ஐரோப்பிய நாடொன்றில் இலங்கை இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

நேர்ந்த பரிதாபம்

இத்தாலியில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இடம்பெற்ற விபத்தில் வெரோனா நகரில் பணி செய்து வந்த இலங்கையரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் இலங்கையில் நாத்தாண்டிய பிரதேசத்தை சேர்ந்த 40 வயதான துஷார சஞ்சீவ பெரேரா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்தில் உயிரிழந்த இலங்கையர் பயணித்த மோட்டார் வாகனம் அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருந்த போது திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் வீதியில் வாகனத்தை நிறுத்திய போது பின்னால் வந்த பேருந்து அதனை மோதியமையினால் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த இலங்கையர் அம்பியுலன்ஸ் வண்டியின் உதவி ஊடாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பில் வெரோனா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கு செயலமர்வு!!

செயலமர்வு

நிலை மாறுகால நீதிப் பொறிமுறை குறித்து உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கான செயலமர்வு இன்று(22.06) காலை 9மணிமுதல் பிற்பகல் 12மணிவரையும் வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அனுசரணையிலும் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டிலும் வவுனியா நகரசபை, தமிழ் தெற்கு பிரதேச சபை, வடக்கு உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்களுக்கான செயலமர்வில் யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் நீதித்துறையின் செயற்பாடுகள்,

அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அலுவலகம் குறித்தும் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கு தமிழ் மற்றும் சிஙகள மொழி பெயர்ப்புடன் விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக கலந்து கொண்ட உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் யானைக்கு விஷேட வைத்தியரினால் சிகிச்சையளிப்பு!!

யானைக்கு  சிகிச்சையளிப்பு

வவுனியாவில் கடந்த வாரம் காட்டு யானை ஒன்று பாலமோட்டைப் பகுதி குளத்திற்கு அருகில் காணப்பட்ட நிலையில் பொதுமக்களால் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தரின் உதவியுடன் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு நேற்று முன்தினம் காட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

எனினும் அந்த யானை காலில் ஏற்பட்ட வலி தாங்க முடியாமல் காட்டுக்குச் செல்லாமல் திரும்பவும் பாலமோட்டை குளத்திற்கு அருகில் நேற்று முதல் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை அனுராதபுரத்திலிருந்து வருகை தந்த விஷேட மிருக வைத்திய குழுவினரால் சிகிச்சையளிக்கப்பட்டு காட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் பாலமோட்டை குளத்திற்கு அருகில் காணப்பட்ட காட்டு யானை ஒன்று கட்டுத்துவக்கு பயன்படுத்தப்பட்டு வலது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நடக்க முடியாமல் குளத்திற்கு அருகே பல நாட்களாக காணப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் மிருக வைத்தியர் வருகை தந்து மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு காட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்த யானை காட்டுக்குள் செல்லாமல் திரும்பவும் நேற்று அப்பகுதிக்குச் சென்றுள்ளதை அவதானித்த அப்பகுதி பொதுமக்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். நேற்று காலை அனுராதபுரம் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் கால் நடை வைத்திய அதிகாரி சந்தன ஜெயசிங்க தலைமையில் சென்ற விஷேட வைத்திய குழுவினர்,

வவுனியா வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களின் உதவியுடன் யானைக்கு அருகே சென்று யானையின் உடல் நிலையை பார்வையிட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது 35 வயதுடைய குறித்த யானை எட்டு அடி உயரமாக காணப்பட்டுள்ளது.

இதன்போது கட்டுத்துவக்கு பயன்படுத்தப்பட்டு வலது காலில் காயம் ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்தி வைத்தியர் யானைக்கு விறைப்பு மருந்து உட்செலுத்தி மூன்று மணிநேர தீவிர வைத்திய சிகிச்சையின் பின்னர் யானை திரும்பவும் காட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் பயணிகள் அவதி : ரயில்வே தொழிற்சங்க போராட்டம் தொடர்கின்றது!!

வவுனியாவில் பயணிகள் அவதி

ரயில்வே தொழிற்சங்கத்தினர் சம்பள பிரச்சினையை முன்வைத்து இரண்டாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமது கோரிக்கைக்கு உரிய தீர்வு வழங்கக் கோரி மூன்று நாள் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வரும் என ரயில்வே தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். நேற்று ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு, இன்று இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.

இவ் வேலை நிறுத்தம் காரணமாக வவுனியாவில் இருந்து கொழும்பு உள்ளிட்ட தென்பகுதிகளுக்கும், யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட பகுதிக்கும் மக்கள் போக்குவரத்து செய்வதில் இடர்பாடுகளை எதிர்நோக்கியுள்ளனர்.

தமது தேவைக்கு சிரமம் இல்லாமல் செல்லவேண்டும் என்பதற்க்காக ஆசனப்பதிவை முன் பதிவு செய்து வைத்திருந்த அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் மிகவும் சிரமப்படுவதுடன், தொடர்ச்சியான வேலை நிறுத்தப் போராட்டத்தில் ரயில்வே தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ளதால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரயில்வே தொழிற்சங்கத்தினரின் தொடர் பணிபகிஷ்கரிப்பின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை கருத்திற்கொண்டு, கொழும்பு – யாழ்ப்பாணம் கடுகதி புகையிரதம் சேவையில் ஈடுபடுகிறது. இதில் வவுனியாவில் இருந்து அதிகளவிலான மக்கள் பயணம் செய்வதை அவதானிக்க முடிகிறது.

குறித்த கடுகதி புகையிரதம் பயணிக்கும் காலை 10.30, மாலை 3.30 ஆகிய நேரங்கள் தவிர்ந்த ஏனைய நேரங்களில் புகையிரத நிலையம் வெறிச்சோடி காணப்படுவதுடன் இராணுவம் மற்றும் பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மனைவி மற்றும் 3 குழந்தைகளின் கழுத்தை அறுத்துக்கொலை செய்த டியூசன் ஆசிரியர்!!

டெல்லியில் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்த டியூசன் ஆசிரியரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

டெல்லியை சேர்ந்த உபேந்திர சுக்லா என்பவர் டியூஷன் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இன்று அதிகாலை சுக்லாவின் தயார் கதவை தட்டி பார்த்துள்ளார்.

நீண்ட நேரமாக அறைக்கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த அவர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற போது, சுக்லா கத்தியுடன் அங்கு அமர்ந்திருந்துள்ளார்.

அவருக்கு அருகில் மனைவி மற்றும் 7 வயது மகளும், 5 வயது மகனும், 2 மாத குழந்தையும் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொலிஸார் உடனடியாக சுக்லாவை கைது செய்தனர். நான்கு பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உயரதிகாரி, சுக்லாவின் மனைவிக்கு நீரிழிவு நோய் இருந்ததால், அதனை சமாளிக்க முடியமால் அவர் திணறியுள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது முழுவிசாரணைக்கு பின்னரே தெரியவரும் எனக்கூறியுள்ளார்.

உலகக்கிண்ணம் போட்டியின் இடையே மைதானத்தில் வைத்து காதலை கூறிய இளைஞர்!!

உலகக்கிண்ணம் போட்டியின் இடையே மைதானத்தில் வைத்து தன்னுடைய காதலியிடம் இளைஞர் காதலை கூறும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக்கிண்ணம் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது. இதில் இந்திய அணி டக்வத் லூயிஸ் விதிப்படி, 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியிஇளைஞர் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்துகொண்டிருந்த போது, அன்விதா என்கிற இளம்பெண்ணின் காதலர், தன்னுடைய காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

சற்றும் எதிர்பாராத அந்த இளம்பெண் சிரித்தபடியே அவருடைய காதலை ஏற்றுக்கொண்டுள்ளார். இதனை பார்த்த அங்கிருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்களும் அவர்களை வாழ்த்தியுள்ளனர்.

இந்த வீடியோ காட்சியானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

வெளிநாட்டில் இருந்து பல ஆண்டுகள் கழித்து ஊருக்கு வந்த தமிழர்.. விமான நிலையத்தில் நடந்த சம்பவம்!!

மலேசியாவில் இருந்து தமிழகத்துக்கு வந்த இளைஞர் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு நேற்றிரவு ஏர் ஏசியா விமானம் புறப்பட்டது. அதில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (31) என்பவர் திருச்சிக்கு புறப்பட்டார்.

திருச்சி விமான நிலையத்தில் விமானம் இறங்கியதும், அதில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்றனர். ஆனால் ராமச்சந்திரன் மட்டும் இருக்கையில் தூங்கிய நிலையில் அமர்ந்திருந்தார். இதையடுத்து விமான பணிப்பெண்கள், அவரை எழுப்பிய போது எந்தவித உணர்வும் இல்லாமல் இருந்தார். உடனே பணிப்பெண்கள் விமான நிலைய மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து மருத்துவர்கள் விரைந்து சென்று ராமச்சந்திரனை பரிசோதித்தனர். அப்போது அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டுமென்றும் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகளை விமான நிலைய அதிகாரிகள் செய்தனர்.

ஆம்புலன்சில் ஏற்றுவதற்காக ராமச்சந்திரனை விமானத்தில் இருந்து இறக்கிய போது அவர் திடீரென மரணமடைந்தார். இதனால் விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனே இது குறித்து ராமச்சந்திரனின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் திருச்சி விமான நிலையத்திற்கு விரைந்து வந்து உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதனிடையே ராமச்சந்திரன் விமானத்தில் இருந்து இறங்கியதும் இறந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஆனால் ராமச்சந்திரனின் உறவினர்கள், விமானத்தில் வரும் போதே ராமச்சந்திரன் இறந்துள்ளார். விமான பணிப்பெண்கள் சரியாக கவனிக்காமல் இருந்துள்ளனர் என குற்றஞ்சாட்டினர்.

இது தொடர்பாக அவர்களிடம் விமான நிலைய இயக்குனர் குணசேகரன் மற்றும் பொலிசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கடந்த 12 வருடங்களாக மலேசியாவில் உள்ள ஹொட்டலில் வேலை பார்த்து வந்த ராமச்சந்திரன் நேற்றிரவு அங்கிருந்து திருச்சி திரும்பிய போது, விமானத்தில் வைத்து அவருக்கு இருமல் அதிகமாக இருந்துள்ளது.

அதன்பிறகு அவர் இருக்கையிலேயே சாய்ந்தபடி தூங்கி விட்டார். அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என தெரிகிறது.

ஆனாலும் அவர் இறப்பு குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த ராமச்சந்திரனுக்கு திருச்செல்வி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளார்கள்.

வவுனியாவிற்கு அமைச்சர் ரவி கருணாநாயக்க விஜயம்!!

ரவி கருணாநாயக்க

வவுனியாவில் அமைந்துள்ள மின்சாரசபையின் பாரிய மின்பிறப்பாக்கி நிலையத்திற்கு மின்சக்தி எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று (22.06.2019) விஜயம் மேற்கொண்டார்.

வட பகுதிக்கான மின்சார விநியோகம் மற்றும் பாவனையாளர்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்குவது தொடர்பாக ஆராயும் நோக்குடனேயே தனது விஜயம் அமைந்திருந்தாக ஊடகவியலாளர்களுக்கு அதன்போது தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் மின்பிறப்பாக்கி நிலையத்தின் மின்விநியோக செயற்பாடுகளை பார்வையிட்ட அவர் மின் பொறியிலாளர்களுடனும் கலந்துரையாடியிருந்தார்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்த தெரிவித்த அவர் மின்சாரசபையின் வட பகுதிக்கு காணப்படும் வெற்றிடங்களை மிக விரைவில் நிரப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

உள்பக்கமாக பூட்டியிருந்த வீடு : கதவை உடைத்து உள்ளே சென்ற கணவன் கண்ட காட்சி!!

சென்னையில் கணவர் வெளியில் சென்றிருந்த நேரத்தில் மகனை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை போரூரை சேர்ந்தவர் மகேஷ் (25). இவரது மனைவி அஸ்வினி. இந்த தம்பதிக்கு பிரதீப் (4), சக்திவேல் (2) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

பிரதீப்பிற்கு பிறவிலேயே காது கேட்கும் திறன் இல்லை. வாய் பேசவும் மாட்டான். இதனால் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து தற்போது பேச்சு பயிற்சி பெற்று வந்தான்.

இந்நிலையில் இளைய மகன் சக்திவேலை பரிசோதித்த மருத்துவர்கள் அவனுக்கும் காது கேட்காத குறை இருப்பதாக தெரிவித்தனர். ஏற்கனவே ரூ.3 லட்சம் வரை செலவு செய்து மூத்த மகனுக்கு சிகிச்சை பெற்ற நிலையில் இளைய மகனுக்கும் அதே பிரச்சினை ஏற்பட்டதால் அஸ்வினி மனவேதனை அடைந்தார்.

இதையடுத்து அவர் தற்கொலை செய்ய முடிவு செய்தார். இந்நிலையில் மூத்த மகனை மாமியார் வீட்டில் கொண்டு விட்டு விட்டு திரும்பி வந்த மகேஷ், வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததை பார்த்து கதவை உடைத்து உள்ளே சென்றார்.

அங்கு அஸ்வினி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும் மகன் சக்திவேலை அஸ்வினி தலையணையால் அமுக்கி கொலை செய்து விட்டு தற்கொலை முடிவு எடுத்ததையும் உணர்ந்தார்.

பின்னர் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பொலிசார் இரு சடலங்களையும் கைப்பற்றி விட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வவுனியாவிற்குச் சென்ற அண்ணன், தம்பி இருவரையும் காணவில்லை!!

அண்ணன், தம்பி இருவரையும் காணவில்லை

நெடுங்கேணியிலிருந்து வவுனியாவிற்குச் சென்ற இருவரைக் காணவில்லை என்று வவுனியா பொலிஸ் நிலையத்தில் தந்தை ஒருவர் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 20.06.2019 வியாழக்கிழமை அன்றைய தினம் வவுனியா வடக்கு, நெடுங்கேணி நயினாமடு பகுதியிலிருந்து பேருந்தில் வவுனியா நீதிமன்றத்தில் இடம்பெறும் வழக்கு விசாரணை ஒன்றிற்குச் சென்ற இருபிள்ளைகளே காணாமல் போயுள்ளதாக தந்தை ஒருவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் இன்றைய தினம் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார்.

விஜயசுந்தர் தர்சன் வயது 19, விஜயசுந்தர் நிதர்சன் வயது 16 ஆகிய இருவருமே காணாமல் போயுள்ளதாகவும் இவர்களை கண்டுபிடித்துத்தருமாறும் தந்தை பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போயுள்ள இருவர்களை பற்றிய தகவல்களை அறிந்திருப்பவர்கள் 0775415912, 0775261259 ஆகிய தொலைபேசி இலகத்திற்கு அறியத்தருமாறு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிருக்கு போராடிய குழந்தை… காப்பாற்ற துடித்த தாய் : அதன் பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!!

இந்தியாவில் காய்ச்சலால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குழந்தையை வைத்து தாய் அழுது கொண்டிருந்ததைக் கண்ட இளைஞர் ஒருவர் இருவரையும் இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்று காப்பாற்றிய சம்பவம் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

பீகார் மாநிலம் முசாபர்பூர் அருகே உள்ள கிராமத்தின் சாலையோரத்தில் தாய் ஒருவர் மூளைகாய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தையுடன் பரிதாபமாக உட்கார்ந்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு தான் காய்ச்சலுக்குச் சிகிச்சை பெற்றுவந்த அந்தக் குழந்தை காய்ச்சல் குணமானதால் வீடு திரும்பியுள்ளது. வீடு திரும்பியதும் மீண்டும் காய்ச்சல் ஏற்படவே குழந்தையை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

நீண்ட தூரம் நடந்து வந்ததால், குழந்தையை தூக்கிக் கொண்டு, மருத்துவமனைக்கு செல்ல முடியாமல், அங்கிருந்த சாலையோரத்தில் குழந்தையை வைத்துக் கொண்டு அழுதபடி இருந்துள்ளார்.

அந்த வழியே சென்றவர்கள் அவரை பார்த்து தான் சென்றார்களே தவிர என்ன என்று எதுவும் கேட்கவில்லை. அப்போது அந்த வழியே வந்த நிரூபர் அமீர் என்பவர் உடனடியாக இருவரையும் இருசக்கர வாகனத்தில் அமர வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

மருத்துவமனைக்குச் சென்றபிறகு தான் குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது தெரியவந்தது.

காய்ச்சல் அதிகமானதால் குழந்தையின் உடல் அதிக வெப்பத்தால் தகித்துள்ளது. சிறிது தாமதமாகியிருந்தாலும் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் என மருத்துவர்கள் விளக்கியதுடன் அந்த நிருபரின் செயலை பாராட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அந்த பெண் கூறுகையில், நீண்ட நேரம் அங்கு அழுத படி உட்கார்ந்து கொண்டிருந்தேன், யாரும் உதவ முன்வரவில்லை, என்னால் அவ்வளவு தூரம் குழந்தையைத் தூக்கிச்செல்ல முடியவில்லை. சரியான சமயத்தில் வந்து எங்களை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுவந்தார் அமீர். அவரால் தான் இன்று என் குழந்தை உயிர் பிழைத்துள்ளது என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.

அமீர் பாதிக்கப்பட்ட குழந்தையை இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும் புகைப்படத்தை அங்கிருந்தவர்கள் வலைதளங்களில் பதிவிட அவரின் மனிதநேயத்துக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் மூளைக் காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 120-ஐ தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாயமான இளம்பெண் குளத்தில் இருந்து மீட்பு : காதலன் மீது சந்தேகம் எழுப்பும் தந்தை!!

மாயமான இளம்பெண்

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் குளம் ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண் விவகாரத்தில், அவரது தந்தை கடந்த 2 ஆண்டுகளாக போராடி வருகிறார். எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த ஷாஜி வர்கீஸ் என்பவரின் மகள் மிஷேல். சி.ஏ. படித்து வந்த மிஷேல் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் திகதி தங்கியிருந்த விடுதியில் இருந்து அருகில் உள்ள தேவாலயம் சென்றுள்ளார்.

ஆனால் அதன்பிறகு விடுதிக்கு அவர் திரும்பவில்லை. இதனால் பெற்றோர்கள் அவர் காணாமல் போய்விட்டதாக கூறி பொலிசாரிடம் புகார் அளித்தனர். இந்த நிலையில் மறுநாள் மாலையே கொச்சி அருகே குளம் ஒன்றில் மிஷேல் சடலமாக மீட்கப்பட்டார்.

இவரது இறப்பு தற்கொலை என பொலிசார் கூறி வந்தனர். க்ரோனின் அலெக்சாண்டர் பேபி என்பவரைக் காதலித்ததாகவும், இதன் காரணமாகவே தற்கொலை செய்ததாகவும் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்தனர். மட்டுமின்றி க்ரோனினை கைது செய்தும் விசாரித்தனர். பின்னாளில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

ஆனால் மிஷேலின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது குடும்பம் சந்தேகம் எழுப்பியது. மட்டுமின்றி இந்த விவகாரம் தொடர்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் போராடி வருகிறார் மிஷேலின் தந்தை ஷாஜி வர்கீஸ்.

தற்கொலைக்கான அடையாளங்கள் மிஷேலின் உடம்பில் இல்லை. கொலை செய்யப்பட்டிருப்பதற்கான அடையாளங்கள்தான் அவரது உடம்பில் இருக்கின்றன. ஆனால், இதை காவல்துறை மறைத்து தற்கொலை என வழக்கு பதிந்துள்ளனர்’ எனக் குற்றம்சாட்டிப் போராடி வருகிறார் ஷாஜி வர்கீஸ்.

மேலும், மிஷேலின் முகத்தில் நகக்கீறல்கள் உள்ளன. இதேபோல் இரண்டு கைகளிலும் மற்றவர்களின் கைத் தடம் உள்ளது. நீரில் மூழ்கியிருந்தால் ஒன்று உடல் அழுகியிருக்க வேண்டும் அல்லது மீன்கள் கொஞ்சமாவது கடித்திருக்க வேண்டும்.

ஆனால், எதுவுமே இல்லாமல் உடல் இரண்டு மணி நேரம் மட்டுமே நீரில் இருந்துள்ளதாக உடற்கூறாய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. மிஷேல் கடைசியாக தேலாலயத்திற்குப் போன பிறகுதான் காணாமல் போயுள்ளார். இறந்தபோது அவளிடம் இருந்த மொபைல் போன், அவரது பேக் என எதையும் பொலிசார் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.

மொபைல் கிடைத்திருந்தால் இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக இருந்திருக்கும். மேலும், கடைசியாக அவர் எங்கு சென்றார் என அவரது செல்போன் டவர் லொகேஷேனை வைத்துக் கண்டுபிடிக்கலாம்.

ஆனால், அதையும் பொலிசார் இதுவரை செய்யவில்லை. தற்கொலை எனக் கூறினாலும் இரண்டு வருடம் கடந்தும் இதுவரை இந்த வழக்கின் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யாமல் உள்ளது என தனது தரப்பு வாதங்களை நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளார் மிஷேலின் தந்தை ஷாஜி. தற்போது கொலை என்கிற ரீதியில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர் பொலிசர். இதனால் இந்த வழக்கில் உள்ள மர்மம் விரைவில் விலகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருமணமான சில நாட்களில் வட்ஸ் அப்பில் வந்த மனைவியின் புகைப்படம் : அதிர்ந்து போன கணவன்!!

அதிர்ந்து போன கணவன்

தமிழகத்தில் பெண்ணின் ஆபாச படத்தை கணவரின் செல்போனுக்கு அனுப்பிய வாலிபரை பொலிசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் வீரமணி (26). இவர் அந்த பகுதியில் பாத்திரக் கடை வைத்துள்ளார். இவரது கடையில் கீழ்பென்னாத்தூரை சேர்ந்த 22 வயது இளம்பெண் வேலை செய்து வந்தார். அப்போது அந்த பெண்ணிற்கும், வீரமணிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

வீரமணி அந்த பெண்ணிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதை பெண்ணிற்கு தெரியாமல் செல்போனில் படம் பிடித்து வைத்திருந்ததாக தெரிகிறது. அந்த பெண் வீரமணியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பலமுறை கேட்டு உள்ளார். வீரமணி அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார்.

இந்நிலையில் அந்த பெண்ணிற்கும் வேறு ஒருவருக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அந்த பெண்ணின் கணவரின் செல்போன் எண்ணிற்கு வீரமணி வாட்ஸ்–அப் மூலம் அப்பெண்ணின் ஆபாச படங்களை அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், தனது மனைவியை அவரது தாய்வீட்டில் கொண்டு வந்து விட்டுவிட்டு இனி உன்னுடன் வாழ மாட்டேன் என்று கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த இளம்பெண், வீரமணியை கைது செய்யக்கோரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து வீரமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

12 வயது மகன் செய்த காரியத்தால் பெண் மருத்துவர் எடுத்த விபரீத முடிவு!!

சென்னையில் குடும்ப தகராறு காரணமாக பெண் மருத்துவர் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், எலும்பு பிரிவு மருத்துவராக பணிபுரிந்து வருபவர் மகரஜோதி (41). இவர் அதே மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் வளர்மதி (36) என்பவரை திருமணம் செய்துள்ளார்.

இந்த தம்பதியினருக்கு 12 வயதில் ரிஷித் என்கிற மகனும், 4 வயதில் ஓமிஷா என்கிற மகளும் உள்ளனர். கடந்த சில நாட்களாகவே கணவன் மனைவிக்கு இடையில் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் இவர்களுடைய மகன் ரஷித், சைக்கிளில் பள்ளி சென்று வர ஆசைப்பட்டுள்ளான். ஆனால் இதற்கு வளர்மதி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அதனையும் மீறி நேற்று ரஷித் சைக்கிளில் பள்ளி சென்று வந்துள்ளான். இதனால் கணவன்-மனைவிக்கு இடையில் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த காணப்பட்ட வளர்மதி, படுக்கை அறை ஜன்னலில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் தயாரிக்கப்பட்ட மிகப் பெரிய கப்பல் ஜப்பானிடம் கையளிப்பு!!

மிகப் பெரிய கப்பல்

இலங்கையில் வரலாற்றில் முதல் முறையாக தயாரிக்கப்பட்ட மிகப் பெரிய கப்பல் நேற்று ஜப்பானிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கப்பலை கையளிக்கும் நிகழ்வு பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் கொழும்பு துறைமுகத்தில் நடைபெற்றது.

கொழும்பு டொக் யார்ட் நிறுவனம் இந்த கப்பலை தயாரித்துள்ளது. இதன் நீளம் 113 மீற்றர். இந்த கப்பல் ஆழ்கடலில் அதிசக்தி வாய்ந்த கேபிள்( தொடர்பாடல் மற்றும் மின் விநியோகம்) பதித்தல், அவற்றை திருத்தம் செய்தல் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க, பிரதியமைச்சர் நளின் பண்டார ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.

பன்னாட்டு ஓவியப்போட்டியில் முதலாவது பரிசினை வென்ற ஈழத்துச் சிறுமி!!

ஈழத்துச் சிறுமி

சுவிற்சர்லாந்தில் வங்கியொன்று நடத்திய 49வது இளையோர்களுக்கான ஆக்கத்திறன் ஓவியப்பிரிவு போட்டியில் இசையின் உலகம் எனும் தலைப்பில் வரையப்பட்ட படத்திற்கான 1ஆவது பரிசினை ஈழத்துச் சிறுமியான அபிர்சனா தயாளகுரு வென்றுள்ளார்.

குறித்த நிகழ்வு கடந்த 19ம் திகதி அவுஸ்ரியா நாட்டின் தலைநகரான வியன்னாவில் நடைபெற்றுள்ளது. இசை என்னை அசைக்கிறது எனும் தலைப்பில் குறித்த சிறுமி வரைந்த ஓவியம் பல ஆயிரம் போட்டியாளர்களுடன் போட்டியிட்டு வெல்லப்பட்டுள்ளது.

இசையுடன் தொடர்புபடுத்தி, உங்கள் சொந்த அனுபவத்தினை கலையாகப் படையுங்கள், இசை எப்படி உங்களை ஆட்படுத்துகிறது, இசை ஆக்கத்திறனை எப்படி வளர்க்கிறது, அதனை நீங்கள் உங்கள் கலையால் எப்படி வெளிப்படுத்துவீர்கள் என்பன போட்டியில் கேட்கப்பட்டிருந்த தலைப்புகளுக்கு சிறுமி ஆக்கத்தினை வரைந்துள்ளார்.

இசை கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறது, செய்திகளை கடத்துகிறது, தூது செல்கிறது, பார்வை மாற்றத்தை அளிக்கிறது, சிந்திக்க வைக்கிறது எனும் பொருளில் பிறர் உதவி இல்லாமல் இவ் ஓவியம் தன்னால் நிறந்தீட்டி படைக்கப்பட்டதாக செல்வி அபிர்சனா தெரிவித்துள்ளார்.

பல்துறைகளில் தமிழர்கள் மென்மேலும் வளரவேண்டும், உலகில் பல சாதனைகள் படைக்கவேண்டும் எனப் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் சிறுமிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.