கனடாவில் அமுலுக்கு வரும் புதிய தடை : பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ அறிவிப்பு!!

மீள்சுழற்சி செய்ய முடியாத மற்றும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்போவதாக கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது.

2021ம் ஆண்டு முதல் இது குறித்த தடை அமுலுக்கு வரவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“கனடாவில் 10 சதவீதத்துக்கும் குறைவான பிளாஸ்டிக் தான் மறுசுழற்சி செய்யப்படுகிறன. ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சத்துக்கும் அதிகமான பறவைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் பிளாஸ்டிக் கழிவுகளால் பாதிப்புக்கு உள்ளாகின்றன.

இந்நிலையில், 2021ம் ஆண்டு முதல் கனடாவில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும், ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய அனைத்து பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடைவிதிக்கப்படவுள்ளதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் தமிழன் குண்டு மீட்பு!!

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அம்பலவன் பொக்கணை பகுதியில் விடுதலைப்புலிகளின் இரண்டு தமிழன் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

அம்பலவன் பொக்கணை பகுதியில் நேற்யை தினம் காணியினை சுத்தம் செய்துகொண்டிருக்கும் போது நிலத்தில் புதைந்த நிலையில் இரண்டு தமிழன் குண்டுகள் காணப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், குறித்த இடத்திற்கு வருகைதந்த பொலிஸார் தமிழன் குண்டினை அடையாளப்படுத்தி நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக அதனை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் ஆண்களின் மர்ம உறுப்பை அறுக்கும் சைக்கோ : புகைப்படம் வெளியீடு!!

மர்ம உறுப்பை அறுக்கும் சைக்கோ

சென்னை மாதாவரம், ரெட்டேரியில் தன்பாலின உறவுக்கு அழைத்து 2 பேரின் பாலுறுப்பை அறுத்த நபரை தேடி வந்த பொலிசார் தற்போது அவரது நடமாட்டம் அடங்கிய சிடிடிவி காட்சியை வெளியிட்டுள்ளனர்.

கடந்த மாதம் 26-ம் திகதி இரவு ரெட்டேரி பாலத்தின் அடியில் படுத்திருந்த அசதுல்லா என்பவரின் பாலுறுப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்டார்.

அவர் தானே தனது உறுப்பை அறுத்துக்கொண்டதாக தெரிவித்தார். சில நாட்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பொலிசாரும் அதை தற்கொலை என முடிவு செய்து வழக்கை முடித்தனர்.

இந்நிலையில் அதே இடத்தில் ஒருவாரம் கழித்து ஜூன் 2-ம் திகதி நாராயணபெருமாள் என்பவரின் உறுப்பு துண்டிக்கப்பட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரே இடத்தில் ஒரே மாதிரி சம்பவம், ஒரே மாதிரி உள்ளதை கண்டு சந்தேகமடைந்த பொலிசார் நாராயணபெருமாளிடம் விசாரித்தனர்.

அவர் அளித்த வாக்குமூலத்தில் தன்பாலின உறவில் ஈடுபட்டபோது அந்த நபர் மது போதையில் இருந்த எனது உறுப்பை அறுத்துவிட்டார் என தெரிவித்திருந்தார். அப்படியானால் அசதுல்லாவும் இதேப்போன்று தன்பாலின சேர்க்கையின்போது ஆணுறுப்பு அறுக்கப்பட்டிருக்கவேண்டும் என முடிவுக்கு வந்த பொலிசார் இது குறித்து விசாரித்தனர்.

அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், நாராயண பெருமாள் சொன்ன அடையாளத்துடன் உறுப்பை அறுத்த நபர் நடமாடும் காட்சி பதிவாகி இருந்தது. வேட்டி, வெள்ளைச் சட்டை அணிந்தபடி நடமாடும் அந்த நபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிசார் அந்த சைக்கோ நபர் குறித்து தகவல் தெரிவிந்தால் உடனடியாக தங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்

வவுனியாவில் வீதியில் சென்ற பெண்ணிடம் சேட்டை புரிந்த இளைஞர்கள் : தட்டிக்கேட்ட தந்தை உட்பட இருவர் மீதும் தாக்குதல்!!

பெண்ணிடம் சேட்டை புரிந்த இளைஞர்கள்

வவுனியா எல்லப்பர் மருதங்குளம் பகுதியில் பெண்ணிடம் சேட்டை புரிந்த இளைஞர்களின் செயற்பாட்டினை தட்டிக்கேட்ட குறித்த பெண்ணின் தந்தை மற்றும் அவரது அண்ணணின் நண்பன் மீதும் குறித்த இளைஞர்கள் தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பித்து சென்றுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா சிதம்பரபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்லப்பர் மருதங்குளம் 8ம் ஒழுங்கையில் குறித்த பெண் கடந்த 09.06.2019 அன்று இரவு அவரது தந்தையுடன் அயலில் உள்ள பூப்புனித நீராட்டு விழாவிற்கு சென்றுள்ளார். அப்போது அவ் வீதியில் நின்ற இளைஞர்கள் குறித்த பெண்ணை கிண்டல் செய்ததுடன் கையை பிடிக்கவும் முயன்றுள்ளனர்.

இதன் போது குறித்த பெண்ணின் தந்தை அவ் இளைஞர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட சமயத்தில் அவ் இளைஞர்களில் ஒருவர் பெண்ணின் தந்தை மீது கட்டையினால் தலையில் தாக்கியுள்ளார். அதையடுத்து அருகில் நின்ற மற்றைய இளைஞர்களும் அவர்கள் கையில் வைத்திருந்த தலைக்கவசத்தினால் பெண்ணின் தந்தை மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதையடுத்து குறித்த பெண் வீட்டிற்கு சென்று அவரது அண்ணணின் நண்பனை அழைத்துள்ளார். பெண்ணின் தந்தையினை காப்பாற்ற வந்த குறித்த பெண்ணின் அண்ணணின் நண்பன் மீது அவ் இளைஞர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதன்போது அயலவர்கள் ஒன்று கூடியதையடுத்து அவ் இளைஞர்கள் அவ்விடத்தினை விட்டு தப்பித்துச் சென்றுள்ளனர்.

அயலவர்களின் உதவியுடன் படுகாயமடைந்த நிலையில் காணப்பட்ட பெண்ணின் தந்தை மற்றும் அண்ணனின் நண்பன் ஆகியோர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் சுயநினைவினை இழந்த நிலையில் பெண்ணின் தந்தை அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக சம்பவம் இடம்பெற்ற அன்றையதினமே (09.06.2019) வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதுடன் தாக்குதல் மேற்கொண்ட இளைஞர்களின் புகைப்படம் மற்றும் அவர்களின் தகவல்கள் அனைத்தும் பொலிஸாருக்கு வழங்கிய நிலையிலும் நான்கு நாட்கள் கடந்தும் பொலிஸார் எவ்வித நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை.

இந் நிலையில் இன்றையதினம் பொலிஸாரின் தமிழ் மொழி மூல முறைப்பாட்டு பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டதுடன் குறித்த பெண்ணின் தந்தை மற்றும் அண்ணணின் நண்பன் மீது தாக்குதல் மேற்கொண்ட இளைஞர்களில் ஒருவரை அக்கிராம இளைஞர்கள் சூசகமாக முறையில் ஓர் இடத்திற்கு வரவழைத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அவ்விடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் அவ் இளைஞனை வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன் அவரது உதவிடன் மேலும் ஒர் இளைஞனையும் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவ் இரு இளைஞர்களையும் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

அன்று கர்ப்பிணியாக சாலையில் வசித்த லண்டன் பெண் : இன்று கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் ஆச்சரியம்!!

சாலையில் வசித்த லண்டன் பெண்

லண்டனில் இளம்பெண்ணொருவர் கர்ப்பமானதால் வீட்டை விட்டு வெளியில் துரத்தப்பட்ட நிலையில் தற்போது தொழிலதிபராகி கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். லண்டனை சேர்ந்த யேமி பென் (24) என்ற இளம்பெண் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணத்துக்கு முன்னரே கர்ப்பமானார். இதையடுத்து அவரின் தாய் மற்றும் குடும்பத்தார் அவரை வீட்டிலிருந்து வெளியில் துரத்தினார்கள். பின்னர் ஒரு மாதத்துக்கு மேலாக சாலையில் அவர் வசித்தார்.

யேமி கூறுகையில், வயிற்றில் குழந்தையை சுமந்து கொண்டு சாலையில் வசித்த நாட்கள் கொடுமையானவை என கூறுகிறார். யேமியின் காதலரும் அவரை கைவிட்ட நிலையில் நபர் ஒருவரின் நட்பு யேமிக்கு கிடைத்தது. இந்த சமயத்தில் தான் லீ என்ற பெண் குழந்தையை அவர் பெற்றெடுத்தார்.

பின்னர் நட்பான நபருடன் அவருக்கு காதல் ஏற்பட்ட நிலையில் அவரையே யேமி திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து லண்டனில் இனி வாழவேண்டாம் என நினைத்து அவுஸ்திரேலியாவுக்கு சென்றார். அங்கு பொறியியல் பட்டதாரியா யேமி ஆலோசனை நிறுவனத்தை தொடங்கினார்.

அவரின் திறமையால் ஆலோசனை நிறுவனம் பெரிய அளவில் வளர தொடங்கியது. தற்போது அந்த நிறுவனம் மூலம் அவருக்கு கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது. பின்னர் தனது சொந்த ஊரான லண்டனுக்கு வந்த யேமி அங்கு ஜிம் எனப்படும் உடற்பயிற்சி கூடத்தை தொடங்கினார்.

அந்த தொழிலிலும் தனது திறமையை வெளிப்படுத்த தொடங்கிய நிலையில் அவருக்கு பணம் குவிய தொடங்கியது. இரண்டு தொழிலிலும் சேர்ந்து யேமிக்கு வருடத்துக்கு £900,000 வருமானம் வருகிறது. தனது கணவருடன் அவருக்கு ஆண் குழந்தையும் பிறந்து அவனுக்கு ஐந்து வயதாகிறது.

யேமி கூறுகையில், தன்னம்பிக்கை தான் என்னை இந்தளவுக்கு கொண்டு வந்தது. எந்த தாய் என்னை வீட்டை விட்டு துரத்தினாரோ அவர் என்னை பார்த்து இன்று பெருமை கொள்கிறார். பயமில்லாமல் நம் இலக்கை நோக்கி பயணித்தால் வெற்றி நிச்சயம் என கூறியுள்ளார்.

மகள் கழுத்தில் தாலி ஏறும் நேரத்தில் தற்கொலை செய்து கொண்ட தந்தை : அதிர்ச்சிக் காரணம்!!

தற்கொலை செய்து கொண்ட தந்தை

மகள் திருமணத்தன்று தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவபிரசாத். இவருக்கு நீது என்ற மகள் உள்ளார். இந்நிலையில் நீதுவிற்கு கடந்த ஞாயிற்றுக் கிழமை சாத்தனூர் பகுதியில் இருக்கும் ஆனந்த விலாசம் பகவதி கோவிலில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திருமணத்தின் போது மகள் ஆசைப்பட்டாள் என்பதற்காக அவள் கேட்ட நகையை அப்படியே போட வேண்டும் எனவும், மாப்பிள்ளை வீட்டாரின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் எனவும் நகை எடுப்பதற்காக தன்னுடைய வீடு மற்றும் நிலங்களை விற்க முடிவு செய்துள்ளார்.

ஆனால் அந்த முயற்சிகள் திருமணம் நெருங்கும் வேலையில் தோல்வியடைய கடும் விரக்தியில் இருந்துள்ளார், இதற்கிடையில் அவர் வங்கியில் வாங்கிய கடனுக்காக வங்கி அதிகாரிகள் அவரின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளனர்.

இதை அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். காலை 5.30 மணிக்கு திருமணத்திற்காக உறவினர்கள் பலரும் கூடியிருக்கும் நிலையில், சிவபிரசாத் பாத்ரூமிற்கு சென்று திரும்புவதாக கூறியுள்ளார்.

ஆனால் வெகு நேரம் ஆகியும் அவர் திரும்பாததால், உறவினர்கள் பலரும் அவரை தேடியுள்ளனர். இறுதியில் தன்னுடைய பழைய வீட்டில் சிவபிரசாத் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இருப்பினும் இது குறித்து மகளிடம் தெரிவிக்காமல் இந்த திருமணத்தை உறவினர்கள் நடத்தியுள்ளனர். மாப்பிள்ளை வீட்டார் அந்த அளவிற்கு நகைகள் போட முடியவில்லை என்றாலும் பரவாயில்லை என்று இவரின் சூழ்நிலையை அறிந்து முன்பே தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனினும் சிவபிரசாத் எடுத்த திடீர் முடிவு அவரது குடும்பத்தினருக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நள்ளிரவில் 80 இளம் பெண்களுடன் சிக்கிய இளைஞர்கள்!!

சிக்கிய இளைஞர்கள்

தமிழகத்தில் 80 பெண்களுடன் ஜோடியாக ஆட்டம் போட்ட ஐ.டி.ஊழியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தில் சில தகவல்கள் வெளிவந்துள்ளன. விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அடுத்த ஆலங்குப்பத்தில் உள்ள முந்திரி தோப்புக்குள் அரோ டிஜே நைட் என்ற பெயரில் ஆபாச நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக விழுப்புரம் பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலையிலான காவல்துறையினர் ஒரு கிலோ மீற்றர் தூரம் நடந்தே சென்று நள்ளிரவில் மதுபோதையில் ஆட்டம் போட்ட வெளிநாடு மற்றும் வெளியூரைச் சேர்ந்த 80 ஜோடிகளை சுற்றிவளைத்தனர்.

சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கிவைத்திருந்த நிகழ்ச்சிப் பொறுப்பாளர் மணப்பாக்கம் யுவராஜ் கைது செய்யப்பட்டார். பெட்ரோமாக்ஸ் லைட் வெளிச்சத்தில் கஞ்சா விற்பனை செய்ததாக 5 பேர் சிக்கினர். பெட்ரோமாக்ஸ் லைட் பறிமுதல் செய்யப்பட்டது. பொலிசாரிடம் சிக்கிய 80 பெண்களை அவர்களது எதிர்காலம் கருதி எச்சரித்து அனுப்பிய காவல்துறையினர், ஐ.டி ஊழியர்கள், மருத்துவ மாணவர்கள் உள்ளிட்ட 15 பேரை கைது செய்தனர்.

இவர்களில் சினிமா உதவி இயக்குனர் ஒருவரும் அடங்குவார். தனது கதையில், காட்டில் வரும் நள்ளிரவு நடனக் காட்சியை படம் பிடிப்பது தொடர்பாக ஆய்வுசெய்ய தனது ஜோடியுடன் வந்ததாக அவர் நடித்துப் பார்த்தும் பலன் அளிக்கவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மணப்பாக்கம் யுவராஜின் பேச்சை நம்பி ஆன்லைனில் 1,000 ரூபாய் செலுத்தி பொலிஸ் வலையில் சிக்கி உள்ளனர் இந்த உல்லாச விரும்பிகள். தமிழக பொலிசாரின் எல்லை என்பதை மறந்து, முந்திரிக்காட்டிற்குள் இந்த நள்ளிரவு நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார் யுவராஜ்.

கொலை, கடத்தல் , பாலியல் அத்துமீறல்கள் போன்றவை நடக்க நடன நிகழ்ச்சிகள் காரணமாக அமைந்து விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் இத போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை வெளியூர்வாசிகள் தவிர்க்குமாறு காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

109மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்ட குழந்தை : பின்னர் நடந்த சோகம்!!

நடந்த சோகம்

பஞ்சாப்பில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த 2 வயது ஆண்குழந்தை, 109 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்ட நிலையில், அவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Sangrur மாவட்டத்தின் பகவான்புரா கிராமத்தில், 2 வயது குழந்தை ஃபதேவீர் சிங், கடந்த 6ஆம் திகதி மாலை 4 மணியளவில் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தான். அருகில் 7 அங்குல அகலம் மட்டுமே கொண்ட ஆழ்துளைக் கிணறு துணியால் மூடிவைக்கப்பட்டிருந்த நிலையில், கவன குறைவில் குழந்தை விழுந்துவிடவே, தாய் காப்பாற்ற முயன்றுள்ளார்.

ஆனால் ஆழ்துளைக் கிணற்றுக்குள் 125 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்ட குழந்தையை மீட்க, தொடர்ந்து 5 நாட்களாக முயற்சி நடைபெற்றது. அந்த குழந்தைக்க உணவோ தண்ணீரோ வழங்க முடியாத நிலையில் ஆக்சிஜன் மட்டும் தொடர்ந்து செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், 109 மணி நேரத்திற்குப் பிறகு இன்று அதிகாலை(11.06.2019) 5.30 மணியளவில் ஃபதேவீர் சிங் மீட்கப்பட்டு.

அங்கேயே முகாமிட்டிருந்த மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனையில் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக சிறுவனின் இரண்டாவது பிறந்தநாள் ஜூன் 10ஆம் திகதிதான் என்று அவன் பெற்றோர் கலங்கி நின்ற நிலையில். மீட்கப்பட்டும் குழந்தையை காப்பாற்ற முடியாதது, அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

கோவில் பெண் சிலைகளுக்கு கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்த இளைஞன் சொன்ன காரணம்!!

சிலைகளுக்கு முத்தம் கொடுத்த இளைஞன்

தமிழகத்தைச் சேர்ந்த இளைஞன் கோவிலில் இருந்த பெண் சிலைகளுக்கு முத்தம் கொடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கைது செய்யப்பட்ட இளைஞன் ரம்ஜான் கொண்டாட்டத்திற்காக அப்படி செய்ததாக பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுரையைச் சேர்ந்த முஜிபுர் ரஹ்மான் என்ற இளைஞன் திருச்சியில் உணவுகளை விநியோகிக்கும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் ரம்ஜான் தினத்தை கொண்டாடுவதற்காக கடந்த புதன் கிழமை தஞ்சாவூரில் இருக்கும் 1000 ஆண்டுகள் பழமையான தஞ்சை பெரிய கோவில் உள்ளது. இதை பிரகதீஸ்வரர் கோவில்“ என வடமொழியிலும், பெருவுடையார் ஆலயம் என தமிழிலும் கூறுவர்.

இவ்வளவு பெருமை வாய்ந்த இந்த கோவிலுக்கு சென்ற முஜிபுர் ரஹ்மான் அங்கிருந்த பெண் கோவில் சிலைகளுக்கு முத்தம் இடுவது போன்ற புகைப்படங்களை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால், அந்த நபர் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் அவர் ரம்ஜான் கொண்டாட்டத்திற்காக அப்படி செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

என்னை கொலைசெய்ய போகின்றார்கள் : கதறிய இளம்பெண் : பதறவைக்கும் வீடியோ!!

கதறிய இளம்பெண்

தமிழகத்தில் ஓடும் காரில் இருந்து பெண் ஒருவர் வெளியே தள்ளிவிடப்படும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ள நிலையில் கீழே விழுந்த பெண் கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார். இது தொடர்பாக கோவையை சேர்ந்த ஆர்த்தி என்பவர் கூறுகையில், கடந்த மாதம் தனது கணவரும் அவர்களது பெற்றோரும், தன்னை ஓடும் காரில் இருந்து வெளியே தள்ளிவிட்டதாகவும் தன்னை கொல்ல முயற்சித்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் நீண்ட நாட்களாக கணவர் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், இதன் காரணமாக கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்ததாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, தனது 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு ஆர்த்தி தனது கணவருடன் சேர்ந்து வாழ சென்றுள்ளார். ஆனால் ஆர்த்தியின் கணவர் அருண் மீண்டும் அவரை கொடுமைப்படுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து, ஊட்டி காவல் நிலையத்தில் கணவருக்கு எதிராக புகார் அளித்துள்ளார் ஆர்த்தி.

பின்னர் பொலிசாரின் சமரச பேச்சுவார்த்தையை தொடர்ந்து, அருண் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துள்ளார். இந்நிலையில் தனது பெற்றோரிடம் இருந்து ஆர்த்தியை தனியாக வைப்பதாக எழுதி கொடுத்த அருண், கடந்த மாதம் 9ஆம் திகதி கோவையில் தனது பெற்றோரை காரில் அழைத்துக் கொண்டு வந்துள்ளார்.

அப்போது காரில் வாக்குவாதம் ஏற்பட ஆர்த்தி காரிலிருந்து வெளியே தள்ளி விடப்பட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில் ஆர்த்தி கணவர் மற்றும் அவர் குடும்பத்தார் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பேஸ்புக்கில் வெளியான தனது புகைப்படத்தை பார்த்து அதிர்ந்த மாணவி : நடந்த விபரீதம்!!

நடந்த விபரீதம்

தமிழகத்தில் ஆபாசமாக சித்தரித்து பேஸ்புக்கில் தனது புகைப்படம் வெளியானதால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் அந்த அதிர்ச்சியில் அவரின் மாமன் மகனும் உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்தவர் ராதிகா (22). இவர் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் ராதிகாவின் புகைப்படத்தை அதே பகுதியை சேர்ந்த 21 வயதுடைய வாலிபர் ஒருவர் ஆபாசமாக சித்தரித்து பேஸ்புக்கில் வெளியிட்டதாக தெரிகிறது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராதிகா மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். மேலும் இதை அவமானமாக கருதிய அவர் நேற்று மதியம் 3 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனிடையே வெளியே சென்றிருந்த ராதிகாவின் பெற்றோர் வீட்டிற்கு வந்தபோது ராதிகா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர். இதுபற்றி தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து ராதிகாவின் உடலை கைப்பற்றி, பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே பார்வதிபுரத்தை சேர்ந்த ராதிகாவின் தாய்மாமன் விக்னேஷ் (21) என்பவர், ராதிகா தற்கொலை செய்து கொண்டதை அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் விக்னேஷ் அங்குள்ள தோப்பில் உள்ள வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து பொலிசார் விக்னேஷின் சடலத்தை கைப்பற்றிவிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடையில் வேலை செய்த திருமணமான பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை : நேரலையில் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!!

அதிர்ச்சி வீடியோ

தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் நேரலையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வதற்கான காரணத்தை கண்ணீருடன் கூறிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் காரைக்குடி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகா. திருமணம் முடிந்து குழந்தைகளுடன் இருக்கும் இவர் பேஸ்புக் நேரலை ஒன்றில் நான் தற்கொலை செய்வதற்கு யார் காரணம்? என்பதை கண்ணீருடன் கூறியுள்ளார்.

அதில், எனது பெயர் கார்த்திகா. நான் காரைக்குடியில் உள்ள தனியார் ஷோரூமில் பணியாற்றி வருகிறேன். என்னுடன் பணியாற்றும் சக ஊழியர்களான அமுதா, வைரவன், சபரி, செபாஸ்டின் ஆகிய நால்வரும் சேர்ந்து எனக்கு பாலியல் தொல்லை கொடுக்கின்றனர்.

என்னிடம் வந்து ஒரு மணி நேரத்திற்கு 1000 ரூபாயா அல்லது 2000 ரூபாயா என்று மறைமுகமாகவும் நேரடியாகவும் பலமுறை கேட்டு உள்ளனர். இந்த இளைஞர்களுக்கு ஒத்துழைக்கும் ஒரு பெண் ஒருவர் என்னிடம் வந்து, நீ தற்போது அவர்களின் ஆசைக்கு இணங்கு, அவ்வாறு இணங்கினால் நீ வாழ்க்கையில் பெரிய இடத்திற்குச் சென்று விடலாம் என்று கூறி என்னை மிரட்டி வருகிறார்‌.

இது மட்டுமல்லாது எனது கணவருக்கு தொடர்பு கொண்ட அமுதா, எனக்கு முறையற்ற பழக்கம் நிறைய ஆண்களுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் என்னிடமிருந்து விலக துவங்குகிறார். இவர்களின் கொடூர எண்ணத்தாலும் பேச்சுக்களாலும் நான் கடுமையான மன வேதனை அடைந்துள்ளேன். அந்த அமுதா பெண் உண்மையிலே தவறான பழக்கம் உடையவராவார்.

இவர்கள் அனைவரும் சேர்ந்து எனது வாழ்க்கையை சீரழிக்க முடிவு செய்து இந்த செயலை அரங்கேற்றி உள்ளனர். இதனால் நான் கடுமையான மன வேதனையில் தற்போது தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுத்துக் கொள்கிறேன்.

என்னை உங்களின் தாயாக சகோதரியாக தங்கையாக நினைத்து அவர்களுக்கு தக்க தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று விரும்பி எனது இறுதி முடிவுகள் எடுத்துக் கொள்கிறேன் என்று கூறி கடைசியாக வாங்கி வைத்திருந்த விஷத்தை அருந்துகிறார்.

இது குறித்த வீடியோ பதிவுகள் வெளியான நிலையில், தற்போது வரை இந்த பிரச்சனை குறித்து எந்தவிதமான தகவலும் வெளியாகவில்லை. பொலிசார் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனரா என்பது குறித்தும் தெரியவில்லை.

காணாமல்போன தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரின் சடலத்தை தேடும் பணி பொது மயானத்தில்!!

பொலிஸ் உத்தியோகத்தர்

காணாமல்போன பொலிஸ் உத்தியோகத்தரின் சடலத்தை தேடும் பணி மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை, முனைக்காடு பொது மயானத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த 2008ஆம் ஆண்டு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த கிரான் குளத்தை சேர்ந்த பிரசன்னா என்ற பொலிஸ் உத்தியோகத்தர் கடமை முடிந்து பொலிஸ் நிலையத்திலிருந்து வீடு திரும்பிய நிலையில் காணாமல் போயிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் மூவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டிருந்தனர். இந்த விசாரணைகளிலிருந்து காணாமல்போன பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் முனைக்காடு பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்தே அப்பகுதியில் சடலத்தை தேடுவதற்கான அனுமதியை குற்ற புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் கோரியிருந்தனர்.

இதன் பின் மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.ரிஷ்வான் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை, கொழும்பு ஆகிய பகுதிகளிலிருந்து வருகை தந்த வைத்திய அதிகாரிகள், குற்ற புலனாய்வு பிரிவினர் முன்னிலையில் அங்கு தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

முல்லைத்தீவில் மரத்தில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!!

இளைஞனின் சடலம் மீட்பு

முல்லைத்தீவு, செம்மலை கிழக்கு பகுதியில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. செம்மலை கிழக்கு பகுதியை சேர்ந்த ஆரோக்கியநாதர் கபிலன் என்ற 19 வயது இளைஞரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

வீட்டுக்கு அண்மையாக உள்ள களப்பு ஒன்றின் அருகில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கியவாறு குறித்த இளைஞரின் சடலம் இருப்பதை கண்ட சிறுவன் உயிரிழந்த இளைஞனின் வீட்டாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வருகை தந்த முல்லைத்தீவு பொலிஸார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி, விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்காக சடலத்தை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்து சென்றுள்ளனர்.

குறித்த மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் 2 வருடங்களுக்கு முன்னர் குறித்த இளைஞனின் சகோதரன் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு புன்னைநீராவியடி கிராமத்திற்குள் யானைகள் அட்டகாசம்!!

யானைகள் அட்டகாசம்

முல்லைத்தீவு – விசுவமடு, புன்னைநீராவியடி கிராமத்திற்குள் யானைக்கூட்டம் புகுந்து விவசாயிகளின் வாழ்வாதார பயிர்செய்கைகளை சேதப்படுத்தியுள்ளன. இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

தென்னை மரங்கள் உள்ளிட்ட பயன்தரும் வாழ்வாதாரப் பயிர்ச்செய்கைகளை சேதப்படுத்தியமையினால் அப்பகுதி விவாசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வவுனியாவில் வறட்சி காரணமாக 40 குடும்பங்கள் பாதிப்பு!!

வறட்சி

வவுனியா மாவட்டத்தில் நிலவும் தொடர் வறட்சி காரணமாக 40 குடும்பங்களை சேர்ந்த சுமார் 109 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ பிரிவின் இன்றைய தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில நிலவும் கடுமையான வறட்சி காரணமாக வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு, வவுனியா ஆகிய பிரதேசங்களில் இதுவரை 40 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் 12,768 குடும்பங்களை சேர்ந்த 40,098 பேரும், மன்னார் மாவட்டத்தில் 16,243 குடும்பங்களை சேர்ந்த 56,324 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 4771 குடும்பங்களை சேர்ந்த 16,636 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.