மேடையில் கண்கலங்கி அழுத பிரபல நடிகர் அருண் பாண்டியன் மகள்!!

அருண் பாண்டியன் மகள்

தமிழ் சினிமாவில் 90களில் மிகப்பிரபலமாக இருந்த நடிகர் அருண்பாண்டியன். இவர் தற்போது தமிழ் படங்களை வெளிநாட்டில் விநியோகம் செய்து வருகின்றார்.

இந்நிலையில் இவரின் மகள் கீர்த்தி பாண்டியன் தும்பா என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ‘என்னை ஒரு சில இயக்குனர் உடல் தோற்றம் மற்றும் நிறத்தை வைத்து ஒதுக்கினார்கள். ஆனால், ஒரு வழியாக நல்ல டீமுடன் நான் இணைந்துவிட்டேன்’, என கூறி கண் கலங்கி அழுதுள்ளார்.

100 கோடி வருமானம்… அப்பா இறப்பதற்கு முன் இதை சொன்னார் : எம்.எஸ். விஸ்வநாதன் மகள் நெகிழ்ச்சி!!

எம்.எஸ். விஸ்வநாதன் மகள்

பிரபல இசையமைப்பாளரான எம்.எஸ்.விஸ்வநாதனின் மகள் ஆண்டிற்கு 100 கோடி வருமானம் சம்பாதித்து வரும் நிலையில், அவர் தன்னுடைய தொழில் மற்றும் அப்பா பற்றிய சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

லதா மோகன் இசையமைப்பாளரான எம்.எஸ்.விஸ்வநாதனின் மகள். இவர் ஸ்பலான் இண்டியா பிரைவேட் லிமிடெட் என்ற தன் நிறுவனத்தின் கீழ், இருபாலருக்குமான 50-க்கும் மேற்பட்ட பியூட்டி பார்லர்களை நடத்திவருகிறார். 450-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு முதலாளியான இவர், ஆண்டிற்கு சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுகிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், என் வாழ்க்கையில் சவால்கள் சந்தித்துள்ளேன். அழகுக்கலையில் எனக்கு ஆர்வம் அதிகம் இருந்ததால், இதை நாம் ஏன் பிசினஸாக செய்யக் கூடாது என்று யோசித்தேன். அதன் படி சென்னை மயிலாப்பூரில் 1981-ஆம் ஆண்டு கன்யாங்கிற பெயரில் முதல் பியூட்டி பார்லரைத் துவங்கினேன்.

வெற்றி கிடைத்தால், சந்தோஷம், இல்லையென்றால் இது ஒரு அனுபவம் என்று நினைத்ததால், எனக்கு எந்த ஒரு பயமும் வரவில்லை. சவால்கள், சிரமங்கள் இருந்தன. அதை எல்லாம் தாண்டி புதிய கிளைகளை துவங்கினேன். நடிகை ஸ்ரீப்பிரியா என்னுடைய நண்பர் என்பதால், அவர் தான் என்னுடைய முதல் மற்றும் மூன்றாவது கிளையை திறந்து வைத்தார்.

எங்கள் அம்மா கைராசிக்காரங்க என்பதால், முதலில் அவர்களை தான் எந்த கிளை திறந்தாலும், முதலில் கல்லாப் பெட்டியில் பணம் போட சொல்வேன். என் அப்பா இது எல்லாம் ஏம்மா? உனக்கு தேவையா? என்றெல்லாம் கூறினார்.

ஆனால் அதுவே நான் பலருக்கு வேலை கொடுக்கிறேன் எனறவுடன், என்னுடைய பேச்சை மீறியும் நீ செய்தது நல்லது தான் என்று பாராட்டினார். தொழிலில் நேர்மை, பேச்சிலும் செயலிலும் நம்பகத்தன்மை, வாடிக்கையாளரை ஏமாற்றக் கூடாது என்று அப்பா அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார்.

என்கிட்ட சொன்னபடிதான் நான் தொழில் செய்துகிட்டிருக்கேன். அவர் இறக்கும் முன்பு, நீ, உன் தனி அடையாளத்துடன் சாதிச்சுட்ட, ஓர் அப்பாவா எனக்கு ரொம்பப் பெருமையா இருக்குது என்று வாழ்த்தினார். மேலும் இரண்டு, மூன்று நிறுவனங்களின் பெயர்களில் எங்களுக்கு 50-க்கு மேற்பட்ட பார்லர்கள் இருக்கு, இந்திய அளவில் எங்கள் நிறுவனம் நல்ல வளர்ச்சியிலும் இருக்கு என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

7 காதலர்கள்… வியக்க வைக்கும் வருவாய் : ஆடம்பர வாழ்க்கை தொடர்பில் அம்பலப்படுத்திய பிரித்தானிய இளம்பெண்!!

பிரித்தானிய இளம்பெண்

18 வயதேயான பிரித்தானிய இளம்பெண் வாலண்டினா தமது வாழ்க்கை தொடர்பில் அம்பலப்படுத்திய தகவல்கள் பலபேரை வியப்பில் ஆழ்த்தியது. மில்லியன் பவுண்டுகள் வங்கி சேமிப்பு, விலை உயர்ந்த ஆடைகள் மற்றும் நகைகள் என தமது ஆடம்பர வாழ்க்கைக்கு பின்னால் sugar daddies எனப்படும் பணக்கார காதலர்கள் இருப்பதாக அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

வயதான பணக்காரர்கள் தங்களுடன் நேரத்தை செலவிடவும், தேவைப்பட்டால் படுக்கையை பகிர்ந்து கொள்ளவும் இளம் பெண்களை தெரிவு செய்து, அவர்களுக்கு விலை உயர்ந்த பரிசுப்பொருட்களையும் பண உதவிகளையும் செய்பவர்களே sugar daddies என அறியப்படுகிறார்கள்.

இதற்கு ஒப்புக்கொள்ளும் இளம்பெண்களை Sugar babies என அழைக்கின்றனர். இந்த வயதான பணக்கார ஆண்கள் ஆசைப்படும் ஆடை அலங்காரங்களுடன் நேரத்தை செலவிடுவது, மது விருந்துகளில் கலந்துகொள்வது, பாலியல் ரீதியாக அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை இந்த இளம்பெண்கள் மேற்கொள்ள வேண்டும்.

பிரபல தனியார் செய்தி ஊடகம் ஒன்றில் மனம் திறந்த வாலண்டினா, 40 வயதை கடந்தவர்களும், தொழிலதிபர்களும் தமது சுகர் டாடிகளாக உள்ளனர் என வாலண்டினா தெரிவித்துள்ளார்.

தமது சுகர் டாடி ஒருவரிடம் இருந்து வாரம் ஒன்றிற்கு 3000 பவுண்டுகள் ஈடாக்குவதாக கூறும் வாலண்டினா, மாதம் சுமார் 21,000 பவுண்டுகள் வரை வருவாய் ஈட்டுவதாக தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, அந்த ஏழு சுகர் டாடிகளில் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இளைஞர்களைவிடவும் 40 வயதைக் கடந்தவர்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக கூறும் வாலண்டினா, 47 வயதான சுகர் டாடி ஒருவரை தாம் மனதார விரும்புவதாகவும், இருவரும் கூடிய விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும், அவர் தெரிவித்துள்ளார். மட்டுமின்றி ஆயத்த ஆடைகள் நிறுவனம் ஒன்றை நிறுவ திட்டமிட்டு வருவதாகவும், சொந்தமாக ஒரு பிராண்ட் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் வாலண்டினா வெளிப்படுத்தியுள்ளார்.

தயவு செய்து அவர்களை விட்டுவிடாதீர்கள் : வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்த பெண்!!

தற்கொலை செய்த பெண்..

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவை சேர்ந்த சுப்பிரமணி – மஞ்சுளா (36) தம்பதியினர் தேவானந்தா பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வருகின்றனர்.

கடத்த சில தினங்களுக்கு முன் அந்த வீட்டின் உரிமையாளரான சோமண்ணா, வீட்டை வேறு ஒருவருக்கு குத்தைகைக்கு விட திட்டமிட்டுள்ளதால், காலி செய்யுமாறு கூறியுள்ளார். அந்த பேச்சு வார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, மஞ்சுளா குடும்பத்தாருக்கும் சோமண்ணா குடும்பத்தாருக்கும் அடிதடி சண்டை ஏற்பட்டுள்ளது. உடனே மஞ்சுளா பொலிஸ் நிலையம் சென்று புகார் கொடுத்துள்ளார்.

அங்கு இரு குடும்பத்தாரையும் அழைத்து வைத்து பொலிஸார் சமாதானம் செய்து அனுப்பியுள்ளனர். வீட்டிற்கு வந்த சில மணி நேரங்களில் மீண்டும் சண்டை துவங்கியுள்ளது. இதில் காயமடைந்த தன்னுடைய கணவரை மருத்துவமனையில் அனுமதித்த மஞ்சுளா, வீடு திரும்பியதும் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார், மஞ்சுளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், தற்கொலைக்கு முன் அவர் பேசியிருக்கும் வீடியோ கைப்பற்றப்பட்டது.

அந்த வீடியோவில், என் மரணத்திற்கு பிந்து, கீதா மற்றும் சோமன்னா ஆகிய மூன்று பேர் காரணம். அவர்கள் என் வாழ்க்கையை நரகமாக்கியிருந்தார்கள். எனது தாலியை கூட பறித்து துன்புறுத்தினார்கள். நாங்கள் காவல் நிலையத்திற்குச் சென்றபோது, ​​பொலிஸாரின் முன் வைத்தே எங்களை தாக்கினார்கள்.

ஆனால் அவர்கள் ஒரு வார்த்தை கூட என்னவென்று கேட்கவில்லை. என் கணவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளேன். இப்பொழுது நானும் தூக்கில் தொங்க போகிறேன். தயவு செய்து அவர்கள் மூன்றுபேரையும் விட்டுவிடாதீர்கள் என பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டப்பகலில் பெண் காவலரை எரித்துக் கொன்ற ஆண் காவலரும் மரணம்!!

ஆண் காவலர் மரணம்

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பெண் காவலரை எரித்துக் கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற ஆண் காவலர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

கேரள மாநிலம், மாவேலிக்கரா அருகே உள்ள வள்ளிக்குந்நு காவல் நிலையத்தில் சிவில் காவல் அதிகாரியாகப் பணிபுரிந்தவர் சௌமியா. ஆலுவா போக்குவரத்துக் காவலராக பணியாற்றி வந்தவர் அஜாஸ். இவர்கள் இருவரும் திருச்சூர் காவலர் பயிற்சியின்போதே நட்பாக பழகியுள்ளனர்.

மூன்று குழந்தைகளுக்குத் தாயான செளமியாவை திருமணம் செய்யும் ஆசையில் வேறு திருமணமே செய்யாமல் இருந்துள்ளார் அஜாஸ். மட்டுமின்றி செளமியாவின் பணத் தேவைகளுக்கு அஜாஸ் உதவியும் வந்துள்ளார். இந்த நிலையில் சுமார் ஒன்றேகால் லட்சம் ரூபாய் அஜாஸிடம் இருந்து செளமியா கடனாக பெற்றுள்ளார்.

அந்தப் பணத்தை செளமியா திருப்பிக் கொடுத்தபோது வாங்காமல் தன்னைத் திருமணம் செய்யும்படி வற்புறுத்தியுள்ளார் அஜாஸ். இந்த நிலையில், கடந்த 15 ஆம் திகதி தேர்வு ஒன்று எழுதிவிட்டு தனது பைக்கில் சென்ற செளமியாவை காரால் இடித்த அஜாஸ், பின்னர் அரிவாளால் வெட்டியதுடன், பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்தார்.

உயிர் பயத்தில் அலறிய செளமியா பற்றிய நெருப்புடன் அஜாஸை கட்டி அணைத்துள்ளார். இதில் 50 சதவிகிதம் தீக்காயங்களுடன் ஆலப்புழா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார் அஜாஸ்.

அவரிடம் ஆலப்புழா மாஜிஸ்திரேட்டு வாக்குமூலம் பெற்றார். அப்போது தன்னை திருமணம் செய்துகொள்ளாததால் செளமியாவைக் கொலை செய்ததாக அஜாஸ் கூறியுள்ளார்.
இந்த நிலையில் சிறுநீரகம் இரண்டும் செயலிழந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை அஜாஸ் மரணமடைந்துள்ளார்.

வாகன விபத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்!!

உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்

திருகோணமலை – ஹொரவ்பொத்தான பிரதான வீதி பன்குளம் பகுதியில் லொறியொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹேலிய ரம்புக்வெல்லவின் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் ஹொரவபொத்தான – கபுகொல்லாவ பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

மொரவெவ பகுதியிலிருந்து ரொட்டவெவ பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது ஹொரவ்பொத்தான பிரதேசத்திலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த லொறியுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இவ் விபத்துடன் தொடர்புடைய சீமெந்து லொறியின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

3 நாட்களாக காணாமல் போன மாணவி சடலமாக மீட்பு : மரணம் தொடர்பில் பொலிஸாரின் தகவல்!!

மாணவி சடலமாக மீட்பு

பதுளையில் காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்ட உயர்தர மாணவியின் மரணம் தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். பதுளை பிரதேசத்தில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த மாணவி 3 நாட்களாக காணாமல் போயிருந்தார்.

குறித்த மாணவி மேலதிக வகுப்புக்காக சென்ற மீண்டும் வீட்டிற்கு வராத நிலையில் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய கடந்த 16ஆம் திகதி மாணவியின் சடலம் ஏரி ஒன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மாணவியின் மரணம் தொடர்பில் பதுளை வைத்தியசாலையில் நேற்று பிரேத பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. எனினும் இது தற்கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். உயிரிழந்த மாணவியின் பையில் இருந்து “மீண்டும் என்னை பார்க்க கிடைக்காது” என குறிப்பிட்ட கடிதம் ஒன்றும் கிழிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

காரில் சடலத்துடன் பயணித்த பெண் : பின்னர் தெரியவந்த உண்மை!!

சடலத்துடன் பயணித்த பெண்

தனது காரை பல்பொருள் அங்காடி ஒன்றில் நிறுத்திவிட்ட பொருட்கள் வாங்கச் சென்ற ஒரு கனேடிய பெண், திரும்பி வரும்போது காரைச் சுற்றி பொலிசார் குவிந்திருப்பதைக் கண்டு குழப்பமடைந்தார். காரை நெருங்கிய ரேச்சல் என்ற அந்த பெண்ணிடம், அவரது காரை சோதனையிட வேண்டும் என பொலிசார் கேட்டுள்ளனர்.

என்ன விடயம் என்று கேட்டதற்கு, அவரது காரில் சடலம் ஒன்று இருப்பதாக சிலர் புகாரளித்திருப்பதாக பொலிசார் தெரிவிக்க, சிரித்துக் கொண்டே பொலிசாரிடம் கார் சாவியைக் கொடுத்துள்ளார் ரேச்சல். காரை சோதனையிட்ட பொலிசார், காரில் இருந்த அழுகிய பிணம் போல காணப்பட்டது, பிணம் அல்ல, அது ஒரு பொம்மை என்பதைத் தெரிந்து கொண்டதும் ரேச்சலை போக அனுமதித்தனர்.

ஹாலோவீன் பண்டிகையை அதிகம் விரும்பும் ரேச்சல், அதற்காகத்தான் இந்த பொம்மையை வாங்கியதாக பின்னர் தெரிவித்தார்.

அத்துடன் நடந்த சம்பவத்தை முகநூலில் பதிவேற்றம் செய்த அவர், தனது காரிலிருந்த பொம்மையைக் கண்டு பயந்தவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதோடு, தவறாமல் நடவடிக்கையில் இறங்கிய பொலிசாருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். அவரது இந்த பதிவு வைரலாகி உடனடியாக 4,000 லைக்குகளையும் 2,000 ஷேர்களையும் பெற்றது.

இலங்கையின் பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து பெருந்தொகை ஆணுறைகள் மீட்பு : மாணவிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தல்!!

பெருந்தொகை ஆணுறைகள் மீட்பு

ருஹுனு பல்கலைக்கழகத்தில் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் பெருந்தொகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் தெரிவித்துள்ளார். இரண்டு வாளிகள் நிறைந்த ஆணுறைகள் ருஹுனு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க அறையினுள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக உபவேந்தரை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ருஹுனு பல்கலைக்கழகத்தில் ஆணுறைகள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு 15 வருடங்களாக எந்தவொரு பீடாதீபதியும், பேராசிரியர்களும் சென்றதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அது ஒரு தடை செய்யப்பட்ட பகுதியாக காணப்பட்டதாகவும், அதனுள் மிகவும் கொடூரமான முறையில் பகிடிவதை செய்யப்பட்டுள்ளதாகவும், புதிய மாணவர்களை பலவந்தமாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, பகிடிவதை அறை போன்று பல்கலைக்கழகத்தினுள் அமைத்து மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் வழங்கியுள்ளதாகவும், இதற்கான அனைத்து தகவல்களையும் தான் கண்டுபிடித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த இடத்தில் இரும்பு பூட்டு போடப்பட்டுள்ளதாகவும் அதனை தான் உடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.  இந்த பகிடிவதை, பாலியல் துன்புறுத்தல்களை தடுப்பதற்கும் நிறுத்துவதற்கும் தான் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டதாக உபவேந்தர் மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் : 298 பேர் பலிக்கு யார் காரணம் : வெளியானது உண்மை!!

வெளியான உண்மை

2014ம் ஆண்டு ரஷ்யா-உக்ரைன் இடையே மலேசியாவின் எம்எச்-17 பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விடயத்தில் நான்கு சந்தேக நபர்களின் பெயரை நெதர்லாந்து தலைமையிலான விசாரணை குழு அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் வைத்து எம்எச்-17 என்ற மலேசியா ஏர்லைன்ஸிக்கு சொந்தமான பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில், விமானத்தில் பயணித்த 298 பேரும் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 196 பேர் நெதர்லாந்தை நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பாக சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட்டது. நெதர்லாந்து தலைமையில் அவுஸ்திரேலியா, பெல்ஜியம், மலேசியா மற்றும் உக்ரைன் கூட்டாக விசாரணையை முன்னெடுத்தது.

2016 ஆம் ஆண்டு விமானத்தை தாக்கிய ராக்கெட் லாஞ்சர் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டது என கண்டறியப்பட்டது. தற்போது, இத்தாக்குதலுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களின் பெயரை நெதர்லாந்து தலைமையிலான விசாரணை குழு வெளியிட்டுள்ளது.

இதில், மூன்று ரஷியர்களும், ஒரு உக்ரைன் நாட்டவரும் அடங்குவர். விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ரஷ்ய நாட்டினரான இகோர் கிர்கின், செர்ஜி டபின்ஸ்கி, ஒலெக் புலடோவ் மற்றும் உக்ரைன் நாட்டவர் லியோனிட் கார்சென்கோ ஆகியோருக்கு எதிராக குற்ற வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களுக்கு எதிரான நீதிமன்ற விசாரணைகள் 2020 மார்ச் 9 ம் திகதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சர்வதேச விசாரணையில் நம்பிக்கை இல்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது.

இறந்த கணவரின் விந்தணுக்களை வைத்து குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படும் மனைவி!!

குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படும் மனைவி

அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் இறந்த தன்னுடைய கணவரின் விந்தணுக்களை வைத்து குழந்தை பெற்றுக்கொள்ள நீதிமன்றத்தை நாடியுள்ளார். பிரித்தானியாவை பூர்விகமாக கொண்ட ஜெனிபர் (35) மற்றும் டேனியல் காஃப்னி (38) என்கிற மருத்துவ தம்பதி அவுஸ்திரேலியாவில் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளான்.

நவம்பர் 6, 2018 அன்று இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்வதற்காக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்றுவிட்டு, வீடு திரும்பிய சில மணி நேரங்களில், அவருடைய கணவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார் என்கிற செய்தி வந்துள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ஜெனிபர், அவர் இறந்த மறுநாளே விந்தணுக்களை எடுத்து பத்திரம் செய்து வைத்துவிட்டார்.

இந்த நிலையில் ஜெனிபர் பிரிஸ்பேன் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்துள்ளார். அதில், நானும் என்னுடைய கணவரும் எங்கள் குடும்பத்தை விரிவுபடுத்துவது குறித்து, அவர் இறப்பதற்கு முன்பே திட்டமிட்டிருந்தோம். இறந்த கணவரின் விந்தணுக்களை பயன்படுத்துவதால் வரும் விளைவு பற்றி நான் நன்கு சிந்தித்து பார்த்துவிட்டேன்.

பிறக்கவிருக்கும் மற்றொரு குழந்தை எங்களுக்கு சிறப்பானதாக இருக்கும் என்பதை நான் நம்புகிறேன். தனி ஒரு ஆளாக அந்த குழந்தையை வளர்ப்பது சவாலானது என்பது எனக்கு தெரியும். ஆனால் அதனை நிர்வகிப்பதற்கான வலிமை மற்றும் சமூக ஆதரவு தனக்கு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவானாது 21ம் திகதியன்று விசாரணைக்கு வர உள்ளது.

முன்னதாக கடந்த ஆகஸ்ட் 2016 இல் திடீரென இறந்த தனது காதலன் ஜோசுவா டேவிஸிடமிருந்து விந்தணுக்களை அறுவடை செய்ய அனுமதி கோரிய, 25 வயதான அய்லா கிரெஸ்வெல்லை இந்த வழக்கு நினைவூட்டுகிறது.

2018 ஜூன் மாதம் அன்று பிரிஸ்பேன் உச்ச நீதிமன்ற நீதிபதி சூ பிரவுன், க்ரெஸ்வெல் விந்தணுவை பயன்படுத்த அனுமதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கணவனை மரத்தில் கட்டி வைத்து அவர் கண்முன்னே மனைவிக்கு நடந்த கொடூரம்!!

மனைவிக்கு நடந்த கொடூரம்

உத்திரபிரதேச மாநிலத்தில் கணவனை மரத்தில் கட்டி வைத்து அவரின் கண்முன்னே மனைவி துஸ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பமாக, சம்மந்தப்பட்ட பெண் பொய் புகார் கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு தம்பதியினர் சாலையில் நடந்து சென்றிருந்த போது 4 பேர் கொண்ட கும்பலால் வழிமறித்து தாக்குதலுக்குளாகியுள்ளனர். மேலும் அந்த பெண்ணின் கணவரை மரத்தில் கட்டி வைத்து அடித்ததோடு, அவருடைய கண்முன்னே மனைவியை பலாத்காரம் செய்ததாக குற்றசாட்டு எழுந்தது.

ஜனவரி 11ம் திகதி இந்த சம்பவம் நடந்திருந்ததாலும், தம்பதியினர் பொலிஸ் நிலையத்தில் புகார் எதுவும் கொடுக்காமல் இருந்துள்ளனர். இதற்கிடையில் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவியுள்ளது.

உடனே அந்த பெண் , நான்கு பேர் சேர்ந்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் நான்கு இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய உயரதிகாரி, இணையத்தில் பரவிய வீடியோவினை அந்த பெண் தான் வெளியிட்டு வைரலாக்கியுள்ளார் எனவும், அவர் துஸ்பிரயோகம் செய்யப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

ஒரே பிரசவத்தில் 17 குழந்தைகள் பெற்றெடுத்த பெண்ணின் உண்மை முகம் வெளியானது!!

17 குழந்தைகள் பெற்றெடுத்த பெண்

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 17 ஆண் குழந்தை பெற்றதாக, சமீபத்தில் புகைப்படத்துடனான பேஸ்புக் பதிவு இணையத்தில் வைரலானதில் உண்மை கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த மே 30ம் திகதி Richard Camarinta Dy என்ற நபர் தனது பேஸ்புக்கில் பதிவிட்ட பதிவு உலகம் முழுவதும் பயங்கர வைரலானது. அந்த பதிவில், அமெரிக்காவை சேர்ந்த கேத்தரின் பிரிட்ஜ் என்ற பெண் ஒரே பிரசவத்தில் 17 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்து உலக சாதனை படைத்துள்ளதாக பதிவிட்டார்.

அந்த பதிவுடன் கேத்தரின் பிரிட்ஜ் பெரிய வயிற்றுடன் நிற்கும் புகைப்படம், 17 ஆண் குழந்தைகள் ஒரே அறையில் இருக்கும் புகைப்படம் மற்றும் குழந்தைகள் தந்தை Robert M Biter உடன் இருக்கும் ஒரே புகைப்படம் என மூன்று புகைப்படங்களை இணைத்து வெளியிட்டார்.

இப்பதிவை பலர் பகிர்ந்ததால் இது உலகளவில் வைரலானது. இந்நிலையில், குறித்த செய்தி பொய் என கண்டறியப்பட்டுள்ளது. அப்பெண் பெரிய வயிற்றுடன் இருக்கும் புகைப்படம் ஃபோட்டாஷாப்பில் வடிவமைக்கப்பட்டது என கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், குறித்த செய்தி கற்பனை கட்டுரை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஒரே ஒரு பெண்மணி மட்டுமே ஒரே பிரசவத்தில் 8 குழந்தைகள் பெற்றெடுத்ததே சாதனையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

துண்டிக்கப்பட்ட தலையுடன் காவல் நிலையத்திற்கு வந்த நபர் : அதிர்ந்துபோன பொலிசார்!!

அதிர்ந்துபோன பொலிசார்

ஆந்திராவில் மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டு அவரின் தலையை துண்டித்து கையில் எடுத்துக்கொண்டு காவல் நிலையத்திற்கு வந்த நபரை பொலிசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கலக்கடாவை சேர்ந்தவர் உசேன். இவரது மனைவி அம்மாஜியின் நடத்தை குறித்து உசேனுக்கு சந்தேகம் எழுந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆத்திரத்தில் மனைவியின் கழுத்தை உசேன் அறுத்துள்ளார். துண்டிக்கப்பட்ட தலையை கையில் எடுத்துக்கொண்டு நேரடியாக காவல் நிலையத்திற்கு சென்று அங்கு நடந்த விவரங்களை கூறி சரணடைந்துள்ளார் உசேன்.

இதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காதலியை கட்டியணைத்தபடியே ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்த காதலன்!!

காதலர்கள்

தெலுங்கானா மாநிலத்தில் இளம்காதல் ஜோடி ரயில்தண்டவாளத்தில் தலையை கொடுத்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா காத்வால் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தின் தண்டவாளத்தில், இளம் காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார் செய்தியாளர்களிடம் பேசுகையில், உண்டவள்ளி மண்டல் கிராமத்தை சேர்ந்த லோகேஷ் மற்றும் கஸ்தூரி ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதன்காரணமாகவே இருவரும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் விபத்து : 4 மாணவர்கள் உட்பட ஐவர் படுகாயம்!!

வவுனியாவில் விபத்து

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் நான்கு பேர் உட்பட ஐவர் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவிலிருந்து பாடசாலை முடிவடைந்து மாணவர்களை ஏற்றி கோவில்குளம் நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியும் சிதம்பரபுரத்திலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தும் கோவில்குளத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது முச்சக்கரவண்டியில் பயணித்த நான்கு மாணவர்களும் 44 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியும் காயமடைந்த நிலையில், வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.