வவுனியா பண்டாரிக்குளத்தில் வசித்து வந்த 74 வயதுடைய வயோதிபர் ஒருவர் கடந்த 08.06.2019 முதல் காணாமல் போயிருந்தார்.
இந்நிலையில் இன்று (22.06.2019) காலை புளியங்குளம், பெரியமடு காட்டுப்பகுதியிலிருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவனியா பண்டாரிக்குளம் பகுதியில் வசித்து வந்த இளஞ்சிங்கம் தேவராசா 74 வயதுடைய வயோதிபர் கடந்த 08.06.2019 முதல் காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு 10.06.2019 அன்று மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், அவரைபத்திரிகையூடாக விளம்பரப்படுத்தி தேடுதல் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இன்று காலை அவரது சொந்த இடமான புளியங்குளம் பெரிமடு காட்டுப்பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட துடரிக்குளம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று (21.06.2019) மாலை 7.30 மணியளவில் கொடுரமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் குடும்பப் பெண் ஒருவரின் சடலத்தினை செட்டிக்குளம் பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.
உள்ளுரில் மிருகங்களை வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்படும் வெங்காய வெடி என அழைக்கப்படும் வெடிபொருள் மூலமே நான்கு பிள்ளைகளின் தாயான 40 வயதுடைய ரவிச்சந்திரன் அந்தோனியம்மா என்ற குடும்பப் பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் சடலத்தினை நேற்றிரவு (21.06.2019) பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் தற்போது வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இக் கொலை தொடர்பாக குறித்த பெண்ணின் கணவர் தலைமறைவாகியுள்ள நிலையில் செட்டிக்குளம் பொலிஸார் இன்றையதினம் மோப்பநாயின் உதவியுடன் வீட்டிற்கு அருகேயுள்ள காட்டுப்பகுதியில் சந்தேகநபரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த பெண் வெங்காய வெடி மூலம் கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் குறித்த கொலையாளி அந்த வெடிபொருள் மூலம் படுகாயமடைந்த நிலையிலேயே தப்பியோடியுள்ளார் என்று செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஞானசேகரன் ராஜன் நீராகாரம் அருந்திய பின்னர் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னனெடுத்துள்ளார். ஏனையவர்கள் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் குறித்த போராட்டத்தை நிறைவுக்குக் கொண்டு வர ஞானசார தேரர் எடுத்த முயற்சியும் தேல்வியடைந்துள்ளது.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக நிறைவுக்கு வந்துள்ளது.
மதத் தலைவர்கள் உள்ளிட்ட சிலர் கடந்த ஆறு நாட்களாக சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளும் போராட்டங்களும் நடத்தப்பட்ட நிலையில் தற்போது குறித்த உண்ணாவிரத போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்றையதினம் போராட்டக்களத்திற்கு விஜயம் செய்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.
கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தொடர்பான விடயத்திற்கு ஒரு மாத காலத்திற்குள் தீர்வை பெற்றுக் கொடுப்பதாக கலகொட அத்தே ஞானசார தேரர் உறுதிமொழி வழங்கியதையடுத்தே கல்முனையில் நடத்தப்பட்ட இந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த போராட்டம் சுழற்சி முறையிலான போராட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை புனித தோமையார் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் அதிபரை உடனடியாக பதவியிலிருந்து இடைநிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன், வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன் அவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
குறித்த பாடசாலை மாணவி ஒருவர் அதே பாடசாலையின் ஆசிரியரினால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக, குறித்த மாணவியின் பெற்றோர் அதிபருக்கு முறையிட்டும், அதிபர் பொலிசாருக்கு இது தொடர்பில் அறிவிக்காமல் இந்த சம்பவத்தினை மூடிமறைக்க முயற்சித்தாரென ஆளுநரின் விசேட செயலணியின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த பாடசாலையின் அதிபரை உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிக இடைநிறுத்தம் செய்வதற்கு ஆளுநர் அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொண்டு ஆளுநருக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு விசாரணைக் குழுவொன்றினையும் நியமிக்குமாறும் ஆளுநர், வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலனுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதேவேளை துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக குறிப்பிடப்படும் குறித்த ஆசிரியரும் விசாரணைகள் முடியும்வரை சேவையிலிருந்தும் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறான சம்பவங்கள் வடமாகாணத்தில் இடம்பெறுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. இவ்வாறு மோசமாக நடந்து கொள்பவர்களின் குற்றங்கள் நிரூபிக்கப்படும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு நீதித்துறையினூடாக அதியுச்ச தண்டனை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வடமாகாண கல்வித்துறையில் இடம்பெறும் பாலியல் துஸ்பிரயோகங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு விசாரணைக் குழுவொன்றினை உருவாக்குவதற்கும் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கவின் உடலை கிண்டல் செய்யும் விதமாக புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில், அதற்கு அந்தணியின் முன்னாள் வீரர் மஹெல ஜெயவர்த்தன சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் தடுமாறும் அணிகளின் வரிசையில் பலரும் இலங்கை அணியின் பெயரை கூறினர். ஆனால் நேற்று இங்கிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் 232 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து, அதில் இங்கிலாந்தை 212 ஓட்டங்களுக்குள் சுருட்டி, ஓவராக ஆட்டம் காட்டி வந்த இங்கிலாந்து அடிபணிய வைத்தது. அதுமட்டுமின்றி புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திலும் உள்ளது.
இந்நிலையில் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பு இலங்கை அணியின் அதிரடி பந்துவீச்சாளரான மலிங்கவின் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலானது. அதில் மலிங்கவின் உடல் எடை அதிகரித்துவிட்டதாகவும், அவர் வயிற்றைப் பார்த்தால் கர்ப்பமாக இருப்பது போல் தெரிவதாகவும் இணையவாசிகள் கிண்டல் செய்து வந்தனர்.
ஆனால் நேற்றைய போட்டியில் இணையவாசிகளால் கிண்டல் செய்யப்பட்ட மலிங்க தான் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் வீரரான மஹெல ஜெயவர்த்தன மலிங்கவை கிண்டல் செய்யும் விதமாக வெளியிடப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு, கடந்த வாரம் இந்த புகைப்படத்தை வைத்து தான் பேசிக் கொண்டீருந்தீர்கள், ஆனால் அதை எல்லாம் தாண்டி சாதித்துவிட்டார் மலிங்க என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் புத்தகத்தின் உள்ளே இருப்பதை தான் பார்க்க வேண்டும் தவிர, புத்தகத்தின் கவரை பார்க்க கூடாது என்று இணையவாசிகள் பலரும் மலிங்கவிற்கு ஆதரவாக கூறி வருகின்றனர்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டம் சற்று முன்னர் நிறைவுக்கு வந்துள்ளது. மதத் தலைவர்கள் உள்ளிட்ட சிலர் கடந்த ஆறு நாட்களாக சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளும் போராட்டங்களும் நடத்தப்பட்ட நிலையில் தற்போது குறித்த உண்ணாவிரத போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்றையதினம் போராட்டக்களத்திற்கு விஜயம் செய்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார். அதன் பின்னரே குறித்த உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
வவுனியா ஓமந்தை ஏ9 பிரதான வீதியில் கார் மற்றும் மகேந்திரா ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார் ஒன்றும் ஓமந்தையில் இருந்து வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மகேந்திரா வாகனமும் ஓமந்தை எரிபொருள் மீள்நிரப்பு நிலையத்திற்கு அருகே ஏ9 வீதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் காரில் பயணித்த திருகோணமலையைச் சேர்ந்த வைத்தியர் படுகாயமடைந்த நிலையில் ஓமந்தை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியாவில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான அவசர கலந்துரையாடல், வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையில் வவுனியா மாவட்டச் செயலகத்தில் நேற்று (21.06.2019) மதியம் நடைபெற்றது.
செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் அருவித்தோட்டத்தில் இராணுவம் கையப்படுத்தியுள்ள 123 ஏக்கர் காணியை விடுவிப்பது தொடர்பில் முக்கியமாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இராணுவத்தின் வன்னி கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா, பொலிஸ் அதிகாரிகள், விமானப்படை அதிகாரிகள், வவுனியா மாவட்டச் செயலர், வவுனியாவின் நான்கு பிரதேச செயலாளர்கள், வன வளத்திணைக்கள அதிகாரிகள் மற்றும் வட மாகாண காணி ஆணையாளர் உட்பட நில அளவைத்திணைக்கள அதிகாரிகளும் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பண்டாரிக்குளம் கிராம அலுவலர் பிரிவில் காணி உறுதிப் பத்திரங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நடமாடும் சேவை கிராம அலுவலர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது.
வவுனியா, பண்டாரிக்குளம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள பண்டாரிகுளம், உக்கிளாங்குளம் ஆகிய பகுதிகளில் காணி உறுதிப் பத்திரமின்றி வசித்து வந்த 57 பேருக்கு காணி உறுதிகளை வழங்குவதற்காகவே இக் காணி நடமாடும் சேவை இடம்பெற்றது.
இதில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி ச.பிரியதர்சினி, கிராம அலுவலர், காணி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இதேவேளை, இதில் தெரிவு செய்யப்படுபவர்களுக்கான காணி உறுதிகள் விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா ஹொ ரவப்பொத்தானை வீதியில் அமைந்து சந்தைக்கு முன்பாக நேற்று (21.06.2019) அதிகாலை 5 மணி தொடக்கம் காலை 7 மணி வரை பயிர் சிகிச்சை முகாம் இடம்பெற்றது.
வவுனியா பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விவசாயிகளுக்கு இலகுவான முறையில் சேவையினை வழங்கும் நோக்கில் வவுனியா பொதுச்சந்தைக்கு முன்பாக பயிர்ச்செய்கை முகாம் இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில் இப் பயிர் சிகிச்சை முகாம் இடம்பெற்றிருந்ததுடன் பல விவசாயிகள் தங்களது சந்தேகங்கள் மற்றும் பயிர்களுக்கான தீர்வினை பயிர் சிகிச்சை முகாமில் பெற்று பயனடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக் கிண்ணம் போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. உலகக் கிண்ணம் தொடரில் இங்கிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி லீட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 232 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை அணியில் மத்யூஸ் 85 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார். பெர்னாண்டோ 49, மெண்டீஸ் 46 ஓட்டங்கள் எடுத்தனர். ஆர்ச்சர், உட் தலா 3 விக்கெட் சாய்த்தனர்.
இதனையடுத்து, 233 ஓட்டங்கள் என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் பேரிஸ்டோவ் மலிங்கவின் பந்துவீச்சில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். வின்ஸையும் 14 ஓட்டங்களில் வெளியேற்றினார் மலிங்க. சற்று நேரம் தாக்குப்பிடித்த மோர்கன் 21 ஓட்டங்களில் உதான பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அரைசதம் அடித்து விளையாடிய ரூட்டை 57 ஓட்டங்களில் சாய்த்தார் மலிங்க. அத்துடன், பட்லரையும் 10 ஓட்டங்களில் ஆட்டமிழக்கச் செய்தார். இங்கிலாந்து அணி 35 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட் இழப்புக்கு 151 ஓட்டங்களள் எடுத்தது.
அந்த அணி 15 ஓவர்களுக்கு 82 ஓட்டங்கள் எடுக்க வேண்டியிருந்தது. ஸ்டோக்ஸ் ஒரு புறம் அதிரடியாக விளையாட மறுபுறம் விக்கெட் சரிவு தொடர்ந்தது. மொயின் அலி 16, வோக்ஸ் 2, ரஷித் அலி 1, ஆர்ச்சர் 3 என அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர். 186 ஓட்டங்களுக்கு இங்கிலாந்து 9 விக்கெடை இழந்தது.
அப்போது, 44 பந்துகளில் 47 ஓட்டங்கள் எடுக்க வேண்டியிருந்தது. அதனால், இலங்கை எளிதில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஸ்டோக்ஸ் தன்னுடைய அதிரடியை தொடர்ந்தார். இருப்பினும், 47வது ஓவரின் கடைசி பந்தில் உட் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். இலங்கை அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மலிங்க 4 விக்கெட் எடுத்தார். டி சில்வா 3 விக்கெட் எடுத்தனர். உதான இரண்டு விக்கெட் சாய்த்தார். மலிங்க ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
6 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணிக்கு இது இரண்டாவது வெற்றி ஆகும். அதேபோல், 6 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணிக்கு இது இரண்டாவது தோல்வி ஆகும். ஏற்கனவே பங்களாதேஷ் அணியிடம் இங்கிலாந்து தோல்வியை சந்தித்துள்ளது.
வவுனியா – செட்டிகுளம், கங்கங்குளம் கிராமத்தில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கங்கங்குளத்தில் வசித்து வந்த நான்கு பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இக்கொலைக்கும், உயிரிழந்த பெண்ணின் கணவனுக்கும் தொடர்பிருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களாக கணவன் மனைவி பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் அண்மைக்காலமாக மனைவி கங்கங்குளத்தில் தனியாக வீடொன்றில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
இந்நிலையில் குறித்த பெண் எவ்வாறு கொலை செய்யப்பட்டார், என்ன காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார் என்ற கோணத்தில் செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பிரித்தானியாவை சேர்ந்த அலி சாண்டர்ஸ் என்கிற தாய் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு சுவாரஷ்யமான சம்பவத்தை புத்தகமாக வெளியிட்டுள்ளார். இதுகுறித்து பேசியிருக்கும் அவர், 2012ம் ஆண்டு என்னுடைய கல்லூரி காதலன் மைக்கேலை நான் திருமணம் செய்துகொண்டேன்.
குழந்தைகள் பெற்றுக்கொள்வதில் எனக்கு அதிக ஆசை. ஆனால் துரதிஷ்டவசமாக என்னால் கருத்தரிக்க முடியவில்லை. மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொண்ட போது, இருவருக்குமே குறைபாடு இருப்பது தெரியவந்தது. எங்களுக்கு பரிசோதனை செய்த மருத்துவர், செயற்கை கருத்தரிப்பின் மூலமாக மட்டுமே நான் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என கூறிவிட்டார்.
இதனால் பெரும் மனவேதனை அடைந்தேன். செயற்கை கருத்தரிப்பு அதிகம் தோல்வியில் தான் முடியும் என என்னுடைய தோழி கூறியதால், அதனை விடுத்தது தத்தெடுத்துக்கொள்ளலாம் என முடிவு செய்தேன்.
சமூகநல மையத்தை அணுகி கோரிக்கை வைத்தோம். சில நாட்கள் கழித்து அவர்கள் எனக்கு போன் செய்தார்கள். குறைமாத இரட்டை குழந்தைகளை தத்தெடுத்துக்கொள்ளலாம் என எங்களிடம் கூறினார்கள். உடனடியாக என்னுடைய கணவருடன் அங்கு சென்று பார்த்தோம். அவை அழகாக இருந்தது.
அதற்கான சட்ட வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தோம். நாட்கள் கடந்தோடின. அடிக்கடி அந்த குழந்தைகளை நேரில் சென்று பார்த்து வந்தோம். 2014ம் ஆண்டு குழந்தைகளை தத்தெடுத்துக்கொள்ள எங்களுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆசையாக வீட்டிற்கு எடுத்து வந்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தோம். மைக்கேல் மற்றும் என்னுடைய பெற்றோர்கள் அனைவருமே மகிழ்ச்சி அடைந்தார்கள்.
ஆனால் அதுவும் நீடிக்கவில்லை. மறுநாளே நான் கருத்தரிப்பது தெரியவந்தது. உடனே அந்த இரட்டை குழந்தைகளை திருப்பு அனுப்பி விடலாம் என என்னுடைய கணவர் கூறினார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்த குழந்தைகளை என்னுடைய கைகளில் இருந்து தூக்கியபோது கதறி அழுதேன். ஒரு கட்டத்தில், தற்கொலை பற்றி கூட சிந்தித்தேன்.
எனக்கு இப்பொழுது மூன்று வயதில் ஒரு மகன் இருக்கிறான். இருந்தாலும் நான் அந்த குழந்தைகளை நினைத்து அடிக்கடி தனியாக அழுதுகொண்டிருக்கிறேன். எங்கேயாவது இரட்டை குழந்தைகளை பார்த்தால், நான் தவறவிட்ட அந்த குழந்தைகளாக இருப்பார்களோ என்று தான் தோன்றுகிறது. என்றாவது ஒருநாள் அந்த குழந்தைகள் நிச்சயம் என் வீட்டு கதவை தட்டுவார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடுமையான வயிற்று வலியால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவி கர்ப்பமாக இருப்பதைக் கேட்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். நாகை மாவட்டம், தரங்கம்பாடி பகுதியைச் சேர்ந்த மாணவி உமா. இவர் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துவருகிறார்.
எட்டாம் வகுப்பு வரை அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்து வெற்றி பெற்று, இவர் இப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்து ஒரு நாள் தான் பள்ளிக்கூடத்திற்கு சென்றிருக்கிறார்.அன்றைய நாளே இவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டதால், பள்ளிக்கு வந்த பெற்றோர் மாணவியை அருகிலிருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு உமாவை சோதித்து பார்த்த மருத்துவர்கள் சொன்ன தகவலால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். மாணவி கர்ப்பமாக இருப்பதாகவும், இதற்கு காரணம் யார் காரணம் என்பதை மாணவியிடம் கேளுங்கள் என்று கூறியுள்ளனர்.
பெற்றோர் மாணவியிடம் தொடர்ந்து கேட்ட போது, தொடர்ந்து அழுது கொண்டே இருந்தார். இதனால் உறவினர்கள் பொறுமையுடன் கேட்ட போது, உறவினரும் கூலித் தொழிலாளியான அதே கிராமத்தைச் சேர்ந்த ரவி என்பவரின் மகன் ராஜு (20) என்பவர் தான் என கூறியுள்ளார்.
இதையடுத்து உமாவின் பெற்றோர் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர். அப்போது பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், நான் விளையாட்டாகப் பழகினேன். இப்படி ஆகும் என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார். பொலிசார் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால், முழு விசாரணைக்கு பின்னர் ராஜு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்தியாவின் ஒடிசாவில் மீன் பிடிக்க சென்ற மீனவருக்கு Ghol மீன் எனப்படும் அரிய மீன்கள் கிடைத்த நிலையில் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார். நாராயணா ஜெனா என்ற மீனவர் வழக்கம் போல நேற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றார். தினமும் போல நூற்றுக்கணக்கில் அல்லது சில ஆயிரத்தில் பணம் கிடைக்கும் அளவில் தனக்கு மீன் கிடைக்கும் என்று நினைத்தே கடலுக்குள் ஜெனா சென்றார். ஆனால் அவருக்கு நேற்று பெரும் அதிர்ஷ்டமான நேரம் போலும்.
அதாவது Ghol மீன் எனப்படும் அரியவகை மீன்கள் ஜெனாவின் வலைக்குள் சிக்கியது. இந்த மீன் ஒவ்வொன்றின் எடை 30 கிலோ இருக்கும். இந்த மீன்கள் ஒரு கிலோ கிராம் ரூ 6000-க்கு விலை போனது. நேற்று மட்டும் அவருக்கு ஒரு லட்சத்துக்கு 80 ஆயிரம் பணம் மீன் விற்றதன் மூலம் கிடைத்தது.
சரி, அப்படி என்ன சிறப்பு Ghol மீன்களிடம் உள்ளது என கேட்கிறீர்களா? இவ்வகை மீன்கள் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. இதன் தோல்கள் அழகு சாதன பொருட்களை செய்ய பயன்படுத்தப்படுகிறது. Ghol மீனின் துடுப்புகள் மது சுத்திகரிப்புக்கும் உதவுகிறது. இதோடு இதன் சுவாசப்பை ஒன்றின் விலை ரூ 1 லட்சத்துக்கு கூட விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கரும்பு தோட்டத்தில் பல பெண்களை ஒரு கும்பல் மிரட்டி சீரழித்ததோடு இது தொடர்பான நூற்றுக்கும் அதிகமான ஆபாச வீடியோக்கள் சிக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பொள்ளாச்சியில் மாணவிகள், இளம்பெண்களை ஒரு கும்பல பல ஆண்டுகளாக சீரழித்து வந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதே போன்ற மற்றொரு சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதாவது அரசு கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவிக்கு பைனான்சியர் ராஜா, அவரது நண்பர் வேலுமணி ஆகியோர் வலை விரித்துள்ளனர்.
செல்போனில் ஆபாசமாக படம் எடுத்து வைத்துக் கொண்டு, இந்த பெண் பின்னாடியே சென்று தொந்தரவு செய்துள்ளனர். இதனால் பயந்து போன அப்பெண் இது குறித்து பெற்றோர் உதவியுடன் பொலிசில் புகார் அளித்தார்.
இதையடுத்து இருவரையும் பொலிசார் கைது செய்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல் வெளியானது. இது மொத்தம் 4 பேர் கொண்ட கும்பல் என்று கூறப்படுகிறது. இவர்களின் குறி பள்ளி, கல்லூரி மாணவிகள் தான்.
இதில் முக்கிய குற்றவாளி ராஜா தான். இவர்கள் குள்ளக்கருப்பன் கோயில் பின்புற பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்துக்கு வரும் காதல் ஜோடிகளின் லீலைகளை மறைந்திருந்து வீடியோ எடுத்து கொள்வார்களாம். அதன்பிறகு இந்த 4 பேரில் ஒருவரான ராஜா, அந்த ஜோடியிடம் சென்று தன்னை காவலர் என்று அறிமுகப்படுத்திவிட்டு அவர்களை மிரட்டி வந்துள்ளார்.
இதில் பயந்து நடுங்கும் பெண்களை கரும்பு தோட்டத்தில் வைத்து மிரட்டி சீரழித்து, அதையும் வீடியோவாக எடுத்து கொள்வது நடந்து வந்திருக்கிறது. இப்படி 100-க்கும் அதிகமான வீடியோக்கள் இருப்பதாக கூறப்படும் நிலையில் மேலும் நடத்தப்படும் விசாரணையில் பல பகீர் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.