முல்லைத்தீவு பகுதியில் துப்பாக்கிச் சூடு!!

முல்லைத்தீவு – வன்னி விளாங்குளம் பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்தவர் மாங்குளம் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது

வெளிநாட்டில் இலங்கை வைத்தியரின் மோசமான செயல்!!

அவுஸ்திரேலியாவில், பெண் ஒருவர் மீது பாலியல் தாக்குதல் நடத்தினார் என இலங்கை வைத்தியருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், குறித்த வைத்தியர் செய்த குற்றத்திற்கான நீதிமன்ற தண்டனை எதிர்வரும் ஜூன் 21ம் திகதி அறிவிக்கப்படும் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து அவுஸ்திரேலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“2017ம் ஆண்டு டிசெம்பரில், இலங்கையைச் சேர்ந்த 49 வயதான வைத்தியர் தன்னிடம் சிகிச்சைக்காக வந்த பெண்மீது பாலியல் ரீதியான தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

இதனையடுத்து, குறிப்பிட்ட பெண் சிகிச்சை நிலையத்திலிருந்து தப்பிச் சென்று வாடகை வண்டி ஒன்றின் மூலம் வீட்டுக்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த குற்றச்சாட்டை வைத்தியர் முழுமையாக மறுத்திருந்தார். அத்துடன், பெண்ணின் மீது எந்த நிலையிலும் தான் தப்பாக நடந்துகொள்ளவில்லை எனவும் அவர் கூறியிருந்தார்.

அந்தப்பெண்ணின் மீது மையல் கொள்ளுமளவுக்கு அவரொன்றும் வசீகரமானவர் இல்லை என்றும் பொலிஸ் விசாரணையில் வைத்தியர் கூறியுள்ளார். அந்தப்பெண் குழப்பமான மனநிலைகொண்டவராக தனக்கு தென்பட்டார் என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை கணவனால் தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெறுவதற்கு அனுமதிக்கப்பட்ட இப்பெண் முதற்கட்ட விசாரணையின் போது தன்மீது பாலியல் தாக்குதல் மேற்கொண்டவர் என வேறொரு மருத்துவரை அடையாளம் காட்டியிருந்தார்.

இந்த பின்னணியில் குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் தொடர்ந்து, நேற்று பத்துமணி நேர ஜூரிகளின் கலந்தாலோசனையின் பின்னர் முடிவுக்கு வந்திருக்கிறது.

இதன்படி, வைத்தியர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட உடனேயே சிறைக்கு கொண்டுசெல்லப்படவிருந்த போதும் அவருக்கு பிணை வழங்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், குறித்த வைத்தியரின் குற்றத்துக்கான நீதிமன்ற தண்டனை எதிர்வரும் ஜூன் 21ம் திகதி அறிவிக்கப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது மர்மத் தாக்குதல் : கதறும் உலக நாடுகள்!!

எண்ணெய் கப்பல்கள் மீது மர்மத் தாக்குதல்

ஓமன் வளைகுடாவில் மர்மமான முறையில் இரண்டு எண்ணெய் டேங்கர் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் நோர்வேக்கு சொந்தமான பிராண்ட ஆல்டேர் டேங்கர் கப்பலில் மூன்று குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது என நோர்வே கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சிங்கப்பூருக்கு சொந்தமான சரக்கு கப்பலான Kokuka Courageous மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதலை அடுத்து இரண்டு கப்பல்களிலும் இருந்து குழுவினர் வெளியேற்றப்பட்டு பத்திரமாக மீட்க்கப்பட்டுள்ளனர். முதலில் தாக்குதலில் சிக்கிய பிராண்ட் ஆல்டேர் கப்பல் கடலில் மூழ்கியதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இதே பகுதியில் கடந்த மே மாதம் நான்கு எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. மே மாத தாக்குதலை அடுத்து உலகளவில் எண்ணெய் விலை உயர்ந்தது. எண்ணெய் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதன் மூலம் உலகளவில் எண்ணெய் விலை அதிகரிப்புக்கு வழி வகுக்கிறது.

இந்த தாக்குதல் குறித்து செய்தி தங்களுக்கு வந்துள்ளதாகவும், இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்தேகத்திற்குரிய தாக்குதல் குறித்து பிராந்திய பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஈரான் அழைப்பு விடுத்துள்ளது. பிரித்தானியா தரப்பிலும் இத்தாக்குதல் குறித்து கவலை வெளியிடப்பட்டுள்ளது.

மணமகனை கொலை செய்து ஆற்றில் வீசிச்சென்ற பெண் வீட்டார் : நள்ளிரவில் நடந்த பயங்கரம்!!

நள்ளிரவில் நடந்த பயங்கரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறுமியை திருமணம் செய்த இளைஞர், 9 பேர் கொண்ட பெண் வீட்டாரால் கொடூரமாக அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் வெண்ணாற்று கரையில் இன்று அதிகாலை இளைஞர் ஒருவரின் சடலம் கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், இளைஞரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர். அப்போது மணலூர் கிராமத்தை சேர்ந்த பிரசாத் என்கிற இளைஞர் இரண்டு நாட்களாக மாயமாகியிருப்பது தெரியவந்தது.

அதனை வைத்து விசாரணை மேற்கொள்கையில், இறந்துகிடப்பது பிரசாந்த் என்பது உறுதி செய்யப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கையில் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. சமையல் வேலை செய்துவந்த பிரசாந்த், பக்கத்து ஊரை சேர்ந்த பிளஸ் 2 முடித்த சிறுமியை காதலித்து வந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் அந்த சிறுமி வீட்டிலிருந்து வெளியேறி பிரசாந்தின் வீட்டிற்கு வந்துள்ளார். அவரை அழைத்து கொண்டு அங்கிருந்து கிளம்பிய பிரசாந்த், ஜெயங்கொண்டம் அருகே ஒரு கோவிலில் திருமணம் செய்துகொண்டுள்ளார். பின்னர் சமயபுரத்தில் உள்ள உறவினர்கள் வீட்டில் தங்கி வந்துள்ளனர். இதற்கிடையில் அந்த சிறுமி, திருமணம் செய்துகொண்டது குறித்து தன்னுடைய தாயிடம் கூறியுள்ளார்.

திருமணத்தை ஏற்றுக்கொண்டதாக அவருடைய தாய் கூறியதால், தங்களுடைய இருப்பிடத்தை பற்றி அந்த சிறுமி கூறியுள்ளார். உடனே அங்கு விரைந்த 9 பேர் கொண்ட கும்பல், காதல் ஜோடியை காரில் ஏற்றிக்கொண்டு, அங்கிருந்து புறப்பட்டுள்ளனர். வழியில் உறவினர் வீட்டில் அந்த பெண்ணை இறக்கி விட்ட கும்பல், பிரசாந்தை மட்டும் காரில் ஏற்றிக்கொண்டு வெண்ணாற்று பகுதிக்கு சென்றுள்ளார்.

அங்கு சத்தம் வெளியில் கேட்ககூடாது என்பதற்காக இளைஞரின் வாயில் துணியை திணித்து, சரமாரியாக வெட்டியும், உருட்டுக்கட்டையால் அடித்தும் படுகொலை செய்து வீசிச்சென்றுள்ளனர். இந்த சம்பவமானது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பொலிஸார் வழக்கு பதிவு செய்து ஆற்காட்டை சேர்ந்த 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலைக்காக நம்பி சென்றேன்… மிரட்டி வீடியோ எடுத்தனர் : திருமணமான பெண் கண்ணீர்!!

திருமணமான பெண் கண்ணீர்

தமிழகத்தில் திருமணமான பெண்ணை வேலை தருவதாக கூறி, வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சங்கராபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த மெக்கானிக்கல் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அந்த பெண் கடந்த 10-ஆம் திகதி தன் கணவருடன் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஒரு புகார் கொடுத்தார்.

அந்த புகாரை படித்துப் பார்த்த காவல் கண்காணிப்பாளர் அதிர்ச்சியடைந்தார். அதில், கடந்த 2018ஆம் ஆண்டு ஜுலை மாதம் என் கணவர் வேலை காரணமாக கேரளா மாநிலம் கொல்லம் பகுதிக்கு சென்று விட்டார். அப்போது தான் சம்பாதிக்கும் பணத்தை போட்டுவிடுவதாக கூறினார். இதனால் அதற்காக வங்கிக் கணக்கை துவங்குவதற்காக சங்கராபுரத்தில் உள்ள தனியார் வங்கியில் கணக்கு தொடங்கச் சொன்னார்.

அதன்படி நான் வங்கிக்குச் சென்று கணக்கு தொடங்கினேன். அப்போது, அங்கிருந்த வங்கி ஊழியர் முத்துசிவகார்த்திக், ஏ.டி.எம் கார்டு வந்ததும் அழைக்கிறேன். உங்கள் நம்பரைக் கொடுங்கள் என்றார், நானும் நம்பி கொடுத்துச் சென்றேன். அதன் பின் ஒரு நாள் என்னை போனில் தொடர்பு கொண்ட அவர்,

பி.காம் படித்திருக்கும் உனக்கு எங்களது வங்கியில் தற்காலிக வேலை இருக்கிறது அதனை வாங்கிக் கொடுக்கிறேன், அதற்காக வங்கி ஊழியர்களை நீ சந்திக்க வேண்டும் என்று கூறி, கம்பத்தில் உள்ள தனியார் லாட்ஜ் ஒன்றுக்கு வரச்சொன்னார். என் குடும்பச் சூழல் காரணமாக எப்படியாவது இந்த வேலை கிடைத்தால் போதும் எனக் கருதி அங்கு சென்றேன்.

அப்போது அறைக்குள் சென்றதும் என்னை வலுக்கட்டாயமாக பாலியல் வன்புணர்வு செய்தார். அதைத் தனது செல்போனில் காணொளியாகப் பதிவுசெய்துகொண்டார். தொடர்ந்து தனது ஆசைக்கு இணங்காவிட்டால் அந்த வீடியோவை எனது கணவருக்கு அனுப்பிவிடுவதாகக் கூறி என்னை மிரட்டி, தொடர்ந்து பாலியல் வன்புணர்வுசெய்தார்.

ஒரு கட்டத்தில், அவருடன் வங்கியில் பணிபுரியும் அன்பு, பாண்டி, சதீஸ் மற்றும் பெயர் தெரியாத மூவருக்கு அனுப்பி, அந்த ஆறு பேரை அழைத்துக்கொண்டு எனது வீட்டுக்கு வந்து, என்னைப் பலமுறை பாலியல் வன்புணர்வு செய்தார்கள். என்னை விட்டுவிடுங்கள் எனப் பல முறை கெஞ்சியும் பார்த்தேன்.

ஆனால், நான் சொல்வதை கேட்காமல், முத்துசிவகார்த்தியின் நண்பன் ராஜபார்த்திபன் மற்றும் வங்கி ஊழியர்கள் இருவர் உட்பட, மூவர் என்னை தேக்கடி உட்பட பல இடங்களுக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்புணர்வு செய்தனர். அப்போதெல்லாம் வீடியோ மற்றும் போட்டோ எடுத்துக்கொண்டனர். இதனை என் கணவரிடமோ, பெற்றோரிடமோ சொன்னால் வீடியோவை வெளியிட்டுவிடுவேன் என மிரட்டினார்கள்.

இவர்களிடம் இருந்து தப்பிக்க போடி சிலமலையைச் சேர்ந்த எனது உறவினரான போஸ் என்பவரது மகன் ஈஸ்வரனிடம் நடந்த விடயம் அனைத்தையும் கூறினேன். எனக்கு உதவி செய்வதைப் போல நடித்து, அவனும் என்னை பாலியல் வன்புணர்வு செய்தான். அதோடு, பெயர் தெரியாத அவனது நண்பனை அழைத்துவந்து என்னை பாலியல் வன்புணர்வு செய்து அதை செல்போனில் வீடியோவாகப் பதிவுசெய்துகொண்டான்.

கடந்த 2018 ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரை 12 பேரும் என்னை பாலியல் வன்புணர்வு செய்து கொடுமைப்படுத்தினர். ஒரு கட்டத்தில் என் உடல் நிலை மோசமாகச் சென்றதால், அதனை அறிந்த என் கணவர், எனது மொபைல் போனுக்கு வந்த அழைப்புகளைப் பார்த்து என்னுடன் சண்டைபோட்டார். அதன்பின்னர் நடந்ததைக் கூறினேன். என்னை பாலியல் வன்புணர்வு செய்த 12 பேர் மீதும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது தொடர்பாக, 2018 டிசம்பர் மாதம் போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். நடவடிக்கை இல்லை. அதன் பின்னர், பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னர் இப்போது எஸ்.பி அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறேன். 12 பேருக்கும் கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட தனியார் வங்கியைச் சேர்ந்த துணை மேலாளரான போடியைச் சேர்ந்த முத்துசிவகார்த்திக் (30), சிலமலையைச் சேர்ந்த ஈஸ்வரன் (30) ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். மேலும் சதீஷ், பாண்டி, ராஜபார்த்திபன் உட்பட 10 பேர்மீது வழக்குப்பதிவு செய்து பொலிசார் அவர்களை தேடி வருகின்றனர்.

திருமணம் முடிந்த கையோடு மாலையும் கழுத்தமாக தம்பதி செய்த செயல் : குவியும் பாராட்டுக்கள்!!

தம்பதி செய்த செயல்

தமிழகத்தில் திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி செய்த செயலுக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் கீர்த்தி ராஜ். இவருக்கு தனசிரியா என்ற இளம்பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த கையோடு மாலையும் கழுத்துமாக திருமண மண்டபத்தை விட்டு கிளம்பிய தம்பதி சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள வீடுகளை நோக்கி சென்று தலைக்கவசம் அணிந்தபடி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

அதாவது இருசக்கர வாகனத்தில் செல்வோர் கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து செல்லும்படி அறிவுறுத்தினார்கள். தமிழகம் முழுவதும் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து செல்லும்படி காவல் துறையினர் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

சிசிடிவி கமெரா பற்றி கவலைப்படாதே : அதிரவைத்த இளம்பெண்களின் வாக்குமூலம்!!

இளம்பெண்களின் வாக்குமூலம்

வட இந்தியாவை சேர்ந்த 4 பெண்கள் உட்பட 6 பேர் சென்னைக்கு வந்து விலையுயர்ந்த புடவைகளை திருடிவந்த நிலையில் தற்போது வசமாக சிக்கியுள்ளனர். சென்னை தி.நகரில் உள்ள பிரபலமான ஜவுளிக் கடைக்குள் 4 வடமாநில பெண்கள், 2 ஆண்கள் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இரவு சென்றனர். பட்டுப்புடவை பிரிவில் வெகுநேரமாக புடவைகளை அவர்கள் பார்த்த நிலையில் எதையும் வாங்காமல் வெளியில் சென்றனர்.

இதனால் அவர்கள் மீது கடை ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில் அவர்களை சோதனை செய்தனர். அப்போது பெண்களின் சுடிதாருக்குள் விலை உயர்ந்த பட்டுப்புடவைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இது குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் அவர்களிடம் விசாரித்தனர். இது குறித்து பொலிசார் கூறுகையில், ஜவுளிக்கடையில் பட்டுப்புடவைகளைத் திருடியவர்கள் டெல்லியைச் சேர்ந்த ராம்குமார் (40), ரிங்குசிங் (35), பீனா (53), ஜோதி (48), சுனிதா (26), தீபாஞ்சலி (21) எனத் தெரியவந்தது.

இவர்கள் டெல்லியிலிருந்து கார் மூலம் சென்னை வந்து இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த கடையில் திருடுவதற்கு முன், அதேபகுதியில் உள்ள இன்னொரு பட்டு ஷோரூமில் கைவரிசை காட்டியுள்ளனர். அங்கு 2,22,369 ரூபாய் மதிப்புள்ள 3 பட்டுச் புடவைகளை திருடியுள்ளனர்.

அந்த புடவைகளை காரில் வைத்துவிட்டு இந்த கடைக்கு வந்துள்ளனர். இங்கு 1,41,010 ரூபாய் மதிப்புள்ள 3 பட்டுச் புடவைகளை திருடியுள்ளனர். இது தொடர்பாக கடையில் இருந்த சிசிடிவி கமெராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தோம்.

அப்போது, 4 பெண்களும் கடைக்குள் பேசிக்கொண்டு பட்டுச் சேலைகளை தேர்வு செய்கின்றனர். விலையுயர்ந்த ஒரு பட்டுச்சேலையை ஒரு பெண் எடுத்து இன்னொருவரிடம் கொடுக்கிறார். அவரும் அதை ஆர்வமாக பார்ப்பதுபோல சுடிதாருக்குள் வயிற்றுப்பகுதியில் மறைத்து வைத்துக் கொள்வது தெரிந்தது.

இது குறித்து பொலிசில் சிக்கிய பெண்கள் அளித்த வாக்குமூலத்தில், சில்க் புடவைகளை திருடினால் பணம் கிடைக்கும். டெல்லியிலிருந்து குழுவாக வருவோம். ஒரு தடவை வந்தால் 50 சில்க் புடவைகளை திருடுவோம். இது, எங்களுக்கு ஒரு சம்மர் ட்ரிப் என்று கூறியுள்ளனர்.

பெரிய கடைகளில் சிசிடிவி கமெரா இருக்குமே என்று 4 பெண்களிடம் பொலிசார் கேட்டதற்கு, சிசிடிவி கமெராவா டோன்ட்வொரி ஜி என்று பதட்டம் இன்றி இந்தியில் கூறியுள்ளனர். இதை தொடர்ந்து ஆறு பேரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்

பொலிசாக ஆசைப்பட்ட மகனை கொன்று பெற்றோர் தற்கொலை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

நெஞ்சை உலுக்கும் சம்பவம்

தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் கல்வி கட்டணத்தை செலுத்த முடியாததால் மகனை கொன்று பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினத்தில் உள்ள வெளிபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் செந்தில்குமார், லட்சுமி தம்பதி. இவர்களுடைய 11 வயது மகன் ஜெகதீஸ்வரனை கொலை செய்துவிட்டு இவர்களும் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். தனியார் பாடசாலையில் 6ம் வகுப்பு படித்துவந்த ஜெகதீஸ்வரனுக்கு கல்வி கட்டணத்தை செலுத்த முடியாமல் செந்தில்குமார் தம்பதி அவதிப்பட்டு வந்துள்ளனர்.

மட்டுமின்றி இவர்களை நம்பி எவரும் கடன் தர முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து தங்களின் ஒரே மகனுக்கு பாடசாலை திறந்து 10 நாட்கள் ஆகியும் கல்வி கட்டணத்தை செலுத்த முடியவில்லையே என்ற வருத்தத்தில் இருவரும் தவித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் இருவரும் சிறுவன் ஜெகதீஸ்வரனை சாப்பாட்டில் விஷம் வைத்து கொன்றுள்ளனர். மேலும் பொலிஸ் ஆக வேண்டும் என்று சிறுவன் கனவு கண்டதால் அவனுக்கு பொலிஸ் உடையை அணிவித்து அதன் பின்னர் விஷத்தை கொடுத்துள்ளனர். பின்னர் அவர்கள் இருவரும் அதே உணவை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வவுனியா சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை திறப்பு விழா!!

திறன் வகுப்பறை திறப்பு விழா

வவுனியா கூமாங்குளம் சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் இன்று (13.06) காலை 10 மணியளவில் திறன் வகுப்பறை திறப்பு விழா நிகழ்வுகள் பாடசாலையின் அதிபர் ச.பாலச்சந்திரன் தலைமையில் இடம்பெற்றது.

வவுனியா மாவட்டத்தில் முதல் தடவையாக ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித்தலைவருமான செல்வம் அடைக்கலநாதனால் நாடா வெட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

சிறப்பு விருந்தினர்களாக எஸ்.மரியநாயகம் (வவுனியா தெற்கு கல்வி வலய கோட்டக்கல்விப்பணிப்பாளர்) ம.ஜெகதீஸ்வரன் (பிரதி அதிபர் வவுனியா தரணிக்குளம் கணேஸ் வித்தியாலயம், இணைப்பாளர் ரட்ணம் பவுண்டேசன்) துஷார (பண்டாரிகுளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி), மா.அதிர்ஷ்ட செல்வம் (வவுனியா தெற்கு பிரதேச சபை உறுப்பினர்),

கௌரவ விருந்தினர்களாக திருமதி. உ.சூரியச்செல்வன் (பாடசாலை வசதிப்படுத்துனர் ஆசிரிய ஆலோசகர் ஆங்கிலம்), திருமதி.செ.விஜயகாந்தன் (ஆசிரிய ஆலோசகர் ஆரம்பக் கல்வி), சமுர்த்தி உத்தியோகத்தர், பெற்றோர்கள் மாணவர்கள். ஆசிரியர்கள், எனப்பலரும் கலந்துகொண்டதுடன் நிகழ்வில் பாடசாலை மாணவர்களுக்கு அதிதிகளால் சின்னம் சூட்டி வைக்கப்பட்டது.

கத்திக்குத்திற்கு இலக்கான பல்கலைக்கழக மாணவி : காதலன் கைது!!

பல்கலைக்கழக மாணவி

பல்கலைக்கழக மாணவியொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை களனி பல்கலைக்கழகத்தின் அருகில் வைத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறும் பொலிஸ் ஊடக பேச்சாளர் அவர் காதலராக இருக்கலாம் என கூறுகின்றனர்.

மேலும் இந்த சம்பவம் இடம்பெற காதல் விவகாரமே காரணமென ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை களனி பல்கலைக்கழகத்தின் அருகில் வைத்து இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இரு மணித்தியாலங்களில் வசமாக சிக்கிய நூற்றுக்கணக்கானோர்!!

சிக்கிய நூற்றுக்கணக்கானோர்

கொழும்பில் நேற்றைய தினம் இரு மணித்தியாலங்களுக்குள் நூற்றுக்கணக்கான சாரதிகள் பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர். இந்த விடயத்தை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரில் நேற்று இரு மணித்தியாலங்கள் வீதி விதிமுறைகளை மீறுவோர் தொடர்பில் விசேட கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது 582 சாரதிகள் வீதி விதிமுறைகளை மீறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவர்களுக்கு எதிராக சிசிரிவி காணொளிகளை பயன்படுத்தி வழக்கு தொடர்ப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வீதி விதிமுறைகள் மீறல்களுக்காக வாகன சாரதிகளிடம் அறவிடப்படும் அபராத தொகைகள் அதிகரிப்பு தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட வாகன போக்குவரத்து சட்டத் திருத்தத்திற்கு அண்மையில் நாடாளுமன்றம் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!!

சிவப்பு எச்சரிக்கை

இலங்கையின் 12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் எதிர்வரும் ஐந்து நாட்களுக்கு மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, அநுராதபுரம், புத்தளம், திருகோணமலை, பொலன்னறுவை, மாத்தளை மற்றும் குருணாகல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கே இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களில் மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை கடற்பரப்பிலிருந்து புத்தளம் வழியாக காங்கேசன்துறை மற்றும் அதனை அண்மித்த கடற்பரப்புகளிலும், மாத்தறை தொடக்கம் மட்டக்களப்பு வழியாக அம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்குச் செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேல், தென், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் 100 மில்லி மீற்றரை விட அதிக மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. குறிப்பாக மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் கொழும்பு – புறக்கோட்டையில் 41.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் கடந்த சில நாட்களாக கடும் காற்று : 2 வீடுகள் சேதம்!!

2 வீடுகள் சேதம்

வவுனியாவில் கடந்த சில நாட்களாக வீசி வரும் கடும் காற்று காரணமாக இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது. வவுனியாவில் காற்றின் தாக்கம் குறித்து இன்று கேட்டபோதே மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் இவ்வாறு தெரிவித்தது. அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக வவுனியாவில் கடந்த சில நாட்களாக கடும் காற்று வீசி வருகின்றது. இக் காற்றின் தாக்கத்தால் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மகாமகிழங்குளம் மற்றும் பிரப்பமடு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் இரண்டு வீடுகளின் கூரைகள் காற்றினால் தூக்கி வீசப்பட்டு சேதமடைந்துள்ளது.

மகாமகிழங்குளம் பகுதியில் ஒரு வீட்டின் கூரை காற்றினால் தூக்கி வீசப்பட்டுள்ளது. இதனால் அவ் வீட்டில் வசித்து வந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 2 பேரும், பிரப்பமடுவில் ஒரு வீட்டின் சீற் கூரைகள் காற்றினால் தூக்கி வீசப்பட்டமையால் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் பாதிப்படைந்துள்ளனர். இவர்களுக்கான இழப்பீட்டினை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது.

வவுனியாவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் விஜயம்!!

அத்துரலிய ரத்ன தேரர்

பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்னதேரர் வவுனியாவிற்கு விஜயம் செய்து இங்குள்ள சில பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள் எனப் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

வவுனியா, தவசிகுளம் சேவாலங்கா கேட்போர் கூடத்தில் இன்று இச்சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்னதேரர், இலங்கை ஒரு நாடு. இங்கு எல்லோருக்கும் ஒரே சட்டம் தான். முஸ்லிம் மக்களுக்கு என தனியான பகுதியோ, சட்டமோ இல்லை. இந்த நாட்டில் இனவாதம், மதவாதம், அடிப்படைவாதம் என்பன ஒழிக்கப்பட வேண்டும். அதற்கு இணைந்து பணியாற்ற அனைவரும் முன்வர வேண்டும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையைத் தொடர்ந்து எதிர்காலத்தில் எவ்வாறு தமிழ் – சிங்கள- முஸ்லிம் மக்கள் இணைந்து செயற்படுவது என்பது குறித்தும், எதிர்காலத்தில் நாட்டை அபிவிருத்தி நோக்கி நகர்த்துவதற்கும் ஏற்ற வகையில் குழுவாக இணைந்து செயற்படும் நோக்கிலும் வடக்கிற்கிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளேன். எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றுவோம் என இதன்போது தெரிவித்தார். இதன்போது தற்போதைய நிலமைகள் மற்றும் வவுனியாவின் இன ரீதியான நிலமைகள் தொடர்பில் பலரும் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

கண்ணெதிரே இரத்தத்துடன் கிடந்த தந்தையை காப்பாற்ற மன்றாடிய மகள் : நேர்ந்த அவலத்தை கூறி கதறும் பெண்!!

கதறும் பெண்

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட எட்டு இடங்களில் தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியிருந்தன. இந்த நிலையில் குண்டுத்தாக்குதலுக்கு இலக்கான கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் புனரமைக்கப்பட்டு நேற்றைய தினம் திறக்கப்பட்டிருந்தது.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற கோர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மற்றும் தமது உறவுகளை பறிகொடுத்த பலர் நேற்றைய தினம் தேவாலயத்தில் இடம்பெற்ற சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது யுவதியொருவர் கருத்து தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலில் தனது தந்தையை இழந்து விட்டதாக தெரிவித்து கண்ணீர்விட்டழுதுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், காலை 8.40 மணியளவில் நான் கடிகாரத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது மிகப்பெரிய தீப்பிளம்பு தோன்றிய நிலையில் நான் கீழே விழுந்து விட்டேன். இதனையடுத்து நான் கண்களை திறந்த போது அக்கா என அழைத்து கொண்டு என்னுடைய சகோதரி என்னை நோக்கி ஓடி வந்தாள். நான் என்னுடைய இடதுபுறம் திரும்பி பார்த்தபோது என தந்தையின் தலையிருந்து இரத்தம் வந்து கொண்டிருந்தது.

அப்போது தந்தையை தூக்கிச் செல்லுமாறு அனைவரிடமும் மன்றாடினேன். அவர் தலையிலிருந்து அதிகளவில் இரத்தம் வருகிறது என கூறினேன். எனினும் யாரும் எனக்கு உதவ வரவில்லை. எல்லோரும், வீடியோவும் புகைப்படங்களும் எடுத்து கொண்டிருந்தார்கள்.

கடைசியாக இருவர் வந்து தந்தையை முச்சக்கரவண்டியொன்றில் ஏற்றிக் கொண்டு வைத்தியசாலைக்கு சென்றார்கள். நானும் எனது சகோதரியும் அவருடன் வைத்தியசாலைக்கு செல்லவில்லை. அடையாளம் தெரியாத நபரொருவர் எங்களுக்கு உதவ வந்தார்.

ஆனால் அந்த நபர் எனது தந்தையின் மோதிரம், கையடக்க தொலைபேசி, பணம் என்வற்றை களவெடுத்து சென்று விட்டார். நாம் எமது தந்தையை இழந்து விட்டோம். அத்துடன் இங்கு மனிதத்தன்மை இல்லை என்பதையும் நான் உணர்ந்து கொண்டேன் என தான் பட்ட வேதனையை கதறியவாறு கூறியுள்ளார்.

அன்று ஐலான் குர்தி : இன்று உலகத்தின் கண்களை குளமாக்கிய ஆயிஷா: நெஞ்சைப் பிசையும் புகைப்படம்!!

நெஞ்சைப் பிசையும் புகைப்படம்

கிழக்கு ஜெருசலேம் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் உயிருக்கு போராடிய சிறுமி ஒருவர் பெற்றோரை காண கடைசியாக முவைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர்களை அடையாளம் காணாமலே மரணமடைந்துள்ள சம்பவம் உலக அரங்கை உலுக்கியுள்ளது.

மூளை அறுவை சிகிச்சைக்காக மிகவும் ஆபத்தான கட்டத்தில் பாலஸ்தீனத்தில் இருந்து கிழக்கு ஜெருசலேமில் உள்ள மருத்துவமனை ஒன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் சிறுமி ஆயிஷா லூலூ.

உயிருக்கு போராடும் நிலையில் பெற்றோரின் அருகாமை தமக்கு இதமாக அமையும் என கருதிய அந்த சிறுமி, மருத்துவமனை நிர்வாகத்திடம், அந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். பாலஸ்தீனத்தில் இருந்து ஒருமணி நேர பயணமே என்றாலும் இஸ்ரேல் அரசு அவர்களின் கோரிக்கையை கண்மூடித்தனமாக நிராகரித்துள்ளது.

இதனால் தங்கள் மகளின் அறுவை சிகிச்சையின்போது அவர்களால் உடனிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மட்டுமின்றி, சிறுமி ஆயிஷாவின் உதவிக்கு உறவினர் அல்லாத நபர் ஒருவரையும் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிலையில் ஆபத்தான அறுவை சிகிச்சை முடித்த ஆயிஷா கோமா நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இனி மருத்துவ சிகிச்சையால் எந்த பலனும் இல்லை என்ற நிலையில் காசாவில் உள்ள அவரது குடியிருப்புக்கு ஆயிஷாவை திருப்பி அனுப்பியுள்ளனர்.

அறுவை சிகிச்சைக்கு முன்னர் பெற்றோரை ஒருமுறை காண வேண்டும் என ஆசையை வெளியிட்ட ஆயிஷாவுக்கு, அவர்களை அடையாளம் காணும் நிலையில் தற்போது இல்லாதது அந்த பெற்றோரை மேலும் வருத்தியது.

மட்டுமின்றி மருத்துவமனையில் இருந்து குடியிருப்புக்கு திரும்பிய ஒரு வாரத்தில் ஆயிஷாவின் உயிர் பிரிந்துள்ளது. மருத்துவமனை படுக்கையில் ஆயிஷாவின் புன்னகை தளும்பும் முகம் சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்க்கவும், தற்போது இஸ்ரேலும் பாலஸ்தீனமும் தங்களுக்கிடயே குற்றஞ்சாட்டி வருகின்றனர். ஜெருசலேமில் உள்ள உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக பல நூறு மனுக்கள் காசாவில் இருந்து குவிந்தாலும்,

கடும் சட்டத்திட்டங்களை வலியுறுத்தும் இஸ்ரேல் சிலரது மனுக்களை மட்டுமே ஏற்றுக்கொண்டு வருகிறது. அன்று அகதிகள் படகு மூழ்கியதில் கொல்லப்பட்ட ஐலான் குர்தியின் புகைப்படம் உலக நாடுகளின் நெஞ்சை உலுக்கியது. இன்று ஆயிஷா லூலூ.