மே மாத ராசிபலன்கள் 2019 : கன்னி!!

கன்னி : கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி இடைவிடாத உழைப்பினால் பொருளை தக்க வைத்திடும் கன்னி ராசி அன்பர்களே இந்த மாதம் மனதில் ஞானம் நிறைந்த புதிய சிந்தனைகளும், எந்த செயலையும் மின்னல் வேகத்தில் புரிந்து கொள்ளும் புதிய மனோபாவமும் உண்டாகும். கடன், வழக்கு போன்ற வகைகளில் பதட்டத்திற்கு இடம் தராமல் நிதான போக்கை கடைப்பிடித்து சிரமங்கள் வராமல் தவிர்த்துக் கொள்ளுங்கள். உடல் நலம் சீராகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

குடும்பத்தில் தாயின் உடல் நலத்தில் கவனமும், வீட்டு பாதுகாப்பில் தகுந்த கவனமும் செலுத்துவது நன்மை தரும். சொந்த வீடு வைத்திருப்பவர்கள் வீட்டு பத்திரங்களை நம்பிக்கையில்லாத நபர்களிடம் கொடுப்பது சிரமம் தரும். கவனம் தேவை. சமூகத்தில் தகுந்த புகழும், தந்தை வழி, தாய்மாமன் வகை உறவினர்களிடமும் விட்டுப் போன உறவுகளை திரும்பவும் தொடருவீர்கள்.

தொழிலதிபர்கள் புதிய முதலீடுகள் செய்வதை இப்பொழுது ஒத்திப் போடுவது சிறந்தது. ஆடம்பர எண்ண்ங்களை ஒதுக்கி விட்டு, கிடைத்த லாபத்தை பயன்பாடு உள்ள வகையில் பயன்படுத்துங்கள். தந்தையின் வழி தொழில் செய்பவர்கள் தந்தையின் நீண்ட கால திட்டம் ஒன்றை உங்கள் மூலமாக நிறை வேற்றும் சிந்தனை தந்தையின் மனதில் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்கள் வெளி நாட்டு வேலை வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு அனுகூலமான நிலையில் கிரகம் அமைந்திருப்பதால் இடைவிடாத முயற்சிகள் மூலம் நற்பலனைத் தரலாம். மேலதிகாரிகள் உங்களை மனதில் வைத்து தான் அடுத்த கட்ட நிலைக்கு உங்களை அழைத்துச் செல்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை.

கலைத்துறையினருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கைநழுவி போகலாம். மற்றவர்கள் பாராட்டுக்கு மயங்கி எந்தவொரு நிகழ்விலும் நிதானத்தை இழக்க வேண்டாம். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். முக்கிய முடிவுகளை சற்று யோசித்து நிதானத்துடன் எடுக்க ஆபத்து அண்டாது.

அரசயில்வாதிகள் உங்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி, பொறுப்புகள் உங்களையே வந்தடையும். எதிர்பார்த்த ஒவ்வொரு விசயங்களிலும் நன்மையே கிட்டும். எதிரிகளைவிட உடனிருப்போரிடம் கவனம் வையுங்கள். குல தெய்வத்தை வழிபட்டு காரியங்களை வெற்றியுடன் நடத்தி வாருங்கள். யார் மனதையும் புண்படுத்தாமல் இருப்பது மிக முக்கியம்.

பெண்கள் சுயவேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ள பெண்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியின் தன்மையை உணர்ந்து செயல்பட்டு நல்ல முன்னேற்றம் காண்பார்கள். ஆபரணச் சேர்க்கையிலும் அனுகூல பலன்கள் உண்டு. வேலைப்பளு காரணமாக உணவு உண்ண நேரமில்லாமல் வயிற்றுத் தொந்தரவு ஏற்படலாம். அலர்ஜி போன்ற உபாதைகளும் வரலாம்.

மாணவர்கள் தங்கள் படிப்பில் மிகவும் கவனம் செலுத்துவதால் மட்டுமே நல்ல மதிப்பெண்கள் பெற முடியும். தந்தை, மகன் உறவு நிலைகளில் நம்பிக்கை குறையாமல் நல்ல முறையில் நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். சாகச விளையாட்டுகளில் ஈடுபடுபவர்கள் தகுந்த கவனத்துடன் செயல் பட வேண்டும்.

மே மாத ராசிபலன்கள் 2019 : சிம்மம்!!

சிம்மம் : தன்னலத்தில் கொஞ்சமும், பிறர்நலத்தில் அதிக கவனமும் செலுத்தி புண்ணியங்கள் பெறும் சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதம் முக்கிய முடிவுகளை ஒத்திப் போடுவது நல்ல நிலையை உங்களுக்கு அளிக்கும். எதிர்கால சிந்தனைகள் மேலோங்கும். உறவினர்களின் வருகையால் கலகலப்பு ஏற்படும். புகழும், தைரியமும் ஏற்பட்டு பல்கி பெருகி சமூகத்தில் உயர்வான அந்தஸ்தை பெறுவீர்கள். சுற்றுலா வாய்ப்புகள் உருவாகி புதிய படிப்பினைகளை உருவாக்கித் தரும்.

குடும்பத்தில் புத்திரர்கள் இணக்கமான சூழ்நிலையிலும் குல தெய்வ அருளும் பரிபூரணமாக கிடைக்கும். கடந்த காலத்தில் எதிரித்தனம் பாராட்டியவர்கள் வீட்டில் நடக்கும் சுபகாரியம் ஒன்றில் கலந்து கொள்ள உங்கள் வீட்டுக்கு விசேஷ அழைப்பிதழ் வரும். கவனமுடன் செயல்பட்டு தவிர்த்து விடுவது நன்மை பயக்கும். தந்தை வழி தொழில்களை பின்பற்றி பணிபுரிவோர்கள் தகுந்த முன்னேற்றம் பெறுவார்கள்.

தொழிலதிபர்கள் தொழிலில் ஸ்திரமான நிலையும், அபிவிருத்தி பணிகளும் நடந்து மனநிகழ்வை உண்டாக்கும். வங்கியில் கேட்ட கடனுதவி கிடைத்து வியாபாரத்தை விரிவுபடுத்த எண்ணம் மேலோங்கும். புதிய தொழிலுக்கு மூலதனம் வேண்டி பிரயாசை ஏற்படும்.

உத்தியோகஸ்தர்கள் உங்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து ஆதாயங்களும், பணவரவுகளும் தட்டி பறிக்க திருடர்களும், ஏமாற்றுப் பேர்வழிகளும் முயற்சி செய்வார்கள். திடீர் பயணம் ஏற்பட்டு அலைச்சலை உண்டாக்கும். நேர்மையாக நடந்து கொண்டால் மட்டுமே பிரச்சனைகளிலிருந்து தப்பிக்கலாம். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் போது எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.

கலைத்துறையினருக்கு சக நடிகர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பெரியோரின் ஆசி கிட்டும். மூத்த கலைஞர்களின் பாராட்டும், அன்பும் உங்களைத் திக்கு முக்காட வைக்கும். பிறமொழிப் படங்களில் ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறலாம்.

அரசியல்வாதிகள் மூத்த அரசியல் வாதிகள் ஆலோசனையின்படி நடந்து கொண்டால் பிரச்சனைகளை சுலபமாக சமாளிக்கலாம். நல்ல எண்ணங்களுக்கு எப்பொழுதுமே வலிமை அதிகம் ஆகையால் நீங்கள் நல்லதையே எண்ணி நல்லது செய்யுங்கள்.

பெண்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்கள் சக ஊழியர்களின் வற்புறுத்தலின் பேரில் ஆபரணம் மற்றும் ஆடம்பர பொருட்களை தங்களுக்கென வாங்குவார்கள். அலுவலகப் பணியில் தொடர்புடைய வேலைகளை வீட்டிலும் வைத்து சரி பார்ப்பவர்களுக்கு குடும்ப உறுப்பினர்கள் தகுந்த உதவிகளைச் செய்வார்கள்.

மாணவர்கள் தங்கள் படிப்பில் முழு கவனம் செலுத்தி அதிக மதிப்பெண் பெறுவார்கள். பொழுது போக்கிற்காக எந்த ஒரு ஆபத்தான விஷயங்களிலும் தனியாக ஈடுபட வேண்டாம். வாகனங்களை உபயோகப் படுத்தும் போது மிக கவனம் தேவை.

மே மாத ராசிபலன்கள் 2019 : மிதுனம்!!

மிதுனம் :  முன் யோசனையுடன் செயல்பட்டு துன்பங்களை விலக்கி வைத்து வெற்றிகள் பெறும் மிதுன ராசி அன்பர்களே இந்த மாதம் ஆரோக்கியம் சீராகவும், ஆயுள் பலம் கூடுவதற்கான கிரக நிலையும் அமையப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் பிறருக்கு சொல்லும் நல் வார்த்தைகள் அப்படியே பலித்து விடும். தந்தை பற்றிய எண்ணமும் அவர்தம் நற்செயல்கலும் அடிக்கடி நினைவுக்கு வந்து உங்களை நல்வழிப்படுத்தும். உறவினர்களின் வருகையால் உற்சாகம் உண்டாகும்.

குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமையில் பெரிய அளவில் பாதிப்பு இராது. உங்கள் மனதில் எதிரி என்ற நிலையில் இடம் பெற்றவர் செய்ய நினைத்த கெடுதல்கள் தூள் தூளாகும். வாழ்க்கைத் துணையின் பேச்சால் அவ்வப்போது படபடப்பு போன்ற விஷயங்கள் வந்து போகும். பிள்ளைகளால் இருந்து வந்த மனக்கசப்பு மாறி நிம்மதி நிலை உண்டாகும்.

தொழிலதிபர்கள் வேலையில் அடுத்தவர்களை நம்பாது தானே காரியத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதிர்ஷ்டங்களை அனுபவிக்க வேண்டிய கால கட்டம். வங்கிகளிலிடமிருந்து கடனுதவி பெற்று தொழில் சம்மந்தமான கடன்கள் அடையும். பணியாளர்களுக்கு தகுந்த ஊதியத்தை அளித்து நற்பெயரை சம்பாதிப்பீர்கள்.உடல் நலனிலும் அக்கறை தேவை.

உத்தியோகஸ்தர்கள் மனைவி வழியில் சில ஆதாயங்களை பெற முடியும். காசோலை சம்மந்தமான விசயங்களில் கவனம் தேவை. முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம். உடன் பணிபுரிவோரை அனுசரித்து போவது சிறந்தது. யாரையும் நம்பி படித்து பார்க்காமல் கையெழுத்து போட வேண்டாம். சமயோஜித புத்தியுடன் செயல்பட்டு வெற்றி காணுங்கள்.

கலைத்துறையினர் புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். வெற்றி வாய்ப்புகள் கடனிலிருந்து விடுபட வாய்ப்பு அனைத்தும் கிட்டும். நற்காரியங்கள் அனைத்துக்கும் அனுபவ சாலிகளின் ஆலோசனைப் படி நடந்து கொள்ளுங்கள்.

அரசியல்வாதிகள் முக்கிய முடிவுகளை மூத்த அரசியல் வாதிகளின் ஆலோசனைப்படி எடுப்பது உத்தமம். சங்கடங்கள் வந்து விலகும். நேர்மையாக நடந்து நல்ல பெயரை எடுப்பீர்கள். சொத்து, பத்திர விவகாரங்களில் படித்து பார்த்து பின் கையெழுத்திடவும்.

பெண்கள் குடும்ப பொறுப்பை கவனிக்கும் பெண்கள் உறவினர்களின் சந்தோஷ வருகையால் உற்சாகமாக செயல்படுவார்கள். ஆபரணச் சேர்க்கை அனுகூலமாக உள்ளது. அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்கள் தங்கள் பணியில் நல்ல கவனம் செலுத்தி உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள்.

மாணவர்கள் தங்கள் படிப்பில் சீரான கவனம் செலுத்தி தேர்ச்சி பெற்று ஆசிரியரிடம் நற்பெயர் பெறுவார்கள். தந்தை மகன் உறவு நிலைகளில் நல்ல முன்னேற்றமான பலன்கள் உண்டாகும். சக மாணவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது சில பிரச்சனைகளிலிருந்து உங்களை காப்பாற்றும்.

மே மாத ராசிபலன்கள் 2019 : ரிஷபம்!!

ரிஷபம் : நல்ல எண்ணங்களை மனதில் வளர்த்து பார் புகழ பணி செய்திடும் ரிஷபராசி அன்பர்களே இந்த மாதம் ஒளி நிறைந்த சிந்தனையும், தேஜஸ் நிறைந்த உடல் அமைப்பும் உண்டாகும். புகழைப் பெறுவதற்கு எந்த செலவையும் செய்ய உங்கள் மனம் துணிந்து விடும்.

புத்திரப்பேறு எதிர்பார்ப்பவர்களுக்கு அனுகூல பலன் உண்டாகும். தெய்வ அருளைப் பூரணமாக பெற்று சுக வாழ்வு பெறுவீர்கள். பெண்களிடம் பண கொடுக்கல், வாங்கல் விசயங்களில் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.

குடும்பத்தில் கணவன், மனைவி குடும்ப ஒற்றுமை பலப்படும். ஆன்மிகம் தொடர்பான வழிபாடுகளில் புதிய ஈர்ப்பும் உண்டாகும். தெய்வ அருளால் ஆரோக்கிய உடலும், ஆயுள் பலமும் இனிதே உருவாகும். தந்தை வழி சொத்துகள் பல்கி பெருகிட புதிய வழிமுறைகள் உருவாக்கித் தரும். உணவு பழக்க வழக்கங்களில் தகுந்த கட்டுப்பாடு கடைப்பிடித்தல் நலம் தரும்.

தொழிலதிபர்கள் வெகு தூரத்திலிருந்து வரும் நபர்களால் தவிர்க்க முடியாத செலவினங்கள் உண்டாகும். தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டாகும். தகுந்த தொழிற் பயிற்சிகளை கற்றுக் கொண்டால் வரும் காலங்களில் சிறப்புகள் பல பெறலாம். அண்ணன், அக்கா குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்து மகிழ்வீர்கள். நல்ல நிறுவனங்களின் ஒத்துழைப்பு கிட்டும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு பதிலளிக்க முடியாமல் தவிப்பார்கள். மேலதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். உடன்பணிபுரிபவர்களிடம் அனுசரனையாக நடப்பது உத்தமம். காலம் தாழ்த்தாமல் உணவு அருந்துங்கள். உடல் நலம் சீராகும்.

கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களை கவனமுடன் ஏற்றுக் கொள்ளலாம். வெளிநாட்டுப் பயணங்கள் சிறப்பைத் தரலாம். உடனிருப்போருடன் முக்கிய முடிவுகளைப் பற்றி கலந்து ஆலோசிக்க வேண்டாம்.

அரசியல்வாதிகள் அரசு சார்ந்த விசயங்களில் கையெழுத்து இடும்பொழுது கவனம் தேவை. வீடு, மனை வாகன விசயங்களில் ஒப்பந்தங்களில் நல்ல முடிவுகள் ஏற்படும். மற்ற விசயங்களில் சாதகமான சூழ்நிலை நிலவும். முக்கிய முடிவுகள் வெற்றியைத் தரும்.

பெண்கள் அரசு, மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் ஏற்படும் சந்தேகங்களுக்கு சரியான விளக்கம் கிடைக்காமல் தத்தளிப்பார்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள், உறவினர்களை நன்கு உபசரிப்பதின் காரணமாக குடும்ப பாச புத்தகங்களை வலுப்பெற செய்வார்கள். நகையணிந்து வெளியிடங்களுக்கு செல்பவர்கள் கவனமுடன் செல்ல வேண்டும்.

மாணவர்கள் தங்கள் படிப்பில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வந்தாலும் சில கேளிக்கை விஷயங்களை மனம் நாடுவதால் அவப்பெயர் உண்டாகலாம். முன்யோசனையுடன் நடந்து நற்பெயர் பெறலாம்.

மே மாத ராசிபலன்கள் 2019 : மேஷம்!!

மேஷம் : சிந்தனையில் புதுமையுடனும், செயலில் நேர்மையுடனும் வாழ்ந்து வெற்றி பெறும் மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்களின் கல்வியறிவு உங்களின் வாழ்க்கை முறையில் புதிய மறுமலர்ச்சியை உருவாக்கித் தரும். நற்காரியங்களை நடத்துவதற்கு தேவையான பொருளாதாரம் உறவினர்கள் வகையிலிருந்தும், செய்தொழில் லாபத்திலிருந்தும் நிறைவாக கிடைக்கும். கால தாமதமான செயல்திட்டங்களை புதிய உத்வேகத்துடன் செயல் படுத்தி முன்னேற்றம் பெறுவீர்கள்.

குடும்பத்தில் தாய்மாமன் வகை உறவினர்களுடன் மனக் கசப்பு வராத வண்ணம் நல்முறையில் பழக வேண்டும். தாயின் அன்பைப் பெறுவதால் குடும்பத்தில் மகிழ்வு உண்டாகும். குடும்பத்துடன் இன்பச்சுற்றுலா சென்று காலம் கணிந்துள்ளது. நண்பர்கள் நல்ல அறிவுரைகள் குடும்பத்தில் நன்மதிப்பை பெற்றுத் தரும். வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும்.

தொழிலதிபர்கள் தொழில் வகையில் கூடுதல் வருமானம் கிடைக்க உங்கள் சகோதரர்கள் தகுந்த உதவி புரிவார்கள்.

நண்பர்களும், ஆன்மீக அருள் பெற்றவர்களும் உங்கள் தொழிலில் முன்னேற்றம் பெறும் வகையிலான உபாயங்களை சொல்லித் தருவார்கள். கடன், வழக்கு, எதிரிகள் ஆகிய பிரச்சனைகளிலிருந்து விடுபட வேண்டிய கால கட்டம் நெருங்கியுள்ளது.

உத்தியோகஸ்தர்கள் அரசு மற்றும் தனியார்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுக்கு உட்படுவீர்கள்.

கடுமையான பணிசுமைக்கு ஆளாக நேரிடும். யாரிடமும் யாரைப் பற்றியும் குறை கூற வேண்டாம். முடிந்து போனது என்று நினைத்த தண்டச் செலவுகள் புதிய கோணத்தில் உருவெடுக்கும். கவனமுடன் செயல்பட்டு விரயத்தை தவிர்க்கலாம்..

கலைத்துறையினர் ஆன்மிகச் சொற்பொழிவாளர்களின் ஆலோசனைப்படி நடந்து வெற்றியைப் பெறலாம். யாரிடமும் கோபத்தை வெளிப்படுத்தாமல் இருப்பது சிறந்தது.

அரசியல்வாதிகள் யாரைப்பற்றியும் யாரிடமும் குறை கூற வேண்டாம். வாக்குவாதத்திற்கு இடம் தர வேண்டாம். மூத்தோர் சொல் கேட்டு நடப்பது வெற்றியை உண்டாக்கும். பிறமதத்தினர் உறுதுணையாக இருந்து நம்பிக்கை அளிப்பார்கள்.

பெண்கள் குடும்ப நிர்வாகப் பொறுப்பிலுள்ள பெண்கள் நிறைய நற்காரியங்களில் ஈடுபட்டு கணவரிடமும், பிள்ளைகளிடமும் நல் அன்பை பெறுவீர்கள். பழைய ஆபரணங்களை புதுப்பித்துக் கொள்ளும் வாய்ப்புகள் உண்டாகும். அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் முழுமனதுடன் கவனமுடன் செயல்பட வேண்டியது அவசியம்.

மாணவர்கள் முழுக்கவனத்துடன் செயல்பட்டு நல்லதரத்தை எட்டி பிடிப்பார்கள். ஆசிரியர்களின் நல் ஆதரவு எப்பொழுதும் உங்களுக்கு சாதகமாக அமையும்.

மே மாத ராசிபலன்கள் 2019 : கடகம்!!

கடகம் : கடமையில் கண்ணும், கருத்துமாக செயல்பட்டு பிறர் மனம் கவர்ந்திடும் கடக ராசி அன்பர்களே, இந்த மாதம் மனசஞ்சலம் நீங்கி அனுகூலம் தரும் வகையில் அனைத்து விசயங்களும் இனிதே நடைபெறும். நீங்கள் பேசும் வார்த்தைகள் பிறரை கவர்ந்து உங்கள் வாழ்க்கை வளம் பெறுவதற்கான வழிவகை பிறக்கும். உங்களுக்கு நல்லவர்கள் மற்றும் மகானளின் தரிசனம் கிடைக்கச் செய்து புகழ் பெற்றவர்கள் வரிசையில் உங்களையும் இடம்பெறச் செய்வார்.

குடும்பத்தில் தாயின் அன்பும், வீடு, மனையில் பெண் தெய்வ சக்திகளின் அனுகூல பிரவேசமும் நிகழ்ந்து புதிய உற்சாகம் பெறுவீர்கள். விவசாய நிலங்கள் வைத்திருப்பவர்கள் பங்காளிகள் மற்றும் பக்கத்து நிலக்காரர்களால் இடைஞ்சல் அனுபவிக்கும் மார்க்கம் உண்டு. நிலத்தின் அருகிலுள்ள கிராம தேவதையை வழிபட்டு சிரமங்களை குறைக்கலாம்.

தொழிலதிபர்கள் தொழில் வளம் பெற புதிய அனுகூலமான செய்திகள் தேடி வரும். சுய தொழில் புரிவோர் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால் தேவையான அளவு ஆதாயத்தை சம்பாதிக்கலாம். பொருளாதார அபிவிருத்தி உண்டு. சிறு சிறு தடங்கள்களால் மனச்சோர்வு ஏற்பட்டாலும் வெற்றி கிட்டும் பொழுது அது சூரியனைக் கண்ட பனிபோல் விலகும்.

உத்தியோகஸ்தர்கள் சிலருக்கு மனைவியின் பெயரால் சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். பிரயாணங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதனால் நன்மையே உண்டாகும். வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள் தங்கள் வீட்டிலிருந்து மனம் மகிழ்ச்சி தரும் வகையிலான செய்தி ஒன்றை பெறுவார்கள். அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் ஆவண விசயங்களில் கவனத்துடன் இருப்பது அவசியம்.

கலைத்துறையினருக்கு முக்கிய வாய்ப்புகளில் நல்ல முடிவு கிட்டும். மக்களின் நன்மதிப்பை பெற்று புகழின் எல்லைக்கு சென்று மகிழ்ச்சியில் திளைக்கலாம். குருவுக்கும், சிஷ்யருக்குமான உறவு நல்முறையில் இருக்கும். நண்பர்கள் மத்தியில் தேவையில்லாத பேச்சுகளை குறைத்தால் பிரச்சனைகள் வராமல் காத்துக் கொள்ளலாம்.நற்செய்திகள் தேடிவரும்.

அரசியல்வாதிகள் அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டு சில சர்ச்சைக்குரிய விசயங்கள் பற்றி பேசி தொந்தரவுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டிய கால கட்டம் ஆகையால் எக்காரியத்திலும் நிதானம் தேவை. புரியாத விசயங்களை சிறிது நாட்கள் ஒத்திப் போடுவது நன்மையைத் தரும்.

பெண்கள் குடும்ப நிர்வாகத்தில் தேவையான பொருட்கள் சமயத்தில் கிடைக்காமல் பதட்டத்திற்கு ஆளாவார்கள். பொருள்கள் வைத்த இடம் பற்றிய குறிப்புகள் இருந்தால் குழப்பங்கள் இல்லாமல் வாழ்க்கை முறையை நன்கு நடத்தலாம். வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்படலாம். தகுந்த நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள்.

மாணவர்கள் தங்கள் படிப்பில் இலகுவான பயிற்சி முறைகளை அறிந்து கொண்டு சிறப்பான தேர்ச்சி பெறுவார்கள். நண்பர்கள் அதிக அளவில் ஒன்று கூடுவதால் புதிய சிரமங்கள் உண்டாகலாம். கவனமுடன் செயல்பட்டு பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

ஐ.எஸ்.அமைப்பின் உறுப்பினர் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆபத்தான பொருட்கள்!!

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் அங்கம் வகிக்கும் முக்கிய உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமான ஹட்டன் வீட்டில் இருந்து கத்திகள் சிலவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அந்த வீட்டில் இருந்து ஐ.எஸ். அமைப்பின் உறுப்பினரின் சகோதரரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த ஐ.எஸ். அமைப்பின் உறுப்பினர் இறுதியாக கடந்த 2016 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்துள்ளார். இந்த நபர் தற்போது ஏமன் நாட்டில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, ஹட்டன் மல்லிகைப்பூ சந்தியில் உள்ள வீட்டை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர். வீட்டில் உள்ள களஞ்சிய அறையில் இந்த கத்திகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர் ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு 20 லட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பிணையில் விடுதலை செய்யப்பட்ட நபரை பிரதி ஞாயிற்றுக் கிழமைகளில் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டுள்ளனர்.

வவுனியாவிற்குள் நுழையும் வாகனங்கள் கடும் சோதனை : 20 வாகனங்கள் வெடிபொருட்களுடன் நுழைந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தகவல்!!

வெடிபொருட்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான ஆயுதங்கள் ஏற்றப்பட்ட 20 வாகனங்கள் தெற்கில் இருந்து வடக்கிற்கு சென்றதாக பாதுகாப்பு பிரிவுகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதற்கமைய வவுனியாவில் வீதிகள் மறிக்கப்பட்டு நேற்று விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலை, மாலை என இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், வவுனியாவுக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான 20 வாகனங்களின் 20 இலக்கங்கள் மற்றும் தகவல்கள் பொது மக்களுக்கு காட்சியளிக்கும் வகையில் ஒட்டுவதற்கு பாதுகாப்பு பிரிவினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

வவுனியாவுக்குள் நுழையும் 4 திசைகளிலும் இந்த பாதுகாப்பு கடவைகள் நிறுத்தப்பட்டு வாகனங்களை சோதனையிடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் இராணுவத்தினர் வீடுகளுக்கு சென்று சோதனையிடும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

-தமிழ்வின்-

வவுனியாவில் இந்து ஆலயம் உட்பட தமிழர்களின் பகுதிகளில் தீவிர சோதனை நடவடிக்கை!!

வவுனியாவில் இன்று(02.05) காலை 7மணிமுதல் 9மணிவரையும் கோவில்குளம், கோவில்புதுக்குளம் ஆகிய பகுதிகளிலும் அப்பகுதியிலுள்ள இந்து ஆலயம், ஒன்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட படையினரும் பொலிசாரும் இணைந்து சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதன்போது வெளிநாடு ஒன்றில் பணிபுரிந்து நாடு திரும்பிய 40வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரை சந்தேகத்தில் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

வவுனியா கோவில்குளம், கோவில்புதுக்குளம் பகுதிகளில் இன்று காலை முதல் பொலிசாரும் படையினரும் இணைந்து சோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனார். இதன்போது அப்பகுதியிலுள்ள இந்து ஆலயத்திலும் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது மத்திய கிழக்கு நாட்டில் பணிபுரிந்து நாடு திரும்பிய மூன்று பிள்ளைகளின் தந்தையை சந்தேகத்தில் கைது செய்துள்ளனர். அவரிடம் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது இராணுவ சீருடையை ஒத்த ஆடை ஒன்றும் வயர் துண்டுகளும் சிலவற்றைக் கைப்பற்றியுள்ளதாகவும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அப்பகுதியில் வீதியால் சென்ற வாகனங்களையும் பொதுமக்களையும் வழிமறித்து தீவிர சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது காலை 7மணிமுதல் 9மணி வரை அப்பகுதியில் நூற்றிற்கும் மேற்பட்ட படையினருடன் பொலிசாரும் இணைந்து சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.

அண்மைய காலங்களாக வவுனியாவில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இந்நடவடிக்கை இடம்பெற்று வந்த நிலையில் இன்று தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கும் இந்து ஆலயத்திலும் இச்சோதனை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வவுனியா தோணிக்கல் பகுதியில் இருந்து வாள் ஒன்று மீட்பு!!

வவுனியா, தோணிக்கல் பகுதியில் வவுனியா குற்றத்தடுப்புப் பொலிசார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது வாள் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று(02.05) தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இராணுவத்தினரும், பொலிசாரும் இணைந்து விசேட சுற்றிவளைப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் வவுனியா, தோணிக்கல், ஆலடிப் பகுதியில் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது மறைத்து வைக்கப்பட்டிருந்த வாள் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை.

வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ராஜபக்ஸ, பொலிஸ் சார்ஜன்டுகளான மல்வர ஆராய்ச்சி, படுவத்த, பொலிஸ் கொன்ஸ்தாபிள் நிஜாம் ஆகியோரே குறித்த வாளினை மீட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா கோவிற்குளத்தில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்!!

வவுனியா கோவிற்குளத்தில் இன்று (02.05.2019) காலை 9.30 மணியளவில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல் ஒன்றினை வவுனியா உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மல்வலகே வெளியிட்டுள்ளார்.

நாட்டின் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தினையடுத்து வவுனியா கோவிற்குளம் எட்டாம் ஒழுங்கையில் இராணுவத்தினர் மற்றும் பொலிசார் இணைந்து திடீர் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது குறித்த ஒர் வீட்டிலிருந்து 450- 750 வலுக்கொண்ட நான்கு மின்சார வயர் சுருள்கள், இராணுவத்தினரின் சீருடை, இராணுவ கையுறை , இராணுவச் சப்பாத்து, டிஜிட்டல் மீற்றர் போன்றவை கைப்பற்றியதுடன் இதனை வீட்டில் வைத்திருந்த நபரும் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

கைப்பற்றப்பட்ட பொருட்களை வவுனியா பொலிஸ் நிலையத்தில் வைத்து வவுனியா வவுனியா உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மல்வலகே மற்றும் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மகிந்த வில்வராட்சி ஆகியோரின் முன்னிலையில் ஊடகவியலாளர்களுக்கு காண்பிக்கப்பட்டது.

கைப்பற்றப்பட்ட இராணுவத்தினரின் சீருடை , இராணுவ கையுறை, இராணுவச் சப்பாத்து போன்றன புதியவை எனவும் அவை இதுவரை பாவனைக்குட்படுத்தப்படவில்லையென வவுனியா உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மல்வலகே ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்தார்.

கொழும்பில் ஐ.எஸ் நாசகார கும்பலினால் விநியோகிக்கப்பட்டுள்ள ஆபத்தான மாத்திரைகள்!!

ஐ.எஸ் பயங்கரவாதிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் பெருந்தொகை ஆபத்தான மாத்திரைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கருக்கலைப்பு மாத்திரைகள், போதை மாத்திரைகள், பாலியல் உணர்வுகளை தூண்டும் மாத்திரைகள் அதில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு தொடர்புடைய ஐ.எஸ் பயங்கரவாத குழுவுக்கு சொந்தமான களஞ்சிய அறையிலிருந்து இந்த மாத்திரைகள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

5 கருகலைப்பு மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டையை 5000 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். கொழும்பில் மீட்கப்பட்ட இந்த மாத்திரைகள் சுமார் 40 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதனை குடிக்கும் பெண்களுக்கு வாழ் நாள் முழுவதும் குழந்தை பெற முடியாத நிலை ஏற்படும் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வரலாற்றில் முதன்முறையாக சங்கக்காரவிற்கு கிடைத்த பெரும் வாய்ப்பு!!

வரலாற்றில் முதன்முறையாக பிரிட்டன் குடியுரிமை இல்லாத சங்கக்கார மேரிலெபோன் கிரிக்கட் கழகத்தின் ( MARYLEBONE CRICKET CLUB) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார லண்டனில் அமைந்துள்ள மேரிலெபோன் கிரிக்கட் கழகத்தின் ( MARYLEBONE CRICKET CLUB) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வரலாற்றில் முதன்முறையாக பிரிட்டன் குடியுரிமை இல்லாத ஒருவரை அந்தக் கழகத்தின் தலைவராக நியமிப்பது இதுவே முதன்முறை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேரிலெபோன் கிரிக்கெட் கழகத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் இன்று (01) லோட்ஸில் இடம்பெற்றது. இதன்போது தற்போதைய தலைவர் அந்தோனி ரைபோர்ட், கழகத்தின் அடுத்த தலைவராக குமார் சங்கக்காரவை அறிவித்தார்.

இதேவேளை, குமார் சங்கக்காரவின் பதவிக்காலம் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி ஆரம்பமாகி ஒரு வருடத்துக்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக கிரிக்கெட்டின் முதுகெலும்பு என வர்ணிக்கப்படும் எம்.சி.சி, கிரிக்கெட் விதிமுறைகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மாணவியை கடத்தி IS தற்கொலை குண்டுதாரியாக மாற்றிய தீவிரவாதிகள்? வெளிவரும் பரபரப்புத் தகவல்!!

அண்மையில் இலங்கையில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல் தொடர்பில் நாள்தோறும் பல்வேறு தகவல் வெளிவருகின்றன.

இந்நிலையில் தாக்குதல் இடம்பெற்ற நான்காவது நாளில் தற்கொலைதாரிகள் என தெரிவித்து பொலிஸார் சிலரது புகைப்படங்களை வெளியிட்டிருந்தனர்.

இந்த புகைப்படங்களில் புலஸ்தினி மகேந்திரன் என்ற தமிழ் பெண் ஒருவரின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இது குறித்து IBC தமிழ் செய்தி சேவை சிறப்பு ஆய்வொன்றை நடத்தியிருந்தது.

அந்த வகையில் குறித்த யுவதி மட்டக்களப்பு – தேத்தாத்தீவு பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. குறித்த யுவதி தொடர்பில் அவரின் தாயார் கருத்து தெரிவிக்கையில்.

எனது மகள், கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினை பெற்றிருந்தார். அவர் சாதாரண தரத்தில் 8A மற்றும் 1B சித்தியினை பெற்றிருந்ததாக தெரிவித்தார்.

இந்நிலையில் தனது மகள் முஸ்லிம் இளைஞர் ஒருவரால் கடத்தி செல்லப்பட்டு மதம் மாற்றம் செய்யப்பட்டதாகவும், அதன் பின்னர் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்தும் யுவதியின் தாயார் IBC தமிழ் செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த 21ம் திகதி மேற்கொள்ளப்பட்ட கொழும்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொடர் தற்கொலை குண்டு தாக்குதலில் 250க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

தற்கொலை குண்டுத்தாக்குதலில் முழு குடும்பத்தை இழந்து தவிக்கும் தாய்!!

இலங்கையில் நடந்த தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதலில் தனது முழு குடும்பத்தையே இழந்து தவிக்கும் தாய் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

கதிரான பிரதேசத்தை சேர்ந்த சந்திமான நெரன்ஞனி யசவர்தன என்ற பெண்ணே இந்த நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளார். அவர் தனது மகள் இருவர் மற்றும் கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தனது குடும்பத்துடன் நீர்கொழும்பு கட்டான தேவாலயத்திற்கு சென்றுள்ளார். இதன்போது ஏற்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் அவர் இழந்துள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்ட பாதிக்கப்பட்ட பெண்,

“எனது இரண்டு மகள்களும் நானும் ஒரே வரிசையில் அமர்ந்தோம். கணவர் பின் வரிசையில் அமர்ந்திருந்தார். திடீரென பாரிய சத்தம் ஒன்று கேட்டது.

எனது கண்கள் தெரியாமல் போனது போன்று இருந்தது. இதன் போது குண்டுத்தாக்குதலுக்குள்ளான எனது ஒரு மகள் ஒரு காலின் மீது மற்ற மகள் அடுத்த காலின் மீதும் கிடந்தார்கள்.

என்னால் அவர்களை தூக்கவோ காப்பாற்ற முடியவில்லை. என்னால் உணர முடியவில்லை என மகளிடம் கூறினேன். திரும்பி பார்க்கும் போது கணவரும் விழுந்து கிடந்தார்.

வைத்தியசாலைக்கு என்னை கொண்டு சென்றார்கள். வைத்தியசாலை முழுவதும் பைத்தியம் பிடித்தவள் போன்று எனது குடும்பத்தை தேடினேன்.

எனது கடைசி மகள் மாத்திரமே கிடைத்தார். அவரும் உயிரிழந்து விட்டார். மூவரும் உயிருடன் இல்லை என்று இறுதியிலேயே எனக்கு தெரியவந்தது.

ஒரு தாயாக இதனை நான் எப்படி தாங்கிக்கொள்வேன். இந்த புகைப்படங்களை நான் எப்படி பார்க்க முடியும்” என கண்ணீருடன் பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா கோவிற்குளத்தில் இராணுவத்தினரின் ஆடை மற்றும் உயர் மின்வழு கொண்ட வயருடன் ஒருவர் கைது!!

வவுனியா கோவிற்குளம் எட்டாம் ஒழுங்கையில் இன்று (02.05.2019) இராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு சோதனையுடன் போது இராணுவத்தினரின் ஆடை மற்றும் உயர் மின்வழு கொண்ட வயர் என்பவற்றை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.

நாட்டின் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தினையடுத்து வவுனியா முழுவதும் திடீர் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

அதன் ஒரு கட்டமாக இன்று வவுனியா கோவிற்குளத்தில் இராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது கோவிற்குளம் எட்டாம் ஒழுங்கையில் அமைந்து ஓர் வீட்டினை இராணுவத்தினர் சோதனைக்குட்படுத்தினார்கள்.

இதன் போது அவரது வீட்டிலிருந்து 450- 750 வலு கொண்ட நான்கு மின்சார வயர் மற்றும் இராணுவத்தினரின் உடை, கையுறை, சப்பாத்து, டிஜிட்டல் மீற்றர் போன்றவற்றை கைப்பற்றிய இராணுவத்தினர் வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதன் போது இப் பொருட்களை வீட்டில் வைத்திருந்த குற்றச்சாட்டில் வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இப் பொருட்களை வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்தாகவும் அந்த நாட்டில் இம் மின்சார வயரே உபயோகத்தில் உள்ளதாக கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளை தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.