விடுதலைப் புலிகளின் சீருடையுடன் எலும்புக் கூடு ஒன்று மீட்பு!!

முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடையுடன் மனித எலும்புக் கூடு ஒன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் மேற்கு மீனவ சங்கத்தினரின் காணியில் புதிய கட்டம் ஒன்றின் நிர்மாணத்திற்காக குழி தோண்டப்பட்டபோதே குறித்த எலும்புக் கூடு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த எலும்புக் கூட்டுடன் சயனற் குப்பி ஒன்றும், இரண்டு கைக்குண்டுகளும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா புதுக்குளம் சித்தி விநாயகர் ஆலயத்தின் சித்திரத் தேர் மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம்!!

அடிக்கல் நாட்டு வைபவம்

வவுனியா புதுக்குளம் சித்தி விநாயகர் ஆலயத்தின் சித்திரத் தேர் மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம் இன்று வெள்ளிக்கழமை (17.05.2019) நடைபெற்றது 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த புதுக்குளம் சித்தி விநாயகர் ஆலயத்தின் சித்திரத் தர் செய்யபட்டிருந்த நிலையில் அத்தேர் மண்டபத்திர்கான அடிக்கல் நாட்டு வைபவம் இன்று நடைபெற்றது.

முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சத்தியலிங்கம் அவர்களும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களும் முதல் அடிக்கல்லை நாட்டிவைத்தனர்

பாராளுமன்ற உறுப்பினர்களது நிதி ஒதுக்கீட்டின் மூலமும் மக்கள் பங்களிப்புடனும் 6 மில்லியன் ரூபா செலவில் 30 அடி உயர மண்டபம் நிர்மாணிக்கப்படவுள்ளது

வவுனியா மாவட்டத்தில் புரதான விவசாயக் கிராமமான புதுக்குளம் கிராமத்தில் அமையப்பெற்ற சித்தி விநாயகர் ஆலயத்தின் நான்காவது குப்பாவிசேகம் 2014ஆம் ஆண்டு நடைபெற்றிருந்தது. இவ்வரலாற்று சிறப்புமிக்க ஆலையத்திற்கு சித்திர தேர் வருவதையிட்டு மக்கள் மகிழ்வுடனுள்ளனர்

இந்நிகழ்வின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

வவுனியா மக்களுக்கு கிடைத்துள்ள அதிர்ச்சித் தகவல்!!

அதிர்ச்சித் தகவல்

நீர்கொழும்பில் உள்ள வெளிநாட்டு பிரஜைகள் வவுனியா பூந்தோட்டம் அகதி முகாமினை இன்று (17.05.2019) இரவு 8.30 மணியளவில் வந்தடைந்தனர்.

நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலையடுத்து அகதி அந்தஸ்து கோரிய நிலையில் நீர்கொழும்பில் வசித்து வந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 700 வரையிலான அகதிகளை அங்கிருந்து வெளியேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இதனையடுத்து அந்த மக்களை வேறு பகுதிகளில் தங்க வைப்பதற்கான முயற்சிகளை ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.

இந் நிலையில் பாகிஸ்தான் பிரஜைகள் 19 மற்றும் ஆப்கானிஸ்தான் பிரஜைகள் 16 பேர் மொத்தமாக 35 வெளிநாட்டு பிரஜைகள் நீர்கொழும்பிலிருந்து அழைத்து வரப்பட்டு இன்று (17.05.2019) இரவு 8.30 மணியளவில் வவுனியா பூந்தோட்டம் அகதி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு உத்தரவை மீறி இந்து பெண்ணின் பிரசவத்திற்கு உதவிய முஸ்லிம் ஆட்டோ ஓட்டுநர்!!

உதவிய முஸ்லிம் ஆட்டோ ஓட்டுநர்

அசாம் மாநிலத்தில் பிரசவ வலியால் துடித்த இந்து கர்ப்பிணி பெண்ணுக்கு, ஊரடங்கு உத்தரவையும் மீறி உதவி செய்த முஸ்லிம் ஆட்டோ ஓட்டுனரின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த கலவரத்தால் ஹைலிகாண்டி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரூபன் தாஸ் என்பவரது மனைவி நந்திதாவிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், ஆம்புலன்ஸ் நிர்வாகம் போன் அழைப்பை எடுக்காமல் இருந்துள்ளனர்.

12 கிமீ தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு, ஆட்டோ, கார் என ஒருவரும் வர மறுத்துவிட்டனர். இதற்கிடையில் நந்திதாவிற்கும் பிரசவ வலி அதிகரித்துள்ளது. மனைவியை சரிசெய்ய முயன்ற ரூபன் தாஸ், உதவிக்கு ஆள் யாரும் இல்லாததால் செய்வதறியாமல் திகைக்க ஆரம்பித்துள்ளார். அந்த சமயத்தில் தான் ரூபன் தாஸின் பக்கத்து வீட்டை சேர்ந்த மக்பூல் ஹுசைன் என்கிற ஆட்டோ ஓட்டுநர் உதவ முன்வந்துள்ளார் .

ஊரடங்கு உத்தரவையும் மீறி நந்திதாவை தன்னுடைய ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு கிளம்பியுள்ளார். அந்த நேரத்தில் பயத்துடனே இருந்த ரூபன் தாஸிற்கு ஆறுதல் கூறியபடியே, காலியாக இருந்த சாலையில் வேகமாக ஆட்டோவை ஒட்டி நந்திதாவை மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.

அங்கு நந்திதாவிற்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு சாந்தி (சமாதானம்) என பெயரிடப்பட்டது. இந்த நிலையில் சம்பவம் குறித்து கேள்விப்பட்ட மாட்ட இணை ஆணையர் கீர்த்தி ஜாளி, ரூபன் வீட்டிற்கு நேரில் சென்றுள்ளார்.

அங்கு குழந்தையை தன்னுடைய கைகளில் ஏந்தி கொஞ்சி மகிழ்ந்த அவர், இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு இந்த சம்பவம் ஒரு சாட்சி எனக்கூறினார். மேலும், ஊரடங்கு சட்டம் அமலில் இருக்கும் போது நந்திதாவை, மக்பூல் ஆட்டோவில் அழைத்து சென்றிருப்பது மனித நேயம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு சாட்சி என்றும் கூறியுள்ளார்.

சிகிச்சையின் போது வாயிலிருந்து வெடித்த மர்மப்பொருள் : மருத்துவமனையில் பெண்ணுக்கு நடந்த சோகம்!!

வாயிலிருந்து வெடித்த மர்மப்பொருள்

இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தில் விஷம் குடித்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த போது, அவருடைய வாயிலிருந்து வெடித்த மர்ம பொருளால் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த ஷீலா தேவி (40) என்கிற பெண், வீட்டில் சுயநினைவின்றி கிடந்ததாக அவருடைய கணவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், அவருடைய வயிற்றிலிருந்து விஷத்தை எடுப்பதற்கான சிகிச்சையை அளித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென ஒரு மர்ம பொருள், ஷீலாவின் வாயிலிருந்து வெடித்து சிதறியதில் அவர் உயிரிழந்துள்ளார். இதில் அந்த அறை முழுவதுமாகவே புகை மண்டலம் சூழ்ந்துள்ளது. இதற்கான காரணம் என்னவென தெரியாமல் மருத்துவர்கள் திகைத்து போயுள்ளனர். ஷீலா தேவியின் உடல் தற்போது பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், மருத்துவ வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம் இதுவரை நடந்ததில்லை. நாங்கள் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை தொடர்ந்து பார்த்து வருகிறோம். எந்த காரணத்தால் இது நிகழ்ந்தது என்பது தெரியவில்லை. அந்த பெண் எடுத்துக்கொண்ட விஷம், இரைப்பை அமிலத்துடன் கலந்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் நாளை கடும் வெப்ப காலநிலை நிலவக்கூடும்!!

கடும் வெப்ப காலநிலை

நாளைய தினம் கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவ, மன்னார், வவுனியா மற்றும் முல்லைதீவு மாவட்டங்ளின் சில பிரதேசங்களில் வெப்பமான காலநிலை நிலவ கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இந்நிலையில் பணிபுரியும் இடத்தில் போதுமானளவு நீரை அருந்துமாறு அத் திணைக்களம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

வீட்டில் உள்ள முதியவர்கள் மற்றும் நோயாளர்கள் தொடர்பில் அவதானமாகயிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மகளின் காதலுக்கு உடந்தையாக இருந்த தாய்க்கு நேர்ந்த கதி : விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!!

தாய்க்கு நேர்ந்த கதி

தமிழகத்தில் மகளின் காதலுக்கு உடந்தையாக இருந்த மனைவியை கணவன் கொடூரமாக வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள நெற்கட்டும்செவல் பகுதியை சேர்ந்தவர் சுப்பையா மகன் சமுத்திர பாண்டி (35). இவருக்கு வெள்ளதுரைச்சி (39) என்ற மனைவி உள்ளார்.

இவர் தனது கணவரை விட மூத்தவர் ஆவார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் சிவரஞ்சனி (17). கர்நாடக மாநிலத்தில் டவர் அமைக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்த சமுத்திர பாண்டி கடந்த மாதம் ஊருக்கு வந்துள்ளார்.

அப்போது கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று பகலில் சமுத்திர பாண்டி, வெள்ளதுரைச்சி, சிவரஞ்சனி ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட, இதில் ஆத்திரம் அடைந்த சமுத்திரபாண்டி வீட்டில் உள்ள அரிவாளால் வெள்ள துரைச்சியை சரமாரியாக வெட்டினார்.

அதை தடுத்த மகள் சிவரஞ்சனியையும் வெட்டியுள்ளார். அதன் பின்னர் சமுத்திர பாண்டி அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார். அரிவாள் வெட்டில் பலத்த காயம் அடைந்த வெள்ளதுரைச்சி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

சிவரஞ்சனி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு ஓடிவந்தனர். அங்கு 2 பேரும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து, உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் அங்கு உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த சிவரஞ்சனியை மீட்டு சிகிச்சைக்காக புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிணமாக கிடந்த வெள்ளதுரைச்சியின் உடலை பொலிசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த பயங்கர கொலை குறித்து புளியங்குடி பொலிசார் விசாரணை நடத்திய போது, சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சமுத்திர பாண்டி மகள் சிவரஞ்சனி அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது தாயார் வெள்ளதுரைச்சியிடம் தெரிவித்துள்ளார். அவர் தனது மகளின் காதலுக்கு சம்மதம் தெரிவித்தார். இது வெளியூரில் இருந்த சமுத்திர பாண்டிக்கு முதலில் தெரியவில்லை. இதையடுத்து கடந்த மாதம் விடுமுறைக்காக ஊருக்கு வந்த சமுத்திர பாண்டிக்கு தனது மகளின் காதல் விவகாரம் தெரிய வந்தது.

மேலும் இந்த காதலுக்கு தனது மனைவி உடந்தையாக இருந்ததும் தெரிந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். தனது மகளின் காதலுக்கு சமுத்திர பாண்டி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கடந்த சில நாட்களாக குடும்பத்தில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று பகலில் இந்த பிரச்சினை தொடர்பாக சமுத்திரபாண்டியிடம் வெள்ளதுரைச்சி, சிவரஞ்சனி ஆகியோர் பேசினார்கள். அப்போது, ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த சமுத்திரபாண்டி 2 பேரையும் அரிவாளால் வெட்டியது தெரியவந்தது. இந்த நிலையில் தப்பி ஓடிய சமுத்திரபாண்டி நேற்று இரவு புளியங்குடி காவல நிலையத்தில் சரண் அடைந்தார். அவரிடம் பொலிசார் தொடர்ந்து விசாரணைக்கு மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் மொழி மீது கொண்ட காதலால் தமிழரை மணந்த வெளிநாட்டுப் பெண்!!

தமிழரை மணந்த வெளிநாட்டுப் பெண்

சமூகவலைதளத்தில் தங்கிலீஷ் பேசியே தமிழர்களிடம் பிரபலமான அமெரிக்க பெண் சமந்தா கண்ணன் என்ற தமிழரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பகுதியை சேர்ந்தவர் சமந்தா ஜோஸ். அமெரிக்காவிலே பிறந்து வளர்ந்திருந்தாலும் கூட, தமிழ் மொழியின் மீது அவருக்கு ஒரு தனி பிரியம் ஏற்பட்டுள்ளது.

அதன் விளைவாக யுடியூப் வாயிலாக தமிழ் மொழியை கற்க ஆரம்பித்துள்ளார். இதையடுத்து டுவிட்டரில் தங்கிலீஷில் தமிழ் மக்களிடம் பேசி தனது தமிழ் திறமையை வளர்த்து வந்தார்.

இந்நிலையில் சமந்தா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், கண்ணன் என்ற தமிழ் இளைஞரை விரைவில் மணமுடிக்க உள்ளதாக சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்தார். இதையடுத்து கண்ணனை சமந்தா நேற்று திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

திருமணம் செய்து கொண்ட சமந்தாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் அவர்களுக்கு மிக்க நன்றி என தங்கிலீஷில் அவர் பதில் அளித்து வருகிறார்.

உணவு திருடியதாக அடித்துக் கொலை செய்யப்பட்ட கேரள இளைஞர் மது : அவரின் சகோதரி செய்துள்ள சாதனை!!

கேரள இளைஞர் மது

கேரளாவில் உணவு திருடியதாக கூறி கொலை செய்யப்பட்ட இளைஞரின் சகோதரி தற்போது காவலர் பணியில் சேர்ந்துள்ளார். கேரளாவில் உணவுக்காக அரிசி திருடியதாக கூறி ஆதிவாசி இளைஞர் மது என்பவர் 16 பேர் கொண்ட கும்பலால் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 22ஆம் திகதி அடித்து கொல்லப்பட்டார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் இதில் தொடர்புடையவர்களை கைது செய்தனர். மதுவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட போது அவர் வயிற்றில் ஒரு பருக்கை சோறு கூட இல்லை. சில பழங்கள் மட்டுமே அவரின் வயிற்றுக்குள் இருந்துள்ளது.

அப்போது மது பிணவறையில் சடலமாக இருந்த போது அவரின் சகோதரி சந்திரகா கனத்த இதயத்தோடு காவலர் பணிக்கான நேர்முக தேர்வுக்கு சென்றார். இந்நிலையில் சந்திரிகா தற்போது காவலராகி உள்ளார்.

தன் சகோதரனுக்கு இந்தப் பணியை சமர்ப்பிப்பதாக அவர் தெரிவித்துள்ளார், அண்ணனின் இழப்பை ஏற்க முடியாத சந்திரிக்கா நேர்காணலை எதிர்கொள்ள முடியாது என சோர்ந்துப் போனார். இருப்பினும் தனது குடும்பம் கட்டாயப்படுத்தியதால் நேர்காணலில் சந்திரிக்கா அப்போது கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்ட தடை நீங்கியது : இணைய பாவனையாளர்கள் மகிழ்ச்சி!!

தடை நீங்கியது

சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரண சூழ்நிலையினை அடுத்து நாடு முழுவதும், சமூக வலைத்தளங்கள் மீது தடை விதிக்கப்பட்டிருந்து.

சட்டவிரோதமான முறையில் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்திய சிலரும் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தடை நீக்கம் தொடர்பான தீர்மானத்தினை எடுத்துள்ளது.

கடந்த 13 ஆம் திகதி பல பிரதேசங்களில் ஏற்பட்ட பதற்றமான நிலைமையினை கடுப்படுத்துவதற்கு பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் உட்பட சமூக வலைத்தளங்களின் பாவனைக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தூக்கில் சடலமாக தொங்கிய நடிகர் ராகவா லோரன்ஸின் உதவியாளர்!!

தூக்கிட்டு தற்கொலை

பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸின் உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகவா லாரன்ஸின் உதவியாளர் பரத். இவர் சென்னை விருகம்பாக்கம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் உள்ள வீட்டில் தனது நண்பர்களோடு சேர்ந்து வசித்து வந்தார்.

மாற்றுத்திறனாளியான இவர், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் குழந்தைகள் உள்பட பல திரையுலக பிரபலங்களின் குழந்தைகளுக்கு நடனம் கற்றுக் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில், நேற்றிரவு தனது வீட்டில் பரத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சினிமா தான் வாழ்க்கை என்றிருந்த அவருக்கு சினிமாவில் எதுவும் சாதிக்க முடியவில்லை என்ற விரக்தியில் கூட தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று அவரது நண்பர்கள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இது குறித்து தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நோயாளியின் வயிற்றில் இருந்த 116 ஆணிகள் : அதிர்ந்து போன மருத்துவர்கள்!!

அதிர்ந்து போன மருத்துவர்கள்

ராஜஸ்தான் மாநிலத்தில் 40 வயது நபருக்கு நடந்த அறுவை சிகிச்சையின் போது, வயிற்றில் இருந்து 116 ஆணிகள் அகற்றப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 40 வயதான தொழிலாளி ஒருவர், வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்து வருமாறு கூறியுள்ளனர். அதில் அவருடைய வயிற்றில் ஏதோ ஒன்று இருப்பதை போல தெரிந்துள்ளது. உடனே சி.டி.ஸ்கேன் எடுக்குமாறு மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.

அதனை பார்த்த மருத்துவர் பெரும் அதிர்ச்சியடைந்து உடனடியாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளார். அப்போது அவருடைய வயிற்றில் இருந்து சுமார் 6.5 செ.மீ அளவில் ஆணி, வயர்கள், இரும்புக்குண்டுகள் ஆகியவற்றை வெளியில் எடுத்தனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், நோயாளி சிறிதளவு மனநிலை பாதிக்கப்பட்டவர் போல இருந்தார். எங்களுடைய கேள்விகளுக்கு சரியான பதில் கொடுக்கவில்லை. அவருடைய வயிற்றுக்குள் எப்படி சென்றது என்பது அவருக்கு தெரியவில்லை. அறுவை சிகிச்சை முடிந்து தற்போது அவர் நலமாக உள்ளார் என தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டு வேலையை நம்பி சென்ற இளைஞரின் பரிதாப நிலை : கண்ணீர் விட்டு கதறிய சோகம்!!

இளைஞரின் பரிதாப நிலை

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்திய இளைஞன் ஒருவர் தன்னை காப்பாற்றும் படி கதறிக் கொண்டே பேசும் வீடியோ காட்சி வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தெலங்கானா மாநிலம் ராஜன்னா ஸ்ரீசில்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது ஷமீர். 21 வயதான இவர் கடந்த ஏப்ரல் மாதம் 17-ஆம் திகதி சவுதி அரேபியாவிற்கு வேலைக்காக சென்றுள்ளார்.

அப்போது இவரிடம் ஏஜெண்ட் பண்ணை வீட்டில் வேலை என்று கூறியதால், மிகவும் மகிழ்ச்சியுடன் சென்ற அவருக்கு அங்கு அதிர்ச்சி காத்துள்ளது. ஏனெனில் பண்ணை வீட்டில் வேலை என்று சொன்ன இடத்தில் இருந்து சுமார் 1200 கி.மீற்றர் தூரத்தில் உள்ள பாலைவனத்தில் ஆடுகளை 300 செம்மறி ஆடுகளை மேய்க்க கூறியுள்ளனர்.

அப்போது அவர் நான் ஆடு மேய்க்க வரலை. எனக்கு பண்ணை வீட்டுலதான் வேலை என்று சொன்னார்கள் நான் இதை பண்ண மாட்டேன் என்று கூற, ஆத்திரமடைந்த உரிமையாளர் , அவரை சரமாரியாக அடிக்கத் துவங்கியுள்ளார்.

நான் சொன்னதை செய் இல்லையென்றால் எச்சரித்துவிட்டு சென்றுள்ளார். கடும் வெயிலில் ஆடு மேய்ப்பது என்பது என்பது எளிதான காரியமில்லை என்பதை உணர்ந்து செல்போன் வீடியோவில் தன் நிலையை விவரித்து தனது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பியுள்ளார்.

அதில், கண்கலங்கிய நிலையில் பேசிய அவர், ஏஜெண்ட் பணத்தை வாங்கிக்கொண்டு என்னை ஏமாற்றி விட்டார். சொன்ன வேலை ஒன்று, கொடுத்த வேலை ஒன்று. கடுமையான சித்தரவதைகளைச் சந்தித்து வருகிறேன்.

கடந்த 20 நாட்களாக நான் பட்டினியாகக் கிடந்து கொடுமைகளை அனுபவிக்கிறேன். இங்கு என்னால் வாழ முடியாது. ஆனால், நான் செத்தாலும் கவலை இல்லை என்று அவர்கள் என்னை அடித்து துன்புறுத்துகிறார்கள். ஒவ்வொரு நாளும் என்னை மிரட்டிவிட்டு செல்கிறார்கள். என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று கதறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக, சிர்சிலா எம்எல்ஏ கே.டி.ராமாராவ், இதுபற்றி ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்திடம் தெரிவித்துள்ளோம். இதனால் எவ்வளவு விரைவாக அவரை தாயகத்திற்கு கொண்டு வர முடியுமோ அந்தளவிற்கு முயற்சிகள் நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமால் விபரீத முடிவு எடுத்த இளம்பெண் : பதற வைக்கும் சம்பவம்!!

பதற வைக்கும் சம்பவம்

இன்ஸ்டாகிராமில் வாக்குப்பதிவு நடத்திய பின்னர் மலேசிய சிறுமி ஒருவர் தற்கொலை செய்திருக்கும் சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலேசியாவைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் புகைப்படங்களைப் பகிரும் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், இது உண்மையிலே மிக முக்கியமானது. இதில் ஒன்றைத் தெரிவு செய்ய எனக்கு உதவுங்கள்.

நான் வாழ வேண்டுமா அல்லது சாக வேண்டுமா..? என வாக்குப்பதிவு முறையில் கேள்வி கேட்டிருந்தார். குறித்த இளம்பெண்ணின் பதிவு நகைச்சுவைக்கு என கருதிய அவரது நண்பர்கள் உள்ளிட்ட பலர் இரண்டாவது பதிலை தெரிவு செய்துள்ளனர். இதில், சுமார் 69 சதவீதம் பேர் இரண்டாவது பதிலை தெரிவு செய்ய, அந்தச் சிறுமி அதனை ஏற்றுக்கொண்டு மூன்று மாடி கட்டிடத்தின் மேலே இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வழக்கறிஞரும் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினருமான ராம்கர்பால் சிங், இணையவாசிகள் அவருக்கு பாசிட்டிவ் வழியைக் காட்டியிருந்தால் ஒருவேளை அப்பெண்ணைக் காப்பாற்றி இருக்கலாம்.

ஆனால், அதற்கு மாறாக நடந்துள்ளது. இந்த நாட்டில் தற்கொலை என்பது குற்றம் என்பதால், அதற்குத் தூண்டுதலாக இருந்து வாக்களித்தவர்களும் குற்றவாளிகள்தான். இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இன்ஸ்டாகிராம் அதிகாரி ஒருவர், எங்களின் பிரார்த்தனைகள் அந்தச் சிறுமியின் குடும்பத்தினருடன் இருக்கும். இன்ஸ்டாகிராமை மக்கள் பயன்படுத்தும்போது பாதுகாப்பானதாக மக்கள் உணர்வதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும்.

எங்களின் முயற்சிக்கு உங்களின் ஒத்துழைப்பும் தேவை. யாருக்காவது ஆபத்து ஏற்படுத்தும் வகையில் ஒரு பதிவைக் கண்டால் உடனடியாக புகார் செய்வதை உறுதி செய்துகொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

வவுனியா பட்டக்காடு மஸ்ஜிதுல் தக்வா பள்ளிவாசலில் தீவிரவாத செயற்பாட்டிற்கு எதிராக பிரார்த்தனை!!

தீவிரவாத செயற்பாட்டிற்கு எதிராக பிரார்த்தனை

நாட்டில் கடந்த மாதம் 21ம் திகதி இடம்பெற்ற தீவிரவாத செயற்பாட்டிற்கு எதிராகவும் நாட்டில் சிறுபான்மை சமூகத்திற்காக குரல்கொடுக்கும் அமைச்சர்களுடைய பாதுகாப்பை வேண்டி வவுனியா பட்டக்காடு பகுதியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் தக்வா பள்ளிவாசலில் இன்று (17.05.2019) மாலை 4.30 மணியளவில் விசேட பிராத்தனை இடம்பெற்றது.

நாட்டில் ஒர் சமாதானம் ஏற்பட வேண்டும் குறிப்பாக தமிழ் , முஸ்ஸிம் , சிங்கள மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற ஒர் நோக்கத்திற்காகவும் இப் பிரார்த்தனை இடம்பெற்றிருந்தது.

பிரார்த்தனையின் போது பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தவர்கள் கண்ணீர் விட்டு அழுது தங்களது வேண்டுதலை கடவுளிடத்தில் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பள்ளிவாசலின் தலைவர் எ.ஆர்.எம்.லரீப் தலமையில் இடம்பெற்ற இப் பிரார்த்தனையில் வவுனியா நகர பள்ளிவாசல் நிர்வாகிகள், பட்டானீச்சூர் ஜும்மா பள்ளிவாசலின் நிர்வாகிகள், பட்டக்காடு ஜும்மா பள்ளிவாசலின் நிர்வாகிகள் என வவுனியாவிலுள்ள பெரும்பாலன பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் மற்றும் கிராமத்திலுள்ள பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

30 ஆண்டுகளின் பின் இலங்கை புகையிரத வரலாற்றில் புது அத்தியாயம்!!

புகையிரத வரலாற்றில் புது அத்தியாயம்

இலங்கை புகையிரத திணைக்களத்தின் பாவனைக்காக இந்தியாவில் இருந்து 5 ராங் கார்கள், 10 பிளாட் கார்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இவை நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

தற்போது இலங்கையின் புகையிரத திணைக்களம் 25 கொள்கலன் கேரியர் வேகன்கள் சொந்தமாக வைத்துள்ளது. போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் இந்திய கடன் திட்டத்தின் கீழ், 20 கொள்கலன் கேரியர் வேகன்கள் இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், அதன் முதலாவது 10 கொள்கலன் கேரியர் வேகன்கள் கொழும்பு துறைமுகத்திலிருந்து நேற்று காலை இறக்குமதி செய்யப்பட்டது. அந்த படகுகளின் மதிப்பு 40 அடி கொள்கலன் எடுத்து செல்லக்கூடிய கேரியர் வேகன்களின் பொறுமதி அமெரிகன் டொலர் 84, 200 ஆகும். அவை சுமார் 15 மில்லியன் இலங்கை ரூபாவாகும்.

கொள்கலன் கேரியர் வேகன்கள் MIIKE PANAMA என்ற கப்பல் மூலமே இலங்கைக் கொண்டுவரப்பட்டது. இந்த கப்பல் இலங்கைக்கு ஐந்து கொள்கலன் கேரியர் வேகன்களை இறக்குமதி செய்துள்ளமையும் குறிப்பிடதக்கது. இது இந்திய கடன் திட்டத்தின் கீழ் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படும் மொத்த கொள்கலன் கேரியர் வேகன்களை 30 ஆகும். அதில் எரிபொருள் கேரியரில் ஒன்றின் விலை 85,500 ஆகும் .

ஏறத்தாழ ரூ. 15.2 மில்லியனாகும். ஒரு கேரியரிலில் 45,000 லீட்டர் எரிபொருள் (10,000 கெலன்கள்) எடுத்துசெல்ல முடியும். முன்னதாக, 2008 ல், அத்தகைய எண்ணெய் தொட்டி பாக்கிஸ்தான் இருந்து இறக்குமதி செய்யப்பட்டடுள்ளது.