ஐந்து நாட்கள் தனியறையில் 16 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்!!

சிறுமிக்கு நடந்த கொடூரம்

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் 16 வயது சிறுமி நாள் கணக்கில் ஒரு கும்பலால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமராவதி நகரை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 17ஆம் திகதி பேருந்து நிலையத்தில் இளைஞர் ஒருவரை சந்தித்துள்ளார். பின்னர் இருவரும் நட்பானார்கள், இதையடுத்து தான் தங்கியிருக்கும் அறைக்கு சிறுமியை அந்த இளைஞர் அழைத்து சென்றார்.

அங்கு இளைஞரின் ஐந்து நண்பர்கள் இருந்தனர். ஆறு பேரும் சேர்ந்து அந்த சிறுமியை ஐந்து நாட்கள் துஷ்பிரயோகம் செய்தனர். பின்னர் சிறுமி அங்கிருந்து தப்பி பேருந்து நிலையத்துக்கு சென்றார், அங்கு காவல் துறை அதிகாரி ஒருவர் இருந்த நிலையில் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

சிறுமியின் புகாரை தொடர்ந்து ஆறு பேரையும் பொலிசார் கைது செய்தனர். இதனிடையில் இச்சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மாநில உள்துறை அமைச்சர் சுச்சாரித்தா, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்

மாலையும் கழுத்துமாக நின்ற கணவன் : கோவிலுக்கு சென்ற மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி

தமிழகத்தில் முதல் மனைவியை ஏமாற்றி, கணவன் இரண்டாவது திருமணம் செய்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே மதனத்தூரை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ்.

48 வயதாகும் இவர் இராணுவ வீரர் என்று கூறப்படுகிறது. இவருக்கும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த சொந்தக்கார பெண்ணான ஸ்டெல்லா என்பவருக்கும் 22 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு கணவர் சந்திர்பபோசுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஸ்டெல்லா கோபித்துக் கொண்டு அம்மாவின் வீட்டிற்கு மகன்களுடன் சென்று வாழ்ந்து வந்துள்ளார்.

இதையடுத்து மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த சுபாஷிற்கு இரண்டாம் திருமணம் செய்ய ஆசைப்பட்ட அவர் வரன் தேடியுள்ளார். அப்போது அவருக்கு மதுரையை சேர்ந்த பெண் ஒருவரை பிடித்துப் போக, அவரை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்.

அதன் படி நேற்று சுவாமிமலையில் இருக்கும் முருகன் கோவிலில் சுபாஷ் அவருக்கு தாலியை கட்டி கோவிலை வலம் வந்துள்ளார். அப்போது தான் தஞ்சாவூரில் இருக்கும் கோவில்களை சுற்ற பார்க்க ஸ்டெல்லா மகனுடன் ஊருக்கு சென்றுள்ளார்.

நேற்று சுவாமிமலையில் சாமி தரிசனம் செய்தவர், திடீரென மாலையும் கழுத்துமாக சுபாஷ் நின்ற தரிசனத்தையும் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அதன் பின் இது குறித்து அருகில் இருந்த காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்க, பொலிசார் சுபாஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஜெட் விமானங்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து!!

ஜெட் விமானங்கள்

ஜேர்மனியில் இரண்டு போர் ஜெட் விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. மசோவ் அருகே வடக்கு ஃப்ளீசென்சி பகுதியில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு அவசர உதவி குழுவினர் விரைந்துள்ளனர். விபத்தில் சிக்கிய இரண்டு விமானங்களும் ஐரோப்பா போர் விமானங்கள் என தெரியவந்துள்ளது.

எனினும், ஒரு விமானத்தின் விமானி மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மீட்கப்பட்ட விமானிக்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. காணாமல் போன மற்றொரு விமானியை தேடும் பணி முடக்கிவிடப்பட்ட நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சம்பவம் குறித்து விமானப்படை அதிகாரி ஒருவர் கூறியதாவது, விபத்து நடப்பதற்கு முன் இரண்டு விமானிகளும் விமானத்திலிருந்து பத்திரமாக வெளியேறியுள்ளனர். காணாமல் போன இருவரில் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

வலியால் தவித்தது போதும் : கைகள் இரண்டையும் துண்டிக்க மருத்துவரிடம் கெஞ்சிய இளைஞர்!!

வங்கதேச இளைஞர்

கைகள் இரண்டும் மரம் போன்று வளரும் அபூர்வ நோயால் தவிக்கும் வங்கதேச இளைஞர், தற்போது வலி தாங்கமுடியவில்லை எனக் கூறி தனது கைகள் இரண்டையும் துண்டித்து நீக்க மருத்துவர்களை நாடியுள்ளார்.

Treeman என அறியப்படும் வங்கதேசத்தின் 28 வயதான அபுல் பஜந்தருக்கு இதுவரை 25 அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது தன்னால் உயிர் பிரியும் வலியை தாங்கிக்கொள்ள முடியவில்லை எனக் கூறி தமது இரு கைகளையும் துண்டித்து நீக்க மருத்துவர்களை நாடியுள்ளார் பஜிந்தர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இதுவரை 25 அறுவைசிகிச்சைகள் மேற்கொண்டுள்ள நிலையில், ஒவ்வொரு முறையும் நோய் குணமானதாக மருத்துவர்களால் உறுதி அளித்தும், மீண்டும் மீண்டும் அந்த நோய் தாக்கம் பஜிந்தரை வாட்டி வந்துள்ளது.

இனிமேலும் இந்த வலியை தம்மால் தாங்கிக்கொள்ள முடியாது எனக் கூறும் பஜிந்தர், இரவு படுத்துறங்கி பல நாட்களானது எனவும், வலியால் உயிர் பிரிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கைகள் இருந்தும் தமக்கு பயனில்லை எனக் கூறும் பஜிந்தர், அதை துண்டித்து நீக்க மருத்துவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும்,

பஜிந்தரின் கோரிக்கைக்கு அவரது தாயார் ஆமினா பீபியும் ஆதரவு தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, மகன் வலியால் தவிப்பது தம்மால் கண்டிருக்க முடியவில்லை எனவும் ஆமினா கண்கலங்கியுள்ளார். வெளிநாட்டுக்கு சென்றால் உரிய சிகிச்சை பெறலாம் என கூறும் பஜிந்தர்,

ஆனால் தற்போதைய பொருளாதார சூழலில் அது சாத்தியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா அரசின் உதவியுடன் தற்போது சிகிச்சை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், உலகில் அரை டசின் பேருக்கே இந்த விசித்திர நோய் தாக்கியுள்ளதாகவும், வங்கதேசத்தில் ஒரு பெண்ணுக்கு இந்த நோய் தாக்கியதாகவும், அதை மருத்துவர்கள் குணப்படுத்தியதாகவும் பஜிந்தர் தெரிவித்துள்ளார்.

கனடாவில் வீடுகளில் கொள்ளையில் ஈடுபடும் தமிழ் இளைஞர்கள் : பொலிஸாரை மிரள வைத்த சிறுவர்கள்!!

கனடா, ரொரன்டோ பகுதியில் துப்பாக்கி மற்றும் மடிக்கணினியை திருடிய குற்றச்சாட்டில் தமிழ் இளைஞர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரபல ஒன்லைன் இணையத்தளத்தில் 23 வயதான யுவதி ஒருவர் தனது மடிக்கணினியை விற்பனை செய்வதாக விளம்பரம் செய்திருந்தார். இதனை கொள்வனவு செய்வதற்கு ஆண் ஒருவர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய அடுத்த நாள் அதனை கொள்வனவு செய்வதற்காக இருவர் சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணிடம் இருந்த மடிக்கணினை பறித்து கொண்டு தப்பியோடியுள்ளனர். இதன்போது இருவரில் ஒருவரின் இடுப்பில் இருந்த துப்பாக்கி ஒன்று கீழே விழுந்துள்ளது.

அண்மையில் திருடப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்த மோட்டார் வாகனம் ஒன்றில் குறித்த இருவரும் தப்பிச் சென்றுள்ளனர்.

அடுத்த நாள் நபர், திருடிய மடிக்கணியை இணையம் ஊடாக விற்பனை செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய விற்பனை செய்ய தயாராகிய நபருடன் பொலிஸ் அதிகாரிகள் தொடர்பு கொண்டு அவரை கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபரிடம் மடிக்கணினி ஒன்றும், பெரிய கத்தி, துப்பாக்கி உட்பட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய, குழுவாக செயற்பட்ட விடயம் தெரியவந்துள்ளது. அதற்கமைய அந்த குழுவில் இயங்கியவர்கள் கைது செய்யப்பட்டனர். சிறுவர்கள் இருவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். குழுவாக செயற்படும் இந்த குழுவில் சிறுவர்கள் உள்ளமை குறித்து ரொரன்டோ பொலிஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குழுவினரால் திருடப்பட்ட மோட்டார் வாகனம் ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டது.

இந்நிலையில் டொரொன்டோவை சேர்ந்த 18 வயதான தாஜீன் அலெக்சாண்டர் ஸ்மித், மட்சுஷன் கமலகுமரன், மொஹ்சென் யஹ்யா, லக்ஸன் லக்ஷ்மிகாந்தன் ஆகிய இளைஞர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் சிறுவர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிடவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் ஜுலை மாதம் 31ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்தால் தம்மை அழைப்புக்கொண்டு தகவல் வழங்குமாறு டொரொன்டோ பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ரொன்டோவில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

-தமிழ்வின்-

91 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள ஆபத்து!!

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள ஆபத்து

நாட்டில் இந்த வருடத்தில் இதுவரை 22 ஆயிரத்து 283 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள் என்று சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளார்கள். கூடுதலான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் இனம் காணப்பட்டுள்ளனர். இதன் எண்ணிக்கை நான்காயிரத்து 800 ஆகும். இரண்டாவது கூடுதலான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் இனங்காணப்பட்டுள்ளார்கள்.

யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது. 1928ம் ஆண்டின் பின்னர் யாழ்ப்பாண மாவட்டதில் மிகக் கூடுதலான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள்.

நாடாளவிய ரீதியில் கூடுதலான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்ட மூன்றாவது மாவட்டமாக யாழ்ப்பாணம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நியூசிலாந்து செல்ல முற்பட்ட 100க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்களை காணவில்லை!!

நியூசிலாந்து செல்ல முற்பட்ட..

கடந்த ஆறு மாத காலப்பகுதியில், நியூசிலாந்து செல்ல முற்பட்ட 100க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ANI செய்தி முகமையை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,

கடந்த ஆறு மாத காலப்பகுதியில் கேரள மாநில கொச்சின் துறைமுகத்திலிருந்து நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற 243 பேர் காணாமல் போயுள்ளனர். இவர்களில் 164 பேர் டெல்லியில் வசிக்கும் இலங்கை தமிழர்களாவர்.

குறித்த அனைவரும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் நியூசிலாந்து நோக்கி சென்றுள்ளனர். அங்கு சென்றதும் அழைக்கின்றோம் என்றவர்களை கடந்த ஆறு மாத காலமாக தொடர்புகொள்ள முடியவில்லை என அவர்களின் உறவினர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், குறித்த அனைவர் தொடர்பிலும் தகவல் அறிந்துகொள்ள மத்திய மற்றும் மாநில அரசு உதவி செய்ய வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள கேரள பொலிஸார் 10 பேரை கைது செய்துள்ளதாகவும், மேலும் மூவரை தேடி வருவதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல் -அமரர் பொன்னுத்துரை கலைநாதன்(Video-Live)

அமரர் .பொன்னுத்துரை கலைநாதன்

நயினாதீவு 7 ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் 33, பெரியதம்பனை மற்றும் 28, கரப்பன்காடு, வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட உயர்திரு பொன்னுத்துரை கலைநாதன் கடந்த (24.06.2019) திங்கட்கிழமை அதிகாலை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற பொன்னுத்துரை மற்றும் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை மற்றும் சிவயோகம் தம்பதியினரின் அன்பு மருமகனும் வேதாரோகினியின் பாசமிகு கணவரும் கோகுலன் (பொது முகாமையாளர் , சண்முகம் ஸ்ரோர்ஸ், வவுனியா), அகல்யா (பிரான்ஸ்), ராகுலன் (வைத்தியர் – கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும் பத்மினி, கதிர்காமநாதன் (பிரான்ஸ்), சாம்பவி ( அபிவிருத்தி உத்தியோகத்தர், யாழ் போதனா வைத்தியசாலை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் அன்னலட்சுமி செல்வரெத்தினம் (கனடா), பாக்கியலட்சுமி சுந்தரலிங்கம் (கனடா), சச்சிதானந்தன் (மணியம்), நடராசா (குஞ்சுக்கிளி, சுவிஸ்) ஆகியோரின் அன்புச்சகோதரனும் ஹரிணி, அபர்நாத், ஹம்ரிஷ், ஹரிஜித், விசாகி, சங்கீத்மன், சபீஸ்மன், வாமணன், லயஸ்ருதி, சம்ஸ்கிரிதி, ராஜாதித்ததேவ் ஆகியோரின் அன்புப்பேரனுமாவார்.

அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் நாளை (27.06.2019) வியா­ழக்­கி­ழமை காலை 7.00 மணி­ய­ள­வில் கரப்பன்காடு வவுனியா இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தகனக்கிரியைக்காக தச்சநாதன் குளம் இந்து மயா­னத்­திற்கு எடுத்­துச்­செல்­லப்­ப­டும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் ­கொள்­ள­வும்.

 

தகவல்

குடும்பத்தினர்.

 

நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற 243 இலங்கை தமிழர்களின் கதி என்ன? ஆறு மாதங்களாக தொடரும் மர்மம்!!

243 இலங்கை தமிழர்களின் கதி என்ன?

இந்தியாவின் கேரள மாநில கொச்சின் துறைமுகத்திலிருந்து நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கை தமிழர்கள் 243 பேரை கடந்த ஆறு மாதங்களாக காணவில்லை.

கடந்த ஜனவரி மாதம் கொச்சியில் இருந்து படகு மூலம் நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற 243 இலங்கை தமிழர்கள் குறித்து இன்று வரை எந்த தடயமும் கிடைக்கவில்லை என உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.காணாமல் போன 243 பேரில் 164 பேர் டெல்லியில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

காணாமல் போன தங்கள் உறவினர்களைக் கண்டுபிடிக்குமாறு அரசாங்கத்திடம் முறையிட்டு, இன்றுவரை எந்த தடயமும் கிடைக்கவில்லை. அரசாங்கத்திடமிருந்து எங்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை, இந்த விடயத்தில் கவனம் செலுத்துமாறு அவர்களிடம் கேட்டுக்கொள்கிறோம் என 243 பேரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து விசாரித்துவரும் கேரள பொலிஸ், இவர்களை நியூசிலாந்துக்கு அனுப்ப உதவிய 10 பேரை கைது செய்துள்ளோம் என்றும், மூன்று பேரை தேடி வருகிறோம் என்றும் தகவல் தெரிவித்துள்ளது.

தெஹிவளை வர்த்தக நிலையத்திற்குள் மர்ம நபர் அட்டகாசம் : ஒருவர் குத்திக் கொலை!!

மர்ம நபர் அட்டகாசம்

தெஹிவளை பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்திற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் கடையின் உரிமையாளரைக் குத்திக் கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று மாலை 3மணியளவில் தெஹிவளையில் அமைந்துள்ள ஹார்ட்வெயார் ஒன்றுக்குள் நுழைந்த மர்மநபர், அதன் உரிமையாளரிடம் கப்பம் கேட்டதாகவும் அதனை வழங்க மறுத்ததால் குறித்த மர்ம நபர் உரிமையாளரை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன்போது வர்த்தக நிலையத்தின் உரிமையாளரான அப்துல் அசீஸ் (60) என்பவரே உயிரிழந்துள்ளார். தாக்குதலுக்கு இலக்கானவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதே அவர் உயிரிழந்துள்ளார் என மருததுவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை பேஸ்புக் பயன்படுத்துபவர்களுக்கு விசேட அறிவித்தல்!!

பேஸ்புக் பயன்படுத்துபவர்களுக்கு விசேட அறிவித்தல்

இலங்கையில் ஏற்பட்டிருக்கு அசாதாரண சூழ்நிலையினையடுத்து சமூக ஊடகமான முகநூல் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக பேஸ்புக் நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இதன்படி, முக நூல் மூலமாக செய்திகளை அனுப்பும் போது, ஒரு தகவலை ஐந்து பேருக்கு மாத்திரமே பகிர முடியும். இதேவேளை, வெறுப்புணர்வு சொற்களை கொண்டுள்ள பதிவுகளை அடையாளம் கண்டு தணிக்கை செய்வதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தையும் ஈடுபடுத்தியுள்ளதாக பேஸ்புக் அறிவித்துள்ளது.

இலங்கையில் தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகளால் நாட்டில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து சமூக வலைத்தளங்கள் அனைத்தும் தடைசெய்யப்பட்டிருந்தன. நாட்டில் வன்முறைகளும், இனவாதக் கருத்துக்களும் சமூக வலைத்தளங்களின் வாயிலாக பரப்பப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தததுடன். பலர் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டனர்.

இந்நிலையில் இணையத்தளங்களின் ஊடாக பரப்பப்படும் இனவாதக் கருத்துக்களையும் வன்முறை சார்ந்த காணொளிகளையும் தடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீன அரசாங்கத்திடம் உதவிகோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வெறுப்புணர்வு கருத்துக்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக பரவுவதன் விளைவாகவே வன்முறைகளும் ஏற்படுவதாக அரசாங்கம் அடிக்கடி தெரிவித்து வந்தது. இது தொடர்பாக அரசாங்கம் பேஸ்புக் நிறுவனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் காணப்பட்ட இணக்கப்பாட்டை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறுமா? இவை நடந்தால் தகுதிபெறும்!!

இலங்கை அணி தகுதி பெறுமா?

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு அரையிறுதி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மே மாதம் 30-ஆம் திகதி துவங்கிய உலகக்கோப்பை தொடர் இப்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கிட்டத்தட்ட அனைத்து அணிகளும், இந்தியாவைத் தவிர 6 போட்டிகளில் விளையாடிவிட்டன.

இதில் இலங்கை அணி விளையாடிய 6 போட்டிகளில் 2-ல் வெற்றி 2-ல் தோல்வி, இரண்டு போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டது என மொத்தம் 6 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளன. இன்னும் இலங்கை அணிக்கு 3 போட்டிகள் தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவு, இந்தியாவுடன் உள்ளன. இந்த மூன்று போட்டிகளில் இலங்கை கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.

இதில் மூன்றிலும் வெற்றி பெற்றுவிட்டால் இலங்கை அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும். அதே சமயம் ஒன்றில் தோல்வியடைந்துவிட்டால் 10 புள்ளிகளுடன் இருக்கும்.

அப்போது இங்கிலாந்து அணி அனைத்து போட்டிகளிலும் தோற்க வேண்டும், வங்கதேசம் அணி இரண்டு போட்டிகளுக்கு மேல் ஜெயிக்க கூடாது, பாகிஸ்தான் மீதம் விளையாடும் போட்டிகளில் ஒரு போட்டியிலாவது தோற்க வேண்டும். இது நடந்தால் மட்டுமே இலங்கை அணியால் அரையிறுதிக்கு தகுதி பெற முடியும்.

மனைவியின் புகைப்படத்தை தவறான நோக்கத்தில் வட்ஸ் அப்பில் அனுப்பிய கணவன்!!

கணவரின் அதிர்ச்சி செயல்

இந்தியாவில் வரதட்சணைக்காக, மனைவியுடன் தான் இருக்கும் புகைப்படங்களை உறவினர்களுக்கு அனுப்பிய கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் சிதுல். இவருக்கும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னர் வரட்சணை கேட்டு மனைவியை சிதுல் அடித்து கொடுமைப்படுத்தினார்.

இது குறித்து மனைவி அவர் குடும்பத்தாரிடம் கூறிய நிலையில் அவர்கள் பொலிஸ் புகார் கொடுத்ததையடுத்து பொலிசார் சிதுலை கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர். இதன் பின்னர் வரதட்சணை பணத்தை பெற மிக மோசமான செயலை செய்தார் சிதுல்.

தன்னுடைய மனைவியுடன் தான் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை மனைவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு வட்ஸ் அப்பில் அனுப்பி ரூ 5 லட்சம் வரதட்சணை கொடுக்கவில்லை என்றால் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதையடுத்து சிதுல் மனைவி மற்றும் குடும்பத்தார் அதிர்ச்சியடைந்தனர். மேலும், ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த அவர்களால் ரூ 5 லட்சத்தை கொடுக்க முடியவில்லை. இந்நிலையில் சிதுல் மனைவி மற்றும் அவர் குடும்பத்தார் இது தொடர்பாக உயர் பொலிஸ் அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளனர். விரைவில் சிதுல் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை செல்ல விரும்பவில்லை : அகதிகளின் சொன்ன உருக்கமான காரணம்!!

தமிழகத்தில் இலங்கை தமிழர்கள்

தமிழகத்தில் இலங்கை தமிழர்கள், இந்திய குடியுரிமை தாருங்கள் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் பலர், கடந்த 1990-ஆம் ஆண்டு, இராமேஸ்வரத்திற்கு சென்றனர்.

அதன் பின், அவர்கள் தீவிர விசாரணைக்குப் பின் தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். விருதுநகர் மாவட்டம் குல்லூர்சந்தை, ஆனைக்குட்டம், செவலூர், அனுப்பங்குளம், வெம்பக்கோட்டை, மல்லாங்கிணறு, மேட்டமலை ஆகிய இடங்களில் உள்ள அகதிகள் முகாம்களில், சுமார் 500 குடும்பத்தினர் வசித்துவருகின்றனர்.

இந்நிலையில், இவர்கள் தாங்கள் மீண்டும் இலங்கை செல்ல விரும்பவில்லை. இதனால் இந்தியக் குடியுரிமை வழங்கி எங்களுக்கும் இந்தியர்களைப்போல அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சிரியரிடம் மனு அளித்துள்ளனர்.

மேலும் இது குறித்து அகதிகள் முகாமைச் சேர்ந்த வசந்தன் என்பவர் கூறுகையில், இலங்கையில் இருந்து 1990-ம் ஆண்டு இராமேஸ்வரம் வந்தோம். அப்போது எனக்கு 7 வயது. அதன் பின் அங்கே இருந்து விருதுநகர் மாவட்டத்துக்கு வந்தோம். தற்போது 35 வயது ஆகிறது.

இங்கே மட்டும் 80 குடும்பத்தினர் வசிக்கின்றனர். ரேஷன் கடையில் எங்களுக்கு தனி அட்டை வழங்கப்படுகிறது. அங்கே அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட குடும்பத்துக்குத் தேவையான பொருள்கள் கிடைக்கும்.

ஆனால், எங்கள் முகவரிக்கான ஆதாரமாக ரேஷன் அட்டையைப் பயன்படுத்த முடியாது. ஓட்டுரிமை இல்லை. இருசக்கர வாகனம் வாங்கவோ, சொத்து வாங்கவோ முடியவில்லை.

நாங்கள் இங்கே இருந்து கூலிவேலை செய்து தான் வாழ்க்கை நடத்தி வருகிறோம். ஆனால் தற்போது நாங்கள் இலங்கைக்கு சென்றால், புது வாழ்க்கையை தான் துவங்க வேண்டும். எங்களுக்கு மீண்டும் இலங்கை செல்ல விரும்பவில்லை. எங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதே போன்று வீரரத்தினம் என்பவரும் கால் நூற்றாண்டுக்கு பின் மீண்டும் இலங்கைக்கு சென்று எங்களால் வாழ்க்கை நடத்த முடியாது, ஓரிரு ஆண்டுகள் ஆனாலே இருக்கும் இடங்கள் மாறிவிடுகின்றன.

அப்படி நாங்கள் சென்றால், கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போலத்தான் இருக்கும். பொருளாதார ரீதியாக கடும் சிரமங்கள் ஏற்படும். எனவே, எங்களுக்கு இந்தியக் குடியுரிமை மட்டும் கிடைத்தால் போதும். நாங்கள் இங்கேயே நிம்மதியாக வாழ்ந்துவிடுவோம் என்று கூறியுள்ளார்.

காதலனை நம்பி திருமணம் செய்த இளம் பெண் : அதன் பின் 30 நாளில் நடந்த கொடுமை!!

தமிழகத்தில் திருமணமான 30 நாளில் மனைவியை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கணவனை பொலிசார் தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை அடுத்த குச்சிபாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார். 25 வயதாகும் இவரும் குண்சுந்தரி என்ற 23 வயது பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.

இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்களின் எதிர்ப்பையும் மீறி இருவரும் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் இருவரும் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்த நெய்வாசல் சமத்துவபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து அங்கு வசித்து வந்தனர்.

இந்த நிலையில் குடும்ப பிரச்சினை தொடர்பாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்றும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து குணசுந்தரி வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி ஒரத்தநாடு பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பொலிசார், குணசுந்தரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தலை மறைவான சிவக்குமாரை தேடி வருகிறார்கள்.

குணசுந்தரி சாவில் மர்மம் நிலவுவதால் அவரை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டாரா? அல்லது தற்கொலைக்கு தூண்டினாரா? என்று பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமணமான ஒரு மாதத்துக்குள் புதுப்பெண் மர்மமான முறையில் இறந்ததால் ஆர்.டி.ஓ. சுரேசும் மேல் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

அனாதையாக நின்ற இளம் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த கோடீஸ்வர தம்பதி : குவியும் பாராட்டுக்கள்!!

குவியும் பாராட்டுக்கள்

இந்தியாவில் பெற்றோரை இழந்த அனாதை பெண்ணுக்கு கோடீஸ்வரரும், அமைச்சருமான மல்லா ரெட்டியும் அவர் மனைவியும் பெற்றோர் ஸ்தானத்தில் இருந்து திருமணம் செய்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்தவர் புஷ்பா. பெற்றோரை இழந்த இவருக்கு மாநில அமைச்சரான மல்லா ரெட்டியும் அவர் மனைவி கல்பனாவும் சேர்ந்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி கிஷோர் என்பவரை மணமகனாக தேர்வு செய்த அவர்கள் பெற்றோர் ஸ்தானத்தில் இருந்து புஷ்பா – கிஷோர் திருமணத்தை நடத்தி வைத்தனர்.

மேலும், புஷ்பா பெயரில் நிரந்தர வைப்பு நிதியாக ரூ 2.35 லட்சத்தை வங்கி கணக்கில் மல்லா செலுத்தியதோடு, ரூ. 25000 பணத்தையும் புதுமணத்தம்பதிக்கு கொடுத்தார். மல்லா – கல்பனா தம்பதியின் இந்த மனிதநேய செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.