வீட்டு குளியலறை கதவை பூட்டிய புதுப்பெண் : வெளியில் வந்த கணவன் கண்ட காட்சி!!

இந்தியாவில் திருமணமான 3 மாதங்களில் புதுப்பெண் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் அவர் கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

நேபாளத்தை சேர்ந்தவர் ராஜ். இவரும் ரூபா கிருஷ்ணபகதூர் (22) என்ற பெண்ணும் காதலித்து வந்த நிலையில் மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பின்னர் இந்தியாவின் மும்பை நகருக்கு தம்பதி குடிவந்தனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ராஜ் தனது வீட்டு குளியலறைக்குள் சென்றார். அப்போது குளியலறை கதவை வெளிப்பக்கமாக பூட்டிய அவர் மனைவி ரூபா பின்னர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வெகுநேரமாக ராஜ் கதவை தட்டியும் திறக்கப்படாததால் கதவை உடைத்து கொண்டு அவர் வெளியில் வந்த போது ரூபா தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் ரூபாவின் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதோடு அவர் எழுதியிருந்த கடிதத்தையும் கைப்பற்றினார்கள். அதில், இது என்னுடைய தவறு தான் என எழுதியிருந்தது.

இந்நிலையில் ரூபாவின் சகோதரர் பொலிசில் அளித்த புகாரில், ராஜுக்கு திருமணத்துக்கு பின்னர் வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது.

இதையறிந்த ரூபா கணவர் தனது துரோகம் செய்துவிட்டாரே என துடித்து போனார், இதையடுத்தே அவர் தற்கொலை செய்தார் என தெரிவித்தார். இந்த புகாரின் அடிப்படையில் பொலிசார் ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இரவில் கதவை திறந்து வைத்து தனியாக தூங்கிய மனைவி : நேர்ந்த விபரீதம்!!

தனியாக தூங்கிய மனைவி

தமிழகத்தில் இரவில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞரை மக்கள் கம்பத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்துரை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர் வீட்டிலிருந்து வெளியில் சென்றுள்ளார். இதையடுத்து வீட்டில் தனியாக இருந்த அவர் மனைவி காற்றோட்டத்துக்காக இரவில் கதவை திறந்துவைத்துவிட்டு தூங்கினார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அந்த பெண் சத்தம் போட்டு கத்தியதையடுத்து, அக்கம்பக்கத்தினர் சென்று அந்த இளைஞரை சிறைபிடித்தனர்.

பின்னர் அங்குள்ள கம்பத்தில் அவரை கட்டி வைத்து சரமாரியாக அடித்து உதைத்தார்கள். இதன் பின்னர் அந்த இளைஞர் பொலிசில் ஒப்படைக்கப்பட்டாரா என்ற விபரம் தெரியவில்லை.

யாழில் கடுகதி ரயிலில் மோதுண்டு வயோதிபப் பெண் பலி!!

வயோதிபப் பெண் பலி

யாழ்.மிருசுவில் பகுதியில் கடுகதி ரயில் மோதி 50 வயதான பெண்மணி ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் மிருசுவில்- ஒட்டுவெளி பகுதியை சோ்ந்த மாணிக்கம் மகேஸ்வரி (வயது50) என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்மணி வீட்டிலிருந்து புறப்பட்டு ரயில் பாதையை கடந்து ஆலயத்தில் வழிபட்டுவிட்டு மீண்டும் ரயில் பாதையை கடந்து வீட்டுக்கு செல்ல முற்பட்டபோதே விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் சிக்கிய குறித்த பெண்மணியின் உடல் சிதைவடைந்த நிலையில் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வந்த பொலிஸாா் பொதுமக்களை அப்புறப்படுத்திவிட்டு சிதைவடைந்த உடல் பாகங்களை அங்கிருந்து உடனடியாக மீட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

யாழில் இயங்கி வந்த பாலியல் விடுதியொன்று முற்றுகை!!

பாலியல் விடுதி முற்றுகை

அலைபேசி வலையமைப்பு நிறுவனத்தின் போர்வையில் உடுவில் கிழக்கு கிராம அலுவலகரின் காரியாலயம் இயங்கும் வீட்டில் பாலியல் தொழில் புரியும் விடுதியொன்று இயங்கி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று முற்பகல் உடுவில் அம்பலவாணர் வீதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டில் தென்னிலங்கையைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட நால்வர், இளம் பெண் ஒருவரைக் கடத்த முற்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் அந்த இளம் பெண் வழங்கிய தகவலின் அடிப்படையில் சுன்னாகம் பொலிஸார், ஒருவரைக் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது மேலும் 2 பெண்கள் உட்பட மூவர் தப்பிச்சென்றுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

உடுவில் கிழக்கு (184) கிராம அலுவலர் அலுவலகம் இயங்கும் வீட்டில் கடந்த ஒரு மாத காலமாக அலைபேசி வலையமைப்பு நிறுவனத்தின் பெயர்ப்பலகையுடன் அலுவலகம் ஒன்று இயங்கிவந்துள்ளது.

இதன்போது நுகேகொட மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த 2 இளைஞர்கள் உட்பட 2 இளம் பெண்கள் தங்கியிருந்துள்ளனர்.அத்துடன், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்களும் அங்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். அவர்களின் நடவடிக்கையை ஆராய்ந்த உடுவில் கிழக்கு பெண் கிராம அலுவலகர் அங்கிருந்தவர்களிடம் நிறுவனம் தொடர்பான பதிவைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன்,இது தொடர்பில் நுகேகொடையைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளதாகவும் சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து வலி.தெற்கு பிரதேச சபை உறுப்பினர் தவராஜா துவாரகன், உடுவில் பிரதேச செயலர், உடுவில் கிழக்கு கிராம அலுவலகர், பொதுமக்கள் என பலர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் குழுமியுள்ளதுடன், இது தொடர்பில் அந்த வீட்டின் உரிமையாளர் உட்பட அனைவரையும் கைது செய்யவேண்டுமெனவும் சுன்னாகம் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியாவில் இராணுவத்திலிருந்து தப்பி ஓடியவர் கைது!!

இராணுவத்திலிருந்து தப்பி ஓடியவர் கைது

வவுனியா பழைய பேருந்து நிலைப்பகுதியில் இன்று மதியம் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற நபர் ஒருரை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

வவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதியில் முன்னர் இராணுவத்தில் பணியாற்றிய ஒருவர் விடுமுறையில் வீடு சென்று திரும்பி இராணுவத்தில் இணைந்து கொள்ளவில்லை. இதையடுத்து குறித்த நபர் இன்று வவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதியில் வைத்து இராணுவப் புலனாய்வுப்பிரிவினால் கைது செய்யப்பட்டு அவரிடம் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதையடுத்து அப்பகுதியில் என்ன நடந்துள்ளது என்பதை அறிந்துகொள்வதற்காக பலர் ஒன்றுகூடிய நிலையில் அங்கு சென்ற பொலிசார் நிலைமைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சவப்பெட்டியை தூக்கிக்கொண்டு புதைகுழிக்குச் சென்றவர்கள் பதறியடித்து ஓட்டம்!!

நல்லடக்கம் செய்வதற்காக சவப்பெட்டியை தூக்கிக்கொண்டு புதைகுழிக்குச் சென்றுகொண்டிருந்த போது கலைந்த குளவிகள் இறுதி ஊர்வலத்தில் சென்றவர்களை விரட்டி விரட்டி கொட்டியதால் சவப்பெட்டியையும் அவ்விடத்திலேயே விட்டுவிட்டு பதறியடித்து ஓடியுள்ளனர்.

வட்டவளை பகுதியில் நேற்று முன்தினம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்களில் மூவர் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தை அடுத்து அனாதையாக விட்டுச் செல்லப்பட்ட சவப்பெட்டியை இருட்டோடு இருட்டாக வந்த அந்த தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் புதைத்துள்ளனர்.

குறித்த பகுதியைச் சேர்ந்த நபரொருவரின் இறுதி ஊர்வலத்தில் சவப்பெட்டிக்கு முன்பாக சென்றுகொண்டிருந்தவர்கள் பட்டாசு கொளுத்தி வீசியுள்ளனர்.

அந்த சத்தத்தில் கலைந்த குளவிகள் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களை விரட்டி விரட்டி கொட்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் குளங்களை நோக்கிப் படையெடுக்கும் கொக்குகள்!!

படையெடுக்கும் கொக்குகள்

வவுனியாவில் குளங்களை நோக்கி கொக்குகள் படையெடுத்து வருகின்றன. வவுனியாவில் வறட்சியான காலநிலை நீடிப்பதால் குளங்கள் மற்றும் நீர் நிலைகளின் நீர்மட்டம் வற்றியுள்ளது.

இதன்காரணமாக குளங்களில் மீன்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் உயிருக்காக போராடுவதுடன் இறந்தும் வருகின்றன.

அவற்றை உணவாக பெற்றுக் கொள்வதற்காக கொக்குகள் இரைதேடி குளங்களை நோக்கி படையெடுத்து வருகின்றன. இதனால் குளப்பகுதிகள் கொக்குளால் நிறைந்துள்ளதுடன் அவை அழகான காட்சியாகவும் காணப்படுகின்றது.

வவுனியாவில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட நடைபாதை நகரசபையினரால் அகற்றம்!!

சட்டவிரோத நடைபாதை

வவுனியா தர்மலிங்கம் வீதிக்கு அருகே காணப்பட்ட சட்டவிரோத நடைபாதை இன்று (21.06.2019) காலை 10 மணியளவில் வவுனியா நகரசபையினரால் அகற்றப்பட்டது.

வவுனியா தர்மலிங்கம் வீதிக்கு அருகே காணப்படும் வர்த்தக நிலையத்திற்கு (சட்டவிரோத கட்டிடம்) முன்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியா நகரசபையின் அனுமதியின்றி கொங்கிறீட் மூலம் அமைக்கப்பட்ட நடைபாதையினை நகரசபை ஊழியர்கள் இன்று அகற்றியுள்ளனர்.

பொதுமகன் ஒருவர் வவுனியா நகரசபைக்கு மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்தே கொங்கிறீட் நடைபாதை அகற்றப்பட்டது. இவ் விடயம் தொடர்பாக குறித்த வர்த்தக நிலையத்தில் உரிமையாளர் கருத்து தெரிவிக்கையில்,

வீதிக்கு அருகே குப்பைகளாக காணப்பட்டது. அதனையடுத்தே நான் இவ்விடத்தில் கொங்றிட் மூலம் நடைபாதை அமைத்தேன். நான் இது தொடர்பாக நகரசபையில் கதைத்துக்கொண்டிருந்த சமயத்தில் நகரசபையினரால் இந்த நடைபாதை அகற்றப்பட்டுள்ளது. நான் நகரசபையில் அனுமதி எடுக்காது இதனை முன்னெடுத்தது என் தவறு தான் என தெரிவித்தார்.

ஒரே நாளில் தலை முடி நரைத்து வயதான பெண் போல் மாறிய பெண் : நடந்தது என்ன?

வயதான பெண் போல் மாறிய பெண்

ஒரே நாளில் பாட்டி போல முடியெல்லாம் நரைத்துப் போன ஒரு பெண், தனது நரைமுடியைக் குறித்து முதலில் வெட்கப்பட்டாலும், இப்போது தான் முன்னை விட கவர்ச்சியாக இருப்பதாக தெரிவிக்கிறார்.

அரிசோனாவைச் சேர்ந்த Sara Eisenman, 21 வயது ஆகும்போதே முடி நரைக்க ஆரம்பித்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார். ஒரே நாளில் நரைத்து விட்டது போல் இருந்தது என்று கூறும் Sara, உடனடியாக அதை மறைக்க, தலைக்கு சாயம் பூசத் தொடங்கியதாக தெரிவிக்கிறார்.

தனது மகனை பிரசவிப்பதற்காக மருத்துவமனைக்கு செல்லும் முன் கூட, மக்கள் தன்னை பார்க்க வருவார்களே, தனது தலை முடியைக் குறித்து என்ன சொல்வார்கள் என அஞ்சி தலை முடிக்கு சாயம் பூசியதாக தெரிவிக்கிறார் Sara.

தனது இரண்டாவது மகள் பிறந்தபோது, அவரது மன நிலைமை சற்று மாறியிருக்கிறது. தான் தனது தலை முடிக்கு சாயம் பூசியிருக்கிறேனா இல்லையா என்பதை விட வாழ்க்கையில் முக்கியமான விடயங்கள் உள்ளன என்பதை உணர்ந்ததாக தெரிவிக்கிறார் Sara.

15 ஆண்டுகளாக முடியின் நிறத்தை மறைத்து வாழ்ந்த Sara, 37 வயதானபோது சாயத்தை தூக்கி வீடி விட்டு, தனது வெள்ளி நிற தலைமுடி தனக்கு கிரீடம் போல இருப்பதாக உணர்ந்ததோடு, சாயத்திடம் இருந்து விடுதலை பெற்றது போன்ற உணர்வையும் பெற்றிருக்கிறார்.

Saraவின் கணவர், மனைவியின் முடிவுக்கு ஏகமனதாக ஆதரவு தெரிவிக்க, இதைக் குறித்து தோழிகளிடம் கேட்டபோது, வயதான சூனியக்காரியைப் போல் தோற்றமளிப்பாய் என்று கூறியிருக்கிறார்கள் சிலர்.

என்றாலும் மனம் சோர்ந்து போகாமல், தனது வெள்ளி நிற முடியுடன் Sara வெளியே செல்ல பார்த்த பலரும் அவரை ஆச்சரியத்துடன் பாராட்டியிருக்கிறார்கள். இப்போது நான் முன்னிருந்ததைவிட கவர்ச்சியாக உணர்கிறேன் என்று கூறும் Sara, ஒரு நரம்பியல் அறிவியலாளர் மட்டுமின்றி ஒரு எழுத்தாளரும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.

மனைவியுடன் சண்டை : வீட்டைக் கொளுத்திய மனநல மருத்துவர்!!

வீட்டைக் கொளுத்திய மருத்துவர்

சுவிட்சர்லாந்தில் மனைவியுடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாக, மன நல மருத்துவர் ஒருவர் தனது வீட்டை தீ வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தின் Jonschwil பகுதியில் பிரபல மன நல மருத்துவர் ஒருவர் மனைவியுடன் ஏற்பட்ட சண்டையில் வீட்டையே தீ வைத்து கொளுத்தியுள்ளார்.

பெயர் குறிப்பிடாமல் வெறும் RF (72) என்று குறிப்பிடப்பட்டுள்ள அந்த மருத்துவர், சிறார் மற்றும் பதின்ம வயதினரின் மன நலம் தொடர்பான சிறப்பு மருத்துவராவார். தீ வைத்தபோது வீட்டிலிருந்த மருத்துவரின் மனைவி காயங்கள் எதுவும் இன்றி தப்பியுள்ளார். அவர்களது 5 வயது குழந்தை சம்பவம் நடந்தபோது வீட்டில் இல்லாததால் உயிர் தப்பியுள்ளது.

ரொமேனியாவில் பிறந்து இஸ்ரேலில் வளர்ந்த அந்த மருத்துவர், சூரிச் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயில்வதற்காக சுவிட்சர்லாந்துக்கு வந்திருக்கிறார். அக்கம்பக்கத்தவர்கள், அருமையான தம்பதி என வர்ணிக்கும் தம்பதியருக்குள் என்ன பிரச்சினை என்பது தெரியவில்லை.

அந்த மருத்துவருக்கு இது முதலாவது திருமணம் இல்லையென்றும், ஏற்கனவே ஒருமுறை திருமணமான அவருக்கு, வளர்ந்த இரண்டு பிள்ளைகள் உள்ளதாகவும் அயலகத்தார் கூறுகின்றனர். பெரும்பாலும் அந்த மருத்துவர் வீட்டுக்கு வருவதில்லை என்றும், அவரது மனைவிதான் குழந்தைகளை கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தீப்பற்றி எரிந்ததில் அவர்களது வீடு முற்றிலும் சேதமடைந்துள்ளதாகவும், சுமார் 100,000 சுவிஸ் ஃப்ராங்குகள் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

வவுனியா புகையிரத நிலையம் வெறிச்சோடிய நிலையில் : தொடரும் புகையிரத தொழிற்சங்க வேலை நிறுத்தம்!!

வவுனியா புகையிரத நிலையம்

இலங்கை புகையிரதநிலைய சாரதிகள் தொழிற்சங்கம் மேற்கொண்டு வரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக வவுனியாவில் பயணிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வவுனியா புகையிரத நிலையம் மூடப்பட்டு இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் பயணிகள் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றது.

புகையிரத நிலையத்திற்குச் சென்ற பயணிகள் புகையிரத சாரதிகளின் வேலை நிறுத்தம் காரணமாக திரும்பிச் செல்வதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

புகையிரத சாரதிகள் தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக புகையிரதம் ஒன்று வவுனியா புகையிரத நிலையில் தரித்து நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இறந்த எஜமானருக்காக படுக்கை அருகே காத்திருக்கும் நாய் : மனதை உருகவைக்கும் புகைப்படம்!!

மனதை உருகவைக்கும் புகைப்படம்

அமெரிக்காவில் இறந்த தன்னுடைய எஜமானரின் வருகைக்காக, நாய் ஒன்று பல நாட்களாக படுக்கை அருகே காத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நியூஜெர்ஸி மாகாணத்தை சேர்ந்த மூன்று வயதான மூஸ் என்கிற வளர்ப்பு நாய், தனது உரிமையாளரின் மருத்துவமனை படுக்கையின் பக்கத்திலேயே பொறுமையாக காத்துக்கொண்டிருக்கிறது.

ஆனால் பாவம் இறந்த அதன் உரிமையாளர் திரும்ப வரமாட்டார் என்பது அதற்கு தெரியவில்லை என, தற்போது அதனை தற்காலிகமாக கவனித்து வரும் ‘Eleventh Hour Rescue’ என்கிற அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நார்த்ஸ்டார் செல்லப்பிராணி மீட்பு என்கிற பேஸ்புக் பக்கத்தில், “தயவுசெய்து மூஸுக்கு ஒரு புதிய வீடு மற்றும் குடும்பத்தைக் கண்டுபிடிக்க உதவுங்கள். அவன் இயற்கையிலேயே இனிமையான, மகிழ்ச்சியான ஒரு சிறுவன். காயமடைந்த அவனுடைய இதயத்தை குணப்படுத்துவதற்கு உறவுகள் தேவை” என பதிவிடப்பட்டுள்ளது.

வவுனியாவில் கல்முனை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து 108 தேங்காய் உடைப்பு!!

108 தேங்காய் உடைப்பு

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தக் கோரி நடத்தப்பட்டு வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் இன்று (21.06.2019) காலை 7.30 மணியளவில் 108 தேங்காய் உடைக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியமும், வவுனியா மாவட்ட பொது அமைப்புகளும் இணைந்து கல்முனையில் இடம்பெறும் போராட்டத்திற்கு ஆதரவாக இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன் அதன் பின்னர் ஆலய முன்றலில் 108 தேங்காய் உடைக்கப்பட்டது.

இதில் வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பௌத்த மதகுரு, அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மனைவியைத் தேடி 300 கி.மீ நடந்தே சென்ற கணவர் : நெஞ்சை உருக்கும் சம்பவம்!!

நெஞ்சை உருக்கும் சம்பவம்

தமிழகத்தில் தன் மனைவி இறந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவரைத் தேடி 300 கி.மீ பயணம் செய்த கணவரின் செயல் நெஞ்சை உருக்கும் விதமாக அமைந்துள்ளது. தமிழகத்தின் கும்பகோணம் அருகேயுள்ள பெரிங்காடி பகுதியைச் சேர்ந்தவர் 55 வயதான வினயராஜ். இவர் தமது மனைவி சாந்தி மற்றும் குடும்பத்தினருடன் கோயம்புத்தூர் நரசிம்மநாயக்கன்பாளையத்தில் வசித்து வருகிறார்.

கடந்த மார்ச் 3 ஆம் திகதி இருவரும் தங்களின் மகளை கோவை ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு, காரில் நரசிம்மநாயக்கன்பாளையம் திரும்பியுள்ளனர். காரை வினயராஜ் ஓட்டியுள்ளார். நரசிம்மநாயக்கன்பாளையம் பேருந்து நிலையம் அருகே பகவான் கார்டன் நோக்கிச் செல்ல காரை வலது பக்கமாக திருப்பியபோது, மேட்டுப்பாளையத்திலிருந்து கேரளாவுக்கு காய்கறி ஏற்றிச் சென்ற லாரி, கார் மீது மோதியுள்ளது.

இதில், கார் அப்பளம் போல நொறுங்கியுள்ளது. மட்டுமின்றி சாந்தி சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளார். வினயராஜ் பலத்த காயத்துடன் உயிர் தப்பியுள்ளார். மனைவியின் மரணச் செய்தி அவரைத் துயரத்தில் ஆழ்த்தியது. மனைவி உயிரிழந்ததால் அவர் மன நலம் பாதிக்கப்பட்டுள்ளார். மன நலம் பாதித்திருந்த அவர் தன் மனைவி இறக்கவில்லை; அவரை தேடிச் செல்கிறேன் எனக் கூறிக்கொண்டே இருந்துள்ளார்.

இதற்கிடையே, கடந்த 7 ஆம் திகதி வீட்டிலிருந்து வெளியேறிய வினயராஜ் மனைவியைத் தேடிச் சென்றுள்ளார். இவர் காணாமல் போனதையடுத்து குடும்பத்தினர் பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால், எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இறந்த சாந்தியின் செல்போனுக்கு சமீபத்தில் ஒரு போன்கால் வந்துள்ளது. அதில் மறுபுறம் பேசியவர் காணாமல் போன வினயராஜ்.

போனிலும் மனைவியை விசாரித்துள்ளார். அப்போதுதான் அவர் எங்கிருக்கிறார் எனத் தெரியவந்துள்ளது. அவர் போன் செய்த நம்பரை வைத்து காவல்துறையின் உதவியுடன் அவர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துள்ளனர். 7 ஆம் திகதி குடியிருப்பில் இருந்து கையில் பணம், செல்போன் என எதையும் எடுக்காமல் சென்ற வினயராஜ், 300 கி.மீ தூரம் நடந்தே தனது சொந்த ஊரான கும்பகோணம் சென்றுள்ளார்.

அங்கு ஒரு தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் சாரதியிடம், மனைவியைத் தேடி வந்துள்ளேன். அவளுக்குப் போன் பண்ண வேண்டும் எனக் கூறி அவரது போனை வாங்கி மனைவி நம்பருக்குப் போன் செய்துள்ளார். ஞாபக சக்தியை இழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிய பின்பும், மனைவியின் போன் நம்பரைச் சரியாக ஞாபகம் வைத்து அவர் போன் செய்ததே அவரை மீண்டும் கண்டுபிடிக்க உதவியுள்ளது. மனைவியின் மீதுள்ள பாசத்தில் அவர் 300 கி.மீ பயணம் செய்த சம்பவம் அறிந்த அனைவரையும் நெகிழச்செய்துள்ளது.

அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான் : ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!!

விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்

ஈரான் மிகப்பெரிய தவறை செய்து விட்டது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தனது உத்தியோனப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை அமெரிக்கா நிறுத்தியது. இதனால் இருநாடுகளுக்கும் இடையில் அண்மை காலமாக மோதல் போக்கு வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில், ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. எனினும், ஈரானும் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு தகுந்த திலடி கொடுத்து வருகிறது.

இவ்வாறான பின்னணியில் ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு இரு நாடுகளும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. இதற்கிடையே, ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஹோர்மஸ்கான் என்ற பிராந்தியத்திற்குள் வந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் தெரிவித்தது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்கா, உளவு விமானம் சர்வதேச எல்லையில்தான் பறந்தது. அதை வேண்டுமேன்றே ஈரான் அரசு சுட்டு விழ்த்தியது என குற்றம்சாட்டியது. இந்நிலையிலேயே, ஈரானை எச்சரிக்கும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரான் மிகப் பெரிய தவறு செய்து விட்டது என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் ரசிகருக்கு அதிர்ச்சி கொடுத்த இலங்கை ஜாம்பவான் சங்கக்கார!!

அதிர்ச்சி கொடுத்த  சங்கக்கார

இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், அதிரடி வீரருமாக திகழ்ந்த ஜம்பவான் குமார் சங்கக்கார, பாகிஸ்தான் ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

பாகிஸ்தானின் புரிவாள நகரத்தைச் சேர்ந்த நோமன் சர்வார் என்ற இளைஞர், ட்விட்டர் பக்கத்தில், சங்கக்காராவை குறிப்பிட்டு இன்று என் பிறந்தநாள். நீங்கள் எனக்கு வாழ்த்துக்கள் கூற முடியுமா? ப்ளீஸ் என பதிவிட்டுள்ளார்.

நோமன் சர்வார் ட்விட்டரில் பதிவிட்ட ஒரு மணிநேரத்திற்குள் இலங்கை ஜம்பவான் குமார் சங்கக்கார, நோமன் சர்வார் பதிவின் கீழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என பதிலளித்து அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

41 வயதான சங்கக்காராவின் இச்செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இலங்கை நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார 2015 ஆம் ஆண்டு யூன் 15ம் திகதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.