வவுனியாவில் நிலவும் கடும் வெப்பத்தின் மத்தியில் வடமாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் வருகைக்காக 30நிமிடங்களுக்கு மேல் பாடசாலை மாணவர்கள் காத்திருந்தனர்.
வவுனியா முன்று முறிப்பு ஸ்ரீ குணானந்த ஆரம்ப பிரிவு வித்தியாலத்தில் இந்திய பொதுமக்களின் நிதி பங்களிப்பில் அமைக்கப்பட்ட பாடசாலை கட்டிடத்தினை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று காலை 8.15 மணிக்கு ஆளுனர் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
ஆளுனரின் வருகைக்காக பான்ட் வாத்தியங்களுடனும் மாலையுடனும் வவுனியாவில் நிலவி வரும் கடும் வெப்பத்தின் மத்தியிலும் மாணவர்கள் காத்திருந்தனர்.
ஆளுனர் வருகையின்மை தாமதமானதினையடுத்து சில மாணவர்கள் அருகேயிருந்த மரத்துக்கு கீழ் அமர்ந்து இருந்தனர். எனினும் ஆளுனர் 8.45 மணியளவிலேயே பாடசாலைக்கு சமூகமளித்திருந்தார். வவுனியாவில் இன்றையதினம் 34 பாகை வெப்பம் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் இன்று வவுனியாவிற்கு விஜயம் செய்துள்ளார். இதனை முன்னிட்டு இவரின் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
வவுனியா – செக்கட்டிப்புலவு பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள பாடசாலை கட்டட திறப்பு விழாவில் ஆளுநர் சுரேன் ராகவன் இன்றைய தினம் கலந்துகொண்டார்.
இந்த நிலையிலேயே பாடசாலை வளாகத்தை சுற்றி பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன், அங்கு பொலிஸ் மோப்ப நாயின் உதவியுடன் தேடுதல்களும் மேற்கொள்ளப்பட்டன.
பொலன்னறுவையில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் 4 பெண்கள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
12 பேர் படுகாயம் அடைந்த நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு – பொலன்னறுவை வீதியின் வெலிகந்த பகுதியில் விபத்து இடம்பெற்றுள்ளது. வேன் ஒன்றும் உழவு இயந்திரம் ஒன்றும் மோதிக்கொண்டமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான உழவு இயந்திரத்தில் பயணித்தவர்கள் அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் பெலியத்த பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் 29 – 60 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திம்புலாகல, மிஹிது பெரஹராவை பார்வையிட சென்று மீண்டும் வீடு திரும்பியவர்களே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளனர். சம்பவம் தொடர்பில் வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிக வேகமும், வான் சாரதியின் கவனயீனமுமே விபத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குழந்தைகளின் படிப்பிற்காவும், குடும்ப சூழ்நிலை காரணமாகவும் வெளிநாட்டிற்கு ஆடு மேய்க்கும் வேலைக்கு சென்ற தன் கணவனைப் பற்றி எந்த ஒரு தகவலும் தெரியவில்லை என்று மாவட்ட ஆட்சியரிடம் அவரின் மனைவி மனு அளித்துள்ளார்.
திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்த கோவிந்தபுரம் மேற்குத் தெருவைச் சேர்ந்தவர், முருகேசன். இவருக்கு, மகேஸ்வரி என்கிற மனைவியும் புவனேஸ்வரி மற்றும் மகேந்திரன் என்கிற இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் குடும்பச் சூழல் கருதியும், பிள்ளைகளின் படிப்பிற்காகவும், கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு முருகேசன், ஆடு மேய்க்கும் வேலைக்காக ஏஜென்ட்டுகள் மூலம் சவுதி அரேபியாவுக்கு 2 லட்சம் ரூபாய் கட்டி அனுப்பிவைக்கப்பட்டார்.
வெளிநாடு சென்ற முருகேசன், துபாய் நாட்டிற்கு சென்ற பிறகு, அவரிடமிருந்து தொலைபேசியோ அல்லது பணமோ மற்றும் அவர் குறித்த தகவல்கள் எதுவுமே தெரியவில்லை.
எந்த ஒரு தகவலுமே இல்லாததால், சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர், பணம் கட்டிய ஏஜென்ட்டுகள் மற்றும் சவுதி அரேபிய நாட்டில் உள்ள ஏஜென்ட்டுகளைத் தொடர்புகொண்டு பேசியுள்ளனர்.
ஆனால் அவர்கள் முறையாக பதில் பதில் அளிக்காமல், அதற்கு மாறாக அவர்கள், இந்தியத் தூதரகம் மூலம் முருகேசன் குறித்து விசாரித்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர்.
அதனால் பதற்றமடைந்த முருகேசனின் மனைவி மகேஸ்வரி, ஏஜென்ட்டுகள் மீதும், தனது கணவர் முருகேசனை மீட்டுத்தரக் கோரியும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, துறையூர் காவல் நிலையம், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் ஆகியோரை சந்தித்து புகார் மனு அளித்துள்ளார்.
ஆனாலும், முருகேசன் குறித்து எந்த வித தகவல்களும் தெரியாத நிலையில், இன்று தனது கணவரை மீட்டுத் தரக் கோரி மகேஸ்வரி மற்றும் அவரது மகள் புவனேஸ்வரி ஆகியோர் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராஜை சந்தித்து மனு அளித்தார்.
அதன் பின் அவர் கூறுகையில், அவர் வெளிநாடு சென்றதிலிருந்து அவர் குறித்து எந்தத் தகவலும் தெரியவில்லை. எங்கள் குடும்பம் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இதுகுறித்து விசா எடுத்துத் தந்த ஏஜென்ட்டுகளிடம் கேட்டால், அலட்சியமாக பதில் கூறுகிறார்கள்.
அவரைக் கண்டுபிடித்து தரக்கோரி ஏற்கெனவே மாவட்ட ஆட்சியர், எஸ்பி உள்ளிட்டோரிடம் மனு அளித்தோம். அப்போது அவர்கள், விரைவில் எனது கணவரைமீட்டுத் தருவதாகக் கூறினார்கள். அவர்கள் கூறியதை நம்பி, மாதக்கணக்கில் காத்துக் கிடக்கிறேன்.
இதுவரை எந்தத் தகவலும் இல்லை. படித்துமுடித்த மகள் மற்றும் மகன் ஆகியோரை வைத்துக்கொண்டு அடுத்தகட்டமாக என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து கொண்டிருக்கிறேன்.
தனியாக உழைத்து இரண்டு பிள்ளைகளைக் காப்பாற்றுவது மிகவும் சிரமமாக உள்ளது. அவர் குறித்து எந்தத் தகவலும் தெரியாமல் இருப்பது எங்களுக்கு சந்தேகத்தையும், பயத்தையும் ஏற்படுத்துகிறது. எனது கணவரை நல்ல படியாக மீட்டுத் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்திருப்பதாக கூறியுள்ளார்.
பட்டினியால் 11 மாத ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்த சோக சம்பவம் திஸ்ஸமஹாராமை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. உணவின்றி குழந்தை உயிரிழந்துள்ளது என்பது பிரேதப் பரிசோதனையில் தெரிவந்துள்ளதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார்.
திஸ்ஸமஹாராமை – விஜயபுர கோனகமுவ என்ற கிராமத்திலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்த 11 மாத ஆண் குழந்தையின் பெற்றோருக்கு மேலும் மூன்று பிள்ளைகள் இருக்கின்றன.
குறுகிய காலத்தில் குழந்தைக்கு தேவையான போஷாக்கு நிறைந்த உணவு மட்டுமல்ல ஒரு வேளை உணவும் மிகவும் அரிதாகவே கிடைத்துள்ளது. குழந்தைக்கு போஷாக்கு குறைப்பாடு இருப்பதாக மருத்துவர்கள் கூறியதாக குழந்தையின் தாய் கூறியுள்ளார்.
குழந்தை திரிபோஷாவை விரும்பி உண்ணும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் அதனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் தாய் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பட்டினியால் உணவின்றி குழந்தை இறந்து போனது பெரும் துர்பாக்கியமான சம்பவம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள சீனாவில் தற்போது குழந்தைப் பிறப்பு விகிதம் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு ஆண் குழந்தைகளுக்கு நிகரான பெண் குழந்தைகள் விகிதம் சராசரியாக குறைந்து கொண்டே வருகிறது.
இதனால் சீனாவில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள பெண் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதால், மணமகன்கள் பாகிஸ்தானை நோக்கி படையெடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
பாகிஸ்தானின் கிறிஸ்தவ குடும்பங்களைக் குறிவைக்கும் அவர்கள் பெரும் தொகையை கொடுத்து ஏஜெண்ட்கள் மூலம் பெண்களை திருமணம் செய்கின்றனர்.
இப்படி பல பாகிஸ்தானிய கிறிஸ்தவ பெண்கள் சீன ஆண்களுக்கு மணமுடிக்கப்பட்டு சீனாவுக்கு கடத்தப்பட்டுள்ளனர்.
திருமணம் முடிக்கும் பெண்களிடம் சீனாவில் நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது என்று பொய் கூறுவதால், அவர்களின் பேச்சைக் கேட்டு பெண்களின் பெற்றோர்களும் சம்மதிக்கிறார்கள்.
திருமணம் முடிந்து அங்கிருக்கும் வரை எந்த ஒரு பிரச்சனையும் இருப்பதில்லை, அங்கிருந்தி சீனாவிற்கு வந்த பின்பு தான் சோகம் தொடர்கிறது.
பாகிஸ்தானிய பெண்களுக்கு மொழி தெரிவது கிடையாது. அவர்கள் அங்கு அடிமைகளை போன்று நடத்தப்படுகிறார்கள்.
பெரும்பாலான திருமணங்களில் மணப்பெண்களின் வயது, மணமகன்களின் வயதில் பாதி கூட இருப்பதில்லை என்ற கொடுமையும் நிகழ்கிறது.
பாகிஸ்தானை சேர்ந்த 19 வயது இளம்பெண் நதாசா, சீனாவில் இருந்து போராடி மீட்கப்பட்டுள்ளார். அவர் கூறுகையில், என்னுடைய கணவர் என்னை பாகிஸ்தானில் இருந்து விலைக்கு வாங்கியதாக கூறினார்.
என்னை என்ன வேண்டுமென்றாலும் செய்வேன் என்றார். அங்கு பாலியல் பலாத்காரம் நடந்தது.
இதேபோன்று மீட்கப்பட்ட பாதிக்கப்பட்ட பெண்கள், விசாரிக்கும் அதிகாரிகளிடம் தாங்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இதற்கிடையே குற்றச்சாட்டுகளை சீன தூதரகம் மறுக்கிறது. ஆனால் பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண ஆர்வலர்கள் இதுபோன்ற கொடூரங்கள் அங்கு அரங்கேறியுள்ளது. இதற்கு கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
காதலி தனக்கு துரோகம் செய்ததாக காதலன் தவறாக எண்ணியதையடுத்து ஏற்பட்ட சண்டையின் காரணமாக, அவர் காதலியை கொலை செய்ததோடு தானும் தற்கொலை செய்து கொண்டார். Staffordshireஇல் தனது எட்டு வயது மகனுடன் வசித்து வந்த Jayde Hall (26)இன் வாழ்க்கையில் நுழைந்தார் Carl Scott (46).
மூவருமாக இனிமையாக நாட்களை செலவிட்டு வந்த நிலையில், ஒரு நாள் முதல் முறையாக தனது நண்பர்களுடன் வெளியில் சென்றுள்ளார் Jayde. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட, Jayde தனக்கு துரோகம் செய்து விட்டதாகவும், அவருக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டிய Scott, தான் வீட்டை விட்டு வெளியேறப்போவதாக தெரிவித்துள்ளார்.
உடனே Jayde, போனால் போ என்று கூறிவிட்டு, ஒரு வாரத்திற்குள் தனது வீட்டை விட்டு போய் விட வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். Jayde சமாதானம் பேச வருவார் என நம்பியிருந்த நேரத்தில், அவர் வராததால் ஏமாற்றம் அடைந்த Scott, வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய Jaydeஐ கத்தியால் குத்திக் கொன்றிருக்கிறார்.
இதை Jaydeஇன் தந்தையே கூறியுள்ளார், ஏனென்றால் Jaydeஐ Scott அவ்வளவு நன்றாக பார்த்துக் கொள்வாராம். அத்துடன் மூவரும் மகிழ்ச்சியாக இருந்தது கண்டு, தாங்களே தங்கள் மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைந்து விட்டது என மகிழ்ந்திருந்ததாக Jaydeஇன் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
Jaydeஐ கொலை செய்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட Scott, ஏமாற்றம் தாங்க இயலாமல் சிறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தவறான புரிதலால் தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையே நாசமாகிப் போனதாக வருத்தத்துடன் தெரிவிக்கிறார் Jaydeஇன் தந்தை Philip Hall.
அன்று தந்தையர் தினம் என்பதால் தன்னைக் காண மகள் வருவாள் என வாசலிலேயே காத்திருந்த தனக்கு, மகளுடைய மரணச் செய்திதான் கிடைத்தது என்று கண்ணீர் மல்க தெரிவிக்கிறார் Philip Hall.
தமிழகத்தில் கணவனுக்கு துரோகம் செய்துவிட்டு காதலனுடன் சென்ற பெண் சம்பவத்தில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே பெரகம்பி கிராமத்தைச் சேர்ந்தவர் கனகராஜ். +2 வரை மட்டுமே படித்திருக்கும் இவர் தன்னுடைய கடுமையான உழைப்பால் சென்னையில் ஒரு ஹோட்டலும்,
சொந்த கிராமத்தில் பெற்றோருக்காக ஒரு ஹோட்டலும் நடத்திவருகிறார். ஹோட்டலில் நல்ல வருமானம் வந்தநிலையில் நான்கு ஆண்டுகளுக்கு முன் துறையூர் அருகே கீராம்பூரைச் சேர்ந்த சரண்யா என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்துள்ளது.
இந்த தம்பதிக்கு தற்போது இரண்டு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. மனைவி மீது அதிக பாசம் கொண்ட கனகராஜ் அவரை ராணி போன்று பார்த்து வந்துள்ளார். கனகராஜின் பெற்றோரும் அவரை உள்ளங்கையில் வைத்து தாங்கி வந்துள்ளனர்.
இந்நிலையில் சரண்யா நான் பி.சி.ஏ. படிச்சிருக்கேன். மேல படிக்கணும் வேலைக்கு செல்ல ஆசையா இருக்கு என்று கெஞ்ச, உடனே மனைவி மீது இருந்த கட்டுக்கடங்காத பாசத்தில் கனகராஜ் அவரை துறையூருக்கு படிக்க அனுப்பிவைத்துள்ளார்.
இப்படி இவர்களின் வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த போது, திடீரென்று கனகராஜின் போனுக்கு தொடர்பு கொண்ட பெண், உன் மனைவி வீடு திரும்பியது போனை வாங்கிப் பார், அதன் பின் தெரியும் என்று கூறி வைத்துள்ளார். இதனால் மனைவி வந்த பின்பு, போனை வாங்கிப் பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில், மனைவி யாரோ ஒருவனுடன் லிப் டூ லிப் முத்தம் கொடுப்பது உள்ளிட்ட எடுக்கக்கூடாத படங்களால் நிரம்பியிருந்தது.
உடனடியாக மனைவி மீது ஆத்திரம் கொண்ட அவரை அடித்த போது, உடனே செளமியா நான் தப்புப் பண்ணிவிட்டேன், அவன் பேரு செல்வம். எங்க ஊர்க்காரன். சின்னவயதிலிருந்தே எங்களுக்குள்ள பழக்கம். அவனை திருமணம் செய்ய நினைத்தேன்.
அவன் வேற ஜாதி பையன் என்பதால் முடியாமல் போய்விட்டது. அவனுக்கு வேற பொண்ணோட திருமணமாகி, இரண்டு குழந்தைகள் இருக்கு. அவனை தற்போது திடீர் என்று பார்த்தவுடன், பழைய பழக்கத்துல தப்புப் செய்துவிட்டேன், என்னை மன்னித்துவிடுங்கள், இனிமே நான் இப்படி தப்புப் பண்ணமாட்டேன் என்று கூறி மனைவி அழ, கனகராஜ் இனிமேல் ஒழுங்கா இரு என்று எச்சரிக்கை செய்துள்ளார்.
அதன் பின் சில நாட்களில் இரவுச் சாப்பாட்டிற்கான குழம்பில் மயக்க மாத்திரையை கலந்து பரிமாறிய சரண்யா, கணவனும், மாமனார்-மாமியாரும் தூங்கிய பின்பு, குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஏற்கனவே திட்டமிட்டபடி செல்வத்துடன் துறையூர் பகுதியில் தலைமறைவாகியுள்ளார்.
மனைவியையும், குழந்தையையும் நாலாபுறமும் தேடிப்பார்த்த கனகராஜ் இறுதியாக என் மனைவியையும் குழந்தையையும் மீட்டுத் தாருங்கள் என்று காவல் நிலையத்தில் புகார் செய்ய,
செல்வத்தின் பெற்றோரை அழைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையில் தான் கனகராஜிற்கு போன் செய்த செல்வம், நான் உன் மனைவி, குழந்தைகள் எல்லாரும் துறையூரில் இருக்கும், இங்கு வா உன்னுடன் அவள் வருகிறேன் என்று சொன்னால் நீ அழைத்துச் செல் என்று கூறி முடித்துள்ளார்.
உடனடியாக உறவினர்களுடன் கனகராஜ் அங்கு சென்ற போது, செல்வம் மற்றும் செளமியாவை தாக்கியுள்ளனர். இந்த விவகாரம் துறையூர் பொலிசாருக்கு தெரியவர, பொலிசார் அவரை அங்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர்.
அப்போது கனகராஜ், என் மனைவி மீது அளவுக்கடந்த பாசம் வைத்திருந்தேன், அவள் படிக்க வேண்டும் என்று சொன்னால் அதற்காக ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்து படிக்க வைத்தேன், ஆனால் கடைசியில் எனக்கு துரோகம் செய்துவிட்டாள் அவள் மற்றும் செல்வம் மீது நடவடிக்கை எடுங்கள் கூற, அங்கிருந்த இன்ஸ்பெக்டர் இவர்கள் இருவர் மீதும் வழக்கு போட முடியாது.
வயதுக்கு வந்த இரண்டுபேர் விருப்பப்பட்டு ஒன்றாக இருக்கலாம். உச்சநீதிமன்ற தீர்ப்பு அப்படி இருக்கு. நான் எதுவும் செய்ய முடியாது, சரண்யாவும், செல்வமும் என்ன சொல்கிறார்களோ, அதைப் பொறுத்துத்தான் முடிவெடுக்க முடியும் என்று கூறி, செல்வத்தையும், சரண்யாவையும் பார்த்த போது, சரண்யா எனக்கு கனகராஜ் மற்றும் அவர் மூலம் பெற்ற குழந்தைகள் வேண்டாம் செல்வமே போதும் என்று சொல்ல, பொலிசார் செல்வத்துடன் செளமியாவை அனுப்பி வைத்தனர்.
வெளியில் இருந்த செல்வத்தின் மனைவி மற்றும் குழந்தைகள் கண்கலங்கி நின்று கொண்டிருக்க, ஆனால் அவர்களை பற்றி எல்லாம் கவலைப்படாமல் காமம் கண்ணை மறைக்க செல்வம், செளமியாவுடன் சென்றுவிட்டார். அதன் பின் தன் தோழில் குழந்தைகளை சுமந்த படி கனகராஜும் சென்றுவிட்டார்.
இந்த சம்பவத்தை படித்த பார்த்து இணையவாசிகள் சிலர், நீதிமன்ற தீர்ப்புகளில் தனிமனித சுதந்திரத்திற்கும், உரிமைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இது ஒருவகையில் சிறப்பானது என்றாலும் அதன் நல்ல நோக்கத்தை தங்களின் தீய நோக்கத்திற்கு ஏற்ற வகையில் பயன்படுத்திக் கொள்கின்ற சிலரால் நீதிமன்ற தீர்ப்புகளின் சாராம்சம் விமர்சனத்திற்கு ஆளாகிறது என்று கூறி வருகின்றனர்.
தமிழகத்தில் செளமியா என்ற பெண்ணை எரித்து கொலை செய்த சம்பவத்தில் கொலையாளி வாக்குமூலம் அளித்துள்ளான். கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம் மாவேலிக்கரை அருகே உள்ள வள்ளிக்குந்நு காவல் நிலையத்தில் சிவில் பொலிஸ் அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் சௌமியா.
இவரை சமீபத்தில் ஆலுவா டிராபிக் காவலர் அஜாஸ் என்பவர் காரால் இடித்து, அரிவாளால் வெட்டி, அதன் பின் பெட்ரோல் ஊற்றி அவரை கொலை செய்தார். செளமியாவை பெட்ரோல் ஊற்றி எரித்த பின்பு, தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார்.
ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நடந்தாலும், அங்கிருந்த சிலர் இதைக் கண்டு அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அஜாஸ் 50 சதவிகிதம் தீக்காயங்களுடன் ஆலப்புழா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.
இதற்கிடையில் செளமியாவுக்கும் அஜாஸுக்கும் காவலர் பயிற்சி காலத்திலேயே நட்பு இருந்ததாகவும். அஜாஸ் கடனாகக் கொடுத்த ஒன்றே கால் லட்சம் ரூபாயை திருப்பிக் கொடுத்தபோது அதைப் பெறாமல் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கூறியதாகவும் செளமியாவின் தாய் இந்திரா தெரிவித்தார்.
இந்நிலையில் மருத்துவமனையில் இருக்கும் அஜாஸ் மாஜிஸ்திரேட்டிடம் அளித்த வாக்குமூலத்தில், செளமியா என்னைத் திருமணம் செய்யாமல் உதாசீனப்படுத்தியதால் பெட்ரோல் உற்றி எரித்துக் கொலை செய்தேன். பின்னர் என் உடலிலும் பெட்ரோல் ஊற்றி தீவைத்தேன். இதற்காக வாடகை கார் எடுத்துக்கொண்டு வந்தேன் என்று கூறியுள்ளார். உயிரிழந்த செளமியாவிற்கு திருமணமாகி குழந்தை உள்ளது. இவரின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவிஸ்லாந்தின் அரோ மாநிலத்தில் நீர் நிறைந்த பகுதி ஒன்றிலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் நேற்றையதினம் இலங்கையர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சுவிஸ்லாந்தின் லூட்சன் மாநிலம், மால்ற்றஸ் பகுதியில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 50 வயதான தவசீலன் சபாநாதன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த 10ஆம் திகதி இவர் காணாமல் போயிருந்த நிலையில் ஒரு வாரத்திற்கு பின்னர் இவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் மர்மமான உயிரிழப்பு தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இவரது மனைவி தற்போது யாழ்ப்பாணத்தில் வசித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பியானோ வாசிப்பதில் புதிய சாதனை படைத்த சென்னை சிறுவன் லிடியன் நாதஸ்வரம், அமெரிக்காவில் இசை போட்டியில் விருது வென்றுள்ளார். இவர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை பள்ளியில் படித்தவர்.
பியானோவை மற்றவர்களை விட அதிவேகமாக வாசிப்பதில் தனித்திறன் பெற்றவர். அத்துடன் ஒரே சமயத்தில் இரு கையால் இரண்டு பியானோக்களை வாசித்து அசத்துவார். அமெரிக்காவில் ஆண்டுதோறும் வேர்ல்ட்ஸ் பெஸ்ட் என்ற விருது நிகழ்ச்சி நடைபெறும்.
இதில் கலந்துகொண்டு லிடியன் நாதஸ்வரம் அதிவேகமாகவும் இரண்டு பியானோக்களையும் வாசித்து இந்த விருதை பெற்றுள்ளார். அவருக்கு 1 மில்லியன் டாலர் பரிசும் வழங்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் கோர்டன், ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட திரையுலகை சேர்ந்த பலரும் லிடியனை வாழ்த்தியுள்ளனர்.
தற்போது லிடியன் நாதஸ்வரம் சினிமா இசை அமைப்பாளர் ஆகியிருக்கிறார். மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும், பர்ரோஸ் என்ற படத்தின் மூலம் இசை அமைப்பாளர் ஆகியிருக்கிறார். இந்தப் படத்தின் இயக்குனரும் மோகன்லால் தான்.
இந்த படம் 3டியில் தயாராகிறது. இதன் மூலம் குறைந்த வயது சினிமா இசை அமைப்பாளர் என்ற பெருமையும் லிடியன் நாதஸ்வரத்திற்கு கிடைத்துள்ளது.
பேஸ்புக்கில் உள்ளாடைகளுடன் புகைப்படங்களை பதிவேற்றிவந்த மியான்மார் நாட்டின் பெண் மருத்துவரது உரிமத்தை மருத்துவ நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
Nang Mwe San என்ற மருத்துவரின் உரிமத்தையே அங்குள்ள மருத்துவ நிர்வாகம் ரத்து செய்துள்ளது. பொது மருத்துவரான Nang Mwe San கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் மொடல் துறையில் களமிறங்கியுள்ளார்.
இதனையடுத்து நவ நாகரிக உடை அணிந்து அதிக புகைப்படங்கள் பதிவு செய்து விளம்பரப்படுத்தியுள்ளார். ஆனால் இது மியான்மரின் கலாச்சாரத்திற்கு உஅகந்தது அல்ல என கூறி மருத்துவ நிர்வாகம் கண்டித்துள்ளது.
மட்டுமின்றி, மருத்துவர் Nang Mwe San தொடர்ச்சியாக ஆபாச புகைப்படங்களை பேஸ்புக்கில் பக்கத்தில் பதிவேற்றி வருவதாகவும், இது கலாச்சார சீர்கேடு எனவும் கூறி பலமுறை மருத்துவ நிர்வாகம் எச்சரித்துள்ளது. ஆனால் இதை அவர் கண்டுகொள்ளவே இல்லை என கூறப்படுகிறது.
இதனையடுத்தே மருத்துவ நிர்வாகம் அவரது மருத்துவர்களுக்கான உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. ஆனால் மருத்துவ நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு எதிராக தாம் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும்,
அலுவலக நேரத்தில் அல்ல அது போன்ற நாகரிக உடைகளை அணிவது என்றும், தனிப்பட்ட உரிமையில் அவர்கள் தலையிடுவது சட்டத்திற்கு புறம்பானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு உடலை காங்ட்ரீட் சுவற்றில் மறைத்து வைத்திருந்த காதலனுக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.ரஷ்யாவை சேர்ந்த டாடியானா முகோரோடோவா (24) என்பவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
ஒருநாள் வீட்டில் மனைவி இல்லாத சமயத்தில் டாடியானா விற்கு போன் செய்த அவருடைய காதலன் வாசிலி மங்கோஷ்விலி (31) வீட்டிற்கு வருமாறு கூறியுள்ளார். அதற்கு சம்மதம் தெரிவித்து அங்கு சென்ற டாடியானா, இருவருக்குள்ளும் இருக்கும் காதல் விவகாரம் குறித்து அவருடைய மனைவியிடம் தெரிவிக்க உள்ளதாக கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த வாசிலி, ஆத்திரத்தில் டாடியானாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் அவருடைய உடலுக்கு தீ வைத்து எரித்துவிட்டு, புதிய காங்கிரீட்டில் அடைத்து வைத்துள்ளார்.
இதற்கிடையில் மகள் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த டாடியானாவின் தாய் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.பின்னர் இதுகுறித்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், வாசிலி கொலை செய்திருப்பதை கண்டறிந்து அவரை கைது செய்தனர்.
இந்த நிலையில் குற்றம் சுமத்தப்பட்ட வாசிலிக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஒரு குட்டிப்பெண் 15 மாத குழந்தையாக இருக்கும்போதே அவரது தாய் இறந்து போக, அவர் தனது தாயை மிஸ் பண்ணக்கூடாது என்பதற்காக அவரது உறவினர்கள் தினமும் அவளது தாயின் குரலை கேட்க ஏற்பாடு செய்துள்ளார்கள்.
பிரித்தானியாவில் லிவர்பூலைச் சேர்ந்த Penelope Turner, 15 மாத குழந்தையாக இருக்கும்போது, ஒரு நாள் அவரது தாய் Kirsten Hawksey (23) திடீரென இறந்து போனார். குட்டிக்குழந்தையை அவர் மிகவும் நேசித்தார். ஆனால் Penelope வளர்ந்தால், அவரது தாய் அவரை எவ்வளவு நேசித்தார் என்பதை மறந்து விடக் கூடாது என்பதற்காகவும், அவள் தனது தாயை மிஸ் பண்ணக்கூடாது என்பதற்காகவும் அவளது உறவினர் ஒரு திட்டம் தீட்டினார்.
அதன்படி Penelopeஇன் தாய் Kirsten உயிரோடிருக்கும்போது, அவர் சிரித்தது, குட்டிப்பெண்ணுக்கு முத்தமிட்டது, அவளிடம், ஐ லவ் யூ என்று சொன்னது என அத்தனை சத்தங்களையும் பதிவு செய்து ஒரு பொம்மைக்குள் வைத்து, அந்த பொம்மையை குழந்தைக்கு கொடுத்துவிட்டார் அந்த உறவினர்.
அத்துடன் குட்டிபெண்ணின் காலுறையில், அவளது தாய் Kirsten வழக்கமாக பயன்படுத்தும் பெர்பியூமை தெளித்து அதையும் அந்த பொம்மைக்குள் வைத்துள்ளார்.
இதனால் அம்மாவின் வாசனையை Penelope எப்போதும் முகர்ந்து பார்க்க முடியும். அம்மா என தான் அழைக்கும் அந்த பொம்மையின் வயிற்றை அழுத்தினால், அது Penelopeஇன் அம்மாவின் குரலில் பேச, அவள் மனம் நெகிழ்ந்து போகிறாள். அம்மா இல்லையென்றாலும், Penelope அம்மாவின் குரலைக் கேட்டுக் கொண்டே வளரலாம்.
கம்போடியா நாட்டில் விவாகரத்து கேட்ட மனைவியை கணவன் உயிருடன் எரித்துக்கொலை செய்துள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது. கம்போடியா நாட்டில் உள்ள பிரபலமான வனவிலங்குகள் பூங்காவில் யானை பாகனாக வேலை செய்து வருபவர் ப்ரம் டாம் (37). இவருக்கு 32 வயதில் லோவாஸ் ஸ்ரேனே என்கிற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். மனைவியின் நடத்தையில் அதிக சந்தேகம் கொண்ட டாம், யாரேனும் ஆண்களுடன் லோவாஸ் பேசினாலே சண்டை போட ஆரம்பித்துவிடுவார்.
இது அடிக்கடி தொடர்ந்து வந்ததால், மனமுடைந்த லோவாஸ் கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டுள்ளார். பேஸ்புக்கில் வேறு ஒரு புதிய ஆண் நண்பர் கிடைத்ததால் தான் தன்னிடம் மனைவி விவாகரத்து கேட்பதாக கருதிய டாம், குழந்தைகளை வீட்டிற்குள் அடைத்து வைத்து வீட்டின் மேல் தீ வைக்க முயன்றுள்ளார்.
இதனை லோவாஸ் தடுக்க முயன்ற போது, அவர் மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து உயிருடன் எரித்துள்ளார். பின்னர் வீட்டிற்க்கு தீ வைத்துவிட்டு, தானும் அரிவாளால் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதற்கிடையில் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், பலத்த தீக்காயங்களுடன் இருந்த லோவாஸை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் வீட்டிற்குள் இருந்த இரண்டு குழந்தைகளையும் பத்திரமாக வெளியில் மீட்டெடுத்தனர்.
மருத்துவனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த லோவாஸ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதேசமயம் கழுத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட டாம், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் குணமடைந்ததும் கைது செய்யப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால் பொலிஸார், டாம் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறியுள்ளனர்.
இசைநிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகத்திலிருந்து பிரித்தானியா செல்லவிருந்த மாற்றுத்திறனாளியான பாடகி ஜோதிக்கு உள்துறை அலுவலகம் அனுமதி மறுத்துள்ளது. 19 வயதான வயலின் கலைஞர் ஜோதி மற்றும் 25 வயதான விசைப்பலகை கலைஞர் பிரேம் பகவன் நாகராஜு ஆகியோர், ஸ்காட்டிஷ் அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கிளாஸ்கோவை தளமாகக் கொண்ட பாராகன் மியூசிக் நடனம் மற்றும் இசை தொண்டு நிறுவனம் கடந்த 2017ம் ஆண்டு இந்தியாவிற்கு வருகை தந்து கலைநிகழ்ச்சி நடத்தியிருந்தது. அதன் கலாச்சார பரிமாற்றமாகாவே தற்போது மாற்றுத்திறனாளிகளை ஆதரிக்கும் சென்னை அமைப்பான தேவசிதம் அறக்கட்டளையை சேர்ந்த குழுவினர், பிரித்தானியாவில் கலைநிகழ்ச்சி நடத்தவிருந்தனர்.
இதற்காக விண்ணப்பிக்கப்பட்ட இரண்டு வார விசா, ஜோதி அவருடைய தாய் கலைச்செல்வி மற்றும் பிரேம் ஆகியோரை தவிர மற்ற அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் கொடுத்துள்ள உள்துறை அமைச்சகம். “இந்தியாவில் இருவருக்கும் போதுமான உறவுகள் இருப்பதாக தெரியவில்லை. அதாவது அவர்கள் பயணத்தின் முடிவில் இங்கிலாந்தை விட்டு வெளியேற மாட்டார்கள்” என தாங்கள் நம்புவதாக கூறியுள்ளனர்.
உள்துறை அலுவலகத்தின் இந்த நடவடிக்கையால் அந்த தொண்டு நிறுவனம் கொதித்தெழுந்துள்ளது. ஸ்காட்டிஷ் எம்.பி. டீட்ரே ப்ராக் ட்விட்டரில் தன்னுடைய கோபம் குறித்து பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் இயக்குனர் நினியன் பெர்ரி கூறுகையில், இந்த சம்பவத்தினால் ஜோதி கண்ணீரில் மூழ்கிவிட்டார். சென்னையில் இருக்கும் அவருடைய நண்பர்கள் அனைவரும் சோகமாக உள்ளனர். இந்த நிகழ்ச்சி பல மாதங்களுக்கு முன் திட்டமிடப்பட்டது. இதற்காக நாங்கள் 8000 பவுண்டுகள் வரை செலவு செய்துள்ளோம்.
மாற்றுத்திறனாளிகளை ஆதரிக்கும் சென்னை அமைப்பான தேவசிதம் அறக்கட்டளையை சேர்ந்த குழுவினர், சென்னையிலிருந்து, சனிக்கிழமையன்று பிரித்தானியாவிற்கு வரவிருந்தனர். ஆனால் தற்போது அது ரத்து செய்யப்பட்டுள்ளது.
உள்துறை அலுவலகம் பயன்படுத்திய சுயவிவரக் கருவி முற்றிலும் பாரபட்சமானது. மாற்றுத்திறனாளிகளுக்கு விசா வழங்கப்படுகிறது. ஆனால் பார்வையற்றவர்களுக்கு அனுமதி இல்லை என்கிற தர்க்கத்தைப் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என கூறியுள்ளார்.
மேலும், இதற்காக நாங்கள் கையெழுத்து திட்டத்தினை துவங்கியுள்ளோம். தற்போது வரை 470 பேர் கையெழுத்திட்டுள்ளனர். ஆயிரம் கையெழுத்துக்கள் கிடைத்தால், உள்துறை அமைச்சத்திற்கு அழுத்தம் கொடுக்கலாம் என கூறியுள்ளார்.
முன்னதாக சிறுமி ஜோதி, இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைப்பில் விரைவில் வெளிவர இருக்கும் “அடங்காதே” படத்தில் பாடல் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது