வரலாற்றில் இடம் பிடித்த திருநங்கை : அப்படி என்ன செய்தார் தெரியுமா?

வரலாற்றில் இடம் பிடித்த திருநங்கை

சென்னையில் தன்னாட்சி கல்லூரியில் படிக்கு திருநங்கை மாணவி, கல்லூரியில் சங்கத்தில் இணை செயலாளராக இடம் பிடித்து வரலாற்று சாதனை பிடித்துள்ளார். கல்லூரிகளில் மாணவர்கள் பேரவை அமைப்பது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் சென்னையில் உள்ள தன்னாட்சி கல்லூரியிலும் அதற்கான தேர்தல் நடைபெற்றது.

இதில் எம்.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படிக்கும் திருநங்கை மாணவி பிரசிதா போட்டியிட்டார். யாரும் எதிர்பார்க்கதா விதத்தில் வெற்றிபெற்ற அவருக்கு இணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து கல்லூரி அதிகாரிகள் கூறியதாவது, கல்லூரி வரலாற்றிலேயே ஒரு திருநங்கை தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்றனர்.

மாணவி பிரசிதா பேசியதாவது, தனது வெற்றி மூலம் திருநங்கைகளுக்கான ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று நம்புகிறேன். கல்லூரி பெண்கள் மற்றும் திருநங்கைகளின் நலனுக்காக செயல்படுவேன்.

“நான் 2017 ஆம் ஆண்டில் இதே பதவிக்கு பிரச்சாரம் செய்தேன். அந்த ஆண்டு தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அந்த தேர்தலில் திருநங்கையாக இருப்பதால் பிரச்சாரத்தில் நான் ஒரு கடினமான சூழலை எதிர்கொண்டேன். ஆனால் இந்த ஆண்டு, இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

சக மாணவர்களின் நம்பிக்கையை நான் வென்றேன் என்பதை எனது தேர்தல் வெற்றி பிரதிபலிக்கிறது. என்று கூறியுள்ளார். இந்தநிலையில், திருநங்கை பிரசிதா வெற்றி பெற்றதற்கு திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

புதைக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு பின் மாயமான சடலம்!!

மாயமான சடலம்

நிக்கவெஹெர பல்லேவெல பகுதியில் நபர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து புதைக்கப்பட்ட நிலையில், 28 நாட்களுக்கு பின் குறித்த காணாமல் போயுள்ள சம்பவம் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலேவெல பொலிஸாருக்கு இன்று கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய விசாரணை மேற்கொண்ட போது கவேவெல பல்லேவெல பகுதியில் முஸ்லிம் மயானத்தில் கடந்த 28 நாட்களுக்கு முன்னர் புதைக்கப்பட்டிருந்த சடலமே இவ்வாறு காணாமல் போயுள்ளது.

குறித்த சடலம் தோண்டியெடுக்கப்பட்டுள்ள அதே இடத்திற்கு அருகில் சடலங்கள் புதைக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு குழிகளும் தோண்டப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் காணாமல் போன குறித்த சடலம் முருங்கை பயிர் செய்யப்பட்டிருந்த பகுதியில் மண்ணால் மூடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மர்மான சடலம், கலேவெல – பல்லேவெல பகுதியை சேர்ந்த 50 வயதான ஹபிபி லெப்பை மன்சூர் என்பவரின் சடலம் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் சடலத்தை தோண்டி எடுத்தது யார்? எதற்காக தோண்டியெடுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பில் இதுவரை அறியப்படவில்லை.

எனினும் சடலம் தொடர்பில் மீளவும் நீதவான் நீதிமன்றத்திற்கு விளக்கம் அளிக்கப்பட்டு அடுத்தக்கட்ட விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சடலம் மீட்கப்பட்ட இடம் மற்றும் மயானத்திலும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்திய இளம் குடும்பஸ்தரின் முடிவு!!

முல்லைத்தீவு தீர்த்தக்கரையினை சேர்ந்த 34 வயதுடைய இராசதுரை யோகராசா என்பவரே இவ்வாறு நேற்று இரவு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

முல்லைத்தீவு தீர்த்தக்கரைப் பகுதியில் குடும்பத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக மனைவியுடன் பேசிவிட்டு தனது தலையில் பெற்றோலை ஊற்றி பகிடிக்காக தற்கொலைக்கு முயன்ற வேளை அது விபரீதமாகி இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

இதன் போது எரிகாயங்களுக்கு உள்ளான குறித்த குடும்பஸ்தர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இவரது உயிரிழப்பு தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் வரலாற்றில் முதல் தடவையாக இரண்டு இலங்கையர்கள்!!

இரண்டு இலங்கையர்கள்

இந்தியாவில் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் நடத்தி வரும் பிக் பாஸ் சீசன் 1, சீசன் 2, என்ற இரண்டு பாகமும் பெரிய வெற்றி பெற்றன. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3ஆவது பாகம் நேற்றையதினம் வெகு பிரம்மாண்டமாக ஆரம்பமாகியிருந்தது.

ஹிந்தியில் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் ரசிகர்கள் மத்தியில் மெல்ல, மெல்ல தீயாய் பற்றிக்கொண்டது. மக்களின் மனதை எளிதாக வெல்ல இந்த நிகழ்ச்சி பிரபலங்களுக்கு ஒரு பாலமாக அமைகிறது.

இந்தநிலையில், குறித்த நிகழ்ச்சியில் இரண்டு இலங்கையர்கள் பங்கேற்றுள்ளமை தற்போதைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் சுவாரஷ்யமாக அமைந்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்த இளம் தொகுப்பாளினி, செய்திவாசிப்பாளரான லோஷ்லியா மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தர்சன் எனப்படும் ஒருவரும் கலந்து கொண்டுள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 15 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இவர்களின் விபரம் வருமாறு..

வவுனியாவில் தேசிய போதையற்ற தேசம் வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்வுகள்!!

போதையற்ற தேசம் வேலைத்திட்டம்..

 

ஜனாதிபதி செயலகத்தின் நிகழ்ச்சித்திட்டத்தில் ஜீன் 23 முதல் மாவட்டம் தோறும் போதையற்ற தேசிய வார வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இன்று காலை வவுனியா மாவட்ட செயலகத்தில் நான் போதையை எதிர்க்கின்றேன் வேலைத்திட்டம் உதவி அரசாங்க அதிபர் கமலதாஸ் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டு உத்தியோகத்தர்களுக்கு ஒரே நேரத்தில் எதிர்ப்புப்பட்டி அணிவிக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றது. மாவட்ட செயலக திணைக்கள அதிகாரிகள். உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி செயலகத்தினால் ஜீன் மாதம் 23ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட போதையற்ற தேசம் வேலைத்திட்டத்தில் இவ்வாரத்தில் வவுனியா மாவட்டத்தில் 14 விழிப்புணர்வு பிரச்சாரங்களும் நாளை 50 வாகனப்பேரணி, அனைத்துத் திணைக்களங்களைச் சேர்ந்த போதைப் பொருள் எதிர்ப்பு வாகனப் பேரணி வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நகரை நோக்கி செல்லவுள்ளது.

நானை மறுதினம் புதன்கிழமை மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் போதை ஒழிப்பு எதிர்ப்பு வாசகங்களைத் தாங்கிய 100 பலூன்கள் வானில் பறக்கவிடப்படும் நிகழ்வு காலை 8.30மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாகவும் அனைத்துத்திணைக்கள உத்தியோகத்தினரையும் தவறாது கலந்துகொள்ளுமாறு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மேல் நீதிமன்றத்தில் இராணுவத்தினரை கொலை செய்த குற்றச்சாட்டில் கைதிகள் மூவர் விசாரணைக்கு!!

கைதிகள் மூவர் விசாரணைக்கு

இராணுவத்தினரை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த அரசியல் கைதிகள் மூவர் வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு இன்று காலை அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இராணுவத்தினரை கொலை செய்து எரியூட்டிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு அனுராதபுரம் சிறையில் மூன்று முன்னாள் போராளிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இக்குற்றச்சாட்டு தொடர்பான வழக்குகள் வவுனியா மேல்நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில் இன்று குறித்த வழக்கிற்காக குற்றம் சாட்டப்பட்ட மூவரையும் பலத்த பாதுகாப்புடன் பொலிஸாரினால் வவுனியா மேல்நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இலங்கையிலுள்ள தாயை கண்டுபிடிக்க 34 வருட போராட்டம் : ஓர் மகளின் நெகிழ்ச்சி செயல்!!

மகளின் நெகிழ்ச்சி செயல்

அவுஸ்திரேலிய தம்பதி ஒருவருக்கு தத்துக் கொடுக்கப்பட்ட நிலானி எனும் பெண், பல வருடங்களின் பின்னர் சொந்த தாயை தேடி கண்டுபிடித்துள்ளார். 34 வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலியாவில் இருந்து தாயை தேடி இலங்கை வந்த மகள் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. 1984 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தை நோக்கி சென்ற மகளே தற்போது இலங்கையில் தாயை தேடி வந்துள்ளார்.

வறுமையின் காரணமாக குழந்தை பிறந்த இரண்டு வாரத்தில் வெளிநாட்டு தம்பதிக்கு தத்துக் கொடுத்ததாக குறித்த பெண்ணின் தாயார் தெரிவித்துள்ளார். பிள்ளைகளுக்கு உணவு வழங்குவதற்கு கூட வழியில்லாமல் தான் தனது பிள்ளையைஅவுஸ்திரேலிய தம்பதிக்கு வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது என்னிடம் வந்துள்ள மகளை வெளிநாட்டு மீண்டும் அனுப்ப விருப்பில்லை. எனினும் அவர் அங்கு பணி புரிவதால் அதனை தடுக்க முடியவில்லை. தற்போது நிலானி என்ற பெயரில் உள்ள குறித்த பெண் தனது பிள்ளைகளுடன் இலங்கையில் உள்ள தாயை பார்க்க வருகைத்தந்துள்ளார்.

தாய் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள விரும்பியமையினால் தன்னிடம் இருந்த தகவல்களின் அடிப்படையில் தாயை தேடியதாக மகள் நிலானி குறிப்பிட்டுள்ளார். தான் தற்போது தனக்கு உயிர் கொடுத்த தாயை கண்டுபிடித்தமை குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் புளொட் அமைப்பின் பேராளர் மாநாடு!!

வவுனியாவில் தமிழீழ விடுதலை கழகத்தின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் 9 வது பேராளர் மாநாடு நேற்று (23.06.2019) ‘புளொட்’ அமைப்பின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தாத்தன் தலைமையில் இடம்பெற்றது.

வவுனியா கோவில்குளம் சந்திக்கு அருகாமையில் அமைந்துள்ள ஆதி திருமண மண்டபத்தில் நடைபெற்ற பேராளர் மாநாட்டில் வடக்கு கிழக்கு பகுதியை சேர்ந்த மாவட்ட பொறுப்பாளர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

புலம்பெயர்ந்த நிலையில் செயற்பட்டு வந்த தமிழீழ விடுதலை கழகத்தின் உறுப்பினர்களும் இப்பேராளர் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

தர்மலிங்கம் சித்தாத்தன் மங்கள விளக்கேற்ற மரணித்த தோழர்களுக்கான மௌன அஞ்சலியுடன் போராளர் மாநாடானது ஆரம்பமாகியிருந்தது.

‘புளொட்’ அமைப்பின் 9வது பொதுச்சபை கூட்டமானது நேற்று முன்தினம் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா சூடுவெந்தபுலவில் விளையாட்டு மைதானம் திறந்து வைப்பு!!

வவுனியா, சூடுவெந்தபுலவு பொது மைதானம் நேற்று முன்னாள் பிரதி அமைச்சரும், வன்னிப்பாராளுமன்ற உறுப்பினருமான கே.கே.மஸ்தானால் திறந்து வைக்கப்பட்டது.

பிரதி அமைச்சராக இருந்த போது குறித்த மைதானத்திற்கு என 2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் குறித்த மைதானத்திற்கு மின்விளக்குகள் பொருத்தப்பட்டு, திறந்து வைக்கப்பட்டது. இதன்போது வளர்பிறை விளையாட்டு கழகத்திற்கு விளையாட்டு சீருடைகளும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் உலுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர், பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் சதுரங்க போட்டி நிகழ்வு!!

வவுனியாவில் திறந்த சதுரங்க விளையாட்டு போட்டி நேற்று (23.06.2019) வைரவப்புளியங்குளம் கிராம உத்தியோகத்தர் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக வெண்கலச் செட்டிக்குளம் பிரதேச செயலாளர் கெ.சிவகரன் கலந்துகொண்டிருந்தார்.

வவுனியா மாவட்ட சதுரங்க சம்மேளன செயலாளர் பிரபாகரன் ஜானுஜன் தலைமையில் நடைபெற்ற சதுரங்க விளையாட்டு நிகழ்வில் இளைஞர் யுவதிகள் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட உதவி செயலாளர் நா.கமலதாசன், வைரவப்புளியங்குளம் கிராம உத்தியோகத்தர் க.விஜயகுமார், ஐ.சி.சி. கம்பஸ் இயக்குனர் எஸ்.சந்திரகுமார், வர்த்தகர் ஜீவகரன், மாவட்ட செயலகத்தின் உத்தியோகத்தர் ஜெ.ஜெயசீலன் ஆகியோர் விருந்தினராக கலந்துகொண்டிருந்தனர்.

வவுனியாவில் பிரபா கணேசனின் மக்கள் சந்திப்பும் மாணவர்களிற்கான உதவி வழங்கலும்!!

முன்னாள் பிரதி அமைச்சரும் ஜனநாயக மக்கள் காங்கிஸின் தலைவருமான பிரபா கணேசனின் மக்கள் சந்திப்பும், 300 மாணவர்களிற்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் நேற்று முன்தினம் (22.06) மாலை வவுனியா பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்றது.

ஜனநாயக மக்கள் காங்கிஸின் வவுனியா மாவட்ட செயலாளர் நாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நடுவானில் ரகளையில் ஈடுபட்ட இளம்பெண் : பாதிவழியிலே லண்டனுக்கு திரும்பிய விமானம்!!

ரகளையில் ஈடுபட்ட இளம்பெண்

லண்டனிலிருந்து துருக்கி நோக்கி சென்ற விமானத்தில் மது போதையில் பணியாளர்களை தாக்கி ரகளையில் ஈடுபட்ட இளம்பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். லண்டன் ஸ்டான்ஸ்டட் விமான நிலையத்திலிருந்து உள்ளூர் நேரப்படி மாலை 4.50 மணிக்கு துருக்கி நோக்கி ஜெட்2 விமானம் புறப்பட்டுள்ளது. அடுத்த 25 நிமிடங்களில் இளம்பெண் ஒருவர் மதுபோதையில் அங்கிருந்த பணியாளர்களை கடுமையாக தாக்க ஆரம்பித்துள்ளார். மேலும் விமானத்தின் கதவை திறக்க முற்பட்டுள்ளார்.

இதனை பார்த்து பயந்துபோன பயணிகள், அந்த இளம்பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து, 6 பேர் கொண்ட சக பயணிகள் அந்த இளம்பெண்ணை இருக்கையில் அமர வைத்து, அவர் மடி மீதும் ஏறி அமர்ந்தனர்.

இதற்கிடையில் இந்த தகவல் விமான நிலைய பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர் நடுவானில் விமானம் திருப்பப்பட்டு மீண்டும் லண்டன் ஸ்டான்ஸ்டட் விமான நிலையத்தை அடைந்தது. அங்கு பொலிஸார் 25 வயதான அந்த இளம்பெண்ணை கைது செய்து அழைத்துச்சென்றனர். அதன்பிறகு அதிகாலை 5.15 மணிக்கு விமானம் துருக்கி சென்றடைந்துள்ளது.

மோட்டார்சைக்கிளில் சென்ற இரு இளைஞர்களுக்கு நேர்ந்துள்ள பரிதாபம்!!

திருகோணமலை – புல்மோட்டை பிரதான வீதியின், புடவைக்கட்டு பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் குச்சவெளி – செந்தூர், மதுரங்குடா பகுதியை சேர்ந்த கே.சுகந்தன் (18 வயது) மற்றும் அதே இடத்தை சேர்ந்த ஆர்.நிரோசன் (28 வயது) ஆகியோரே உயிரிழந்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குச்சவெளி – மதுரங்குடா பகுதியில் இருந்து இருவரும் மோட்டார்சைக்கிளில் இன்று மாலை புடவைகட்டு பகுதிக்கு சென்றுள்ளனர்.

இதன்போது மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் குச்சவெளி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளன.

இந்த நிலையில் குறித்த விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா செட்டிகுளத்தில் மனைவியை வெங்காய வெடி வைத்து கொலை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்ட கணவன் கைது!!

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் மனைவியை வெங்காய வெடியை வெடிக்க வைத்து கொலை செய்த நிலையில் தலைமறைவாக இருந்த கணவன் இன்று செட்டிகுளம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

செட்டிகுளம், துடரிக்குளம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 4 பிள்ளைகளின் தாயாரான 40 வயது பெண் ஒருவர் வெங்காய வெடியை முகத்தில் வெடிக்க வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார்.

குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் செட்டிகுளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இச் சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் கணவன் தலைமைவாகியிருந்த நிலையில் பொலிசாரால் தேடப்பட்டு வந்தார்.

இந்நிலையில் இன்று செட்டிகுளம் புகையிரத நிலையத்திற்கு முன்னால் உள்ள ஆலயத்தின் பின்புறமாக உள்ள காட்டுப்பகுதிக்குள் மறைந்திருந்த நிலையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் கையிலும் வெங்காய வெடி காரணமாக காயம் ஏற்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்ட நிலையில், குறித்த நபர் பொலிஸ் பாதுகாப்புடன் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் கணவரான 43 வயதுடைய து.ரவிச்சந்திரன் என்பரே கைதுது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

லண்டனில் சாதிக்கவேண்டும் : இதுவே என் கனவு என்று கூறும் தமிழ் பெண் : யார் தெரியுமா?

ஸ்ரீசாய் சுதர்சனா

டிரம்ஸ் இசையில் பல்வேறு சாதனைகள் படைத்து வரும் தமிழ் பெண்ணான ஸ்ரீசாய் சுதர்சனா, லண்டன் ட்ரினிட்டி கல்லூரியில் இசை பயிற்சியாளராவதே தனது கனவு என்று கூறியுள்ளார். புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சாய் சுதர்சனா.

சிறு வயது முதலேயே டிரம்ஸ் இசை மீது ஆசை கொண்ட இவருக்கு, எந்த இசை நிகழ்ச்சிக்குச் சென்றாலும், முதலில் இவர் தேடுவது டிரம்ஸ் இசை தான். இரண்டாம் வகுப்பு படிக்கும்போது, தனது ஆசையைப் பெற்றோரிடம் கூறிய நிலையில், அவர்கள் முதலில் மறுக்க, பிறகு மகளை டிரம்ஸ் பயிற்சி வகுப்பில் சேர்த்துள்ளனர்.

பயிற்சியில் சேர்வதற்கு சென்றபோது, நாற்காலியில் அமர்ந்து வாசிக்கும் அளவிற்கு கூட, சுதர்சனா உயரமில்லை. இதனால், மூன்று ஆண்டுகள் காத்திருந்து, ஐந்தாவது படிக்கும்போது மீண்டும் டிரம்ஸ் வகுப்பில் சேர்ந்தார். டிரம்ஸ் இசையில் உள்ள 8 கிரேடுகளில், 6 கிரேடுகளை முடித்து தனது இசைப் பயணத்தை தொடர்ந்து வருகிறார் சுதர்சனா.

சில தினங்களுக்கு முன் புதுச்சேரி காந்தி திடலில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக 50 டிரம்மர்கள் இசைத்த நிகழ்வில் இசைத்த ஒரே பெண் டிரம்மர் ஸ்ரீசாய் சுதர்சனா மட்டுமே. 15 கிலோ எடை கொண்ட டிரம்மை, உடலில் சுமந்து இசைப்பதும் இவரது சிறப்பு.

லண்டன் ட்ரினிட்டி கல்லூரியில் சேர்ந்து, அந்தக் கல்லூரியிலேயே இசை பயிற்சியாளராக வேண்டும் என்றும், டிரம்ஸ் இசையில் உலக சாதனை நிகழ்த்துவதே தனது கனவு என்றும் நம்பிக்கையுடன் கூறுகிறார் ஸ்ரீசாய் சுதர்சனா.

5ஆம் வகுப்பிலேயே முனைவர் பட்டம் பெற்று சாதித்த தமிழ் மாணவன்!!

சாதித்த தமிழ் மாணவன்

தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், ‘மதிப்புறு முனைவர்’ எனும் பட்டம் பெற்று பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வகுமார். தனியார் நிறுவன காவலாளியாக பணிபுரியும் இவருக்கு, மதுரம் ராஜ்குமார் எனும் மகன் உள்ளார்.

அரசுப் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வரும் மதுரம் ராஜ்குமார், கவிதை படைக்கும் ஆற்றால் பெற்றவராக விளங்கி வருகிறார். அன்பு, அழுகை, இன்பம், துன்பம் என எந்த நிகழ்வையும் கவிதையாக்கும் ஆற்றல் கொண்ட ராஜ்குமாரை அவரது பெற்றோரும், ஆசிரியர்களும் ஊக்கப்படுத்தினர்.

இதனால் 4ஆம் வகுப்பிலேயே 55 தலைப்புகளின் கீழ் ரத்தினச்சுருக்கமாக நல்ல கவிதைகளை படைத்தார். இவற்றில் ‘பள்ளி’, ‘மகிழ்ச்சி’, ‘கோபம்’, ‘பட்டம்’ ஆகியவை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ராஜ்குமாரின் கவிதைகளை சேகரித்த அவரது பெற்றோர், ‘நல் விதையின் முதல் தளிர்’ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டனர்.

இந்நூலுக்கு பாராட்டுக்களும், பல்வேறு அமைப்பின் விருதுகளும் குவிந்தது. அதன் பின்னர், ‘Universal Achievers Book of Records’ என்ற நிறுவனம், கவிதை எழுதுவதில் இதுவரை எந்த சிறுவனும் நிகழ்த்தாத உலக சாதனையை நிகழ்த்திட, மதுரம் ராஜ்குமாருக்கு அழைப்பு விடுத்தது.

அதனைத் தொடர்ந்து, வாழப்பாடியில் நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு தலைப்புகளின் கீழ் 173 கவிதைகளை எழுதி உலக சாதனை படைத்தார் ராஜ்குமார். மாவட்ட, வட்டார கல்வி அலுவலகர்கள், கவிஞர்கள், இலக்கிய அமைப்பினர் பலரும் ராஜ்குமாரை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தனர்.

இந்நிலையில், சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழகம் சென்னையில் நடைபெற்ற விழாவில் மதுரம் ராஜ்குமாருக்கு ‘மதிப்புறு முனைவர் பட்டம்’ வழங்கியது. ராஜ்குமாரின் தந்தை செல்வகுமார் கூறுகையில், ‘நான்காம் வகுப்பு படிக்கும்போது, பள்ளியில் நடைபெற்ற கவிதைப் போட்டிக்கு ஒரு கவிதை எழுதிக் கொடுக்குமாறு எனது மகன் மதுரம் ராஜ்குமார் கேட்டதற்கு, நீயே உன் மனதில் தோன்றியதை எழுதிக் கொடு என்றேன்.

இது தான் இன்று, என் மகன் உலக சாதனை படைத்த கவிஞராக மாறியதற்கு அடித்தளமாக அமைந்ததாகக் கருதுகிறேன்’ என தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாணவர் ராஜ்குமார் கூறுகையில், ‘எனது பெற்றொரும், ஆசியர்களும் கொடுத்த ஊக்கத்தால் எனது எண்ணத்தை கவிதையாக எழுதும் திறனைப் பெற்றேன்.

நான் கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும், எனது பெற்றோர் சளைக்காமல் பதிலைத் தேடித் தந்தனர். சிறுவயதிலேயே நான் கவிதை நூல் வெளியிட்டு உலக சாதனை படைப்பதற்கும், பல விருதுகளைப் பெறுவதற்கும், தமிழறிஞர்களைச் சந்திப்பதற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததாய் மொழிக்கு என்னால் முடிந்த புகழைப் பெற்றுக் கொடுப்பேன். கவிதையில் மட்டுமின்றி கல்வியில் சாதிப்பதே என் எதிர்கால லட்சியம்’ என தெரிவித்துள்ளார்.