மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் பலி!!

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு தேற்றாதீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற இந்த விபத்தில் தேற்றாத்தீவினை சேர்ந்த அமிர்தநாதன் தருமராஜா (43வயது)என்பவரே உயிரிழந்துள்ளார்.

வேகமாக சென்றவர் கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள வளைவில் வேகத்தினை கட்டுப்படுத்தமுடியாமல் வீட்டு மதிலில் மோதி விபத்துக்குள்ளானதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து தொடர்பிலான சீசீரிவி கமராப் பதிவுகளும் பெறப்பட்டுள்ளது.

வவுனியாவில் கஞ்சாவுடன் இளைஞன் கைது!!

வவுனியா தரணிக்குளம் பகுதியில் இளைஞன் ஒருவரிடமிருந்து நேற்று இரவு 7 மணியளவில் 440கிராம் கஞ்சா மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புளியங்குளம் இராமனூர் விஷேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவல் ஒன்றில் தரணிக்குளம் பகுதியில் சென்ற இளைஞன் ஒருவரிடம் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது அவரது உடமையிலிருந்து 440 கிராம் கேரள கஞ்சாவினை மீட்டுள்ளனர்.

தரணிக்குளம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞனைக் கைது செய்த படையினர் வவுனியா பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞனை மடக்கிப்பிடித்த பொலிசார்!!

வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் திருட்டுச்சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞன் ஒருவரை நெளுக்குளம் பொலிஸார் இன்று (10.05.2019) மதியம் கைது செய்துள்ளனர்.

நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பல்வேறு திருட்டுச்சம்பவங்கள் இடம்பெற்றிருந்துடன் இன்று மணிபுரம் பகுதியில் தண்ணீர் இறைக்கும் மோட்டார் ஒன்றும் களவாடப்பட்டது.

இதனையடுத்து நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திசாநாயக்க ஆலோசனையின் கீழ் பொலிஸ் ஜெயரூபன் வழிகாட்டலின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன் போது மணிபுரம் பகுதியினைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞனை நெளுக்குளம் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

விசாரணைகளையடுத்து மணபுரத்தில் களவாடப்பட்ட தண்ணீர் இறைக்கும் மோட்டாரை பொலிஸார் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட இளைஞனிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன் விசாரணைகளின் பின்னர் குறித்த இளைஞரை வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னேடுத்து வருகின்றனர்.

விமானத்தில் உறங்கிக்கொண்டிருந்த இங்கிலாந்து பெண்ணுக்கு இந்தியரால் நடந்த கொடுமை!!

இங்கிலாந்து சென்று கொண்டிருந்த போது விமானத்தில் உறங்கி கொண்டிருந்த இளம்பெண்ணை துஸ்பிரயோகம் செய்த இந்தியருக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹர்தீப் சிங் என்கிற இளைஞர், 6 மாத விசாவில் கடந்த பிப்ரவரி மாதம் இங்கிலாந்திற்கு புறப்பட்டார்.

மும்பையிலிருந்து மான்செஸ்டர் நோக்கி புறப்பட்ட அந்த விமானத்தில் அவருக்கு அருகே அமர்ந்திருந்த இங்கிலாந்தை சேர்ந்த 20 வயதான இளம்பெண்ணிடம் தொடர்ந்து பேச்சுக்கொடுக்க முயற்சித்துள்ளார்.

ஆனால் அந்த பெண் பேச மறுத்துள்ளார். அதன்பிறகும் கூட இளம்பெண்ணை தொந்தரவு செய்துகொண்டே இருந்த ஹர்தீப் சிங், விமானத்தில் விளக்குகள் சிறிது அணைக்கப்பட்டதும் அத்துமீற ஆரம்பித்துள்ளார்.

இடையில் விழித்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்த இளம்பெண் உடனடியாக அங்கிருந்த விமான பணிப்பெண்ணிடம் புகார் கூறியுள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில், விமான நிலையத்தில் வைத்து ஹர்தீப் சிங்கை பொலிஸார் கைது செய்தனர்,

இந்த நிலையில் வழக்கினை விசாரித்த நீதிபதி, குற்றவாளிக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனை விதித்ததுடன், தண்டனை காலம் முடிந்த பிறகு ஹர்தீப் சிங் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவார் எனவும் கூறி உத்தரவிட்டார்.

வீட்டில் தனியாக இருந்த மாணவி.. உள்ளே புகுந்த இளைஞர்… அடுத்து நடந்த அதிர்ச்சி!!

தமிழகத்தில் வீட்டில் தனியாக இருந்த மாணவியை இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்த நிலையில் பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (50). இவர் மனைவி கொளஞ்சி. தம்பதியின் மகள் திலகவதி (19). இவர் தனியார் கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் படித்து வந்தார்.

நேற்று காலை சுந்தரமூர்த்தி வேலை தொடர்பாக வெளியூர் சென்று விட்டார். கொளஞ்சி உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்தார். இதையடுத்து திலகவதி வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார். வீட்டில் அவர் தனியாக இருந்தார்.

அந்த நேரத்தில் ஆகாஷ் (19) என்ற வாலிபர் திலகவதி வீட்டுக்குள் புகுந்த நிலையில் அவரை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் காயம் அடைந்த திலகவதி கூச்சலிட்ட பின்னர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.

மாணவியின் அலறல் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இதையறிந்ததும் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ் வந்து திலகவதியை ஏற்றி கொண்டு சென்ற நிலையில் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்த நிலையில் தலைமறைவாக இருந்த ஆகாஷை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆகாஷ் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்துள்ளார். பின்பு தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வீட்டில் இருந்து வந்தது தெரிய வந்தது.

மாணவியை ஆகாஷ் கொலை செய்ததற்கு ஒருதலை காதல் காரணமா அல்லது வேறு காரணமா என பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த தந்தை, மகன் : தாயிடம் கதறிய சோகம்!!

தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் தந்தை, மகன் சேர்ந்து 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இக்கொடூரத்தில் ஈடுப்பட்ட 75 வயதான வெங்கடாசலம் மற்றும் 45 வயதான அவரது மகன் குண்டுமணி ஆகியோரை போக்ஸோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சம்பவம் குறித்த பொலிசார் அளித்த தகவலில், மளிகை கடை நடத்திவரும் வெங்கடாசலம் மற்றும் குண்டுமணி, பாதிக்கப்பட்ட குழந்தை இருக்கும் பகுதியில் வசித்து வந்துள்ளனர். இவர்கள் அடிக்கடி சகஜமாக குழந்தையுடன் விளையாடி வந்துள்ளனர்.

இந்நிலையில் அடிக்கடி குழந்தை தனது வயிற்று பகுதியில் வலிப்பதாக பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் தாய் தொடர்ந்து என்ன நடந்தது என கேட்க குழந்தை இறுதியாக நடந்த கொடுமையை பகிர்ந்துள்ளது.

நடந்ததை வெளியில் சொன்னால் கொன்றுவிடுவோம் என குற்றவாளிகள் குழந்தையை மிரட்டியுள்ளனர். பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் பொலிசில் புகார் அளிக்க குற்றவாளி இருவரையும் பொலிசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

300 கிலோ எடையுள்ள பெண் அறுவை சிகிச்சைக்குப் பின் 86 கிலோவாக குறைந்த அதிசயம்!!

இந்தியாவின் புனேவை சேர்ந்த பெண் ஒருவர் அறுவை சிகிச்சை மூலம் 300 கிலோவிலிருந்து 86 கிலோவாக உடல் எடையை குறைந்துள்ளார்.

மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்தவர் அமிதா ரஜனி. சிறு வயதில் மற்ற குழந்தைகளைப் போல இயல்பாகத்தான் இருந்துள்ளார். ஆனால் தன்னுடைய 6-ஆவது வயதில் இருந்து உடல் எடை வேக வேகமாக அதிகரிப்பதை உணர்ந்துள்ளார்.

16 வயதில் மற்ற சிறுமிகள் போல் இல்லாமல் மிக அதிகமாக 126 கிலோ உடல் எடை உடையவராக இருந்துள்ளார் அமிதா. உடல் எடை குறையுமா என்று எதிர்பார்த்த அவருக்கு மீண்டும் மீண்டும் எடை அதிகரித்துதான் சென்றுள்ளது.

ஒரு கட்டத்தில் தன் வேலைகளைக்கூட செய்ய முடியாமல் அமிதா மிகவும் சிரமப்பட்டுள்ளார். இந்தியா மட்டுமின்றி இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள பல மருத்துவமனைகளில் அவரைக் காண்பித்தபோதும், உடல் எடையை குறைக்க முடியவில்லை.

இதனிடையே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் அவரின் எடை அதிகரித்து 300 கிலோவாக அதிகரித்தது. இதனையடுத்து புனேவை சேர்ந்த மருத்துவரான ஷாஷாங் ஷா, அமிதாவுக்கு சிகிச்சையளிக்க முடிவு செய்து அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.

அதன்படி தற்போது அறுவை சிகிச்சை முடிந்த நிலையில், அமிதாவின் 300 கிலோ எடை வெறும் 86 கிலோவாக குறைந்தது. தற்போது அமிதா நலமுடன் உள்ளார். மருத்துவ உலகில் இது ஒரு சாதனையாகவும் கூட பார்க்கப்படுகிறது.

கொழும்பு தொடர் தற்கொலை தாக்குதல்கள் : நட்சத்திர ஹோட்டல்களில் நடந்த விபரீதம் என்ன? CID வெளியிட்ட தகவல்கள்!!

கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களுக்ளுக்கு ஐ.எஸ் பயங்கரவாதிகள் எவ்வாறு தாக்குதல் நடத்தினர் என குற்ற புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாதிகளின் தாக்குதல் தொடர்பில் கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்கவிடம், குற்ற புலனாய்வு அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

அதிக வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து ஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இரண்டு குண்டுதாரிகள் குண்டுகளை வெடிக்க செய்து உயிரிழப்புக்களை ஏற்படுத்தியுள்ளனர்.

முதல் குண்டை பிரதான சூத்திரதாரி சஹரான் ஹாசீமே வெடிக்கச் செய்துள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. முதல் குண்டு 8.54 மணிக்கு டேபிள் வன் எனும் உணவகத்தில் வெடித்துள்ளது.

இரண்டாம் குண்டு ஹோட்டலின் மூன்றாம் மாடியின் மின் தூக்கி மற்றும் படிகள் அமைந்துள்ள வெளியேறல் பிரிவில் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.

ஷங்கீரிலா ஹோட்டலில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் 12 இலங்கையர்கள், 24 வெளிநாட்டவர்கள் என 36 பேர் கொல்லப்பட்டனர். வெளிநாட்டவர்கள் உட்பட 33 பேர் காயம் அடைந்தனர்.

சஹ்ரான் மற்றும் இல்ஹாம் தற்கொலை தாக்குதலை நடத்தியுள்ளனர். இருவரின் தலைப் பகுதிகள் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. குறித்த உடற்பாகங்களை கொண்டு DNA பரிசோதனைகளை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி சஹ்ரானின் தங்கையான மொஹம்மட் ஹாசிம் பாத்திமா மதனியாவிடம் இரத்த மாதிரிகள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளனன.

தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவராக அடையாளம் காணப்பட்ட மொஹம்மட் இப்ராஹீம் இல்ஹாம் அஹமட்டின் தந்தையான மொஹம்மட் இப்ராஹீம் மற்றும் அவரது தாயாரான கதீஜா உம்மா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெற்றோர் ஊடாகவும் இல்ஹாமின் சகோதரர்கள் ஊடாகவும் அங்கு இரண்டாவது குண்டை வெடிக்கச் செய்தவர் இல்ஹாம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஷங்ரில்லா ஹோட்டலில் கடந்த ஏப்ரல் 17ஆம் திகதி மொஹமட் எனும் பெயரில் அறை ஒன்றினை பதிவு செய்த நபர், உயிர்த்த ஞாயிறன்று சினமன் கிரேண்ட் ஹோட்டலில் தற்கொலை தாக்குதலை நடத்திய மொஹம்மட் இப்ராஹீம் இன்ஷாப் அஹமட் என்பவரென அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-தமிழ்வின்-

பாடசாலை மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்!!

நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு சிறுவர்களின் பாதுகாப்பிற்காக 1929 எனும் தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் எம்.எம். அபேவர்த்தன இன்று தெரிவித்துள்ளார்.

பாடசாலைகள் இரண்டாம் தவணை நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் பொழுது அனைத்து மாணவர்களும் தமது சுற்றுச்சூழல் குறித்து விழிப்புடன் செயற்படுமாறும் அதிகார சபை தலைவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்நிலையில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு அனைத்து பாடசாலை மாணவர்களையும் உள்ளிருக்கும் பொருட்கள் வெளியே தெரியும் வகையிலான பையினை உபயோகிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தற்கொலை தாக்குதல் நடத்திய பெண் தீவிரவாதி தொடர்பில் தவ்ஹித் ஜமாத் வெளியிட்ட தகவல்!!

தற்கொலை தாக்குதல் நடத்திய பெண் தீவிரவாதி தொடர்பில் சிலோன் தவ்ஹித் ஜமாத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக் கருத்து வெளியிட்டுள்ளார்.

நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய மொஹம்மது ஹஸ்துன் என்ற பயங்கரவாதியின் மனைவியான சாரா என்ற புலஸ்தினி தனது சுயவிருப்பத்தின் பேரில் இஸ்லாம் சமயத்தை தழுவியதாக அவர் தெரிவித்துள்ளார்.

புலஸ்தினி மகேந்திரனின் தாய் ஊடகங்களிடம் பல தகவல்களை அண்மையில் வெளியிட்டிருந்தார்.

இந்து சமய பெண்ணான சாரா கடத்திச் செல்லப்பட்டு இஸ்லாம் மதத்தில் கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டதாகவும், தனது மகள் தூய்மையான சைவ சமயத்தை சார்ந்த பெண் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

தனது மகள் கடத்திச் செல்லப்பட்டு சிலோன் தவ்ஹித் ஜமாத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக் என்பவரிடம் தடுத்து வைக்கப்பட்டிருந்தாகவும் புலஸ்தினியின் தாயார் கூறியிருந்தார்.

புலஸ்தினியின் தாயார் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

புலஸ்தினி தனது சுயவிருப்பத்தின் பேரில் இஸ்லாம் சமயத்தை தழுவியதாகவும் தெரிவித்துள்ளார்.

இஸ்லாம் மதத்தை கற்றுக்கொண்ட பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி புறப்பட்டு சென்று விட்டதாகவும் கூறியுள்ளார்.

இஸ்லாம் சமயத்தை விரும்பி தழுவியதாக கடிதம் மூலம் தமது அமைப்புக்கு அறிவித்துள்ளதாகவும், புலஸ்தினி புறப்பட்டு சென்ற பின்னர் அவருடன் எந்த தொடர்பு தமது அமைப்புக்கு இருக்கவில்லை எனவும் ராசிக் கூறியுள்ளார்.

இதேவேளை, புலஸ்தினி மகேந்திரனை பலவந்தமாக கடத்திச் சென்று திருமணம் செய்து வைத்த சம்பவம் தொடர்பாக சிலோன் தவ்ஹித் ஜமாத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக்கை உடனடியாக கைது செய்யுமாறு, பயங்கரவாத எதிர்ப்பு தேசிய ஒன்றியம் நேற்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

கடந்த 25ம் திகதி சாய்ந்தமருதில் நடத்தப்பட்ட விசேட முற்றுகையின் போது ஐ.எஸ் பயங்கரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்தியிருந்தனர். இதில் புலஸ்தினி கொல்லப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

வாப்பாவின் பெயரைச் சொன்னால் காதுகள், வாயை அவர் வெட்டுவார் : சஹ்ரான் ஹாசீமின் மகள் வாக்குமூலம்!!

வாப்பாவின் பெயரைக் கூறமாட்டேன். வாப்பாவின் பெயரைச் சொன்னால், என்னுடைய காதுகள் இரண்டையும் வாயையும் வெட்டிவிடுவதாக வாப்பா சொன்னார் என உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீமின் நான்கு வயதான மகளான சஹ்ரான் ருசேசினா கூறியுள்ளார் என அம்பாறை பொலிஸ் மற்றும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பெண் பிள்ளையிடம் பாதுகாப்புத் தரப்பினர் சில விடயங்களைக் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அம்பாறை, சாய்ந்தமருது வீட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் காயமடைந்த சஹ்ரானின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்புக்கு, கடந்த 8 ஆம் திகதி அழைத்துவரப்பட்டனர்.

அவ்விருவரும் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

தௌஹீத் ஜமா அத் அமைப்பின் பயங்கரவாத நடவடிக்கைள் தொடர்பில் சஹ்ரானின் மனைவியான அப்துல் காதர் பாதிமா சாதியா என்பவர், மிக முக்கியமான தகவல்கள் பலவற்றை விசாரணைப் பிரிவினரிடம் தெரிவித்துள்ளார்.

சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் காயமடைந்த இவ்விருவரும் சஹ்ரானின் மனைவி மற்றும் மகள் என சஹ்ரானின் சகோதரியும் சகோதருமே பாதுகாப்புத் தரப்பினரின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளனர்.

தடுத்துவைக்கப்பட்டுள்ள சஹ்ரானின் மனைவி மற்றும் மகளிடம், குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட விசாரணைப் பிரிவினர் ஒவ்வொரு நாளும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-தமிழ்வின்-

அரசாங்க பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

இரண்டு வாரமாக கைவிடப்பட்ட பாடசாலை நடவடிக்கைகள் மேலதிக நாட்களில் நடத்தப்படமாட்டாது என்று கல்வி அமைச்சு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

2019ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணைப் பாடசாலை நடவடிக்கைகள் வழமைப் போன்றே இடம்பெறும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, அனைத்து பாடவிதானங்களும் உள்ளடக்கூடிய வகையில் நேர அட்டவணையில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறும் கல்வி அமைச்சு பாடசாலை நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளது.

மேலும், மாணவர்களின் வருகையை கவனத்தில் கொள்ளாது அனைத்து ஆசிரியர்களையும் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் பிறந்தநாளில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க்கப்பட்ட இளைஞன்!!

வவுனியா கல்நாட்டினகுளம் பகுதியில் இன்று (10.05.2019) காலை 8.30 மணியளவில் 24 வயதுடைய இளைஞர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

வவுனியா கல்நாட்டினகுளம் பகுதியில் வசித்து வரும் 24 வயதுடைய சிவலிங்கம் நிரோஜன் இளைஞன் அவரது 24 வது பிறந்ததினத்தினை நேற்றையதினம் அவரது இல்லத்தில் கொண்டாடியுள்ளார்.

பிறந்தநாள் முடிவடைந்ததன் பின்னர் வீட்டின் அவரது அறையில் உறங்குவதற்கு சென்றுள்ளார். இன்று காலை குறித்த இளைஞனின் தாயார் மகளை எழுப்புவதற்கு சென்ற சமயத்தில் தூக்கில் தொங்கியநிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதினையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்டவரை மலம் உண்ணவைத்த ஆதிக்க சமூகத்தினர் : தமிழகத்தில் நடந்த கொடூரம்!!

தமிழகத்தில் ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவரை அடித்து உதைத்து மலம் உண்ணவைத்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார்குடியில் உள்ள திருவாண்துறை கிராமத்திலே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. கொல்லிமலை என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரை, ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த ராஜேஷ், சக்திவேல் மற்றும் ராஜ்குமார் மூவரும் சேர்ந்து அடித்து மலம் உண்ணவைத்துள்ளனர்.

மூன்று ஆண்டுகளுக்கு முன் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு பகையை தீர்க்க கடந்த 28ம் திகதி மூவரும் சேர்ந்த கொல்லிமலையை கட்டையால் அடித்து மலம் உண்ணவைத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட கொல்லிமலை அளித்த பேட்டியில் கூறியதாவது, என்னை அடித்து போட்டு, ராஜேஷ் ஒரு குச்சியில் மலத்தை எடுத்து வந்து எனது வாயில் திணித்தனர். பத்து நாட்களாக நான் சாப்பாடே சாப்பிடவில்லை, சாப்பிட்டால், தூங்கினால் மலம் வாசனை தான் வருகிறது என வேதனையுடன் கூறியுள்ளார்.

கொல்லிமலை அளித்த புகரை அடுத்து மூன்று பேர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார், சக்திவேல் மற்றும் ராஜேஸை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள ராஜ்குமாரை தேடி வருகின்றனர்.

லண்டனில் கணவருடன் வசித்து வந்த இளம்பெண் : சொந்த ஊருக்கு வந்து தற்கொலை செய்த பரிதாபம்!!

லண்டனில் கணவருடன் வசித்த இந்திய பெண் கணவர் மற்றும் அவரின் பெற்றோரின் கொடுமை தாங்க முடியாத நிலையில் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஸ்ரீலதா (32). இவருக்கும் வம்சி ராவ் என்பவருக்கும் கடந்த 2011ல் திருமணம் நடைபெற்றது. பின்னர் 2012ல் லண்டனுக்கு இருவரும் சென்றனர். அங்கு சென்றதில் இருந்து கூடுதல் வரதட்சணை கேட்டு ஸ்ரீலதாவை வம்சி கொடுமைப்படுத்தி வந்தார்.

தம்பதிக்கு குழந்தை பிறந்த பின்னர் வம்சியின் கொடுமைகள் அதிகரிக்க தொடங்கியது. இது குறித்து ஸ்ரீலதா இந்தியாவில் உள்ள தனது பெற்றோரிடம் சொல்லி பலமுறை அழுதுள்ளார். மகள் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என வேதனையிலேயே ஸ்ரீதலாவின் பெற்றோர் உயிரிழந்தனர்.

பின்னர் வம்சி, ஸ்ரீலதா மற்றும் அவர் குழந்தை ஆகிய மூவரும் கடந்த 2016-ல் இந்தியாவுக்கு வந்தனர். சில மாதங்கள் கழித்து மீண்டும் பிரித்தானியா சென்றனர். இதையடுத்து கணவரின் கொடுமை தாங்காமல் லண்டன் ரயில் முன்னால் பாய்ந்து ஒருமுறை ஸ்ரீலதா தற்கொலைக்கு முயன்று பின்னர் காப்பாற்றப்பட்டார்.

இதன்பின்னர் கடந்த 2018 ஜூன் மாதம் மூவரும் மீண்டும் ஹைதராபாத்துக்கு வந்த நிலையில் தனது பெற்றோரிடம் மனைவி மற்றும் மகளை விட்டு வம்சி பிரித்தானியாவுக்கு சென்றுவிட்டார். இதை தொடர்ந்து வம்சியின் பெற்றோர் ஸ்ரீலதாவை கொடுமைப்படுத்தி வந்தனர்.

அவர்களின் கொடுமை தாங்காமல் ஸ்ரீலதா மும்பையில் உள்ள தனது மாமா வீட்டுக்கு சென்ற நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ரீலதாவின் உறவினர்கள் அவரின் சடலத்தை எடுத்து கொண்டு அவரின் மாமியார் வீட்டுக்கு சென்றனர்.

அங்கு ஸ்ரீலதாவின் மரணத்துக்கு அவர் கணவர் வம்சி மற்றும் மாமனார், மாமியார் தான் காரணம் என கூறி போராட்டம் நடத்தினார்கள். ஆனால் அவர்கள் வரும் தகவலை அறிந்து இருவரும் வீட்டை பூட்டி கொண்டு தப்பியோடியுள்ளனர். சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

கேலி கிண்டலுக்கு ஆளான ப்ரியாங்கா சோப்ராவின் உடை!!

வருடந்தோறும், ஹாலிவுட் பிரபலங்கள் வித்தியாசமாக உடையணிந்து ஒப்பனை செய்து வரும் மெட்காலா என்னும் காஸ்ட்யூம் பார்ட்டி நியூயார்க்கில் நடைபெறும். இந்த வருடமும் சில நாட்களுக்கு முன் நடைபெற்றது.

இதில் நடிகை பிரியங்கா சோப்ராவும் வித்தியாசமான காஸ்ட்யூம், மிக மிக வித்தியாசமான மேக்கப்புடன் கணவர் நிக் ஜோனாஸுடன் கலந்துகொண்டார். இதனால் கடந்த இரண்டு வருடங்களைப் போலவே இந்த வருடமும் பிரியங்காவின் காஸ்ட்யூமை நெட்டிசன்ஸ் டிரோல் செய்தார்கள்.

இந்த நிலையில் மெட் காலாவுக்காக பிரியங்கா சோப்ராவுக்கு காஸ்ட்யூம் டிசைன் செய்து கொடுத்த பிரபல டிசைனர் பிராண்டான ’டியோர்’ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், பிரியங்கா சோப்ராவுக்கு தைத்த உடையைப் பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

அதில், இந்த உடையை பிரியங்கா மெட் காலாவில் கலந்துகொள்வதற்கென்றே விசேஷமாகத் தயாரித்தோம். ஒயிட், பிங்க், லெமன் யெல்லோ போன்ற மென்மையான நிறங்களில், பறவைகளின் இறகுகளை ஒத்த ஒவ்வொரு டிசைன்களையும் வெள்ளி நூலால் கைகளாலேயே கோத்தோம்.

இந்த உடையைத் தயாரிப்பதற்கு எங்களுக்கு 1500 மணி நேரங்கள், அதாவது 62 நாள்கள் தேவைப்பட்டது என்று கூறியுள்ளனர்.