தனது முதல் நாள் பணியில் மருத்துவர் ஒருவர் நோயாளி காதிலிருந்து சிறிய பல்லியை வெளியில் எடுத்துள்ள சம்பவம் வைரலாகி வருகிறது. தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர் வரண்யா நகாந்தாவி. சமீபத்தில் மருத்துவ படிப்பை முடித்த வரண்யா அங்குள்ள மருத்துவமனையில் மருத்துவராக பணிக்கு சேர்ந்துள்ளார்.
முதல் நாள் பணிக்காக சென்ற வரண்யாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம்..காது வலி என்று ஒருவர் வரண்யாவிடம் சிகிச்சைக்காக வந்துள்ளார். அவரது காதை சோதனை செய்து பார்த்தபோது அவரின் காதிற்குள் ஒரு சிறிய பல்லி உயிருடன் இருந்துள்ளது.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், பல்லியை காதிற்குள் இருந்து வெளியே எடுத்தார். எனினும் அந்த நபரை மீண்டும் காது மருத்துவரிடம் செல்லும் படி அறிவுறுத்தியுள்ளார். தனது முதல் நாள் பணி அனுபவம் குறித்து வரண்யா சமூகவலைதளத்தில் பதிவிட்டது தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது. முதல் நாளே வித்தியாசமான அனுபவத்தை தந்த அந்த நாளை மருத்துவர் வரண்யா நகாந்தாவி மறக்க மாட்டார் என்று பலரும் கருத்து கூறி வருகின்றனர்.
சிலர் தொழில் இல்லாமல் பிச்சை எடுத்து சாப்பிடும் பலர் வாழும் இன்றைய காலத்தில் தனது திறமையை மாத்திரம் வெளிப்படுத்தி சம்பாதித்த சிறுவன் தொடர்பான காணொளிகள் இணையங்களில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த இணைய வாசிகள் குறித்த சிறுவனின் திறமையை பாராட்டி வருகின்றனர். மேலும், எல்லாரையும் விடவும் தனித்துவமாக தெரிய வேண்டும் என்றால் அவர்களின் திறமை வெளிவர வேண்டும். திறமையே அவர்களை வாழ வைக்கும்.
குறித்த சிறுவனின் திறமை வெளிப்படுவதுடன், அதன் மூலம் சம்பாதித்து தனது தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளுகின்றார்.
கனவில் வந்து சாமி அருள்வாக்கு கூறியதற்காக 2 கிராம மக்கள் அசைவ உணவை சாப்பிடாமல் கைவிட்டுள்ளனர். உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் பம்பா மற்றும் பர்கியா என்ற இரு கிராமங்கள் உள்ளன. இமயமலையின் மேல் பகுதியில் சினோ மற்ரும் இந்திய எல்லையில் அமைந்துள்ள கிராமத்தின் 350 குடும்பங்கள் அசைவ உணவு சாப்பிடுவதுடன் கடவுளுக்கு உயிர்ப்பலி கொடுப்பதும் வழக்கம்.
6 மாத குளிர்காலமாக இருக்கும் என்பதால் கிராமத்தினர் கீழே வந்துவிடுவர். உடன் அவர்கள் கும்பிடும் சாமியையும் கொண்டு வந்துவிடுவார்கள். திரும்பி கிராமத்திற்கு செல்லும்போது சாமியை கோவிலுக்குள் வைத்து விடுவர். இதன்பிறகு கிராம கவுன்சில் கூடி ஒரு நாளை தேர்வு செய்து கடவுளுக்கு விலங்குகளை உயிர்ப் பலி கொடுத்து. அந்த மாமிசத்தை சமைத்து உட்கொள்வர்.
இந்த நிலையில் அண்மையில் அங்கு பகவத் காதை நடந்தது. இது ஜூன் 28-ஆம் தேதி வரை நடந்தது. இதற்கான சடங்குகள் முடிந்த பிறகு அதை நடத்தும் சாமியாருக்கு அருள் வந்தது. அப்போது ஒரு ஆண்டிற்கு விலங்குகளையும் நாம் பலி கொடுக்கக் கூடாது. அசைவ உணவு சாப்பிடுவது, விலங்கு பலி ஆகியவற்றை பகவத் காதை நடந்த கிராமங்களில் கொடுக்கக் கூடாது.
இதை தெய்வங்கள் என் கனவில் கூறியுள்ளன. மீறினால் தெய்வக் குற்றமாகிவிடும் என கூறியுள்ளார். சாமியாரின் வாக்கை ஏற்று 2 கிராம மக்களும் அசைவ உணவை கைவிட்டதுடன் ஒரு ஆண்டுக்கு உயிர் பலியையும் தவிர்த்து வருகின்றனர்.
கிளிநொச்சி, ஏ9 பிரதான வீதியில் உள்ள மரமொன்றிற்கு அசிட் வீச்சு நடத்தப்பட்டுள்ளது. மக்கள் நிழல் பெறுவதற்கு பயனாக உள்ள குறித்த மரத்திற்கு நபர் ஒருவர் நேற்று அதிகாலை அசிட் ஊற்றியுள்ளார்.
இதனை அவதானித்த அயலவர்கள் பொலிஸாருக்கும் கரைச்சி பிரதேச சபைக்கும் அறிவித்துள்ளனர். இதையடுத்து பொலிஸார் இரு சந்தேகநபர்களை கைது செய்திருந்த நிலையில் ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மரத்தை சுற்றி உள்ள மண் அகற்றப்பட்டு புதிய மண் இடப்பட்டு சீர் செய்வதாக முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இன்னும் சில நாட்களின் பின்னர் மரம் உயிரோடு இருக்குமா? அல்லது இறந்து போகுமா? என்பது தெரியவரும் எனவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்திற்கான ஒன்று கூடல் வவுனியா மாவட்ட வர்த்தக கைத்தொழில் சம்மேளன தலைவர் கே.அமிர்தலிங்கம் தலமையில் வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று (30.06.2019) காலை 9.30 மணி தொடக்கம் மதியம் 2.30 மணி வரை இடம்பெற்றது.
இவ் ஒன்றுகூடலின் போது வடக்கு மற்றும் கிழக்கில் வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், எதிர்காலத்தில் எதிர்நோக்கும் சவால்கள், வடக்கு கிழக்கில் உள்ள வளங்கள், வியாபார விருத்தியினை எவ்வாறு மேற்கொள்ளுவது, பொருளாதார வீழ்ச்சியினை எவ்வாறு சீர் செய்வது போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
வடக்கு கிழக்கு சம்மேளன தலைவர் ரீ.குலதீபன் இவ் ஒன்றுகூடலின் ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டிருந்ததுடன் இதில் வடக்கு கிழக்கு பகுதியினை சேர்ந்த வர்த்தக கைத்தொழில் சம்மேளத்தின் தலைவர்கள், உபதலைவர்கள், செயலாளர்கள், ஒருங்கினைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஐக்கிய அமீரகத்தின் துபாயில் நடன விடுதியில் சிறை வைக்கப்பட்டிருந்த தமிழகத்தின் கோவையை சேர்ந்த 4 இளம் பெண்கள் மீட்கப்பட்டுள்ளதாக உத்தியோகப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. துபாயில் கலை நிகழ்ச்சி ஒன்றிற்காக இவர்கள் அழைத்து செல்லப்பட்டு, பின்னர் அங்குள்ள நடன விடுதிகளில் நடனமாட கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.
தமிழகத்தின் கோவையை சேர்ந்த இந்த 4 யுவதிகளையும் இந்திய தூதரக அதிகாரிகளின் உதவியுடன் துபாய் பொலிசார் மீட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கலை நிகழ்ச்சி ஒன்றிற்காக இந்த நால்வரையும் துயாய்க்கு அழைத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் அழைத்து சென்ற நபர் இவர்கள் நால்வரையும் அறை ஒன்றில் அடைத்து வைத்து, நடன விடுதியில் நடனமாட கட்டாயப்படுத்தியுள்ளார். இதனையடுத்து, அந்த நால்வரில் ஒருவர் கோவையில் உள்ள உறவினர்களுக்கு உதவி கேட்டு வட்ஸ் அப் தகவல் அளித்துள்ளார்.
இந்த தகவல் இந்திய வெளிவிவகார இணை அமைச்சருக்கு தெரியவரவே, அவர் ஐக்கிய அமீரக தூதரகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து துபாய் பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தற்போது மீட்கப்பட்ட நால்வரும் கேரளா செல்லும் விமானம் ஒன்றில் அனுப்பி வைக்கப்படுவதாக அங்கிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கர்ப்பிணி பெண் உயிரி ழந்த நிலையில் தவறான சிகிச்சையால் அவர் இறந்ததாக கூறி உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தருமபுரியை சேர்ந்தவர் ஸ்ரீதரன். இவர் மனைவி அபிராமி 9 மாத கர்ப்பமாக இருந்த நிலையில் மருத்துவமனை ஒன்றில் வழக்கமான சோதனைக்காக அவரது பெற்றோர் நேற்று இரவு அழைத்து வந்துள்ளனர்.
அப்போது சிகிச்சையில் இருந்த அபிராமிக்கு திடீரென உடல்நிலை மோசமானது. இதனால் தனியார் மருத்துவமனை நிர்வாகம் அவசர அவசரமாக ஆட்டோ ஒன்றில் ஏற்றி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அபிராமியை அனுப்பி வைத்துள்ளது.
அங்கிருந்த அரசு மருத்துவர்கள் அபிராமியை சோதித்து பார்த்ததில் ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் இரவு முழுவதும் மருத்துவமனையில் சோகத்தில் மூழ்கி இருந்தனர்.
இந்நிலையில் தவறான சிகிச்சை அளித்ததால் தான் கர்ப்பிணி இறந்ததாக கூறி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு திடீரென உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் அங்கு வந்த பொலிசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து சாலை மறியலை கைவிட்டு உறவினர்கள் அங்கிருந்து சென்றார்கள்.
தமிழகத்தில் வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி தூக் கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாக்குமரி மாவட்டம் அருகில் உள்ள சின்னத்துறை கிராமத்தை சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ். மீன்பிடி தொழிலாளி. இவரது மனைவி கீதா. இவர்களுக்கு 2 மகள்கள் இருந்தனர். மூத்த மகள் கோயம்புத்தூரில் தங்கியிருந்து படித்து வருகிறார்.
2வது மகள் அனுதாஸ் (19) மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலையில் கிறிஸ்துதாஸ் மீன்பிடிக்க கடலுக்கு சென்றார். மனைவி கீதா அருகில் உள்ள ஹோட்டலில் சமையல் வேலைக்கு சென்றார். அனுதாஸ் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
மதியம் கீதா வீட்டுக்கு வந்த போது அனுதாஸ் சடலமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கதறித்துடித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
வீதியோரத்தில் தரித்திருந்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் அது பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று மாலை தரித்திருந்த கறுப்பு நிற முச்சக்கர வண்டி ஒன்றின் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான முச்சக்கரவண்டியின் முன் கண்ணாடி உட்பட சில பொருட்கள் சேதமடைந்துள்ளன. சம்பவ இடத்திற்கு வந்த இனந்தெரியாத ஒருவர் வீதியோரத்தில் இருந்த இரும்பு கம்பி ஒன்றை எடுத்து முச்சக்கரவண்டியை தாக்கியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பாக ஸ்தலத்திற்கு பொலிஸார் அழைக்கப்பட்ட போதிலும் வரவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும் முச்சக்கர வண்டியின் உரிமையாளர் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு சென்று தாக்குதல் மேற்கொண்ட நபரை அடையாளம் கண்டு முறைப்பாடு செய்துள்ளார்.
மேற்குறித்த சம்பவமானது தனிப்பட்ட குரோதத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரிவருகிறது. மேலும் சம்பவ இடத்தில் பொதுமக்கள் அதிகம் கூடியதனால் போக்குவரத்து சிறிது தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் மூன்றாவது சீசனில் இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்கள் அனைவரும் தாங்கள் வாழ்க்கையில் நடந்த சோகத்தை கண்ணீருடன் தெரிவித்துவருகின்றனர்.
இன்று இலங்கை பெண் லொஸ்லியா தன் கதையை பேசியுள்ளார். தன்னுடைய அக்கா குடும்ப சண்டையில் விபரீத முடிவு எடுத்ததுடன் தற்போது உயிருடன் இல்லாதது பற்றி கண்ணீருடன் பேசியுள்ளார்.
மேலும் தன்னுடைய அப்பா கனடாவில் இருபதாகவும், அவரை பார்த்தே 10 வருடம் ஆகிறது என அவர் கண்ணீருடன் பேசியுள்ளார்.
பிக்பாஸ் லொஸ்லியாவை வைத்து செய்யப்படும் மிகப் பெரிய தந்திரம்? : பிக்பாஸ் மூன்றாவது சீசனில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தாலும் குறுகிய நாட்களிலேயே அதிக ரசிகர்களை ஈர்த்துள்ளார் லொஸ்லியா.
அவர் அழகாக இருக்கிறார் அதனால் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது ஒரு பக்கம். ஆனால் பிக்பாஸ் தொடங்கிய அந்த நாளிலேயே லோஸ்லியாவுக்கு டுவிட்டரிலும், பேஸ்புக்கிலும் ஆர்மி கிளம்பியது எப்படி சாத்தியமானது?
இதற்கு பின்னணியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் தொலைக்காட்சி நிறுவனவே இருக்கலாம் என்கிறார்கள் நெட்டிசன்கள்.
அதாவது லோஸ்லியா இலங்கையை பூர்வீகமாக கொண்டவர். அவருக்கு இந்தியளவில் தானாக ரசிகர்கள் சேர்ந்தாலும், வெளிநாட்டில் ரசிகர்களை சேர வைத்து நிகழ்ச்சியை பிரபலப்படுத்த தொலைக்காட்சி நிறுவனவே பிக்பாஸ் ஆர்மியை சமூகவலைதளத்தில் தொடங்கி வைத்திருக்கலாம் என நெட்டிசன்கள் கணக்கு போடுகிறார்கள்.
நெட்டிசன்களின் கணக்கு உண்மையோ பொய்யோ லோஸ்லியாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.
நாம் கோடை காலம் சந்திக்கும் ஒரு பிரச்சினைகளில் ஒன்று தான் வாய்ப்புண். இது தொடக்கத்தில், வாய்ப்புண்கள் கொப்புளங்களாகத் தோன்றும். சில நாள்களில் உடைந்து, சிறு சிறு குழிப்புண்களாக மாறி, வலியை ஏற்படுத்தும். சாப்பிடும்போதும் பேசும்போதும் வலி அதிகமாகும். தலைவலி, காய்ச்சல் எனத் தொல்லைகளை உண்டாக்கும்.
வாய்ப்புண் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. முக்கியமாக, மலச்சிக்கல், பித்த அஜீரணம், உடற்சூடு, வைட்டமின் சி, பி12, வைட்டமின் சத்து போன்ற ஊட்டச்சத்துக் குறைபாடுகள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவு, வீரியம் மிக்க மருந்துகள் மற்றும் மாத்திரைகளை உட்கொள்ளுதல், உணவு ஒவ்வாமை போன்றவை காரணமாக அமைகின்றன.
அதுமட்டுமின்றி வாய்ப்புண் வெகு நாள்களுக்கு ஆறாமல் இருந்தால், அது புற்றுநோயாக மாறுவதற்கும் வாய்ப்புண்டு. வாய்ப்புண்ணுக்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே எளிதாக குணப்படுத்தலாம். தற்போது அது எப்படி என்று பார்ப்போம்.
வாய்ப்புண் ஏற்பட்டிருந்தால் தேங்காயை அரைத்து பால் எடுத்து ஒருநாளைக்கு மூன்று முறை கொப்பளிக்க வேண்டும். இதனால் வாய்ப்புண் சரியாகும்.
இரண்டு கப் தண்ணீரை கொதிக்கவைக்க வைத்து அதில் வெந்தய செடியின் இலைகளை போட்டு ஊறவைக்கவேண்டும். 10 நிமிடம் கழித்து வெந்தைய இலைகளை எடுத்து போட்டுவிட்டு அந்த தண்ணீரில் வாய்க்கொப்பளிக்க வேண்டும். துளசி இலைகளை முழுவதுமாக மென்று அப்படி விழுங்கிவிடவேண்டும். சில நிமிடங்கள் கழித்து தண்ணீர் குடிக்கலாம். வாய்ப்புண் எரிச்சல் குணமாகும்.
கொய்யா இலையை பறித்து மென்று சாற்றினை விழுங்கவேண்டும். தினசரி மூன்று முறை இதுபோல செய்ய சில தினங்களில் வாய்ப்புண் குணமாகும். காலையில் வெறும் வயிற்றில் சிறு துண்டு மஞ்சள் சாப்பிடலாம். வாய்ப்புண், வயிற்றுப் புண் இருந்தால் குணமடையும். தக்காளியை கூழாக்கி அதை தண்ணீரில் கரைத்து வாய் கொப்பளிக்கலாம் அல்லது வெறும் தக்காளியை நன்றாக மென்று சாப்பிடலாம்.
நெல்லிக்காயை விதை நீக்கிவிட்டு பேஸ்ட் போல அரைக்கவும். அதை வாய்ப்புண் உள்ள இடத்தில் அப்ளை செய்ய வாய்ப்புண் குணமாகும். புதினா இலைச் சாற்றினை வாய்ப்புண் உள்ள இடத்தில் அப்ளை செய்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். எரிச்சல், வலி குணமாகும்.
எலுமிச்சை தோலை நன்கு அரைத்து வாய்ப்புண் உள்ள இடத்தில் பூசலாம் நிவாரணம் கிடைக்கும். வாழைப்பூ வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்தாகும். வாழைப்பூவை வேக வைத்து சூப் வைத்து குடிக்கலாம்
பசியால் கதறும் பறவைக்குஞ்சு ஒன்றிற்கு தாய் பறவை உணவாக சிகரெட் துண்டு ஒன்றை ஊட்டும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கடற்கரையில் இருந்து அந்த புகைப்படம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது, கடற்கரைகள் எவ்வளவு மாசுபாடு நிறைந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டுவதாக ஆய்வாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தாய் பறவை ஒன்று தமது குஞ்சுப்பறவைக்கு உணவாக சிகரெட் துண்டு ஒன்றை ஊட்டுகிறது. அந்த பிஞ்சு பறவையும் அதை முழுங்க முயற்சிக்கிறது. புளோரிடாவின் லார்கோவைச் சேர்ந்த கரேன் மேசன் என்பவர், கடந்த வாரம் செயின்ட் பீட் கடற்கரையில் குறித்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
அதனை இணையத்தில் பதிவேற்றிய அவர், புகைபிடிப்பவர்கள் தயவு செய்து, சிகரெட் துண்டுகளை உரியமுறையில் அப்புறப்படுத்தவும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் தோஷம் நீக்குவதாக கூறியும், அருள் வாக்கு சொல்வதாக நடித்தும் ஏமாற்றி, குடியிருந்த வீட்டின் உரிமையாளரிடம் 18 சவரன் நகைகளை அபேஸ் செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். செங்குன்றம் அடுத்த பாலாஜி கார்டன் பகுதியில் பஞ்சுநாதன் – ராஜாத்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ராஜா (28) ராஜ்குமார் (24) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
இவர்களின் ராஜாவுக்கு பஞ்சுநாதனும், ராஜாத்தியும் சில காலமாக திருமணத்துக்கு பெண் பார்த்து வந்த நிலையில் வரன் அமையாமல் இருந்துள்ளது, இது ராஜாவையும் அவர் பெற்றோரையும் கவலையில் ஆழ்த்தியது.
இந்நிலையில் ராசாத்தி வீட்டுக்கு லொறி ஓட்டுனர் ராசு (36) அவரது மனைவி சங்கமித்ரா (27) ஆகியோர் வாடகைக்கு குடிவந்தனர். வீட்டின் உரிமையாளர்களுடன் நன்றாக பழகிய சங்கமித்ரா, ராஜாவுக்கு தோஷம் இருப்பதால் தான் திருமணம் நடக்காமல் உள்ளது என கூறினார்.
மேலும் தனக்கு தெய்வ சக்தி இருப்பதால் விஷேட பூஜை செய்தால் ராஜாவுக்கு திருமணம் நடக்கும் என கூறினார். பின்னர் பூஜை செய்ய வேண்டும் என ராசாத்தியிடம் இருந்து 18 பவுன் நகைகள் மற்றும் 1 லட்சம் பணத்தை சங்கமித்ரா கேட்டார்.
சரி தங்கள் மகனுக்கு திருமணம் ஆக வேண்டும் என்ற நோக்கில் ராஜா சம்மதத்துடன் அவர் பெற்றோர் பணம் நகையை கொடுத்தனர். இதன் பின்னர் வாங்கிய நகை பணத்தை அவர் திருப்பிக் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. திடீரென வீட்டை காலி செய்யப் போவதாக சங்கமித்ரா கூறவே, செங்குன்றம் பொலிசில் ராஜாத்தி புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சங்கமித்ராவைப் பிடித்து பொலிசார் விசாரித்த போது, நகைகளை அடகு வைத்து விட்ட தகவல் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின்னர் நகைகளை மீட்ட பொலிசார் சங்கமித்ராவைக் கைது செய்துள்ளனர்.
இந்தியாவில் திருமணமான 6 நாளில் புதுப்பெண் கடத்திச் செல்லப்பட்ட நிலையில் அந்த அதிர்ச்சியில் பெண்ணின் தந்தை உயிரிழந்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் கிஷோர் (52). இவர் மகள் ஷோபாவுக்கு கடந்த 6 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று ஷோபா தனது கணவர் மற்றும் சகோதரர் உடன் வெளியில் சென்றார்.
அப்போது சாலையில் ஷோபாவை சந்தித்த அவர் வீட்டு அருகில் வசிக்கும் மோனு (25) என்ற இளைஞர் அவரிடம் தனியாக பேச வேண்டும் என கூறி அவரை தனி இடத்துக்கு அழைத்து சென்றார். பின்னர் அப்படியே ஷோபாவை வலுக்கட்டாயமாக கடத்தி சென்றார் மோனு. இதை பார்த்த அவர் கணவரும், சகோதரரும் அதிர்ச்சியடைந்த நிலையில் அழுது கொண்டே காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தனர்.
இது தொடர்பாக தகவலறிந்த ஷோபாவின் தந்தை கிஷோருக்கு அதிர்ச்சியில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. இந்நிலையில் பொலிசார் மோனுவை கைது செய்து ஷோபாவை மீட்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இந்தியாவில் இளம்பெண்ணும், குத்துச்சண்டை வீராங்கனையுமான சுமன் குமாரியை தாக்கி மோசமாக நடந்து கொண்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீராங்கனை சுமன் குமாரி. இவர், சமீபத்தில் தைவானில் நடந்த குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றவர்.
கொல்கத்தாவில் வசித்து வரும் இவர் கடந்த வெள்ளிக்கிழமை தனது வீட்டில் இருந்து ஸ்கூட்டியில் அலுவலகத்துக்கு கிளம்பினார். அப்போது இவரது வண்டியின் அருகே வந்த இளைஞர் ஒருவர், கடுமையாகத் திட்டிவிட்டு அருகில் நின்ற பேருந்தில் ஏறிவிட்டார்.
அதிர்ச்சி அடைந்த சுமன் குமாரி, பேருந்தை பின் தொடர்ந்து சென்றார். அடுத்த நிறுத்தத்தில் நின்றபோது, அந்த இளைஞரிடம் ஏன் திட்டினாய் என்று கேட்டார். பேருந்தில் இருந்து இறங்கிய அந்த வாலிபர், சுமன் குமாரியின் கழுத்தைப் பிடித்து ஆபாசமாகப் பேசியுள்ளார். அருகில் இருந்த பொலிசாரை உதவிக்கு வருமாறு அழைத்தும் அவர் வரவில்லை இதையடுத்து தனது பேஸ்புக்கில் இது தொடர்பில் விரிவாக எழுதிய சுமன் குமாரி பின்னர் பொலிசில் புகார் செய்தார்.
இதையடுத்து நடவடிக்கையில் இறங்கிய பொலிசார் ராகுல் சர்மா, ஷேக் பெரோஷ், வாசிம் கான் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர். இது தொடர்பாக சுமன் குமாரி கூறுகையில், பெண்கள் தற்காப்பை கற்றுக்கொள்ள வேண்டும். அதனால் தான் என்னை நான் தற்காத்துக் கொள்ள முடிந்தது என கூறியுள்ளார்.
தமிழகத்தில் பைபர் படகுடன் சிக்கிய இலங்கையை சேர்ந்த இளைஞனை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேதாரண்யம் கடற்கரைக்கு இன்று அதிகாலை சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் மூன்று பேர் பைபர் படகு ஒன்றில் வந்துள்ளனர். அதன் பின் அவர்கள் படகிலிருந்து இறங்கி, ஆறுகாட்டுத்துறைக்குச் சென்றதை மீனவர்கள் பார்த்துள்ளனர்.
இதனால் பொலிசாருக்கு தகவல் கொடுத்த மீனவர்கள், குறித்த பகுதிக்கு விரைந்துள்ளனர். அப்போது மூன்று பேரில் இரண்டு பேர் தப்பி விட, ஒருவர் மட்டும் பொலிசில் சிக்கியதால், அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது அவரின் பெயர் ரிக்காஸ் எனவும், இவர் இலங்கை திருகோணமலையை சேர்ந்த ரிக்காஸ் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மற்ற இருவர் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடத்தல் திட்டத்துடன் வந்தார்களா என்பது குறித்தும் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.