வவனியா குட்செட் வீதியில் அமைந்துள்ள கருமாரியம்மன் ஆலயத்திற்கு அருகில் அநாதரவான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் வண்டியை எவரும் உரிமை கோராத நிலையில் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சுமார் மூன்று மணிநேரத்திற்கு மேலாக அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் விசேட அதிரடிப்படையினரின் குண்டு செயலிழக்க வைக்கும் பிரிவினரின் உதவியை கோரியிருந்தனர்.
இந்நிலையில் மோட்டார் வண்டியின் இலக்கத்தை வைத்து விசாரணையை மேற்கொண்ட பொலிசார் உரிமையாளரை அடையாளம் கண்டதுடன் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மோட்டார் வண்டி உரிமையாளரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
புதுவையில் மகளும் தந்தையும் ஒரே நேரத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள சம்பவம் அனைவரையும் நிகழ்ச்சி அடைய செய்துள்ளது.
புதுவை கூடம்பாக்கத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் பொதுப்பணித் துறையில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். பல ஆண்டுகளாக இத்துறையில் அனுபவம் இருந்தாலும் கல்வித் தகுதி இல்லாததால் உயர் பதவிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தனித் தேர்வு முறையில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய அவர் மூன்று பாடங்களில் மட்டும் தேர்ச்சி பெற்றிருந்தார். இந்நிலையில் தன்னுடைய மகள் பத்தாம் வகுப்பு படித்து வந்ததால் அவருடன் சேர்ந்தே படித்து மற்ற இரண்டு பாடங்களையும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.
இவருடைய மகள் 471 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய தந்தை சுப்பிரமணியன் 2 பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளார். இதன்மூலம் மகளும், தந்தையும் ஒரே நேரத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளனர் என்ற சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
இதுகுறித்து சுப்பிரமணியம் தெரிவிக்கும் போது, “எனது மகள் எனக்கு சிறந்த முறையில் பாடம் எடுத்ததால் தான் என்னால் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற முடிந்தது என்று பெருமையாக தெரிவித்து உள்ளார். மேலும் தன் மகள் தனக்கு ஒரு ஆசிரியையாக இருந்துள்ளார்” என பெருமிதம் பேசியுள்ளார். இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
தூங்காமல் அழுது கொண்டிருந்த குழந்தையைத் தாய் ஒருவர் இரக்கமின்றி கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் ஆலப்புழாவில் உள்ள பட்டனாகாட்டைச் சேர்ந்தவர் ஷாரோன். இவர் 24 வயதான ஆதிரா என்பவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு ஆதிஷா என்ற 15 மாத பெண் குழந்தை இருந்துள்ளது.
சில தினங்களுக்கு முன்பு குழந்தை நீண்ட நேரம் ஆகியும் அசைவு இல்லாமல் இருந்துள்ளது. குழந்தை எழாததால் அதிர்ச்சியடைந்த ஷாரோன் குடும்பத்தினர் குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு, குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்த அவர்கள், காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து குழந்தையின் பிரேத பரிசோதனையில் குழந்தை மூச்சு திணறி இறந்துள்ளது தெரியவந்தது.
இதனால் சந்தேகமடைந்த போலீசார், ஆதிரா வீட்டினருகே சென்று விசாரித்துள்ளனர். அதில் ஆதிரா அடிக்கடி குழந்தையை அடித்துத் துன்புறுத்துவதாகத் தகவல் கிடைத்தது. இதனால் ஆதிராவை விசாரித்ததில் பல அதிர்ச்சி தரும் உண்மைகள் வெளிவந்துள்ளது. அதில், அழுதுகொண்டே இருந்த குழந்தையை தூங்க வைக்க முயற்சிதுள்ளார் ஆதிரா. ஆனால் அம்முயற்சியில் தோல்வி அடைந்ததால் ஆத்திரத்தில் குழந்தையின் வாய் மற்றும் மூக்கைப் பொத்தி கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
தூங்கவில்லை என்ற அற்ப காரணத்திற்காக பச்சிளம் குழந்தையை தாயே கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளாக பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்த நிலையில் அவரை கொலை செய்த சம்பவத்தில் மேஸ்திரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த பழநி – மலர் தம்பதியினருக்கு சசிகலா என்ற மகள் இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் பழநி தனது குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றுவிட்டதால் சித்தாள் வேலை செய்து தனது மகளை வளர்த்துள்ளார் மலர்.
இதற்கிடையில் தான் தேனாம்பேட்டையைச் சேர்ந்த கட்டட மேஸ்திரி முருகனுடன் மலருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. மலரின் வீட்டுக்கு முருகன் அடிக்கடி வந்து சென்றுள்ளார்.
இதற்கிடையில் தனது மகளுக்கு திருமணம் செய்து கொடுத்தபின்னர், முருகனுடன் ஒன்றாக வசித்து வந்துள்ளார் மலர்.
இந்நிலையில் தான் பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் மலரின் சடலம் மீட்கப்பட்டது. சந்தேகத்தில் அடிப்படையில் முருகன் கைது செய்யப்பட்டதில் அவர் இந்த கொலையை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், கடந்த 15 ஆண்டுகளாக நானும் அவளும், கணவன் மனைவியாக வாழ்ந்து வருகிறோம். சில மாதங்களாக மலரின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது. அவருக்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து மலரிடம் நான் கேட்டபோது அவர் என்னை எதிர்த்துப் பேசினார்.
நான் சொல்லிப்பார்த்தேன், அவள் கேட்கவில்லை. இதனால் சம்பவம் நடைபெற்ற தலையில் அம்மி கல்லை போட்டு கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்துவிட்டேன் என வாக்குமூலம் அளித்துள்ளார். தற்போது முருகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் 300 நாட்கள் வேலை பார்த்தால் ஊழியர்களுக்கு தங்க மோதிரம் கொடுக்கும் உரிமையாளரின் செயல் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.
கேரளம் மாநிலம், கண்ணூர் மாவட்டம் பாட்டியம் பகுதியைச் சேர்ந்தவர் சுகுமாரன். இவர் கடந்த 1971ஆம் ஆண்டு கேரளாவிலிருந்து சென்னைக்கு டீ கடை வேலைக்கு சென்ற இவர், தற்போது 5 கடைகளுக்கு ஓனராக இருக்கிறார்.
இடதுசாரி சிந்தனை கொண்ட இவர், ஒவ்வொரு மே தினத்தின் போதும் தன்னுடைய கடையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களை நட்சத்திர ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு விருந்து கொடுத்து அசத்துவார்.
இதனால் இது குறித்து அவரிடம் கேட்ட போது, நான் கேரளாவிலிருந்து சென்னைக்கு வேலை தேடி சென்ற போது, சிந்தாரிப்பேட்டையில் உள்ள டீ கடையில் வேலைக்குச் சேர்ந்தேன்.
அங்கு மூன்று ஆண்டுகளாக வேலை செய்த நான், அதன்பிறகு 8 கடைகளில் வேலை செய்தேன். அந்தக் காலகட்டத்தில் சென்னை நகர டீ கடை தொழிலாளர்கள் சங்கம் என்ற ஒன்றை ஆரம்பித்தோம். அதன் மூலம் டீ கடை தொழிலாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்துவருகிறோம்.
அப்படி டீ கடை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது, அந்த வழக்கில் 60,000 ரூபாய் எனக்கு நீதிமன்றம் வழங்கியது, அந்த பணத்தை வைத்து முதலில் அடையாறு பகுதியில் டீ கடை ஒன்றை துவங்கினேன்.
கடின உழைப்பு மற்றும் விடா முயற்சியினால் நல்ல வருமானம் கிடைக்கவே, அடையாறு, பெருங்குடி என சென்னையில் இருக்கும் முக்கிய ஐந்து இடங்களில் சிக்காக்கோ என்ற பெயரில் டீ கடையை துவங்கினேன்.
தற்போது வரை 45 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். அவர்களின் அனுபவத்திற்கு ஏற்ப 400 முதல் 1000 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மே தினத்தின் போது டீ கடைகள் முன்பு சிஐடியூ கொடி ஏற்றப்படும். தொழிலாளர்களுக்கு டீயோடு டிபனும் இலவசமாக வழங்குவோம். அதன்பிறகு நட்சத்திரஓட்டல்களுக்கு தொழிலாளர்களை அழைத்துச் சென்று அவர்களுடன் ஆலோசனை வழங்குவோம்.
அப்போது 300 நாள்களுக்கு மேல் வேலைக்கு வந்த தொழிலாளர்களுக்கு 2 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும். அதோடு நட்சத்திர ஹோட்டல்களில் விருந்து, அதன் பின் அவர்களுக்கு இன்று முதல் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னுடைய வெற்றியின் ரகசியம், கடைக்கு நான் முதலாளி கிடையாது, வரும் வாடிக்கையாளர்கள் தான் முதலாளி, இதனால் நாம் 10 ரூபாய்க்கு டீ கொடுக்கிறோம் என்றால், அது அந்தளவிற்கு தரமானதாக இருக்க வேண்டும் என்று ஊழியர்களிடம் கூறுவேன், அதுமட்டும் தான் ரகசியம் என்று கூறியுள்ளார்.
இலங்கை கிரிக்கட் அணியினருக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் தற்போதைய சூழ்நிலைகளை கருத்திற் கொண்டு இவ்வாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியினருக்கு இவ்வாறு விசேட பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கட் மற்றும் சர்வதேச கிரிக்கட் சபை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு ஆகியன இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.
உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்கேற்கும் இலங்கைக் குழாம் பயிற்சிகளை ஆரம்பிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
வில்பத்து சரணாலயத்தின் மத்தியில் அமையப்பெற்றுள்ள புனித அந்தோனியார் யாத்திரிகை ஸ்தலமான ‘பள்ளகண்டல் புனித அந்தோனியார்’ தேவாலயத்தில் உள்ள அந்தோனியார் திருச் சொரூபம் அடையாளம் தெரியாதவர்களால் உடைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத விசமிகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேவாலயத்தில் உள்ள அந்தோனியார் திருச் சொரூபம் உடைக்கப்பட்டுள்ளமை நேற்று மாலையே தெரியவந்துள்ளது.
மக்கள் நடமாட்டமில்லாத நேரம் குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை குறித்த பிரதேச பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மிகவும் சிறப்பு மிக்க குறித்த தேவாலயத்தின் புனித அந்தோனியாரின் திருவிழாவை ஒவ்வொரு வருடமும் சிங்கள, தமிழ் மக்கள் ஒன்றினைந்து சிறப்பாக கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியா மற்றும் ஐரோப்ப நாடுகள் மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதாக பிரித்தானியாவின் MI5 புலனாய்வுப் பிரிவுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
புதிய உத்திகளை பயன்படுத்தி தாக்குதல் மேற்கொள்ள ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு நடவடிக்கை எடுத்து வருவதாக MI5 புலனாய்வுப் பிரிவுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
பிரித்தானியாவிலிருந்து தப்பிச் சென்று ஐ.எஸ் அமைப்பில் இணைந்த ஜிஹாட் ஜோன் என்பவர் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
பயங்கரவாதிகளால் கைது செய்யப்படும் பயணக் கைதிகளின் கழுத்தை அறுத்துக் கொலை செய்யும் நடவடிக்கையில் ஜிஹாட் ஜோன் என்றழைக்கப்படும் மொஹமட் எம்வாசி என்பவரே ஈடுபட்டு வருவதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு தாக்குதல்களை நடத்துபவர்கள், உறங்கும் செயற்பாட்டாளர்கள் என்றே குறிப்பிடப்படுகின்றர். அவர்கள் ஒன்றிணைந்த வலையமைப்பு முதலைச் சிறைக்கூடம் என்றே அழைக்கப்படுகிறது.
விசேடமாக, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய ஐ.எஸ் பயங்கரவாதிகளே இந்த விடயம் தொடர்பான தகவல்களைக் கசியவிட்டுள்ளனர்.
இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் பிரகாரம், கொழும்பு – தாஜ் சமுத்ரா ஹோட்டலில் தாக்குதலை நடத்த முயற்சித்து, தெஹிவளையில் குண்டை வெடிக்க வைத்த, 36 வயதுடைய அப்துல் லத்தீப் ஜமால் மொஹமட் எனும் குண்டுதாரி, பிரித்தானியாவில் கல்வி பயின்றவர் என்று கூறப்படுகிறது.
இவர், சிரியாவில் வைத்து, பயங்கரவாதத்துக்கான பயிற்சிகளைப் பெற்றுள்ளார் என, பிரித்தானியப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதனால், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதல்களில், இவரது பங்கு அதிகமாக இருந்திருக்குமெனவும் அவருடைய மனதுக்குள் இஸ்லாமியப் தீவிரவாதச் சிந்தனைகளை, பிரித்தானியாவில் வசிக்கும் தீவிரவாதிகளே புகுத்தியிருப்பர் என்றும், இருப்பினும், பிரித்தானியாவில் இருந்த காலப்பகுதியில், அவர் எந்தவித பயங்கரவாத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருக்கவில்லை என்றும், புலனாய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
பிரித்தானியாவில் உயர்கல்வியை அடுத்து, அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ள அப்துல் லத்தீப் ஜமால், அங்குள்ள தேசிய பிரிவினைவாதிகளுடன் இணைந்து செயற்பட்டுள்ளார். அங்கிருந்து 2014ஆம் ஆண்டே சிரியாவுக்குச் சென்றுள்ளார். அங்கு ஐ.எஸ் பயங்கரவாதிகளின் “பெரிய படை” எனும் பிரிவின் உறுப்பினராக இணைந்து கொண்டுள்ளார். மொஹமட் எம்வாசி எனும் ஜிஹாட் ஜோன் என்பவரும், இதே பிரிவைச் சேர்ந்தவராவார்.
ஐ.எஸ் அமைப்பானது, தனது இராச்சியத்தை சிரியாவில் ஸ்தாபிக்கும் போது, அந்நாட்டுக்குள் போரிட்டுக்கொண்டிருந்த பிரித்தானிய பயங்கரவாதிகள் சிலரும், ஜிஹாட் ஜோனுடன் தொடர்புபட்டவர்கள் என்றும் ஜுனைட் ஹுஸைன் எனும் மற்றுமொரு நபரும், தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று பிரித்தானிய புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிரியாவின் யுத்த களத்தில் சில காலம் இருந்துள்ள அப்துல் லத்தீப் ஜமால் மொஹமட், இலங்கைக்கு எப்போது வந்தார் என்பது தொடர்பிலும் அவர், ஐ.எஸ் அமைப்பின் உறங்கும் செயற்பாட்டாளர்கள் கூடத்தில் எவ்வளவு காலம் இருந்தார் என்பது தொடர்பிலும், இதுவரையில் தெளிவான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.
இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில், 2006ஆம் ஆண்டிலேயே அவர், பிரித்தானியாவுக்குச் சென்றுள்ளார். 2007இல் மீண்டும் இலங்கைக்கு வந்து, 2008இல் மீண்டும் பிரித்தானியாவுக்குச் சென்றுள்ளார் என கண்டறியப்பட்டுள்ளது.
அப்துல் லத்தீப் ஜமால் மொஹமட் என்ற தற்கொலை குண்டுதாரி இலங்கையில் பிரபலம் பெற்ற தேயிலை விநியோக நிறுவனத்தை நடத்திவரும் குடும்பமொன்றைச் சேர்ந்தவர் என்றும் அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற போதே, அவர் இவ்வாறான அமைப்புடன் கூடிய தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கலாமென, அவருடைய சகோதரி தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அப்துல் லத்தீப் ஜமால் மொஹமட் போன்ற உறங்கும் செயற்பாட்டாளர்கள் பலர், இன்னமும் பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவுக்குள் வசித்து வருவதாகவும் இவர்கள், எதிர்வரும் காலங்களில், மாற்றுவழிகளில் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளார்கள் என்றும், பிரித்தானிய புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீனம் : தனது செயல்களை பிறர் அறியாத வண்ணம் சூட்சுமமாய் செயல்படுத்தும் மீன ராசி அன்பர்களே, இந்த மாதம் அனுகூலமான பேச்சுகளால் பணம் சம்பாதிப்பதற்கான நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள்.
சமூகத்திலும், அரசு சார்ந்த வகைகளிலும் தேவையான நற்பெயர் உண்டாகும். வீட்டில் ஓரிடத்தில் வைத்த பொருட்களை அங்கும் இங்கும் தேடுவதும், வாகனங்களை பாதுகாப்பற்ற இடங்களில் நிறுத்தினால் காணாமல் போகும் வாய்ப்புகளும் உள்ளது.
குடும்பத்தில் மூத்த சகோதர வகையினர் தந்தைக்கு நிகரான கனிவுடன் உங்கள் நல் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் செய்து தருவார். தந்தையின் உடல்நலத்தில் தனித்த கவனமும், அவருடன் மற்றவர்கள் பேசும் வார்த்தைகளில் வாக்குவாதம் இல்லாத நிலையில் இருத்தல் வேண்டும். இதனால் தந்தையின் ஆயுளுக்கு பங்கம் இல்லா நிலை உண்டு.
தொழிலதிபர்கள் நன்மைகளை ஏராளமாக அனுபவிக்கக் கூடிய நல்ல நேரம். உங்களுடைய தீராத பணிச்சுமையிலும் உங்களது குழந்தைகளின் நலனுக்காக பெண் தெய்வ வழிபாடுகளை பின்பற்றி வருபவர்கள் தாங்கள் வழிபடும் தெய்வ அருளைப் பெற்று தங்கள் புத்திர வகையில் நல்ல முன்னேற்றமான பலன்களை பெறுவார்கள்.
உத்தியோகஸ்தர்கள் அறிமுக மில்லாத நபர்களுக்கு தகுதிக்கு மீறிய உதவிகளை செய்யாமல் இருப்பது உத்தம பலனை உருவாக்கித் தரும். உடன் பணிபுரிவோரின் நற்செயல்கள் புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் பணிபுரியும் அலுவலகத்தின் ஒத்துழைப்பால் இனிதே நடக்கும்.
கலைத்துறையினர் ஆரோக்கிய குறைபாடுகளால் உங்கள் வேலையை தக்க நேரத்தில் முடிக்க முடியாமல் போகலாம். தக்க நேரத்தில் மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள். தொழில் விவகாரத்தில் பொறுமையுடன் செயல்பட்டால் அனைத்தையும் இனிதே முடிக்க முடியும்.
அரசியல்வாதிகள் ஆதாயம் கிடைக்க நல்லோர் உடன் இருத்தல் வேண்டும். நம்மவர் என்று எண்ணி எதிலும் யாரையும் நம்பி ஏமாற வேண்டாம். அரசு விவகாரங்களில் பொறுமையாக கையாள வேண்டிய விசயங்கள் அனைத்தையும் அப்படியே சற்று தள்ளிப்போடுவது உத்தமம். வாகனங்களில் செல்லும் போது கவனமாக இருங்கள்.
பெண்கள் அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் சக ஊழியர்களின் தகுந்த உதவிகளால் நிர்ணயிக்கப்பட்ட பணி இலக்குகளை சுலபமாக செய்து உயர் அதிகாரிகளிடம் தகுந்த நற்பெயர் பெறுவார்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள், தெய்வ அருளால் குடும்பத்தில் சுமூகமான வாழ்க்கை முறைகளைப் பெற்று மனமகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்.
மாணவர்கள் தங்கள் படிப்பிற்கு தேவையான அத்தனை உதவிகளையும் தந்தையிடமிருந்து பெற்றுக் கொள்வார்கள். படிப்பில் புதிய உத்வேகத்துடன் செயல்பட திறமையான நண்பர் ஒருவர் கிடைப்பார். போக்குவரத்து மற்றும் உயரமான இடங்களில் தகுந்த கவனமுடன் செயல்படுவது நல்லது.
கும்பம் : தகுதிக்கேற்ப வாழ்ககை நடத்தி கிடைத்ததை பெரிதென எண்ணி வாழ்ந்திடும் கும்ப ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்கள் மனதிலும், செயலிலும் உற்சாகம் நிறைந்திருக்கும். மனதில் தைரியமும், உற்சாகமும் உண்டாகும். வீடு, வாகன வகைகளில் முன்னேற்றமான நற்பலன்கள் உண்டாகும். ஆசாபாச செயல்கள் மற்றும் கேளிக்கை விளையாட்டுகளில் ஈடுபடாமல் இருப்பதாலும், லாகிரி வஸ்துகளை ஒதுக்கி வைப்பதாலும் மட்டுமே ஆரோக்கிய உடல்நலத்தை பெற முடியும்.
குடும்பத்தில் தந்தை மற்றும் சகோதரர் வகையில் கடந்த காலங்களில் உங்களுக்குள் இருந்த மனவேற்றுமைகளை விலகுவதற்கான மகிழ்வான சந்தர்ப்பங்கள் ஏற்படும். பூர்வ புண்ணிய சொத்துகளில் வம்பு வழக்கு ஏதுமிருந்தால் அனுகூலமான தீர்வு உண்டாகும். விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் நலம் கிடைக்கும். அடுத்தவர்களின் நட்பை கெடுத்துக் கொள்ள வேண்டாம்.
தொழிலதிபர்கள் தொழிலில் சுபச் செலவுகள் ஏற்படக்கூடும். ஆதாயத்தின் ஒருபகுதியை அறப்பணிகளுக்கு செலவிடும் நிலைமைகள் உண்டாகி உங்கள் மனதை நல்வழிப்படுத்தும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு தொழிலில் புதிய ஆதாயத்தை ஏற்படுத்தும். தொழிலில் உங்களை புறக்கணித்தவர்கள் அண்டி வருவார்கள். நன்மதிப்பும், மரியாதையும் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்கள் நல்ல முறையில் பணிகளைச் செய்து முடிப்பீர்கள். திருப்தியான மனப் போக்கு உண்டாகும். அடுத்தவர்களின் கருத்துக்கு இடம் கொடாமல் நீங்களே முடிவெடுத்துக் கொண்டால் பிரச்சனைகளுக்கு இடமே இல்லை. மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடக்கும். பதவி உயர்வை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு இந்த மாதம் அனுகூலமான தகவல் கிடைக்கும்.
கலைத்துறையினர் அனுகூலமான தகவல்கள் கிடைக்கப் பெறுவீர்கள். நன்மதிப்பும், மரியாதையும் கிட்டும். பல மங்களகரமான நிகழ்வுகள் நடைபெறலாம். உங்களுக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பலவழிகளிலிருந்தும் பண வரவுகள் வரலாம். முக்கியமான நிகழ்வுகள் மன மகிழ்ச்சியை அளிக்கும்.
அரசியல்வாதிகள் மூத்த தலைவர் ஒருவரால் நீங்கள் புகழப்படுவீர்கள். உடனிருப்போரின் தகுந்த ஒத்துழைப்பை பெற முயற்சிப்பீர்கள். தகுந்த கவனத்துடன் செயல் படுங்கள் ஆதாயம் கிட்டும்.
பெண்கள் குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள், அதிக பட்ச வேலைகளை தானே விரும்பி ஏற்றுக் கொண்டு செயல்படுவர். குடும்பத்தவரின் தகுந்த ஒத்துழைப்பு ஊக்கம் பெறச் செய்யும். ஆபரணங்களை தகுந்த முறையில் பாதுகாப்புடன் அணிந்து செல்வது சிரமங்கள் வராது தவிர்க்கும். அதே நேரம், ஆடை, ஆபரணங்கள் ஏராளமாக சேரும்.
மாணவர்கள் தங்கள் படிப்பில் தேவையான கவனம் செலுத்துவதால் அனைவரிடமும் நற்பெயர் பெறமுடியும். தந்தை மற்றும் சகோதர, சகோதர வகையில் அன்பான சூழ்நிலை உருவாகும். நண்பர்களுடன் பழகும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பிறர் செய்யும் தவறுக்கு நீங்கள் பொறுப்பாகி விடுவீர்கள். எச்சரிக்கை தேவை.
மகரம் : பொருள் தேடும் வழியில் அருளையும் நாடிச் செயல்படும் எண்ணம் நிறைந்த மகர ராசி அன்பர்களே, இந்த மாதம் சுபபலன்கள் மிகுதியாக நடைபெற வாய்ப்பு உள்ளது. கறாரான செயல்பாடுகளால் மட்டுமே பொருளாதார வரவுகளை பெற முடியும். இல்லையால் பலரது பரிகாசத்திற்கு ஆளாக நேரிடும்.
இப்பொழுது உள்ள கிரகநிலையில் சாந்தகுணம் பாதியும், உக்கிர குணம் பாதியுமாக கலந்திருக்கும். சூழ்நிலகளிக்கேற்ப எதை பயன்படுத்தினால் வெற்றி என்பதை உணர்ந்து செயலாற்றி தக்க புகழைப் பெறுங்கள்.
குடும்பத்தில் வெகு காலமாக ஆண்பிள்ளை புத்திரப்பேறு எதிர்பார்ப்பில் உள்ள தம்பதியருக்கு குல தெய்வ அருளால் அனுகூல பலன் கிடைக்கும். பூமி, மனை, விவசாய நிலம் போன்றவைகளில் தகுந்த கவனம் செலுத்தி நல்ல வருமானம் பார்ப்பீர்கள். உடன் பிறந்தோரிடம் அனுசரனையாக இருப்பது எதிர்காலத்தில் எந்த ஒரு பிரச்சனையையும் வரவழைக்காது.
தொழிலதிபர்கள் உங்கள் தொழிலிலும், செயல்பாட்டிலும் பிறரது குறுக்கீடு இல்லாமல் செயல்பட்டு தகுந்த வெற்றி பெறுவீர்கள். தந்தையின் பேச்சுக்கு ஏற்றபடி செல்வதும், மூத்த அனுபவசாலிகள் பேச்சுக்கு மரியாதை தருவதும் உங்கள் வெற்றிக்கு அடிகோலாய் அமையும். உங்களது உடல் நலத்தில் கவனம் செலுத்துவது இப்பொழுது மிக அவசியம்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் உங்களுக்கு தேவையான ஒன்றை வாங்கிக் கொடுத்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்கள். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் வரலாம். உடன் பணிபுரிபவர்கள், உங்களிடம் எதிரித் தனம் காட்டியவர்கள் சிலர் சமரச முயற்சிகளில் ஈடுபடுவார்கள். மறப்போம், மன்னிப்போம் பாணியில் நடந்து கொள்ளுங்கள்.
கலைத்துறையினர் ஓய்வில்லாமல் உழைத்து நல்ல புகழை பெற வேண்டிய கால கட்டம். உடன் இருப்பவர்களை கண் காணிக்க வேண்டி வரும். திறமை சாலிகள் உங்களைத் தேடிக் கொண்டு வருவார்கள். அவர்களுக்கு நல்ல மதிப்பு கொடுத்து உடன் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் எதிர்கால கனவுகளை நிறை வேற்ற துணை இருப்பார்கள்.
அரசியல்வாதிகள் பிறர் பேச்சுகளை நம்பி ஏமார வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். எதிலும் கவனம் தேவை. அலைச்சல் அதிகம் ஏற்படக் கூடும் ஆகையால் நேரத்திற்கு உணவருந்தி ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். புதிய மாற்றங்களை ஓரிரு வாரங்களுக்கு ஒத்திப் போடுவது நிம்மதி அளிக்கும். பிரிந்து போனவர்கள் மறுபடியும் உங்களைச் சந்திக்க நேரலாம்.
பெண்கள் அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள், பிறரது குறுக்கீடு எதுவுமின்றி சுயமான சிந்தனையுடன் செயல்பட்டு அதிகாரிகளிடத்தில் நற்பெயர் பெறுவார்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள், வீட்டுக்குத் தேவையான அனைத்தையும் வாங்கி சிறந்த குடும்ப நிர்வாகியாக திகழ்வார்கள். ஆபரணச்சேர்க்கை சாதகமான நிலையில் உண்டு.
மாணவர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முன்பு இருந்ததைக் காட்டிலும் இப்பொழுது முழுக்கவனம் படிப்பில் ஏற்படும். கலை, இசை, பரத நாட்டியம் போன்றவற்றில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் புதிய உத்வேகத்துடன் செயல்பட்டு வெற்றியை ஈட்டுவார்கள். தக்க சன்மானமும், புகழும் உண்டு.
தனுசு : கற்பனை வாழ்க்கையில் கவனம் செலுத்தாது, நிஜ வாழ்க்கையின் தத்துவம் தெரிந்து வாழும் தனுசு ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்களுக்கு வேண்டிய நற்பலனகளை யாராலும் தடுக்க முடியாது. சகோதரர்களின் உதவியால் பொருளாதார முன்னேற்றம் பெற நல்மார்க்கம் உண்டு.
எந்த பிரச்சனைகளையும் எளிதாக எதிர்நோக்கும் மனதைரியத்தை பெறுவீர்கள். வீடு, மனை, தாய் வாகனம் போன்ற வகைகளில் தடங்கலும்,அனுகூலமும் சம அளவில் இருக்கும்.
குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே இருந்த சிறு சிறு மனஸ்தாபங்கள் சூரியனைக் கண்ட பனி போல் விலகி விடும். மனைவி, கணவணுக்கு சிறிய காய்ச்சலுக்கு கூட தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்வது மிக அவசியம். மனைவி மற்றும் அவர் குடும்பத்தவரின் உதவியான செயல்களால் உங்களுக்குடைய கடன் வகைகளை ஓரளவு சரி செய்யலாம்.
தொழிலதிபர்கள் உங்கள் தொழில் வகையில் கடந்த நாட்களைவிட உயர் வருமானம் பெறும் வாய்ப்புண்டாகும். சகோதர வகையில் பிரச்சனைகள் இருந்தால் சரி செய்வது உத்தமம். வெளிநாட்டு வகையில் தொழில் செய்பவருக்கு கூடுதல் முதலீடு செய்தால் மட்டுமே நல் ஆதாயத்தைக் காண முடியும். எந்த ஆவணங்களாக இருந்தாலும் படித்து பார்த்து கையெழுத்திடுவது நல்லது.
உத்தியோகஸ்தர்கள் கடந்த சில காலமாக அனுபவித்து வந்த பிரச்சனைகளிலிருந்து முழுமையாக விடுபட வேண்டிய கால கட்டம். தூர தேசத்திலிருந்து வரும் செய்திகள் திக்குமுக்காட வைக்கும். அன்றைய வேலையை அன்றே செய்து முடிப்பீர்கள். ஓய்வில்லாமல் உழைக்க வேண்டி வரும். மேலதிகாரிகளை அவமரியாதை செய்து விடாதீர்கள்.
கலைத்துறையினர் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க வேண்டிய கால கட்டம். ஆபரணச் சேர்க்கை உண்டு. பணம் பலவகைகளிலும் வரும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். உடனிருப்போரின் தொந்தரவு அதிக கவனம் தேவை.
அரசியல்வாதிகள் வழக்கு, விவாதங்களில் கவனம் தேவை. உங்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் மீது சந்தேகம் வரலாம். ஆனால் அது உண்மை இல்லை என்று தெரிய வரும். சிலர் மீது கோபப் பட வேண்டி வரும். கோபத்தை கட்டுப்படுத்தினால் மகிழ்ச்சி அடையலாம்.
பெண்கள் அரசு மற்றும் தனியார்துறை அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் கூடுதல் பணிபுரிந்து அதற்கான வெகுமதியை பெறுவார்கள். உடல்நலத்தில் தகுந்த கவனம் செலுத்துவதால் மட்டுமே ஆரோக்கியத்தை பெறமுடியும். குடும்ப நிர்வாகம் கவனிக்கும் பெண்கள், பணக் கஷ்டம் எதுவுமின்றி சிறந்த முறையில் குடும்பத்தை நிர்வகிப்பார்கள்.
மாணவர்கள் தங்கள் படிப்பில் நன்கு கவனம் செலுத்தினாலும் கூடாத சேர்க்கைகள் குறுக்கிட்டு மனக்குழப்பத்தை தரும் வாய்ப்பு உள்ளதால் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவும். தந்தையுடன் நல்ல ஒற்றுமையுடன் இருக்க சந்தர்ப்பங்கள் உருவாகும்.
விருச்சிகம் : பிறர் போற்றலையும், தூற்றலையும் பொருட்படுத்தாது தனக்கென்று தனிப் பாதை வகுத்து செயல்படும் விருச்சிகராசி அன்பர்களே, இந்த மாதம் உங்களுடைய பொது நலப்பணிகள் மேலோங்கி உங்களுக்கு உயரிய அந்தஸ்து கிடைக்கப் பெறுவீர்கள்.
உங்கள் நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். உயர்ந்த நிலையில் உள்ளவர்களின் அனுகூலம் கிடைக்கப் பெற்று சமூகத்தில் சிறந்த அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். நல்ல ஞானம் உண்டாகும்.
குடும்பத்தில் தாயின் மன உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படுவது நற்பலனைத் தரும். வீட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் தாராளமாய கிடைக்கும். புத்திரர்கள் தந்தையின் சொல்லை மந்திரமாக ஏற்று குடும்பத்திற்கு நற்பெயர் பெற்றுத் தருவார்கள். சகோதரர்கள் வகையில் கருத்து மாறுபாடுகளை உருவாக்க எதிரித்தனம் செய்வோர் தந்திரமாக செயல்படுவார்கள்.
தொழிலதிபர்கள் சுக சவுகரிய வாழ்க்கையை பெறும் வகையில் தொழில் அமையும். புதிய உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். பெற்றோர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் வீட்டில் கருத்து வேறுபாடுகளை தவிர்க்கலாம். தந்தையின் தொழில் புரிபவர்கள் அவரைப்பின்பற்றி புதிய மிடுக்கான தோற்றம் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்கள் வெளிநாட்டுப் பயணம் சென்று திரும்பும் வாய்ப்புகள் சிலருக்கு அமையலாம். அதனால் ஆதாயமே. நல்ல அனுபவங்களும் ஏற்பட்டு ஆதாய வரவினங்கள் தகுந்த முறையில் கிடைக்கப் பெறுவீர்கள். உடன் பணிபுரிபவர்களின் நம்பிக்கைக்கு பாத்திடமாவீர்கள். புதிய கடன்கள் வாங்கி பழைய கடன்களை அடைக்க நேரிடும்.
கலைத்துறையினர் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவீர்கள். நல்ல சூழ்நிலைகள் அமையப் பெற்று அதனால் மன மகிழ்ச்சி உண்டாகலாம். மூத்த கலைஞர்கள் நல் ஆசி வழங்குவார்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு இருக்கும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். சுய கௌரவம் காக்கப்படும்.
அரசியல்வாதிகள் அரசு சம்மந்தமான பிரச்சனைகளை மற்றவருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது. யாரிடமும் எதைப்பற்றியும் விவாதிக்க வேண்டாம். சில விஷமிகளின் தொந்தரவு இருந்தாலும் சுலபமாக சமாளித்து விடுவீர்கள்.
பெண்கள் குடும்பத்தில் சகல தேவைகளையும் மனநிறைவுடன் பூர்த்தி செய்வார்கள். ஆபரணச் சேர்க்கை அனுகூலமாக உள்ளது. உங்களின் ஆலோசனை மற்றவர்களால் ஏற்றுக் கொள்ளப்படும். பிள்ளைகளின் முன்னேற்றம் கண்டு உங்களுக்கு மன மகிழ்ச்சி உண்டாகும். கணவனின் அன்பும், ஆதரவும், ஆலோசனையும் உங்களுக்கு மன நிறைவைக் கொடுக்கும்.
மாணவர்கள் தங்கள் படிப்பில் முழுமன ஈடுபாட்டுடன் செயல்படும் சூழ்நிலைகள் உள்ளது. நண்பர்களால் சிறு இடையூறு தரும் கவனச்சிதறல்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் நண்பர்களுடான பழக்க வழக்கங்களில் கட்டுப்பாடு வைப்பது நலம் தரும். சாலைகளில் வாகனங்க்ளில் செல்லும்போது கவனமாக செல்லுங்கள். யாரைப் பற்றியும் யாரிடமும் குறை கூற வேண்டாம்.
துலாம் : நன்மை தீமைகளை ஆய்ந்தறிந்து நியாய வழியில் அடுத்தவருக்கும் உதவி புரிந்திடும் துலாம் ராசி அன்பர்களே, இந்த மாதம் கடந்த காலத்தில் கிடைத்திராத சுகமான அனுபவங்கள் கிரக அனுகூலத்தால் உங்கள் வாழ்வில் நிகழும். உங்கள் வெற்றி ஒவ்வொன்றுக்கும் உங்கள் நற்செயல்கள் உறுதுணையாக இருக்கும்.
புகழ்ச்சிக்கு மயங்காது எதார்த்த நிலையை உணர்ந்து வாழ வேண்டும்.வீடு, மனை, வாகன, தாயின் உடல்நலம் ஆகியவற்றில் அனுகூலமான நற்பலன்கள் நடந்து உங்கள் மனதை மகிழ்வு பெறச் செய்யும்.
குடும்பத்தில் குடும்ப உறவினர், மற்றும் வெளி விவகாரங்கள் தொடர்பான விவாதங்கள் கணவன், மனைவி பேச்சுகளில் தலை தூக்கும். வெளிவிவகாரப் பேச்சுகளை தவிர்த்து குடும்ப ஒற்றுமையை பாதுகாக்கவும். ஆயுள், ஆரோக்கிய பலம் உண்டாகும். அவ்வப்போது படபடப்பு தன்மை ஏற்பட்டு பின்னர் விலகும். விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் அமைதி நிலவும்.
தொழிலதிபர்கள் தொழில் சார்ந்த வகையில் உள்ள சிரமங்களை தவிர்க்க, புதிய யுக்திகளை செயல்படுத்தி பலமான வெற்றிகளை பெறுவீர்கள். வெளியூர் பயணங்களில் அனுகூலமான அனுபவங்களும், வெற்றியும் உண்டாகும். தொழிலாளர்களை நன்மதிப்புடன் நடத்துங்கள். உங்களுக்கு உண்மையாக உழைப்பவர்களை அடையாளம் கண்டு கொள்வீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். புத்திசாலித்தனமாகவே காயை நகர்த்துவீர்கள். வேலைப்பளு காரணமாக உடல் சோர்வு ஏற்படலாம். நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள். உங்களைப் புகழ்ந்து பேசுபவரை நம்ப வேண்டாம். புத்திசாலித்தனமாக அவரிடம் இருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்.
கலைத்துறையினர் பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டிருந்தவர்கள், சிறுசிறு துன்பங்களுக்கு ஆட்பட்டவர்கள் கூட இப்பொழுது சிரமங்கள் இல்லாத வாழ்க்கையை பெறமுடியும். புதிய வாய்ப்புகளை சரியான ஆட்களிடமிருந்து சரியான தருணத்தில் கிடைக்கப் பெற்று முன்னேறப் போகிறீர்கள். எதிர்காலத்தைப் பற்றிய கவலை அகலும்.
அரசியல்வாதிகள் கடந்த கால தவற்றை எண்ணாமல் புதிய முயற்சிக்கு வித்திடுவீர்கள். மன உலைச்சலால் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படலாம். மனதை தைரியமாக வைத்துக் கொள்ளுங்கள். முன்னோர்கள் வழிபாட்டை முறைப்படி ஒழுங்குபடுத்தினால் உங்களை துரத்திக் கொண்டிருந்த தொல்லைகள் அகலும். தியானம் செய்து மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள்.
பெண்கள் குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு பொருளாதார ரீதியிலும் உடல் ஆரோக்கியத்திலும் வளமான நன்னிலைகள் உண்டாகும். ஆபரணச் சேர்க்கை எதிர்பார்ப்புகள் மங்கலமாய் நிறைவேறும். சேமிப்பு பெருகும். இதை உங்களின் குழந்தையின் பேரில் சேர்த்தால் எதிர்காலத்தில் நிம்மதியாக வாழ வழிபிறக்கும்.
மாணவர்கள் தங்கள் படிப்பில் அதி தீவிரமாக லட்சிய மனப் பான்மையுடன் படித்து புதிய சாதனை நிகழ்த்துவார்கள். நண்பர்க்ள் உதவினாலும் படிப்பு சிறப்பு பெறும். தந்தை, மகன் இடையே நல்ல நட்புறவு இருக்கும் வகையில் நடந்து நற்பெயர் பெறுவீர்கள். வாகன, பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் கவனத்தைச் சிதறவிடாமல் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம்.