர்கள் லசித் மாலிங்கவின் தந்தையிடம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் லசித் மாலிங்கவின் தந்தை சிறிது காலம் சென்றதும் ஏற்கனவே விவாகம் புரிந்து ஒரு பிள்ளையுடன் தனிமையில் வாழ்ந்து வந்த பெண் ஒருவரை திருமணம் செய்கின்றார். குறித்த பெண்ணின் மகனையும் அழைத்துக்கொண்டு லசித் மாலிங்கவின் தந்தையுடன் வசிப்பதற்கு தீர்மானம் மேற்கொள்கின்றார்.

இவர்களின் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக சென்றுக்கொண்டிருந்த வேளை லசித்த மாலிங்க மீது தந்தைக்கும் அக்கறை குறைவடைந்துள்ளது. மாலிங்க பெற்றோரின் அன்பிலிருந்து புறக்கணிக்கப்பட்டான். சிறு வயது என்பதால் அடுத்த கட்டத்தை நோக்கி சிந்திப்பதற்கும் அவனால் முடியவில்லை.

காலம் கடந்தது… லசித் மாலிங்கவிற்கு 13 வயது ஆனது.. கடந்த மாதம் 9 ஆம் திகதியே எதிர்பாராத அந்த சம்பவம் நடந்தது. லசித் மாளிங்க தாய் தந்தையரை பிரிந்து தனிமையில் உறங்கிக்கொண்டிருக்கின்றான். தந்தை அவரது அறையில் உறங்கிக்கொண்டிருந்தார் இரண்டாவது மனைவியும் அவருக்கு முதல் திருமணத்தில் பிறந்த மகனும் பிரிதொரு அறையில் உறங்கிக்கொண்டிருக்கின்றனர்.

ஆழ்ந்த நித்திரையிலிருந்த லசித் மாலிங்க தன்னை காப்பாற்றுமாறு கத றுகிறான்… திடுக்கிட்டு விழிந்தெழுந்த தந்தையும் அவரது இரண்டாவது மனைவியும் பார்க்கையில் லசித் மாலிங்க தீ யினால் எரி ந்துக்கொண்டிருந்தான். வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் பலனளிக்கவில்லை.

அன்று அதிகாலை இரண்டு மணிக்கு காவல் துறைக்கு லசித் மாலிங்கவின் தந்தை முறைப் பாடளித்துள்ளார். காவல் துறை மேற்கொண்ட விசாரணைகளை தொடர்ந்து உயி ரிழந்த லசித் மாலிங்கவின் தந்தை தனது இரண்டாவது மனைவி மீதே சந்தேகம் என தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க காவல் துறையினர் இரண்டாவது மனைவியை கைது செய்துள்ளனர். தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய தந்தையும் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் லசித் மாலிங்க எதற்காக தீ க்கிரையாகி உயிரி ழந்தான், அவனை ஏன் கொ லை செய்யவேண்டும், யார் இதனை செய்திருப்பார்கள் போன்ற விடயங்களை அறிந்துக்கொள்ள காவல் துறையினர் தொடர்ந்து விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக பலி!!

பெண் பலி

குருணாகல்-தேவாலயம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று இடம்பெற்றதாக காவல் துறை தெரிவிக்கின்றது.

முச்சக்கர வண்டி தடம் புரண்டதால் விபத்து ஏற்ப்பட்டதாக காவல் துறை ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். விபத்தில் முச்சக்கர வண்டி தடம் புரண்டதில் அதில் பயணம் செய்த 68 வயதுடைய எஸ்வாத்துவ பிரதேஷத்தை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் முச்சக்கர வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவிக்கின்றது.

ஆசையாக மனைவி, குழந்தையை பார்க்க வந்த கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

காத்திருந்த அதிர்ச்சி

வேலூர் மாவட்டத்தில் 7 மாத குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ் கடித்து கொன் றுவிட்டு தாயும் தற் கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பவித்ரா (21) என்பவர் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக, மத்திய பாதுகாப்பு படையில் பணிபுரியும் சுரேஷ் என்பவரை திருமணம் செய்துள்ளார்.

கடந்த 8 மாதங்களுக்கு முன் பவித்ரா பிரசவத்திற்காக தன்னுடைய தாய் வீட்டிற்கு வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. விஷ்வா என பெயரிட்டு இருவரும் பாசமாக வளர்த்து வந்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன் ஏற்பட்டு கருத்து வேறுபாடு காரணமாக பவித்ரா தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். கடந்த 30ம் திகதியன்று பவித்ராவின் பெற்றோர் வெளியில் சென்றுள்ளனர். அதேசமயம் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தையை பார்ப்பதற்காக சுரேஷ் ரயிலில் ஊருக்கு வந்துகொண்டிருந்துள்ளார்.

இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த பவித்ரா மகனை தண்ணீர் தொட் டிக்குள் மூழ் கடித்து கொ ன்றுவிட்டு, தானும் வீட்டில் தூக் கிட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ளார். மறுநாள் காலையில் வீட்டிற்கு வந்த அவருடைய பெற்றோர் மகள் தூ க்கில் தொங் குவதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் ஆசையாக ஊருக்கு வந்த சுரேஷ் தன்னுடைய மனைவி மற்றும் மகள் பிண மாக கிடப்பதை பார்த்து கதறி அழுதிருக்கிறார். திருமணம் முடிந்து ஒன்றரை வருடங்கள் மட்டுமே ஆகியிருந்த நிலையில் பவித்ரா குழந்தையை கொன் றுவிட்டு தற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் முடிந்த சில மாதங்களில் புதுமணப்பெண்ணிற்கு வெளிநாட்டில் நேர்ந்த துயரம் : கதறும் குடும்பம்!!

நேர்ந்த துயரம்

அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்தில் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட சென்ற இந்திய யுவதி டர்னர் நீர்வீழ்ச்சியில் மூ ழ்கி மரண மடைந்த சம்பவம் வெளியாகியுள்ளது. புதனன்று நடந்த இச்சம்வத்தில் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் இன்று சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் டல்லாஸ்-ஃபோர்த் பகுதியில் குடியிருக்கும் 27 வயதான ஜெஸ்லின் ஜோஸ் என்பவரே மரணமடைந்தவர். இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இவர் டல்லாஸ்-ஃபோர்த் பகுதியில் பணியாற்றி வருகிறார்.

சம்பவத்தன்று தமது பிறந்தநாளை முன்னிட்டு நண்பர்கள் மூவருடன் டர்னர் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்த நிலையில் குளிக்க சென்ற ஜெஸ்லின் உள்ளிட்ட நால்வரும் சக்திவாய்ந்த நீரோட்டத்தில் சிக்கியுள்ளனர்.

இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக செயல்பட்டு மூவரை காப்பாற்றியுள்ளனர். ஆனால் ஜெஸ்லினினை அவர்களால் காப்பாற்ற முடியாமல் போனது. தொடர்ந்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மீட்பு குழுவினரின் உதவியுடன் ஜெஸ்லினின் உடலை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று அவரது உடல் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்னரே கேரளாவில் வைத்து ஜெஸ்லினுக்கு திருமணம் முடிந்துள்ளது.

கணவரை அமெரிக்காவுக்கு அழைத்துவர தேவையான நடவடிக்கைகளை ஜெஸ்லின் மேற்கொண்டுவரும் நிலையில், ஜெஸ்லின் தண்ணீரில் மூழ்கி மரண மடைந்துள்ளார். இச்சம்பவம் ஜெஸ்லின் குடும்பத்தாரை உலுக்கியுள்ளது. கேரளாவில் உள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சடலத்தை இந்தியாவுக்கு கொண்டுவரும் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.