வவுனியா வர்த்தக நிலையங்களில் விபரங்கள் பொலிசாரால் சேகரிப்பு!!

வவுனியாவிலுள்ள வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் விபரங்கள் சேகரிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வவுனியா பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் வவுனியா வர்த்தகர் சங்கத்திற்கு விடுத்த பணிப்புரைக்கு அமைவாக இவ்விபரங்கள் சேகரிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவிலுள்ள வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பெயர், முகவரி, அடையாள அட்டை இலக்கம் தேசிய அடையாள அட்டையின் பிரதி என்பன பாதுகாப்பு நடவடிக்கைக்காக வர்த்தக நிலையங்களில் பணியாற்றுபவர்களின் விபரங்கள் அடங்கிய விண்ணப்பப்படிவங்கள் வழங்கப்பட்டு சேகரிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நடவடிக்கை குறித்து வர்த்தகர் சங்கத்தினரிடம் வினவியபோது நகரின் பாதுகாப்பு நடவடிக்கைக்காகவும் வர்த்தக நிலைய உரிமையாளர்கள், மற்றும் ஊழியர்களை உறுதிப்படுத்துவதற்காக இவ்விபரங்கள் அடங்கிய கோவையினை வர்த்தக நிலையங்களுக்கு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளவரும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் காண்பிக்குமாறும் வவுனியா பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் வர்த்தகர் சங்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பிட்ட சில நாட்களுக்குள் வர்த்தக நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவங்களை பூர்த்தி செய்து வர்த்தகர் சங்கத்திற்கு வழங்குவதினால் பாதுகாப்பினை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

வவுனியா தோணிகல பகுதி காட்டுத்தீ : வீடுகளுக்கு பரவவிடாமல் விரைந்து செயற்பட்ட நகரசபை தீயணைப்புப் படை!!

வவுனியா, தோணிகல பாறைக்கல்வெட்டு பகுதி காட்டில் ஏற்பட்ட தீப் பரவலை கட்டுப்படுத்தி அயலில் இருந்த வீடுகளுக்கு தீ செல்ல விடாது வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினர் தடுத்துள்ளனர்.

இன்று மாலை வவுனியா, குடாகச்சகொடி, தோணிகல பாறைக் கல்வெட்டு பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் தீ பரவியுள்ளது. இத் தீயானது அருகில் இருந்த மக்கள் குடிமனைக்குள் பரவிய நிலையில், வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து விரைந்து செயற்பட்ட வவுனியா தீயணைப்புப் பிரிவினர் மக்கள் குடிமனைக்குள் தீயானது பரவலடையாது தடுத்ததுடன், காட்டுக்குள் ஏற்பட்ட தீப்பரம்பலையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர். எனினும் இத் தீ விபத்து காரணமாக சுமார் 5 ஏக்கர் காட்டுப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளது.

இதேவேளை, சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் சிறிது நேரம் நின்று விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். மேலதிக தண்ணீர் வசதியை தண்ணீர் தாங்கி மூலம் ஏற்படுத்தி தருமாறு தீயணைப்பு பிரிவினர் கோரிய போதும் அவர்கள் அது தொடர்பில் கண்டுகொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வெடிகுண்டு மிரட்டல் : பதற்றத்தில் வைத்தியசாலை!!

வவுனியா வைத்தியசாலை மற்றும் மதீனாநகர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஆகியவற்றிற்கு வெடிகுண்டுமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கடதம் ஒன்றின் மூலம் இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலையில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட கடிதம் ஒன்றை அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் இன்று (சனிக்கிழமை) அவதானித்தார். அது தொடர்பாக வைத்தியசாலையின் நிர்வாகத்திற்கு தெரியபடுத்தினார்.

இந்நிலையில் குறித்த அநாமதேய கடிதத்தில், வவுனியா வைத்தியசாலை மற்றும் மதீனாநகர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஆகியவற்றில் எதிர்வரும் திங்கட்கிழமை வெடிகுண்டு வைக்கப்படவுள்ளதாக எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக வவுனியா பொலிஸார் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவளை, குறித்த மிரட்டல் கடிதம் காரணமாக வவுனியா வைத்தியசாலையைச் சூழவுள்ள அனைத்து பகுதிகளிலும் இரகசிய கமெரா பொருத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், மதீனாநகர் பகுதியின் பாதுகாப்பும் பலப்படுத்தபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வீடு முழுவதும் இரத்தம் சிந்தியது… அவனை அம்மா தான் வெளியில் தூக்கி சென்றார் : சிறுவனால் சிக்கிய இளம்பெண்!!

கேரளாவில் படுக்கையில் சிறுநீர் கழித்த சம்பவத்தில் சிறுவன் கொலை செய்யப்பட்ட நிலையில் இதில் அதிரடி திருப்பமாக சிறுவனின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடுபுழாவை சேர்ந்தவர் அர்ச்சனா. இவருக்கு ஏழு மற்றும் மூன்றரை வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். அர்ச்சனாவின் கணவர் இறந்துவிட்ட நிலையில் தனது உறவினர் அருண் ஆனந்த் என்பவருடன் அவர் வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் அர்ச்சனாவும் ஆனந்து ஹொட்டலில் சாப்பிட சென்ற நிலையில் தனது இரு மகன்களையும் வீட்டில் பூட்டிவைத்து சென்றனர். திரும்பி வந்த போது இரு சகோதரர்களும் உறங்கிவிட்ட சூழலில் மூன்றரை வயது சிறுவன் படுக்கையில் சிறுநீர் கழித்திருந்தான்.

இதை பார்த்து கோபமடைந்த அருண் அவனை ஏன் கழிவறைக்கு அழைத்துச் செல்லவில்லை எனக் கூறி சிறுவனின் அண்ணனைத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சிறுவன் பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்தான்.

இந்த வழக்கில் அருண் கைது செய்யப்பட்ட நிலையில் அதிரடி திருப்பமாக தற்போது அர்ச்சனாவும் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது கைதுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது அவரது இரண்டாவது மகனான மூன்றரை வயது சிறுவனின் வாக்குமூலம்.

தனது அண்ணனை பப்பி என அழைக்கும் அந்தச் சிறுவன் பொலிசில் அளித்த வாக்குமூலத்தில், பப்பியை அப்பா தலையில் அடித்த பின்னர் காலைப் பிடித்து கீழே எறிந்ததோடு தலையை சுவற்றில் முட்டினார்.

கீழே விழுந்த பப்பி எந்திரிக்கவில்லை. வீடு முழுவதும் ரத்தம் சிந்தியிருந்தது. பிறகு பப்பியை அம்மாவும், அப்பாவும் காரில் எங்கோ கொண்டு சென்றனர் என கூறியுள்ளான்.

இதன் பின்னர் இருவரும் சிறுவனை தாமதமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையிலேயே அவன் உயிரிழந்துள்ளான். இதையடுத்து அருணை தப்ப வைப்பதற்காக உண்மையை மறைத்த குற்றத்துக்கு அர்ச்சனாவை பொலிசார் தற்போது கைது செய்துள்ளனர்.

திருமணநாளன்று தந்தையின் ஆசையை நிறைவேற்றிய மகள் : என்ன செய்தார் தெரியுமா?

இந்தியாவில் திருமணநாளில் தந்தையின் ஆசையை மகள் நிறைவேற்றியுள்ள சம்பவம் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் குறிச்சித்தனம் பகுதியில் இருக்கும் ஸ்ரீகிருஷ்ணஸ்வாமி கோவிலில், மகிமா என்ற பெண்ணுக்கும் சுராஜ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

அப்போது மணப்பெண்ணான மகிமா முழு மேக்கப்புடன் ஆட்டோவில் வந்திறங்கினார். அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில் அது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கேரளா மாநிலம் உழவூர் பகுதியைச் சேர்ந்தவர் மோகனன் நாயர். இவர், 1995-ஆம் ஆண்டில் இருந்து அதே பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார்.

அப்போதிருந்தே இவருக்கு தன்னுடைய மகளின் திருமணத்தின் போது, மகளையும் மற்ற உறவினர்களையும் ஆட்டோவில் திருமண மண்டபத்துக்கு அழைத்துச்செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.

இதை அறிந்த மகிமா தன் தந்தையின் ஆசைப்படியே நிச்சயதார்த்த தினத்தன்று தோழிகளுடன் ஆட்டோவில் மண்டபம் வந்துள்ளார்.

அவர் வந்த ஆட்டோவை மகிமாவே ஓட்டியும் வந்துள்ளார். அதேபோல திருமண நாள் அன்றும் ஆட்டோ ஓட்டிக்கொண்டு கோவிலுக்கு சென்றுள்ளார். மகிமாவின் ஆட்டோ முன்னே செல்ல, அதனைப் பின் தொடர்ந்து சுமார் 20 ஆட்டோக்கள் ஊர்வலமாக வந்துள்ளன. மோகனன் தற்போது குடிசைத்தொழில் செய்துவருகிறார்.

அதனால், அவருக்கு ஆட்டோ ஓட்ட நேரம் கிடைப்பதில்லை என்பதால், அப்போதே தன் மகளுக்கு ஆட்டோ ஓட்ட கற்றுக்கொடுத்து, அவருக்கு லைசென்ஸும் வாங்கிக்கொடுத்துள்ளார்.

இந்தக் காலத்தில் திருமணத்துக்காகப் பல லட்சம் செலவுசெய்து, விலையுயர்ந்த காரில் செல்லும் மணமக்கள் மத்தியில், தந்தையின் ஆசைக்காகத் தானே ஆட்டோ ஓட்டிச் சென்ற மணப் பெண்ணின் புகைப்படம், சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன் பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

பேரன் தாக்கியத்தில் பாட்டி உயிரிழப்பு!!

பேரனின் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த நிலையில், புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூதாட்டி நேற்று உயிரிழந்துள்ளதாக வண்ணாத்துவில்லு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வண்ணாத்துவில்லு, இஸ்மையில்புரம் – மயிலங்குளம் பிரதேசத்தை சேர்ந்த 93 வயதான மஹிபாலகே எக்னஸ் என்ற பெண்மணியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்மணியும் அவரது பேரனும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இருவருக்கும் இடையில் கடந்த 7 ஆம் திகதி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதன் போது பேரன் பொல்லால் தாக்கியத்தில் பெண்மணி ஆபத்தான நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மரணத்திற்கு பின்னரான விசாரணைகள் இன்று நடைபெறவுள்ளன. மூதாட்டியை தாக்கியதாக கூறப்படும் 17 வயதான நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த நபர் மனநோயால் பாதிக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வண்ணாத்துவில்லு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை குண்டுத்தாக்குதல் : அக்கா வெளிநாட்டில் : பெற்றோரை இழந்து தவிக்கும் சகோதரன்!!

கடந்த மாதம் மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பிள்ளைகள் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

உயிரிழந்த தம்பதியின் 19 வயதான ஜீவனா திருகேஸ்வரன் என்ற மூத்த மகள் அவுஸ்திரேலியாவில் கல்வி கற்று வருகிறார். எனினும் உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் அவரின் 15 வயதான சகோதரன் சுஷான் மாத்திரமே குடும்பத்தில் உயிர் தப்பியுள்ளார்.

சகோதரன் மட்டக்களப்பு மெதடிஸ் பாடசாலையில் கல்வி கற்று வருகிறார். கடந்த மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தேவாலய பூஜைக்காக இந்த பிள்ளைகளின் பெற்றோர் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கு சென்றிருந்தனர்.

வேறு நாட்களில் பெற்றோருடனே தேவாலயத்திற்கு செல்லும் சுஷான் அன்றைய தினம் தனக்கு நித்திரையாக உள்ளதென கூறி தேவாலயத்திற்கு செல்லவில்லை.

எனினும் தேவாலயத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் தனது தாய் தந்தையை இழந்து விட்டதாக சுஷான் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை கேட்டதில் இருந்து மகள் ஜீவனா இன்னமும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. அவருக்கு அவுஸ்திரேலிய மக்கள் மிகப்பெரிய ஆறுதலாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

எப்படியாவது தனது தம்பியை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து வருமாறு கேட்டுக்கொண்டுள்ளார். தன்னால் தனது தம்பியை காப்பாற்ற முடியும் என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

இத்தாலி தேர்தலில் போட்டியிடும் இலங்கைப் பெண்!!

இத்தாலியின் ஃரென்சி நகரில் வசித்து வரும் 19 வயதான சிங்ஹார முதலிகே ஹங்சிகா பெரேரா என்ற இலங்கை யுவதி எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள ஃரென்சி நகர சபைத் தேர்தலில் 4வது தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற தொகுதி மற்றும் ஃரென்சி நகர சபையின் தொகுதிகளுக்கு 26 ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது.

ஹங்சிகா தனது இரண்டு வயது பெற்றோருடன் இத்தாலி சென்றுள்ளார். ஹங்சிகா, ஃரென்சி நகரில் உள்ள சீ.ஜீ.ஐ.எல். ஃல்கெம்ஸ் நிறுவனத்தின் தற்போதைய பணிப்பாளர் சபையின் தலைவராக பதவி வகித்து வருகிறார்.

ஹங்சிகா, சிங்ஹார முதலிகே சமன் பெரேரா என்பவரின் மூத்த மகள். சமன் பெரேரா தொழிலாளர் சட்ட ஆலோசகராகவும் சமூக சேவையாளராக இருந்து வருகிறார்.

சமன் பெரேரா கடந்த 2003 மற்றும் 2009 ஆம் ஆண்டு ஃரென்சி நகர சபைத் தேர்தலில் போட்டியிட்டு தெரிவானவர். ஹங்சிகா பெரேரா, ஸ்னெவ்டிச்சி ரசல் நியூடன் அறிவியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார்.

வவுனியா கோதண்டர் நொச்சிக்குளத்தில் சிறப்பாக இடம்பெற்ற நுங்குத்திருவிழா!!

வவுனியா கோதண்டர் நொச்சிக்குளம் பகுதியில் அமைந்துள்ள குளத்திற்கு அருகே நுங்குத்திருவிழா இன்று (11.05.2019) வெகுசிறப்பாக இடம்பெற்றிருந்தது.

”ஊருக்குத் தெரியும்படியாக நுங்கு குடித்து கொண்டாடுதலும் நாட்டுக்கோழி விருந்தோம்பலும்” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற நுங்குத்திருவிழா சுயாதீன தமிழ் இளைஞர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்தது.

நுங்குத்திருவிழாவிற்கு 2000க்கு மேலான பனை விதைகளை விதைத்த மலர்மகள் விளையாட்டுக்கழகத்தினர் அனுசரணை வழங்கியிருந்ததுடன் இவ் திருவிழாவில் நுங்கு குடித்தல், நுங்கு குளித்தல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தது.

இத் திருவிழாவில் இளைஞர் ,யுவதிகள் என 20க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு இன்றைய விடுமுறை தினத்தினை நுங்குத்திருவிழாவில் கொண்டாடிக்களித்தனர்.

வவுனியாவில் கைக்குண்டு மீட்பு!!

வவுனியா மயிலங்குளம் பகுதியிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக மடுகந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை மயிலங்குளம் பகுதியிலுள்ள வெற்றுக்காணி ஒன்றில் கைக்குண்டு காணப்படுவதாக விறகு வெட்டுவதற்குச் சென்ற சிலர் வழங்கிய தகவலையடுத்து மடுகந்தை பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன்போது விஷேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்ற படையினர் கைக்குண்டை மீட்டுள்ளதுடன் விடுதலைப் புலிகளினால் தயாரிக்கப்பட்ட கைக்குண்டாக இருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

யாழில் பிறந்து ஒரு நாளேயான சிசுவின் சடலம் காயங்களுடன்!!

பிறந்து ஒரு நாளான ஆண் சிசுவின் சடலம் கை, தலை பகுதிகளில் காயங்களுடன் நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் கிடந்துள்ளது.

கரவெட்டி ஞானாசாரியார் சுடலைக்கு அண்மையில் குறித்த சடலம் கிடந்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நெல்லியடி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு பொலிஸார் விரைந்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று பருத்தித்துறை நீதிமன்றின் உத்தரவு பெறப்பட்டு சிசுவின் சடலம் மீட்கப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எரிபொருள் விலை நள்ளிரவு முதல் அதிகரிக்கின்றது!!

எரிபொருள் விலைச்சூத்திரத்திற்கு அமைய இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளை உயர்த்துவதற்கு நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, சுப்பர் டீசலின் விலை 2 ரூபாவாலும், 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

இதேவேளை, ஓட்டோ டீசலின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் நிதியமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய அடையாளங்களுடன் கனடாவில் தனது வாழ்வைத் தொடங்கும் ஆசியா பீவி!!

பாகிஸ்தானில் மத தூஷணம் செய்ததாக மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட ஆசியா பீவி கனடாவில் புதிய அடையாளங்களுடன் வாழ்வைத் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் பாகிஸ்தானிலிருந்து விடுவிக்கப்பட்ட ஆசியா பீவி, பல தடைகளை தாண்டி, தற்போது கனடா சென்றடைந்துள்ளதாகவும், தனது குடும்பத்துடன் இணைந்து விட்டதாகவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

எங்களுக்கு இது மிகவும் முக்கியமான நாள் என்று தெரிவித்துள்ள ஆசியா பீவியின் வழக்கறிஞரான Saiful Malook, ஆசியா பீவி பாகிஸ்தானை விட்டு சென்று கனடாவை அடைந்துவிட்டார். அவர் தனது குடும்பத்துடன் இணைந்துவிட்டார், நீதி நிலைநாட்டப்பட்டு விட்டது என்றார்.

இதற்கிடையில் கனடாவில் ஆசியா பீவியின் குடும்பத்தார் புதிய அடையாளங்களுடன், பாதுகாப்பாக தங்கள் வாழ்வை தொடங்க உள்ளதாக பிரித்தானிய பாகிஸ்தானி கிறிஸ்தவ கூட்டமைப்பைச் சேர்ந்த Wilson Chaudhry என்பவர் தெரிவித்தார்.

ஒரு காலகட்டத்திற்கு மேல், நிலைமை சற்று சீரானதும், அவர்கள் சாதாரண வாழ்வைத் தொடங்குவார்கள் என்றார் அவர். நிச்சயம் பாகிஸ்தானில் தாங்கள் வாழ்ந்த அடையாளங்களுடன் அவர்கள் வாழப்போவதில்லை என்றார் Wilson Chaudhry.

தங்கள் நாட்டில் எத்தகைய சூழலில் ஆசியா பீவியின் குடும்பத்தார் வாழப்போகிறார்கள் என்பது குறித்து கனடா அரசு கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

14 வயதில் குழந்தை பெற்றெடுத்த சிறுமி : குழந்தையின் தந்தையின் வயது 13 : அதிர்ச்சி சம்பவம்!!

நேபாளத்தில் 14 வயது சிறுமி குழந்தை பெற்றுள்ள நிலையில் அந்த குழந்தையின் தந்தையின் வயது 13 என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

நேபாளத்தை சேர்ந்த சிறுவன் ரமேஷ் தமங் (13). இவன் பள்ளிக்கூடத்தில் படித்து வந்த நிலையில் அதே பள்ளியில் பபித்ரா (14) என்ற சிறுமி படித்து வந்தார்.

கடந்த ஓராண்டுக்கு முன்னர் ரமேஷும், பபித்ராவும் காதலிக்க தொடங்கிய நிலையில் பபித்ரா கர்ப்பமானார். இதையடுத்து சமீபத்தில் ஆண் குழந்தையை அவர் பெற்றெடுத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த பொலிசார் இருவரிடமும் விசாரித்தனர், நேபாளத்தில் ஆண் மற்றும் பெண்ணின் திருமண வயது 20 என்பதால் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடியாது.

இதனால் ரமேஷ், பபித்ரா விடயத்தில் என்ன செய்வது என தெரியாமல் பொலிசார் குழப்பத்தில் உள்ளனர். இதனிடையில் திருமண வயதை அடைந்ததும் பபித்ராவை ரமேஷ் திருமணம் செய்து கொள்வான் என அவன் சமூகத்தினர் கூறியுள்ளனர்.

பிளாஸ்டிக் விழுங்கிய பிரபல சின்னத்திரை நடிகரின் குழந்தை மரணம்!!

ஹிந்தி தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருபவர் பிரதிஷ் வோரா. இவரது மகள் கடந்த 7ம் தேதி இரவு வீட்டில் பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார்.

அப்பொழுது ஒரு குட்டி பொம்மையை குழந்தை விழுங்க தொண்டையில் சிக்கியுள்ளது. உடனே மூச்சு திணறல் ஏற்பட்டு குழந்தை இறந்துள்ளது.

இதனை பிரதிஷ் வோராவே உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் தனது குழந்தையின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்யுமாறு ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரதிஷ் தற்போது பியார் கே பாபட் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் இறப்பதற்கு முன் கடைசியாக காதலிக்கு விமானி அனுப்பிய குறுஞ்செய்தி!!

மளமளவென தீ பற்றி எரிந்து விபத்துக்குள்ளான சமயத்தில் தன்னுடைய காதலிக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக விமானி மெசேஜ் அனுப்பியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலிருந்து புறப்பட்ட சூப்பர் ஜெட் 100 என்கிற பயணிகள் விமானமானது, புறப்பட்ட சில நிமிடங்களிலே திடீரென தீ பற்றி எரிந்தது.

இந்த விபத்தின் போது விமானத்தில் பயணித்த 5 விமானிகளில் மாக்சிம் மோஸியேவ் என்கிற ஒரு விமானி உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் விபத்திற்கு முன்னர் மாக்சிம் மோஸியேவ் தன்னுடைய காதலி க்ஸ்சியா ஒபிர்ட்ஸ்வாவாவிற்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக மெசேஜ் செய்துள்ளார்.

அதில், கவலைப்பட வேண்டாம். அனைத்தும் நன்றாக சென்று கொண்டிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.