யாழ்.நகா் பகுதியை அண்டிய தீவு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு அபாயகரமான வெடிபொருட்களை படையினா் மற்றும் பொலிஸாா் இணைந்து மீட்டிருக்கின்றனா்.
இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் பொலிஸாா் மற்றும் இராணுவத்தினா் இணைந்து இந்த சோதனை நடாத்தியிருந்தனா்.
இதன்போது மிக அபாயகரமான பெருந்தொகை வெடிபொருட்களை பொலிஸாா் மீட்டிருக்கின்றனா். இதனுள் டெட்டனேட்டா்கள், சீ-4 வெடி மருந்து மற்றும் பல வெடிமருந்துகள் பாதுகாப்பாக பொதி செய்யப்பட்டு புதைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டிருக்கின்றன.
கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட ஈஸ்டர் தின தற்கொலை குண்டுத் தாக்குதல்களை அவ்வளவு எளிதில் யாராலும் கடந்து செல்ல முடியாது.
எண்ணற்ற உயிர்களை குறித்த தாக்குதல்கள் பலியெடுத்ததுடன் மனதில் இருந்து அகழா நிரந்த துன்பத்தையும் எமக்கு தந்து விட்டுதான் சென்றிருக்கின்றது.
ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி மூன்று தேவாலயங்கள் உள்ளிட்ட எட்டு இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 250இற்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன் பெருமளவானோர் படுகாயமடைந்து இன்றும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த தாக்குதலுடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் அதே சமயம் இந்த தாக்குதல் அரசியல் ரீதியிலும் பாரிய மாற்றங்களை விளைவித்துள்ளது.
இந்நிலையில் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலின் பின்னர் குறித்த ஆலயம் மீள் கட்டுமானத்திற்கு உட்படுத்தப்பட்டு நேற்று முன்தினம் மீளவும் மக்கள் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
எனினும், ஆலயத்தின் பல பகுதிகளும் சீர் செய்யப்பட்டாலும் தற்கொலை குண்டுதாரி நின்று வெடிகுண்டினை வெடிக்கச் செய்த அந்த ஒரு இடம் மாத்திரம் சீரமைக்கப்படாமல் அவ்வாறே விடப்பட்டுள்ளது.
சிறு சிறு துளைகளுடன் காணப்படும் அந்த இடத்தை பார்க்கும் அனைவருக்கும் இலங்கையை உலுக்கிய அந்த கோரச் சம்பவம் நினைவிற்கு வந்து செல்லும். பாரிய அழிவு ஒன்றின் சாட்சியமாக வேதனை தரும் வரலாற்றுச் சின்னமாக இந்த இடம் மாற்றம் பெறுகின்றது.
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டிக்கோயா, தரவளை விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் போது இரு குழுக்களுக்கு இடையில் கடந்த 9 ஆம் திகதி மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
இந்த மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர்கள் 6 பேரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் ஏனைய 5 சிறுவர்களை, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை வைக்குமாறும் ஹட்டன் நீதிமன்ற நீதவான் ஜயராமன் டொர்க்சி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு கடந்த புதன்கிழமை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் போது இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வாய் தர்க்கம் மோதலாக மாறியதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இது தொடர்பான காணொளி ஹட்டன், சாஞ்சிமலை பிரதான வீதியின் தரவளை பகுதியில் வீடு ஒன்றில் பொருத்தபட்டிருந்த சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
இந்த மோதல் சம்பவத்தில் காயமடைந்த 3 பேரில் ஒருவர் கண்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருவதோடு, மேலும் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் 2 பேர் சிகிச்சை பெற்று வருவதாக ஹட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய மயானத்திற்கு அருகில் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட தொலைத் தொடர்புக் கோபுர கட்டுமானப்பணிகள் மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
வவுனியா இறம்பைக்குளம் மயானத்திற்கு அருகில் நேற்று முன்தினம் தனியார் நிறுவனம் ஒன்றினால் வீதிக்கு அருகில் தொலைத் தொடர்புக் கோபுரம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதையறிந்த அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து குடியிருப்பு, பாடசாலை, ஆலயம், மயானத்திற்கு அருகில் அமைக்கப்படும் தொலைத் தொடர்புக் கோபுரம் அமைக்கும் பணிக்கு தமது எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளதுடன் கட்டட ஒப்பந்தப்பணியாளர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் நகரசபையின் கவனத்திற்குக் இவ்விடயம் கொண்டு செல்லப்பட்டு தொலைத் தொடர்புக் கோபுரம் அமைக்கும் பணிகளை தற்காலிகமாக இன்றிலிருந்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
நகரில் பல்வேறு பகுதிகளில் இவ்வாறான கோபுரங்களை அமைத்து எதிர்காலத்தில் அவற்றை தொலைத் தொடர்புக் கோபுரம் போன்று பாவிப்பதற்கு குறித்த நிறுவனம் முயற்சித்துள்ளதாக மக்கள் குற்றச்சாட்டினை முன்வைத்து தமது எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து நகரசபையினால் இத்திட்டம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. எனினும் நகரசபையில் அனுமதிக்கான விண்ணப்பம் குறித்த தனியார் நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ளது அனுமதி பெற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
19அடி உயரமும், 15அடி அகலத்திலும் தொலைத் தொடர்புக் கோபுரம் அமைக்கும் பணிகள் இடம்பெற்று வந்துள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்களின் எதிர்ப்புக் காரணமாக நகரசபையினால் இப்பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அகதிகள் பொலிஸ் பாதுகாப்புடன் வவுனியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக இன்று (14.06.2019) அழைத்து வரப்பட்டனர்.
உதிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் காரணமாக நீர்கொழும்பில் தங்கியிருந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு அகதிகளில் ஒரு தொகுதியின் இரண்டு கட்டமாக அழைத்து வரப்பட்டு வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தங்கவைக்கப்பட்டவர்களில் 10 பேர் வரையிலானோர் சிக்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு பலத்த பொலிஸ் பாததுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர். சுமார் இரண்டு மணிநேரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று மருந்துகளைப் பெற்ற பின் மீண்டும் அவர்கள் பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமுக்கு மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டனர்.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக வவுனியா வைத்தியசாலையில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டம் இன்று (14.06.2019) மாவட்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் வவுனியா பொது வைத்தியசாலைக்கு முன்பாக சுமார் ஒரு மணித்தியாலம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நாட்டின் சுகாதார சேவைக்கு மிகப்பாதகமான முறையில் நடந்துகொள்வதாகவும், அரச மருத்துவ அதிகாரிகள் மட்டத்தில் அதிகமான பிணக்குகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். இதன் காரணமாக அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கோரினர்.
தலவாக்கலை, லிந்துலைக்கு அண்மித்த பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.தலவாக்கலையிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி சென்ற மோட்டர் சைக்கிள் பாதசாரதி மீது மோதியமையினால் இவ்விபத்து நேர்ந்துள்ளது.
மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் படுகாயமடைந்ததோடு லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதன்போது படுகாயமடைந்த பாதசாரி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தலவாக்கலை நானுஓயா தோட்டத்தைச் சேர்ந்த குடும்பஸ்தரான சுப்பிரமணியம் தியாகராஜா என்பவர் என தெரியவந்துள்ளது. மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை கைது செய்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளவுள்ளதாகவும், உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குருணாகலில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பன்னல – இரபடகம பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடை ஏற்றுமதி தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மூவாயிரத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணி செய்யும் இந்த தொழிற்சாலையின் களஞ்சிய அறையில் ஏற்பட்ட தீ விபத்து, தொழிற்சாலை கட்டடம், அலுவலகம், இயந்திர பகுதி உட்பட முழுவதும் பரவியுள்ளது. இதனால் சொத்துக்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தீவிபத்து ஏற்பட்டு 3 மணித்தியாலங்கள் வரை கடந்தும் தீயணைப்பு வீரர்கள் அவ்விடத்திற்கு வருகைத் தராமையினால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர் நீர்கொழும்பு மற்றும் குருணாகலை தீயணைப்பு குழுவினர் பிரதேச மக்களுடன் இணைந்து தீப் பரவலைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.
சிறுவயதிலிருந்து வாழ்க்கையில் பல துன்பங்களை சந்தித்து இந்தியாவின் முதல் பெண் பொறியாளராக ஆனவர் லலிதா. சென்னைதான் லலிதாவின் தந்தைக்குப் பூர்வீகம். கிண்டி பொறியியல் கல்லூரியின் மின்பொறியியல் துறைப் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தார் லலிதாவின் தந்தை பப்பு சுப்பாராவ்.
1919 ஆகஸ்ட் 27 அன்று பப்புவின் ஐந்தாவது மகளாகப் பிறந்தார் லலிதா. சாதாரண நடுத்தரக் குடும்பம். அந்தக் காலத்தின் வழக்கப்படி பதினைந்தே வயதில் திருமணம் செய்துகொடுக்கப்பட்டார் லலிதா. அதன் பின்னும் விடாமல் பத்தாம் வகுப்பு வரை படித்து முடித்தார்.
18வது வயதில் சியாமளா எனும் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார் லலிதா. சியாமளா பிறந்து நான்கே மாதங்களில் இறந்து போனார் லலிதாவின் கணவர். மகளின் நிலைகண்டு வருந்திய பெற்றோர், அவரை அப்படியே சோர்ந்துபோக விடவில்லை. அவருக்குப் பிடித்த படிப்பைத் தொடர ஊக்கம் தந்தனர்.
உறவினரின் கடும் எதிர்ப்புக்கு இடையே லலிதா 1939-ம் ஆண்டு ராணி மேரி கல்லூரியில் முதல் வகுப்பில் இன்டர்மீடியட் தேர்ச்சி பெற்றார். அடுத்து என்ன செய்வது என்ற குழப்பம். சுப்பாராவ் அப்போதைய கிண்டி பொறியியல் கல்லூரி முதல்வர் கே.சி.சக்கோவிடம் கலந்தாலோசித்தார். அப்போதைய கல்வித்துறை இயக்குநராக இருந்த ஆங்கிலேயரான ஆர்.எம்.ஸ்டத்தாமின் அனுமதி கிடைத்தால், கிண்டி கல்லூரியிலேயே லலிதா பொறியியல் கற்கலாம் என்று அறிவுறுத்தினார் சக்கோ.
அந்தக் காலத்தில், இந்தியாவின் சொற்ப பொறியியல் கல்லூரிகளில் ஆண்கள் மட்டுமே பயின்றுவந்தனர். இதுபோன்ற தொழில்நுட்பப் பிரிவுகளில் பெண்கள் ஆர்வம்காட்டவில்லை. ஸ்டத்தாமைச் சந்தித்து சுப்பாராவ் சிறப்பு அனுமதி கோர, ஒருவழியாகப் பொறியியல் பட்டப்படிப்பு கற்க லலிதாவுக்கு அனுமதி கிடைத்தது. 1940-ம் ஆண்டு கிண்டி பொறியியல் கல்லூரிக்குள் அடியெடுத்து வைத்த லலிதாவுக்கு உள்ளூர உதறல்தான்.
சில மாதங்கள் என்ன, சில நாள்கள்கூட கல்லூரியில் அவரால் தொடர முடியாது என்றுதான் மற்ற மாணவர்கள் நினைத்தனர். பின்னர் பெண்களும் பொறியியல் கல்லூரியில் சேரலாம் என நாளிதழ்களில் விளம்பரம் தரப்பட்ட நிலையில் அந்த விளம்பரம் கண்டு இன்னும் இரண்டு பெண்கள் கிண்டி கல்லூரியை அணுகி, கட்டடக்கலை பொறியாளர் படிப்பில் சேர்ந்தனர்.
தனியாகக் கல்லூரியில் அவதியுற்ற லலிதாவுக்கு இப்போது லீலம்மா, தெரசா என்ற இரு தோழிகள் கிடைத்தனர். நிம்மதியுடன் படிப்பைத் தொடர்ந்தார் லலிதா. 1943-ம் ஆண்டு பொறியியல் பட்டதாரியானார்.
சிம்லா மத்திய தரக் கட்டுப்பாட்டு அமைப்புப் பணியில் சேர்ந்தார். இரண்டாண்டுகளுக்குப் பின் அவர் தந்தை செய்துவந்த ஜெலெக்ட்ரோமோனியம் (மின் இசைக்கருவி), புகையற்ற அவன் (oven) போன்ற ஆராய்ச்சிகளில் இணைந்து பணியாற்றினார். 1948-ம் ஆண்டு முதல் அசோசியேட்டட் எலெக்ட்ரிக்கல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இந்தியா முழுக்க சப்ஸ்டேஷன் வடிவமைப்பு, ஜெனரேட்டர் வடிவமைப்பு எனப் பல திட்டங்களில் பணி செய்தார். புகழ்பெற்ற பக்ராநங்கல் அணையின் ஜெனெரேட்டர்கள் இவர் வடிவமைத்தவையே.
1965-ம் ஆண்டு முதல், லண்டன் பெண் பொறியாளர்கள் சொசைட்டி மற்றும் இன்ஸ்டிட்யூஷன் ஆஃப் எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயர்ஸ் போன்றவற்றில் முழுநேர உறுப்பினராகவும் இருந்தார். 1979-ம் ஆண்டு தன் அறுபதாவது வயதில் இறந்தார் லலிதா.
அவரின் மகள் சியாமளா கூறுகையில், என் அம்மாவின் மனவலிமை எனக்கு இருந்தால் நன்றாக இருக்கும். என்னைக் கவனித்துக்கொள்ள அப்பா இல்லை என்பதை நான் ஒரு போதும் உணர்ந்தது இல்லை. என் நலனில் அக்கறைகொண்ட காரணத்தால் மறுமணமும் செய்துகொள்ளாமலேயே என் தாய் இருந்தார் என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவில் மகளை மாற்றாந் தந்தை 9 குழந்தைகளுக்கு தாயாக்கி 20 வருடங்களாக கொடுமைப்படுத்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹென்ரி மிச்சில் (63) என்பவர் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். அப்பெண்ணுக்கு ஹென்ரி இரண்டாம் கணவராவார். அவருக்கு ரோசலின் மெக்கினிஸ் என்ற பெண் பிள்ளை இருந்தாள்.
இந்நிலையில் ரோசலினிடம் மாற்றாந் தந்தையான ஹென்ரி கடந்த 1997ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் தவறாக நடக்க முயன்றார். இதன் பின்னர் ஹென்ரியை அவர் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்து 11 வயது சிறுமியான ரோசலினை ஹென்ரி திருமணம் செய்து கொண்டுள்ளார்.
பின்னர் மகளை திருமணம் செய்ததால் தனக்கு பிரச்சனை வரும் என கருதி ரோசலின் தலைமுடியை வெட்டி விட்டு அவளை ஆண் போல மாற்றியுள்ளார் ஹென்ரி. இந்த காலக்கட்டத்தில் ரோசலினை ஹென்ரி பல முறை துஷ்பிரயோகம் செய்ததன் விளைவாக தனது 15வது வயதில் அவள் குழந்தை பெற்றாள்.
பின்னர் பலமுறை கர்ப்பமாகி 9 குழந்தைகளை பெற்றெடுத்தார். இதோடு ரோசலினை சொல்ல முடியாத அளவுக்கு ஹென்ரி அடித்து உதைத்து 20 ஆண்டுகளாக கொடுமைப்படுத்தி வந்தார். கடந்த 2017-ல் தான் ஹென்ரியின் கோர முகம் வெளியில் தெரிந்தது.
அதாவது ரோசலின் ஒரு தம்பதியை சந்தித்த போது தனக்கு நேர்ந்த அனைத்து விடயங்களையும் கண்ணீர் மல்க கூறினார். இதன் பின்னரே இது தொடர்பாக பொலிசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டு ஹென்ரி கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கான முடிவும் தருவாயில் உள்ள நிலையில் ஹென்றிக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென் ஆப்பிரிக்காவில் மக்கள் போராட்டத்தின் போது சொந்த மகளை கொலை செய்ய துணிந்த தந்தையை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் குவாட்வேசியிலுள்ள ஜோ ஸ்லோவோ நகரில், சட்டவிரோதமாக கட்டப்பட்ட 90 வீடுகளை இடிக்குமாறு கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் 12 ம் திகதியன்று உத்தரவிடப்பட்டது.
இதனையடுத்து அங்கு விரைந்த பொலிஸார், வீடுகளை இடித்துக்கொண்டிருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்த பொதுமக்கள் பலரும், கற்களை எரிந்தும், டயர்களை சாலையில் தீயிட்டு கொளுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது 38 வயதான ஒருவர் தன்னுடைய ஒரு வயது மகளை தூக்கிக்கொண்டு கூரையின் மேல் பகுதிக்கு சென்றார். இங்கிருந்து பொலிஸார் உடனடியாக வெளியற விட்டால், என்னுடைய மகளை கீழே தூக்கி எறிந்துவிடுவேன் என மிரட்டல் விடுத்தார்.
ஆனால் பொலிஸார் அங்கிருந்து வெளியற மறுத்து, மீட்பு பணியில் ஈடுபட ஆரம்பித்தனர். மறுபுறம் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், “தூக்கி எறி” என கோஷமிட ஆரம்பித்தனர். அப்போது ஒரு பொலிஸார் மட்டும் கூரையின் மேல்பகுதிக்கு சென்ற காப்பாற்ற முயன்றார். ஆனால் அதற்குள் அந்த நபர் குழந்தையை மேலிருந்த தூக்கி எறிந்துவிட்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொலிஸார் ஓடிச்சென்று லாவகமாக குழந்தையை கையில் பிடித்து காப்பாற்றினார். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் குழந்தை எந்தவித காயமும் இல்லாமல் தப்பியது. அந்த குழந்தையினை அவரது 35 வயது தாயிடம் பத்திரமாக ஒப்படைத்த பொலிஸார், சொந்த மகளையே கொல்ல துணிந்த தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் இன்று நடந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணையில், குழந்தையின் தந்தைக்கு 5 வருட சிறைத்தண்டனை ரத்து செய்யப்பட்டு, 5,000 ரேண்ட் (£ 264.90) மட்டும் அபராதமாக விதிக்கப்பட்டது. நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்பிற்கு இணையதளவாசிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
சீனாவில் கடுமையான அடிவயிற்று வழியால் அவஸ்தையடைந்த பெண்ணின் பித்தப்பையிலிருந்து 7,750 கற்கள் வெளியில் எடுக்கப்பட்டுள்ளன. சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 7 வருடங்களுக்கு முன் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அப்போது பித்தப்பையில் சில கற்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
ஆனால் அவருக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்ததால் அப்போதைக்கு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அடிவயிற்றில் கடுமையான வலி இருப்பதாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் மேற்கொண்ட சோதனையில், வயிற்றில் ஏராளமான கற்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியைடைந்துள்ளனர். உடனடியா மருத்துவர் ஷென் ஜாங்கிய் தலைமையிலான குழு அறுவை சிகிச்சை மேற்கொண்டு 7750 கற்களையும் வெளியில் எடுத்தது.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு நோயாளியின் வயிற்றில் அதிக கற்கள் இருப்பதை இப்பொழுது தான் முதன்முறையாக பார்க்கிறேன். உள்ளிருந்த சிறிய கற்கள் இன்னும் பெரிதாக இருந்திருந்தால், மஞ்சள் காமாலை மற்றும் கடுமையான கணைய அழற்சி போன்ற போன்ற தீவிரமான நோய்கள் உருவாகியிருக்கலாம்.
பித்தப்பைகளில் உருவாகும் கற்கள், பொதுவாக கொழுப்பு படிகங்களால் தயாரிக்கப்படுகின்றன. அதிக எடையுள்ள மற்றும் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள், குறிப்பாக பெண்கள், பித்தப்பை நோய்களினால் பாதிக்கப்படுகின்றனர்.
உணவு குறைப்பு மற்றும் எடை இழப்பு அறுவை சிகிச்சைசெய்வது இதற்கு வழிவகுக்கும். அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண், தண்ணீர் அருந்துவதையும், காலை உணவு எடுத்துக்கொள்வதையும் தவிர்த்து வந்துள்ளார். அதன்காரணமாகவே கற்கள் அதிகரித்திருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளார்.
முத்தம் கேட்ட காதலனின் நாக்கை கடித்து துண்டாக்கிய இளம்பெண்ணுக்கு 8 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. பார்சிலோனாவை சேர்ந்த அடாயா லோபஸ் எஸ்டெவ் என்கிற இளம்பெண் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் இளைஞர் ஒருவரின் மீது காதல் வலையில் விழுந்துள்ளார்.
ஆனால் அவர்களுடைய காதல் அடுத்த இரண்டு மாதத்திலே கசந்துள்ளது. பிப்ரவரி 2017ம் ஆண்டு இருவரும் பிரிந்து சென்றுள்ளனர். அடுத்த சில நாட்களிலே மீண்டும் அந்த பெண்ணை தேடிவந்த இளைஞர், காதலை புதுப்பித்துள்ளார். பின்னர் 4 மாதங்கள் கழித்து பிரிந்து செல்ல இளைஞர் முடிவெடுத்து காதலியிடம் கூறியுள்ளார்.
இதனை கேட்டு ஆத்திரமடைந்த அடாயா, கடுமையாக நடந்துகொண்டுள்ளார். சிறிது நேரம் கழித்து மன்னிப்பு கேட்ட அடாயா, காதலனை கட்டிப்பிடித்துக்கொண்டு கடைசியாக ஒரு முத்தம் கொடுக்குமாறு கேட்டுள்ளார்.
உடனே அந்த இளைஞரும் முத்தம் கொடுக்க வந்துள்ளார். அப்போது அடாயா திடீரென இளைஞரின் நாக்கை கடித்து துண்டாக்கியுள்ளார். அவருடைய வாயிலிருந்து அதிக ரத்தம் வெளியேறுவதை பார்த்ததும், அடாயா அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இதற்கிடையில் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அந்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட அடாயாவிற்கு 8 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என இளைஞர் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
மதுரையில் ஜாமீன் கையெழுத்து போட வந்த இளைஞர் பொலிஸ் நிலையம் முன்பே ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையை சேர்ந்த அஜீத் (23), ரஞ்சித் (25) ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு, காதல் விவகாரம் தொடர்பாக தினேஷ் என்பவரின் கைகளை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனால் கைது செய்யப்பட்ட இருவரும் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அதன்படி பொலிஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று பகல் 11 மணி அளவில் இருவரும் கையெழுத்து இடுவதற்காக பொலிஸ் நிலையம் வந்துள்ளனர். அப்போது 200 மீ தொலைவில் கையில் பயங்கர ஆயுதங்களுடன் நின்றுகொண்டிருந்த 7 பேர் கொண்ட கும்பல் அவர்களை நோக்கி வேகமாக வந்துள்ளது. இதனை பார்த்ததும் அஜித் மற்றும் ரஞ்சித் அங்கிருந்து தப்பியோட முயற்சித்துள்ளனர்.
அங்கிருந்து ரஞ்சித் தப்பிய நிலையில், ரவுடிகளிடம் சிக்கிக்கொண்ட அஜித்தை சரமாரியாக அரிவாளால் தாக்கியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் அஜித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான். இந்த சம்பவமானது அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பொலிஸார் வழக்கு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகப்பட்டினத்தில் மகனின் பள்ளிக்கட்டணத்திற்கு பணம் கிடைக்கவில்லை என்கிற காரணத்தால் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகன் ஆகியோர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினத்தில் நகைக்கடை தொழிலாளியாக பணிபுரிந்து வருபவர் செந்தில்குமார் (35). இவருக்கு லட்சுமி (30) என்கிற மனைவியும், ஜெகதீஸ்வரன் (11) என்கிற மகனும் உள்ளனர். அருகாமையில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் ஜெகதீஸ்வரனுக்கு பள்ளி ஆரம்பித்து 10 நாட்களாகியும் இன்னும் கட்டணம் செலுத்தவில்லை. இதனால் ஜெகதீஸ்வரன் தினமும் தன்னுடைய பெற்றோரிடம் பணம் கேட்டு வந்துள்ளான்.
நகைக்கடையில் போதிய வருமானம் இல்லாத காரணத்தாலும், குடும்ப செலவிற்காக பலரிடமும் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத காரணத்தாலும் செந்தில்குமார் மனவேதனை அடைந்துள்ளார்.
படித்து பொலிஸ் வேலையில் சேர வேண்டும் என்கிற மகனின் ஆசையை கூட நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ளோம் என மனைவியிடம் புலம்பியுள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் செந்தில்குமார் வேலைக்கு வராத காரணத்தால் கடையின் உரிமையாளர் ஒரு சிறுவனை வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.
அங்கு மூன்று பெரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டு கிடப்பதை பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்த சிறுவன் கடையின் உரிமையாளருக்கு தகவல் கொடுத்துள்ளான். பின்னர் இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொலிஸார் மூன்று பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மகனின் ஆசையை நிறைவேற்ற முடியாத காரணத்தால் கடைசி நேரத்தில் பொலிஸ் உடை அணிவித்து மூன்று பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்த சம்பவம் அறிந்து குவிந்த அக்கம்பக்கத்தினர், தாயின் மடியிலே மகன் இறந்துகிடப்பதை பார்த்து கதறி அழுதுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் திருமணமான பெண் தன்னுடைய காதலனுடன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஷாம்கர் சௌத்ரி (21) என்பவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது.
இவர் அஞ்சு சுந்தர் (21) என்கிற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இருவரும் நாட்டு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டனர். சம்பவம் அறிந்து வந்த பொலிஸார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அங்கிருந்த செல்போன் மற்றும் மதுபாட்டில்களை கைப்பற்றினர். இதுகுறித்து பொலிஸார் ஒருவர் கூறுகையில், இருவரும் மது அருந்திவிட்டு தற்கொலை செய்துள்ளனர். தற்கொலைக்கு முன்பாக ஆடியோ ஒன்றினை பதிவு செய்துள்ளனர். மேலும், நிறைய புகைப்படங்களை எடுத்துக்கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.