தேர்தலில் வெற்றி பெற்ற கூலித்தொழிலாளியின் மகள் : குவியும் வாழ்த்து மழை!!

கேரளா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றியடைந்த கூலித்தொழிலாளியின் மகள் ரம்யாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

கேரள மாநிலத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகளான ரம்யா ஹரிதாஸ், கடந்த 6 வருடங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் சார்பில் டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியுள்ளார்.

அப்போது இவருடைய திறமையை பார்த்து ஆச்சரியமடைந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, ரம்யாவை தன்னுடைய கட்சியில் உறுப்பினராக இணைத்துக்கொண்டார்.

பாடல் மற்றும் நாடக கலைஞரான ரம்யா எளிதாக அப்பகுதியை சேர்ந்த மக்களிடையே பிரபலமடைந்துள்ளார். இது அப்பகுதியை சேர்ந்த இடதுசாரி கட்சியினருக்கு தலைவலி கொடுக்க ஆரம்பித்தது. ரம்யா மீது பாலியல் ரீதியிலான கருத்துமோதல்களை எதிர்க்கட்சியினர் திணிக்க ஆரம்பித்துள்ளனர்.

ஆனால் அவற்றை எல்லாம் தாண்டி அலத்தூர் தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் ரம்யா போட்டியிட்டார். அத்தொகுதியில் அசைக்க முடியாத வேட்பாளராக வலம்வந்த இடதுசாரி கட்சியின் P.K. Biju-வை, 5,33,815 வாக்குகள் பெற்று தோற்கடித்துள்ளார்.

இந்த வெற்றியானது எதிர்கட்சியினருக்கு அதிர்ச்சியையும், பொதுமக்களுக்கு ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கேரளா மாநிலத்தில் 1971க்கு பிறகு மக்களவை தேர்தலில் வெற்றி பெரும் தலித் பெண் ரம்யா ஹரிதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் சுயேச்சையாக நின்று முதல்வர் மகனையே ஜெயித்த பிரபல தமிழ்ப்பட நடிகை : குவியும் வாழ்த்துக்கள்!!

கர்நாடக மாநிலம் மண்டியா மக்களவை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட மறைந்த நடிகர் அம்பரிஷின் மனைவியான நடிகை சுமலதா அபார வெற்றி பெற்றுள்ளார்.

சுமலதா தமிழில் கழுகு, முரட்டுகாளை உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட மாநில முதல்வர் குமாரசாமியின் மகனான நிகில் கவுடாவை, சுமார் 90,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து மண்டியா மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

முன்னதாக மக்களவை தேர்தல் தொகுதி ஒதுக்கீட்டின் போது மண்டியா தொகுதியை காங்கிரஸ் கூட்டணியில் உள்ள முதல்வர் குமாரசாமி கட்சியான ஜே.டி.எஸ். கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

இதனால் அதிருப்தியடைந்த நடிகை சுமலாதாவிடம் வேறு தொகுதி ஒதுக்கி தருகிறோம் அதில் போட்டியிடுங்கள் என கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்கள் கூறி பார்த்தனர். ஆனால் அதனை ஏற்காத அவர் மண்டியா தொகுதியில் சுயேச்சையாக களமிறங்கினார்.

இதனையடுத்து மண்டியா தொகுதியில் குமாரசாமியின் மகன் நிகில் களமிறக்கப்பட்டார். ஆனால் உள்ளூர் காங்கிரஸார் இதனை ரசிக்கவில்லை. தங்களது முழு ஆதரவையும் நடிகை சுமலதாவிற்கே மறைமுகமாக அளித்து வந்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த குமாரசாமி, ஒருகட்டத்தில் வாய்விட்டே புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் குமாரசாமி பயந்தது போலவே தற்போது மண்டியா மக்களவை தொகுதி தேர்தல் முடிவுகள் வந்துள்ளன.

வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே முன்னிலை வகித்த நடிகை சுமலதா, இறுதி சுற்றின் போது நிகில் கவுடாவை விட 90,000 வாக்குகள் அதிகம் பெற்று அபார வெற்றியை தன் வசமாக்கியுள்ளார்.

சுயேட்சையாக நின்று வெற்றி பெற்ற சுமலதாவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

காதலித்து மகளை திருமணம் செய்த இளைஞன்… வீட்டிற்கு வரவழைத்து தந்தை செய்த மோசமான செயல்!!

தமிழகத்தில் சீர்திருத்த முறையில் காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞனை வீட்டிற்கு வரவழைத்து, பெண்ணின் தந்தை அவரை அடித்து விரட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயமுத்தூர் மாவட்டம் போத்தனூரை சேர்ந்தவர் ஜீவாஜெய்சன். இவர் தன்னோடு கல்லூரியில் படித்த வடவள்ளியைச் சேர்ந்த பெண்ணை சீர்திருத்த முறையில் கடந்த ஓராண்டுக்கு முன் திருமணம் செய்துள்ளார்.

இவர்களின் திருமணம் காந்திபுரத்தில் உள்ள பெரியார் திராவிடர் கழக அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், பெற்றோர் சம்மதம் தெரிவித்தவுடன் வருவதாக கூறி தாய் வீட்டுக்கு சென்ற பெண்ணுக்கு, தற்போது மாப்பிள்ளை பார்த்துள்ளனர்.

இதனால் உண்மை அறிந்த அப்பெண், தன் கணவன் ஜீவாஜெய்சன் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின் இதுகுறித்து, பெண் வீட்டாருக்கு தகவலும் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இருவரையும் தாம் சேர்த்து வைப்பதாக கூறிய பெண்ணின் தந்தை ராஜகோபால், ஆசை வார்த்தை கூறி வடவள்ளிக்கு வரவழைத்துள்ளார்.

முதலில் நன்றாக பேசிய பெண்ணின் தந்தை, உறவினர்கள் வந்தவுடன், இளைஞர் ஜீவா ஜெய்சனை சரமாரியாக அடித்து துரத்தியுள்ளார். அவரது கார் மற்றும் செல்போனையும் அவர்கள் பறித்து வைத்துள்ளனர். தப்பிவந்த ஜீவாஜெய்சன், தமது மனைவியை வீட்டில் அடைத்து வைத்துவிட்டு, தம்மை அடித்து துரத்தியதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

கிணற்றில் சடலமாக மிதந்த புதுப்பெண்… அவர் தமிழில் எழுதியிருந்த கடிதம்!!

தமிழகத்தில் திருமணமான ஒராண்டாண்டில் புதுப்பெண் கிணற்றில் சடலமாக கிடந்த நிலையில் அவர் எழுதியிருந்த கடிதத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வீரபத்திரன். இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டுகளே ஆன நிலையில், வீரபுத்திரன் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாக இருந்து வந்துள்ளார்

இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகாரறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் கடந்த சில மாதங்களாக வீரபத்திரன் மது அருந்தி வீட்டுக்கு வந்து சங்கீதாவிடம், அடிக்கடி நகை, பணம், மற்றும் டூவிலர் வாங்கி வருமாறு அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வழக்கம்போல் நேற்று முன்தினம் வீரபத்திரன் குடித்துவிட்டு வந்து சங்கீதாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே நேற்று வீட்டின் அருகே உள்ள வீரபத்திரனுக்கு சொந்தமான விவசாய கிணற்றில் சங்கீதா சடலமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டதோடு அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் மீட்டனர்.

அதில், நான் என் கணவர் குடித்தார் என்பதற்காக தான் செய்தேன், என் கணவர் தான் இதற்கெல்லாம் காரணம் என்றும் தனது கணவரின் ஊர் பெயர் மற்றும் அவரின் நகைகள் கணவரிடம் இருப்பதாகவும் எழுதியிருந்தது.

இதனிடையில் சங்கீதாவின் கணவர் வீரபத்திரனை கைது செய்து, சங்கீதா கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என இரு கோணங்களில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்தல் முடிவுகள் வரும் நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை குஷ்பு!!

தேர்தல் முடிவுகள் வரும் நேரத்தில் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நடிகையும், காங்கிரஸ் கட்சி பிரமுகருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19ஆம் திகதி முடிந்த நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

இந்நிலையில் தேர்தல் தொடர்பாக தனது கருத்துக்களை தொடர்ந்து கூறி வந்த நடிகையும், காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளருமான குஷ்பு டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் தொடர்பான தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க முடியாது. நாம் ஒரு திட்டம் போட்டால் இயற்கை அதை கலைத்து விடுகிறது என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்த தாய்!!

பொலன்நறுவை, கிரித்தலே- சரணசிறிகம பிரதேசத்தில் பெண்ணொருவர் தனது மூன்று பிள்ளைகளுக்கு விஷத்தை கொடுத்து விட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக மின்னேரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று பிற்பகல் நடந்துள்ளது.

மூன்று பிள்ளைகளில் 4 வயதான சிறுமி ஜெயந்திபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

ஆபத்தான நிலைமையில் இருக்கும் தாய் மற்றும் ஏனைய இரண்டு பிள்ளைகள் மேலதிக சிகிச்சைக்காக பொலன்நறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து மின்னேரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்தலில் அபார வெற்றி பெற்ற பிரபல நடிகை ரோஜா!!

ஆந்திராவின் நகரி சட்டமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிட்ட நடிகை ரோஜா வெற்றி பெற்றுள்ளார். இந்தியாவில் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் காலை முதல் எண்ணப்பட்டது.

ஆந்திராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதை தொடர்ந்து அந்த கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி அம்மாநில முதல்வராக முதல் முறையாக பதவியேற்கவுள்ளார்.

அந்த கட்சி சார்பில் நகரி தொகுதியில் போட்டியிட்ட நடிகை ரோஜா அபார வெற்றி பெற்றுள்ளார். ஏற்கனவே நகரி தொகுதி எம்.எல்.ஏ-வாக இருக்கும் ரோஜா மீண்டும் அந்த தொகுதியில் வெற்றி வாகை சூடியுள்ளார்.

நாளை பூமியை நெருங்கும் ‘சாத்தியமான ஆபத்தான சிறுகோள்’!!

சொந்த நிலவு ஒன்று உள்ள சுமார் ஒரு மைல் அகலமான விண்கல் ஒன்று நிமிடத்திற்கு 48000 மைல் வேகத்தில் நாளை பூமியை நெருங்கி கடந்து செல்லவுள்ளதாக தெரியவருகிறது.

இது தொடர்பான செய்தி இன்றைய தினம் அரச பத்திரியையொன்றில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும்,

1999 கே.டபிள்யூ 4 என்ற பெயர் கொண்ட இந்த விண்கல் 20 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டதோடு நிலவு ஒன்று வலம் வரும் அளவுக்கு அது பெரிதானதாகும்.

இந்த விண்கல் நாளை பூமியை நெருங்குகின்ற போதும் அதனுடன் பெரிய நிலவு ஒன்றையும் கொண்டிருப்பதால் வரும் 27ஆம் திகதி வரை அதனை காணக்கூடியதாக இருக்கும் என்று வானியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

1999 கே.டபிள்யூ 4 விண்கல் ஒப்பீட்டளவில் பூமியை நெருங்கி வருவதால் “சாத்தியமான ஆபத்தான சிறுகோள்” என ஸ்மித்சன் ஆஸ்ட் ரோபிசிக்கள் கண்காணிப்பகத்தின் சிறுகோள் மையத்தால் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விண்கல் பூமியில் இருந்து 3.2 மில்லியன் மைல்கள் நெருங்கி வரவுள்ளது. இது பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தூரத்தில் சுமார் 13 மடங்காகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து வெளியேற்றப்படும் 50 ஆயிரம் குடும்பங்கள்!!

கொழும்பில் வாழும் 50 ஆயிரம் குடும்பங்களை வெளியேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கொழும்பு நகரில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை அகற்றி, அந்தப் பகுதிகள் வர்த்தக நடவடிக்கைகக்கு வழங்கப்படவுள்ளது.

50 ஆயிரம் குடும்பங்கள் வாழும் 400 ஏக்கர் காணியில் வர்த்தக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

மாளிகாவத்தை ரயில் நிலையத்திற்கு சொந்தமான காணி, கெத்தராம அப்பிள் தோட்டம், ப்ளூமென்டல் பிரதேசத்தின் ஏரி, இரத்மலானை நீர்ப்பாசன காணி ஆகிய இடங்களில் வாழும் குடும்பங்கள் பிறிதொரு இடத்திற்கு மாற்றப்படவுள்ளனர்.

இவ்வாறு அகற்றப்படும் குடும்பங்களுக்காக 17000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய ஒரு குடும்பத்திற்கு 30 லட்சம் ரூபாய் பெறுமதியாக வீடு ஒன்றை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆசிய வங்கியினால் உட்கட்டமைப்பு வசதிக்காக வழங்கப்படும் கடன் திட்டத்தின் கீழ் இதற்காக நிதி வழங்கப்படவுள்ளது.

மேல் மாகாண மற்றும் மாநகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் அமைச்சரவையில் இந்த யோசனை சமர்ப்பிக்ப்பட்டுள்ளது.

பிரித்தானிய அரசியலில் திடீர் திருப்பம் : பதவியை ராஜினாமா செய்தார் பிரதமர்!!

பிரித்தானிய பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக திரேசே மே அம்மையார் அறிவித்துள்ளார். எதிர்வரும் ஜுன் மாதம் 7ஆம் திகதி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

புதிய பிரதமரை தெரிவு செய்ய வழி வகுக்கும் வகையில் தான் பதவி இராஜினாமா செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். Downing வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

2016ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய வாக்கெடுப்பிற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தான் மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Brexit வழங்க முடியவில்லை என்று ஒரு ஆழ்ந்த வருத்தம் தனக்கு எப்போதும் மீதமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

கன்சர்வேடிவ் கட்சி தலைமைத்துவத்திற்கு ஒருவர் போட்டியிட்டு வரும் வரை தான் பிரதமராக தொடர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 7ஆம் திகதி தனது பதவியை அவர் இராஜினாமா செய்த பின்னர் கட்சி தலைவருக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் வாரங்களில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா குருமன்காடு பகுதியில் வானுடன் மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்து : இருவர் படுகாயம்!!

வவுனியா குருமன்காட்டு பகுதியில் நேற்று (22.05.2019) இரவு 10.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் வீதியூடாக பயணித்த வான் வைரவப்புளியங்குளம் வைரவர் கோவில் வீதிக்கு திரும்ப முற்பட்ட சமயத்தில் வவுனியா நகரிலிருந்து மன்னார் வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கில் வானுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது .

இவ் விபத்தில் மோட்டார் சைக்கில் பயணித்த 22 வயது மதிக்கத்த இரு இளைஞர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா வர்த்தக நிலையங்களுக்கு பொலிஸார் விஷேட அறிவிப்பு!!

வவுனியாவிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு வவுனியா பொலிஸார் இன்று விஷேட அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளனர்.

அவரச காலச்சட்டத்திற்கு அமைவாக வவுனியா வர்த்தகர் சங்கத்தினால் வர்த்தக நிலையங்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட வியாபார நிலையங்களில் பணிபுரியும் உரிமையாளர்கள், ஊழியர்களின் விபரப் படிவத்தினை பூரணப்படுத்தி எதிர்வரும் திங்கட்கிழமை பிற்பகல் 4மணிக்குள் வர்த்தகர் சங்கத்தின் அலுவலகத்தில் அதனைக் கையளிக்குமாறு வவுனியா பதில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வி.எச்.ஸ்ரீ. சம்பத் பெரேரா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் 100 நாட்கள் போராட்டம் மேற்கொண்ட சுகாதாரத் தொண்டர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைப்பு!!

வவுனியாவில் தொடர்ச்சியாக 100நாட்கள் கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொண்ட சுகாதாரத் தொண்டர்கள் 154 பேருக்கு நேர்முகத் தேர்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுகாதாரத் தொண்டர்கள் ஒன்றிணைந்து கடந்த இரண்டு வருடத்திற்கு முன்னர் நியமனம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு அரசியல் தலைமைகளைச் சந்தித்து அமைச்சர்கள், ஆளுநர்கள் என பலதரப்பட்டவர்களின் சந்திப்புக்கள் இடம்பெற்று தற்போது நேற்று முதல் நேர்முகத் தேர்விற்கு 154 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத் தொண்டர்கள் சுகாதார சேவைகள் ஊழியர்களாக இணைத்து கொள்ளப்படுவதற்கான நேர்முக தேர்வு எதிர்வரும் 27ஆம் திகதி திங்கட்கிழமை வவுனியா மாவட்ட சுகாதாரப்பணிமனையில் இடம்பெறவுள்ளது.

இலங்கையில் கதாநாயகியாக மாறிய சிங்கள பெண் : 14 முஸ்லிம்களின் உயிரை போராடி காப்பாற்றினார்!!

கடந்த வாரம் வடமேல் மாகாணத்தில் இடம்பெற்ற இன வன்முறையின் போது 14 முஸ்லிம்களை காப்பாற்றிய சிங்கள பெண்ணொருவர் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.

தும்மோதர, மெல்லகெலே பிரதேசத்தை சேர்ந்த சுஜீவன சந்திமான என்ற பெண்ணே இந்த வீரச் செயலை செய்துள்ளார்.

கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற வன்முறையின் போது தும்மோதர, மெல்லகெலே பிரதேசத்தில் 500க்கு அதிகமான காடையர்கள் இணைந்து முஸ்லிம் மக்களின் வீடுகள், கடைகள் உட்பட சொத்துக்களுக்கு பாரிய சேதம் ஏற்படுத்தினர்.

இந்த சம்பவத்தை அனைவரும் வேடிக்கை பார்த்தார்களே தவிர யாரும் யாரையும் காப்பாற்றுவதற்கு முன்வரவில்லை. எனினும் தனது வீட்டிற்கு முன்னால் உள்ள முஸ்லிம் மக்களின் வீடுகள் உடைக்கப்பட்டு முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதனை அவதானித்த சுஜீவனி, வன்முறையாளர்களுக்கு மத்தியில் களமிறங்கியுள்ளார்.

குறித்த வீடுகளில் இருந்த முஸ்லிம் மக்களை உடனடியாக தனது வீட்டிற்கு அழைத்து வந்து பாதுகாப்பு வழங்கிய சுஜீவனி, வன்முறையாளர்களிடம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எனது ஆயலவர்களின் வீடுகளை சேதப்படுத்த வேண்டாம். அவர்கள் எங்கள் மக்கள். வீடுகளை உடைக்க வேண்டாம் என்று கோபத்துடன் கூச்சலிட்டுள்ளார்.

ஒரு மணித்தியாலம் இடம்பெற்ற வன்முறையின் போது 3 வீடுகளை சேர்ந்த 14 பேரின் உயிரைக் காப்பாற்ற சுஜீவனி நடவடிக்கை எடுத்துள்ளார்.

குறித்த 3 குடும்பங்களின் வீடுகளுக்கும் எவ்வித சேதம் ஏற்படுவதற்கும் சுஜீவனி இடமளிக்கவில்லை.

வன்முறை கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் சுஜீவனியின் அடைக்கலம் புகுந்தவர்கள் பாதுகாப்பாக தங்கள் வீடுகளுக்கு சென்றனர். வன்முறையில் தங்கள் வீடுகள் சேதமின்றி காப்பாற்றப்பட்டமை குறித்து முஸ்லிம் மக்கள் பெரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

500 காடையர்கள் வரை நுழைந்த கூட்டத்திற்கு மத்தியில் சுஜீவனி எங்களை காப்பாற்றியது ஆச்சரியமாக உள்ளதென காப்பாற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் தங்கள் நன்றியையும் அவர்கள் சுஜீவனிக்கு தெரிவித்துள்ளனர்.

நாடுகடத்தப்படும் ஆபத்தில் இலங்கை தமிழ்க் குடும்பம்!!

அவுஸ்திரேலியாவில் நாடு கடத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள நிலையில் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருக்கும் நடேசலிங்கம்-பிரியா குடும்பத்தினருக்கு ஆதரவாக தொடர்ந்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், போராட்டத்தை நடத்திவரும் ஆதரவாளர்கள் லிபரல் கூட்டணி ஆட்சிபீடமேறினாலும் தங்களது முயற்சியில் தாங்கள் சோர்ந்துவிடவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

அந்நாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,

பிரதமர் Scott Morrison, உள்துறை அமைச்சர் Peter Dutton உட்பட அரசின் முக்கியஸ்தர்கள் அனைவருக்கும் நடேசலிங்கம்-பிரியா குடும்பத்தினரின் நாடுகடத்தலை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி தொடர் கோரிக்கை விடுக்கப்படுகின்றது.

நாங்கள் வாக்களித்துள்ள அரசியல்வாதிகள் எங்களது குரலுக்கு செவிசாய்க்கவேண்டும்” என நடேசலிங்கம்-பிரியா குடும்பத்தினருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை தூதரக உயர்மட்ட அதிகாரி லால் ராஜ் விக்ரமதுங்க கருத்து தெரிவிக்கையில்,

“இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை நடேசலிங்கம்-பிரியா தம்பதியினர் இலங்கைக்கு திரும்பிச்செல்வதில் எந்தப்பிரச்சினையும் இல்லை.

அவர்கள் மாத்திரமல்ல வெளிநாடுகளிலுள்ள சகல இலங்கை மக்களும் அவர்களது சொந்தநாட்டுக்கு திரும்பி வரலாம் என்பதுதான் இலங்கை அரசின் தொடர்ச்சியான கோரிக்கையும் நிலைப்பாடாகும்” என தெரிவித்துள்ளார்.

காதிர்காம ஆலயத்தை நோக்கி படையெடுத்துள்ள பக்தர்கள்!!

நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ் நிலையினையும் பொருட்படுத்தாது கதிர்காம யாத்திரிகள் பலர் தமது நேத்திக் கடனை செலுத்தும் முகமாக கதிர்காமம் நோக்கி கால்நடையாக பாத யாத்திரை செல்லும் தமது பயணத்தினை ஆரம்பித்துள்ளனர்.

அந்த வகையில் நேற்று மட்டக்களப்பு வழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் தரித்து நின்ற யாத்திரை குழுவினர் இன்று காலை தமது யாத்திரை பயணத்தினை மீண்டும் தொடர்ந்தனர்.

குறித்த யாத்திரை குழுவானது வேல்சாமி துரைச்சாமி தலைமையில் வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி முருகன் ஆலயத்தில் இருந்து கடந்த16ஆம் திகதி தங்களது யாத்திரையினை ஆரம்பித்துள்ளனர்.

எதிர்வரும் 01.07.2019 ஆம் திகதி கதிர்காமத்தினை சென்றடையவுள்ளதாக குழுவின் தலைவர் வேல்சாமி துரைசாமி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் எதிர்வரும் 2.7.2019 ஆம் திகதி கதிர்காம ஆலயத்தின் கொடியேற்றம் ஆரம்பித்து 16.7.2019ஆம் திகதி ஆடிப் பூரணை தினமன்று தீர்தோற்சவத்துடன் ஆலய பூசை நிகழ்வுகள் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.