திருமணம் முடிந்தும் காதலனை அழைத்து பேசிய இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி… சினிமாவை மிஞ்சிய சம்பவம்!!

தமிழகத்தில் காதலனால் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட பெண் வழக்கில், அதிரடி திருப்பாக அவரது உறவினர்களே அந்த பெண்ணை கொலை செய்து நாடகமாடியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அபிராமத்தை அடுத்த டி.வல்லக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மாயாண்டி. இவருக்கு ராதிகா என்ற 22 வயது மகள் உள்ளார். ராதிகாவிற்கும், பார்த்திபனூர் அருகே உள்ள பிச்சப்பனேந்தல் கிராமத்தை சேர்ந்த அருண்குமார்(30) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இருப்பினும் இரண்டு பேருக்கும் அடிக்கடி பிரச்சனை வந்ததால், ராதிகா கணவனை விட்டு பிரிந்து தனது தாய் வீட்டில் கடந்த ஒரு வருடமாக வசித்து வந்துள்ளார். அப்போது தான் ராதிகாவிற்கும், பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இந்த தகவல் ராதிகாவின் குடும்பத்தினருக்கு தெரியவர, அவர்கள் கண்டித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் 29-ஆம் திகதி ராதிகா வீட்டின் அருகே இருக்கும் கண்மாயில் உடல் கருகிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

இந்த தகவல் பொலிசாருக்கு தெரியவந்ததால், விரைந்து வந்த பொலிசார் ராதிகா தீக்குளித்து தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வந்த போது,

காதலன் கருப்பசாமிதான் ராதிகாவை கொன்றிருப்பதாக புகார் தெரிவித்துள்ளனர். அதுமட்மின்றி, அரசின் நிதி உதவி கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுவரை ராதிகாவின் உடலை வாங்கவும் மறுத்துவிட்டனர்.

இந்த போராட்டம் தொடர்ந்து 6 நாட்கள் நடந்த நிலையில், ராதிகாவின் மரணத்துக்கு அரசு நிவாரணமாக 8 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதில் முதல் தவணையாக 4 லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாயை அவரது குடும்பத்தினரிடம் அதிகாரிகள் வழங்கினர். அதன் பின்னர் ராதிகாவின் உடலை வாங்கிச்சென்று அடக்கம் செய்தனர்.

இதைத் தொடர்ந்து இது குறித்து பொலிசார் மேற்கொண்டு வந்த தொடர் விசாரணையில், கள்ளத்தொடர்பை கைவிடாததால் ஆத்திரத்தில் ராதிகாவை அவருடைய உறவினர்கள் அடித்து கொடூரமாக கொன்றுவிட்டு, உடலை கண்மாய் கரையில் மண்எண்ணெயை ஊற்றி தீவைத்து எரித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து பொலிசார் கூறுகையில், சம்பவ தினத்தன்று ராதிகா, தன்னுடைய காதலனான கருப்பசாமியை சந்தித்து பேசியுள்ளார். இதைக் கண்ட உறவினரான முருகன் மற்றும் சிலர் கண்டித்துள்ளனர். ஆனால் ராதிகாவோ நான் தான் வரச் சொன்னேன் என்று அவர்கள் மனம் நோகும் படி பேசவே, ஆத்திரமடைந் முருகன்,

அவருடைய தாயார் பாப்பா மற்றும் மோகன், அழகர்சாமி ஆகியோர், ராதிகா வீட்டு வாசலில் ஒரு சிறுவனை காவலுக்கு வைத்துவிட்டு உள்ளே சென்று ராதிகாவை பலமாக தாக்கி சுவரில் மோதவைத்து கொலை செய்துவிட்டு, உடலை அருகில் உள்ள வீட்டிற்குள் மறைத்து வைத்துள்ளது தெரியவந்துள்ளது.

நடிகை ரோஜாவுடன் பூசாரி எடுத்த செல்பியால் வந்த பிரச்சனை : வைரலாகும் புகைப்படம்!!

பிரபல திரைப்பட நடிகையான ரோஜாவுடன் பூசாரி எடுத்த செல்பி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், சிலர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆந்திராவில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரும் திரைப்பட நடிகையுமான ரோஜா வெற்றி பெற்ற நிலையில், அவர் தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் காங்கேயம் பகுதியில் இருக்கும் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்துள்ளார்.

இந்த கோவில் மிகவும் பிரபலமான ஒன்று, இந்த கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களிலிருந்தும் அரசியல் பிரமுகர்கள் முதல் சினிமா நட்சத்திரங்கள் வரை வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

அந்தவகையில் நடிகை ரோஜா சிவன்மலை கோவிலுக்கு வந்த போது அறநிலையத்துறை ஊழியர் ஒருவர் செல்பி எடுத்துள்ளார்.
அப்போது அவர், தன்னுடைய பணியை மறந்து கொடிமரம் பகுதியில் ராஜகோபுரம் நுழைவாயிலை அடைத்து நின்றபடி செல்பி எடுத்ததால், அங்கிருந்த பக்தர்கள் எரிச்சலடைத்ததாக கூறி பிரச்சனை கிளம்பியுள்ளது.

தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருவதால், பலரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

விசித்திர திருமணம் : மணப்பெண்ணுக்கு தாலி கட்டிய மணமகனின் சகோதரி!!

இந்தியாவின் குஜராத்தில் மணமகளை, மணமகனின் சகோதரி திருமணம் செய்யும் நடைமுறை வழக்கத்தில் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் சோட்டா உதேபூர் நகரில் சுர்கேடா, சனடா மற்றும் ஆம்பல் என்ற 3 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் வசித்து வரும் பழங்குடியினர் வினோத நடைமுறை ஒன்றை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

இங்குள்ள ஆண் ஒருவர் திருமணம் செய்வதற்காக ஷெர்வானி உடை அணிந்து, தலையில் தலைப்பாகை அணிந்து, பாரம்பரிய வாள் ஏந்தி திருமணத்திற்கு தயாராகிறார். ஆனால் அவரது திருமணத்தில் அவர் கலந்து கொள்ள முடியாத சூழல் நிலவுகிறது. அதற்கு காரணம் அவர்களது சடங்குமுறை.

அவருக்கு பதிலாக திருமணம் ஆகாத அவரது சகோதரி அல்லது அவரது குடும்பத்தில் உள்ள கன்னிப்பெண் ஒருவர் மணமகனுக்கு பதிலாக அனைத்து சடங்குகளையும் செய்வார். மணமகளின் வீட்டிற்கு சென்று அவரை மணமுடித்து, பின்பு அவரை அழைத்து வருவார்.

இந்த வழக்கம் பல காலங்களாக நடந்து வருகிறது. இத்தகைய சடங்குமுறையை கடைபிடிக்காவிட்டால் துன்பங்கள் வந்து சேரும் என அப்பகுதியினரின் நம்பிக்கை.

இந்த சடங்கை கடைபிடிக்காதவர்களுக்கு பல பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது எனவும் அவர்களது திருமண வாழ்வில் முறிவு ஏற்பட்டுள்ளது எனவும் கிராம தலைவர் ராம்சிங்பாய் ரத்வா தெரிவிக்கிறார்.

தொப்பியை கழட்டு.. ஜெய் ஸ்ரீ ராம் சொல்லு.. இளைஞன் துஷ்பிரயோகம் : தொடரும் மத வன்முறை!!

இந்தியாவின் அரியானா மாநிலத்தில் மர்ம நபர்கள், முஸ்லிம் இளைஞனை வழிமறித்து தொப்பியை கழட்டு, ஜெய் ஸ்ரீ ராம் என கூற சொல்லி துஷ்பிரயோகம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குருகிராம், ஜக்குப்புரா பகுதியை சேர்ந்த 25 வயதான முகமது பர்கத் என்ற இளைஞனே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். மே 25ம் திகதி இரவு இத்தாக்குதல் சம்பவம் நடந்ததாக பர்கத் தெரிவித்துள்ளார்.

சம்வம் குறித்து பாதிக்கப்பட்ட பர்கத் கூறியதாவது, சம்பவத்தன்று இரவு நான் மசூதியிலிருந்து வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த போது, ஆறு போர் கொண்ட கும்பல் என்னை வழிமறித்தது. அதில், ஒருவன் தவறான வார்த்தையால் திட்டி இப்பகுதியில் தொப்பி அணிய அனுமதி இல்லை என கூறினான்.

நான் மசூதியிலிருந்து வருகிறேன் என கூறியவுடன் அவன் என்னை அறைந்தான். பின்னர், பாரத் மாதா கி ஜே, ஜெய் ஸ்ரீ ராம் என கூற சொல்லி வற்புறுத்தினான். நான் மறுத்தேன், நீ கூறவில்லை என்றால் உன்னை பன்றி இறைச்சி உண்ண வைப்பேன் என அவன் மிரட்டினான்.

பின்னர், ஒரு குச்சியை எடுத்து அடித்து என்னை துஷ்பிரயோகம் செய்தான். நான் அவனை தள்ளி விட்டு ஓட முயன்ற போது என் சட்டையை பிடித்து கிழித்தான். நான் அழ தொடங்கியவுடன், நான்கு பேர் இருசக்கர வாகனத்திலும், இருவர் நடந்தும் தப்பிச்சென்றனர் என பாதிக்கப்பட்ட பர்கத் தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்து வழக்கு பதிவுசெய்துள்ள பொலிசார் குற்றவாளிகளை தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.

நடிகையின் அறைக்குள் ரகசியமாக நுழைந்த இளைஞன் : துப்பாக்கி முனையில் மிரட்டிய அதிர்ச்சி!!

பிரபல திரைப்பட நடிகையின் அறைக்குள் புகுந்து தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி துப்பாக்கி முனையில் மிரடிய நபர் பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

பிரபல போஸ்புரி நடிகையான ரிது சிங், தற்போது துலாரி பிடியா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக 70 கொண்ட குழு மும்பையிலிருந்து உத்திரப்பிரதே மாநிலத்தின் சோன்பத்ரா மாவட்டத்திற்கு சென்றுள்ளது.

அங்கிருக்கும் நட்சத்திர ஹோட்டலில் படக்குழுவினருடன் ரிது சிங் தங்கியுள்ளார். அப்போது திடீரென்று ஹோட்டலுக்கு வந்த இளைஞர் ஒருவர், நடிகை ரிது சிங்கின் அறை எங்கிருக்கிறது என்று கேட்டு தெரிந்து கொண்டுள்ளார்.

அதன் பின் 11 மணியளவில், யாருக்கும் தெரியாமல் நடிகையின் அறைக்குள் நுழைந்த இளைஞன், துப்பாக்கியை காட்டி மிரட்டி தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி நடிகையை மிரட்டியுள்ளார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத அவர் அதிர்ச்சியில் அலறியுள்ளார். இவரின் அலறல் சத்தத்தைக் கேட்டு வெளியில் இருந்த அசோக் என்ற வாலிபர் அறைக்குள் ஓடி வந்துள்ளார். இதைக் கண்ட அந்த இளைஞர் துப்பாக்கியால் அசோக்கை சுட, அவர் கையில் பலத்த காயத்துடன் கீழே விழுந்துள்ளார்.

துப்பாக்கி சத்தம் கேட்டதை அடுத்து ஹோட்டல் ஊழியர்கள் நடிகையின் அறைக்கு ஓடி வந்தனர். இது தொடர்பாக பொலிசாருக்கும் உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. காயமடைந்து கிடந்த அசோக்கை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் பொலிசார் அங்கு வந்து அந்த வாலிபரிடம் அறையை விட்டு வெளியே வருமாறு கூறினர். ஆனால் அவர், பொலிசாரை நோக்கியும் சுட்டார். இதில் பொலிசார் ஒருவர் நூலிழையில் தப்பினார்.

சுமார் ஒன்றரை நேர போராட்டத்துக்குப் பின், துப்பாக்கியால் சுட்ட இளைஞரை பொலிசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் அருகி லுள்ள ஜான்பூரைச் சேர்ந்த பங்கஜ் என்பது தெரிய வந்தது. இந்த சம்பவத்தால் நடிகை ரிது சிங் அதிர்ச்சியில் இருந்து மீளாத நிலையில், படக்குழு மீண்டும் மும்பைக்கு திரும்பியுள்ளது.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் நடந்தது என்ன? பதவி விலகினார் அதிபர்?

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் காவலாளி மாணவியொருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்தமைக்கு அதிபர் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களை பெற்றோர், பழைய மாணவர்கள் முன்வைத்த நிலையில் அதிபர் தனது பதவியை இராஜினாமா செய்வதாக பொதுச்சபையில் தெரிவித்தார்.

இப் பாடசாலையின் அபிவிருத்திச் சங்க பொதுக்கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் அதிபர் த.அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது அண்மையில் பாடசாலையின் காவலாளி மாணவியொருவரிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றமை சபையில் பகிரங்கமாக பாடசாலையின் ஆசிரியர்களால் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், காவலாளி தொடர்ந்தும் பாடசாலையில் கடமையாற்றுவதாகவும் அதற்கு அதிபர் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதன்போது சபையில் அனைவரும் குழப்பமடைந்து அதிபருக்கு எதிராக கோசமெழுப்பினர்.

பெண் ஆசிரியர்கள் பலரும் ஆண் ஆசிரியர்கள் சிலரும் அதிபருக்கு ஆதரவாகவும் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமைக்கு நடவடிக்கை எடுக்காமைக்கு ஆதரவாகவும் கோசங்களை எழுப்பினர்.

இதன்போது ஆசிரியர்களுக்கு எதிராகவும் பாடசாலைக்கு மாணவிகளை அனுப்புவதற்கு அச்சம் கொள்வதாகவும் தெரிவித்து பெற்றோர் கோசங்களை எழுப்பியதுடன், சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு ஆதரவாக இருந்த ஆசிரியர்களையும் அதிபரையும் வெளியேறுமாறும் கோரினர்.

இந்நிலையில் CCTV பதிவில் குறித்த சம்பவம் பதிவில் இருந்தபோதிலும் மாணவியும் அவரின் பெற்றோரும் நடவடிக்கைக்கு உடன்படவில்லை என தெரிவித்த அதிபர், இதன் காரணமாகவே தான் பொலிஸிலோ ஏனைய இடத்திலோ முறையிடவில்லை என தெரிவித்தார். அத்துடன் இனி தான் அதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் பாடசாலையில் பல பண மேசாடிகள் இடம்பெறுவதாக பழைய மாணவர்கள் சங்கத்தால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து, தான் அதிபர் பதவியிலிருந்து விலத்துவதாக தெரிவித்து சபையிலிருந்து வெளியேறியிருந்தார்.

இதன்போது பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர் சிலர் அதிபரின் முடிவை வரவேற்றதுடன் புதிய அதிபரை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்து கூட்டத்தினை நிறைவு செய்தனர்.

வவுனியா பொது வைத்தியசாலையில் விதிக்கப்பட்ட தடை : இலாபம் ஈட்டும் வர்த்தக நிலையங்கள்!!

நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தினையடுத்தும் வைத்தியசாலைக்கு விடுக்கப்பட்ட வெடிக்குண்டு எச்சரிக்கையினையடுத்தும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து வைத்தியசாலை வாயிலின் அருகே சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு வைத்திசாலையினுள் செல்லும் அனைவரும் சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். அத்துடன் தலைக்கவசத்தை வைத்தியசாலை வளாகத்திற்குள் கொண்டு செல்லதற்கும் இராணுவத்தினர் தடை விதித்துள்ளனர்.

தலைக்கவசத்திற்கு விதிக்கப்பட்ட தடையினையடுத்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள சில வர்த்தக நிலையங்களில் தலைக்கவசம் வைப்பதற்கு ரூபா 10 அறவிடப்படுகின்றது.

தலைக்கவச தடை விதிப்பினால் தினசரி வைத்தியசாலைக்கு செல்லும் ஆயிரத்திற்கு மேற்பட்ட நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் ரூபா 10 கட்டணம் செலுத்தி தலைக்கவசத்தினை வர்த்தக நிலையங்களில் ஒப்படைத்து செல்கின்றனர்.

தினசரி மூன்று நேரமும் நோயாளர்கள் பார்வையிடுபவர்கள் மற்றும் நோயாளர்கள் என ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வைத்தியசாலைக்கு சமூகமளிக்கின்றனர்.

அண்ணளவாக ஒரு நாளுக்கு எழுநூறுக்கு மேற்பட்டவர்கள் மோட்டார் சைக்கிலில் வைத்தியசாலைக்கு வருகை தருகின்றனர். (700 x 10) 7000 ரூபாய் ஒரு நாளுக்கான வருமானமாக காணப்படுகின்றது.

அத்துடன் சில இடங்களில் தலைக்கவசங்கள் எவ்வித பாதுகாப்பும் இன்றி வீதியில் வைக்கப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. (கட்டணம் செலுத்தபட்ட இடங்களில்)

எனவே உரிய அதிகாரிகள் இவ்விடயத்தில் தலையிட்டு தலைக்கவச தடையினை நீக்க வேண்டும் அல்லது நகரசபையினரோ வைத்தியசாலை நிர்வாகத்தினரோ இதற்கான மாற்று ஏற்பாட்டினை மேற்கொள்ள வேண்டுமேன பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

வைத்தியசாலையில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் தலைக்கவசத்தினை எவ்வித சோதனைகளும் இன்றி வைத்தியசாலைக்குள் எடுத்துச் செல்ல பாதுகாப்பு தரப்பினர் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வட்ஸ் அப்பில் அடிப்படைவாதம் : மூன்று இளைஞர்கள் கைது!!

தர்கா டவுன் பிரேக்கிங் நியூஸ் என்ற பெயரில் 100 உறுப்பினர்கள் இடையிலான அடிப்படைவாத வட்ஸ் அப் வலையமைப்பை நடத்தி வந்த பிரதான சந்தேக நபருடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 20 முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த வட்ஸ் அப் வலையமைப்பில் இருந்த 25 பேர் உடனடியாக இன்று அதில் இருந்து வெளியேறியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வட்ஸ் அப் வலையமைப்பு சுமார் 3 ஆண்டுகளாக இயங்கி வந்துள்ளது. பிரதான நபர் 23 வயதானவர் எனவும் இவர் அளுத்கமை தர்கா நகரில் லோட்டஸ் வீதியில் வசித்து வருபவர் எனவும் வெளிநாட்டில் தொழில் புரிந்து விட்டு இலங்கை திரும்பியவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரிக்க உள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். ஏனைய இரண்டு சந்தேக நபர்களிடம் இது குறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர்கள் தர்கா நகர் மத்துகமை வீதி மற்றும் லோட்டஸ் வீதி பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இணையத்தை உருகவைத்த சிறுவனின் புகைப்படம் : கண்கலங்கிப்போன மில்லியனரின் செயல்!!

தெரு விளக்கில் அமர்ந்து படித்து கொண்டிருக்கும் சிறுவனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானதை அடுத்து, மில்லியனர் ஒருவர் அந்த சிறுவனுக்கு உதவ முன்வந்துள்ளார்.

பெரு நாட்டை சேர்ந்த விக்டர் மார்ட்டின் என்கிற 11 வயது சிறுவன், வீட்டில் மின்சார வசதி இல்லாததால், தெரு ஓரத்தில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்துள்ளான்.

இந்த புகைப்படமானது உலகளவில் உள்ள மில்லியன் கணக்கிலான இணையதளவாசிகளால் வைரலாக்கப்பட்டதை அடுத்து, பஹ்ரைன் நாட்டை சேர்ந்த மில்லியனர் உதவ முன்வந்துள்ளார்.

சிறுவனின் புகைப்படத்தை பார்த்த 31 வயதான யாகூப் யூசுஃப் அஹ்மத் முபாரக் என்கிற மில்லியனர், தன்னுடைய நாட்டிலிருந்து பெரு நாட்டிற்கு சென்று சிறுவனுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அங்கு சிறுவனை சந்தித்த அவர், இரண்டு மாடி வீடு மற்றும் அவனுடைய தாய்க்கு ஒரு வேலை ஏற்பாடு செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார். மேலும், சிதைத்திருக்கும் அவனுடைய பள்ளியையும் கட்டி கொடுப்பதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், நானும் சிறுவயதில் இதுபோன்று அனுபவித்துள்ளேன். விக்டரின் தாயாருக்கு வேலை ஏற்பாடு செய்துகொடுப்பதன் மூலம், அதில் வரும் வருமானம் சிறுவனின் எதிர்கால வாழ்க்கை மற்றும் படிப்பிற்கு உதவும் என தெரிவித்துள்ளார்.

தனக்கு உதவ முன்வந்துள்ள முபாரக்கிற்கு நன்றி தெரிவித்துள்ள விக்டர், தற்போது பெரும் மகிழ்ச்சியுடனும், ஆச்சர்யத்திலும் இருப்பதாக அவனுடைய தாய் கூறியுள்ளார்.

நடிப்பதை நிறுத்த போகிறேன் : இரவு முழுவதும் கண்ணீர் விட்ட சாய் பல்லவி!!

நடிகை சாய் பல்லவி செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி ஒரு பேட்டியில் அவர் பகிர்ந்துள்ளார்.

செல்வராகவன் ரொம்ப ஸ்ட்ரிக்ட் என கூறியுள்ள அவர், விரும்பும் ரிசல்ட் வரும்வரை மீண்டும் மீண்டும் எடுப்பார். ஒரு நாள் அப்படி காலை முதல் மாலை வரை அவர் எதிர்பார்த்த நடிப்பு என்னிடம் வரவில்லை, நாளை பாப்போம் என கூறிவிட்டார்.

நான் வீட்டிற்க்கு சென்று அம்மாவிடம் கதறி அழுதேன். எனக்கு நடிப்பு வரவில்லை, டாக்டர் வேலைக்கே சென்று விடுகிறேன் என கூறினேன்.

இரவு முழுவதும் அழுதுவிட்டு மறுநாள் காலை முதல் ஷாட்டிலேயே செல்வராகவன் ஓகே செய்தார். ‘அம்மா போன் செய்தார்களா?’ என் கேட்டேன். ‘இல்லை, நான் கேட்டது இப்போது கிடைத்தது’ என பதில் அளித்தாராம் செல்வராகவன்.

அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர் : கண்ணீருடன் தாய் கூறிய காரணம்!!

மும்பையில் சாதி பெயரை சொல்லி சக மருத்துவர்கள் சித்ரவதை செய்ததால், அவமானம் தாங்காமல் இளம் பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் உள்ள தீபவாலா தேசிய மருத்துவ கல்லூரியில் பயின்று வரும் பயல் தத்வி (26) என்கிற இளம் பெண் மருத்துவர் கடந்த 22ம் திகதியன்று தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அன்றைய தினம் காலை நேரத்தில் இரண்டு அறுவை சிகிச்சையை முடித்துவிட்டு நேரே விடுதிக்கு சென்ற பயல், நீண்ட நேரம் கதவை திறக்காமல் இருந்துள்ளார். 4 மணி நேரம் கழித்து தான், அவர் தூக்கில் தொங்குவதை மற்றவர்கள் பார்த்துள்ளனர்.

உடனடியாக மீட்கப்பட்ட பயல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனேவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பயல் தத்விவியின் தாய் அபேடா தத்வி, தற்கொலைக்கான காரணம் குறித்து பேசியுள்ளார்.

என்னுடைய மகள் இடஒதுக்கீட்டின் மூலமாக தான் மருத்துவ சீட்டு பெற்றார். அதனை வைத்து மூன்று மூத்த பெண் மருத்துவர்கள் சித்ரவதை செய்வதாக எங்களிடம் கூறினாள். நாங்களும் அவர்கள் தங்கியிருக்கும் விடுதி பாதுகாப்பாளரிடம் புகார் அளித்தோம்.
அவரும் அந்த மூன்று பேரை அழைத்து இனிமேல் இதுபோன்று நடந்துகொள்ள வேண்டாம் என அறிவுறுத்தினார்.

மே மாதம் 22ம் திகதியன்று மதியம் நான் என்னுடைய மகளுக்கு போன் செய்தேன். இன்னும் அவளுடைய சீனியர்கள் சாதி பெயரை சொல்லி சித்ரவதை செய்வதாக என்னிடம் வேதனை தெரிவித்தாள்.

நானும் தந்தையும் உடனடியாக மும்பைக்கு கிளம்பி வந்து, மருத்துவமனை நிர்வாகம் மற்றும் பொலிசாரிடம் புகார் கொடுப்பதாக அவளிடம் கூறினேன். ஆனால் அவள் சித்திரவதையை தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டாள் என கூறியுள்ளார்.

மேலும், நாங்கள் புகார் கொடுத்தபோதே நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் எங்களுடைய மகள் இந்நேரம் உயிருடன் இருந்திருப்பார் என கண்ணீர் மல்க பேசியுள்ளார்.

பயலின் தந்தை சலீம் கூறுகையில், முதல் ஆறு மாதங்கள் நன்றாக இருந்தன. சில வார்த்தைகள் இருவருக்குள்ளும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

டிசம்பர் 2018-ல் நடந்தவை பற்றி எங்களிடம் பயல் கூறினாள். அதனை உடனே பயலின் கணவர் சல்மான் கவனத்திற்கு கொண்டு சென்றோம். இதுபோன்ற விடயங்கள் நடப்பது சகஜம். அதனை புறக்கணிக்குமாறு அவர் கூறியதாக தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவமானது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மருத்துவர்கள் ஹேமா அஹுஜா, பக்தி மேஹார் மற்றும் அன்கிதா கந்தெல்வால் ஆகியோர் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உனது மரணத்தை நம்ப முடியவில்லை… தேனிலவு முடித்து திரும்பும் வழியில் மரணமடைந்த புதுமண தம்பதி : கதறும் குடும்பம்!!

கேரளாவில் தேனிலவு முடித்து ஊருக்கு திரும்பிய புதுமண தம்பதிகள் சாலை விபத்தில் கொல்லப்பட்ட சம்பவம் அவர்களது குடும்பத்தினரை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் குடியிருக்கும் 31 வயதான கிரண் மற்றும் அவரது மனைவி 28 வயதான ஜின்ஸி ஆகியோரே சாலை விபத்தில் கொல்லப்பட்டவர்கள். நீண்ட பல ஆண்டுகளாக காதலித்துவந்த இருவரும் கடந்த மாதமே திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டில் தேனிலவு கொண்டாடும் வகையில் தங்களது வாகனத்தில் சென்றுள்ளனர். இவர்களுடன் நண்பர் ஜயதீப் மற்றும் அவரது மனைவியும் பெங்களூருவில் இருந்து திரும்பியுள்ளனர்.

இந்த நிலையிலேயே மாண்டியா பகுதியில் வைத்து இவர்களது வாகனம் சாலை விபத்தில் சிக்கியுள்ளது. இதில், கிரண் மற்றும் அவரது மனைவியுடன் நண்பரும் அவரது மனைவியும் உள்ளிட்ட நால்வரும் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த இழப்பில் கடுமையாக பாதிக்கப்பட்ட கிரணின் நண்பர்கள், உனது இறப்பை எங்களால் நம்ப முடியவில்லை, இந்த வலி காலங்கள் கடந்தும் எங்களிடம் தங்கும் என கண்ணீருடன் தங்களின் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

வயிற்று வலிக்காக வந்த நபர்… ஸ்கேன் ரிப்போர்ட்டில் மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

இந்தியாவில் வயிற்று வலி என்று கூறிய நபரின் வயிற்றுப் பகுதியை ஸ்கேன் செய்து பார்த்த போது உள்ளே இருந்ததைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இமாச்சலப்பிரேதசத்தில் உள்ள மாண்டி நகரில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு 35 வயது மதிக்கத்தக்க நபர் வயிற்று வலி என்று கூறி சிகிச்சைக்காக வந்துள்ளார்.

அப்போது முதலில் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தால் மட்டுமே சொல்ல முடியும் என்று கூறியதால், ஸ்கேன் செய்துள்ளனர். அதன் பின் ஸ்கேனைப் பார்த்த போது மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏனெனில் அவரின் வயிற்றின் உள்ளே 8 ஸ்பூன்ஸ், 2 ஸ்க்ரூ டிரைவர், 2 டூத் பிரஷ், 1 கத்தி இருந்துள்ளது.

இதனால் இவை எல்லாம் வயிற்றுக்குள் எப்படி வந்தது என்று மருத்துவர்கள் கேட்ட போது, அவர் எந்த ஒரு பதிலும் அளிக்காமல் இருந்துள்ளார். முதலில் வயிற்றில் இருப்பவைகள் நீக்க வேண்டும் என்பதால் உடனடியாக மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து பொருட்களை அகற்றியுள்ளனர்.

இதுபற்றி அறுவை சிகிச்சை செய்த டாக்டர் நிகில் கூறும்போது, வயிற்றுக்குள் அந்த பொருட்கள் இருந்ததை அறிந்ததும் எங்கள் மருத்துவக் குழு உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்து அவற்றை நீக்கியது.

சிகிச்சைக்கு பின்னர் அவர் நலமுடன் இருக்கிறார். சாதாரணமான மனிதர்கள் கத்தி, ஸ்குரூடிரைவர், ஸ்பூன்களை விழுங்க மாட்டார்கள். நோயாளி, மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் இதை செய்திருக்கிறார். இது அரிதான ஒன்று என்று கூறியுள்ளார்.

அமெரிக்கப் பெண்ணை கரம் பிடிக்கப்போகும் தமிழர் : பேஸ்புக்கில் மலர்ந்த காதல்!!

அமெரிக்க இளம்பெண்ணுக்கும், தமிழகத்தைச் சேர்ந்த இளைஞருக்கும் பேஸ்புக் மூலம் காதல் மலர்ந்ததைத் தொடர்ந்து, நேற்றைய பெற்றோர் முன்னிலையில் அவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

அமெரிக்காவின் கரோலினாவில் உள்ள சான்போர்டு நகரைச் சேர்ந்தவர் பிரட்டி(22). இவர் தனது பெற்றோருடன் தமிழ் கலாச்சாரத்தை தெரிந்துகொள்வதற்கும், தமிழ் தொடர்பான ஆராய்ச்சி செய்வதற்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை வந்தார்.

சென்னையில் ஒரு வீட்டில் தங்கிய பிரட்டி, பேஸ்புக்கில் தமிழ் கலாச்சாரம் குறித்து தெரிவிக்குமாறு கூறி வந்தார். இந்நிலையில் தான், கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த சூரிய பிரகாஷ்(25) என்பவர் பிரட்டி அறிமுகமானார்.

அவர் தமிழ் கலாச்சாரம் குறித்த தகவல் மற்றும் புகைப்படங்கள், வீடியோக்களை பேஸ்புக்கில் பதிவு செய்தார். இவ்வாறாக பிரட்டி-சூரிய பிரகாஷ் இடையே ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் காதலாக மாறியது.

இருவரும் பரஸ்பரம் செல்போனில் பேசி வந்த நிலையில், பெற்றோரிடம் தங்கள் காதல் குறித்து தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்மதத்துடன் பிரட்டி-சூரிய பிரகாஷின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி திட்டக்குடியில் நடந்தது.

இந்நிகழ்ச்சியில் இருவரின் பெற்றோர் மற்றும் உறவினர்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில் பிரட்டி இதுகுறித்து கூறுகையில், ‘தமிழ் கலாச்சாரம், உடை, உணவு, மனிதர்கள் அன்போடு பழகும் விதம் ஆகியவை எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

எனவே நான் தமிழ் கலாச்சாரப்படி சேலை கட்டி வருகிறேன். இங்குள்ள ஒருவரை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தேன். அப்போதுதான் சூரிய பிரகாஷுடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. முதலில் நட்பாக தொடங்கிய இந்த பழக்கம் பின்னர் காதலாக மாறியது.

இருவரது மனமும் ஒத்துப்போனதால் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து, தமிழ் கலாச்சாரப்படி நிச்சயதார்த்தம் நடந்தது. அமெரிக்காவில் இருந்து உறவினர்கள் சிலர் வர உள்ளனர். அவர்கள் வந்ததும் திகதி முடிவு செய்யப்பட்டு, தமிழ் கலாச்சாரப்படி இங்கேயே எங்களது திருமணம் நடைபெறும்’ என தெரிவித்துள்ளார்.

காணாமல் போன இரு சகோதரிகளும் சடலங்களாக மீட்பு!!

மஹவிலச்சிய, எலபத்கம பகுதியில் காணாமல் போயிருந்த இரு சகோதரிகளும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இருவரினதும் சடலங்கள் கிணறு ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த இருவரும் நேற்று முதல் காணாமல் போயிருந்தனர்.

வீட்டிற்கு அருகில் உள்ள குடா தம்மென்னாவ குளத்திற்கு குளிக்கச் சென்றுள்ள நிலையிலேயே அவர்கள் காணாமல் போயிருந்ததாக உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில் குளிக்கச் சென்ற குளத்துக்கு அருகில் இருந்து எடுத்துச் சென்ற உடைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், அதற்கு அருகில் உள்ள கிணற்றில் இருந்து இருவரினதும் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.

22 வயது மற்றும் 26 வயதுடைய குறித்த சகோதரிகளே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

ஈரானில் பதற்றம் : படைத் துருப்புகளை அனுப்ப தயாராகும் அமெரிக்கா!!

ஈரான் பதற்றம் காரணமாக பில்லியன் டொலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை சவூதிக்கு விற்பனை செய்வதற்கான அனுமதியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வழங்கியுள்ளார்.

அமெரிக்க காங்கிரஸின் அனுமதியை பெற்றுக்கொள்ளாது, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேரடியாகவே இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“ஈரான் பதற்றம் காரணமாக சவூதிக்கு 8 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை விற்பனை செய்ய, காங்கிரஸின் அனுமதியை பெற்றுக்கொள்ளாது அமெரிக்க ஜனாதிபதி நேரடியாக அனுமதியை வழங்கியுள்ளார்.

ஈரான் விவகாரத்தை காரணம் காட்டி காங்கிரஸின் அனுமதி பெற்றுக்கொள்ளாது இவ்வாறு ஆயுதங்கள் விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த நடவடிக்கைகளுக்கு, ஜனநாயகவாதிகள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இதேவேளை, 1500 படை வீரர்கள் மத்திய கிழக்கிற்கு அனுப்ப இருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் கூறியுள்ளார்.

அத்துடன், போர் விமானங்கள், ஹெலிகொப்டர்கள் மற்றும் பிற பாதுகாப்பு ஆயுதங்கள் அனுப்பி வைக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, எண்னெய் கப்பல் ஒன்றை தாக்கியதாக ஈரான் மீது அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ள நிலையில், இந்த பதற்ற நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

– BBC – Tamil