சவூதி விமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல் : பெண்கள், குழந்தைகள் சிக்கினர்!!

ஏவுகணை தாக்குதல்

மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியாவில் உள்ள விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 26 பேர் சிக்கி காயமடைந்துள்ளனர்.

சவூதியின் தெற்கு பகுதியில் உள்ள உள்நாட்டு விமான நிலையமான அபா விமானநிலையத்தின் மீதே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சவூதி தலைமையிலான கூட்டுப் படை தெரிவித்துள்ளது.

மேலும், இத்தாக்குதலை ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹௌதி போராளிகள் குழு நடத்தியுள்ளதாகவும், ஈரானின் ஆதரவுப்பெற்ற ஹௌதி குழுவிற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என சவூதி தலைமையிலான கூட்டுப் படை தெரிவித்துள்ளது.

அபா விமான நிலையத்தின் வருகை அரங்கத்தை ஏவுகணை தாக்கியுள்ளது. இதில், மூன்று பெண்கள், இரண்டு குழந்தைகள் என மொத்தம் 26 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சவூதி,ஏமன் மற்றும் இந்தியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தாக்குதலால் அதிக பொருள் சேதத்தை ஏற்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபா விமான நிலையம் ஏமன் எல்லையில் இருந்து 200 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஏவுகணை தாக்குதலின் மூலம் ஈரானிடம் இருந்து மேம்பட்ட ஆயுதங்களை ஹௌதி குழு பெற்றுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என சவூதி தலைமையிலான கூட்டுப் படை தெரிவித்துள்ளது.

இலங்கை குண்டுவெடிப்புடன் தமிழகத்தில் ஒருவருக்கு தொடர்புள்ளது கண்டுபிடிப்பு!!

தமிழகத்தின், கோவை மாவட்டத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்ட தேசிய புலனாய்வு அமைப்பினர், இலங்கை குண்டுவெடிப்பு மற்றும் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பில் உள்ளவர்களை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையோர் கேரளா மற்றும் தமிழகத்தில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் இன்று கோவையில் ஏழு இடங்களில், தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

உக்கடம், குனியமுத்தூர், போத்தனூர், அல் அமீன் காலனி, சுண்ணாம்பு கால்வாய், பொன் விழா நகர் உள்ளிட்ட 7 இடங்களில் சோதனை நடத்தினர். கோவையில் நடைபெற்ற சோதனையில்,இலங்கை குண்டுவெடிப்புடன் ஒருவருக்கு தொடர்புள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது அசாருதின் இலங்கை குண்டுவெடிப்பை நடத்திய சஹ்ரான் ஹசீமுடன் சமூக வலைதளத்தில் தொடர்பில் இருந்ததை தேசிய புலனாய்வு அமைப்பினர் கண்டுபிடித்துள்ளனர்.

தமிழகத்தை சேரந்த ஆறு இளைஞர்கள், ஐ.எஸ் அமைப்பின் குழுவாக செயல்பட்டு வந்ததாகவும், இதற்கு அசாருதின் தலைவராக செயல்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இவர்கள் சமூக வலைதளம் மூலம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு,ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுவந்ததாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சோதனைியல் 14 செல்போன்கள்,29 சிம்கார்டுகள்,10 பென் டிரைவ், 3 லேப்டாப், 6 மெமரி கார்டு,4 ஹார்டு டிஸ்க் பறிமுதல் செய்துள்ள தேசிய புலனாய்வு அதிகாரிகள், கைது செய்தவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தாயின் துன்பத்தைப்பார்த்து தாய்க்கு மறுமணம் செய்துவைத்த இளைஞன் : குவியும் பாராட்டுக்கள்!!

தாய்க்கு மறுமணம் செய்துவைத்த இளைஞன்

கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் தாய்க்கு திருமண வாழ்த்து தெரிவித்து பதிவிட்ட வார்த்தைகள் அனைவரையும் நெகிழச்செய்துள்ளது.

கேரளாவில் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த கோகுல் ஸ்ரீதர் என்ற இளைஞர், CPM அமைப்பில் உறுப்பினராக செயல்பட்டு வருகின்றார். பொதுவாக பெண்கள் குறிப்பிட்ட வயத்திற்கு பின் தனது திருணம் என்பது குறித்து பொதுவெளியில் பேச தயங்கும் விடயத்தை நாம் பார்க்கலாம்.

ஆனால், கோகுல்ஸ்ரீதர் அவரின் தாயரின் மறுமணத்தை வித்தியாசமாகவும் ஏற்கொண்டுள்ளார். அதற்கான காரணத்தை பதிவில் தெரிவித்துள்ளார். அவர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள வார்த்தைகள் ”ஒரு பெண் எனக்காக அவரது வாழ்க்கையை ஒதுக்கி வைத்துள்ளார். அவள் தனது திருமணத்தின் மூலம் அதிக துன்பங்கள் அனுபவித்துள்ளாள். ஒருநாள் அடிவாங்கி கொண்டு தலையில் ரத்தம் சொட்டும் போது அவளிடம் கேட்டேன் இது உனக்கு சலிக்கவில்லையா என்று.

அவள் என்னிடம் நான் உனக்காகதான் வாழ்கிறேன் என்று தெரிவித்தால். அன்று அவளுடன் புறப்பட்டுவிட்டேன். அன்றுதான் நான் முடிவு செய்தேன், என்தாய் எனக்காக அவள் இளமையை தியம் செய்தாள் அவள் கனவை அடைய வேண்டும் என்று. இதில் மறைக்க என்னிடம் ஒன்றும் இல்லை… Mother, happy married life”. என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவு மிகம் வைரலாகி பலரது வாழ்த்துகளை பெற்றுள்ளது.

டிக் டாக் பதிவிட எடுக்கப்பட்ட வீடியோ : ஆனால் நடந்த விபரீதம்!!

நடந்த விபரீதம்

தமிழகத்தில் பெண்ணொருவர் டிக்-டாக் செயலி மூலம் விஷம் அருந்துவது போன்ற வீடியோவை வெளியிட்டு பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வங்காரம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி மகள் அனிதா (வயது 24) என்பரே இச்சம்பவத்திற்கு பலியாகியுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் சீராநத்தம் கிராமத்தை சேர்ந்த பழனி வேலு என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது மோனிஷா என்ற மகளும், அனீஷ் என்ற மகனும் உள்ளனர். தனது குடும்பத்தை பொறுப்புடன் நடத்திவந்த அனித்தா, செல்போனில் டிக் டாக் ஆப்பினை பதிவிறக்கம் செய்து அதற்கு அடிமையாகி உள்ளார்.

இதன்போது குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் சாப்பாடு கூட தயார் செய்து கொடுக்காமல் டிக்-டாக் வீடியோவில் நடனமாடுவது, பாடல் பாடுவது, மேக்அப் செய்து தன்னை அழகாக காட்டுவது போன்றவைகளை பதிவிட்டு லைக்குகளை அள்ளி வந்துள்ளார் அனிதா.

இதனை தொடர்ந்து வெளிநாட்டில் இருக்கும் கணவரிடம் உறவினர்கள் அனிதாவின் செயல்பாடு குறித்து புகார் தெரிவித்தனர். அவரும் அனிதாவை போனில் கண்டித்தார். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த மகன் மோனிஷா கீழே விழுந்து காயம் அடைந்தார். அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லாமல் அனிதா இருந்துள்ளார்.

தகவல் அறிந்து ஆத்திரமடைந்த கணவர் பழனிவேலு, அனிதாவை போனில் கடுமையாக திட்டியுள்ளார். இதனால் மனம் உடைந்த அனிதா தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார். அதனை தனது கடைசி விருப்பமாக டிக்-டாக் செயலியில் வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்த அவர், பின்னர் தண்ணீரை குடிப்பது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இறுதியாக ஒரு சில விநாடிகளில் அவரது கண்கள் மயக்க நிலையை ஏற்பட்டு மயக்கம் அடைந்ததுள்ளார். இதனை கண்ட அவரை அக்கம்பக்கத்தினர் அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அனிதா நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் மேலும் தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், தாயும் தற்கொலை செய்து கொண்டதால் அவரது இரண்டு குழந்தைகளும் ஆதரவற்ற நிலையில் தவித்து வருகிறார்கள்.

காதலனை பிரிந்து செல்ல முடிவெடுத்த காதலி : காதலன் செய்த அதிர்ச்சி செயல்!!

காதலன் செய்த அதிர்ச்சி செயல்

மங்களூரில் அப்பார்ட்மெண்ட் ஒன்றில் இளம்பெண் மாரடைப்பால் மரணமடைந்ததாக சொல்லப்பட்ட விவகாரத்தில், அவரது காதலனே கழுத்தை நெரித்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மங்களூருவில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் அஞ்சனா என்ற இளம் பெண், மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த கொலை குறித்து நடத்திய விசாரணையில், அந்த வீட்டில் அஞ்சனாவோடு தங்கியிருந்த காதலன் சந்தீப் என்ற இளைஞரை தேடிவந்தனர்.

அந்த நபர் தனது சொந்த ஊரான பெங்கோடகி தண்டா சென்றுவிட்டார் என தகவல் கிடைத்தது. அவரை சுற்றி வளைத்து விசாரித்தபோது, கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். சமூக ஊடகத்தின் மூலமாக, இருவரும் பழக தொடங்கி, பின்னர் காதலிக்க ஆரம்பித்த இவர்கள். சில மாதங்களுக்கு முன்பாக, வீட்டில் பொய் சொல்லிவிட்டு, இருவரும் மங்களூருவிற்கு ஓடிவந்து, அபார்ட்மெண்ட் ஒன்றில் வீடு பார்த்து வாடகைக்கு தங்கியுள்ளனர்.

வீட்டின் உரிமையாளரிடம் இருவரும் திருமணமானதாகவும், வேலை தேடி மங்களூரு வந்தோம் என்றும் பொய் சொல்லியுள்ளனர். சில நாள் ஒன்றாக தங்கியிருந்து விட்டு, பின்னர் திருமணம் செய்துகொள்ள இருவரும் தீர்மானித்திருக்கிறார்கள்.

இருவரும் சிறிது காலம் கணவன் மனைவி போல வாழ்ந்துள்ளனர். அடிக்கடி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட தொடங்கியுள்ளது. சந்தீப் நடவடிக்கையால் அதிருப்தியில் இருந்த அஞ்சனா, அவரையே திருமணம் செய்யும் முடிவை கைவிடுவதாகக் கூறியிருக்கிறார்.

இந்நிலையில், கடந்த 7 ஆம் தேதி அவர்கள் எதிர்காலத்தைப் பற்றி விவாதித்தபோது, ​​அஞ்சனா தன் பெற்றோருக்கு அவளுக்கு பொருத்தமான மாப்பிள்ளையை பார்த்துள்ளதாகவும், அவனையே திருமணம் செய்துகொள்வதாகவும் கூறியிருக்கிறார்.

இந்த விவாதம் போய்க் கொண்டிருக்கும்போதே டென்ஷானான சந்தீப், இவ்வளவு நாள் என்னோடு வாழ்ந்துவிட்டு, இப்போது உனக்கு வேறொருவன் வேண்டுமா என கேபிள் வயரால் அஞ்சனாவை கழுத்து நெரித்து கொலை செய்திருக்கிறார்.

பின்னர் அங்கிருந்து அவர் தப்பியோடியுள்ளார். மாலையில் வீட்டு உரிமையாளர் அறையில் அஞ்சனா இறந்ததைக் கண்டதும். போலீசில் புகார் அளித்தனர். விரைந்து வந்த போலீஸ் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் அந்த வீட்டின் உரிமையாளர், காஞ்சனாவின் காதலன் சந்தீப்பை அடையாளம் காட்டியிருக்கிறார். கொலை செய்தபின், சந்தீப் தனது சொந்த ஊரான சிங்காகிக்கு ஓடிவிட்டார். போலீஸ் சிறப்பு குழுக்கள், உருவாக்கி சந்தீப் கைது செய்யப்பட்டார். கைதான சந்தீப்பிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

வெளிநாட்டிலிருந்து குடும்பத்துடன் ஊருக்கு திரும்பிய தொழிலதிபர் : நள்ளிரவில் நடந்த சம்பவம்!!

நள்ளிரவில் நடந்த சம்பவம்

இந்தியாவில் தொழிலபதிபர் ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தையை சுட்டு கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தின் பாட்னாவை சேர்ந்தவர் நிஷாந்த் சரப். இவர் மனைவி அல்கா. தம்பதிக்கு அனன்யா (8) இஷாந்த் (4) என இரண்டு பிள்ளைகள் இருந்தனர். இந்நிலையில் நிஷாந்த் தனது குடும்பத்தாருடன் ஐரோப்பாவுக்கு சுற்றுலா சென்ற நிலையில் கடந்த வாரம் ஊருக்கு திரும்பினார்கள்.

நேற்று நள்ளிரவு நிஷாந்த் தனது மனைவி மற்றும் குழந்தைகளை துப்பாக்கியால் சுட்டு விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். காலையில் அவர் வீட்டுக்கு நபர் ஒருவர் வந்த போது நால்வரும் ரத்த வெள்ளத்தில் கிடப்பத்தை பார்த்து அதிர்ச்சியடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்துக்கு பொலிசார் வந்த நிலையில் சிறுவன் இஷாந்த் தவிர மற்ற மூவரும் இறந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து இஷாந்த் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவனுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவ இடத்தில் இருந்து பொலிசார் நிஷாந்த் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினார்கள். அதில், இந்த சம்பவத்துக்கும் எங்கள் குடும்பத்தை சேர்ந்த யாருக்கும் தொடர்பில்லை, இதற்கு நானே பொறுப்பு என எழுதப்பட்டிருந்தது.

பொலிசார் கூறுகையில், நிஷாந்தின் மனைவியும், குழந்தைகளும் தூங்கி கொண்டிருக்கும் போது அவர்களை நிஷாந்த் சுட்டிருக்கலாம் என கருதுகிறோம். நிஷாந்த் குடும்பத்தினர் அனைவரும் தொழிலபதிபர்கள் தான்.

நிஷாந்த் துணிக்கடை நடத்தி வந்தார், அவர்களுக்கு நகைக்கடை கூட உள்ளது. அல்கா மற்றும் நிஷாந்தின் செல்போன்களை கைப்பற்றியுள்ளோம், அதன் மூலம் துப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என கூறியுள்ளனர்.

வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் மரணம்!!

இளைஞன் மரணம்

வவுனியா கற்பகபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார். இவ் விபத்து சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வவுனியாவில் இருந்து பூவரசங்குளம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி கற்பகபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அதே திசையில் பயணித்த ஹயஸ் ரக வாகனம் முச்சக்கரவண்டியை முந்திச்செல்ல முற்பட்டபோது விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்தில் முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற வவுனியா பத்தினியார்மகிழங்குளத்தை சேர்ந்த 25 வயதான சிவபெருமாள் கஜேந்திரன் என்ற இளைஞன் மரணடைந்துள்ளார்.

ஹயஸ் ரக வாகனத்தையும் முச்சக்கரவண்டியையும் பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றதுடன் ஹயஸ் வாகன சாரதியையும் கைது செய்து விசாரணைக்குட்படுத்தி வருகின்றனர்.

மரணமடைந்தவரின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் வெடிபொருட்கள் மீட்பு!!

வெடிபொருட்கள் மீட்பு

வவுனியா வேலங்குளம் பகுதியில் உள்ள தோட்ட காணியிலிருந்து வெடிபொருட்களை பூவரசங்குளம் பொலிசார் இன்றைய தினம் மீட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

நேற்று(11.06) வவுனியா வேலங்குளம் பகுதியில் உள்ள தனியார் காணியை அதன் உரிமையாளர் உழவியந்திரம் மூலம் பண்படுத்தியுள்ளார். பண்படுத்தப்பட்ட குறித்த காணியில் உரப்பொதியில் சுற்றிகாணப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்து பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த பூவரசங்குளம் பொலிசார் குறித்த உரப்பொதியை சோதனை செய்து பார்த்தபோது ஐந்து கைக்குண்டுகள் இருப்பதை அவதானித்து சம்பவம் தொடர்பாக குண்டினை செயலிழக்க செய்வதற்காக விஷேட அதிரடிபடையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இன்றையதினம் மீட்கப்பட்ட குண்டுகளை செயலிழக்க வைத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

வவுனியா – கோவில்குளம் அருள்மிகு அகிலாண்டேசவரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவில் பாலஸ்தாபன மகாகும்பாபிஷேகம் – 2019

இலங்காதீவின் வடபால் பல வளங்களாலும் சிறப்புப் பெற்ற வவுனியா நகரத்தின் கண்ணே ஈழத்தின் ஆறாவது ஈஸ்வர தலமாக போற்றுவதற்கு பெருமை வாய்ந்ததும், காஞ்சி காமகோடி பீட குருவருள் பொருந்தியதுமான கோவில்க்குளம் திவ்வியஷேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை ஈந்தருளும் அருள்மிகு அகிலாண்டேச்வரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவில் மகாகும்பாபிஷேகம் செய்த பன்னிரண்டு ஆண்டுகள் நிறைவு செய்யும் தருணத்தில் வேதாகம முறைப்படி பாலஸ்தாபன கும்பாபிஷேகம் செய்ய திருவருளும் குருவருளும் கூடியுள்ளது.

மேற்படி ஆலயத்தின் பாலஸ்தான  பூர்வாங்க கிரியைகள் 13.06.2019 வியாழக்கிழமையும்  பாலஸ்தான கும்பாபிசேகம் 14.06.2019  வெள்ளிக்கிழமையும் இடம்பெறுகின்றது.

பிரதமகுரு : சாகித்திய சிரோன்மணி, நயினை குருமணிசிவஸ்ரீ. வை. மு.ப.முத்துக்குமாரசாமி குருக்கள் –  ஆதீன பிரதமகுரு, ஸ்ரீ நாகபூஷணி அம்மன்கோவில், நயினாதீவு – வடகோவை

பிரதிஷ்டா பிரதம குருமணிகள்  வேதாகம கிரியா கலாநிதிசக்தி உபாசகர் – சிவஸ்ரீ. சதா சங்கரதாஸ் குருக்கள், சிவஸ்ரீ ச. விவேந் குருக்கள் ஆலய பிரதம குருமணிகள்: குறிகட்டுவான் ஸ்ரீ மனோண்மணி அம்மன் ஆலயம், பண்டாரிகுளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம்.

வீட்டில் கண்ணீர் விட்டு அழுத யுவராஜ் சிங்!!

யுவராஜ் சிங்

ஓய்வை அறிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், 2016ம் ஆண்டு இந்திய அணி அனுப்பிய கிரிக்கெட் ‘கிட்’-ஐ தொட்டுப்பார்த்து அழுததாக அவருடைய மனைவி தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர சகலதுறை வீரரான யுவராஜ் சிங், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவதாக நேற்று முன்தினம் அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த அறிவிப்பானது முன்னணி வீரர்கள் துவங்கி அவருடைய ரசிகர்கள் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் யுவராஜ் சிங் ஓய்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள அவருடைய மனைவி ஹஷெல் கீச், ஒரு மனைவியாக கிரிக்கெட் பிரிவு பற்றி அவரிடம் என்ன சொல்ல முடியும். அவர் ஓய்வு பெற்றதற்கு எனது முழு ஆதரவை அளித்துள்ளேன்.

யுவராஜ் சிங்கை பார்ப்பதற்கு முன்பு வரை நான் கிரிக்கெட் பார்த்ததில்லை. 2016ஆம் ஆண்டு யுவராஜை மீண்டும் அணிக்காக விளையாடுமாறு இந்திய அணி கிட் அனுப்பியிருந்தது. அதனை பார்த்ததும் அவர் அழ ஆரம்பித்துவிட்டார். ஆனால் அந்த உணர்ச்சியினை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

வைரப்பல்லை வாய்க்குள் பொருத்தியிருந்த இளம் கோடீஸ்வரர் : அதனால் அவருக்கு நேர்ந்த கதி!!

லண்டனில் கோடீஸ்வர தொழிலதிபரின் மகனை பணத்துக்காக கடத்தி அவர் வைரப்பல்லை பிடுங்கிய கும்பலை சேர்ந்த ஐந்து பேருக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

லண்டனை சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபரின் மகன் சாலி அல். இவருக்கு லிபன் அலி (24) என்ற நபர் நண்பராகியுள்ளார். சாலி கோடீஸ்வரரின் மகன் என்பதை அறிந்து கொண்ட லிபன் அவர் வாய்க்குள் வைர பல் பொருத்தப்பட்டிருந்ததையும் பார்த்துள்ளார்.

அந்த பல்லை அவரிடம் இருந்து எடுக்கவேண்டும் என லிபனுக்கு ஆசை ஏற்பட்டது. இதையடுத்து தனது நண்பர்கள் துணையுடன் சாலியை கடத்தி £3,000 மதிப்புள்ள அந்த வைரப்பல்லை பிடுங்குவதோடு, அவர் தந்தையிடம் £50,000 பணம் பறிக்கவும் முடிவு செய்தார்.

அதன்படி தனது நண்பர்களான ஆடம் மாலிக் (23), மரின் மஜித் (20), டிரிலோன் (20), ஆகோன் சலியி (23) ஆகியோருடன் சேர்ந்து சாலியை கடத்தி ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு லிபன் கொண்டு சென்றனர். பின்னர் அவர் வாயிலிருந்து வைர பல்லை வெளியில் எடுத்தனர்.

இதையடுத்து சாலி குடும்பத்தாருக்கு போன் செய்து, எங்களுக்கு £50,000 பணத்தை கொடுக்கவில்லை என்றால் அவரை கொன்றுவிடுவோம் என மிரட்டினார். இந்த சூழலில் சாலியை கொடூரமாக தாக்கிய அந்த கும்பல் அவர் மீது கொதிக்கும் நீரை கொட்டி கொடுமைப்படுத்தியது.

பின்னர் இது தொடர்பாக பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் போன் நம்பரை வைத்து பொலிசார் சாலி இருந்த இடத்தை கண்டுபிடித்து அவரை மீட்டு அந்த கும்பலை கைது செய்தனர்.

அவர்கள் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கடத்தலுக்கு உதவியதாக கரீன் டம்பிள் (44) என்ற பெண்ணும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன்படி இந்த கடத்தலுக்கு திட்டம் போட்ட முக்கிய குற்றவாளியான லிபன் அலிக்கு 13 ஆண்டுகள் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மஜித்துக்கு 10 ஆண்டுகள் சிறையும், மாலிக்குக்கு 11 ஆண்டுகள் ஆறு மாதங்கள் சிறையும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சலியிக்கு 9 ஆண்டுகள் சிறையும், டிரிலோனுக்கு 8 ஆண்டுகள் சிறையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட கரீன் என்ற பெண்ணுக்கு இதில் தொடர்பில்லை என கூறி நீதிபதி அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

25 வருடங்களுக்கு முன் மகனை தொலைத்த தாய்க்கு கிடைத்த அதிர்ச்சி!!

தாய்க்கு கிடைத்த அதிர்ச்சி

சீனாவில் தன்னுடைய மகன் என நினைத்து ஒரு ஆண் குழந்தையை வளர்த்து வந்த தாய்க்கு 26 வருடங்களுக்கு பின் பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. சீனாவை சேர்ந்த ஜு ஜியாஜுவான் (53) என்கிற தாய் கடந்த 1992ம் ஆண்டு தன்னுடைய மகனை வீட்டில் வேலை பார்த்த பெண்ணிடம் பறிகொடுத்துள்ளார்.

இதுகுறித்து பொலிஸாரிடம் தகவல் கொடுத்து அவர்களின் முயற்சியுடன் 3 வருடங்களுக்கு பின்னர், குழந்தையை கண்டுபிடித்தார். 1995ம் ஆண்டு ஹெனான் மாகாணத்தில் காணாமல் போய் மீட்கப்பட்ட குழந்தைகளின் விவரங்களை, ஜியாஜுவானிடம் பொலிஸார் கொடுத்துள்ளனர்.

அதில் இருந்த ஒரு குழந்தையின் முகம் தன்னுடன் ஒத்துப்போனதால் அது தன்னுடைய குழந்தை என சந்தேகித்துள்ளார். பின்னர் மேற்கொள்ளப்பட்ட டிஎன்ஏ சோதனையிலும், ஜியாஜுவானின் குழந்தை என முடிவு வந்தது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜியாஜுவானின் பேட்டியை தொலைக்காட்சியில் பார்த்த He Xiaoping (49) என்கிற பெண், அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசினார்.

என்னுடைய இளம்வயதில் எனக்கு பிறந்த இரண்டு ஆண் குழந்தைகள் உயிரிழந்துவிட்டனர். ஜோதிடம் பார்க்கும் ஒருவர் கூறியதை கேட்டு, வீட்டு வேலையாள் போல பொய்யான தகவலின் அடிப்படையில் ஜியாஜுவான் வீட்டில் வேலைக்கு சேர்ந்தேன்.

ஒரு நாள் குழந்தையை சந்தைக்கு என்னுடன் கூட்டி செல்கிறேன் என அவர்களிடம் அனுமதி வாங்கினேன். ஆனால் குழந்தையை சந்தைக்கு எடுத்து செல்லாமல், அருகாமையில் உள்ள வேறு நகரத்திற்கு எடுத்து சென்று, ஜியாஜுவான் வீட்டிற்கு திரும்பவில்லை.

அந்த குழந்தையை என்னுடைய மகன் போலவே வளர்த்தேன். அவன் வந்த நேரம் எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவனும் சொந்த அம்மாவை போலவே நினைத்தான்.

சமீபத்தில் ஜியாஜுவானின் பேட்டியை தொலைக்காட்சியில் பார்த்தேன். நான் செய்த தவறு என் மனதை வருட ஆரம்பித்துவிட்டது. காணாமல் போன அவர்களுடைய குழந்தை என்னிடம் தான் உள்ளது. அவர்களிடம் சேர்க்க உதவி செய்யுங்கள் என தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியானது அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், He Xiaoping-விடம் இருந்த லியு ஜின்ஸின் (26) என்கிற குழந்தை தான் உண்மையான குழந்தை என்பதும், 1993-ல் அரசாங்க ஊழியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தை சொந்த குழந்தை இல்லை என்பதும் தெரியவந்தது.

இதனால் கடும் கோபத்திற்குள்ளான ஜியாஜுவான், என் மகனை திருடி சென்றதற்காக நான் He Xiaoping-ஐ மன்னித்து விடுகிறேன். ஆனால் தவறு செய்த அரசு ஊழியர்கள் மற்றும் டிஎன்ஏ பரிசோதனையால் நான் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகிவிட்டேன்.

இதற்கு இழப்பீடாக 2.95 மில்லியன் (£ 336,000) யூரோ வழங்க வேண்டும் என வழக்கு தொடர்ந்திருந்தார். அதனை கேட்டறிந்த நீதிபதி, 1995ம் ஆண்டு போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் தவறுதலாக முடிவு வந்திருக்கலாம் எனக்கூறி வழக்கின் திகதியை மாற்றி அறிவித்து உத்தரவிட்டார்.

திருமண யோசனையை ஏற்க மறுத்த பெண் கொலை!!

பெண் கொலை

சூரியவெவ – பெத்தேவெவ பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

28 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். தன்னை திருமணம் செய்துக் கொள்ளுமாறு 65 வயதுடைய நபரொருவர் குறித்த பெண்ணை பல தடவைகளை தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று பெண்ணின் வீட்டுக்கு வந்து மீண்டும் திருமண யோசனையை முன்வைத்துள்ளார். இதற்கு பெண் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில் இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது , பெண் குறித்த நபரின் கன்னத்தில் அறைந்துள்ளதாக தெரிகிறது. இதனால் கோபமுற்ற மேற்படி நபர் நேற்று பிற்பகல் குறித்த பெண் வீதியில் சென்றுக் கொண்டிருந்த போது உந்துருளியொன்றில் வந்து அவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.

அதனை தொடர்ந்து சந்தேகநபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் , அவரை கைது செய்வதற்காக காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதேவேளை குறித்த பெண்ணின் உறவினர்கள் சந்தேகநபரின் வீட்டை சேதப்படுத்தியுள்ளனர்.

வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் கால்வாயில் பாய்ந்த கார்!!

கால்வாயில் பாய்ந்த கார்

காலி தெற்கு கடற்படை முகாமிற்கு அருகில் பெண்ணொருவரால் செலுத்தப்பட்ட கார் ஒன்று பாலத்தில் மோதி கால்வாயில் வீழ்ந்துள்ளது. காரின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் நேற்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து ஏற்படும் போது குறித்த பெண்ணும், அவரது தந்தை மாத்திரமே காரில் இருந்துள்ள நிலையில், அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும் காருக்கும், பாலத்திற்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. விபத்து சம்பவம் தொடர்பில் காலி போக்குவரத்துப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விமான கழிவறையில் எழுதப்பட்ட ஒரு வாசகம் : தொழிலதிபரின் தலையெழுத்து மாறிப்போனது!!

கழிவறையில் எழுதப்பட்ட வாசகம்

2017 ஆம் ஆண்டு விமான கழிவறையில் எழுதி வைத்த ஒரு வாசகத்தால் மும்பை தொழிலதிபரின் தலையெழுத்து மாறிப்போனது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. பிர்ஜு சல்லா என்கிற தொழிலதிபர் 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் திகதியன்று, மும்பை-டெல்லி நடுவே இயக்கப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானம் 9w339ல் பயணித்துள்ளார்.

அந்த பயணத்தின்போது, விமானத்தை கடத்தப்போவதாக ஆங்கிலம் மற்றும் உருது ஆகிய மொழிகளில் எழுதி அந்த பேப்பரை பொருளாதார பிரிவில் உள்ள கழிவறையில் வைத்துள்ளார்.மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு விமானம் கடத்தப்படும் என்றும் அல்லா சிறந்தவர் எனவும் இவர் எழுதிவைத்துள்ளார். இந்த வாசகத்தால் விமானம் அவசரமாக அகமதாபாத்தில் தரையிறக்கப்பட்டு விசாரணை நடத்தியதில், இது சல்லாவின் விளையாட்டு என தெரியவந்து அவர் கைது செய்யப்பட்டார்.

டெல்லியில் உள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் தனது காதலி பணியாற்றி வருவதாகவும், இப்படி ஒரு மிரட்டல் விடுத்தால் டெல்லி விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு, காதலி, மும்பை அலுவலகத்திற்கே வருவார் என்ற ஆசையில் இப்படி ஒரு விபரீதமான செயலை செய்துள்ளார் என அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட கடந்த இரண்டு ஆண்டுகளாக வழக்கு விசாணை நடைபெற்று வந்த நிலையில், குற்றவாளியான பிர்ஜு சல்லாவுக்கு 5 கோடி அபராதமும், ஆயுள் தண்டனையும் விதித்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த அபராதத் தொகை குறித்த விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும், ஊழியர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எந்த ஒரு விமானத்திலும் பறக்க முடியாது என்ற பட்டியலில் பிர்ஜு சல்லா கொண்டு வரப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைப் பெண்ணிடம் மனதை பறிகொடுத்த இந்திய இளைஞர் : அழகான காதல் கதை!!

அழகான காதல் கதை

இலங்கையை சேர்ந்த பெண்ணுடன் இந்திய இளைஞருக்கு டுவிட்டர் பதிவின் மூலம் காதல் ஏற்பட்ட நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.

இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் கோவிந்த் பிரகாஷ் (26). இவர் கடந்த 2015-ல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் பதிவிட்ட ஒரு டுவீட்டை லைக் செய்தார். அதே டுவீட்டை இலங்கையை சேர்ந்த ஹன்சினி எதிர்சின்கே (25) என்ற இளம்பெண்ணும் லைக் செய்தார்.

பின்னர் ஹன்சினியின் டுவிட்டர் பக்கத்தில் சென்று அவருடன் முதலில் நட்பாக பேசினார் கோவிந்த். பின்னர் இருவரும் நெருங்கிய நண்பர்களாகி அது காதலாக மாறியது. இரண்டு ஆண்டுகள் கழித்து 2017ல் ஹன்சினி இந்தியாவுக்கு வந்த நிலையில் முதல்முறையாக பிரகாஷை சந்தித்தார்.

இதையடுத்து இந்தியாவில் தங்கி முதுகலை பட்டப்படிப்பை படித்த ஹன்சினி தனது பெற்றோரிடம் தனது காதல் குறித்து பேசினார். இந்நிலையில் காதலுக்கு அவர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 10ஆம் திகதி மத்திய பிரதேசத்தில் கோவிந்த் – ஹன்சினி திருமணம் நடைபெற்றது.

மணப்பெண் உறவினர்கள் 15 பேர் திருமணத்தில் கலந்து கொண்ட நிலையில், மணமகன் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் திருமணத்தில் கலந்து கொண்டனர். தற்போது சண்டிகர் நகரில் புதுமண தம்பதிகள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் கோவிந்த் – ஹன்சினியின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.