வவுனியாவை போதையற்ற தேசமாக மாற்றுவோம் : தெற்கு வலயத்தில் பறந்த பலூன்கள்!!

போதையற்ற தேசமாக நாட்டினை மாற்ற வேண்டும் என்ற ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தூரநோக்கின் அடிப்படையில் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்தை முன்னிட்டு போதைத்தடுப்பு வாசகங்களைத் தாங்கிய பலூன்கள் பறக்கவிடும் நிகழ்வு வவுனியா தெற்கு வலயக்கல்வி திணைக்களத்தில் இன்று இடம்பெற்றது.

வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் முத்து ராதாகிருஷ்ணன் இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
ஜனாதிபதி செயலகம் மற்றும் ஆளுநர் அலுவலகத்தின் ஆலோசனைக்கமைய வவுனியா தெற்கு வலயக்கல்வி திணைக்களத்தின் ஏற்பாட்டில் இப் போதைப்பொருள் ஒழிப்பிற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பலூன்கள் பறக்க விடப்பட்டதுடன் போதைப் பொருள் தொடர்பான விழிப்புணர்வு கருத்துரைகளும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வவுனியா தெற்கு வலய பிரதி கல்விப் பணிப்பாளர், உதவிக் கல்விப் பணிப்பாளர், ஆசிரிய ஆலோசகர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா பெரியார் குளம் ஸ்ரீ முருகன் ஆலய அலங்கார உற்சவம் -2019

வவுனியா பெரியார்குளம் ஸ்ரீ முருகன் ஆலய  வருடாந்த அலங்கார உற்சவம் 02.07.2019   செவ்வாய்கிழமை கொடியேற்றதுடன்  ஆரம்பமாகின்றது.

15 நாட்கள் இடம்பெறும்  அலங்கார உற்சவம் 17.07.2019 இல்  தீர்த்ததுடன்  நிறைவடையவுள்ளது.

வவுனியா நெளுக்குளம் வேம்படி விநாயகர் ஆலய தேர்த்திருவிழா![?]

வவுனியா நெளுக்குளம் வேம்படி விநாயகப்பெருமான் ஆலயத்தில்  வருடாந்த  மகோற்சவத்தில் கடந்த 29.06.2019 சனிக்கிழமையன்று   தேர்த்திருவிழா  இடம்பெற்றது .

 

கொழும்பில் காணிகள் வாங்க காத்திருப்போருக்கு..!!

கொழும்பு பெருநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் காணப்படும் காணிகளின் பெறுமதி 64 சதவீதத்தினால் அதிகரித்திருக்கின்றது. அண்மையில் பிரபல வர்த்தக இணையத்தளத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

கொழும்பு பெருநகரப் பகுதியில் அமைந்துள்ள காணிகளின் விலை எதிர்பார்க்கப்பட்டதைவிட தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

இந்த விலை அதிகரிப்பு பட்டியலில் தலஹேன பிரதேசம் முதலாம் இடத்தை பிடித்துள்ளது. குறித்த பகுதிகளில் உள்ள காணி 64 வீதம் அதிகரித்துள்ளது. அதற்கடுத்தபடியாக ராகம, கொத்தொட்டுவ மற்றும் கொலன்னாவ ஆகிய பிரதேசங்கள் 55 – 35 வீதம் வரையிலும் அதிகரித்துள்ளது.

அத்துடன் தலவத்துகொட பிரதேசத்தில் பேர்ச் காணி 1.7 – 2 மில்லியன் ரூபாயக்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே விலையில் தலஹேன பிரதேசத்திலும் காணி விற்பனை செய்யப்படுகின்றது.

அத்துடன் கொழும்பில் முக்கிய பகுதிகளான தெஹிவளை மற்றும் நாவல பிரதேசத்தில் காணிகளே அதிக பெறுமதியை கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நுகேகொடை, ராஜகிரிய, பன்னிப்பிட்டிய, அத்துருகிரிய, புறக்கோட்டை, மஹரகம, கொட்டாவ மற்றும் ஹோக்கந்தர பகுதிகளில் காணி விலை 25 – 32 வீதம் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் மூன்றே மாதங்களில் சர்வதேச விமான நிலையமாகிறது பலாலி விமான நிலையம்!!

பலாலி விமான நிலையத்தை அனைத்துலக விமான நிலையமாக அபிவிருத்தி செய்யும் பணிகள், வரும் ஜூலை 5ஆம் நாள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, போக்குவரத்து, சிவில் விமான போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

பலாலி விமான நிலையத்தை அனைத்துலக விமான நிலையமாக தரமுயர்த்துவதற்கான பணிகள் ஜூலை 05ஆம் நாள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இந்த நடவடிக்கைக்காக, பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்படாது. பலாலி விமான நிலையம் மற்றும் விமானப்படைக்கு சொந்தமான காணிகளைக் கொண்டே, விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இந்த விரிவாக்கப் பணிகளை இரண்டு, மூன்று மாதங்களுக்குள் முடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பலாலி விமான நிலையத்தினூடாக சிவில் விமான சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கத்தோலிக்க ஆயர் பேரவையின் புதிய நியமனங்கள்!!

இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் உபதலைவராக யாழ். ஆயர் யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் அமர்வு அண்மையில் இடம்பெற்றிருந்தது. இதன்போது புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவராக பதுளை ஆயர் வின்ஸ்ரன் பர்னான்டோ ஆண்டகையும், இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் உபதலைவராக யாழ். ஆயர் யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் நீதி, சமாதானம், மனித முன்னேற்ற பணிகளுக்கான தேசிய ஆணைக்குழுவின் தலைவராகவும், நிதித்துறை ஆணைக்குழுவின் உபதலைவராகவும்,

துறவற உலக சபைகள் குருக்கள் குரு மாணவர்களுக்கான தேசிய ஆணைக்குழுவின் உபதலைவராகவும், லயனல் பி.இம்மானுவேல் அறக்கட்டளை நிதியத்தின் உபதலைவராகவும் யாழ். ஆயர் யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை நியமிக்கப்பட்டுள்ளார்.

வவுனியாவில் வடக்கு, கிழக்கு ஆசிரியைகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!!

வவுனியாவில் வடக்கு கிழக்கு ஆசிரியைகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (21) மாலை ஜேசுவிட் நல்லிணக்க ஒருமைப்பாட்டு பணி அமைப்பின் இயக்குனர் எஸ். பெனடிற் தலைமையில் நடைபெற்றது.

‘பெண்களால் பெண்களுக்காக’ எனும் தொனிப்பொருளில் வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்த ஆசிரியர்கள் தங்கள் திறமைகளை வெளிக்கொணரும் முகமாக ஓராண்டு காலமாக ஆசிரியர் திறன் விருத்திப் பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் வட மாகாண மகளிர் விவகார, சிறுவர் மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் அனந்தி சசிதரன் கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்திருந்தார்.

மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மூதூர், விடத்தல்தீவு ஆகிய பகுதிகளை சேர்ந்த 190 ஆசிரியர்கள் கலந்துகொண்டு கலை நிகழ்வுகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

அருட்பணி மில்றோய் பெனாண்டோ அடிகளார், வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தின் பங்குத்தந்தை எம்.ஜெயபாலன் அடிகளார், சிவஸ்ரீ இராஜமோகன் சர்மா, ஆசிரியர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

வட மாகாண துடுப்பாட்ட வெற்றக்கிண்ணத்தை சுபீகரித்தது யாழ் மாவட்ட அணி!!

இலங்கை துடுப்பாட்ட சங்கத்தால் வடமாகாண மாவட்டங்களுகிடையே நடாத்தப்பட்ட 50பந்து பரிமாற்றங்களை கொண்ட 23 வயதுக்குட்பட்ட அணிகளுக்கான கடினபந்து சுற்றுபோட்டியின் இறுதி போட்டி இன்று (13.01) காலை 10மணியளவில் வவுனியா நகரசபை மைதானத்தில் வவுனியா மாவட்ட கடின பந்து துடுப்பாட்ட சங்கத்தின் தலைவர் யோ.ரதீபன் தலமையில் ஆரம்பமானது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் மாவட்ட அணி களத்தடுப்பை தெரிவு செய்து வவுனியா மாவட்ட அணியினை துடுப்பெடுத்தாட பணித்தது. அதன்படி களமிறங்கிய வவுனியா மாவட்ட அணி 27.5 பந்துபரிமாற்றங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 94ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அதிகபட்சமாக சயரூபன் 29 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் யாழ் அணி சார்பாக விதுசன் 3 இலக்குகளையும், நிதுசன் 3 இலக்குகளையும் பெற்று கொடுத்தனர்.

95 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய யாழ்மாவட்ட அணியினர் 15.4 பந்து பரிமாற்றங்களில் மூன்று இலக்குகளை மாத்திரம் இழந்து 95 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றிருந்தது. துடுப்பாட்டத்தில் யாழ் அணி சார்பாக பானுசன் 31 ஓட்டங்களை பெற்று கொடுத்திருந்தார்.

போட்டியின் ஆட்ட நாயகனாக யாழ் அணியின் விதுசன் தெரிவு செய்யபட்டதுடன், சிறந்த துடுப்பாட்ட வீரராக யாழ் அணியின் பானுசனும். சிறந்த பந்து வீச்சாளராக யாழ் அணியினை சேர்ந்த நிதுசனும் தெரிவுசெய்யபட்டிருந்தனர். வெற்றி பெற்றவர்களிற்கான கிண்ணங்கள் விருந்தினர்களால் வழங்கிவைக்கபட்டது.

இந்நிகழ்வில் வடமாகாண துடுப்பாட்ட சங்கதலைவர் மதிவாணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன், வடமாகாண துடுப்பாட்ட பயிற்று விப்பாளர்கள், விளையாட்டு வீரர்கள் எனபலரும் கலந்துகொண்டனர்.

வவுனியா பழைய மாணவர்களினால் வசதியற்ற 56 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!!

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் 1997ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்ற பழைய மாணவர்களினால் இன்று 11.02.2019 பிற்பகல் 3மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்தின் கேட்போர்கூடத்தில் வசதியற்ற 56 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் 1997 நண்பர்கள் வட்டத்தினால் சேகரிக்கப்பட்ட பணத்திலிருந்து வவுனியா மாவட்ட செலயகத்தின் மாவட்ட சிறுவர் சபையினால் பெற்றுக்கொள்ளப்பட்ட வசதியற்ற பாடசாலை செல்லும் 56 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் உதவி மாவட்ட மேலதிக செயலாளர் நா.கமலதாசன், மாவட்ட சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் ஜே.ஜெயகெனடி, மாவட்ட சிறுவர் சபை உத்தியோகத்தர்கள் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் 1997 நண்பர்கள் வட்ட பழைய மாணவர்களான ந. செல்வக்குமார், மு. ஜெயக்குமார், வே.பிரகாஸ், க.கமலசீலன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தனர்.

பெற்றோர்கள், மாவட்ட செலயகத்தின் உத்தியோகத்தர்கள், கிராம அலவலகர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலய மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு!!

வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலய மாணவத் தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு இன்று இடம்பெறற்றது.

பாடசாலையின் அதிபர் ஏ.கே.உபைத் அவர்களின் தலைமையில் பாடசாலை பிரதான ஒன்றுகூடல் மைதானத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

வவுனியாஇ சூடுவெந்தபுலவு அல் இக்பால் மகாவித்தியாலயத்தில் மாணவர் தலைவர்களாக தெரிவு செய்யப்பட்ட 27 உயர்தர மாணவஇ மாணவிகளுக்கே இச் சின்னம் சூட்டப்பட்டதுடன்இ அவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த மாணவர்களுக்கான சின்னங்களை அதிபர் ஏ.கே.உபைத் மற்றும் சிரேஸ்ட ஆசிரியை திருமதி கமலதாசன் ஆகியோரால் அணிவிக்கப்பட்டதுடன்,

அதிபரினால் மாணவ தலைவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 27 மரக்கன்றுகளும் பாடசாலைn வளாகத்தில் மாணவத்தலைவர்களாலும்இ அவர்களது பெற்றோர்களாலும் இணைந்து நாட்டி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில்இ பிரதி அதிபர் றாசிக்இ ஆசிரியர்கள்இ பெற்றோர்கள்இ மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் இளங்கோ அடிகள் நினைவுநாள் நிகழ்வு!!

சித்திரை முழுநிலா தினமான இன்று வவுனியா கோவில்குளம், சிவன்கோவிலுக்கு அருகிலுள்ள இளங்கோ அடிகளாரின் சிலையடியில் அவரது நினைவுதினம் அனுஸ்டிக்கபட்டது.

வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் தமிழ்மணி அகளங்கன் தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றதுடன், அடிகளாரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. அடிகளார் தொடர்பான சிறப்புரைகளும் இடம்பெற்றிருந்தன.

இந்நிகழ்வில் உபநகரபிதா சு.குமாரசாமி,நகரசபை உறுப்பினர்களான, க.சந்திரகுலசிங்கம், நா.சேனாதிராஜா, தமிழருவி த. சிவகுமாரன், சிவன் கோவில் நிர்வாகத்தினர், இந்துஅன்பக சிறுவர்கள் எனப் பலர் கலந்தகொண்டனர்.

இலங்கை – தாய்லாந்து இடையில் புதிய உடன்படிக்கை!!

இலங்கைக்கு சுற்றுலா பயணிகளை அதிகளவில் வரழைப்பதற்காக இலங்கைக்கும், தாய்லாந்துக்கும் இடையில் புதிய புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு அதிகாரசபைக்கும், தாய்லாந்து சுற்றுலா ஊக்குவிப்பு அதிகாரசபைக்கும் இடையில் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இதன்மூலம் இலங்கை சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்தில் உள்ள பௌத்த வழிபாட்டு தலங்களுக்கு செல்லவும், தாய்லாந்து சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் உள்ள பௌத்த வழிபாட்டு தலங்களுக்கு வரவும் வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட உள்ளது என இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இழுத்து மூடப்படும் நிலையில் வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணை!!

வடமாகாண நிர்வாகத்தின் அசமந்த நடவடிக்கையால் வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணை இழுத்து மூடப்படும் நிலையில் உள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வடகிழக்கு மாகாண சபை இயங்கிய காலத்தில் 1991 ஆம் ஆண்டு வடபகுதியில் வவுனியா நகரை அண்மித்து தாண்டிக்குளம் பகுதியில் ஏ9 பிரதான வீதியின் பக்கமாக 72 ஏக்கர் நிலப்பரப்பில் ஆரம்பிக்கப்பட்ட அரச விதை உற்பத்திப்பண்ணை அரச முற்பணக்கணக்கில் இயங்கிவருகிறது.

வடக்கு மாகாணம் தனியாக்கப்பட்டதன் பின்னர் குறித்த பண்ணை வடமாகாண சபையின் கீழ் விவசாய அமைச்சின் கீழ், மாகாண விவசாயப்பணிப்பாளர் ஆழுகைக்குட்பட்டு பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் பணிமனை – வவுனியா ஊடாக இயங்கி வருகிறது.

வருமானத்தை நோக்கமாகக் கெண்டு இயக்கப்படும் இந்தப்பண்ணை மானாவாரி நெற்செய்கை காணியாக 5 ஏக்கர், வவுனியா குளத்தின் கீழ் நீர்பாசன வயல் காணி 27 ஏக்கர்,நீர்பாசனத்திற்குட்பட்ட மேட்டு காணி 10 ஏக்கர், மேட்டு நிலம் 16 ஏக்கர் உள்ளடங்கலாக தற்போது 68.5 ஏக்கர் நிலப்பரப்பில் இயங்கிவருகின்றது.

வவுனியா நகரம், நகர அபிவிருத்தியில் இடஅமைவு காரணமாக பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துவரும் நிலையில் பொதுப்போக்குரத்து நடவடிக்கைக்காக பஸ் நிலையத்தை அபிவிருத்தி செய்யும் வகையில் (புதிய பேருந்து நிலையம்) 2009 ஆம் ஆண்டு பஸ் நிலையம் அமைப்பதற்காக பண்ணைக்குரிய 3 ஏக்கர் காணி வவுனியா நகரசபைக்கு பாரப்படுத்தப்பட்டது. அத்துடன் மேலும் ஒரு ஏக்கர் நிலம் தற்போது நகரசபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

நகர அபிருத்திக்காக காணிக்கான கேள்வி அதிகரித்த நிலையில் ஏ 9 வீதியின் நீண்ட பகுதி அரச விதை உற்பத்ப்பண்ணைக்கு செந்தமாக காணப்படுவதால் அத்தகைய நிலத்தை கையகப்படுத்தி வர்த்தக வியாபார நிலையங்களை அமைப்பதற்கு பல்வேறு தரப்பினர் முயன்றுவரும் நிலையில் மாகாண ஆழுகைக்குட்பட்ட அரச வருமான நிறுவனம் ஒன்றை இல்லாமல் செய்து அந்த நிலத்தை வேறு தேவைகளுக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என விவசாயத்துறை சார்ந்த சில அதிகாரிகள் முயன்று தற்போது வரை அவ்வாறான கையகப்படுத்தல் நடவடிக்கையை தடுத்து பண்ணையை இயக்குதில் பங்காற்றிவருகின்றனர்.

வவுனியாமாட்டத்திற்கு மட்டுமன்றி வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கும் மரக்கறிக்கன்று உற்பத்தி, விதை நெல் உற்பத்தி, பழப்பயிர் உற்பத்தி, உப உணவு பயிர் உற்பத்தி, நல்லின விதை உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கிவரும் குறித்த பண்ணை அரச வருமானத்துறையில் கணிசமான பங்கை ஆற்றிவருகிறது. அத்துடன் 20 க்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள், 20 க்கும்பேற்பட்ட பருவகால ஊழியர்களுக்கும் தொழில் வழங்கும் நிறுனமாகவும் இந்தப் பண்ணை செயற்பட்டுவருகின்றது.
இவ்வாறு இயங்கிவரும் பண்ணையில் சில வருடங்களாகப் பணியாற்றிவரும் பண்ணை முகாமையாளர்களது முறைகேடான நடடிக்கைகளும் அவர்களுக்கு சார்பாக மேல் மட்ட அதிகாரிகள் செயற்டபடும் விதமும் அரவ வருமான நிறுனம் ஒன்றை இழுத்துமூடுமளவிற்கு கொண்டுவந்துள்ளது.

நீண்டகாலமாகவே பண்ணையிள் வருமானம் குறைவாகவும் பண்ணை நட்டத்திலே இயங்குவதாகவும் ஆண்டுக் கணக்கறிக்கைகள் காட்டியபோதும் அதுகுறித்து கணக்காய்வுகள் சீராகச் செய்யப்படாது, இருட்டடிப்புச்சய்யப்பட்ட நிலையில், பண்ணை ஊழியர்களுக்குள் ஏற்பட்ட சில முரண்பாடுகள் காரணமான ஊழல் மோசடிகள் சம்பந்தமான பல தகவல்கள் 2018 ஆம் ஆண்டு வெளிவரத்தொடங்கின.

பண்ணை பணியாளர்களை மேற்கோள் காட்டி ஊழல் குறித்த தகவல்கள் உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டநிலையில் சில விசாரணைகளும், பக்கச்சார்பான நடவடிக்கைகளும் காரணமான பண்ணையில் நடைபெற்ற மோசடிகள் தொடர்பாக உண்மை கண்டறியப்படாமல் பண்ணையை தொடர்ந்து இயக்குவதில் பெரும் இடர்களை நிர்வாகத்தரப்பு எதிர்நோக்கியுள்ளது.

2014 ஆம் ஆண்டில் பண்ணை முகாமையாளராகப் பொறுப்பேற்ற விவசாயப் போதனாசிரியர் ஒருவர், தனக்கு சார்பாக பணியாட்களைத் தயார்ப்படுத்தி , பணக்கையாடல்களை மேற்கொண்டுள்ளார் என்று அந்தப்பண்ணையில் பணிபுரியும் ஊழியர்களே தெரிவித்த நிலையில், வவுனியா பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் பணிமனை நிர்வாகிகள் உள்ளக ஆய்வு குழுவை உருவாக்கி ஆய்வு நடத்தியபோது, பல குறைபாடுகள் பண்ணையில் காணப்படுவதையும், முறைகேடு நடைபெற்றமைக்கான ஆதாரங்களையும் இனங்கண்டு அறிக்கைப்படுத்தி மாகாண பணிப்பாளருக்கு அறிக்கையிட்டுள்ளனர்.

நெல் உற்பத்தியில் காணப்பட்ட வினைத்திறனற்ற விளைச்சல், பன்றி வளர்ப்பில் காணப்பட்ட குறைபாடுகள், பப்பாசி கன்று உற்பத்தியில் காணப்பட்ட முளைதிறன் குறைகாடுகள் , பால் உற்பத்தியில் காணப்பட்ட குறைபாடுகள், புத்தக மீதிகளுக்கு மேலதிகமாக பதுக்கிகை;கப்பட்ட பொருட்கள் என பல்வேறு குறைபாடுகள் இந்த குழு மூலம் வெளிப்டுத்தப்பட்டு, அது குறித்து தலைமை அதிகாரிக்கு அறிக்கையிடப்பட்டுள்ளது.
இதங்கு மேலதிகமாக மாகாண கணக்காய்வு அதிகாரிகளின் விசாரணையிலும் இதேபோன்ற முக்கிய குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டு கணக்காய்வு ஐயவினாக்களும் தொடுக்கப்பட்டுள்ளன.

ஆனால் இந்த விடையங்கள் குறித்து கருத்திலெடுக்காத மாகாண பணிமமை நிர்வாகிகள், ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பணியாளர்களை பாதுகாத்து இடமாற்றம் வழங்கியதுடன் பின்னர் நியமிக்கப்பட்ட ஊழியர்களை சீராகப்பணியாற்றவும், உற்பத்தி மற்றும் வருமான நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கும் தடையாகச் செயற்பட்டு வருகின்றனர் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நிலமை இவ்வாறு தொடர, பின்வந்த நிவாகத்தின்மீதும் தற்போது ஊழல் குற்றம் சுமத்தப்பட்டு, அது தொடர்பாகவும் கணக்காய்வு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவை ஊடகங்கள் வாயிலாகவும் வெளிக்காண்டுவரப்பட்டுள்ளன.

அரச நிறுனம் ஒன்றின்மீது பலவருடங்களாக ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு அவை தொடர்பில் முறைப்படி ஆராயாது, நாடவடிக்கை மேற்கொள்ளாது, அரச அதிகாரிகளே தங்களுக்குள் அடிபட்டு சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்கின்றனர். இந்த நிலைமை தொடர்ந்தால் குறித்த பண்ணையை இழுத்து மூடவேண்டிய நிலையே ஏற்படும். இது வடமாகாண நிர்வாக வினைத்திறனின்மையையே வெளிப்படுத்தும். இந்த பரிதாப நிலைகுறித்து இனியாவது அரச உயர்மட்டம் சிந்தித்து செயற்பட வேண்டும் என பலரும் தெரிவித்துள்ளனர்.

புனித மடு தேவாலயத்தை நோக்கி பக்தர்கள் படையெடுப்பு!!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டிலிருந்து நூற்று ஐம்பதிற்கும் மேற்பட்ட யாத்திரியர்கள் மடுத்தேவாலயத்திற்கு சென்றுள்ளனர். குறித்த யாத்திரியர்கள் நட்டாங்கண்டலிருந்து பாலம்பிட்டி ஊடாக மடுநோக்கி சென்றுள்ளனர். மன்னார் மடுத்தேவாலயத்தின் ஆடிமாத்திருவிழா எதிர்வரும் 2ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கப்பலேந்தி மாதா பகுதியில் உள்ள சுமார் 150 இற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆலயத்திலிருந்து புறப்பட்டு ஆனையிறவு ஏ-9 பாதையூடாககொக்காவில் சந்தையை சென்றடைந்துள்ளனர்.

அங்கிருந்து ஐயன்கன்குளம் தேறாங்கண்டல் மல்லாவி ஊடாக நட்டாங்கண்டலை சென்றடைந்து, நட்டாங்கண்டலிருந்து பாலம்பிட்டி ஊடாக மடுவிற்கு யாத்திரியர்கள் சென்றுள்ளனர்.

இன்று நட்டாங்கண்டலிருந்து பாலம்பிட்டி வரை செல்லும் யாத்திரியர்கள் குறித்த பாதையானது சுமார் 19 கிலோமீற்றர் நீளமான தூரம் காட்டுப்பாதையாகவும் மக்கள் பயணிப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் யாத்திகர்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு – வவுனிக்குளத்தின் கீழ் சிறுபோகச் செய்கைக்கு விநியோகிப்பதற்கு போதியளவு நீர் உண்டு!!

முல்லைத்தீவு – வவுனிக்குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோகச் செய்கைக்கு விநியோகிப்பதற்கு போதியளவு நீர் இருப்பதாக பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர் ந.சிறிஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு – வவுனிக்குளத்தின் கீழ் இவ்வாண்டும் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோக செய்கைக்கு உரிய முறையில் நீர்விநியோகம் மேற்கொள்ளப்படாமையினால் தங்களுடைய பயிர்கள் அழிவடையும் நிலையில் இருப்பதாக விவசாயிகள் இன்று குற்றம் சாட்டியுள்ளனர். இவ் விடயம் தொடர்பில் விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில்,

குறிப்பாக, வவுனிக்குளத்தின் கீழுள்ள செல்வபுரம் முதலாம் வாய்க்கால், இரண்டாம் வாய்க்கால், போன்ற பகுதிகளில் பெருமளவான வயல் நிலங்கள் நீர் விநியோகம் இன்றி கருகிய நிலையில் காணப்படுகின்றது.

இதேவேளை பொன்னகர், கரும்புள்ளியான், போன்ற பகுதிகளிலும் இவ்வாறு நீர் இன்றி கருகிய நிலையில் காணப்படுகின்றன. இதனால் விவசாயிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த உத்தியோகத்தரை இடமாற்றம் செய்து வேறு ஒரு உத்தியோகத்தரை நியமிக்குமாறு 200 இற்கும் மேற்பட்ட விவசாயிகள் கையொப்பிட்ட கடிதத்தினை நீர்ப்பாசனத்திணைக்களத்திடம் வழங்கவுள்ளனர். இது தொடர்பில் வவுனிக்குளம் நீர்ப்பாசனத்திணைக்களம் கருத்து தெரிவிக்கையில்,

வவுனிக்குளத்தில் 6060 ஏக்கர் நிலப்பரப்பில் காலபோக செய்கை மேற்கொள்ளப்பட்டாலும் குளத்தின் அளவைக்கொண்டு இம்முறை 3400 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோகச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் மேலதிக விதைப்புக்கள் தொடர்பில் கமநல அபிவிருத்தி திணைக்களமே நடவடிக்கை எடுக்கவேண்டும். குளத்தில் இருக்கின்ற நீர் சிறுபோகச் செய்கைக்கு போதுமானதாக இருந்தாலும் தற்போதைய வெப்பம் காற்று காரணமாக நீரின் ஆவியாதல் தன்மை அதிகரித்துக் காணப்படுகின்றது.

விவசாயிகளும் நீரைச்சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்ட திணைக்களம், உத்தியோகத்தர் மீது உள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்குமிடத்துஅதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வவுனியா கோமரசங்குளத்தில் பதற்றநிலை : இருவர் தப்பியோட்டம் : ஒருவர் வைத்தியசாலையில்!!

வவுனியா கோமரசங்குளத்தில் பதற்றநிலை

வவுனியா கோமரசங்குளத்தில் மோட்டார் சைக்கில் சென்ற பெண் மீது இன்றிரவு (30.06.2019) 7.30 மணியளவில் இனந்தெரியாத இரு நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

கோமரசங்குளத்திலிருந்து மகாறம்பைக்குளம் நோக்கி குறித்த பெண் கணவர் மற்றும் பிள்ளையுடன் மோட்டார் சைக்கிலில் சென்றுள்ளனர். அவர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரு நபர்கள் கோமரசங்குளம் பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிலில் பின்பகுதியிலிருந்த பெண் மீது தடியினால் தாக்குதல் மேற்கொண்டு விட்டு அவரது கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியினை அறுக்க முற்பட்டுள்ளார்.

இதன் போது கணவன் காப்பாற்றுமாறு கத்தியுள்ளார். இதனையடுத்து மோட்டார் சைக்கிலில் வந்த இனந்தெரியாத நபர்கள் தப்பியோடியுள்ளனர்.

அதன் பின்னர் பொதுமக்கள் மற்றும் கணவரின் உதவியுடன் காயமடைந்த பெண் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

32 வயதுடைய பெண்ணே வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.