9 வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த வளர்ப்புத் தாய் : நெஞ்சை உருக்கும் சம்பவம்!!

அமெரிக்காவில் 9 வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த இந்திய வம்சாவளி வளர்ப்பு தாயார் குற்றவாளி என கியூன்ஸ் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த 55 வயதான ஷம்தாய் அர்ஜுன் என்பவரே தமது 9 வயதேயான வளர்ப்பு மகளை மிகவும் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

கொல்லப்படுவதற்கு 3 மாதங்கள் முன்னரே அஷ்தீப் கவுர் தமது உறவினர்களுடன் பஞ்சாபில் இருந்து அமெரிக்காவின் கியூன்ஸ் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஷம்தாய் தொடர்ந்து சிறுமி அஷ்தீப் கவுரை துன்புறுத்தி வந்துள்ளார். மட்டுமின்றி கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டி வந்துள்ளார்.

சம்பவம் நடந்த 2016 ஆகஸ்டு மாதம் ஷம்தாயின் பேரப்பிள்ளைகள் இருவருடன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளனர்.

அப்போது அண்டை வீட்டார் சிறுமி அஷ்தீப் தொடர்பில் விசாரித்துள்ளனர். அதற்கு பதிலளித்த ஷம்தாய் அவர் குளித்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இதில் சந்தேகமடைந்த அண்டை வீட்டார் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் மேற்கொண்ட விசாரணையில்,

குடியிருப்பினுள் சிறுமி அஷ்தீப் நிர்வாணமாக கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், சிறுமியை ஷம்தாய் துன்புறுத்தி வந்தது அம்பலமானது.

இந்த வழக்கு தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவந்த கியூன்ஸ் நீதிமன்றம் எதிர்வரும் ஜூன் 3 ஆம் திகதி தீர்ப்பை வெளியிட உள்ளது. அவர் மீதான குற்றம் நிரூபணமான நிலையில் 25 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம் என கூறப்படுகிறது.

காதலனுக்கு எதிராக கூலிப்படையை ஏவிய தமிழ் டென்னிஸ் நட்சத்திரம் : கைதுசெய்த பொலிஸ்!!

தமிழ் டென்னிஸ் நட்சத்திரம்

ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை மொபைலில் இருந்து அழிக்க மறுப்பு தெரிவித்த காதலனுக்கு எதிராக கூலிப்படையை ஏவிய முன்னாள் டென்னிஸ் நட்சத்திரம் கைது.

அமெரிக்காவில் கல்வி பயின்றுவரும் முன்னாள் தேசிய 14 வயதுக்கு உட்பட்ட டென்னிஸ் நட்சத்திரம் வாசவி கணேசன் என்பவரே சென்னை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

20 வயதான வாசவியும் சென்னையில் குடியிருக்கும் நவீத் அகமது பேஸ்புக் மூலம் நட்பாகி பின்னர் இருவரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த வாரம் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய வாசவி ஹொட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார்.

இந்த நிலையில் நவீதை சந்தித்து பேசியதாகவும், இருவரும் புகைப்படம் ஒன்றையும் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் புகைப்படம் எடுத்துக்கொண்டதில் வாசவிக்கு உடன்பாடில்லை எனவும், இருவரும் இதனால் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த நவீத் ஹெல்மெட்டால் வாசவியின் தலையில் தாக்கிவிட்டு, அவரிடம் இருந்த தமது மொபைல் போனை பறித்துக் கொண்டு மாயமாகியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த வாசவி, அந்த மொபைலை திரும்ப பெறவும், நவீதை தண்டிப்பதற்காகவும் நண்பர்கள் குழு ஒன்றிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

இதனையடுத்து வேளச்சேரி பகுதியில் உள்ள கணேசன், பாட்சா, பாஸ்கர் உள்ளிட்ட கும்பல் ஒன்று நவீதை கடத்திச் சென்று கடுமையாக தாக்கியுள்ளது. மட்டுமின்றி நவீதிடம் இருந்து மொபைலை பறித்த அந்த கும்பல், அவரை விடுவிக்க 2 லட்சம் பணம் கேட்டு அவரது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தது. ஆனால் பணம் கிடைக்கவில்லை என்பதால் நவீதை விட்டுவிட்டு அந்த கும்பல் தலைமறைவாகியுள்ளது.

இதனையடுத்து நவீத் அளித்த புகாரின் அடிப்படையில் 3 பேர் கும்பலை பொலிசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் வாசவி தொடர்பில் தகவல் வெளிச்சத்துக்கு வந்தது. இதனையடுத்து வாசவியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மறைந்த நடிகர் ஜே.கே.ரித்தீஷ் மனைவி மீது பரபரப்பு புகார்!!

ஜே.கே.ரித்தீஷ்

மாரடைப்பால் இறந்த நடிகர் ஜே.கே.ரித்தீஷின் மனைவி தனக்கு கொலை மிரட்டல் விடுவதாக, அவருடைய வீட்டு பணியாளர் பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

நடிகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜே.கே.ரித்தீஷ் கடந்த மாதம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

இந்த நிலையில் அவருடைய மனைவி மீது வீட்டில் வேலை செய்து வந்த கேசவன் என்பவர் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், “கடந்த 10 ஆண்டுகளாக ஜே .கே .ரிதீஷிடம் தான் பணியாற்றி வருவதாகவும். அவர், அவருக்கு சொந்தமான வீட்டில் தன்னையும் தன்னுடைய குடும்பத்தினரையும் தங்கி கொள்ளுமாறு கொடுத்து விட்டார் எனவும்.

இதனால் அவரிடம் பணி செய்ததற்கான ரூ.4 லட்சம் பணத்தை நான் பெறவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் தற்போது அவருடைய மனைவி ஜோதி, தனக்கு வர வேண்டிய தொகை ரூ.4 லட்சத்தை கொடுக்காமல், வீட்டை காலி செய்ய வேண்டும் என, அடியாட்களுடன் வந்து ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுப்பதாக தெரிவித்துள்ளார்.

அதே போல் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், ஜோதியிடம் வீட்டை கொடுத்துவிட்டு ஓடிவிடு என, தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்ததாகவும் தன்னுடைய புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தற்போது பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செல்பி மோகத்தால் நேர்ந்த விபரீதம் : பரிதாபமாக உயிரிழந்த பெண்!!

பரிதாபமாக உயிரிழந்த பெண்

கோவா கடற்கரையில் செல்பி எடுக்க முயன்ற போது கடல் அலையில் சிக்கி இளம் பெண் மருத்துவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ரம்யா கிருஷ்ணா. மருத்துவரான இவர் கோவா அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று மாலை ரம்யா கிருஷ்ணா கடற்கரைக்கு சென்றார்.

அப்போது கடலை பின்புலமாகக் கொண்டு அவர் தமது செல்போனில் செல்பி எடுக்க முயன்ற போது திடீரென எழுந்த ராட்சத அலை அவரை கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதில் பரிதாபமாக உயிரிழந்த ரம்யா கிருஷ்ணாவின் உடலை மீனவர்களும் காவல்துறையினரும் கடலுடன் போராடி மீட்டனர்.

ரம்யா கிருஷ்ணாவின் உடல் இன்று காலை அவருடைய சொந்த ஊருக்கு இறுதிச் சடங்குகளுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. செல்பி மோகத்தால் அரசு மருத்துவராகப் பணியாற்றி வந்த இளம் பெண் உயிரிழந்தது ஊர் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

புகையிரதத்தில் திருடி மலேசியாவில் சொந்த ஹோட்டல் வாங்கிய திருடன் சிக்கினான்!!

தமிழ்நாடு – கேரளா செல்லும் ரயில்களில் நான்கு ஆண்டுகளாக திருடி வந்த கொள்ளையன் மலேசியாவில் சொந்த ஓட்டல் வாங்கி நிர்வாகித்து வந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கேரளா மாநிலம் திரிச்சூரைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்ற நபரே இக்கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

சம்பவம் குறித்து பேசிய ரயில்வே டிஐஜி பாலகிருஷ்ணன், ரயிலில் தொடர்ந்து கொள்ளையடித்து வந்த கொள்ளையன் பிடிபட்டுள்ளான். 4 ஆண்டுகளாக ரயில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த சாகுல் ஹமீதுவிடம் இருந்து 110 சவரன் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்யும் ஹமீது, உடன் பயணிக்கும் பயணிகளுடன் கனிவாகப் பேசி நட்புப் பாராட்டி, இரவில் அவர்கள் உறங்கும் போது அவர்களது உடைமைகள், நகைகளைக் கொள்ளையடிப்பதை தொழிலாகச் செய்து வந்துள்ளான்.

தமிழ்நாடு – கேரளா செல்லும் ரயில்களை குறிவைத்து சாகுல் ஹமீது திருடி வந்ததுள்ளான். என்னதான் பலே கொள்ளையனாக இருந்தாலும், ஒரு நாள் அகப்பட்டுத்தானே ஆக வேண்டும். அவன் ரயிலில் திருடி, 11 வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றதுடன் மலேசியாவில் சொந்தமாக ஒரு ஓட்டலை வாங்கி நிர்வகித்து வருகிறான் என டிஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பாடசாலையில் தூக்கில் தொங்கிய இளம் காதல் ஜோடி!!

இளம் காதல் ஜோடி

ஐதராபாத் மாநிலத்தில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம் காதல் ஜோடி, அரசுப்பள்ளியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

ஐதராபாத் மாநிலத்தை சேர்ந்த கனகையா (21), தாரா (19) ஆகியோர் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களுடைய காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த இருவரும் புதன்கிழமை இரவு வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

வியாழக்கிழமையன்று Lakudaram பகுதியில் உள்ள ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளியில், மின்விசிறியில் தூக்கிட்டபடியே இருவரும் சடலமாக தொங்கியுள்ளனர்.

இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பேருந்தில் முச்சக்கரவண்டி மோதி விபத்து : இருவர் காயம்!!

இருவர் காயம்

வெல்லவாய – தனமல்வில வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இருவர் காயமடைந்துள்ளனர். முச்சக்கரவண்டியொன்று பேருந்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது. முச்சக்கரவண்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தொன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் புத்தல பெல்வத்த பிரதேசத்தை சேர்ந்த ஆண் மற்றும் பெண்ணொருவர் காயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் வெல்லவாய காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!!

மாணவர்களுக்கு..

இலங்கையில் அசாதாரண சூழ்நிலை காணப்பட்டாலும், திட்டமிட்டபடி அனைத்து பரீட்சைகளும் நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

2019ம் ஆண்டுக்கான கபொத உயர்தர பரீட்சை ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி முதல் 31ம் திகதி வரை நடைபெறும் என ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

ஐந்தாமாண்டுக்கான புலமைபரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி இடம்பெறும். இதேவேளை, டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள கபொத சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 24 ஆம் வரை ஏற்றுக் கொள்ளப்படுமென பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இறந்த தாயிடம் பால் குடித்த எட்டு மாத குழந்தை : முதலாவதாக சுடரேற்றிய முள்ளிவாய்க்கால் துயரின் சாட்சி!!

இறந்த தாயிடம் பால் குடித்த எட்டு மாத குழந்தை

தமிழின அழிப்பின் பத்தாவது ஆண்டு நினைவேந்தலை நாம் இன்று கண்ணீருடன் அனுஷ்டித்து கொண்டிருக்கின்ற போதும் யுத்தம் நம் இதயங்களில் தந்து சென்ற வடு எத்தனை வருடங்கள் கடந்தாலும் மாறாதது.

நூற்றுக்கணக்கான பொலிஸார் பலத்த பாதுகாப்பை வழங்க இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் மண் எமது உறவுகளின் கண்ணீரில் நனைந்துள்ளது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் துயர் சுமந்து நிற்கும் எம் உறவுகளுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் துயரின் சாட்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் சிறுமி ராகினி இன்று பொது ஈகைச்சுடரை முதன்முதலாக ஏற்றிவைத்திருந்தார்.

முள்ளிவாய்க்கால் யுத்தம் நடந்தபோது இலங்கை அரச படைகள் நடத்திய கோரத் தாக்குதலில் சிறுமி ராகினி தனது கையொன்றை பறிகொடுத்திருந்தார். அதைவிட பேரவலம் என்னவெனில் இறந்த தனது தாயிடம், அப்போது பிறந்து எட்டு மாதங்களே ஆகியிருந்த ராகினி பால் குடித்த காட்சி தான்.

தாயின் உயிர் பிரிந்தது அறியாமல், தந்தை படுகாயங்களுக்கு இலக்காகி உயிருக்கு போராடி கொண்டிருந்தது தெரியாமல் அந்த எட்டு மாத பச்சிளம் குழந்தை தாயிடம் பால் குடித்த காட்சி அனைவரது நெஞ்சையும் கனக்கச் செய்து விட்டது.

தற்போது ராகினி அப்பம்மாதான் பாதுகாப்பில் வளர்ந்து வரும் நிலையில் பதினொரு வயது சிறுமியான அவரே இன்று ஈகைச்சுடரை ஏற்றி நினைவேந்தலை ஆரம்பித்து வைத்துள்ளமையாது முள்ளிவாய்க்கால் பேரவலத்தை கண்முன்னே கொண்டு வந்துள்ளது.

ராகினி போன்ற எத்தனையோ குழந்தைகள் இறுதி யுத்தத்தின் போது தாயை இழந்து வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். இன்னும் எத்தனையோ துயரங்கள் நினைக்கும் போது பதறுகிறது நெஞ்சம்.

ஆயிரக்கணக்கானோரின் கண்ணீருடன் ஏற்றப்பட்டது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான ஈகைச்சுடர்!!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் 10வது ஆண்டு நினைவேந்தல் தற்போது தமிழர் தாயக்கத்தில் அனுஸ்டிக்கப்படுகின்ற நிலையில் சற்று முன்னர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் பிரதான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.

இறுதி யுத்த நேரத்தில் தனது தாயாரை இழந்து நிர்க்கதியாக இருக்கும் சிறுமி ஒருவர் பிரதான ஈகைச் சுடரினை ஏற்றி வைத்தார்.

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் ஒன்று திரண்டுள்ள ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீருடன் இந்த முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

மதத் தலைவர்கள் பலரின் பங்களிப்புடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. தொடர்ந்து அங்குள்ள மதகுருமார்கள் உயரிழந்தவர்களை நினைவுகூர்ந்து மலரஞ்சலி செலுத்தியுள்ளனர்.

பிரதான ஈகைச் சுடர் ஏற்றிவைக்கப்ட்டதன் பின்னர் அங்கு அணித்திரண்டுள்ள பொதுமக்களால் சுடர்கள் ஏற்றப்படுகின்றன. தொடர்ந்து திருகோணமலை ஆதீனத்தின் தலைவரால் மே 18 ஆம் நாள் பிரகடணம் வாசிக்கப்பட்டது.

உதவியை நானே தொடங்கி வைக்கிறேன் : பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிதியுதவி செய்யும் மனிதர் : குவியும் பாராட்டுகள்!!

இலங்கையில் இஸ்லாமியர்களின் கடைகள், வீடுகள் மீது சில தினங்களுக்கு முன்னர் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு நிதியுதவி வழங்க தொழிலதிபர் ஒருவர் முன் வந்துள்ளதோடு, மற்றவர்களும் உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

இலங்கையில் இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் சில தினங்களுக்கு முன்னர் தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்லாமியர்களுக்கு சொந்தமான கடைகள், வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதோடு மசூதிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் பலரின் உடைமைகள், பொருட்கள் சேதமடைந்தது.

இந்நிலையில் தனுஷ்க டி சில்வா என்ற நபர் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், டுவிட்டரில் உள்ள சிங்கள மக்களுக்கு ஒரு வேண்டுகோள். அழிக்கப்பட்ட இஸ்லாமியர்களின் சொத்துகள், உடைமைகளை திரும்ப பெற நிதி திரட்ட முடியுமா? நாம் தான் இதற்கு உதவ வேண்டும்.

நான் என் சொந்த பணத்தில் இருந்து ரூ 50,000 கொடுத்து இதை தொடங்கி வைக்கிறேன். நீங்களும் உங்களால் முடிந்ததை கொடுங்கள், ஒருவர் ரூ.1000 கொடுத்தால் கூட போதுமானது. என் பதிவு அதிக நபர்களிடம் சென்றடைய இதை பகிருங்கள் என பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து தனுஷ்காவின் மனித நேய செயலுக்கு டுவிட்டரில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் பேரவல 10ம் ஆண்டு நினைவேந்தல்!!

10ம் ஆண்டு நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் பேரவல 10 ம் ஆண்டு நினைவேந்தல் வவுனியா அருள்மிகு ஸ்ரீ துர்கை அம்மன் ஆலயத்தில் இன்று (18.05.2019) காலை 9 மணியளவில் இடம்பெற்றது.

ஆலய நிர்வாகத்தினரும் தமிழ்விருட்சம் அமைப்பினரும் இணைந்து நடாத்திய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் முள்ளிவாய்க்காலில் தமது கணவனை, பிள்ளைகளை , உறவுகளை இழந்த 10 குடும்பங்களின் பங்குபற்றலோடு அநியாயமாக கொல்லப்பட்ட அந்த உறவுகளின் ஆத்ம சாந்திக்கு விசேட பூசையும், மோட்ச அர்ச்சனையும் , நெய்தீபம் ஏற்றி வழிபடும் நிகழ்வும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.

இறுதி யுத்தத்தின் போது எமது மக்கள் அருந்திய உப்பு அற்ற கஞ்சியினை அனைவரும் அருந்தினார்கள். இறுதியில் முள்ளிவாய்க்காலில் தமது உறவுகளை இழந்த பத்து குடும்பத்தினருக்கு தமிழ் விருட்சம் அமைப்பினரினால் உலர்உணவு பொருட்கள் அடங்கிய பொதியும் வழங்கி வைக்கப்பட்டது.

இவ் நினைவேந்தல் நிகழ்வில் ஆலய நிர்வாகத்தினர், தமிழ் விருட்சம் அமைப்பினர், வர்த்தகர்கள், பிரதேச கலாச்சார உத்தியோகத்தர், நகரசபை உறுப்பினர், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

சமூக வலைதளங்கள் மீதான தடை நீக்கம் : பொலிஸார் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!!

பொலிஸார் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் வன்முறையை தூண்டும் வகையிலுமான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர இதனை தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலையை தொடர்ந்து சமூக வலைதளங்கள் அனைத்தும் முடிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், நேற்று மாலை முதல் அந்த தடை நீக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “தற்போது நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது. இவ்வாறாக அமைதியை பேணுவதற்கு உதவிய பலர் உள்ளனர்.

அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். இதேவேளை அமைதியை சீர்குலைக்கும் வகையிலான செயற்பாடுகளிலும் சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடுபவர்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன், வன்முறையை தூண்டும் வகையிலான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்பவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதற்காக பொலிஸ் தலைமையகத்தினால் விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் தொடர் பரிசோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆகவே, இத்தகைய வன்முறையை தூண்டும் வகையிலாக சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்பவர்கள் தொடர்பில் முதலில் கண்டறியப்பட்டவுள்ளது.

பரிசோதனை நடவடிக்கைகளுக்கு பின்னதாக அவ்வாறன பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வோர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவர் எனவும் தெரிவித்தார்.

பள்ளிவாசலுக்கு பாதுகாப்பு வழங்கிய பௌத்த, கிறிஸ்தவ மத குருக்கள்!!

பௌத்த, கிறிஸ்தவ மத குருக்கள்

மினுவாங்கொடை மஸ்ஜிதுல் ஹுஜ்ஜாஜ் பள்ளிவாசலில் நேற்று இடம்பெற்ற ஜும்மா தொழுகையின் போது பௌத்த மற்றும் கிறிஸ்தவ மதத்தை சேந்த மதகுருக்கள் பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.

கடந்த மாதம் 21ம் திகதி இடம்பெற்ற தற்கொலை தாக்குதலை தொடர்ந்து, அண்மை காலமாக நாட்டின் பல இடங்களிலும், வனமுறை தலைத்தூக்கியிருந்தது. இதன்போது இஸ்லாமியர்களின் கடைகள், நிறுவனங்கள் மற்றும் மசூதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன.

குறிப்பாக மினுவாங்கொடை பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கெதிராக இடம்பெற்ற இனவாத வன்முறை சம்பவத்தில் மினுவாங்கொடை மஸ்ஜிதுல் ஹுஜ்ஜாஜ் பள்ளிவாயில் கடுமையாக தாக்கப்பட்டு சேதங்களுக்குள்ளாக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே, குறித்த பள்ளிவாசலில் நேற்று இடம்பெற்ற ஜும்மா தொழுகையின் போது பௌத்த மற்றும் கிறிஸ்தவ மதத்தை சேந்த மதகுருக்கள் பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.

குறித்த பிரதேசத்தை சேர்ந்த பெளத்த விகாரை ஒன்றின் மதகுரு ஒருவரும் கிறிஸ்தவ குருக்கள் இருவரும் தொழுகை வேளையில் பள்ளிவாயலில் அமர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நாடுகடத்தப்படும் ஆபத்தில் இலங்கை தமிழ் சகோதரர்கள் இருவர்: குழப்பத்தில் இருப்பதாக கண்ணீர்த் தகவல்!!

இலங்கை தமிழ் சகோதரர்கள்

அகதிகள் அந்தஸ்தை பெற தகுதி இல்லை எனக் கூறி இலங்கை தமிழ் இளைஞர்கள் இருவரை நாடுகடத்தும் முடிவுக்கு சுவிஸ் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் கடந்த 5 ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர் இலங்கை தமிழ் சகோதரர்களான ஜெலக்சன் (18) மற்றும் ஜெசிபன் (17).

கடும் உழைப்பாளிகளும் திறமைசாலிகளுமான இருவருக்கும் தற்போது அகதிகள் அந்தஸ்தை வழங்க முடியாது என சுவிட்சர்லாந்தின் இடம்பெயர்வுக்கான மாநில செயலகம் உறுதிபட தெரிவித்துள்ளது. மட்டுமின்றி கடந்த பிப்ரவரி மாதம் சுவிட்சர்லாந்தின் மத்திய நிர்வாக நீதிமன்றம் இந்த விவகாரத்தை உறுதியும் செய்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் தாங்கள் பாதுகாப்பையும் முன்னேற்றத்தையும் உணவர்வதாக ஜெலக்சன் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் பட்டப்படிப்பை முடித்த ஜெலக்சன் தற்போது பாடசாலை ஒன்றில் துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவரது சகோதரர் ஜெசிபன் கால்பந்தாட்டத்தில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளதால் கால்பந்து அணி ஒன்றில் இணைந்து செயல்பட்டு வருகிறார்.

தற்போது சகோதரர்கள் இருவரும் நாடுகடத்தப்படும் ஆபத்தில் இருப்பதால் இருவரும் மனமுடைந்து காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

சுவிஸில் தங்களுக்கு கிடைக்கப்பெற்ற தரமான கல்வி என்பது இலங்கையில் வாய்ப்பே இல்லை என கூறும் ஜெலக்சன், இலங்கை சென்று என்ன செய்யப் போகிறோம் என்பது தொடர்பில் குழப்பமாகவே உள்ளது என்கிறார்.

மட்டுமின்றி கடந்த ஏப்ரல் மாதம் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பது மட்டுமின்றி, தீவிரவாதம் என்றாலே பயமாக இருக்கிறது என தெரிவித்துள்ளார் ஜெலக்சன்.

கடந்த 2014 ஆம் ஆண்டு தாயாரின் கடுமையான முயற்சியால் சகோதரர்கள் இருவரும் சுவிட்சர்லாந்துக்கு குடிபெயர்ந்ததாக கூறும் ஜெலக்சனின் உறவினர் ஷார்மி ரவி,

ஜெலக்சனின் தந்தை தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவாளர் என்பதால் ராணுவம் தொடர்ந்து அச்சுறுத்தலை அளித்து வந்தது என்றார்.

தற்போதைய சூழலில் ஜெலக்சனும் சகோதரரும் இலங்கை சென்றால், கண்டிப்பாக ராணுவத்தின் கையில் சிக்க வாய்ப்புள்ளது எனவும் ஷார்மி ரவி அச்சம் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த இளம் வயதில் இலங்கை சென்று புதிதாக ஒரு வாழ்க்கை முன்னெடுப்பது என்பது கடினமான விடயம் எனவும் ஷார்மி ரவி தெரிவித்துள்ளார்.

சகோதரர்கள் இருவரையும் நாடுகடத்தும் முடிவுக்கு சுவிட்சர்லாந்தின் மத்திய நிர்வாக நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதை கடுமையாக விமர்சித்த Urs Hofer என்ற ஆசிரியர்,

இருவரும் திறமைசாலிகள் எனவும் தொழில் ரீதியாக சுவிட்சர்லாந்தில் அவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இலங்கையில் தற்போதுள்ள சூழலை குறிப்பிட்டு மீண்டும் புகலிடம் கோரி விண்ணப்பம் வழங்க சட்ட நிபுணர்கள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

நெஞ்சார்ந்த நன்றி : இலங்கை குண்டுவெடிப்பில் 3 பிள்ளைகளை இழந்த கோடீஸ்வர தம்பதி வெளியிட்ட உருக்கமான அறிக்கை!!

இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலில் தனது மூன்று குழந்தைகளை இழந்த கோடீஸ்வரர் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் 253 பேர் கொல்லப்பட்டனர். இதில் ஸ்கொட்லாந்தை சேர்ந்த பெரிய கோடீஸ்வர தொழிலதிபர் ஆண்டர்ஸ் ஹோல்ச் மற்றும் அன்னி தம்பதிகளின் மூன்று பிள்ளைகளான அல்மா (15), அக்னீஸ் (12) மற்றும் அல்பிரட் (5) ஆகியோரும் அடக்கமாகும்.

இந்நிலையில் பிள்ளைகளை இழந்து தவித்து கொண்டிருக்கும் தங்களுக்கு ஆறுதலான வார்த்தைகளை கூறி மனதை தேற்றியவர்களுக்கு ஆண்டர்ஸ் – அன்னி தம்பதி நன்றி கூறி உருக்கமான அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

அதில், எங்கள் மூன்று பிள்ளைகளை இழந்த பின்னர் எங்களுக்கு கிடைத்த இரங்கல்கள், அனுதாபங்கள் மற்றும் மனதை தேற்றும் வார்த்தைகளுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம். எங்களுக்கு ஆறுதல் அளிக்க கூறப்பட்ட பலவார்த்தைகள் எங்கள் இதயத்தை தொட்டது.

இலங்கை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கும் எங்களின் இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம். எங்கள் மூன்று குழந்தைகளின் நினைவுகள் மற்றும் எண்ணங்கள் எப்போதும் எங்கள் இதயத்தில் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

ஆண்டர்ஸ் – அன்னி தம்பதிக்கு மொத்தம் நான்கு பிள்ளைகள் என்ற நிலையில் தற்போது மகள் ஆஸ்டிரிட் உடன் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.